Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்கள் எங்கே??????????????

இவர்கள் எங்கே?????????????? 14 members have voted

  1. 1. இவர்கள் எங்கே??????????????

    • யார் இவர்கள், என்ன செய்கிறார்கள்?
    • இவர்களை அறிய விரும்பவில்லை?
      0
    • செய்ய முடியாமல் ஒதுங்கி விட்டார்கள்?
      0
    • என்னென்ன செய்வது என்று தெரியாமல் ஒழிந்து விட்டார்கள்?
    • இவர்கள் நன்றாக உறங்குகின்றார்கள்?
    • இயக்குபவர்களினால், இவர்களின் கைகள்/வாய்ககள் க்ட்டப்பட்டு/மூடப்பட்டு விட்டன?
    • இவர்கள் சிங்களத்தினால் கடத்தப்பட்டிருக்கலாம்?
    • இவர்கள் சிங்களத்திடம் சரணாகதி அடைந்திருக்கலாம்?
    • தயவு செய்து கண்டு பிடித்து, உற்சாகப்படுத்தி, உறுதியாக செயற்பட சொல்லுங்கள்?

Please sign in or register to vote in this poll.

Featured Replies

tgteinny.jpg
  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களின் பின்பு, இந்த அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பினர் ஒருவரைத் தற்செயலாகச் சந்தித்தேன்!

இந்த முக்கியமான கால கட்டத்தில் எங்கே, உங்கள் செயல்பாடுகளை அவ்வளவு காணவில்லை என்று கேட்டேன்!

தாங்கள் திரை மறைவாகப் பல காரியங்கள் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்!

உதாரணம் ஒன்று கேட்டேன்!

பாதிக்கப் பட்ட உறுப்பினர்களுக்குப் பண உதவிகள் இரகசியமான முறையில் செய்யப் பட்டு வருவதாகக் கூறினார்!

மற்றைய செயல் பாடுகள், எனக்குச் சொல்லக்கூடாத இரகசியங்களோ என்பது எனக்குத் தெரியாது, நெல்லை!!!

  • தொடங்கியவர்

... நேற்றைய தினம் என் தந்தையார் (தற்போது முழுநேரமாக எம்மவர்களின் வானொலி, தொலைக்காட்சிகளுக்கு முன் இருப்பவர்) கேட்டார் ... "எங்கே இந்த உருத்திரகுமாரின் நா.க.த.அக்கள்?, முன்பு சிலசமயங்களில் என்றாலும் வானொலி/தொலைக்காட்சியில் வந்து அதை செய்யப் போகிறோம்! இதை செய்யப் போகிறோம்! என்றெல்லாம் சொல்வார்கள். இப்போழுது காண/கேட்க கிடைப்பதே இல்லை!!!" ... என்றார். ... ஓஓ நானோ, தேடிப்பார்க்கிறேன், கேட்டுப்பார்க்கிறேன் என்று நமக்கிருக்கும் யாழில் .... தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் .... அறியத்தாருங்கள்!!!!!!!!!

அடையாள அட்டை இல்லாமல் இன்று ஈழத்தமிழினம் எதிர்கொள்ளும் பாரிய அவலத்தைப் பற்றி கதைப்பதற்காக அடுத்த அமர்விற்கு தயாராகிறார்கள்.

தயவு செய்து கண்டு பிடித்து, உற்சாகப்படுத்தி, உறுதியாக செயற்பட சொல்லுங்கள்

எதிர்வரும் 17ம் திகதிஇ ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் சர்வேந்திரா தர்மலிங்கம்

(சர்வே) அவர்களின் ph.ன ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்வாய்வானது புலம் பெயர் சமூகங்களின் (தமிழர்இசோமாலியர்) பொருளாதாரம்இ

கலாச்சாம் பற்றிய விடயங்களை ஆராய்கிறது.

இந் நிகழ்விற்கு கனடாவில் இருந்து டாக்டர் சேரன் உருத்திமூர்த்தியும்

கலந்து கொள்கிறார்.

ஆய்வுரை சமர்ப்பிக்கப்படும் போது எவரும் கலந்து கொள்ளலாம் என

பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்ட போது கூறப்பட்டது.

நேரம்இ காலம்:

17. தரn. 2011 10:30இ யுரனவைழசரைஅ 6இ நுடைநசவ ளுரனெவள hரள

  • கருத்துக்கள உறவுகள்

:( இது தேவையில்லாத கருத்துக்கணிப்பு.

