Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் ராதிகாவிற்கு வெற்றி

Featured Replies

உங்கள் கருத்தில் சுய முரண்பாட்டை சுட்டிக்காட்டுகிறேன்..

தேசிய ரீதியாக நீங்கள் கனடிய தேசியத்தை பிரதிபலிக்க விரும்புகிறீர்கள். இனத்துவ ரீதியாக தமிழர்களாக இனங்காட்ட விரும்புகிறீர்கள். ஆனால் இடையில் சந்ததி கனடியராக வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள்..! இல்லேல் தக்கன பிழைக்கும் அல்லன மாளும் என்றும் சொல்கிறீர்கள்.

நான் எழுதியதை மீண்டும் வாசிப்பது நல்லது

எம் எதிர்கால சந்ததி நிச்சயம் கனடிய தமிழர்களாகத் தான் மாறும் என்றே கூறியுள்ளேன். அது தானாகவே நிகழும் ஒரு நிகழ்வாக அமையும். தன் இனத்துக்குரிய தனித்துவமான அடையாளங்களை கொண்ட ஒரு கனடிய தேச சந்ததியாகத் தான் நிச்சயம் அது மாறும். இதே மாற்றம் தான் பிரித்தானியாவிலும், ஆசியிலும் தமிழர்கள் பல ஆண்டுகளாக வாழும் பிரதேசங்களிலும் நிகழும்

இடையில் என்னை அடிப்படைவாதிகளோடும் ஒப்பிடுகிறீர்கள்...??!

அடிப்படையில் உங்களுக்கு கனடிய தேசிய அரசியல் வேண்டும். வாக்கு வாங்க.. மற்றவர்களில் இருந்து பிரிந்துக் காட்ட.. தமிழர் என்ற இனத்துவம் வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு கனடியராக வாழ்வு வேண்டும். இதில் எந்த அடிப்படைவாதத்தையும் நீங்கள் காணவில்லை என்றும் மறுக்கிறீர்கள்.

இதில் எந்த அடிப்படைவாதமும் இல்லை. கனடாவில் வாழும் அனைத்து இனமும் (பூர்வீக குடிகள் தவிர்ந்த) இங்கு வந்த குடியேறிய இனங்களே. ஒவ்வொரு இனமும் தேசிய அளவில் கனடியர்களாகவும், இனம் சார்ந்த விதத்தில் வேறுபாடுகள் கொண்டதாகவும் இருக்கின்றார்கள். ஏற்கனவே கனடிய சீனர்கள், கனடிய சீக்கியர்கள் என்று பல உதராணம் கூறியுள்ளேன்

சிறீலங்காவில் இருக்கும் உங்கள் பூர்வீக நிலத்தை விட்டு இன்னொரு தேசத்தில் அடைக்கலம் பெற்றிருக்கும் நீங்களே... அந்த நாட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்று விரும்பும் போது.. பல்லின மக்களை உள்வாங்கும் கனடா நிச்சயம் உங்களை கனடியர்களாக முற்று முழுதாக மாற்றுவதில் தான் அக்கறை செய்யும். கனடிய தமிழர்கள் என்று நீங்கள் உச்சரிப்பதில் இருக்கும் தமிழ் அடிப்படைவாதம் உங்களுக்குப் புரியவில்லை. கனடாவில் கனடியர்களுக்கு தமிழர்களின் மொழியோ.. கலாசாரமோ.. பண்பாடோ.. விழுமியமோ அவசியமில்லை. அவை அவர்களின் தேசியத்தை பிரதிபலிக்கவும் போறதில்லை. அப்படி இருக்க எதற்கு உங்களை கனடிய தமிழர்கள் என்று தமிழ் அடிப்படைவாதத்தால் அழைக்கிறீர்கள் என்ற கேள்வியை என்னாலும் முன் வைக்க முடியும்.

கனடிய தமிழர்கள் என்பது அடிப்படை வாதம் என்று நீங்கள் சொல்லுவதில் இருந்தே இனம் பற்றிய உங்கள் பார்வை புலப்படுகின்றது.

பல் இன மக்கள் வாழும் கனடாவில், அதன் அரசியலமைப்பில் ஒவ்வொரு இனமும் தனக்கான தனித்துவமான அடையாளங்களை பேணுவதற்கான அனைத்து உரிமைகளையும் வழங்குகின்றது. அதன் மூலம் அவர்களின் அடையாளங்களை பேணுவதற்கு உதவுகின்றது. அதனால் தான் பல சந்ததிகால இருக்கும் மக்களையும் மிகத் தெளிவான கலாசார அடையாளங்கள் மூலம் இனம் காணக்கூடியதாக இருக்கின்றது. கனடாவுக்கு தமிழர்களின் மொழியோ கலாச்சாரமோ தேவை இல்லை என்பது தவறு. எப்படி ஏனைய இனங்களின் மொழியையும் கலாச்சாரத்தினையும் அவசியம் என்று கனடா ஏற்றுக்கொண்டு அவற்றை மேம்படுத்த அரசியல் ரீதியாக உரிமைகளை வழங்கி இருக்கின்றதோ அதே போன்று தான் தமிழர்களுக்கும் வழங்கி இருக்கின்றது

கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு பிறந்த பிள்ளைகளால் தமிழர்களாக வாழ முடியாது எனும் போது மாற்றம் வேண்டும் எனும் போது சிங்கள தேசத்தின் கட்டுப்பாட்டுக்குள் பிறந்த தமிழர்கள் மட்டும் தமிழீழம் அமைக்க போராடனும் என்ற உங்கள் எதிர்பார்ப்பும்... ஒரு வகையில் அடிப்படைவாதமாக இனங்காட்டப்படலாம். ஏன் தமிழ் தேசியம் கூட ஒரு அடிப்படைவாதமாக இனங்காட்டப்படலாம்.

எப்போதும் ஒருவர் சொல்லாத ஒரு விடயத்தினை மேற்கோள் காட்டி எழுதுவது உங்கள் வாடிக்கை. எங்கே அப்படி எழுதியுள்ளேன் எனக் காட்டவும் என்று கேட்டால் அப்படியே நழுவி விடுகின்றீர்கள். அதே போலத் தான் இதுவும். கனடாவில் வாழும் ஈழத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழர்களாக வாழ முடியாது எங்கே கூறியுள்ளேன் எனக் காட்டவும். மாறாக, அந்த பிள்ளைகள் தாம் பிறந்த நாட்டுக்கும், வளரும் சூழலுக்கும் ஏற்ப தம்மை தகவமைத்து கொண்டு தன் இன அடையாளங்களை பேணும் என்றே நம்பிக்கையாக் கூறுகின்றேன். இது கனடா சந்ததிகளுக்கு மட்டும் அல்ல, ஏனைய புலம் பெயர் நாடுகளிலும் வாழும் தமிழ் சந்ததிகளுக்கும் பொருந்தும். அவர்களும் தாம் பிறந்த, வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தம்மை மாற்றி அமைத்து தம் இன அடையாளங்களை பேணுவர்

அடிப்படைவாதம் என்ற கருதுகோளுக்கு அப்பால்... யூதர்கள் தமிழர்களை விட பல தலைமுறைகளாக மேற்கு நாடுகளில் வாழ்கின்ற போதும் இப்போது கூட யூதக் குழந்தைகளை இலகுவான இனங்காண முடிகிறது. அவர்கள் அந்தந்த நாட்டு தேசிய அடையாளங்களோடு இணங்கி வாழ்கின்ற போதும்.. தமது இனத்துவ அடையாளத்தை கைவிடவில்லை. தமிழர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் அதைக் கைவிடுவதன் மூலமே அந்தந்த நாட்டு தேசியத்துக்குள் பூரணமாக கலந்து தக்கன பிழைக்க முடியும் என்கிறீர்கள்.

மீண்டும் நான் கூறாத ஒன்றை உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றி கூறுகின்றீர்கள். எந்த இடத்தில் எம் பிள்ளைகள் தம் இன அடையாளங்களை கை விட வேண்டும் என்று கூறியுள்ளேன். தாம் பிறந்த, வாழும் நாட்டுக்கு ஏற்ப தம்மை மாற்றியமைத்து தம் இன அடையாளங்களை பேணும் என்று தான் தொடர்ந்து கூறுகின்றேன்

இது அறியாமை. தமிழர்கள் நிறந்தால்.. கனடியப் பூர்வீகம் அடைய முடியாது. கனடிய கறுப்பர்கள்.. கறுப்பர்களாகத்தான் இனங்காணப்படுகின்றனர். கனடிய ஆசியர்கள் ஆசியர்களாகத்தான் இனங்காணப்படுகின்றனர். கனடிய வெள்ளையர் பூர்வ குடிகளாக இருக்கின்றனர். எல்லோரையும் கனடியர்கள் என்ற ஒரு வகைக்குள் வைக்கவில்லை. அப்படி இருக்க தமிழர்கள் மட்டும்...

