Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் ஈழத்தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு தீர்வு காண முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. நாம் தமிழர் அமைப்பும் சீமானும் செல்வாக்கு பெற்றிருக்கிறார்கள். சோனியா காந்தி அ.தி.மு.க.வுடன் உறவை விரும்புகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா முதல்முறையாக தெளிவாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். விடுதலைப்புலிகளும் ஆயுதப்போராட்டமும் அரசியல் இராஜதந்திர தீர்வுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறார்கள்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் அரசியல் இராஜதந்திர தீர்வுக்கு முயற்சி செய்கின்றன. அவை இந்தியாவை ஒதுக்கிவிட்டு இந்த தீர்வுக்கு முயற்சித்தது இல்லை. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் தீர்வு சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது.

Edited by Jude

  • Replies 63
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011: ஏமாற்றியவர் ஏமாந்தார்

அ.இ.அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை விட, தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி தமிழக மக்களிடம் பரவலாக இருந்திருக்கிறது. தி.மு.க.வின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் இந்த அளவு படுதோல்வி அடையுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தடுத்துவிட்டதால் தி.மு.க.வுக்கு இந்தப் படுதோல்வி ஏற்பட்டது என்று கருதினால் அது பிழை. வாக்குப் பதிவுக்கு முந்திய இருநாள்களும், தேர்தல் ஆணையமும், காவல்துறையும் திட்டமிட்டு ஒதுங்கிக் கொண்டன. தி.மு.க. ஒரு வாக்காளர்க்கு ஓர் ஆயிரம் ரூபாயிலிருந்து இருநூறு ரூபாய் வரைத் தமிழகமெங்கும் கொடுத்தது. அ.இ.அ.தி.மு.க. நேர்மையின் நிலைக்களன் அன்று. ஆட்சி நடத்தி அடித்த கொள்ளைப்பணம் தி.மு.க. அளவிற்கு அ.இ.அ.தி.மு.க.விடம் இப்போது சேமிப்பில் இல்லை. ஆட்சியை இழந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லவா! எனவே, அ.இ.அ.தி.மு.க. வாக்காளர்களுக்குக் குறைவாகப் பணம் கொடுத்தது.

தி.மு.க. திணித்த பணத்தை வாங்கிக் கொண்டு அ.இ.அ.தி.மு.க. அணிக்கு வாக்களித்தோர் விகிதம் அதிகம். இது புதியப் போக்கு!

துடைத்தெறியப்பட்ட தோல்வியைத் தி.மு.க. சந்தித்ததற்கான காரணங்களை இரண்டு வகையாகக் காணலாம். ஒன்று அமைப்பு வழிப்பட்டவை. மற்றொன்று அரசியல் வழிபட்டவை.

தி.மு.க., கலைஞர் கருணாநிதியின் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படவில்லை. ஒன்றையொன்று காலைவாரிவிடும் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கக் குழுக்களின் தலைமையின் கீழ் இயங்குகிறது. குடும்பக் குழுக்களின் ஆதிக்கச் சண்டையை அவ்வப்போது சமரசம் செய்து வைக்கும் வேலைதான் கருணாநிதியின் பொதுத் தலைமைக்கான அன்றாட வேலையாக இருக்கிறது. தலைமையில் இருக்கும் குடும்ப ஆதிக்கம் போலவே, மாவட்டங்களிலும், அதற்குக் கீழும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் குடும்ப ஆதிக்கமும், அதனால் வீச்சுப்பெற்ற குழுச் சண்டைகளும் தி.மு.க.வை ஆட்டி அலைக்கழித்துவிட்டன.

தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து, கலைஞரின் "உயிரினும் மேலான உடன்பிறப்புகள்" பல தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களாக நின்றனர். இந்த விரிசலைக் கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர் நடத்தும் குடும்பக் குழுக்களின் ஆதிக்க அரசியல், அவரின் வேண்டுகோள்களையும், கட்டளைகளையும் காலில் போட்டு மிதிக்கும் அளவிற்குக் கழகக் கண்மணிகளுக்குத் துணிச்சல் தந்தன.

கழகப் போட்டி வேட்பாளர் நிற்காத தொகுதிகளில், மாவட்ட மற்றும் அதற்குக் கீழே உள்ள தி.மு.க. பிரமுகர்கள் சிலர் தங்கள் கழகத்திற்கு அல்லது கூட்டணிக் கட்சிக்கு இரண்டகம் செய்து எதிரணியினர்க்கு ஆதரவாகக் கீழறுப்பு வேலை செய்தார்கள்.

தி.மு.க.கூட்டணியில், தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான உறவில், மோதல்களும் முறிவுகளும் ஏற்பட்டு தேர்தல் நேரத்தில் அக்கட்சிகள் ஒட்டிக் கொண்டன. இக்கட்சிகள் கசப்பைச் சப்புக் கொட்டிக் கொண்டே கைகோத்துச் சென்றனர் மக்களிடம்.

காங்கிரசுக் கென்று வாக்கு வங்கி இருந்த காலம் மூப்பனாரோடு முடிந்து விட்டது. கொசுவுக்கு ராஜபிளவை நோய் வந்தது போல, சிறுத்தப் போன காங்கிரசுக்குள் பற்பல குழுப்பிளவுகள். கோயில் மாடுகளைப் போல் திரியும் அக்குழுக்களின் பிரமுகர்கள் கூட்டணி தயவில் அவ்வப்போது தமிழகத் தேர்தலில் மஞ்சள் குளிப்பார்கள்; மணம் பெறுவார்கள். தில்லி அரசியலையும், தில்லி ஆட்சியையும் சார்ந்து தமிழ்நாட்டில் பேரம் பேசி பதவி பெறும் புல்லுருவிச் செடிகள் அப்பிரமுகர்கள்.

