Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயமோகனின் திடீர் ஈழ அனுதாபம்

Featured Replies

போற போக்கில பயங்கரவாதியாக இருப்பதுதான் சிறந்த அடையாளம் என்று ஒருவர் சொல்ல மற்றவர் அதற்கு ஆமாம் போடுவார் போலுள்ளது.

எழுத்து,வாசிப்பு,பேச்சு எல்லாவற்றையும் விட எமக்கு தெரிந்தது நடிப்பு.

எமக்கு பிரச்சனை என்றவுடன் காகங்கள் பறந்தமாதிரி நாட்டைவிட்டி ஓடிவந்து விட்டு என்னாமாதிரி நடிக்கின்றாங்கள்?

  • Replies 60
  • Views 6.4k
  • Created
  • Last Reply

நானும் சொல்லுறன் தவறான ஒப்பீடுதான்...ஆனால் பெரிய வித்தியாசம் இப்படி சொல்லுவது மூலம் நீங்கள் ஜெயமோகனை தங்கத்தட்டில் வைக்க பார்க்கீறீங்கள்.... நீங்கள் ஜெயமோகனின் தீவிர வாசகனாக இருக்கலாம் ஆனால்..ஜெயகாந்தனை முழுமையாக வாசிக்கவில்லை அல்லது அறியவில்லை என்று தான் நினைக்கிறன்

நான் ஜெயமோகனை தங்கத் தட்டில் வைக்க முனையவில்லை. ஆனால் ஜெயகாந்தனையும் ஜெயமோகனையும் ஒப்பிடுவது ஆப்பிளையும் திராட்சையையும் ஒப்பிடுவதற்கு சமனானது. அத்துடன் ஜெயகாந்தனின் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களையும் (ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் (நாவலும் + சினிமாவும்), சில நேரங்களில் சில மனிதர்கள், சுமை தாங்கி, ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் etc ) பல சிறுகதைகளையும் வாசித்துள்ளேன். யாழ்ப்பாணத்தில் உள்ள சின்ன சனசமூக நூலகங்களில் கூட அவரது படைப்புகள் ஏராளம் இருக்கும்)

நீங்கள் ஜெயமோகனது நாவல்களில் எவற்றை வாசித்துள்ளீர்கள்?

பாதுகாப்பான இடத்திலிருந்து இரவல் பன்ராசிக்களை வாசித்துவிட்டு இங்கு அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம்.

அண்ணை தமிழீழத்தில் இருந்து ஜெயமோகனின் புத்தகங்களை இப்ப வாசிக்கின்றீர்கள் போல :D

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில பயங்கரவாதியாக இருப்பதுதான் சிறந்த அடையாளம் என்று ஒருவர் சொல்ல மற்றவர் அதற்கு ஆமாம் போடுவார் போலுள்ளது.

எழுத்து,வாசிப்பு,பேச்சு எல்லாவற்றையும் விட எமக்கு தெரிந்தது நடிப்பு.

எமக்கு பிரச்சனை என்றவுடன் காகங்கள் பறந்தமாதிரி நாட்டைவிட்டி ஓடிவந்து விட்டு என்னாமாதிரி நடிக்கின்றாங்கள்?

