Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அவள் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனத்திற்கு ஏன் இந்தநிலை,எம்மை காக்க ஒருத்தரும் இல்லையா என்று எண்ணிக்கொண்டு வானொலியை ஒன் செய்தேன் .b.b.c தமிழோசையில் செய்தி போய்கொண்டிருந்தது."சிறிலங்காவில் இரு இராணுவத்தினர் சுட்டுக்கொலை, விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் இவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாலும் அதன் இராணுவத்தாலும் நடாத்தபடும் அநியாயத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி தனியாக பிரிந்து செல்ல போவதாக அறிவித்துள்ளனர்".இந்த செய்தியை கேட்டவுடன் எனக்குள் ஒருவித மகிழ்ச்சி உணர்வு ஏற்பட்டது.

காலப்போக்கில் அதன் தலைவரும் எனைய போராளிகளும் செய்த போராட்டங்கள்,இராணுவத் தாக்குதல் தியாகங்கள் போன்றவற்றால் அந்த அமைப்பின் மீது அளவுகடந்த பிடிப்பை ஏற்படுத்தியது.இனக்கலவரங்கள் நேரில் கண்டபொழுதும்,பயந்து ஒடி ஒழித்த பொழுதும் அவர்கள் இருக்கிறார்கள் இவங்களுக்கு பாடம் புகட்ட என்ற எண்ணம்தான் தோண்றியது, நான் எம் இனத்தை காப்பற்ற போவோம் என்ற எண்ணம் துளியும் வரவில்லை.

வெளிநாடு வந்து செட்டில் ஆன பின்பு,தலைவரின் மீதும் அந்த அமைப்பின் மீதும் அதிக நம்பிக்கை வளர்த்துகொண்டேன்.எனக்கு நான் வாழும் நாட்டில் எவ்வித அரசியல்,மற்றும் வாழ்வாதார பிரச்சனைகள் இல்லாத பொழுதும்,நான் வாழ்ந்த தாயக மண்னின் மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் அதற்கு புலிகள் தான் சரியானவர்கள் ,என்ற எண்ணத்தில் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருந்தேன்.

அவர்களை அழித்தொழிப்பது என சர்வதேசமும்,சிறிலங்காவும் முடிவெடுத்து அதற்கு செயல்வடிவம் கொடுத்தனர்.புலத்திலிருந்து எம்மவர்கள் முடிந்தளவு போராடி பார்த்தனர் ,நானும் கலந்து கொண்டேன் .கலந்து கொள்வதால் நான் வாழும் நாட்டில் எனது உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படாது என்ற துணிவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

எல்லாம் முடிந்துவிட்டது என்றார்கள் .புலத்தில் இருக்கும் என்னுடைய மனம் ஏற்க மறுத்தது ,மறுக்கிறது.மனதில் பல கேள்விகள் இன்னும் விடை தெரியாமலும் ,தெரிந்தாலும் ஏற்கமுடியாமலும் தொடர்கிறது.

தலைவர் எங்கே?

"அவர் தப்பிப்போய்யிருப்பார்,உந்த இந்தியாகாரன் சல்லடைபோட்டு தேடும் பொழுதே அவங்களுக்கு டிமிக்கி கொடுத்து போட்டு போனவருக்கு உந்த சிங்களவனிட்ட ஆர்மிக்கு டிமிக்கு கொடுக்கிறது பெரிய வேளையில்லை அவர் தப்பி போய்யிட்டார் ...ஆனால் இனி வர மாட்டார்"

தலவைவரின் இறந்த உடலை சிங்களவன் காட்டினானே?

"இந்தியாவும் சிறிலங்காவும் சேர்ந்து எதோ கிராபிக் டிசைன் பண்ணி தலைவரின் உடம்பை காட்டுகிறான்கள் நான் நம்பமாட்டேன்"

அடுத்தது யார் ?

"சூரியன் ஒன்றுதான் இருக்கமுடியும்,அவரைப்போல இனிஒரு தலைவன் வரமுடியாது."

யார் இனி எம்மை வழிநடத்துவது?

"நாங்கள்தான் புலத்திலிருந்து அவர் காட்டிய வழியில் எமது போராட்டத்தை தொடரவேண்டும்"

புலிகளின் சொத்துக்களுக்கும் ,ஆயுதங்களுக்கும் என்ன நடந்திருக்கும்?

“அதைத்தானே சிங்களவன் அழிச்சுப்போட்டான்.புலத்தில இருக்கிற சொத்துக்களை சிலர் விளையாடிப்போட்டினம்.மொத்ததில் புலிகளே அழிஞ்சு போயிட்டினம் இனி சொத்துக்கள் இருந்துதான் என்ன இல்லாட்டித்தான் என்ன.....”