இந்தக் காங்கிரசுப் பிரமுகர்களின் கீழறுப்பு வேலை இந்தத் தேர்தலில் மிக அதிகம்.

மேற்கண்ட கோளாறுகள், தி.மு.க.வின் படுதோல்விக்கான அமைப்பு வழிக் காரணிகள். அதன் அரசியல்வழிக் காரணங்களில் முகாமையானவற்றைப் பின்வருமாறு கூறலாம். அரசியல் காரணங்கள் என்று இங்கு நாம் கூறுபவை, தி.மு.க. ஆட்சி நடத்திய வகையில் ஏற்பட்ட குறைபாடுகள்.

கருணாநிதி குடும்பங்களின் ஆதிக்க அரசியல் மற்றும் அவை அடித்த கொள்ளைகள்

கருணாநிதி உருவாக்கி நிலைப்படுத்தியுள்ள வாரிசு அரசியல், அவர் குடும்பத்திற்கு வெளியே உள்ள யாரும், எத்தனை தகுதிகள் பெற்றிருந்தாலும் கழகத் தலைமைக்கு வர முடியாது என்று வேலி கட்டி வைத்து விட்டது. அடுத்து கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவரை அண்டிப் பிழைக்கும் அல்லக்கையாக இருந்தால் தான் கழகத்தில் இரண்டாம் நிலைத் தலைவராக வர மாவட்டச் செயலாளராக ஆக முடியும் என்ற கட்டாயம் உருவாகிவிட்டது.

இந்த நிலை கழக உறுப்பினர்களை மட்டுமின்றி, பொது மக்களையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது.

கருணாநிதி – முரசொலிமாறன் குடும்ப உறுப்பினர்கள் அரசியல் அதிகாரத்தை வைத்து, பல்வேறு தொழில்களில் புகுந்து அரம்பத்தனம் (ரவுடித்தனம்) செய்து, அத்தொழில்களில் ஏற்கெனவே இருந்து வந்த பலரை அடித்து வீழ்த்தினார்கள்; அத்தொழில்களை விட்டே விரட்டினார்கள்.

திரைப்படத்துறை, தொலைக்காட்சித் துறை, கம்பிவிடத் தொலைக்காட்சி, செய்தி ஏடுகள், தாளிகைகள் போன்ற தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. திரைப்படத் துறையில் உள்ள தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கூட அக்கட்சிக்கு வாக்களித்திருக்க மாவட்டார்கள். அக்கட்சி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்று அஞ்சினார்கள். கருணாநிதியுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ரஜினிகாந்தே, அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

கருணாநிதி குடும்பத்தாரின் மலைக் கொள்ளை, மணற் கொள்ளை ஆகியவை தமிழகத்தின் இயற்கை வளத்தையே சூறையாடியது.

இரண்டாம் அலைக்கற்றை ஊழல், கருணாநிதி குடும்பத்தாரின் பல்லாயிரம் கோடி பகற்கொள்ளையை ஐயத்திற்கிடமில்லாமல் அம்பலப்படுத்தி விட்டது.

விலை உயர்வு

விலை உயர்வு நச்சுக்காய்ச்சல் வெப்பம் போல உயர்ந்து வருகிறது. நல்ல அரிசி வாங்கிச் சாப்பிட விரும்பும் நடுத்தர மக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ. 18க்கு வாங்கினார்கள். தி.மு.க. ஆட்சியில் அது கிலோ 35 முதல் 40 ரூபாய் வரை விற்கிறது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தருவது, அந்த மக்களுக்கு என்ன நன்மையைச் செய்தது? மற்ற அனைத்துப் பொருள்களின் விலையும் அப்படியே கிடுகிடு என உயர்ந்தது. நடுவண் ஆட்சிக்கு இந்த விலை உயர்வில் முகாமையான பொறுப்பு உண்டு. அங்கேயும் தி.மு.க. ஆளுங்கட்சி தானே!

கொழுந்துவிட்டு எரிந்த விலைவாசி உயர்வு என்ற நெருப்பு கருணாநிதி கொடுத்த தொ.கா.பெட்டி, எரிவளி அடுப்பு போன்ற இலவசங்களைப் பொசுக்கிவிட்டது.

வீட்டிற்குள் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு மின்வெட்டால் இருட்டும் புழக்கமும், வெளியில் தொழில், வணிகம், செய்ய முடியாத அளவிற்கு மேலும் மேலும் மோசமடைந்து வந்த மின்வெட்டு!

இன இரண்டகம்

2009இல் முல்லைத்தீவில், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சம் தமிழர்களை குண்டுபோட்டுக் கொன்ற சிங்கள – இந்தியக் கூட்டுக் கொலைகாரர்களை, மனிதகுலப் பவைவர்களை, தமிழின அழிப்பாளர்களை ஆதரித்துக் கொண்டே, எதிர்ப்பது போல் நாடகமாடிய கருணாநிதியின் நயவஞ்சகம், இன இரண்டகம் இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழன்-தமிழச்சி நெஞ்சிலும், மனித நேயர் நெஞ்சிலும் நெருப்பாய்க கனன்று கொண்டிருக்கிறது.