இந்தக் கேள்வியை நீங்கள் சரியான வழியில் கேட்டால் உங்களுக்கு எழுஞாயிறு சொல்வது புரியும்: "யாருக்குப்" பயங்கரவாதிகளாக இருப்பது தமிழர்களுக்கு நல்ல அடையாளம்?" என்று கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக சிங்களவர்களுக்கு தமிழர்கள் பயங்கரவாதிகளாகத் தெரிவது தான் அவர்களுக்கு சிறிலங்காவில் பாதுகாப்பையும் கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தையும் கொடுத்தது. நீங்கள் குறிப்பிடும் "பயங்கரவாதிகள்" தமிழர் தரப்புத் தலைவர்களாக வருவதற்கு முன்னரும் அவர்கள் இல்லாமல் போன பின்னரும் தமிழர்களுக்கு சிறிலங்காவில் நடந்தது/நடப்பது என்னவென்று "ஊர் உலகம் அடிபட்ட" உங்களுக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழர்கள் நோபல் சமாதானப் பரிசுக்கோ அல்லது பலஸ்தீனர்களை விடப் பொறுமை சாலிகள் என்ற பட்டத்திற்கோ போட்டி போட வேண்டுமானால் உங்கள் "மனிதாபிமான" அடையாளம் உதவலாம். சிறி லங்காக் காட்டுமிராண்டிகளுடன் சரசமாட பயங்கரவாத பாத்திரம் தான் சரி. என்ன சொல்கிறீர்கள் இதைப் பற்றி?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. ஆம் நான் பயங்கரவாதிதான் உங்களுக்கல்ல. எம்மை ஏகடியம் பேசுவோருக்கு. நாம் எமது முஸ்டியை உயர்த்திக்காட்டியதாலேயே இதுவரை சிங்களம் எம்மீது சிறுநீர்கழிக்காதிருந்தது. இப்போது ஏதுமற்றதாயிதனால் எம்மினப் பெண்களின் உடலை நிர்வாணமாக்கி உலகம் தன்னை அம்மணமாக்கியது. அப்போது இவர்கள் எல்லோரும் எங்கிருந்தார்கள். நான் கடந்த காலங்களில் தேடி நிதம் சோறுண்டு என் சுற்றத்துடன் சின்னஞ்சிறு கதைகள் பேசி வாழும் வேடிக்கை மனிதர்கள்போலிருக்க பொய் புரளிபேசி அகதியாகி அந்தஸ்துப்பொற்று வாழ்வாங்கு வாழ்கிதேன் இப்போதும் அதையே தொடர்கிறேன் ஆனால் ஒரு விடையம் நிம்மதியாகத் நித்திரை கொள்ள முடியவிலலை. முள்ளிவாய்க்கால வரையான அவலம் எனை அலைக்கழிக்குது. ஐரோப்பிய பொதுத்தெருவில் வந்து நின்று நான் பொய்காரன,; புழுகி, புலிகளதும் பொதுசனத்தினதும் பொயரில் பொய்சொல்லி வாழும், பேராசைப் பொறுக்கியென உரத்து ஊழையிடத்தயார் அதுக்காக இனிமேலும் என்னை நானே ஏமாத்த முடியாது இலக்கியம் இதிகாசம் எண்டு. எம்மினம் வாழவாங்கு வாழ்தஇனம் யானைச்சோடாவும் கண்டொசும் மெனிக்கே இரயிலும் சின்னமேளங்களும் திருவிழாக் கோலத்துடன் கோவில்களும் குலசாமி கோவில்களுடனும்; நிறைந்த வாழ்வு வாழ்ந்தபோதிலேயே, சமஉரிமைபற்றி பேச ஆரம்பித்துவிட்டோம். இயற்கையே எமக்கருளிய பெரும்கொடையொன அகமகிழ்ந்து ஆலயம் நோக்குதல்போல் பள்ளி;ச்சிறார்முதல் படையெடுக்க வைத்திட்ட உலகம் வியக்கும் நூலகம் கொண்டவன் தமிழன். நாம் எரித்த நூலகம் என இறுமாப்புடன் சிங்களம் இப்போது ஆயிரமாயிரமாய் பார்க்கப் படையெடுக்கும் வண்ணமிருந்ததே, அதன் பெருமைக்குச் சான்று. நான் வாழும் நாட்டில் எதுவெலாம் புகழ் பெற்றதோ நான் போகும் நாட்டில் எவையெலாம் பெருமைபெற்றதோ அதற்கிணையான வளங்களைக் கொண்டதெனது தேசம் இப்போது நான் வாழும் தோசம் எனக்கு இரவல்தேசம,; நான் இரந்துண்ணும் தேசம் வெட்கம் கெட்ட வாழ்வுக்கு வடிகாலாய் யாழ்களத்தில் எதையாவது கிறுக்கிறேன். என்னுள் உறைந்த நிலைவுகளும் எம்போதாவது உருக ஆரம்பிக்கும் அப்போதும் அவற்றை யாழ்கள உறவுகளுக்காகவே கருத்திடுவேன்.

