Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • தொடங்கியவர்

பிரான்சிலை RER B செவரோன் பக்கம் இருக்கிறீங்கள்போலை. சிறீலங்கா இமிக்கிறேசனிலை உங்களை பிடிச்சு உருட்டி பிரட்டி நாலு கேள்வி கே;காமல் விட்டது கவலையாய் இருக்கு சரி தொடருங்கள். :lol:

உங்கடை புலனாய்வுத்துறை இப்படி வேலை செய்யும் எண்டு நினைக்கேல :D:D:D:D:D

Edited by komagan

  • Replies 516
  • Views 65.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மாலை 6 மணியானாலும். வெய்யிலின் அகோரம் அடங்கவில்லை. அந்த பஸ் குளீரூட்டிய சொகுசு வண்டியானாலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. மனைவி தந்த தேங்காய்ப்பூ சிறிய துவாய் வியர்வையில் தோய்ந்து ,சிறியதாக வியர்வை மணத்தது.

"இவங்கள் எப்ப வெளிக்கடுவங்கள் " ?.

"ஆக்கள் சேரத்தான் பஸ்சை எடுப்பினம்".

பஸ் போறணை மாதிரி இருந்தது. ஒருவாறு பஸ் வெளிக்கிடத் தொடங்கியதும் முகத்தில் அடித்த காற்று வெக்கைக்கு இதமாக இருந்தது . ஆனாலும் நல்ல வடிவாக இரவு 10 மணிவரையும் பஸ் கொழும்பைக் காட்டியது எனக்கு எரிச்சலாக வந்தது. பின்பு அது கண்டி வீதியில் வேகமெடுத்தது. இருட்டில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. மனைவி களைப்பின் மிகுதியால் எனது தோழில் நித்திரையாகி விட்டா. எனக்கு நித்திரை வரமறுத்தது. பஸ்சில் ஏறும் போதே மனைவி அழுத்தமாக சொல்லியிருந்தா

" யாரோடையும் தேவையில்லாமல் கதைக்கக் கூடது".

குறுகிய ஏ9 வீதியல் பஸ் இருளைக் கிழித்துப் பறந்தது. பல இடங்களில் புதிய சிறிய விகாரைகள் முளைத்து இருந்தன. புத்தரும் அகதியாகி இருக்க இடமில்லாமல் மீள்குடியேற்றப்பட்டுள்ளாரோ ? பஸ்டைறவரும் பஸ்சை நிப்பாட்டி நிப்பாட்டி எல்லாப் புத்தரையும் கும்பிட்டுக் கொண்டு வந்தார். பஸ்சில் நான் ஒருவன் தான் முழிப்பாக இருந்தேன், என்னடைய நிலையப்படி. என்வாழ்க்கையில் கால் நூற்றாண்டைத் துலைத்து புதிய ஐரோப்பிய முகத்துடன் வருவது மனதை பிழிந்தது. என்னுடன் கூடப்பிறந்தவர்களும், உறவுகளும் என்னை ஏற்றுக்கொள்வார்களா ? எப்படியாயினும் கண்ணரில் பங்காளியில்லாதவன் தானே. என்னால் கண்ணீரைத் தடுக்கமுடியவில்லை. இருபக்கமும் அடர்ந்த காடுகளின் எச்சசொச்சங்கள் கரைகட்டி நின்றன. இதில் தானே பரணி பாடினோம். தரணியைத் திரும்ப வைத்தோம். எத்தனை பேர் எங்களைப் பார்க்க வரிசையில் நின்றார்கள். அதில் சூது இருந்ததை எப்படி பகுத்தறியாது விட்டோம்? பஸ் வேகத்தைக் குறைத்தது. தூரத்தே இருளில் பல உருவங்களும், வீதியை மறைத்த வீதித்தடையும் தெரிந்தது. எந்த இடம் என்று சரியாகவும் தெரியவில்லை. நேரம் அதிகாலை 1.30 ஐக் காட்டியது. கலவரத்துடன மனைவியை எழுப்பினேன். மற்வர்களும் பரபரப்பானார்கள்.

"இது எந்த இடம்"?

"ஏன் பஸ் மெதுவாகப் போகின்றது"?