நீங்களும் செய்யப்போவதில்லை, செய்பவர்களையும் விடுவதில்லை. உங்களுக்குச் சொல்லிக்கொண்டுதான் செய்யவேண்டும், அப்படிச் சொல்லாவிட்டால் அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்றுதான் அர்த்தமா??

நெல்லைய்யன், நீங்களுமா??

ரகுநாதனுக்கு ஒரு பச்சை, இது தான் யதார்த்தமான உண்மை சர்வதேச அரசியலில் எல்லம் திரை மறைவில் தான் நடக்கும் ஒண்டும் சொல்லிக்கொண்டு செய்யமாட்டர்கள், இது பல அறிவாளிக்ளுக்குத் தெரியும், ஆனால் மற்றவர்கள் மீது சேறு பூசுவதில் நாம் வல்லவர்க்ள் அல்லவா :o :o :o :o :o

  • தொடங்கியவர்

... முக்கிய அமைச்சர்களில் இருவர், நன்கு தெரிந்தவர்களே!!! என்ன செய்கிறார்கள்? எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள்? .. பலர் அறிவர்! ... மாதம் ஒருமுறை இங்குள்ள MOT Centre இல் அரசியல் செய்ய சந்திப்பௌ! சந்திக்க இடம் கொடுத்த MOT Centre முதலாளிதான் கூட கதைப்பாராம், கேட்டு விட்டு , வந்தவர்களும் கதைத்து விட்டு, ... சந்திப்பு முடிய, எல்லாவற்றையும் அங்கு விட்டு விட்டு போவதுதான் நடைபெறுகிரது!!

எவ்வளவு காலத்துக்கு ஏமாற்றப் போகிறார்கள்? கேட்டால் இரகசியமாக செய்கிறோம்!!!!!!!!! என்னய்யா ஆயுதப் போராட்டமோ செய்கிறீர்கள்? இல்லை நீங்கள் செய்வது யாரும் புரியார் என்று நினைக்கிறீர்களா??????

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எங்கே?

இங்கு வோட்டளித்து என்னை நானே தாழ்த்திகொள்ளவிரும்ப்பவில்லை.. இந்த நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்படும்போதே தெரியும் இது இந்தியாவின் அடுத்த விளையாட்டுத்தான் எண்டு..

நீங்களும் செய்யப்போவதில்லை, செய்பவர்களையும் விடுவதில்லை.

ரகுநாதன்... விளங்கித்தான் கதைக்கிறீர்களா...

செய்பவர்களயும் செய்யவிடாமல் தாங்களும் செய்யாலும் இருப்பது யார்?

பலர் ஒதுங்குவதுக்கு காரணம் ஏமாத்துபவர்களும்.. விளக்கம் குறைந்த அடிபொடிகளும்தான்.. :huh:

ரகுநாதனுக்கு ஒரு பச்சை, இது தான் யதார்த்தமான உண்மை சர்வதேச அரசியலில் எல்லம் திரை மறைவில் தான் நடக்கும் ஒண்டும் சொல்லிக்கொண்டு செய்யமாட்டர்கள், இது பல அறிவாளிக்ளுக்குத் தெரியும், ஆனால் மற்றவர்கள் மீது சேறு பூசுவதில் நாம் வல்லவர்க்ள் அல்லவா :o :o :o :o :o

இப்படித்தான் புலிகளும் சொன்னார்கள்.. கடைசியில் அங்கு ஒரு மட்டையும் இல்லை...

எல்லாற்ற தலையிலையும் முளகாய் அரைச்சிருக்கு எங்கட தலைமைத்துவம்.

:lol:

இப்படித்தான் புலிகளும் சொன்னார்கள்.. கடைசியில் அங்கு ஒரு மட்டையும் இல்லை...

எல்லாற்ற தலையிலையும் முளகாய் அரைச்சிருக்கு எங்கட தலைமைத்துவம்.

:lol:

உதுல இருந்து உங்கட அரசியல் அறிவு நல்லா விளங்குது, அது சரி உலக அரசியலை நீங்கள் ஒருக்கா ஒழுங்கா புரட்டிப் பாருங்கோ எல்லாம் புரியும்,

1986 இல சதாம் உசைன் கலாப்ஜாவில இரசாயனா குண்டை பொடச் சொல்லி கொடுத்த்வ்னே அன்றைய அமெரிக்கா பாதுகாப்புச் செயலாலர் ரம்ஸ்வெல்ட் அதே போல் அந்தக் குற்றதிற்காக தூக்கில் போடச் சொன்னதும் அதே பாதுகாப்புc செயலாலர் ரம்ஸ்வெல்ட் தான்.

