Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விதியை மதியால் வெல்லலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி, உங்களுக்குக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், நான் கடைசிப் பெண்பிள்ளை என்பதால் எல்லோருடைய விருப்பு வெறுப்புகளுக்கும் அடங்கி நடக்கவேண்டியிருந்தது. நாங்கள் கனடாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் மாறவில்லை. இப்போது உறவுகளே இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறியதுபோல, இப்போது எனக்குச் சரியென்று படுவதைச் செய்வதால் முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், போவதற்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. அதை இடையில் விடவும் மனம் வரவில்லை. வாழ்க்கை இவ்வளவு கடினமாக இருக்கும் என நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.

தமிழச்சியின் ஆதங்கமும் என்னதும் ஒன்றாகவே இருக்கிறது.ஆண்டவனே வந்து திருத்த முற்பட்டாலும் நம் உறவுகள் மாறுவார்களோ தெரியாது..இதைப் பார்த்தபின் சற்று நின்மதியாக மூச்சு விடுகிறேன்..அட என் வீடு மட்டுமில்லை ,பல வீடுகள் இன்னும் மாற இல்லை என்று மிகவும் கவலையாக இருக்கிறது...

காத்திருந்து,காத்திருந்து காலங்கள் போச்சுது,பூத்திருந்து,பூத்திருந்து பூ விழி நோகிறது..இப்படித் தான் பாடிக் கொண்டு இருக்க வேண்டி கிடக்கு... :):(

  • Replies 56
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரு திருமணம் என முந்திப் பல சாஸ்திரிமார் சொன்னவை :wub:

உங்களுக்கு இன்னும் காலமிருக்கின்றது, ரதி!

இங்கே அவுஸ்திரேலியாவில ராபர்ட் மேர்டக் என்ற ஒரு முதலாளி, தனது எழுபதுகளில் கலியாணம் கட்டிப் பிள்ளையும் பெத்துப் போட்டு நலமாக உள்ளார்!

அவசரப் பட்டு விதியை நொந்து கொள்ளாதீர்கள்!!!

அதிகமாக கடைசிப் பிள்ளைகளில் மற்றைய சகோதரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் மற்றையவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எளியவனாய்ப் பிறந்தாலும் இளையவனாய்ப் பிறக்கக் கூடாது' என ஊரில் சொல்லுவார்கள்.

வீட்டில் நான் கடைசிப் பிள்ளை. நிறையச் சகோதரர்கள். நான் கொஞ்சம் அடாவடி என்றபடியால் எனக்கு அதிகம் பிரச்சனைகள் இருந்ததில்லை.

ஒன்று கவனித்திருக்கிறேன் சிறுவயதில் இருந்து மூத்த சகோதரங்களின் அழுத்தங்களிநூடாக வளர்ந்து வருவதால் கடைசிப் பிள்ளைகளுக்கு போராட்ட குணம் அதிகமாக இருக்கும்.

என்ன புங்கையூரான் விளையாடுறீங்களா? பாவம் ரதி 70 வயதில் கலியாணம் கட்டி எப்படி வாழ்க்கையை அனுபவிப்பது? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் விதி.விவாக ரத்து மதி :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி பிள்ளைகள் மாத்திரம் தான் எல்லோருடைய அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர் என்று இல்லை பெண் பிள்ளை என்டால் அது மூத்ததாக இருந்தாலும் சரி,இளையதாக இருந்தாலும் சரி பெற்றோர்கள்,உறவினர்கள் எல்லோரும் ஆதிக்கம் செலுத்தத் தான் பார்ப்பார்கள்

ஆண், பெண் பிள்ளைகள் என்று இல்லை, அழுத்தங்கள் எல்லாருக்குமே உண்டு ஆனால் பெண்கள் பெற்றோர் உறவினரை மீறி செய்யும் காரியம் தோல்வியில் முடியுமோ என்று அதிகம் பயப்பிடுதல் முக்கிய காரணமாக இருக்கலாம்.

கலியானம் விதி.விவாக ரத்து மதி :lol::lol:

விவாகரத்து எடுப்பதோ? ஆல்லது எடுக்காமல் விடுவதோ மதி? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிகமாக கடைசிப் பிள்ளைகளில் மற்றைய சகோதரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் மற்றையவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எளியவனாய்ப் பிறந்தாலும் இளையவனாய்ப் பிறக்கக் கூடாது' என ஊரில் சொல்லுவார்கள்.