சற்றுமுற்றும் பார்த்த மனைவி,

" இதுதான் ஓமந்தை சோதனைச்சாவடி"

"நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ நான் பாத்துக்கொள்ளுறன், நீங்கள் கதைக்கப்படாது".

எனக்குப் பயத்தில் வியர்த்துக்கொட்டியது. மனைவி நிதானமாகத் தனது இலங்கை அடையாள அட்டையையும் இருவரது கடவுச்சீட்டுக்களையும் எடுத்து வைத்துக்கொண்டா. எமது பஸ்சின் முன்னே பல வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. தூரத்தே ஐந்தாறு வரிசைகளில் வாகனங்கள் சோதனையிடப்பட்டுக் கொண்டிருந்தன. பஸ் முற்றாகவே தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அந்த இடம் ஒரு நிரந்தர படைமுகாமைற்குத் தேவையான வசதிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வாகனத்தையும் நிறதுத்தி சோதனையிட்டவாறே சாரதிகளை போய் தங்கள் விபரங்களைப் பதியுமாறு கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்கள் இராணுவச் சிப்பாய்கள். எமது பஸ்சில் ஏறிய சிப்பாய்கள் உள்ளூர் ஆட்களை இருக்கும்படியும் வெளிநாட்டவர்களைப் பதியும் இடத்திற்குப் போகும்படி சிங்களத்தில் சொன்னார்கள் . பஸ்சில் இருந்தவர்கள் எங்களை விரோதமாகப் பாரத்தது அப்பட்டமாகவே தெரிந்தது. எங்களால் தங்களுக்குத் தொந்தரவு வரும் என நினைத்தார்களோ? எங்களுடன் இருவருமாக 4 பேர் பஸ்சைவிட்டு இறங்கினோம். மனைவியை முன்னே விட்டு நான் பின்னே வலிந்த புன்னகையுன் நின்று கொண்டேன். மனைவியின் விபரங்களைப் பதிந்து கொண்டே சிங்களத்தில் உரையாடத் தொடங்கினாள் அந்தப் பெண் அதிகாரி

தொடரும்.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் இல்லாத போதும் மிகுதியை தொடர்ந்து எழுதுவதற்கு மிக்க நன்றி கோமகன் அண்ணா ...நாமளும் அங்கு இருந்து வெளிக்கிட்டு 22 வருடங்கள்..இப்போ தான் கொஞ்சம்,கொஞ்சமாக கடந்த காலத்தை flash back பண்ணிப் பார்க்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலை RER B செவரோன் பக்கம் இருக்கிறீங்கள்போலை. சிறீலங்கா இமிக்கிறேசனிலை உங்களை பிடிச்சு உருட்டி பிரட்டி நாலு கேள்வி கே;காமல் விட்டது கவலையாய் இருக்கு சரி தொடருங்கள். :lol:

:o:o:o

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் உங்கள் நெருஞ்சியின் நெருடல் தொடர வாழ்த்துகள்

வாத்தியார்

**********

  • தொடங்கியவர்

நேரம் இல்லாத போதும் மிகுதியை தொடர்ந்து எழுதுவதற்கு மிக்க நன்றி கோமகன் அண்ணா ...நாமளும் அங்கு இருந்து வெளிக்கிட்டு 22 வருடங்கள்..இப்போ தான் கொஞ்சம்,கொஞ்சமாக கடந்த காலத்தை flash back பண்ணிப் பார்க்கிறேன். :)

FLASH BACK= ????????????????????????????????????????????? :o:o:o:o:o

  • தொடங்கியவர்

கோமகன் உங்கள் நெருஞ்சியின் நெருடல் தொடர வாழ்த்துகள்

வாத்தியார்

**********

நன்றி வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

FLASH BACK= ????????????????????????????????????????????? :o:o:o:o:o

என்ன கோமகன் அண்ணா...எனக்கு புரிய இல்லை.நான் சொன்னதில் ஏதாச்சும் தப்பா? :(

Edited by யாயினி

  • தொடங்கியவர்

என்ன கோமகன் அண்ணா...எனக்கு புரிய இல்லை.நான் சொன்னதில் ஏதாச்சும் தப்பா? :(

தவறும் இல்லை, தப்பும் இல்லை, FLASH BACK க்குத் தமிழ் வடிவம் இல்லையோ யாயினி ? :D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

தவறும் இல்லை, தப்பும் இல்லை, FLASH BACK க்குத் தமிழ் வடிவம் இல்லையோ யாயினி ? :D:D:D:D

சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா.