தமிழக ஆட்சியைப் பயன்படுத்தியும், தில்லி ஆட்சிக்குத் தி.மு.க.வின் துணை தேவைப் பட்டதைப் பயன்படுத்தியும், மெய்யாகவே கருணாநிதி போராடியிருந்தால், போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்க முடியும். தமிழினத்தைக் காத்திருக்க முடியும். அவ்வாறு காக்க முடியாவிட்டால் தமிழ் மக்களோடு சேர்ந்து உண்மையாகப் போராடி ஈகி ஆகியிருக்கலாம். பசப்பு நாடகங்களை நடத்தித் தமிழினத்தை ஏமாற்றினார். ஏமாற்றியவர் இப்போது ஏமாந்தார்.

தமிழின அழிப்பில், காங்கிரசு, தி.மு.க. ஆகியவை வகித்த பங்கு தி.மு.க. அணியின் படுதோல்விக்கான காரணங்களுள் ஒன்று. அதுவே முதன்மைக் காரணி என்று நாம் பிழைபடக் கணிக்க வேண்டியதில்லை.

செயலலிதா, மாற்று அரசியல், பொருளியல், கொள்கைகள் கொண்டுள்ளார் என்பதற்காகவோ அவர் தமிழின உரிமைகளை மீட்பார் என்ற நம்பிக்கையினாலோ, ஊழல் அற்ற நேர்மையாளர் என்பதற்காகவோ அவருக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்து விடவில்லை. தி.மு.க. ஆட்சியின் கொடுமை தாங்க முடியாதவர்கள் உடனடித் துயர் நீக்கம் என்ற உளவியலில் செயலலிதாவுக்குப் பேராதரவு தந்துள்ளனர்.

செயலலிதாவின் சசிகலாக் குடும்பக் கொடுங்கோன்மை, ஊழல், கொள்ளை, உலகமயப் பொருளியல் கொள்கை, தமிழ்மொழி், தமிழினத்திற்கெதிரான காழ்ப்புணர்ச்சி, விடுதலைப்புலிகள் எதிர்ப்பு, இந்தியத் தேசிய வெறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எதேச்சாதிகாரம், ஒடுக்குமுறை, தொழிற் சங்க உரிமைகள் மீதான சீற்றம் போன்றவற்றில் மாற்றம் வரும் என்று நாம் நம்பவில்லை. மாற்றம் வந்தால் நல்லது.

தி.மு.க.வையும் அ.இ.அ.தி.மு.க.வையும் ஒப்பிட்டுச் சாரமாகச் சொல்வதென்றால் முன்னது வேட்டி கட்டிய செயலலிதா தலைமையில் இயங்குகிறது. பின்னது புடவை கட்டிய கருணாநிதி தலைமையில் இயங்குகிறது. இருவர்க்கும் நடைமுறை உத்திகளில் சிலவேறுபாடுகள் இருக்கின்றன.

சரியான மாற்று சக்தி இல்லாத போது ஒன்றின் தகிப்பைத் தாங்க முடியாத மக்கள், தகித்து ஓய்ந்துள்ள இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆயிரம் குற்றங்குறை இருந்தாலும், அனைவர்க்குமான அரசியல் கட்சிகளைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். சாதிக் கட்சிகளை ஓரங்கட்டி விடுகிறார்கள். இது தமிழ் மக்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும் நல்ல அறிகுறி.

2004 மக்களவைத் தேர்தலில் ஓர் இடம் கூட அ.இ.அ.தி.மு.க. அணி பெறவில்லை. நாற்பதையும் தி.மு.க. அணி பெற்றது. கிட்டத்தட்ட அந்த நிலை இப்பொழுது நடந்துள்ள தமிழகத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் வெற்றி தோல்விகளால் தேர்தல்ல கட்சியின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று கருத முடியாது.

மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அம்மாநிலங்களின் தனித்தனிச் சிறப்புகளுக்கேற்பவே வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அனைத்திந்தியப் போக்கு என்பது இல்லை என்பதனை அது நிரூபித்துள்ளது.

புரட்சிரத் தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை, அதன் செயற்களம் தேர்தல் அன்று! இனவிடுதலை, இனஉரிமைக்கான போராட்டக் களம்! தேர்தல் கட்சிகளின் வெற்றி தோல்விகளில் ஆரவாரம் கொண்டு, அதில் மிதந்து செல்லும் தக்கையன்று தமிழ்த் தேசியம்!

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

http://tamizhdesiyam.blogspot.com/

இந்தியாவில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. நாம் தமிழர் அமைப்பும் சீமானும் செல்வாக்கு பெற்றிருக்கிறார்கள். சோனியா காந்தி அ.தி.மு.க.வுடன் உறவை விரும்புகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா முதல்முறையாக தெளிவாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். விடுதலைப்புலிகளும் ஆயுதப்போராட்டமும் அரசியல் இராஜதந்திர தீர்வுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறார்கள். ஐரோப்பாவும் அமெரிக்காவும் அரசியல் இராஜதந்திர தீர்வுக்கு முயற்சி செய்கின்றன. அவை இந்தியாவை ஒதுக்கிவிட்டு இந்த தீர்வுக்கு முயற்சித்தது இல்லை. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் தீர்வு சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது.

தீர்வு எண்டு நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்?