வீட்டில் நான் கடைசிப் பிள்ளை. நிறையச் சகோதரர்கள். நான் கொஞ்சம் அடாவடி என்றபடியால் எனக்கு அதிகம் பிரச்சனைகள் இருந்ததில்லை.

ஒன்று கவனித்திருக்கிறேன் சிறுவயதில் இருந்து மூத்த சகோதரங்களின் அழுத்தங்களிநூடாக வளர்ந்து வருவதால் கடைசிப் பிள்ளைகளுக்கு போராட்ட குணம் அதிகமாக இருக்கும்.

இது உண்மை தான் போல இருக்கு.

என் நிலமையும் இது தான். சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கிறேன். இப்ப வரைக்கும் அம்மா,அப்பா,அண்ணா,அண்ணி சொல்லுறது தான். விட்டிடு தனிய ஏதும் செய்யலாம் என்றாலும் முடியாது பயம்,என்ன நினைப்பாங்களோ, எப்படி திரும்ப அவங்க எல்லார் கூடவும் பேசுறது என்று. சொல்லுறதையே கேட்க வேண்டியது தான். அம்மா குளிக்க போறேன்,அம்மாரொய்லெட் போறேன்,அம்மா விளையாடப்போறேன்,இப்படி எல்லாமே அம்மாவிடம் சொல்லாமல் எதுவுமே செய்ததில்லை. (இப்ப இங்கை வந்த பிறகு தான் கொஞ்சம் மறைக்கிறேன் சொல்லுவதில்லை)

நான் விளையாடபோனால் கூட அம்மா வாசலில் நின்று நான் போய் மறையும் வரைக்கும் பார்த்துக்கொண்டு இருப்பா. அக்கா நான் க்ளாஸ் முடிஞ்சு வரும் வரைக்கும் சாப்பிடாமல் இருப்பாள் அதனாலை அவர்கள் சொல்லுவதை மீறமுடியாது. எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவர்களுடைய சந்தோசத்துக்காக சரி சொல்லிவிடுவேன்.

இதிலை எது விதி? எது மதி?? என்று தான் தெரியவில்லை.

கடைசி பிள்ளைகள் மாத்திரம் தான் எல்லோருடைய அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர் என்று இல்லை பெண் பிள்ளை என்டால் அது மூத்ததாக இருந்தாலும் சரி,இளையதாக இருந்தாலும் சரி பெற்றோர்கள்,உறவினர்கள் எல்லோரும் ஆதிக்கம் செலுத்தத் தான் பார்ப்பார்கள்

இதுதான் விதி. நாங்கள் பிறக்கும் பொழுதே வடிவமைக்கபட்ட அமைப்பு. இதனை நிர்ணயிக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கவில்லை.

இந்த பாசவலைகளை நோகப்பண்ணாமல், கட்டுக்களை உடைத்தெறிந்து வாழ்வது விதியை மதியால் வெல்வது.

பெண்களோ ஆண்களோ அவர்களுக்குத் தேவை தன்னம்பிக்கை.

'சின்ன நூல்கண்டா நம்மை சிறுமைப் படுத்துவது'

  • கருத்துக்கள உறவுகள்

(இப்ப இங்கை வந்த பிறகு தான் கொஞ்சம் மறைக்கிறேன் சொல்லுவதில்லை)

அதான் நாங்கள் பார்க்கிறமே..! :D

  • கருத்துக்கள உறவுகள்

விதி யை மதியால் வெல்லலாம்...

ம்ம்ம்ம்ம்... "விதி" படம் பார்க்க ஒரு "மதி"யை கூட்டிக் கொண்டு போயிருந்தா.. குறைந்தது அந்த "மதி"யையாவது வென்றிருக்கலாம்.... என்று நினைப்போர் உண்டு. இது உண்மையாக இருக்கலாம்.. விதியை மதியால் வெல்லலாம் என்பது உங்கட விதி என்ன.. உங்கட மதி என்ன என்பதில் தங்கி இருக்கிறது... இதோ உங்கள் விதிகளும்.. மதிகளும்..