உலக வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் முழுஇனங்களும் நாடுகளுமே பயங்கரவாதிகள் தான்.தமக்கு தமக்கென பிரச்சனை வரும் போது.

சிங்களம் எமக்கு செய்யும் அதே அநியாயத்தை தனது இனத்திற்கு இந்தியனை கூப்பிட்டு செய்வித்தது.அதன் பின்னர் கூட பல அநியாங்கள் செய்தது.கதிர்காம அழகி மன்னம்பேரிக்கு நடந்ததும் தெரியும்.

சிங்களத்திற்கு மட்டும் நாங்கள் பயங்கரவாதிகளாக இல்லாமல் "உலகிற்கே பயங்கரவாதிகளாக" போனதே எமது தோல்வி.அதைத்தான் திரும்ப திரும்ப சொல்லி வந்தோமேயல்லாமல் சிங்களவனுடன் சண்டைக்கு போகவேண்டாம் என்று யார் சொன்னது.நானே அதற்குத்தானே போனேன்.

நான் ஒருவருடன் கொழுவும் போது அவருக்கு என்னால் அடிக்கமுடியாவிட்டாலும் பின்னராவது யாரையாவது கூட்டிக்கொண்டுவந்து அடிப்பேன் என்றால்தான் கொழுவலாம்.

கேட்கவே நாதியில்லாமல் இருந்தால் போறவன் வாறவன் எல்லாம் பதம் பார்த்துவிடுவான்.

இறுதியுத்தம் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் நடந்தது. மே 19 மட்டும் இப்படி நடக்கப்போகின்றதே என தெரியாமல் இருந்த------------ களில்தான் கோவம்.கடைசி நிமிடம் வரையும் ஏதோ அதிசயம் நடக்கப்போகின்றது என நம்பியிருந்த----------------- களை என்ன செய்வது.அந்த அளவிற்கு ஒரு பில்டப் கொடுத்து கதை அளந்து வைத்திருந்தீர்கள் அதன் விளைவுதான் இன்றய எமது நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடந்த காலங்களில் தேடி நிதம் சோறுண்டு என் சுற்றத்துடன் சின்னஞ்சிறு கதைகள் பேசி வாழும் வேடிக்கை மனிதர்கள்போலிருக்க பொய் புரளிபேசி அகதியாகி அந்தஸ்துப்பொற்று வாழ்வாங்கு வாழ்கிதேன் இப்போதும் அதையே தொடர்கிறேன் ஆனால் ஒரு விடையம் நிம்மதியாகத் நித்திரை கொள்ள முடியவிலலை. முள்ளிவாய்க்கால வரையான அவலம் எனை அலைக்கழிக்குது.

பல இலட்சம் மக்கள் இன்னல் பட்டபோதும், பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டபோதும் நாம் வேடிக்கை மனிதர்களாக இருந்ததனால்தான் ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்தக்குற்றவுணர்வு இருந்தால் நித்திரைகொள்ள முடியாமல்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அதற்கடுத்த வரிகளில் என் ஒப்புதல் வாக்குமூலம் தொடர்கிறது. அதை நீங்கள் கவனிக்கவில்லைப் போலும். இன்னுமொருமுறை உரக்கச் சொல்லுகிறேன் என் இனத்தின் அழிவிற்கு நானும் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயகாந்தன், ஜெயமோகன் மற்றும் என்னுடைய இலக்கியப் படைப்புகள்.. :rolleyes: மூன்றும் மூன்று வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்டவை என்பதை ஒப்புக்கொள்கிறேன்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் முழுஇனங்களும் நாடுகளுமே பயங்கரவாதிகள் தான்.தமக்கு தமக்கென பிரச்சனை வரும் போது.