பயங்கரவாதிகள் என்று சொல்லுகிறார்களே.. !.. ?

“இல்லை அவர்கள் விடுதலை போராளிகள்.ஏகாதிபத்திகள்,சோசலிஸ்ட்கள்,கம்யுனிட்ஸ்கள்,ஒட்டுக்குழுக்கள்,பிராந்திய அரசுகள்,புத்திஜீவிகள்,முதலாளிகள்,எழுத்தாளர்கள் இன்னும் பல சித்தாந்த வாதிகள் எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை ,என்ட இனம் அழியும் பொழுது துணிந்து நின்று தங்களது உயிரை தியாகம் பண்ணி போராடிய உத்தம மாவீரர்கள்...”

இறுதிமரியாதை செலுத்துவதா?

"இறக்காத ஒருவருக்கு எப்படி மரியாதை செலுத்துவது"

மனம் ஒரு குழப்ப நிலையில் இருந்து பல கேள்விகளை எழுப்பியது விடை தெரியாமல் பல கேள்விகள் காலப்போக்கில் மறைந்து போயின.சில கேள்விகளுக்கு எனக்கு சாதகமான பதில்களை நானே தெரிவுசெய்து மகிழ்ச்சியும் அடைந்தேன்.

நடந்தவை எல்லாம் மறந்து அபிவிருத்தி என்ற கோஷத்தில் வருடத்திற்கு 20 டொலர் அன்பளிப்பு செய்து மீண்டும் தாயக மக்களுக்கு உதவுகிறேன் என்ற எண்ணத்தில் காலத்தை ஒட்டிகொண்டிருந்தேன்.

அண்மையில் தொலைபேசியில் சின்னம்மா "தம்பி சாய்பாபா சமாதியாகிவிட்டார் "

எப்ப செத்தவர் என்றேன் "சாகவில்ல சாமாதியடைந்து விட்டார், எங்க உன்ட மனிசி" என ஆத்திரத்துடனும் அழுகையுடனும் கேட்டார் .வெளியில் போய்விட்டா வந்தவுடன் சொல்லுகிறேன் என்றேன்.பதிலுக்கு காத்திராமல் தொலைபேசியை துண்டித்துகொண்டா.

மனைவி வரும் பொழுதே மூட் அவுட்டாகி வந்தா."என்ன ஒரு மாதிரியாக இருக்கிறீர் ",பாபா சமாதியாகிவிட்டார் என விக்கலும் அழுகையுமாக சொன்னால்,"மனிதனாக பிறந்தால் சாகத்தானே வேணும்" என்றேன்.

அவர் மனிதன் அல்ல கடவுள் ,சுவாமி இறக்கவில்லை உடம்பு சமாதியாகியிட்டது ,அவர் அருவமாக இருந்து இனி எங்களை எல்லாம் காப்பாற்றுவார்.

எனக்குள் சில கேள்விகள் எழ பதிலை நான் தேடாமல் சம்பந்தப்பட்டதரப்பிடம் எதிர்பார்த்தேன்.

அடுத்தது யார்?

"சுவாமி சொன்னவர் பிறேம் சாயியாக அவதரிப்பேன் என்று"

யார் இனி உங்களை வழிநடத்துவது?

" பாபா எங்களுக்கு நல்ல வழிகாட்டி தந்திருக்கிறார் அதன்படி நாங்கள் நடப்போம் "

அந்த அமைப்பினரின் சொத்துக்களை யார் நிர்வாகிக்க போகிறார்கள்?,எல்லோரும் தங்களுக்கு தேவையானதை சுருட்டி கொள்வினம்...!

"புட்டபத்தியில் உள்ள சாய் நிர்வாகத்தினர் அதை எல்லாம் நல்ல வடிவாக பார்த்துக்கொள்வினம்,உதுகளைப்பற்றி நீங்கள் ஏன் பெரிதாக அலட்டி கொள்கிறீர்கள்.,உங்களுக்குத்தானே பாபா என்றால் பிடிக்காதே,பிறகு ஏன் அவர்களின் சொத்துக்களையும் எதிர்காலத்தைபற்றியும் கவலைப்படுகிறீர்கள்!"

இவரை கள்ளச்சாமி,மந்திரவாதி என்று சொல்லுகிறார்கள் உண்மையோ?