1972இல் ஈஸ்ட் தீமோரை சுகார்ட்டோ ஆக்கிராமித்த போதொ அமெரிக்கா சும்மா இருந்தது, அதே போல் 1999 இல் அவர்கள் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தி த்னியாக பிரிந்த போதும் அமெரிக்கா சும்மா தான் இருந்த்து

1995 இல் ரட்கோ மிலாடிச்சிடம் பொஸ்னியார்களை ஒப்படைத்ததும் மேற்கு நாடுகள் தான் அதே போல் அவர்களை எல்லாம் சிட்டுத்தள்ளிய பின்னர் ஓடிப்போய் ஒப்பாரி வைத்ததும் இதே மேற்குலகம் தான்.

1992 - 2000 எமது தலைமையால் தடங்கல்கள் இல்லாமல் போராட்டர்த்தை முன்னெடுக்கக் கூடிய்தாக இருந்த்து ஆனால் புஷுடைய அடிப்படைவாத வலது சாரி அரசாங்கம் வந்த பின்னர் இந்தியாவுக்கு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை தங்கு தடை இன்றி முன்னெடுக்க இலகுவானது, இது தான் 2000 - 2009 வரை நடந்த்து.

உப்படி பல விஷயங்கள் இருக்கு அதை விட்டுப் போடு சும்மா கேலியும்` கிண்டலுமோ உமக்கு

உப்படி பல விஷயங்கள் இருக்கு அதை விட்டுப் போடு சும்மா கேலியும்` கிண்டலுமோ உமக்கு

அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.. நாம சராசரி குடிமகன் சார்... கையில காசு வாயில தோசை.. இல்லாட்டி போயிகீன்னே இருக்கனும்..

வந்திட்டாங்கள் மனுசரின்ட நேரத்த மினெக்கெடுத்த... :huh:

  • தொடங்கியவர்

... யார் இவர்கள்>? .. புலம்பெயர் நாடெங்கிலும், எம்மால், எமக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்! ... அவர்கள் கையைகட்டி/வாயை மூடிக் கொண்டிருக்கும் போது பார்த்துக் கொண்ருப்போமாயின் ... நாம் இவர்களை தேர்ந்தெடுத்ததற்கான செயற்பாடுகளும் இல்லாமல் போய் விடும்! அதற்கு மேல் இவர்கள் வாழாவெட்டிகளாக தொடர்ந்திருப்பார்களாயின், ஏன் தேர்ந்தெடுத்தோம்?

எங்கள் எதிர்பார்ப்புகள், அதிருப்பதிகளை தெரிவிக்காது விடின் ... எங்களின் அமைப்பு வைக்கப்படும் விமர்சனங்களால், அமைப்பின் மேல் மக்களுக்கு விரக்தி வரும், அவர்களின் செயற்பாடுகள் பாதிப்புறும் ... போன்ற காரணங்களை கூறி ... நிரந்ததரமாகஓர் அசையாநிலைக்கு இவர்களை இட்டுச் சென்றது, எம் தலையிலேயே வந்தும் விழும்!!!

... இன்று நா.க.த.அ தொடங்கப்பட்டு வருடம் தாண்டியிருக்கிறது. அண்மை வரை, இவர்கள் உட்பிரட்சனைகளுக்கு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய ... அது தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை ... ஏதாவது ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை சொல்லட்டும்????????

இவர்களால் என்ன செய்ய முடியும்? தமிழீழம் தனியரசு என்ற கருத்துக்கு குழு வாத அடிப்படையில் சொந்தம் கொண்டாட முடியும் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. இதே கருத்தோடு மட்டும் உடன்பாடு உடையவர்கள் இவர்கள் மீது எதிர்பார்பை வளர்ப்பதும் முரண்படுவதும் விமர்சிப்பதும் ஆதரிப்பதும் என்று இந்தக் கருத்தை சுற்றி காலத்தை ஓட்டுவது மட்டுமே நடக்கும். செயல் வடிவம் பெறுவதற்கு அடிப்படை எதுவும் இல்லை. வீடு கட்ட வேண்டும் என்ற கனவு ஒருவரிடம் இருக்கின்றது இடமில்லை திட்டமிடல் இல்லை கட்டுவதற்கு ஆட்கள் இல்லை என்னும் எத்தனையோ இல்லை இந்த நிலையில் திடீர் திடீர் என்று எங்கே வீடு எங்கே கட்டுகின்றீர்கள் என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டால் என்னத்தை சொல்ல முடியும். ரகசியமாக கட்டுகின்றோம் முடிந்ததும் எல்லோருக்கும் சொல்லுவோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