சிங்களம் எமக்கு செய்யும் அதே அநியாயத்தை தனது இனத்திற்கு இந்தியனை கூப்பிட்டு செய்வித்தது.அதன் பின்னர் கூட பல அநியாங்கள் செய்தது.கதிர்காம அழகி மன்னம்பேரிக்கு நடந்ததும் தெரியும்.

சிங்களத்திற்கு மட்டும் நாங்கள் பயங்கரவாதிகளாக இல்லாமல் "உலகிற்கே பயங்கரவாதிகளாக" போனதே எமது தோல்வி.அதைத்தான் திரும்ப திரும்ப சொல்லி வந்தோமேயல்லாமல் சிங்களவனுடன் சண்டைக்கு போகவேண்டாம் என்று யார் சொன்னது.நானே அதற்குத்தானே போனேன்.

நான் ஒருவருடன் கொழுவும் போது அவருக்கு என்னால் அடிக்கமுடியாவிட்டாலும் பின்னராவது யாரையாவது கூட்டிக்கொண்டுவந்து அடிப்பேன் என்றால்தான் கொழுவலாம்.

கேட்கவே நாதியில்லாமல் இருந்தால் போறவன் வாறவன் எல்லாம் பதம் பார்த்துவிடுவான்.

இறுதியுத்தம் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் நடந்தது. மே 19 மட்டும் இப்படி நடக்கப்போகின்றதே என தெரியாமல் இருந்த------------ களில்தான் கோவம்.கடைசி நிமிடம் வரையும் ஏதோ அதிசயம் நடக்கப்போகின்றது என நம்பியிருந்த----------------- களை என்ன செய்வது.அந்த அளவிற்கு ஒரு பில்டப் கொடுத்து கதை அளந்து வைத்திருந்தீர்கள் அதன் விளைவுதான் இன்றய எமது நிலை.

திருப்பி அடிக்க முடியாவிட்டால் அவனுக்கு நக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லைதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயகாந்தன், ஜெயமோகன் மற்றும் என்னுடைய இலக்கியப் படைப்புகள்.. :rolleyes: மூன்றும் மூன்று வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்டவை என்பதை ஒப்புக்கொள்கிறேன்..! :lol:

கொஞ்ச நாளாய் இரண்டு சனலாய் ஓடிக்கொண்டிருந்த தலைப்பிலை இப்ப மூண்டாவது சனலும் வந்து சேந்துட்டுது.

ஜெயகாந்தன், ஜெயமோகன் மற்றும் என்னுடைய இலக்கியப் படைப்புகள்.. :rolleyes: மூன்றும் மூன்று வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்டவை என்பதை ஒப்புக்கொள்கிறேன்..! :lol:

எழுச்சி ஊட்டும் உங்களுடைய முன் நவீனத்துவப் படைப்புக்கள் தனித்துவமானவை. அந்தப் படைப்புகளே பல வேறுபட்ட தளங்களில் வைத்து ஆராயப்பட வேண்டியதொன்றாகும். ஆரம்பத்தில் புரட்சிகர எழுத்தாளர் சரோஜாதேவியின் அதீத தாக்கம் உங்கள் எழுத்துக்களில் தெரிந்தாலும், தற்காலப் படைப்புக்கள் சமகால எதிர்வினைகளோடு சமரசம் செய்யாமல் புதியபாதையை நோக்கி நகர்கின்றன. :blink:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயகாந்தன், ஜெயமோகன் மற்றும் என்னுடைய இலக்கியப் படைப்புகள்.. :rolleyes: மூன்றும் மூன்று வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்டவை என்பதை ஒப்புக்கொள்கிறேன்..! :lol:

அப்படியாயின் தண்ணி அடித்துவிட்டுத்தானே எழுதுவீர்கள்..?