"உங்களை மாதிரி ஞானசூணியங்கள் ,நாத்திகவாதிகள்,கடவுள் பக்தி அற்றோர்,புறம்போக்குகள் ,படிப்பறிவு அற்றோர்கள் அப்படித்தான் சொல்லுவினம்.ஆனால் அவர் ஒரு ஆத்மீகவாதி.மனிதனாக பிறந்த எங்களுக்கு விடுதலை வேணும் என்று நாங்கள் பாபாவை வழிபாடு செய்தனாங்கள்,ஆத்மீக விடுதலை,அதாவது இனிமேல் இந்த உலகில் பிறவி எடுக்காமல் விடுதலை பெற வேண்டும் உலக பற்றிலிருந்து விடுதலை .அதற்காக பாபாவை வழிபாடு செய்தோம் ,செய்கிறோம்."

மாடாமாளிகையிலும்,பேண்ஸ் காரிலும் ஒடிக்கொண்டு உலக பற்றிலிருந்து உனக்கு விடுதலை வேணும் என நீயும்,அதேபோல் நானும் புலத்திலிருந்து தாயகமக்களுக்கு விதலை வேணும் என்று ........

நாங்கள் இருவரும் தேடும் விடுதலை கிடைக்குமோ தெரியாது ஆனால் உதை பற்றி தொடர்ந்து விவாதித்தால் ,எனக்கும் உனக்கும் அடிபாடுவந்து கோர்ட் விடுதலை தந்திடும் போலகிடக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,; வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது என்பது ஒரு கலை!

அந்த வாழைப் பழத்திற்கே அதற்குத் தெரியாமல் ஊசி ஏற்றுபவர் நீங்கள்!

அதாவது இனிமேல் இந்த உலகில் பிறவி எடுக்காமல் விடுதலை பெற வேண்டும் உலக பற்றிலிருந்து விடுதலை .அதற்காக பாபாவை வழிபாடு செய்தோம் ,செய்கிறோம்."

உங்கள் துணைவியாரின் ஆன்மீக முடிவில் உங்கள் பங்களிப்பு கட்டாயம் இருந்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்கள் கஸ்டப்பட்டு உழைத்து காசை மட்டும் அனுப்பிப் போட்டு வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்று புத்தன் சொல்கிறார் ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துணைவியாரின் ஆன்மீக முடிவில் உங்கள் பங்களிப்பு கட்டாயம் இருந்திருக்கும்!

நன்றிகள் புங்கையூரான்.....நிச்சமாக பங்களிப்புண்டு இல்லாவிடில் குடும்ப வண்டில் இடையில் நின்றுவிடும் என்ற பயம் ஒரு காரணம். :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்கள் கஸ்டப்பட்டு உழைத்து காசை மட்டும் அனுப்பிப் போட்டு வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்று புத்தன் சொல்கிறார் ^_^

நன்றிகள் ரதி

நிச்சமாக அந்த கருத்தை நான் இங்கு முன் வைக்க வில்லை....சிட்னியிலிருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகை ஆசிரியர் வானோலி யில் நேற்று பேட்டி அளித்திருந்தார் இந்த வார பத்திரிகை வெளிவராது காரணம் பணப்பற்றாக்குறை என்று....

நான் எல்லாம் சுயநலவாதிகள் என்னுடைய தேவைகள் எல்லாம் முடிவடைந்த பிறகுதான் ...மக்கள் தாயகம் என்று சிந்திப்போம் உருப்படியாக ஒன்று செய்யமாட்டோம் ..அதை வைத்து இந்த கிறுக்களை செய்தனான் .

உண்மையிலயே புலத்திலிருந்து உதவி செய்பர்கள் இருக்கிறார்கள் ...எண்ணிக்கயில் மிகவும் குறைவு

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தெளிவான பதிலுக்கு நன்றி புத்தன்...என் பதில் மனதை நோகடித்து இருந்தால் மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தெளிவான பதிலுக்கு நன்றி புத்தன்...என் பதில் மனதை நோகடித்து இருந்தால் மன்னிக்கவும்.

இது ஒரு கருத்துக்களம் தானே ...நன்றிகள் இதுக்கு போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டு

  • கருத்துக்கள உறவுகள்

புட்டபர்த்திக்கு போகிற காசை தாயகத்துக்கு உதவினால் அதிக புண்ணியம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மனிதன் அல்ல கடவுள் ,சுவாமி இறக்கவில்லை உடம்பு சமாதியாகியிட்டது ,அவர் அருவமாக இருந்து இனி எங்களை எல்லாம் காப்பாற்றுவார்.