//

Edited by Panangkai

இந்தியாவில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. நாம் தமிழர் அமைப்பும் சீமானும் செல்வாக்கு பெற்றிருக்கிறார்கள். சோனியா காந்தி அ.தி.மு.க.வுடன் உறவை விரும்புகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா முதல்முறையாக தெளிவாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். விடுதலைப்புலிகளும் ஆயுதப்போராட்டமும் அரசியல் இராஜதந்திர தீர்வுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறார்கள்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் அரசியல் இராஜதந்திர தீர்வுக்கு முயற்சி செய்கின்றன. அவை இந்தியாவை ஒதுக்கிவிட்டு இந்த தீர்வுக்கு முயற்சித்தது இல்லை. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் தீர்வு சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது.

1. இந்தியாவை ஒதுக்கி விட்டு தீர்வு காண முடியாது. அதையும் மீறு காணும் தீர்வு நிம்மதி அற்றதாக இருக்கும்.

2. இல்லை இந்தியா என்ற நாடு முதலில் இல்லாமல் போகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

2. இல்லை இந்தியா என்ற நாடு முதலில் இல்லாமல் போகவேண்டும்.

உண்மை!

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஈழ தோழர்கள் இன்னும் கிந்தியாவை சொறிந்து சோப்பு போடுகிறார்கள் என தெரியவில்லை.. நட்பு நாடு நட்பு நாடு என்று இவ்வளவு காலம் கூக்குரல் எழுப்பியதற்கப்புறம்.. கொடுக்க்பதென்னவோ தமிழ்நாடு போன்ற ஒரு உப்பு சப்பில்லாத ஒரு தீர்வு.. அதுவும் முழுமையாக வருமோ தெரியாது.. கனவுலகில் திளைப்பவர்களுக்கு இந்தியாக்காரன் எல்லாம் வந்து சண்டை போடமாட்டான்... உலக சூழல் வேறுமாதிரி உள்ளது. சிவகாசி பட்டாசு மாதிரி அவனவன் அணுகுண்டு வைத்து கொண்டு திரிகிறான்...

டிஸ்கி:

ஈழ தோழர்கள் மேற்கத்திய நாடுகளை போக்கஸ் செய்து ..அங்கு உள்ள அயர்லாந்து போன்ற தீர்வினை கோரலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு எண்டு நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்?

//

தீர்வு என்று நாம் பேசுவது................. கோயில்களில் பூசை முடிந்தபின்பு கொடுப்பார்கள் அதைதான்!

மிகவும் அருமையான கேள்வி. நீங்கள் கேட்டதால் எந்த வியப்பும் இல்லை. ஆனால் அதை எழுதி கேட்பது கொஞ்சம் வியப்பானது அல்லவா???

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஈழ தோழர்கள் இன்னும் கிந்தியாவை சொறிந்து சோப்பு போடுகிறார்கள் என தெரியவில்லை.. நட்பு நாடு நட்பு நாடு என்று இவ்வளவு காலம் கூக்குரல் எழுப்பியதற்கப்புறம்.. கொடுக்க்பதென்னவோ தமிழ்நாடு போன்ற ஒரு உப்பு சப்பில்லாத ஒரு தீர்வு.. அதுவும் முழுமையாக வருமோ தெரியாது.. கனவுலகில் திளைப்பவர்களுக்கு இந்தியாக்காரன் எல்லாம் வந்து சண்டை போடமாட்டான்... உலக சூழல் வேறுமாதிரி உள்ளது. சிவகாசி பட்டாசு மாதிரி அவனவன் அணுகுண்டு வைத்து கொண்டு திரிகிறான்...

டிஸ்கி:

ஈழ தோழர்கள் மேற்கத்திய நாடுகளை போக்கஸ் செய்து ..அங்கு உள்ள அயர்லாந்து போன்ற தீர்வினை கோரலாம்

நீங்கள் இந்தியாவில் இருப்பதால் இதை எழுதவாவது முடிகிறது............. புலம்பெயர்ந்த நாங்கள் எழுதினால் மக்களை கொல்ல திட்டம் தீட்டியதாக எத்தனையோ மக்கள் காப்பாளர்கள் வந்து தமது விசனத்தை கொட்டுவார்கள்.

எதுவும் எழுதவில்லை என்பதனால் உங்களுடைய கருத்து ஆமோதிக்க தக்கதல்ல................ மிகவும் பயங்கரவாதமாக இருக்கிறது. மக்களை போராடசொல்லிவிட்டு சும்மா இருந்து உணவு சாப்பிட்டால் எப்படி??? நீங்கள் குடும்பத்தோடு முதலில் குண்டுடன் வெடிக்க வேண்டும்.................. அதுக்குபிறகுதான் கேள்வி கேட்க நீங்களே இருக்க மாட்டீங்களே பதில் சொல்ல வேண்டிய தேவை எமக்கு எப்படி வரும்???

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சர்வதேச அரசியல் நிலவரம் பிராந்திய செல்வாக்குகளையும் கடந்து அரக்கேறிக் கொண்டிருக்கின்றன. மேற்கு நாடுகளின் பொருண்மிய வீழ்ச்சி.. அவர்களுக்கு ஏற்ற ஆட்சி அதிகார அலகுகளை உலகெங்கும் நிறுவத் தூண்டியுள்ளது.

எமது பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு என்பது தமிழ் மக்களின் விருப்புக்களுக்கு இணங்க இருக்கவில்லை. இருக்கப் போவதும் இல்லை. இந்திய நலன்களை சார்ந்தே அதிகம் இருக்கும்.