ஏனெனில் கண்ணதாசனை வாசித்து எழுத ஆரம்பித்தவர்கள் எல்லோரும் அவருக்கு பின் தண்ணி அடித்துவிட்டே எழுத்தாளர் என்கின்றனர். :lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலிக்கும் இசைக்கும் பச்சைகுத்தமுயன்றேன். பச்சைகள் தீர்ந்துவிட்டதாக "படக்"கென்று ஒரு சிறு பெட்டிச் செய்தி தோன்றிச் சொல்லுகின்றது.

சில கருத்துக்களைப் பார்த்தால் அண்மையில் ஒரு கட்டுரையில் படித்த வசனம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

அவரவரது அறியாமையை அவர்கள் தமது கருத்துக்கள் மூலமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் போது நாம் அதிகம் அலட்டிக் கொள்ள முடியாதுதானே

என்னுடைய கருத்துக்களைப் படித்து அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எழுத்தாளியா வரவேணும் என்ற ஆசையே விட்டுப்போச்சப்பா. :o

  • கருத்துக்கள உறவுகள்

எழுச்சி ஊட்டும் உங்களுடைய முன் நவீனத்துவப் படைப்புக்கள் தனித்துவமானவை. அந்தப் படைப்புகளே பல வேறுபட்ட தளங்களில் வைத்து ஆராயப்பட வேண்டியதொன்றாகும். ஆரம்பத்தில் புரட்சிகர எழுத்தாளர் சரோஜாதேவியின் அதீத தாக்கம் உங்கள் எழுத்துக்களில் தெரிந்தாலும், தற்காலப் படைப்புக்கள் சமகால எதிர்வினைகளோடு சமரசம் செய்யாமல் புதியபாதையை நோக்கி நகர்கின்றன. :blink:

:lol: இது அதைவிடக் காமடியா இருக்கு..!! :lol: :lol:

தப்பிலிக்கும் இசைக்கும் பச்சைகுத்தமுயன்றேன். பச்சைகள் தீர்ந்துவிட்டதாக "படக்"கென்று ஒரு சிறு பெட்டிச் செய்தி தோன்றிச் சொல்லுகின்றது.

சில கருத்துக்களைப் பார்த்தால் அண்மையில் ஒரு கட்டுரையில் படித்த வசனம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

என்னுடைய கருத்துக்களைப் படித்து அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கிருபன்,

சாதுவா கோவிச்சிட்டீங்கள் போலை..! :unsure: நான் சும்மா வம்புக்கு எழுதினது..! :unsure: நான் என்னுடைய அவதாரில் எழுதியிருப்பதுபோல் ஒரு புத்தகமும் வாசிக்கிறதில்லை..! :blink:

உண்மையைச் சொல்லப்போனால் இலக்கியம், முன், பின் நவீனத்துவம் இதுக்கெல்லாம் எனக்கு விளக்கம் தெரியாது. பகிடிக்கில்லை..! :o

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எழுத்தாளியா வரவேணும் என்ற ஆசையே விட்டுப்போச்சப்பா. :o

நீங்களும் என்னைமாதிரி ஆசைப்பட்டதோடை சரி போலக் கிடக்கு..! :lol:

காடும் வாசித்து முடித்துவிட்டேன்.

எப்படி இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதுகின்றார் என வியப்பாக இருந்தது.காமம் பற்றி சற்று தூக்கலாகவே இருந்தது.அடுத்து ஏழாம் உலகம் வாசிக்க உள்ளேன்.

நக்குகின்றது பற்றி ஒருவர் எழுதியிருந்தார்.இப்படியானவர்கள் என் கணக்கில் வருவதே இல்லை.எம்மவர் பலருக்கு தெரிந்தது அதுதான்,அதை வைத்துத்தான் முள்ளிவாய்க்கால் வரை வியாபரமும் நடந்தது,இனி எப்பனும் செல்லாது என நினைக்கின்றேன்.