22 ஆண்டுகள் பின் நோக்கிப் பாக்கிறன். :)

  • தொடங்கியவர்

யார் இவர்" ?

" எனது கணவர்".

"எப்படி நம்பிறது" ?

"எனது கணவர் என்பதை உறுதிப்படுத்த என்ன வேண்டும்" ?

" விவாகப்பதிவுப் பத்திரம் உள்ளதா" ?

" பொறுங்கள் பஸ்சில் உள்ளது எடுத்துவருகின்றேன்".

இடையில் ஒரு சிப்பாய் எனது கடவுச்சீட்டை அவதனமாகப் பார்த்தான்.

"உங்கள் விசா எங்கே"?

என்று முட்டாள்தனமாய் கேட்டான்.

"பிரெஜ் பிரஜைக்கு இங்கு வர விசா தேவையில்லை."

இருங்கள் வருகின்றேன் என்று கடவுச்சீட்டுடன் உள்ளே சென்று மறைந்தான். எனக்குச் சனி தொடங்கி விட்டதோ? மனைவி பஸ்சிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தா. உள்ளே இருந்து திரும்பிய சிப்பாய்,

"நீங்கள் பிறந்த இடம் பிரான்ஸ் தானே" ?

எனக்குச் சிரிப்புடன் கோபம் எட்டிப்பரர்த்தது . மனைவி பொறுமையாக விளங்கப்படுத்தினா. அவன் என்னைப் பார்த்து ,

" எம் ஓ டி பெர்மிற் இருக்கா " ?

" உங்கள் இணையத்தளத்தில் இது தேவையில்லை என்று நாங்கள் வெளிக்கிட்ட அன்று 4ம் திகதி காலை போட்டிருந்தீர்களே ? அதனால் நான் எடுக்கவில்லை".

"இன்று மாலை சட்டம் மாற்றப் பட்டுள்ளது".

"உங்ளை தொடரந்து செல்ல அனுமதிக்க முடியாது நீங்கள் கொழும்பு போய் எம் ஓ டி ஐ எடுத்து வாருங்கள்".

"நீங்கள் யாழ்ப்பாணம் போகலாம்" .

என்று மனைவியை பாரத்துச் சொன்னான்.

" இன்று மாலை போட்ட சட்டம் எப்படி எங்களுக்குத் தெரியும் " ?

" எங்களால் அனுமதிக்க முடியாது " .

இவனிடம் பேசிப் பயனில்லை.

" உங்கள் மேலதிகாரியுடன் கதைக்க வேண்டும்" .

மனைவியின் அருகில் நின்ற பஸ் ட்றைவரிடம் எங்களுடைய பயணப் பொதிகளை இறக்கி விட்டு பஸ்சை எடுக்கும் படி கட்டளையிட்டான் .

எங்களின் பயணப்பொதிகளை இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டு மறைந்தது. எங்களுடன் இறங்கிய மற்றய இருவருக்கும் இதே நிலை ஏற்பட்டதை என்னால் பார்க்க முடிந்தது. இறுக்கமான அமைதி அங்கு நிலவியது. சிறிது தூரத்தில் இருந்த ஏ9 பாதையில் வந்த வாகனங்களின் இரைச்சல் அமைதியைக் குலைத்தது. சிறிது நேரத்தில் ஓர் இராணுவ அதிகாரி எங்களை நோக்கி வந்தான்.

"என்ன பிரச்சனை "?

எனது மனைவி பிரச்சனையை எடுத்துச்சொன்னா. பொறுமையாகக் கேட்டவன் எனது கடவுச்சீட்டை மீண்டும் ஆராய்ந்தான்.

"உங்களது நிலமை எனக்குப் புரிகின்றது உங்களுக்காக ஒரு உதவியை செய்கின்றேன், அருகில் இருக்கும் வவுனியாவில் இருக்கும் சென்ற் ஜோசெப் படைத்தளத்தில் அனுமதிப்பத்திரம் எடுக்கமுடியும்,வாகன ஒழுங்குகளையும் செய்துவிடுகின்றேன்".