அந்த வகையில் நாங்கள் இந்தியாவை மட்டும் மையப்படுத்தி அரசியல் செய்யும் நிலையை விடுதலைப்புலிகள் தகர்த்தெறிந்துவிட்டு சர்வதேசம் நோக்கியதாக எமது பிரச்சனையை விரிவுபடுத்தி இருக்கின்றனர். மீண்டும் அதை அமிர்தலிங்கம் சித்தாந்ததுக்குள் அடைத்து வைத்து தமிழ் மக்களின் நியாயபூர்வ உரிமைகளை பூட்டி வைக்க முனைவது படு கொடுமையான செயலாகும்.

இன்று எமக்கு சர்வதேச ஆதரவோடு கூடிய ஐக்கிய நாடுகளை சபையினூடான தீர்வே அவசியம். இந்தியா எமக்கு தார்மீக ரீதியில் உதவ வேண்டிய கடப்பாட்டில் இருந்து மீறிவிட்டுள்ளது. எனி இந்தியாவின் நிகழ்ச்சி நிரலோடு நாம் செல்வதைக் காட்டிலும் நாம் சர்வதேசத்தோடு சேர்ந்து நின்று தீர்மானிக்கும் நிகழ்ச்சி நிரலோடு இந்தியா எம்மோடு இணங்கிச் செயற்பட அதனைத் தூண்ட வேண்டும்.

எமது மக்களும் போராளிகளும்.. தங்கள் இன்னுயிர்களை காணிக்கையாக்கி.. எமக்கு சர்வதேச அரங்கில் ஒரு அனுதாபப் பார்வையை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். நாங்கள் ஜெயலலிதாவை.. இந்தியாவை நம்பி சர்வதேசத்தையோ.. ஐநாவின் ஊடான முயற்சிகளையோ கைவிட முடியாது.

நாம் கடந்த காலங்களில் பெரும் இராணுவ நெருக்குவாரங்களுக்குள் இருந்த வேளைகளில் எல்லாம் இந்தியா எம்மை கைவிட்டிருக்கிறது.. என்ற படிப்பினையை நாம் மறந்து திட்டங்களை தீட்ட முடியாது. நாம் இந்தியாவை தனித்து நம்பி ஏமாந்ததது தான் அதிகம். அந்த வகையில்.. எம் கரங்கள் சர்வதேசத்தின் கரங்களை இறுகப் பற்றியபடி.. ஐநாவின் உதவியோடு.. பிராந்திய செல்வாக்காளர்களை எம்மை நோக்கி வர வைத்து நகர முயல வேண்டுமே தவிர.. இந்தியாவையோ சீனாவையோ திருப்திப்படுத்தும் வேலைத் திட்டங்களில் இறங்கின் மீண்டும் நாம் ஏமாந்து கையறு நிலையில் நிற்க வேண்டிய நிலையே ஏற்படும்.

இந்தியா.. சிறீலங்கா... போன்ற நாடுகள்.. தாம் போர்க் குற்ற விசாரணையில் இருந்து தப்பிக்க நாம் சர்வதேசத்தை நோக்கி நெருங்குவதை தடுக்க.. எமக்கு ஆதரவாக செயற்படுவதாகக் காட்டிக் கொள்ள முனையலாம். ஆனால் நாம் அவற்றை எமது தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்திக் கொண்டு.. சர்வதேசத்தின்.. ஐநாவின் ஆதரவோடு எமக்கான தீர்வை நோக்கி பயணிக்க முனைவதே சிறந்தது. ஒருவேளை இந்தியா சர்வதேசத்தை ஐநாவை மீறி எமக்கு தமிழீழம் பெற்றுத் தர முன் வந்தால் அப்போது இந்தியாவை நாம் முழுமையாக ஆதரித்து நிற்கலாம். அதுவரை இந்தியா எம்மைப் பொறுத்தவரை நின்று நிதானித்து ஆராய்ந்து அணுக வேண்டிய ஒரு நாடு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்தியாவில் இருப்பதால் இதை எழுதவாவது முடிகிறது............. புலம்பெயர்ந்த நாங்கள் எழுதினால் மக்களை கொல்ல திட்டம் தீட்டியதாக எத்தனையோ மக்கள் காப்பாளர்கள் வந்து தமது விசனத்தை கொட்டுவார்கள்.

எதுவும் எழுதவில்லை என்பதனால் உங்களுடைய கருத்து ஆமோதிக்க தக்கதல்ல................ மிகவும் பயங்கரவாதமாக இருக்கிறது. மக்களை போராடசொல்லிவிட்டு சும்மா இருந்து உணவு சாப்பிட்டால் எப்படி??? நீங்கள் குடும்பத்தோடு முதலில் குண்டுடன் வெடிக்க வேண்டும்.................. அதுக்குபிறகுதான் கேள்வி கேட்க நீங்களே இருக்க மாட்டீங்களே பதில் சொல்ல வேண்டிய தேவை எமக்கு எப்படி வரும்???

ஓ மேற்கத்திய நாடுகளில் இந்தியாவினைவிட சுதந்திரம் அதிகம் உள்ளது என்றே நினைக்கிறேன் தோழர்..

அங்கிட்டு உள்ள சிக்கல்களில் அங்க வரும் பஸ்களின் மீது கல்லெறி நடத்த முடிகிறதா?இங்க எவனும் கல்லெறிவதற்கே பயப்படுகிறான்..