எமது இயக்கங்களிலேயே பெரிய பிரச்சனை அதுதான்,அவனுக்கு பிடிக்காவிட்டல் போ என்று விட வேண்டியதுதானே,ஓடினவனை பிடிக்க வேட்டை நாயாக அலைவதும்,போடுவதும்.சும்மா விட்டிருந்தால் அவர்கள் தன்னுடைய பாட்டில் விட்டால் காணும் என்று எங்கேனும் போய் தொலைந்திருப்பார்கள்.

சேர்ந்திருக்கும் போதுதான் இயக்கம் விடு பட்ட பின் தனி மனிதர்களே அவர்களால் ஒன்றும் முடியாது.இதை விளங்கும் பக்குவம் எங்கு இருந்தது.

தப்பிலிக்கும் இசைக்கும் பச்சைகுத்தமுயன்றேன். பச்சைகள் தீர்ந்துவிட்டதாக "படக்"கென்று ஒரு சிறு பெட்டிச் செய்தி தோன்றிச் சொல்லுகின்றது.

சில கருத்துக்களைப் பார்த்தால் அண்மையில் ஒரு கட்டுரையில் படித்த வசனம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

என்னுடைய கருத்துக்களைப் படித்து அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

அந்தக் கருத்து நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

சாதுவா கோவிச்சிட்டீங்கள் போலை..! :unsure: நான் சும்மா வம்புக்கு எழுதினது..! :unsure: நான் என்னுடைய அவதாரில் எழுதியிருப்பதுபோல் ஒரு புத்தகமும் வாசிக்கிறதில்லை..! :blink:

உண்மையைச் சொல்லப்போனால் இலக்கியம், முன், பின் நவீனத்துவம் இதுக்கெல்லாம் எனக்கு விளக்கம் தெரியாது. பகிடிக்கில்லை..! :o

கோவிச்சா பச்சை குத்தி என்னுடைய பச்சைப் புள்ளிகளை வீணாக்கமாட்டேன் ^_^

அந்தக் கருத்து நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல.

தப்பிலி, உண்மையிலேயே உங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன். :D .

  • கருத்துக்கள உறவுகள்

காடும் வாசித்து முடித்துவிட்டேன்.

எப்படி இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதுகின்றார் என வியப்பாக இருந்தது.காமம் பற்றி சற்று தூக்கலாகவே இருந்தது.அடுத்து ஏழாம் உலகம் வாசிக்க உள்ளேன்.

நக்குகின்றது பற்றி ஒருவர் எழுதியிருந்தார்.இப்படியானவர்கள் என் கணக்கில் வருவதே இல்லை.எம்மவர் பலருக்கு தெரிந்தது அதுதான்,அதை வைத்துத்தான் முள்ளிவாய்க்கால் வரை வியாபரமும் நடந்தது,இனி எப்பனும் செல்லாது என நினைக்கின்றேன்.

எமது இயக்கங்களிலேயே பெரிய பிரச்சனை அதுதான்,அவனுக்கு பிடிக்காவிட்டல் போ என்று விட வேண்டியதுதானே,ஓடினவனை பிடிக்க வேட்டை நாயாக அலைவதும்,போடுவதும்.சும்மா விட்டிருந்தால் அவர்கள் தன்னுடைய பாட்டில் விட்டால் காணும் என்று எங்கேனும் போய் தொலைந்திருப்பார்கள்.

சேர்ந்திருக்கும் போதுதான் இயக்கம் விடு பட்ட பின் தனி மனிதர்களே அவர்களால் ஒன்றும் முடியாது.இதை விளங்கும் பக்குவம் எங்கு இருந்தது.

தனிமனிதர்களாக போனால் அதனால் யாருக்கும் நஸ்டமில்லை......................