எங்கள் பதிலை எதிர்பாராது இரண்டு சிப்பாய்களை அழைத்து எங்களுக்கு வாகன ஒழுங்கு செய்து எங்களை உரிய இடத்திற்கு சேர்க்கும்படி கட்டளையிட்டான். ஓர் ஹயேர்ஸ் வண்டி எங்கள் முன்னே வந்து நின்றது. எங்கள் பயணப்பொதிகளை ஏற்றிக்கொண்டு செயின்ற் ஜோசெப் படைமுகாம் நோக்கிச் செல்லத் தொடங்கியது.

தொடரும்.

Edited by கோமகன்

தொடருங்கள் கோமகன். உங்கள் பயணம் சம்பவகரமாகத்தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

"நீங்கள் பிறந்த இடம் பிரான்ஸ் தானே" ? எனக்குச் சிரிப்புடன் கோபம் எட்டிப்பரர்த்தது .

அழகு, கோமகன்! மித்திரோனுக்கு உறவு என்று சொல்லித் தப்பியிருக்கலாம் தானே!

தொடர்ந்து எழுதுங்கள்!

உங்கள் இயல்பான நகைச்சுவை இடைக்கிடை எட்டிப்பார்க்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

. மனைவியின் விபரங்களைப் பதிந்து கொண்டே சிங்களத்தில் உரையாடத் தொடங்கினாள் அந்தப் பெண் அதிகாரி

தொடரும்.

எங்கள் பதிலை எதிர்பாராது இரண்டு சிப்பாய்களை அழைத்து எங்களுக்கு வாகன ஒழுங்கு செய்து எங்களை உரிய இடத்திற்கு சேர்க்கும்படி கட்டளையிட்டான். ஓர் ஹயேர்ஸ் வண்டி எங்கள் முன்னே வந்து நின்றது. எங்கள் பயணப்பொதிகளை ஏற்றிக்கொண்டு செயின்ற் ஜோசெப் படைமுகாம் நோக்கிச் செல்லத் தொடங்கியது.

தொடரும்.

நன்றாக சின்னத்திரை பார்ப்பீர்கள் போலுள்ளது கோமகன்

ஏதோ என் ஆயுளுக்குள் கதையை முடித்தால் நான் அதைப்படிக்கும் பாக்கியம் பெறுவேன். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது தொடர்..! விறுவிறுப்பாகவும் இருக்கிறது..! :unsure: தொடர்ந்து எழுதுங்கள் கோமகன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ கோமகன் ,தொடர்ந்து வாசிக்காமல் விட்டால் எங்களுக்கு நெருஞ்சி நெருடும் போலகிடக்குது :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் கோமகன் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

படிக்கப் படிக்க ஆவலாஇருக்கு

நிதானமாக எழுதுங்கள்

வேகமாக போவதால் பல விடையங்களை சொல்லாமல் விட்டு விட போறீர்கள்

  • தொடங்கியவர்

தொடருங்கள் கோமகன். உங்கள் பயணம் சம்பவகரமாகத்தான் இருக்கிறது.

நன்றிகள் எஸ். மேலும் , சம்பவங்கள் தானே எதையும் உருவாக்குகின்ற கருவறை.

  • தொடங்கியவர்

resized2468732144119722.th.jpg

resized2487712144112441.th.jpg

அந்த வாகனத்தில் நாங்களும், எங்களுடன் இறங்கிய இருவரும் இருந்தோம். வாகனத்தை இரு சிங்களவர் ஓட்டி வந்தனர். என் மனமோ பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியது. இந்த நேரத்தில் படைமுகாமிற்குப் போவது புத்திசாலித்தனமாக எனக்குப் படவில்லை. ஒருமுடிவிற்கு வந்தவனாக மற்றவர்களைப் பார்த்துச் சொன்னேன்

நாங்கள் கொழும்புக்குத் திரும்பவும் போகப்போறம் நீங்கள் என்னமாதிரி?"

நாங்களும் அங்கதான் போகப்போறம் அண்ணை."