கனடியர்களுக்கு என்று பொதுவான ஒரு இன அடையாளம் இல்லை. ஒவ்வொரு இனக் குழுமமும் தம் தனித்துவதுவத்துடன் தான் இருக்கின்றனர். நீங்கள் சொல்லுவதை திருத்தி கனடிய கறுப்பர்கள்.. கனடிய கறுப்பர்களாகத்தான் இனங்காணப்படுகின்றனர். கனடிய ஆசியர்கள் கனடிய ஆசியர்களாகத்தான் இனங்காணப்படுகின்றனர். அத்துடன் நீங்கள் எழுதியது போல் வெள்ளையர்கள் இங்கு பூர்வீக குடியினர் இல்லை. இங்கே பார்க்கவும்

அந்தந்த மக்கள் கூட்டம் அவர்களாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் விரும்பும் வடிவில்.. அந்தந்த நாடுகளில் வாழ அனுமதிக்கப்படும் போதுதான் உண்மையான பல்லினத்துவம் பிரதிபலிக்க முடியும். அதைவிடுத்து.. பல்லின நாடுகள் என்று கூறிக் கொண்டு மக்களை ஒரு தேசிய நீரோட்டத்துக்குள் அடங்கச் செய்வது ஒரு வகை அடக்குமுறையே ஆகும். அங்கு தக்கன பிழைப்பது நடக்கிறதோ இல்லையோ.. இனத்துவம் சிறுகச் சிறுக இழக்கச் செய்யப்படுகிறதே. இருந்தாலும்.. பிறப்புரிமை இயல்புகள்.. அதனை தடுத்து நிறுத்தி விடுகின்றன.

கனடா அவ்வாறு தான் செய்கின்றது. ஒவ்வொரு இனமும் விரும்பும் வடிவில் இங்கு வாழ முடிகின்றது. அப்படி வாழும் இனங்களில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரகளாக வருவதும் தேசிய அரசியலின் நீரோட்டத்தில் இணைவதும் தம் இன அடையாளங்களை இழந்து போவதுக்கு சமனானது அல்ல, மாறாக தம் இனத்துக்கான வலுவை தேசிய அளவில் அதிகரிக்க வைபபதட்கானது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என்றால், அவ்வாறு தேசிய நீரோட்டத்துக்குள் கலக்க வைப்பது அடக்கு முறை என்று. என்னத்தை சொல்ல

கனடாவில் வாழும் தமிழர்களிடம் ஒரு அறிவிப்பை செய்யுங்கள். ஒரு ஊசியைப் போட்டால் வெள்ளையர் ஆகலாம் என்று. அத்தனை தமிழர்களும் வெள்ளையாக முண்டி அடிப்பார்கள்.

எனக்கு என் இனம் பற்றி மட்டமான சிந்தனை இல்லை. தன்னை போல மற்றவர்களை நினைத்துக் கொள்ளவது ஒரு வகை மனோபாவம்

தங்களுக்கு வெள்ளையர் போன்ற உரிமை வேண்டும் என்பதில் அவர்களுக்கு உள்ளூர ஒரு தேவை அல்லது ஏக்கம் இருக்கிறது.

இறுதியாக என் கருத்துகளின் சாராம்சம்

1. கனடிய தமிழ் மக்களில் இருந்தும் ஏனைய புலம் பெயர் தேசங்களில் இருந்தும் அந்தந்த நாடுகளின் தேசிய அரசியலில் தம்மை இணைத்து தமிழர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்து அரசியலிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பலம் பொருந்திய இனமாக மாற வேண்டும்

2. ஒவ்வொரு நாட்டினதும் சகல அதிகார மட்டங்களிலும் தம்மை இணைத்து கொள்ள இளைய தமிழ் சமுதாயம் முன் வர வேண்டும்

நன்றி வணக்கம்

பிகு: நெடுக்ஸ் உங்களுடன் விவாதிப்பதில் இருக்கும் Challenge என்ன தெரியுமா? நீங்கள் எழுதும் வேகத்தில் என்னால் (அல்லது எவராலும்) எழுத முடியாது ... அம்மாடி இன்று எழுதிக் களைத்து விட்டேன். எப்படி வாசிக்கும் வேகத்தில் எழுத கற்றுக் கொண்டீர்கள்?

Edited by நிழலி

  • Replies 79
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களால் சாதிக்க முடியாததை ஒரு பெண்ணாக நின்று சாதித்தமைக்காக ராதிகாவுக்கு எனது பாராட்டுகள்

ரதி எந்த விடயமாக இருந்தாலும் பெண்களிடம் முன்வைத்து நகர்த்தச் சொல்லுங்கள். செயல்வடிவம் கூர்மை மிக்கதாகவும் சாதுரியமானதாகவும் அமையும். அனுபவரீதியாக பல விடயங்களைக் கண்டிருக்கிறேன். இன்றும் ராதிகா போட்டியிட்ட இத்தொகுதியில் ஒரு ஆணை நிறுத்தியிருந்தால் அதில் தோல்வி ஏற்பட்டிருக்கும். ராதிகாவின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள் 90 வீதமானவர்கள் ஆண்கள் அதையும் நாம் மறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிகு: நெடுக்ஸ் உங்களுடன் விவாதிப்பதில் இருக்கும் Challenge என்ன தெரியுமா? நீங்கள் எழுதும் வேகத்தில் என்னால் (அல்லது எவராலும்) எழுத முடியாது ... அம்மாடி இன்று எழுதிக் களைத்து விட்டேன். எப்படி வாசிக்கும் வேகத்தில் எழுத கற்றுக் கொண்டீர்கள்?