அருகில் உள்ள நாட்டில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்கள்.அப்போ கடவுள் பாபா வாய் மூடி மௌனியானதேனோ??. ஒரு வேளை இந்தியர்கள் தான் கடவுளின் பிள்ளைகள் என நினைத்தாரோ??

  • கருத்துக்கள உறவுகள்

புத்து யார் சொல்லி என்ன பயன்.உங்கள் கிறுக்கலுக்கு நன்றி :)

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பன் ஒருவன் இன்னும் சில நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தான், அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு வெள்ளை இனத்தவர், அனேகமாக அவனுடன் தொலை பேசியிலே தொடர்புகள் காணப்பட்டது . நேரப்பற்றாக்குறை ஒரு காரணம் அந்த வீட்டில் ஒரு எனது நண்பர்களின் வயதை விட அதிகமான ஒருவர் வீட்டின் ஒரு நிழல் நிர்வாகம் செய்து வந்தார்,

தொலைபேசி அழைப்புகளிற்கு ஆங்கிலத்தில் பதலளிக்க வேண்டும் என எல்லோருக்கும் கூறியிருந்தார், ஏனெனில் அந்த வீட்டின் உரிமையாளருக்கு வரும் தொலை பேசி அழைப்புகள் காரணம் , அதையே அந்த அண்ணாவும் கடைப்பிடித்தார் , அதிகமாக தொலைபேசியை பதிலளிப்பவர் அவர்தான் அவரது காலை வணக்கம் மட்டும் புரியும் அதற்கு பின் அவர் பேசுவது புரிவதில்லை அதனால் நான் உடனடியாக தமிழிலேயே உரையாடுவேன்

இதை பற்றி எனது நண்பன் அவரிடம் சொல்லியிருக்கிறான்

எந்த மொழியும் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு பேசுபவருக்கு புரிய வேண்டும் ஆங்கிலேயரின் பாணி எமக்கு புரியவில்லை என்பதற்காக புரியாத விதமாக பேசுவதுதான் சிறந்த ஆங்கில பேச்சாகாது,

கலை கலைக்காக அல்ல கலை மக்களுக்காக, இங்க இணைக்கப்படுகின்ற சில கதைகள் எனக்கு புரியவில்லை ,

ஆனால் அதை படைத்தவர்கள் மிகச்சிறந்தத எழுத்தாளர்கள்.

உங்கள் கதை என்னை பொறுத்தவரை மிகச்சிறந்தத கதை, என் மனதில் மிக சிறந்த கதாசிரியராக உங்களை எனக்கு தோன்றுகிறது,i

தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக பெரிய காப்பியங்கள் எல்லாம் தோன்றி மறைந்ததன ஆனால் சமுக ஒழுக்கம் தடம் புரண்டு தமிழர் சிக்கலில் இருந்த்த சங்க மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறள் காலத்தால் அழியாது உலகெங்கும் அது பரவியுள்ளது.

இன்றைய தமிழன் நிலை இது தான் புலம் பெயர் தமிழர்கள் சமூகத்தொண்டு என்பது இந்தியாவில் வீட்டில் இருக்கும் மேல்தட்டு பெண்கள் காரில் சென்று சமூகத்தொண்டு செய்வது போன்ற ஒரு பொழுது போக்கு அம்சம் ஆகி விட்டது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நலன்கள் பணம்,புகழ், அரசியல் இப்படி நீண்டு கொண்டு செல்லும்.

இருப்பினும் நெல்லுக்கிறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் போயி சேர்த்த மாதிரி இங்கே புல்லுக்கிரைக்கும் நீர் கொஞ்சம் நெல்லுக்கு போகிறது, அதை நாம் தடுக்க வேண்டாமே

மேலும் தொடர்ந்தது எழுதுங்கள்,உங்கள் எழுத்து வெறும் கிறுக்கல்கள் அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே அருமை புத்தன் அண்ணா உங்களுக்கு ஒரு பச்சை :) .

ஒரு எழுத்தாளருக்குள்ள பண்புகளில் அடக்கம் முக்கியமானது.அது உங்களிடம் நிறையவே உள்ளது புத்தன். தொடர்ந்து கிறுக்கி எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டபர்த்திக்கு போகிற காசை தாயகத்துக்கு உதவினால் அதிக புண்ணியம் கிடைக்கும்.

இப்படி சிந்திப்பதே குற்றம் என பாபா டிவோட்டிஸ் நினைக்கினம்...அப்பு....

அருகில் உள்ள நாட்டில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்கள்.அப்போ கடவுள் பாபா வாய் மூடி மௌனியானதேனோ??. ஒரு வேளை இந்தியர்கள் தான் கடவுளின் பிள்ளைகள் என நினைத்தாரோ??