விதி என்பது இயலாமை.. சோம்பேறித்தனம்.. முயற்சி இன்மை.. பயம்.. தோல்வி.. காதல் தோல்வி.. கலியாணத் தோல்வி.. அளவுக்கு மிஞ்சிய.. எதிர்பார்ப்பு.. அளவுக்கு மிஞ்சிய கடவுள் நம்பிக்கை... மற்றவர்களை எடுத்த எடுப்பில்.. நம்புதல்.. பணம் இன்மை..! (பலவுமே.. negative.. thoughts)

மதி என்பது.. அறிவு.. புத்திசாலித்தனம்.. கல்வி.. பணம்.. இயலுமை.. விடாமுயற்சி.. தோல்வியிலும் கலங்காத முயற்சி... தன்நம்பிக்கை.. சமயோசிசதம்.. சிந்தனை.. திட்டமிடும் ஆற்றல்.. நல்ல சந்தர்ப்பம்.. அன்பு.. நம்ப நட.. நம்பி நடக்காதே..!

------------------------------------

ரதி அக்கா.. இந்தப் பூமிப்பந்தில பிறக்கிற எல்லாம் இறக்குது. மனிசனை போல.. மிஞ்சமும் விதி வந்தா இறக்குது. கால ஓட்டத்தில் வருவதும் போவதும்.. சாதாரணம்..! :)

குட்டி, உங்களுக்குக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், நான் கடைசிப் பெண்பிள்ளை என்பதால் எல்லோருடைய விருப்பு வெறுப்புகளுக்கும் அடங்கி நடக்கவேண்டியிருந்தது. நாங்கள் கனடாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் மாறவில்லை. இப்போது உறவுகளே இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறியதுபோல, இப்போது எனக்குச் சரியென்று படுவதைச் செய்வதால் முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், போவதற்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. அதை இடையில் விடவும் மனம் வரவில்லை. வாழ்க்கை இவ்வளவு கடினமாக இருக்கும் என நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.

ஒருவேளை நீங்கள் கலியாணம் கட்டி இப்போ இருப்பதை விட ஒரு கடின வாழ்க்கை அமைந்திருந்தால்.. அதை சமாளிக்க வேண்டிய சூழல் எழுந்திருந்தால்.. இன்றைய வாழ்க்கை சிறந்ததாக தெரிந்திருக்கலாம் இல்லையா..????!

இத்தனை தமிழர்கள் இருந்தும்.. ஒரு தமிழச்சிக்கு விரும்பின வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க முடியல்லையே என்பது வருத்தம் தான்..! :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் எனது வாழ்கையின் மூலம் நான் அனுபவிக்கும் உண்மை தான்.

தாய்க்குத் தலைச்சன் பிள்ளை என்று சொல்லுவார்கள் அதை எனது தாயார் தெய்வ வாக்காக எடுத்து செயல்படுபவர். (நான் தலைச்சன் பிள்ளை இல்லை) நான் எது செய்தாலும் அவரின் ஆதரவு எனக்கு மிகக் குறைவு என்றே சொல்லலாம். எனக்கு என்னைச்சார்ந்தவர்கள் நான் அன்பு செய்பவர்கள் ஓரளவேனும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.

ஒரு செயலைத் தொடங்கும் போது ஆதரவாக நாலு வார்த்தை சொன்னால் மனம் சந்தோசப்படும், அதே நேரம் ஆதரவாக சொல்லாவிட்டால் கூடப் பறவாய் இல்லை அபசகுனமாக ஒரு வார்த்தை சொன்னாலே நொந்து போகும் மனம் எனக்கு (ஊரில் நிற்கும் போது ஒருதடவை காசி விக்கிரம் மாதிரி கண்களை வைத்ததுக் கொண்டு 'நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்...' என்று முணு முணுத்தேன். கதைச்சுக் கொண்டிருந்த இருந்த அம்மா எழும்பி ஓடிட்டா... ^_^:D ) மற்ற உறவுகள் எது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளவது இல்லை. இப்போதெல்லாம் எனது மனதிற்கு சரி என்று படுவதை எனது தந்தையை நினைத்துக் கொண்டு செய்யத்தொடங்கி விடுவேன். முன்பு இருந்ததை விட இப்போது வாழ்கையில் முன்னேறியுள்ளேன் என்றே சொல்லுவேன். ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனின் குடும்பத்தினரின்/ நண்பர்களின் ஆதரவும் அவசியம் தேவையானது.