உண்மைதான் திறமையை யாரும் பாராட்ட வேண்டும். அதுவும் தமிழில் விரைவாக எழுத்து பிழையில்லாமல் தட்டச்சு செய்வது சுலபமல்ல.

அதற்க்காக விதண்டாவாதம் எற்றுக்கொள்ளக்கூடியதல்ல :):D

ரதி எந்த விடயமாக இருந்தாலும் பெண்களிடம் முன்வைத்து நகர்த்தச் சொல்லுங்கள். செயல்வடிவம் கூர்மை மிக்கதாகவும் சாதுரியமானதாகவும் அமையும். அனுபவரீதியாக பல விடயங்களைக் கண்டிருக்கிறேன். இன்றும் ராதிகா போட்டியிட்ட இத்தொகுதியில் ஒரு ஆணை நிறுத்தியிருந்தால் அதில் தோல்வி ஏற்பட்டிருக்கும். ராதிகாவின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள் 90 வீதமானவர்கள் ஆண்கள் அதையும் நாம் மறுக்க முடியாது.

இதப் பாரடா...நாங்கள் பாவம் போனால் போகட்டும் என்று விட்டுக் கொடுத்தால், எப்படி எல்லாம் சொல்லினம்

  • கருத்துக்கள உறவுகள்

குடியேற்றக் கார தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் போது நான் ஒரு தமிழிச்சி.. என்பதுடன் தங்கள் திட்டங்கள் தொடர்பிலும் பிரச்சாரம் செய்வார்கள்.. இதர கனேடிய குடியேற்றக்காரர்களிடம் பிரச்சாரம் செய்யும் போது தங்கள் கட்சி சார்ந்த திட்டங்களை கொள்கைகளை மட்டும் முன் வைத்து பிரச்சாரம் செய்வார்கள்.

அந்த தமிழிச்சி என்ற உச்சரிப்பு தமிழ் தேசியம் சார்ந்து வரும் ஒன்று என்பதை மிக வசதியாக பலர் மறந்து விடுகிறார்கள். தமிழிச்சி என்ற பதம் கனடிய தேசியம் சார்ந்த ஒன்றாக இருக்க கனடாவில் சட்ட அனுமதி இருக்கா என்று தெரியவில்லை..??! கனடிய குடி உரிமை பெற்றவர்கள் கனடிய தேசிய மக்களாகவே தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை இரட்டைக் குடியுரிமை போல.. இட்டை தேசிய அடையாளம்.. கனடிய குடியேற்றக்கார தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோ தெரியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பினர். அவர்களின் தடைக்கு எதிராக இதுவரை எந்த குடியேற்றக்கார தமிழர்களும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் 29 வயதான இளம் பெண் எம் பியான இவர் விடுதலைப்புலிகள் என்ற பதத்தை உச்சரிப்பார் என்று எதிர்பார்ப்பது அல்லது எதிர்பார்க்கத் தூண்டுவது மிக மோசமான சந்தர்ப்பவாதம்.

இவர் உண்மையில் கனடிய நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர். ஒரு தேசிய கட்சியின் அங்கத்துவராக அந்தக் கட்சியின் உறுப்பினராக அவரின் சொந்த தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த தேசியக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் தான் செயற்பட முடியும். அதை மீறிச் செயற்பட முடியாது. இவர் தனது செயற்திட்டங்களை கொள்கைகளை கட்சி அனுமதியுடன் தனது தொகுதியில் நடைமுறைப்படுத்தலாம். ஆனால் ஆளும் கட்சி அதற்கு எந்தளவுக்கு இவருக்கு இடமளிக்கும் அதன் கொள்கைகள் எந்தளவிற்கு இவரின் உறுதிமொழிகளை காக்க உதவும் ஆளும் கட்சியிடம் இவர் எவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகித்து தனது தொகுதிக்கு நன்மை தேடித் தருவார் என்பது கூட இவரைப் பொறுத்தவரை சவாலான விடயங்களே.

அப்படி இருக்க தமிழிச்சி.. அல்லது தமிழ் பெயரை வைத்துக் கொண்டதற்காக.. இவர் தமிழ் மக்களுக்கு... கனடாவுக்கு உள்ளும் வெளியிலும்.. (இவரது தொகுதி தவிர) எதை செய்வார் என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருக்க.. இவருக்கு.. தமிழர்கள் அதாவது கனடிய தேசியத்துக்கு உட்படாத தமிழர்கள் எதற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். தமிழ் தேசியத்தை ஒட்டியதாகத்தானே அது இருக்க முடியும்.