,,,இந்திய பிராமணர்கள்தான் கடவுளின் பிள்ளைகள் என நினைத்திருக்ககூடும் , நன்றிகள் நுனா

புத்து யார் சொல்லி என்ன பயன்.உங்கள் கிறுக்கலுக்கு நன்றி :)

உங்கள் கருத்துக்கு நன்றிகள் சஜிவன்

இன்றைய தமிழன் நிலை இது தான் புலம் பெயர் தமிழர்கள் சமூகத்தொண்டு என்பது இந்தியாவில் வீட்டில் இருக்கும் மேல்தட்டு பெண்கள் காரில் சென்று சமூகத்தொண்டு செய்வது போன்ற ஒரு பொழுது போக்கு அம்சம் ஆகி விட்டது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நலன்கள் பணம்,புகழ், அரசியல் இப்படி நீண்டு கொண்டு செல்லும்.

இருப்பினும் நெல்லுக்கிறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் போயி சேர்த்த மாதிரி இங்கே புல்லுக்கிரைக்கும் நீர் கொஞ்சம் நெல்லுக்கு போகிறது, அதை நாம் தடுக்க வேண்டாமே

மேலும் தொடர்ந்தது எழுதுங்கள்,உங்கள் எழுத்து வெறும் கிறுக்கல்கள் அல்ல .

நன்றிகள் வசி, நீங்கள் சொல்வதுதான் சரி ,இன்றைய தமிழன் நிலை இது தான் புலம் பெயர் தமிழர்கள் சமூகத்தொண்டு என்பது இந்தியாவில் வீட்டில் இருக்கும் மேல்தட்டு பெண்கள் காரில் சென்று சமூகத்தொண்டு செய்வது போன்ற ஒரு பொழுது போக்கு அம்சம் ஆகி விட்டது

வழமை போலவே அருமை புத்தன் அண்ணா உங்களுக்கு ஒரு பச்சை :) .

பச்சைக்கு நன்றிகள் தும்பளையான்

ஒரு எழுத்தாளருக்குள்ள பண்புகளில் அடக்கம் முக்கியமானது.அது உங்களிடம் நிறையவே உள்ளது புத்தன். தொடர்ந்து கிறுக்கி எழுதுங்கள்.

தொடர்ந்து கிறுக்க சொன்னமைக்கு நன்றிகள் கோமகன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபா ஆசிரமத்தில் மேலும் தங்க நகைகள்: அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிப்பு

[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 07:14.37 AM GMT +05:30 ]

புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கடந்த ஏப்ரல் மாதம் 24 ம் திகதி மரணம் அடைந்தார்.

அவர் வசித்து வந்த ஆசிரமத்தில் அவரது பிரத்யோக அறைகள் இருந்த பகுதி யஜுர் மந்திர் என்றழைக்கப்படுகிறது. கடந்த மாதம் அவரது பிரத்யோக அறைகளில் சிலவும், அவரது படுக்கை அறையும் திறந்து சோதித்து பார்க்கப்பட்டது. அந்த அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கிடைத்தன. லட்சக்கணக்கில் ரொக்கப் பணமும் கிடைத்தன. விலை உயர்ந்த வெள்ளிப் பொருட்களும் சாய்பாபா படுக்கை அறையில் இருந்தது. இதில் பெரும்பாலானவை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பரிசாக கொடுத்தவையாகும்.

இந்த நிலையில் நேற்று அனந்தபூர் மாவட்ட இணை கலெக்டர் அனிதா ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் யஜுர் மந்திரில் உள்ள 4 அறைகளை திறந்து பார்த்தனர். சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் இந்த சோதனை நடந்தது. இந்த 4 அறைகளிலும் ஏராளமான தங்க, வைரநகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை மாலை தான் முடிந்தது. 4 அறைகளிலும் எடுக்கப்பட்ட தங்க, வைர நகைகள் மாலை 6 மணிக்கு கணக்கீடு செய்யப்பட்டது. அந்த நகைகளின் மதிப்பு ரூ.77 லட்சமாகும். 116 கிலோ வெள்ளி பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. நகைகளில் கணிசமான அளவுக்கு தங்கத் தாலி இருந்தது. பக்தர்களுக்கு கொடுப்பதற்காக சாய்பாபா அவற்றை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று கண்டெடுக்கப்பட்ட வைர நகைகளில் குறிப்பிட்ட ஒரு மோதிரம் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தது. அந்த மோதிரத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று தெரியவந்துள்ளது

நன்றிகள் indianews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.