வாகனத்தை ஒட்டியவர்களிடம் விடையத்தைச் சொல்லி வவுனியா புகையிரதநிலயத்தில் இறக்கிவிடும்படி சொன்னேன். நேரமோ அதிகாலை 2.45 ஐத் தொட்டுக் கொண்டிருந்தது. தூரத்தே வவுனியாவை நெருங்குவதற்கு அறிகுறியாக ஒளிப்பொட்டுகள் தெரிந்தன. வாகனத்தை ஓட்டியவர்களுக்கு புகையிரதநிலயத்திற்குச் செல்லும்

வழி தெரியவில்லை. மனைவி சிங்களத்தில் அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தா. சிறிது நேரத்தில் வண்டி வவுனியா புகையிரத நிலையத்தனுள் நுளைந்தது. வண்டியில் வந்ததிற்கு 1000 ரூபாய்கள் கேட்டார்கள்,பொக்கற்றில் இருந்ததை எடுத்துக் கொடுத்தேன்.ஆயிரம் ரூபா தாளில் மகிந்தர் சிரித்தார்.வெளியாட்களை வைத்து ராணுவம் நன்றாகத்தான் பிழைப்பு நடத்துகின்றது. முதல் புகைவண்டிக்காக மக்கள் அங்காங்கே குழுமியிருந்தார்கள். நேரம் அதிகாலை 3 மணியைத் தாண்டியிருந்தது. எனக்குத் தொடர்ச்சியான பயணத்தால் தலைஇடித்தது. அருகில் இருந்த தேநீர்கடையில் தேநீர் வாங்கி குடித்துக்கொண்டே ஒருசிகரட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். சிகரட் புகையை ஆழ உள்ளே இழுத்து வெளியே விட்டேன். தலையிடிக்குத் தேனீர் இதமாக இருந்தது. நான் ஒரவருக்கும் சொல்லாமல் வந்தது பிழையாகி விட்டதோ ? வவுனியாவில் இருக்கும் பெரியக்காவை எழுப்பவேண்டியது தான். பெரியக்கா கலியாணம் கட்டிய செய்திதான் எனக்குத் தெரியும். அத்தானையும் அக்காவையும் இப்பொழுது தான் பார்ககப் போகின்றேன். மனைவிக்கு எனது வரவை மறைத்து அக்காவிற்கு போன் செய்யும்படி சொன்னேன். அத்தான் மோட்டச்சைக்கிளில் வருவதாக மனைவி சொன்னா. புகையிரதநலையத்தைச் சுற்றி இருள் மண்டியிருந்தது. என்னால் சுற்றாடலை சரியாகப் பார்க்க முடியவில்லை. மற்றய இருவரில் ஒருவர் எங்களைப்போலவே வவுனியாவில் நிற்க முடிவு செய்திருந்தார், மற்றயவர் கொழும்பு போக பயணச்சீட்டு எடுக்கப் போயிருந்தார். முதல் வண்டி காலை 5.30 க்கு என்று வந்து சொன்னார். தூரத்தே மோட்டச்சைக்கிளின் ஒலிகேட்டது. நான் ஓரமாக நின்று கொண்டேன். ஓர் நடுத்தரமான வயது உடையவர் மோட்டச்சைக்கிளை ஓட்டிவந்து எனது மனைவிக்கு அருகில் நிறுத்தி அவாவுடன் கதைக்கத் தொடங்கினார். சிறிது இடைவேளையின் பின்பு அத்தான் அருகே சென்று

"என்ன அத்தான் எப்படிச் சுகம்?"

அத்தான் அதிர்ச்சியின் உறைநிலைக்கே போய்விட்டார்.

மற்ற இருவருடமும் விடைபெற்று நாங்கள் ஓர் ஓட்டோவில் பெரியக்காவின் வீட்டிற்குப் போனோம். அக்கா விபரம் அறியாது வீட்டுக் கேற்ரடியில் நின்று கொண்டிருந்தா. என்னைக் கண்டதும் அக்கா அழுதே விட்டா. சத்தம் கேட்டு இரண்டாவது அக்காவும் வந்துவிட்டா. எனக்கு அழுகை எட்டிப் பரத்தாலும் புலம்பெயர் வாழ்வின் இயந்திரத்தனம் கட்டிப்போட்டது. அப்போதைய சூழ்நிலையை மாற்றப் பகிடியாகக் கதைத்துக் கொண்டிருந்தாலும் நான் சொல்லாமல் கொள்ளாமல் வந்து இறங்கியதன் கோபம் அக்காவின் முகத்தில் அப்படியே தெரிந்தது. இரண்டாவது அக்காவோ தனக்கே உரிய பாணியில்