தமிழர்கள் ஒரு தேசிய இனம். அந்த வகையில் தமிழர்களின் தேசியமாக தமிழ் தேசியம் இருக்கிறது. அதை உச்சரிக்கப்படாது என்றால் இந்தப் பெண்மணி தமிழர்கள் மத்தியில் தமிழிச்சி என்றும் உச்சரிப்பது சரியல்ல. மற்ற கனடியர்கள் முன்னாள் உச்சரிப்பது போல.. தன்னை குடியேற்றக்காரி என்று உச்சரிப்பதே மிகப் பொருந்தும் அல்லவா..??!

யூதர்கள் கனடிய குடியேற்றக்காரர்களாக இருந்தாலும்.. இஸ்ரேல் நாட்டு குடிமக்களாக இருந்தாலும்.. யூதர்கள் என்ற தேசிய இன அடையாளத்தை மறந்தவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் ஒரு கனடிய பாராளுமன்றப் பதவியை தக்க வைக்க தமிழ் தேசியத்தை கூட மறக்க பரிந்துரைக்கும் இழிவானவர்களாக வெட்கக் கேடானவர்களாக இருப்பதை இக்களத்தில் இக்கருத்து அப்பட்டமாக இனங்காட்டி நிற்கிறது.

இதுதான் யூதர்கள் நாட்டை அடையவும் தமிழர்கள் நாடோடியாக அலையவும் காரணம்..!

நெடுக்குத்தம்பி

கேள்வியின் நாயகனும் நீயே பதிலும் நீயே... :D

ரதி எந்த விடயமாக இருந்தாலும் பெண்களிடம் முன்வைத்து நகர்த்தச் சொல்லுங்கள். செயல்வடிவம் கூர்மை மிக்கதாகவும் சாதுரியமானதாகவும் அமையும். அனுபவரீதியாக பல விடயங்களைக் கண்டிருக்கிறேன். இன்றும் ராதிகா போட்டியிட்ட இத்தொகுதியில் ஒரு ஆணை நிறுத்தியிருந்தால் அதில் தோல்வி ஏற்பட்டிருக்கும். ராதிகாவின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள் 90 வீதமானவர்கள் ஆண்கள் அதையும் நாம் மறுக்க முடியாது.

இப்படிச் சொல்கின்றேன் என்று கோபிக்கக்கூடாது. போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் மத்தியில் ராதிகா மிகவும் அழகானவர். இந்த அழகு விடயத்தையும் சபையோர் கவனத்தில் எடுக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். செயல்வடிவம், சாதுரியம் எல்லாம் இதன்பின்னாலேயே வருகின்றது. உதாரணத்திற்கு ஓர் கட்டை, குண்டு, கருநிற, பல் மிதக்கின்ற பெண் ஒருவர் வேட்பாளராக நின்று இருப்பின் இதே ஆதரவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே..?

  • கருத்துக்கள உறவுகள்

இதப் பாரடா...நாங்கள் பாவம் போனால் போகட்டும் என்று விட்டுக் கொடுத்தால், எப்படி எல்லாம் சொல்லினம்

பெண்ணின் பலத்தை ஆண்கள் உணர்வதில்லை. எப்போதுமே தமக்குப் பின்னாலேயே என்ற பழக்கத்திற்கு உட்படுத்திவிட்டார்கள் இப்போதும் அதிலிருந்து மாறக் கஸ்டப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி எந்த விடயமாக இருந்தாலும் பெண்களிடம் முன்வைத்து நகர்த்தச் சொல்லுங்கள். செயல்வடிவம் கூர்மை மிக்கதாகவும் சாதுரியமானதாகவும் அமையும். அனுபவரீதியாக பல விடயங்களைக் கண்டிருக்கிறேன். இன்றும் ராதிகா போட்டியிட்ட இத்தொகுதியில் ஒரு ஆணை நிறுத்தியிருந்தால் அதில் தோல்வி ஏற்பட்டிருக்கும். ராதிகாவின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள் 90 வீதமானவர்கள் ஆண்கள் அதையும் நாம் மறுக்க முடியாது.

அதாகப்பட்டது........... தாங்கள் அறிவுறுத்த விளைவது என்னவோ?

தமிழினம் என்பதையும் மீறி ஆணினம் பெண்ணினம் என்பதற்கு இலக்கணம் வகுக்க முற்படுகின்றீர்களோ?

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது........... தாங்கள் அறிவுறுத்த விளைவது என்னவோ?

தமிழினம் என்பதையும் மீறி ஆணினம் பெண்ணினம் என்பதற்கு இலக்கணம் வகுக்க முற்படுகின்றீர்களோ?

வாழ்த்துக்கள்.