செயல் வடிவத்துக்கான அடிப்படையை தகர்த்தெறிகின்றவர்களின் கருத்து ஒடுக்குபவனுக்கே சாதகமானது. நாடுகடந்த அரசு என்ற கருத்தும் அது சார்ந்த குழுவாதமும் சிங்களவர்களுக்கு பெரும் நன்மையை தேடித்தந்துவிட்டது. எமது கஸ்டங்களுக்கு சனி காரணம் குரு காரணம் என்று எமக்கு வெளியே கரணங்களை தேடுவதும் தீர்வுகளை தேடுவதுமாக வளர்ந்த சமூகம் அதே பணியிலேயே ஒவ்வொன்றையும் அணுகுகின்றது. ந கா அரசின் மீது எதிர்பார்ப்பு ஜெயலலிதா மீது எதிர்பார்ப்பு சனல் 4 மீது எதிர்பர்ப்பு. இவ்வாறான எதிர்பார்ப்புகளால் போர்க்குற்றம் என்ற துருப்புச் சீட்டும் அதை ஆதராமாக பிடித்துக்கொண்டு நீதி கேட்ட போராட்டங்களும் காணாமல் போனது. சிங்களப் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கான பாதுகாப்பு குறித்த மூன்றாம் தரப்பு கண்காணிப்பு அவசியம் என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்த முடியாமல் போனது. தாயகத்துக்கும் அரசியல் ரீதியாக போராடக் கூடிய புலம்பெயர் மக்களுக்குமான அரசியல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டது. மனிதாபிமான உதவிகள் துண்டிக்கப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் சிங்களப்பேரினவாதத்துக்கு மிகச் சாதகமாகவே இது இருக்கின்றது. மகிந்தனும் கோத்தபாயவும் குற்றவாளி என்று சிங்களப்பேரினவாதத்துடன் தழுவிக்கொள்கின்றார்கள் உலக மனிதாபிமான வியாபரிகள். இவர்களின் பின்னால் செல்லுங்கள் என்று மீண்டும் மீண்டும் தமது விரல்களால் தமது கண்களை குத்தி குருடாக்குவது மட்டுமே தமிழர்களை வழிநடத்தும் குழுவாதச் சக்திகளின் முயற்ச்சியாக இருக்கின்றது. இந்த நிலை என்றும் மாறாது.

நாங்களும் இவர்களில் ஒருவர்தான்.

குறை நிறைகளை, சரிகள் பிழைகளை இந்த ஜனநாயக அமைப்பின் உள்ளே இருந்து சரியான பாதையில் நடாத்த வேண்டும். வெளியே இருந்து கல்லெறிவது எம்மை இன்னும் பலவீனமே ஆக்கும்.

akootha சொல்வது சாரியே...

இப்படியே போனால் கடைசியில் ஜோன் கிளீஸ்ஸின் நிலைமை தான் உங்களுக்கும் நெல்லையான்... ^_^

  • தொடங்கியவர்

நாங்களும் இவர்களில் ஒருவர்தான்.

குறை நிறைகளை, சரிகள் பிழைகளை இந்த ஜனநாயக அமைப்பின் உள்ளே இருந்து சரியான பாதையில் நடாத்த வேண்டும். வெளியே இருந்து கல்லெறிவது எம்மை இன்னும் பலவீனமே ஆக்கும்.

... மீண்டும் மீண்டும் ... அதே தவறுகள் ... நாம் எம்மை சுய விமர்சனங்களுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து செய்பவை சரியென்ற கோணத்தில் செல்வோமாயின் ... இறுதி முள்ளிவாய்க்காலாகவே அமைந்து விடும் ... எம் சரி பிழைகளை தொடர்ந்து சுட்டிக் காட்டாமல் இருபோமாயின் .. நாம் செய்வதெலாம் சரியென்ற சிந்தனையில் ... மீண்டும் மீண்டும் தவறிளைக்க தூண்டியும் விடுகிறோம்!!