"அப்பன் எங்களத்தான் நீ முதல்ல பாக்கவேணுமெண்டு எழுத்துக்கண்டியோ, பாத்தியே கடவுள் ஆமிக்காறன்ர ரூபத்தில வந்தார். இல்லாட்டிக்கு நீ எங்களுக்கு டிமிக்கி குடுத்திட்டு யாழ்ப்பாணம் போயிருப்பாய் ". என்றா.

நானோ பேத்தனமாகச் சிரித்தேன். நேரம் விடிய ஆறுமணியாகி இருந்தது. நான் ஆசை தீர நன்றாகக் குளித்து விட்டு அக்கா தந்த கோப்பியை குடித்துக் கொண்டே சுற்றுச் சூழலைப் பார்கப் போனேன். அக்காவின் வீட்டிற்குப் பின்னே இரம்பக்குளம் பரவியிருந்தது. அதில் நாரைகளும் கூளைகடாக்களும் இரைந்து கொண்டே இரை தேடின. பக்கத்தல் இருந்த முருங்கை மரத்தில் அணில்கள் கத்தியவாறே துள்ளி விளையாடின. பக்கத்தே இருந்த கோயில் மணி ஒலித்தது. இந்தக் காலமை நேரத்திலும் வெய்யில் தன்னுடைய குணத்தைக் காட்டயது. எனக்கு எல்லாமே வியப்பாகவும் புதினமாகவும் தெரிந்தது. பக்கத்தே இருந்த ஒரு மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. அந்தக் கூட்டில் அதன் கலைவண்ணம் தெரிந்தது. நாங்களும் தானே இப்படி ஒரு கூடு கட்டினோம். பாத்து பாத்துத் தானே கட்டினோம். எத்தினை பிராந்துகள் எங்கள் கூட்டை சுத்திக் குதறின. அக்காவின் குரல் என்னைக் குலைத்தது.

"உங்கை என்ன செய்யிறாய்? வாவென் சாப்பட".

"இப்பவோ? ஓம். வா வந்து சாப்படு".

இந்தக்காலமை என்னால சாப்பிடேலாது."

"9மணிக்குசாப்பிடுறன்."

"அத்தான் வரட்டாம் கதைக்க."

"போ வாறன்."

பத்தின சிகரட்டைத் தொடர்ந்தேன். அத்தானிடம் மனைவி எல்லாமே சொல்லி விட்டிருந்தா. அத்தானிடம் எங்கள் இருவரின் கடவுச்சீட்டையும் கொடுத்தேன். இருங்கோ வருகின்றேன் என்று அத்தான் உள்ளே போய் வெளிக்கிட்டு வந்தார். தொலைபேசியை எடுத்து எண்களை ஒத்தினார். பின்பு யாருடனோ சிங்களத்தல் கதைக்கத் தொடங்கினார். நானோ அணில் ஏற விட்ட நாய்போல் அவரைப் பார்த்தேன். அவருடைய கதை விழங்காவிட்டாலும் ஓர் இராணுவ அதிகாரியுடன் கதைக்கன்றார் என்பது விழங்கியது. யாருடன் கதைத்தாலும் கிரகங்கள் மாறப்போவதல்லை என்பது தெரிந்தும் அவரை அவர் போக்கில் விட்டேன். கதைத்து முடிந்தவுடன்,

"தம்பி நாங்கள் கொழும்புக்கு பக்ஸ் பண்ணி எடுப்பம்". என்றார்.

"நானும் வாறன் அத்தான் ".

என்று அவருடன் மோட்டசைக்களில் தொற்றிக்கொண்டேன். அத்தானுடன் வெளியில் போகும் பொழுது முட்டித் தயிர் கேட்டேன் . ஒன்றுக்கு இரண்டாக முட்டித் தயிர் வாங்கினோம். எனக்கு முட்டித் தயிர் என்றால் உயிர். அதுவும் பன்குளம் தயிர் என்றால் சொல்லிவேலையில்லை. இரண்டு மூன்று தரம் சீனி போட்டு தயிர் சாப்பிட்டேன்

அன்று பின்னரமே கிளியரன்ஸ் திரும்ப பக்ஸ் பண்ணியிருந்தனர். எனக்குத் தலைகால் புரியாத புழுகம். அக்கா இரவு நின்று விட்டு போ என்று அடம்பிடித்தா. என்னால் அவாவை மனம்நோக விட வரும்பவில்லை. அன்று இரவு அக்காவுடன் நிக்கத் தீர்மானித்தோம்.