கு. சா அண்ணா நான் அத்தகைய கருத்தைச் சொல்ல வரவில்லை ரதியின் பாராட்டுதலுக்கு நானும் என் கருத்தைத் தெரிவித்திருந்தேன். அதிலும் ஆண்களை பிரித்துச் சொல்லவில்லையே ராதிகாவின் வெற்றிக்குப் பாடுபட்டவர்கள் 90 சதவீதத்தினர் ஆண்கள் என்றல்லவா குறிப்பிட்டிருந்தேன்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லிவைக்க வேண்டியுள்ளது. எந்த சமூக மாற்றமும், இனவிடுதலையும் பெண்கள் முழுமையாக முன்வராமல் அடைய முடியாது

முக்கியமாக இன ஒற்றுமையும்

ரதி எந்த விடயமாக இருந்தாலும் பெண்களிடம் முன்வைத்து நகர்த்தச் சொல்லுங்கள். செயல்வடிவம் கூர்மை மிக்கதாகவும் சாதுரியமானதாகவும் அமையும். அனுபவரீதியாக பல விடயங்களைக் கண்டிருக்கிறேன். இன்றும் ராதிகா போட்டியிட்ட இத்தொகுதியில் ஒரு ஆணை நிறுத்தியிருந்தால் அதில் தோல்வி ஏற்பட்டிருக்கும். ராதிகாவின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள் 90 வீதமானவர்கள் ஆண்கள் அதையும் நாம் மறுக்க முடியாது.

சொல்வதற்காக மன்னிக்கவேண்டும் சிஸ்ரர் உங்களின் கருத்தைப்பார்த்தால் பெண் என்றதால்தான் எல்லோரம் வாக்களித்தார்கன் ஆணாக இருந்திருந்தால் வாக்களித்திருக்கமாட்டார்கள் என்கிறீர்கள்

கனேடியத்தமிழரின் ஒரு பிரபலமான பாபு உணவகம் முதல் நாள் தொடக்கம் இராதிகா அவர்களுக்கு ஆதரவு தந்துள்ளது. ஒவ்வொரு உணவுப்பொதிகளுக்குள்ளும் அவர் சம்பந்தமான பிரச்சார அறிக்கையை வைத்துள்ளது.

இறுதியில் வெற்றி நிகழ்வுக்கு இலவச உணவுகளையும் அனுப்பியது.

A Million Thanks from the bottom of our hearts to Babu Catering which did a fantastic job of promoting Rathika – credit must go to Babu for his MOST VALUABLE COMMUNITY SERVICE. He made sure from the beginning of the campaign until the end that Rathika’s flyer went into every purchase – Amazing – Thank you to all the staff for their great help, despite the rush due to the crowds that go to Babu’s, they did their job to

help Rathika win!

Babu sent dinner (free) for Rathika’s victory party!

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வதற்காக மன்னிக்கவேண்டும் சிஸ்ரர் உங்களின் கருத்தைப்பார்த்தால் பெண் என்றதால்தான் எல்லோரம் வாக்களித்தார்கன் ஆணாக இருந்திருந்தால் வாக்களித்திருக்கமாட்டார்கள் என்கிறீர்கள்

ஆணாக இருந்திருந்தாலும் வாக்களித்திருப்பார்கள். ஆனால் நிறையச் சேறடிப்புகள் நடந்திருக்கும். அதுவே பின்னடைவுகளை உருவாக்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கும்

கனடாவில் பல தொகுதிகளில் சீக்கிய கனேடியர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெல்வதுண்டு. காரணம் அவர்கள் எல்லா கட்சிகள் சார்பாகவும் தமது மக்களை தமது அங்கத்துவர் பலம் மூலம் தெரிவுசெய்வதுதான்.

உண்மையில் தமிழரும் ஒரு தொகுதியில் ஒரு தமிழரை ஒரு கட்சியில் மட்டும் நிறுத்தி வெல்ல வைப்பதை விட எல்லா முக்கிய கட்சிகளிலும் நிறுத்த வைப்பது இலகுவான செயல். பல நேரங்களில் ஒரு ஐம்பது பேரால் மட்டுமே ஒரு கட்சியின் சார்பான வேட்பாளர் தெரிவுசெய்யப்படும் நிலைமை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Rathika becomes the first Eezham Tamil MP in Canada

[TamilNet, Tuesday, 03 May 2011, 23:19 GMT]

29-year-old Canadian Eezham Tamil Rathika Sitsabaiesen, hailing from Achchuveali in Jaffna, has been elected as member of parliament in Canada as a candidate of New Democratic Party (NDP) which has emerged as the leading opposition under the leadership of Jack Layton in the general elections held on May 02. Ms. Rathika now represents the multi-ethnic federal constituency of Scarborough- Rouge River, where Eezham Tamils make a significant section of the population. She is the first Tamil to be elected to the Canadian Parliament. Her successful election by a big margin through the opposition NDP ticket reflects the true feelings of Eezham Tamils in Canada towards establishments that slip in delivering justice to Eezham Tamils, commented Tamil diaspora circles in Canada.

NDP Leader Jack Layton was always in the forefront in voicing for the grievances of Eezham Tamils in the times of their crisis, diaspora circles in Canada further said.

Rathika, who became actively involved with the NDP in 2004, also served as the advisor on Tamil affairs to the NDP leader.

According to Canadian media, Scarborough- Rouge River was always a safe Liberal seat earlier.