உயிரையும் உடலையும் அர்பணிப்பேன் என்று சத்தியம் கொடுத்தபின்புதான் சாதாரண பயிற்சியே கொடுக்கிறார்கள். தவிர எத்தனையோ மாவீரர்கள் தம்மை அழித்து பெற்றுகொடுத்தவைகளையும் பல இரகசியங்களையும் தம்மோடு காவி செல்வதால் பல போராளிகளின் அழிவுக்கு காரணமாகிறார்கள். அவர்களை தனிமனிதர் என்று அப்படியே விடுவதற்கு................. போராளி குடும்பம் என்ன கொழும்பு லோட்ஜ்ஜா?

போய் கொஞ்ச நாள் தங்கியிருந்துவிட்டு போவதற்கு?

மனிதாபிமானம் பார்த்து விட்டதுகளால்தான் இந்த நிலை.................... அப்பவே போஸ்டுல கட்டியிருந்தால் எமக்கு ஒரே எதிரி சிங்களவன்தான்.

உங்களை பெரிய நியாயவாதிகளாக்குவதற்கும் உப்புசப்பு இல்லாதவைகளை உண்மைகளாக்குவதற்கும் எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் வாசிப்பவர்களும் இலங்கை தமிழ்பகுதியில் இருந்து வந்தவர்களே என்பதை............. (சுத்தம் சுகம் தரும் என்று சொன்னால் பன்றி போய் குளிக்கவா போகிறது?)

தனிமனிதர்களாக போனால் அதனால் யாருக்கும் நஸ்டமில்லை......................

உயிரையும் உடலையும் அர்பணிப்பேன் என்று சத்தியம் கொடுத்தபின்புதான் சாதாரண பயிற்சியே கொடுக்கிறார்கள். தவிர எத்தனையோ மாவீரர்கள் தம்மை அழித்து பெற்றுகொடுத்தவைகளையும் பல இரகசியங்களையும் தம்மோடு காவி செல்வதால் பல போராளிகளின் அழிவுக்கு காரணமாகிறார்கள். அவர்களை தனிமனிதர் என்று அப்படியே விடுவதற்கு................. போராளி குடும்பம் என்ன கொழும்பு லோட்ஜ்ஜா?

போய் கொஞ்ச நாள் தங்கியிருந்துவிட்டு போவதற்கு?

மனிதாபிமானம் பார்த்து விட்டதுகளால்தான் இந்த நிலை.................... அப்பவே போஸ்டுல கட்டியிருந்தால் எமக்கு ஒரே எதிரி சிங்களவன்தான்.

மிகத் தவறான பொறுப்பற்ற பதில்

விடுதலைப் புலிகளில் இருந்தும்/ வேறு இயக்கங்களில் இருந்தும் விலகிய எத்தனையோ பேர் வெவ்வேறு தளங்களில் தாயக விடுதலைக்காக போராடி இருக்கின்றார்கள். இன்னும் பலர் குடும்பம் குட்டி என்று அமைதியான வாழ்வை வாழ்கின்றார்கள். அப்படிபட்டவர்களை ஒட்டு மொத்தமாக கேவலப்படுதுகின்றீர்கள். இவர்கள் தம் வாழ்வில் ஒரு காலகட்டத்தில் ஆயினும் அனைத்து சவால்களுக்கும் முகம் கொடுத்து போராடி இருக்கின்றார்கள். அப்படி செய்யாத நீங்கள் இவர்களை பார்த்து கேவலமாக கதைப்பதில் தெரிகின்றது உங்களின் போராளிகள் மீதான பற்று

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் என்னைமாதிரி ஆசைப்பட்டதோடை சரி போலக் கிடக்கு..! :lol:

நாமும் கொஞ்சம் இத்தூண்டு வில்டப் கொடுப்போம் என்றால் பொறுக்காதே. :(

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேற்கோள் காட்டிய கருத்திற்கும்.............. எனது கருத்திற்கும் உள்ள இடைவெளியின் புரிந்துணர்விலேதான் தவறே தவிர எனது கருத்திலோ உங்களுடைய கருத்திலோ அல்ல. உங்களுடைய கருத்தும் சரியானதே.