மனிதனுக்கு மட்டுமல்ல.. பல உயிரினங்களின் வாழ்க்கையில்.. பெற்றோரின் மூத்தோரின் அன்பும்.. அரவணைப்பும்.. வழிகாட்டுதலும்.. இருந்து கொண்டிருக்கின்றன. இன்றேல் அவை கூட வெற்றிகர வாழ்க்கையை இந்தப் பூமிப் பந்தில் சந்தித்து நின்றிருக்க முடியாது போயிருக்கலாம்..!

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுப்பதில்லை.. ஆனால் தாய் நீத்திச் செல்வதை குஞ்சு அறிந்து கொள்ளும்..! தாயின் வழி சென்று இரை தேடும்.. புதிய வாழ்க்கைப் பயணத்தில்... திசை தெரியா உலகத்தில்.. திக்கு அறிய.. ஒரு திசைகாட்டி இருக்க வேண்டும்.. அதுவே பெற்றோரும்.. உறவுகளும்.. பெருமான்களும். ஆனால் பல தடவைகளில் அவர்கள் அப்படி நடந்து கொள்ளாத சந்தர்ப்பங்களே உண்டு..! ஒருவேளை அவர்களுக்கு அமைந்தவை மற்றவர்களுக்கு தானே அமையும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ..???! :)

இத்தனை தமிழர்கள் இருந்தும்.. ஒரு தமிழச்சிக்கு விரும்பின வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க முடியல்லையே என்பது வருத்தம் தான்..! :D:)

அதிகமான இன்றைய படித்த தமிழ் இளைஞர்கள் திருமணபந்தத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. அவர்கள் மனநிலை மாறினால் அன்றி, ஆயிரம் தமிழச்சிகள் இந்த பூமிப்பந்தில் உருவாவதை தடுக்க முடியாது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான இன்றைய படித்த தமிழ் இளைஞர்கள் திருமணபந்தத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. அவர்கள் மனநிலை மாறினால் அன்றி, ஆயிரம் தமிழச்சிகள் இந்த பூமிப்பந்தில் உருவாவதை தடுக்க முடியாது. :rolleyes:

ம்ம்ம்.. ஏப்பா.. படிச்ச தமிழ் இளைஞர்களே இதைக் கேளுங்கப்பா. :D:)

அண்மையில் ஒரு தமிழ் பத்திரிகையில் எதேச்சையாக.. திருமண விளம்பரம் பார்க்க நேரிட்ட போது.. பார்த்தா பல பேரிளம் பெண்கள்.. வரன் கேட்டு விளம்பரம் செய்திருந்தார்கள்..! உண்மையில் எமது சமூகத்தின் போர் கால தாக்கம் போராளிப் பெண்களை மட்டுமல்ல.. சமூகத்தின் ஒட்டு மொத்த இளைய சமூகத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை உணர முடிந்தது. இவர்களின் வளமான வாழ்வு பற்றியும் எம் சமூகம் சிந்தித்து செயற்பட வேண்டும். நல்ல செயற்திட்டங்களை அமுல்படுத்தி இந்தப் பெண்களிற்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். இதில் போராளிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். :)

மனிதனுக்கு மட்டுமல்ல.. பல உயிரினங்களின் வாழ்க்கையில்.. பெற்றோரின் மூத்தோரின் அன்பும்.. அரவணைப்பும்.. வழிகாட்டுதலும்.. இருந்து கொண்டிருக்கின்றன. இன்றேல் அவை கூட வெற்றிகர வாழ்க்கையை இந்தப் பூமிப் பந்தில் சந்தித்து நின்றிருக்க முடியாது போயிருக்கலாம்..!