ரெண்டு சுதந்திரம் யாருக்கு தேவை?ம்ம் கான்செப்ட் ஆர்த்த ஆவட்லேது.. இவ்வளவு உயிர்களை கொடுத்துள்ளீர்கள்... உங்களுக்குத்தான் முதல் கடமை உள்ளது.. அதற்காக அரசியல் அமைப்பு வகையில் ஏதாவது செய்யலாம்.. போக தமிழ்நாடால் செய்யமுடிந்தது .. மீண்டும் இவ்வாறான சூழ்நிலை வரும் இடத்து .. பட்டினியால் செத்தார்கள் என்ற நிலைபாடு இல்லாமல் செய்ய இயலும்.. அரசாங்கம் குடுக்கும் 1 ரூபாய் அரிசி அல்ல .. அவனவன் வீட்டில் விளைந்ததையே கொடுப்பான்.. போக உரிமைக்காகவேணும் இந்த குண்டு கட்டி வெடிப்பதெல்லாம் தமிழக்திற்கு புதுசு.. அதற்கு நீண்டகாலம் செல்ல வேணும்

ஏன் ஈழ தோழர்கள் இன்னும் கிந்தியாவை சொறிந்து சோப்பு போடுகிறார்கள் என தெரியவில்லை.. நட்பு நாடு நட்பு நாடு என்று இவ்வளவு காலம் கூக்குரல் எழுப்பியதற்கப்புறம்.. கொடுக்க்பதென்னவோ தமிழ்நாடு போன்ற ஒரு உப்பு சப்பில்லாத ஒரு தீர்வு.. அதுவும் முழுமையாக வருமோ தெரியாது.. கனவுலகில் திளைப்பவர்களுக்கு இந்தியாக்காரன் எல்லாம் வந்து சண்டை போடமாட்டான்... உலக சூழல் வேறுமாதிரி உள்ளது. சிவகாசி பட்டாசு மாதிரி அவனவன் அணுகுண்டு வைத்து கொண்டு திரிகிறான்...

டிஸ்கி:

ஈழ தோழர்கள் மேற்கத்திய நாடுகளை போக்கஸ் செய்து ..அங்கு உள்ள அயர்லாந்து போன்ற தீர்வினை கோரலாம்

இந்தியாவை முழுமையாக நாம் தவிர்க்க எண்ணுவது அரசியல் ரீதியாக தற்கொலைக்கு ஒப்பானது. ஆனால், அதேவேளை முழுமையாக இந்தியாவை மட்டுமே நம்பி இருக்கவும் கூடாது.

காரணம் இந்தியாவின் பொருளாதார வலுவும் உலக நாடுகள், முக்கியமாக மேற்குலக நாடுகள், அதனுடன் பேண விரும்பும் உறவும். கீழே உள்ள அண்மைய நிலரவங்களும் இந்தியாவின் உலக நிலைப்பாட்டை காட்டுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்கானிஸ்தானில் மேற்குலகம் தான் ஏற்படுத்த உள்ள வெற்றிடத்தை இந்தியாமூலம் ஓரளவுக்கு சமாளிக்க கேட்டுள்ளது. மன மோகன் சிங் கூட நேரடியாக அங்கு சென்று வந்துள்ளார். பாகிஸ்தானிடம் நம்பிக்கை இழந்த நிலையில் மேற்குலகம் இந்தியாவை கூடுதலாக, இந்த பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்க, நம்பிவருகின்றது.

வரும் நாட்களில் இலங்கையை விட பல மடங்கு வளம் உள்ள லிபிய நாட்டு அதிபர் கடாபியை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க உள்ளது. அதற்கு இந்தியா உட்பட சீனா, உருசியா கூட ஆதரவு தருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா..

http://www.youtube.com/watch?v=88qu-tgUCB8

இந்தியாக்கராணை நம்பினால் கோவணம் மிஞ்சாது.. நன்றி.. :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்பது ஈழத்தமிழரைப் பொறுத்தவரை தொண்டையில் சிக்கிய முள் விழுங்கித்தான் ஆகவேண்டும். இப்போதைய பிரச்சனை நோகாமல் விழுங்குவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.

தம்பி புரட்சி அந்த அயர்லாந்து தீர்வு பற்றி கொஞ்சம் எங்களுக்கும் சொன்னால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி புரட்சி அந்த அயர்லாந்து தீர்வு பற்றி கொஞ்சம் எங்களுக்கும் சொன்னால் நல்லது.

தனி பாராளுமன்றத்தோடு அமைந்த தீர்வு அது....... தெரியல்லன்ன கூகுளில் தடவி பார்த்து தெரிந்துகொள்ளவும்... உலக வரலாற்று பேராசிரியர் தாங்கள் அறிவதே சிறந்தது.. போக கியுபெக் போல தனி வாக்கெடுப்புக்கும் தமிழீழ சமுகம் தயாரக இருக்கும் என நம்புகிறேன்.. அதை ஏற்படுத்த வேண்டியது தங்களை போன்ற ஒபாமா.. மனங்கெட்ட சிங்கு.. புட்டீன்.. உலக அரசியல் தலீவர்களுடன் கலந்து ஆலோஜிக்கும் தங்கள் கடமை ஆகும்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

... எமக்கு சாவு மட்டுமல்ல ... வாழ்வென்று ஒன்றிருக்குமாயின் ... அது இந்தியாவினாலேயே!!!!!!... இதை எத்தனை பேர் ஏற்கிறீர்கள் தெரியவில்லை???? ... என்ன பாவம் செய்தோமோ, நாம் பிறந்த மண்ணின் புவியியல், அந்த பிசாசுக்கு பக்கத்தில் வந்து விட்டது!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆதரவு அரசியல் தீர்வு மண்ணாங்கட்டி.. வடக்கு கிழக்கு சேராது ஏற்கனவெ 5 மாநிலங்கள் தமிழர் சார்பில் இலங்கையில் உருவாக்கவேண்டும் என சிதம்பரம் சொல்லிபோட்டார்.. ஏற்கனவே அங்க இருக்கும் உள்குத்து போதாது இதுவேற.. இனியும் 5 பிரிச்சா அவ்வளவுதான்... ரெண்டு அணுகுண்டை வெடித்து காட்டுங்கள் பிறகு .. எல்லாம் உங்கள் கைகளில்.. எதாவது அறிவியல் துறையில் சாதனையில் சாதனை செய்யுங்கள் .. உலகம் கை வைக்க பயப்படும் அளவுக்கு செய்யுங்கள்..