Ms. Rathika, a first time candidate, secured victory with a big margin for the NDP in the present elections. She polled 41.1% trailed behind by Marlene Gallyot of the Conservative Party, who polled 29.6% and Rana Sarkar of the Liberal Party polling 27.1%.

Ms. Gallyot is a former immigration consultant and Mr. Sarkar is the CEO of the Canada-India Business Council.

Rathika was doing her Master’s Degree in Industrial Relations in Queen’s University.

She joined Toronto University for her undergraduate studies, where she was Vice-President of the Tamil Student's Association. Later, she received her Bachelor's degree in Commerce from the Carleton University where she was vice president of the University Students Union.

The NDP has secured 102 out of 308 seats in the House of Commons, up from 37 in the previous House, becoming the leading opposition for the first time. Liberals received 34 seats.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33898

---------------

தமிழ்நெட் இவரை யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த ஈழத் தமிழராகத்தான் இனங்காட்டுகிறது..! கனடா தமிழர் என்ற அடைமொழியை அது தவிர்த்திருக்கிறது. கனடாவில் வாழும் ஈழத்தமிழர் என்ற பதத்தினை அது பாவித்திருக்கிறது. கனடாவில் பல்லின மக்கள் வாழும் தொகுதி ஒன்றில் இருந்து அதிகம் ஆசியர்கள் வாழும் பகுதி ஒன்றில் இருந்து.. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி ஒன்றில் இருந்து இவர் தெரிவாகி இருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழர்களுக்கு சேவையாற்றக் கடமைப்பட்டுள்ளார். இவர் ஏலவே அதன் கட்சித் தலைமைக்கு தமிழர் விவகாரம் சார்ந்த ஆலோசகராக இருந்துள்ளார். அந்த வகையில் இவர் கட்சியின் தலைமை தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து இன்னும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்த முடியும்.

இவரது வெற்றிக்கு இவர் ஈழத் தமிழர் என்றதும் ஒரு காரணியாக இருந்து வாக்குச் சேர்த்துள்ளது. இதனை இங்கு பலர் ஏற்க மறுக்கலாம். ஆனால் இந்தச் செய்தி அதனை சொல்கிறது. அந்த வகையில் இவர் தமிழர்களுக்காக செய்ய வேண்டிய நல்லவற்றை செய்வது நன்று. அதற்காக இவரை தேர்ந்தெடுத்த மாற்றின மக்களை மறக்கவும் கூடாது. அவர்களின் தேவைகளையும் சரியாக இனங்கண்டு பூர்த்தி செய்ய பாடுபட வேண்டும். வெட்டி பந்தாக்களை தவிர்ப்பது நன்று. :)

Edited by nedukkalapoovan

This is what Rathika said:

"I've been a Tamil all my life and those negative stigmas on the community … we have the opportunity now to break through," she said. "We as a community cannot be thrown under that blanket statement. This is just another step in the development of the Canadian Tamil community."

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாக இருந்திருந்தாலும் வாக்களித்திருப்பார்கள். ஆனால் நிறையச் சேறடிப்புகள் நடந்திருக்கும். அதுவே பின்னடைவுகளை உருவாக்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கும்

ஆண்களுக்கு இவ்வுலகில் எத்தகைய அநியாயங்கள் நிகழ்கின்றன என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வதற்காக மன்னிக்கவேண்டும் சிஸ்ரர் உங்களின் கருத்தைப்பார்த்தால் பெண் என்றதால்தான் எல்லோரம் வாக்களித்தார்கன் ஆணாக இருந்திருந்தால் வாக்களித்திருக்கமாட்டார்கள் என்கிறீர்கள்

ஓம் அவர் பெண்ணாக அதுவும் கலைஞன் சொன்ன மாதிரி அழகிய பெண்ணாக இருந்த படியால் தான் வெற்றி பெற அதிக காரணமாய் இருந்தது...அதே நேரத்தில் சகாரா அக்கா சொன்ன மாதிரி இவரது வெற்றிக்கு அதிக ஆண்கள் உழைத்திருக்கலாம் மறுப்பதற்கு இல்லை.

கொன்சவேட்டிவ் வெற்றியின் பின் பலருக்கு இங்கு காச்சல் அடிக்க ஆரம்பித்திருக்கின்றது,யாரென்று போகப் போக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொன்சவேட்டிவ் வெற்றியின் பின் பலருக்கு இங்கு காச்சல் அடிக்க ஆரம்பித்திருக்கின்றது,யாரென்று போகப் போக தெரியும்.

உங்களுக்கு கொன்சவேட்டிவ் பிடிக்கும் என்பதற்காக மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று இல்லை தானே. பிறகென்ன காச்சலும் ...