தனிநபர்களாக சென்றால் யாருக்கும் நஸ்டமில்லை.................

அதே நேரம் கருணாவையும் புலிகள் தமது அமைப்பிலே இருந்துதான் விலத்தினார்கள்..............

பட்பநாபாவை போட்டுதள்ளிய காலகட்டங்களில் டக்ளஸை போடுவதற்கு புலிகளுக்க எத்தனையோ சந்தர்ப்பங்கள் புலிகளின் காலுக்குள்ளேயே வந்து சென்றன............. ஏதோ தப்பி பிழைக்கட்டும் என்றே புலிகள் விட்டார்கள்.

ரெலோ பொபி தாசை சுட்டபோது................. தாசுடைய பாதுகாவலர்கள் வீண் சண்டை வேண்டாம் என்றே வெறும் கையோடு திரும்பினார்கள்.

செவின் (7) ரெலா பிரன்சிஸை புளட் சுட்டபோது ஏனையோர் புலிகளிடம் அடைக்கலம் தேடினார்கள்............... வீண் விரோதம் வளர்க்க நேரிடம் என்றே புலிகள் அவர்களை சேர்க்காது வீடுகளில் பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்த்தார்கள்........... (அப்போது அவர்களை அழைத்து பயிற்சியும் ஆயுதமும் கொடுத்து புளட்டை போட்டு தள்ளியிருக்கலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

மிகத் தவறான பொறுப்பற்ற பதில்

நான் மேற்கோள் காட்டிய கருத்திற்கும்.............. எனது கருத்திற்கும் உள்ள இடைவெளியின் புரிந்துணர்விலேதான் தவறே தவிர

எனது கருத்திலோ உங்களுடைய கருத்திலோ அல்ல. உங்களுடைய கருத்தும் சரியானதே.

:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேற்கோள் காட்டிய கருத்திற்கும்.............. எனது கருத்திற்கும் உள்ள இடைவெளியின் புரிந்துணர்விலேதான் தவறே தவிர எனது கருத்திலோ உங்களுடைய கருத்திலோ அல்ல. உங்களுடைய கருத்தும் சரியானதே.

தனிநபர்களாக சென்றால் யாருக்கும் நஸ்டமில்லை.................

அதே நேரம் கருணாவையும் புலிகள் தமது அமைப்பிலே இருந்துதான் விலத்தினார்கள்..............

பட்பநாபாவை போட்டுதள்ளிய காலகட்டங்களில் டக்ளஸை போடுவதற்கு புலிகளுக்க எத்தனையோ சந்தர்ப்பங்கள் புலிகளின் காலுக்குள்ளேயே வந்து சென்றன............. ஏதோ தப்பி பிழைக்கட்டும் என்றே புலிகள் விட்டார்கள்.

ரெலோ பொபி தாசை சுட்டபோது................. தாசுடைய பாதுகாவலர்கள் வீண் சண்டை வேண்டாம் என்றே வெறும் கையோடு திரும்பினார்கள்.

செவின் (7) ரெலா பிரன்சிஸை புளட் சுட்டபோது ஏனையோர் புலிகளிடம் அடைக்கலம் தேடினார்கள்............... வீண் விரோதம் வளர்க்க நேரிடம் என்றே புலிகள் அவர்களை சேர்க்காது வீடுகளில் பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்த்தார்கள்........... (அப்போது அவர்களை அழைத்து பயிற்சியும் ஆயுதமும் கொடுத்து புளட்டை போட்டு தள்ளியிருக்கலாம்)

சா. சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிட்டார்கள்!

போட்டுத்தள்ளவேண்டும் என்ற சிந்தனை தமிழர்களிடன் இருந்து மாறாதவரை சிங்களவர்கள் தமிழர்கள் போட்டுத்தள்ளுவதை எல்லோரும் வேடிக்கைபார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.