டிஸ்கி

பெட்ரோல் எவனும் குடுக்கலைன்னா நடந்து போகலாம் அல்லது தண்ணீரில் போக கூடிய அளவுக்கு ஏதாவது செய்யலாம்..

டிஸ்கிக்கு டிஸ்கி:

அடிப்பதற்கு எவனும் அறிவியலை யோசிக்கிறன் அடுத்து அவனுடைய குணாதியசியங்களை யோசிக்கிறன்.. (பாகிஸ்தான்காரன் அணுகுண்டை இயக்க சீனாவில் இருந்து பொறியாளார்கள் வரவேண்டும்) கொரியா மீது எவனும் கைவைக்க இயலாது .. மனிதம் மண்ணாங்கட்டியெல்லாம் கூடவே கூடாது

தீர்வு என்று நாம் பேசுவது................. கோயில்களில் பூசை முடிந்தபின்பு கொடுப்பார்கள் அதைதான்!

மிகவும் அருமையான கேள்வி. நீங்கள் கேட்டதால் எந்த வியப்பும் இல்லை. ஆனால் அதை எழுதி கேட்பது கொஞ்சம் வியப்பானது அல்லவா???

இது...... இதுக்குத்தான்.. எல்லொரும் சேர்ந்து உங்களுக்கு தர்மஅடி போட்டார்கள்... இன்னும் திருந்துரமாதிரி தெரியவில்லை...

மண்டையில் கொஞ்சம் இருந்தால்.. தமிழர்களுக்கு ஒரு தீர்வு என்ன வெண்டு சொல்லுங்கோ பாப்பம்..?

சும்மா வானத்தில் ஏறி கோழி புடிக்கிறகதையெல்லாம் வேண்டாம்.. நடைமுறைக்கு சாத்திமான தீர்வு உங்களுக்கு தெரியுமா?..

பதில் தெரியாவிட்டால்.. மன்னிப்பு கேக்கவும்....

India plays a waiting game

Western nations would like to bring forth a resolution before the UN Human Rights Council to initiate an international inquiry based on the Ban panel report. Many see the support of the ruling African National Congress to the Ban panel report as a step in this direction. Some view this as a strong signal to other nations. South Africa is deemed to have a big say within the Council. A section of the Tamil Diaspora would like this resolution to be taken up at the September session and not at the May 2011 session.

India too is of the same opinion. The Indians would give the Sri Lankan government further time to initiate the 13th Amendment to the Constitution and the removal of Emergency Regulations as recommended by the panel report. It was mentioned in this column that the National Security Adviser of India, Menon and a team will visit Sri Lanka shortly. This has been deferred as the Sri Lankan government has required time to come to a final decision on the recommendations made in the panel report. The government as a consequence, has since intensified discussions with the TNA.

During the course of his discussions with the heads of the media last week Mahinda Rajapaksa had said that India would stand by Sri Lanka and voice her opinion at the opportune time. The media duly carried this and the main opposition party in India the BJP led by Pon Radhakrishnan responded stating that if India attempts to support Mahinda Rajapaksa they would rally the people of every state against the Congress government.

http://www.thesundayleader.lk/2011/05/15/president-fears-a-regime-change/

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை எம்வசம் திருப்புவது இந்தியாவை எம்பக்கம் திருப்புவதிலும் இலகுவானது.இந்தியா, உலகம் ஒன்றாக ஒரு தீர்வை எமக்கு தர எத்தனிக்கும் போது இந்தியாவும் அதற்கு உடன்பட்டே ஆக வேண்டும்.

அதற்காக இந்தியாவை எதிரியாக பார்க்காமல் நம்ப நடத்தலும் நம்பி நடக்காமல் விடுவதும் எமது சாணக்கியத்தை பொறுத்தது.

ஐ.நாவுடனான தீர்வுக்கு தான் நாம் முயற்சிக்க வேண்டும்.மேற்கு நாடுகளின் ஆயுத, அரசியல் பலத்தை உலகின் பல நாடுகள் பயன்படுத்திக் கொண்டுள்ளன.நாமும் ஏன் பயனபடுத்தக்கூடாது??

இந்தியா எமக்கு நண்பனாக இருந்த போதே எமக்கு உதவவில்லை.இப்போ எமக்கு கை கொடுப்பார்கள் என்று எப்படி நாம் எதிர் பார்க்கலாம்?

தமிழர்களுக்கு ஒரு தீர்வு என்ன வெண்டு சொல்லுங்கோ பாப்பம்..?

இலங்கை தமிழர்களுக்கு தனியாக மாகாணம்(Provincial Council) - 13-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம். இது ஏறக்குறைய இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்குள்ள அதிகாரம்போல் இருக்கும்.

இதை அமேரிக்கா, இந்தியா என்பன கூட வற்புறுத்துகின்றன. இது ஒரு தொடக்கப்புள்ளி என்கிறது கூட்டமைப்பு.