  • கருத்துக்கள உறவுகள்

Tamil voters turned on party in Scarborough, says former MP Cannis :)

http://www.insidetoronto.com/news/elections/article/1003219--scarborough-liberals-struggle-to-make-sense-of-losses-in-safe-ridings

"That community turned against us completely and some of us paid the price," said Cannis, insisting that after the surprise resignation of Scarborough-Rouge River MP Derek Lee on the eve of the election, Tamils were looking to have a candidate carry the Liberal colours there.

That opportunity was missed, said Cannis, arguing if a Tamil-Canadian candidate had run for the party Liberals would have won Lee's riding and the "signals" it sent may have given him enough votes to win his own three-way race in Scarborough Centre.

"The NDP was smart" to have chosen Rathika Sitsabaiesan, now headed to Ottawa as Canada's first Tamil-Canadian MP, said Cannis.

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

Tamil voters turned on party in Scarborough, says former MP Cannis :)

http://www.insidetoronto.com/news/elections/article/1003219--scarborough-liberals-struggle-to-make-sense-of-losses-in-safe-ridings

"That community turned against us completely and some of us paid the price," said Cannis, insisting that after the surprise resignation of Scarborough-Rouge River MP Derek Lee on the eve of the election, Tamils were looking to have a candidate carry the Liberal colours there.

That opportunity was missed, said Cannis, arguing if a Tamil-Canadian candidate had run for the party Liberals would have won Lee's riding and the "signals" it sent may have given him enough votes to win his own three-way race in Scarborough Centre.

"The NDP was smart" to have chosen Rathika Sitsabaiesan, now headed to Ottawa as Canada's first Tamil-Canadian MP, said Cannis.

லிபரல் கட்சி தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாளிகளாக இருப்பார்கள் என நினைத்தது அவர்களது தவறு. ஒரு தமிழ் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை.ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள் மாத்திரம் தங்களின் வெற்றிக்கு தேவை என நினைத்தவர்களுக்கு பலத்த அடி.

லிபரல் கட்சி தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாளிகளாக இருப்பார்கள் என நினைத்தது அவர்களது தவறு. ஒரு தமிழ் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை.ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள் மாத்திரம் தங்களின் வெற்றிக்கு தேவை என நினைத்தவர்களுக்கு பலத்த அடி.

இந்த முறை, தமிழ் மக்கள் அனைத்துக் கட்சியினருக்கும் ஒரு பாடத்தைப் புகட்டியிருக்கின்றனர். நாம் தொடர்ந்தும் இதேபோன்று செயற்பட்டால் நிச்சயம் பல தமிழரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியும்.

ஒரு கட்சிக்குப் பின்னால் மாத்திரம் ஒடி, ஏதும் பிரச்சனை என்று வந்தவுடன் அவர்களையும் துரோகி என்று கூறி வேடிக்கை காட்டாமல் , எல்லாக் கட்சிகளிலும் சிறிதளவேணும் ஆளுமை செலுத்தக்கூடிய சக்திகளாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்க வேண்டும்.

மொத்த இனமுமே வேற birant இற்கு மாறிவிட்டதாக தலைப்புப் போடுவது Tamailnet இற்கு அழகல்ல.

புலம்பெயர் ஊடகங்களும் தங்கள் புலன்பெயராமல் மக்களை வழிநடத்த வேண்டியது முக்கியம்

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33904

The ballot box balance

Much of the election talk in the region focused on the Conservative strategy of courting the ethnic vote to break the local Liberal stranglehold. But when a young Sri Lankanborn woman captured a longtime Liberal seat in the immigrant-heavy and notoriously apathetic riding of Scarborough-Rouge-River -bringing with her an influx of new voters -the victory was not for the Tories, but for the NDP.

Turnout in the riding rose 18% as Rathika Sitsabaiesan, 29, became the country's first Tamil MP, capturing an area that had been held by the Liberals since the 1980s. Turnout also rose in other former Liberal strongholds in the GTA as voters handed victories to both Conservatives and New Democrats.

http://www.nationalpost.com/news/ballot+balance/4743631/story.html

Meet your new MPs for the 416

Rathika Sitsabaiesan-Scarborough Rouge River, Age 29

Previous career Operations Assistant & Co-ordinator at University of Toronto Students' Union

What you may not know She's the first Canadian of Tamil heritage elected to Canadian Parliament

In her words "For 23 years it was all the same. Finally the people were fed up and wanted change."

http://www.nationalpost.com/news/Meet+your/4736802/story.html

  • 3 weeks later...

இராதிகா அவர்கள் எதிர்க்கட்சியின் உயர்கல்வி கருத்துரையாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்!

வாழ்த்துக்கள்!!

Pleased to share the news that Rathika Sitsabaiesan has been appointed Opposition Critic for 'Post-Secondary Education'.

Rathika takes her oath as Member of Parliament in Ottawa today – here’s wishing her a Successful Political Career!

http://www.thestar.com/news/canada/politics/article/997491--layton-s-ndp-promises-to-avoid-heckling

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.