... சரி உள்ளிருந்து??? ... யாரை அணுகுவது? யாரும் அணுகுகிறார்களா? உள்ளுக்குள் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றனவா? ...???? ... சரி ஆயுதப்போராட்டம்!! வெளியே எதனையும் சொல்ல முடியாது! விமர்சிக்க முடியாது! ... என்று காரணங்கள். ஆனால் இப்போது செய்பவைகளை, செய்ய வேண்டியவைகள், செய்தவைகளை சொல்ல தயக்கம் ஏன்? சரி ஒன்று இரண்டு மறைமுகமாகத்தான் செய்ய வேண்டும் ... எல்லாவற்றையுமா???? ... செய்பவைகள் சொல்ல முடியவில்லை என்பது ... செய்யாதவைகளை செய்தோம்/செய்கிறோம் என்று தப்பிப்பதற்கே!!!! ..

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை,

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற முதலாவது நாடுகடந்த அரசின் கூட்டத்திற்குப் போயிருந்தேன். அங்கு அவர்கள் இன்று செய்துவரும் பல திட்டங்கள் பற்றி எடுத்துசொல்லப்பட்டது. தாயகத்தில் இனக்கொலையின்போது துணைவர்களை இழந்த பெண்களுக்கான உதவி, முன்னாள்ப் போராளிகளுக்கான புணர்நிர்மானம், வெளிநாடுகளில் எமது நிலைப்பட்டை விளக்குதலும், எமது நியாயப்பாட்டை அவர்கள் ஏற்கப்பண்ணுவதும் ( இதன்போது தாம் பட்ட அனுபவங்களை அவகள் பகிர்ந்தும் கொண்டனர்), முக்கியமாக தென் சூடானுடனான உறவு, இங்கு தென்சூடானிய மருத்துவத்துறையில் ஈழத்தமிழர்களின் பங்களிப்புப் பற்றி தென்சூடான் அரசு விருப்பம் கொண்டிருப்பதையும், எமது செயல்ப் பிரிவொன்றை அங்கு அமைப்பதை விரும்புவதையும் குறிப்பிட்டிருந்தனர். இப்படிப் பல விடயங்கள் நடக்கின்றன.

இதுவரை அவர்கள் இயங்கமுடியாமைக்கான காரணத்தை யாவரும் அறிவோம். நெடியவ்னின் சொற்படி இயங்கும் "சனநாயகக் குழுவினர்" தொடர்ந்து அடம்பிடித்து வருவதால் அவர்களை எப்படியாவது ஒன்று சேர்த்துப் போகலாம் என்கிறமுயற்சிதான் இதுவரை நடைபெற்று வந்தது. ஆனால் தாம் பிடித்த கொம்பிற்கு மூன்றே மூன்று கால்கள் தான் என்று அவர்கள் தொடர்ந்தும் அடம் பிடிப்பதால் இப்போது அவர்கள் வந்தாலென்ன வராவிட்டாலென்ன நாம் இயங்குவதுதான் சரியென்கிற முடிவிற்கு வந்துவிட்டது நாடுகடந்த தமிழீழ அரசு. அதன் பணிகள் இனிமேல்த்தான் துடிப்புடன் இயங்கமுடியும்.

அதுசர், நாடுகடந்த அரசிடம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு நாம் என்ன செய்யப்போவதாக உத்தேசம்?? அதிலுள்ளவர்களுக்கு மட்டும்தான் தமீழீழமும் விடுதலையும் அவசிய்மா?? எமக்கு அதில் தொடர்பில்லையா?? நாம் இதுவரை என்ன செய்தோம் ( அவர்கள் என்ன செய்கிறார்கள், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்பதைத்தவிர??) ?

புலிகளுக்கும் இதுதான் நடந்தது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நாம் விசிலடித்துக்கொண்டிருந்ததன் விளைவுதான் இன்று நாம் அனுபவிப்பது. அதேகதி நாடுகடந்த அரசுக்கும் வரவேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

நாடுகடந்த அரசு ஏன் இன்னும் இயங்கவில்லை என்று கேட்கும் நாங்கள் இதுவரை அதனியக்கத்திற்கு என்ன உதவிகளைச் செய்திருக்கிறோம்?? நெடியவனின் எதிர்ப்பு ஒருபுறம், எங்களின் கேலிகளும் கொக்கரிப்புகளும் இன்னொருபுறம், இந்த லட்சணத்தில் அவர்கள் இயங்கவில்லையே என்கிற அங்கலாய்ப்பு??