எல்லோரும் பலகதைகளை கதைத்து படுக்க நேரமாகிவிட்டது. அத்தான் விடிய எழும்பி முதல் பஸ் எடுக்கவேணும் எண்டு சொல்லியிருந்தார். விடிய 4 மணிக்கே எழும்பி குளிக்கத்தோடங்கனேன். என்னுடைய அலப்பலில் எல்லோரும் எழும்பி விட்டனர். அக்கா இடியப்பமும் சம்பலும் சாப்பிட செய்து தந்தா. ஓட்டோ ஒன்றை அக்கா ஒழுங்கு செயதிருந்தா. ஓட்டோ எங்களை ஏற்றிக் கொண்டு வவுனியா பஸ் நிலயத்திற்குச் சென்றது. நேரம் காலை 6 மணியாகி இருந்தது. அத்தான் மோட்டச்சைக்கிளில் ஓட்டோக்குப் பின்னால் எங்களை

வழியனுப்ப வந்தார். விடிய 6.30 இ.போ.சா பஸ் எங்களைச் சுமந்து பரித்தித்துறை நோக்கி பறப்படத் தயாரானது.

தொடரும்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கனான்க் குருவிக் கூடு தூங்கக் கண்டான் மரத்திலே! தொடருங்கள் வாழ்த்துக்கள்!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாசிக்க ஆவலாகவும் அடுத்து என்ன என அறியவும் ஆவலாகவு மிருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அழுகை எட்டிப் பரத்தாலும் புலம்பெயர் வாழ்வின் இயந்திரத்தனம் கட்டிப்போட்டது

உண்மை. அழாமல் இருந்து நெஞ்சுவலியை வாங்காவிட்டால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உங்கள் நிலை தான் கோமகன்! ஐந்து சகோதரர்களுடன் பிறந்த எனக்கு, அவர்களது ஒரு கலியாணப் படத்திலும் நிற்கக் கொடுத்து வைக்கவில்லை!

யாழ் நகரில் இருந்த, அவர்களுக்காகக் கட்டிக் கொடுக்கப் பட்ட வீடுகளின் மீது, சிங்கள விமானங்கள் குண்டு வீசியதால் அவையும் சேதமடைந்தும், உடைந்தும் போயின!

ஆயினும் உங்கள் கதையை வாசிக்கும் போது, எம்மைப் போல் பலர் இருக்கின்றார்கள் என்பதை அறிய, கண்கள் கலங்குகின்றன!

உங்களைப் போன்ற வலிமையான மனது எனக்கு இல்லைப் போலும்!!! தொடர்ந்து எழுதுங்கள்!!!

கோமகன் சும்மா இருக்கும் என்னை உசுப்பேத்துகிறீர்கள்.ஏனெனில் நான் வாழ்ந்த இடம் பள்ளி பருவம் எல்லாம் வவுனிக்குளம்.இதில் உள்ள ஒரு வசனம் என் இளமை பருவத்திற்கு அழைத்து சென்று விட்டது.இனி எத்தனை நாட்களுக்கு இந்த திரை ஓடுமோ தெரியாது.இருந்தாலும் பரவாயில்லை.உங்கள் மர்ம தேச பயணம் தொடரட்டும். என்னை பாதித்த வசனம்:-அதில் நாரைகளும் கூளைகடாக்களும் இரைந்து கொண்டே இரை தேடின.பக்கத்தே இருந்த ஒரு மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. அந்தக் கூட்டில் அதன் கலைவண்ணம் தெரிந்தது. நாங்களும் தானே இப்படி ஒரு கூடு கட்டினோம். பாத்து பாத்துத் தானே கட்டினோம். எத்தினை பிராந்துகள் எங்கள் கூட்டை சுத்திக் குதறின.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.