Edited by akootha

இலங்கை தமிழர்களுக்கு தனியாக மாகாணம்(Provincial Council) அமைப்பதே இந்த 13-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம். இது ஏறக்குறைய இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்குள்ள அதிகாரம்போல் இருக்கும்.

இதை அமேரிக்கா, இந்தியா என்பன கூட வற்புறுத்துகின்றன. இது ஒரு தொடக்கப்புள்ளி என்கிறது கூட்டமைப்பு.

இவ்வளவு அதிகாரத்தை தமிழர்களுக்கு அவ்வளவு சுலபமாக சிங்களம் கொடுத்துவிடாது. உதாரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கான அதிகாரத்தில் மாநிலக் காவல்துறை போன்றனவற்றை தவிர்த்து ஒரு வரைவையே யோசிக்கமுடியும். இதெல்லாம் கூட அமெரிக்காவோ ஐநா வோ விரும்பினால் கூட இந்திய மத்தியரசின் விருப்பம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஒரு இலக்கை நோக்கிய படிப்படியான முன்னேற்றத்திற்குப் பதிலாக ஒரேயடியாக தனியரசு என்ற சிந்தனைமுறையே இதற்கு பிரதான தடையாய் இருக்கும். புலம்பெயர் பூசுவாக்களின் தமிழ்த்தேசிய சிந்தனை நாடுகடந்த அரசு என்ற மேட்டுக்குடி அடயாளத்தேடல் குழுவாதம் போன்றன எப்போதும் தாயக மக்களுக்கான சிறு அதிகாரத்தை கூட கொடுக்க விரும்பாத சிங்களத்திற்கு உதவியாக இருக்கும். சிங்களம் தனது பேரினவாதத்தை நியாயப்படுத்த ஏதுவாக இருக்கும்.

நாடுகடந்த அரசு அவை பேரவை காங்கிரஸ் என்னும் பல்வேறு அமைப்புகள் புலத்தில் பெருகிக்கொண்டே இருக்கின்றது. தாயகம் குறித்த சிந்தனைக்கு இத்தனை அமைப்புகள் தேவையில்லை. இங்கே தேசியவாதம் தாயகம் என்ற போர்வையில் நடப்பது மேட்டுக்குடிகளின் அடயாளத்தேடல். தாயக மக்களின் நலன்சார்ந்து அவர்களின் நெருக்கடியான வாழ்வுக்கு தோழோடு தோழ்நிற்பதை தவிர்த்து அவர்களை விட்டு விலத்தி அவர்களுக்காக நாடு அமைப்பது அவர்களுக்காக தேசியம் கதைப்பது போன்ற கோமாளித்தனங்கள் எஞ்சிய மக்களை கருவறுப்பதற்கே வழிசெய்யும். இந்த அமைப்புக்களில் அங்கம் வகிப்பதில் இருந்தும் ஆதரவு கொடுப்பதில் இருந்தும் விலகி தாயக மக்களுடன் அவரவர் பாட்டில் தொடர்புகளை பேணுவது சிறந்தது. குழுவாததத்திற்கு துணைபோவது அடயாளத்தேடலுக்கு துணைபோவது எம் கண்களை எம் விரல்களால் குத்துவதற்கு சமனானது.

மேற்குலகின் நலன்களையும் தமிழர் எமது நலன்களையும் ஒன்றிணைப்பதில் நாம் வெற்றி காணும்போது

எம் விருப்பப்படியே எமது பிரச்சினை தீர்க்கப்படும்...... மேற்குலகின் சக்தியை, ஐ நாவில் அதன் பலத்தை நாம் முதலில் புரிந்து கொண்டு நமக்கு சார்பாக முற்றுமுழுதாக செயலாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிச் செயலாற்றுவோமேயானால் மேற்கண்ட கேள்விக்கே அவசியமிருக்காது......

இந்திய காங்கிரசை நம்பவும் வேண்டாம்....எதிர்க்கவும் வேண்டாம்.....

தமிழீழம் அமைய வேண்டுமானால் இந்தியா விலகி இருக்க வேண்டும் இந்தியாவின் தலையீடு இருக்குமேயானால் அது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு மட்டுமே சாத்தியம்....

தமிழீழம் அமைய வேண்டுமானால் இந்தியா விலகி இருக்க வேண்டும் இந்தியாவின் தலையீடு இருக்குமேயானால் அது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு மட்டுமே சாத்தியம்....

தமிழீழம் வேண்டுமான இல்லை மாநிலங்களவை அதிகாரம் வேண்டுமான இல்லை அதனிலும் குறைவான ஏதோ ஒரு தீர்வு வேண்டுமா என்பதை தாயகத்தில் உள்ள மக்களே தீர்மானிப்பார்கள். தீர்மானிக்கவும் வேண்டும் புலத்தில் உள்ளவன் அல்ல. இந்தியா குறித்த நட்பு நிலையை தீர்மானிப்பதும் தாயகத்தில் உள்ள மக்களே அன்றி புலத்தில் இருப்பவன் அல்ல. தாயக மக்களின் விருப்பங்களுக்கு முடிந்தால் புலத்தில் உள்ளவன் ஆதரவாய் இருப்பது ஒன்றே நேர்மையானது தவிர அவர்களின் விருப்பங்கள் உரிமைகளை தீர்மானிப்பவனாக இருக்கமுடியாது. அதற்கான அதிகாரம் தாயகத்தை துறந்தவர்களுக்கு கிடையாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.