நெல்லை, நீங்கள் தொடர்ந்து நா.க அரசை ஆதரித்து வந்தவர், நெடியவனின் குழுவின் அட்டகாசத்தை எதிர்த்து வந்தவர், இப்போது என்னவாயிற்று?? ஏனிந்த மாற்றம்? இவர்களும் இல்லையென்றால் யார் வந்து எமக்கு வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்??

... மீண்டும் மீண்டும் ... அதே தவறுகள் ... நாம் எம்மை சுய விமர்சனங்களுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து செய்பவை சரியென்ற கோணத்தில் செல்வோமாயின் ... இறுதி முள்ளிவாய்க்காலாகவே அமைந்து விடும் ... எம் சரி பிழைகளை தொடர்ந்து சுட்டிக் காட்டாமல் இருபோமாயின் .. நாம் செய்வதெலாம் சரியென்ற சிந்தனையில் ... மீண்டும் மீண்டும் தவறிளைக்க தூண்டியும் விடுகிறோம்!!

... சரி உள்ளிருந்து??? ... யாரை அணுகுவது? யாரும் அணுகுகிறார்களா? உள்ளுக்குள் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றனவா? ...???? ... சரி ஆயுதப்போராட்டம்!! வெளியே எதனையும் சொல்ல முடியாது! விமர்சிக்க முடியாது! ... என்று காரணங்கள். ஆனால் இப்போது செய்பவைகளை, செய்ய வேண்டியவைகள், செய்தவைகளை சொல்ல தயக்கம் ஏன்? சரி ஒன்று இரண்டு மறைமுகமாகத்தான் செய்ய வேண்டும் ... எல்லாவற்றையுமா???? ... செய்பவைகள் சொல்ல முடியவில்லை என்பது ... செய்யாதவைகளை செய்தோம்/செய்கிறோம் என்று தப்பிப்பதற்கே!!!! ..

நெல்லையன், உங்கள் ஏக்கம் நியாயமாக இருந்தாலும் நா.க. அரசினால் இப்போதைக்கு பெரிதாக எதையும் செய்ய முடியுமா என்பது சந்தேகம். இவர்களின் முதலாவது சவால் தமிழர்கள்தான்.

உள்ளிருந்து கல் எறிபவர்கள் சென்ற வாரம் பிரான்சில் கூடியுள்ளனர். இவர்களின் நோக்கம் என்ன ?

நாங்களும் இவர்களில் ஒருவர்தான்.

குறை நிறைகளை, சரிகள் பிழைகளை இந்த ஜனநாயக அமைப்பின் உள்ளே இருந்து சரியான பாதையில் நடாத்த வேண்டும். வெளியே இருந்து கல்லெறிவது எம்மை இன்னும் பலவீனமே ஆக்கும்.

கருத்துக்களை கல் எறிவதாக சித்தரிப்பதும் துரோகமாக முத்திரை குத்துவதையும் கடந்து செல்வது அவசியமானது.

இது ஒரு ஜனநாயக அமைப்புக் கிடையாது. அதற்கான அடிப்படையே இதற்குள் இல்லை. அமைப்புத் தொடங்கி ஒரு வருடத்தில் அதற்குள் இருந்து என்னுமொரு ஜனநாயக அணி பிரிந்து நிற்கின்றது ஒரு பக்கம். என்னுமொருபக்கம் இவ்வாறான ஒரு அணிக்குள் தமிழீழத்தின் ஒவ்வொரு பகுதியை சேர்ந்தவர்களும் பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் சமமாக அங்கம் வகிக்கவேண்டும். அவ்வாறான எந்த அம்சமும் இதற்குள் இல்லை. மத பிரதேசவாத பிளவுகள் நிறைந்த தமிழ்ச்சமூகத்தில் இந்த அம்சம் முக்கியமானது இல்லாத பட்சத்தில் மக்களை இனவாரியாக ஒருமுகப்படுத்த முடியாது. உருவாக்கத்திலேயே அதன் அப்பட்டமான தோல்வி வெளிப்படையாக இருக்கின்றது.