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுப்பதில்லை.. ஆனால் தாய் நீத்திச் செல்வதை குஞ்சு அறிந்து கொள்ளும்..! தாயின் வழி சென்று இரை தேடும்.. புதிய வாழ்க்கைப் பயணத்தில்... திசை தெரியா உலகத்தில்.. திக்கு அறிய.. ஒரு திசைகாட்டி இருக்க வேண்டும்.. அதுவே பெற்றோரும்.. உறவுகளும்.. பெருமான்களும். ஆனால் பல தடவைகளில் அவர்கள் அப்படி நடந்து கொள்ளாத சந்தர்ப்பங்களே உண்டு..! ஒருவேளை அவர்களுக்கு அமைந்தவை மற்றவர்களுக்கு தானே அமையும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ..???! :)

அப்படி நினைச்சு மனதைத் தேற்றிக்கொண்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான்... :rolleyes::)

இருந்தாலும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள உறவு இவ்வளவு complicate ஆக இருக்குமா?:(

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் விதி.விவாக ரத்து மதி :lol::lol:

எப்பிடித்தான் உங்களால இப்பிடி எல்லாம் சிந்திக்கு முடியுதோ... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒன்றை முயற்சி செய்கிறேன் எனக்கு அதுவாக வர வேண்டும் என்பதற்காகவோ,அது எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ கடுமையாக முயற்சி செய்கிறேன்...அதுக்காக பாடுபடுகிறேன்...தொடர்ந்தும் தோல்வி கிடைக்க அதை விட்டு விடுகிறேன்...இங்கு தோல்வி கிடைக்க என்ன காரணம்?...அது எனக்கு கிடைக்க கூடாது அது தான் விதி என்பார்கள்...திரும்ப,திரும்ப முயற்சி செய்து பார்த்தல் மதி...ஆனால் எப்பவுமே மதி ஜெயித்ததாக சரித்திரம் இல்லை.

அப்படி நினைச்சு மனதைத் தேற்றிக்கொண்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான்... :rolleyes::)

இருந்தாலும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள உறவு இவ்வளவு complicate ஆக இருக்குமா?:(

இப்படியும் பல பெற்றோர்கள் இருக்கிறார்கள் குட்டி...ஏதோ எல்லோரும் குழந்தைகள் பெறுகிறார்கள் என்பதற்காக இவர்களும் குழந்தை பெறுவார்கள்...குழந்தைகளிடையே வித்தியாசம் பார்ப்பார்கள்...பிள்ளைகளை அவர்கள் விருப்பமான துறையில் ஊக்குவிக்க மாட்டார்கள்...என்னும் சிலர் மூத்ததும்,இரண்டாவதும் பெண் பிள்ளைகள் என்டால் அல்லது பெண் பிள்ளைகள் என்டால் எப்படா வளரும் கட்டிக் கொடுத்தால் தங்கட பொறுப்பு நீங்கி விடும் என இருப்பார்கள்...இதே நேரத்தில் தங்கட பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோர் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்

இது உண்மை தான் போல இருக்கு.

என் நிலமையும் இது தான். சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கிறேன். இப்ப வரைக்கும் அம்மா,அப்பா,அண்ணா,அண்ணி சொல்லுறது தான். விட்டிடு தனிய ஏதும் செய்யலாம் என்றாலும் முடியாது பயம்,என்ன நினைப்பாங்களோ, எப்படி திரும்ப அவங்க எல்லார் கூடவும் பேசுறது என்று. சொல்லுறதையே கேட்க வேண்டியது தான். அம்மா குளிக்க போறேன்,அம்மாரொய்லெட் போறேன்,அம்மா விளையாடப்போறேன்,இப்படி எல்லாமே அம்மாவிடம் சொல்லாமல் எதுவுமே செய்ததில்லை. (இப்ப இங்கை வந்த பிறகு தான் கொஞ்சம் மறைக்கிறேன் சொல்லுவதில்லை)

நான் விளையாடபோனால் கூட அம்மா வாசலில் நின்று நான் போய் மறையும் வரைக்கும் பார்த்துக்கொண்டு இருப்பா. அக்கா நான் க்ளாஸ் முடிஞ்சு வரும் வரைக்கும் சாப்பிடாமல் இருப்பாள் அதனாலை அவர்கள் சொல்லுவதை மீறமுடியாது. எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவர்களுடைய சந்தோசத்துக்காக சரி சொல்லிவிடுவேன்.

இதிலை எது விதி? எது மதி?? என்று தான் தெரியவில்லை.