தனியரசு என்ற பிரிவினைவாதத்தை பிரகடனப்படுத்தும் இந்த அமைப்பு தாயக மக்களுடன் இணைந்து செயற்பட முடியாமல் முட்டுச் சந்தில் இன்று நிற்கின்றது. பிரிவினை கோரிய ஆயுதப்போராட்டம் படு மோசமாக தோல்வியடைந்த பின்னர் அதே பாணியில் அதே கருத்துடன் தொடர்ந்தால் தாயக மக்களுடன் சிங்களத்தை கடந்து இணைவது சாத்தியமில்லை என்பது தெரிந்தும் ஒரு பிரிவினைவாதத்தை பிரகடனப்படுத்தும் அமைப்பின் அவசியம் என்ன? தாயக மக்களுடன் இணைந்த அரசியல் கருத்தின்றி என்ன துரும்பை செய்ய முடியும்? பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை அல்லவா முதல் கட்டியிருக்கவேண்டும். மனிதாபிமான உதவிகள் செய்யும் ஒரு அமைப்பை நிறுவியிருப்பதன் ஊடாக இதை தாராளமாகச் செய்திருக்கலாம். இவ்வாறான கருத்தை பல முறை எழுதியிருக்கின்றேன். ஆனால் அவற்றை தகர்த்தெறிந்து தனியரசு நாடுகடந்த அரசு என்று புறப்பட்டு இன்று இந்தக் கருத்துடன் இருப்பதால் தாயக மக்களுக்கு தற்போது எதையும் செய்ய முடியாத சூழல் என்று முட்டுச் சந்தில் நிற்கின்றார்கள். இப்போது அல்ல எப்போதும் பிரிவினைவாதக் கருத்தடன் எதையும் செய்ய முடியாது.

செய்யக் கூடியது அவ்வப்போது வாக்கெடுப்பு நடத்துவது அறிக்கை விடுவது இரண்டுமே. இந்தக வாக்கெடுப்பு அது வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு தமிழீழ வாக்கெடுப்பு எதைச் செய்தாலும் அது சிங்களவர்களுக்கே சாதகமானது. மக்களை இனவாரியாக ஒருமுகப்படுத்தமுன் வாக்கெடுப்பு என்பது முட்டாள்தனத்தின் உச்சம்.

இவற்றைக் கடந்து புலம்பெயர் மக்களை ஒன்று திரட்டி ஒரு போர்க்குற்றத்திற்கு நீதி கேட்டு ஒரு போரட்டம். சிறையிடப்பட்ட மக்களை விடுவிக்கும் படியொரு போராட்டம். தமிழர் பகுதிகளுக்கு மூன்றாம் தரப்பு கண்காணிப்பை வலியுறுத்தி ஒரு போராட்டம். நீதியான ஒரு தீர்வை வலியுறுத்தி ஒரு போராட்டம் இவைகள் குறித்த ஒரு திட்டமிடல் ஏன் இல்லை? தாயக மக்களுடன் இணைந்து தான் எதையும் செய்ய முடியாது சரி புலத்து மக்களை ஒருங்கிணைத்து எதையாவது செய்யலாமல்லவா? அரசு அமைத்துவிட்டோம் முதலாம் இரண்டாம் அமர்வுகளை செய்கின்றோம் எல்லாம் அந்த மாதிரி போய்க்கொண்டிருக்கின்றது என்ற மக்கள் ஆ வெண்டு பார்த்துக்கொண்டிருக்கவோண்டும்.

யதார்த்தத்துக்கு றொம்பத்தூரம் விலகி வெளியில் இருப்பது மக்களல்ல மக்களை வழிநடத்த முற்படும் போர்வையில் அடயாளம் தேடும் குழுவாதம். மக்கள் கருத்துக்களோ அமைப்பை பலவீனப்படத்துவத்ல வழிநடத்தும் அமைப்புக்களே மக்களை பலவீனப்படுத்துகின்றது.

நெல்லையன், உங்கள் ஏக்கம் நியாயமாக இருந்தாலும் நா.க. அரசினால் இப்போதைக்கு பெரிதாக எதையும் செய்ய முடியுமா என்பது சந்தேகம். இவர்களின் முதலாவது சவால் தமிழர்கள்தான்.

உள்ளிருந்து கல் எறிபவர்கள் சென்ற வாரம் பிரான்சில் கூடியுள்ளனர். இவர்களின் நோக்கம் என்ன ?

சபாஷ் இது ஒரு சாரியான சொல்லாடல். சுயவிமர்சனம் என்ற போர்வையில் நிறையப்பேர் இவ்வாறுதான் செயல்படுகிறார்கள். கேடபதற்காக நிறையக் கேள்விகள் இருக்கின்றன. அவற்றைச் செய்து முடிப்பதற்குத்தான் ஆட்களில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் குறைநினைக்கவேண்டாம்

இதை வாசித்தபோது தப்பு யார்மேல் என்பது புலப்படுகிறது.