சொல்லவும் முடியாமலும் விழுங்கவும் முடியாமலும் இருக்க்கும் விடயத்தை, மெல்ல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி சொல்ல வேண்டும். அவர்களையும் நோகப்பண்ணாமல் நடக்க வேண்டும். சிறு வயதிலேயே இருந்து வளர்த்த / வளர்ந்த உறவுகளுக்கு உங்களை தெரியும். புரிந்து கொள்வார்கள்.

உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வது விதி.

சற்று முன்னே நகர்ந்து, எதிர்காலத்தையும் பழைய வாழ்க்கையுடன் பொருத்தி விடுவது மதி.

டிஸ்க்கி

அதே நேரத்தில் யாரும் சுயநலமாக இருக்கவும் கூடாது.

விதி யை மதியால் வெல்லலாம்...

ம்ம்ம்ம்ம்... "விதி" படம் பார்க்க ஒரு "மதி"யை கூட்டிக் கொண்டு போயிருந்தா.. குறைந்தது அந்த "மதி"யையாவது வென்றிருக்கலாம்.... என்று நினைப்போர் உண்டு. இது உண்மையாக இருக்கலாம்.. விதியை மதியால் வெல்லலாம் என்பது உங்கட விதி என்ன.. உங்கட மதி என்ன என்பதில் தங்கி இருக்கிறது... இதோ உங்கள் விதிகளும்.. மதிகளும்..

விதி என்பது இயலாமை.. சோம்பேறித்தனம்.. முயற்சி இன்மை.. பயம்.. தோல்வி.. காதல் தோல்வி.. கலியாணத் தோல்வி.. அளவுக்கு மிஞ்சிய.. எதிர்பார்ப்பு.. அளவுக்கு மிஞ்சிய கடவுள் நம்பிக்கை... மற்றவர்களை எடுத்த எடுப்பில்.. நம்புதல்.. பணம் இன்மை..! (பலவுமே.. negative.. thoughts)

மதி என்பது.. அறிவு.. புத்திசாலித்தனம்.. கல்வி.. பணம்.. இயலுமை.. விடாமுயற்சி.. தோல்வியிலும் கலங்காத முயற்சி... தன்நம்பிக்கை.. சமயோசிசதம்.. சிந்தனை.. திட்டமிடும் ஆற்றல்.. நல்ல சந்தர்ப்பம்.. அன்பு.. நம்ப நட.. நம்பி நடக்காதே..!

------------------------------------

ரதி அக்கா.. இந்தப் பூமிப்பந்தில பிறக்கிற எல்லாம் இறக்குது. மனிசனை போல.. மிஞ்சமும் விதி வந்தா இறக்குது. கால ஓட்டத்தில் வருவதும் போவதும்.. சாதாரணம்..! :)

ஒருவேளை நீங்கள் கலியாணம் கட்டி இப்போ இருப்பதை விட ஒரு கடின வாழ்க்கை அமைந்திருந்தால்.. அதை சமாளிக்க வேண்டிய சூழல் எழுந்திருந்தால்.. இன்றைய வாழ்க்கை சிறந்ததாக தெரிந்திருக்கலாம் இல்லையா..????!

இத்தனை தமிழர்கள் இருந்தும்.. ஒரு தமிழச்சிக்கு விரும்பின வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க முடியல்லையே என்பது வருத்தம் தான்..! :D:)

நெடுக்கு, விதியை மதியால் வெல்லலாமா என்று கேட்டதற்குத்தான் அவ்வாறு எழுதியிருந்தேன். ஏனென்றால், எனக்கும் திருமண வயது வந்த காலத்திலிருந்தே இந்த வருடத்திற்குள் நடந்து விடும் அடுத்த வருடத்திற்குள் நடந்துவிடும் என்றுதான் எல்லாச் சாத்திரிமாரும் சொன்னார்கள். யாரும் எனக்குத் திருமணம் நடக்காது என்று கூறவில்லை. நான் மறுத்தபோதும், எனது குடும்பத்தினர் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். ஆனால், ஏதாவதொரு காரணத்தால் எதுவுமே சரிவரவில்லை. அதைத்தான் இங்கு குறிப்பிட்டேன்.

எனது திருமணத்தை நானாகவேதான் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தேன். என்னைப் பொறுத்தவரை, திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதானே தவிர, அதுவே வாழ்க்கையில்லை. இப்போதுகூட, இன்னும் பத்து வருடங்கள் தள்ளிப்போட முடிந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இனிமேலும் தள்ளிப் போடமுடியாது என்பதாலேயே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் முழுமுயற்சி செய்யத் தொடங்கவில்லை.

தப்பிலி, தன்னம்பிக்கை மட்டும் ஒரு மனிதனை வெற்றியாளனாக மாற்றப் போதாது. ஒரு மனிதன் வெற்றியடைவதற்கும் தோல்வியடைவதற்கும் புறகாரணிகளும் மிகவும் முக்கியம், முக்கியமாக அவரைச் சுற்றியுள்ள சக மனிதர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி, தன்னம்பிக்கை மட்டும் ஒரு மனிதனை வெற்றியாளனாக மாற்றப் போதாது. ஒரு மனிதன் வெற்றியடைவதற்கும் தோல்வியடைவதற்கும் புறகாரணிகளும் மிகவும் முக்கியம், முக்கியமாக அவரைச் சுற்றியுள்ள சக மனிதர்கள்.

நிசர்சனமான வரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வென்றால் மதி

தோற்றால் விதி

கோடீஸ்வரன் என்றால் மதி

பிச்சைக்காறன் என்றால் விதி

உடலை முறுக்கி வைத்திருந்தால் மதி

நோய்காறனானால் விதி

நல்ல, அழகான வாழ்க்கைத்துணையமைந்தால் அது மதி

கெட்ட, அழகற்ற வாழ்க்கைத்துணையமைந்தால் அது விதி

எமக்கு நாடு கிடைத்திருந்தால் மதி நுட்பமாக போராடி வென்றோம் என்று இருந்திருக்கும்

தோற்றதால் விதி

........................

........................

.......................???

எனவே

விதி

மதி

இதில் எது என்பதை முடிவுகளே தீர்மானிக்கின்றன.

தப்பிலி, தன்னம்பிக்கை மட்டும் ஒரு மனிதனை வெற்றியாளனாக மாற்றப் போதாது. ஒரு மனிதன் வெற்றியடைவதற்கும் தோல்வியடைவதற்கும் புறகாரணிகளும் மிகவும் முக்கியம், முக்கியமாக அவரைச் சுற்றியுள்ள சக மனிதர்கள்.

தமிழச்சி

தன்னம்பிக்கை எனக் கூறுவதன் காரணம் 'தனித்தீவாக' , மற்றயவர்களை எதிர்த்து வாழ வேண்டுமென்பதற்காக அல்ல. கொஞ்சம் இளக்காரமாக (Naive) இருந்தால் எமது வாழ்க்கை மற்றவர்களின் கையில். 'இடம் கிடைத்த இடத்தில் மடம் புடுங்கப் பல பேர்' வருவார்கள். முன்னாள் (?) இளிச்சவாயன் என்ற முறையில் நிறைய அனுபவமுன்று. ஒரு இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் நகர்கையில், எல்லாப் புலன்களும் அந்த இலக்கை நோக்கி முன்னேறும். புறச் சூழல்களையும் சமாளித்து தனதாக்கிக் கொண்டு நகரும். சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இதைத்தான் கனவு காண வேண்டும் எனக் கூறுகிறார்கள் என நினைக்கிறேன்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி

தன்னம்பிக்கை எனக் கூறுவதன் காரணம் 'தனித்தீவாக' , மற்றயவர்களை எதிர்த்து வாழ வேண்டுமென்பதற்காக அல்ல. கொஞ்சம் இளக்காரமாக (Naive) இருந்தால் எமது வாழ்க்கை மற்றவர்களின் கையில். 'இடம் கிடைத்த இடத்தில் மடம் புடுங்கப் பல பேர்' வருவார்கள். முன்னாள் (?) இளிச்சவாயன் என்ற முறையில் நிறைய அனுபவமுன்று.

:lol: :lol: :lol:

:lol: :lol: :lol:

அதுக்கேன் மூன்று இளிப்பு . ஒன்றே போதும். :D

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று இளிப்புப் போட்டால்தான் அதில் சுவாரஸ்யமே ஏற்படும்

மூன்று இளிப்புப் போட்டால்தான் அதில் சுவாரஸ்யமே ஏற்படும்

விளங்குது. அப்ப என்னை விட மும்மடங்கு இளித்த வாயா? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.