நாடுகடந்த அரசு என்று பெயரே தவிர அது ஒரு அரசல்ல. அதன் உறுப்பினர்கள் எம்மைப்போன்ற சாதாரணமானவர்னளே. அவர்களுக்கும் குடும்பம் வேலை ............. எல்லாமே உண்டு.

அந்தவகையில் இங்கு கருத்து எழுதியவர்கள் எவருக்கும் அவர்களைத்தெரிந்திருக்கவில்லை. அவர்களை சந்தித்து இதே கேள்வியை கேட்க நேரமில்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்து தமக்காக வேலைசெய்யணும். அதுவும் இலவசமாக என்று எதிர்பார்க்கின்றனர்.

பிரித்தானியாவிலுள்ள

நெல்லையனுக்கோ

தப்பிலிக்கோ

தமிழ் அரசுக்கோ

அவுஸ்ரேலியாவிலிருக்கும்

ரகுநாதனுக்கோ

பிரான்சிலிருக்கும்

இணையவனுக்கோ

அல்லது இங்கு சொல்லும் தத்துவங்களை அவர்களுக்கு சொல்ல சுகனுக்கோ

நேரமில்லை. அதற்கு முயற்சிக்கவுமில்லை.

ஆனால் அவர்களைக்கண்டால் இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் அவர்கள்உடனடிப்பதில் தரணும். பின்னர் அறிவிப்போமென்றாலும் அது தப்பு.

பிழை அவர்களிடமில்லை. எம்மிடமே.

இப்படி தனித்துவிடப்படுவோம் என்று தலைவரைப்போல் அவர்களும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசு என்று பெயரே தவிர அது ஒரு அரசல்ல. அதன் உறுப்பினர்கள் எம்மைப்போன்ற சாதாரணமானவர்னளே. அவர்களுக்கும் குடும்பம் வேலை ............. எல்லாமே உண்டு.

சாதாரணமானவர்கள் என்றால் எங்களைப் போல சாதாரணமானவர்களாக இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க ஏதோ செய்வோம் என்று ஒன்றை உருவாக்கி ஏதோ செய்கின்றார்கள். "நாய்க்கு ஏன் போர்த் தேங்காய்"!!

  • கருத்துக்கள உறவுகள்

உதுல இருந்து உங்கட அரசியல் அறிவு நல்லா விளங்குது, அது சரி உலக அரசியலை நீங்கள் ஒருக்கா ஒழுங்கா புரட்டிப் பாருங்கோ எல்லாம் புரியும்,

1986 இல சதாம் உசைன் கலாப்ஜாவில இரசாயனா குண்டை பொடச் சொல்லி கொடுத்த்வ்னே அன்றைய அமெரிக்கா பாதுகாப்புச் செயலாலர் ரம்ஸ்வெல்ட் அதே போல் அந்தக் குற்றதிற்காக தூக்கில் போடச் சொன்னதும் அதே பாதுகாப்புc செயலாலர் ரம்ஸ்வெல்ட் தான்.

1972இல் ஈஸ்ட் தீமோரை சுகார்ட்டோ ஆக்கிராமித்த போதொ அமெரிக்கா சும்மா இருந்தது, அதே போல் 1999 இல் அவர்கள் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தி த்னியாக பிரிந்த போதும் அமெரிக்கா சும்மா தான் இருந்த்து

1995 இல் ரட்கோ மிலாடிச்சிடம் பொஸ்னியார்களை ஒப்படைத்ததும் மேற்கு நாடுகள் தான் அதே போல் அவர்களை எல்லாம் சிட்டுத்தள்ளிய பின்னர் ஓடிப்போய் ஒப்பாரி வைத்ததும் இதே மேற்குலகம் தான்.

1992 - 2000 எமது தலைமையால் தடங்கல்கள் இல்லாமல் போராட்டர்த்தை முன்னெடுக்கக் கூடிய்தாக இருந்த்து ஆனால் புஷுடைய அடிப்படைவாத வலது சாரி அரசாங்கம் வந்த பின்னர் இந்தியாவுக்கு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை தங்கு தடை இன்றி முன்னெடுக்க இலகுவானது, இது தான் 2000 - 2009 வரை நடந்த்து.

உப்படி பல விஷயங்கள் இருக்கு அதை விட்டுப் போடு சும்மா கேலியும்` கிண்டலுமோ உமக்கு

குறைந்தபட்சம் ஐந்தறிவு உள்ளவர்களுடன் கலந்துரையாட வேண்டிய வரிகள்.............

(???)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.