Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி பேணி வருகிறார்

Featured Replies

பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி பேணி வருகிறார் : அஸ்வர் எம்.பி.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனித்து பேணிவருகிறார் என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதமொன்றின்போது, உரையாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி., அல் கயீடா தலைவர் ஒசாமா பின் லாடனுடன் சேர்த்து அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதைப் போலல்லாமல், பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் கவனித்து பேணப்படுகின்றனர் என்றார்.

இதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனிதாபிமானத் தன்மை என அஸ்வர் எம்.பி கூறினார்.

இஸ்ரேலில் மனித உரிமைகள் மீறப்படுவதகாக ஐ.நா. அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்நிலைமையை சீராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட இஸ்ரேலை இலங்கை பின்பற்ற வேண்டுமென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

அவரின் கூற்றுக்கு பதிலளிக்கும்போதே ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/23485-2011-06-21-17-51-05.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளை இப்போதைக்கு தவிர்த்திருக்கலாம். இத்தகைய செய்திகளை பிரசுரித்து பரபரப்பை ஏற்ப்படுத்த பார்க்கின்றது சில இணையத்தளங்கள், ஸ்ரீலங்கா அரசு தனது நலனுக்காக இப்படி எதையாவது சொல்லிக்கொண்டு இருக்கின்றது

ஸ்ரீலங்கா நிகழ்ச்சி நிரலுக்காக நாம் செயல்ப்பட முடியாது.

  • தொடங்கியவர்

[நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதமொன்றின்போது, உரையாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி., அல் கயீடா தலைவர் ஒசாமா பின் லாடனுடன் சேர்த்து அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதைப் போலல்லாமல், பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் கவனித்து பேணப்படுகின்றனர் என்றார்.

பின்லாடன் கொல்லப்பட்டபோது மொத்தம் ஐவர் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் அவர் மகனும் இன்னொருவர் அவரது மனைவிகளில் ஒருவரும் ஆவார்கள். அங்கிருந்த ஏனைய குடும்ப உறவுகள் பலரும் கொல்லப்படவில்லை. கொன்ற பின்னரும் அவர் பூரண இஸ்லாமிய முறைகள் படி தகனம் செய்யப்பட்டார்.

ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் பொய் கூறி மகிந்தருக்கு, ஒரு போர்க்குற்றவாளிக்கு, பரிந்து பேசும்பொழுது அதிலும் பொய் கூறியுள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒசாமா பின்லேடனின் மனைவிகளோ பிள்ளைகளோ திட்டமிட்டு கொல்லப்படவில்லை. அவர்களில் சிலர் துப்பாக்கிச் சண்டையில் சிக்கி உயிரிழந்தனர். வன்னியில் நிகழ்ந்தது ஐநா முன்மொழிவிலான சரணடைதல். அதற்கும் பின்லேடன் மீதான அதிரடி இராணுவ நடவடிக்கைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. பின்லேடனின் பிற மனைவிகள் பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் கொல்லப்படவில்லை. இதனை இந்த அஸ்வர் எம் பி அறியாது சிறீலங்கா பாராளுமன்றத்துக்கு தவறான தகவல்களை வழங்கி வருகிறார்.

அதுமட்டுமன்றி.. சந்திரிக்கா - ரத்வத்த கூட்டுச் சதியில் கொல்லப்பட்ட ஜிகாத் இயக்க தோற்றுவாய் அஸ்ரப்பின் மனைவிக்கும் தான் அமைச்சர் பதவி கொடுத்து கவனித்து வருகிறீர்கள்.

ஜே வி பியின் தலைவர்களின் மனைவிகள் பிள்ளைகள் பத்திரமாத்தானே இருக்கினம். ஏன் போர் குற்றவாளிகள் கூட மனைவி பிள்ளை என்று சந்தோசமாத் தானே இருக்கினம்..!

பிரபாகரனின் மனைவியோ பிள்ளைகளோ எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள் கிடையாது. அந்த வகையில் அவர்கள் உயிரோடு உள்ளதை பகிரங்கமாக அறிவிப்பதோடு.. அவர்களை பத்திரிகையாளர்கள் முன் நிறுத்துவதோடு.. அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும்.. பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியதும்.. சர்வதேசத்தினதும்.. சிறீலங்காவினதும் கடப்பாடு. அதனை சிறீலங்கா மீறுவது தான் செய்தியே அன்றி.. அவர்கள் பாதுகாக்கப்படுவதானது சாதாரணமாக நிகழ வேண்டிய ஒன்று. அவர்கள் தங்களின் சுயவிருப்புக்கு அமைய தாங்கள் வாழ விரும்பும் பகுதியில் வாழ அனுமதிக்கப்படவும் வேண்டும். அவர்களின் சுதந்திர நடமாட்டத்தை தடுப்பதே ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதமொன்றின்போது, உரையாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி., அல் கயீடா தலைவர் ஒசாமா பின் லாடனுடன் சேர்த்து அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதைப் போலல்லாமல், பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் கவனித்து பேணப்படுகின்றனர் என்றார்.

????இவன் எதாவது சைடில் கிடா வெட்டுகிறானா? :rolleyes: :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்

இஸ்ரேலில் மனித உரிமைகள் மீறப்படுவதகாக ஐ.நா. அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்நிலைமையை சீராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட இஸ்ரேலை இலங்கை பின்பற்ற வேண்டுமென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. அறிக்கை வெளியிட்டால் அது 'ஐ.நா. அறிக்கை'. அதே ஐ.நா. சிங்கள நாட்டுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டால் அது 'தருஸ்மான் அறிக்கை'.

இதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனிதாபிமானத் தன்மை என அஸ்வர் எம்.பி கூறினார்.

அந்த அறிக்கையை நிராகரித்துவிட்டு தமது போர்க்குற்றங்களுக்கு மனிதாபிமான சாயம் பூசுவது உண்மையான இனவழிப்பாளர்கள் தான்!

இது நிஜமா? நம்பமுடியுமா?....இவர் நாளை மரடைப்பில் மரணித்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை!!! அமைச்சர் பாவம் தனக்குத்தானே குழி வெட்டுகிறார்.

Edited by மொட்டை மனிதன்

தயா மாஸ்டர், கனகரத்தினம் எம் பி, கே. பி எல்லோரையும் உபயோக படுத்திய அரசுக்கு இப்போ நல்ல மனம் வந்திருக்கு.

இப்படித்தான் இசைபிரியாவின் கதையும் வெளி வந்தது போல் ஞாபகம். துவரகா என்று கூறி படங்களை வெளிவிட்டார்கள்

Edited by மல்லையூரான்

இதுதான் இன்று வரை விக்கிபீடியாவில் உள்ளது

http://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran

The Asian Tribune has reported that Prabhakaran was married to Mathivathani Erambu on October 1, 1984.[18] and she, along with their mother, their daughter (Duvaraga) and two sons, Charles Anthony and Balachandran were not in Sri Lanka.[18] However, Sri Lanka military sources stated that they had recovered the corpse of Charles Anthony.[not in citation given][40] A senior Sri Lankan minister later informed that the Sri Lanka Army had also found the bodies of Prabhakaran's younger son Balachandran, wife Mathivathani, and his daughter Duvaraga.[not in citation given][41] However, the military spokesman Udaya Nanayakkara later stated that there was no information about the whereabouts of the remaining members of the Prabhakaran's family. “We have not found their bodies and have no information about them,” he said.[42] Yet, it is thought that the entire Prabhakaran's family actually has been wiped out; the bodies of Madhivadhany, Duvaraga and Balachandran reportedly were found in a bushy patch about 600 meters away from where Prabhakaran’s body was found.[43]

Velupillai Prabhakaran's parents, Thiruvenkadam Velupillai and Parvathi, both in their 70s, were found in the Menik Farm camp for displaced people near the town of Vavuniya. The Sri Lankan military and the government gave public assurances that they would not be interrogated, harmed or ill treated.[44]

இன்றைய சூழ்நிலையை குழப்ப... உளவியல் யுத்தம் ... தலை குப்புற விழுகிறோம்!!! ...

(அகோதா! ... தமிழ்மிரருக்கு தெரிந்து, ஆங்கில மிரருக்கு தெரியாமல் போய் விட்டதை, கவணிக்கவில்லை! .. )

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அஸ்வர் சொந்தச் செலவிவிலை சூனியம் வைக்கிறார். :lol:

  • தொடங்கியவர்

இன்றைய சூழ்நிலையை குழப்ப... உளவியல் யுத்தம் ... தலை குப்புற விழுகிறோம்!!! ...

(அகோதா! ... தமிழ்மிரருக்கு தெரிந்து, ஆங்கில மிரருக்கு தெரியாமல் போய் விட்டதை, கவணிக்கவில்லை! .. )

நிச்சயம் இது உளவியல் யுத்தத்தின் ஒரு நடவடிக்கை. இதை நாம் எமக்கு சாதகமாக பாவிக்க முயல வேண்டும். ஆங்கிலத்தில் கிடைக்காவிட்டாலும் மனித உரிமை அமைப்புக்களுக்கு (இது பாராளுமன்றத்தில் கூறப்பட்ட விடயம் என்ற ரீதியில்) தெரியப்படுத்தல் வேண்டும்.

இந்த கூற்றை பாராளுமன்றத்தில் கூறியதன் மூலம் சிங்களம் ஆப்பிழுத்த குரங்கின் நிலை ஒன்றை அடைந்துள்ளது.

முதலில் தன்னை மேற்குலகத்தை விட ஒரு மனிதாபிமானம் நிறைந்த நாடாக காட்ட முனைந்துள்ளமை. சனல் நாலின் விவரணப்படத்தின் பின்னராக ஒரு பாரிய பின்னடவை அடைந்துள்ள நிலையில் பின் லாடனை கொன்றதில் மனிதாபிமானம் காட்டப்படவில்லை என்பது மேலும் மேற்குலத்திலிருந்து சிங்களத்தை அந்நியப்படுத்தும்.

அடுத்ததாக இவர்களை உயிருடன் வைத்திருக்கின்றோம் என பாராளுமன்றத்தில் ஒரு அமைச்சர் கூறியுள்ளமை. எனவே, ஏன் இவர்களை வைத்திருக்கின்றீர்கள்? என்ன குற்றச்சாட்டுக்கள்? என்ற கேள்விகள் மனித அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக எழுப்பப்படும். அதற்கு பதிலளிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பொழுது போக்கு செய்தி :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பர சக்கரம் என்பது இதைத் தானோ?

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பர சக்கரம் என்பது இதைத் தானோ?

பெரிய பூதம் எதையாவது கிளப்பியும் விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முடியல.............................

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி பேணி வருகிறார் : அஸ்வர் எம்.பி.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனித்து பேணிவருகிறார் என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று தெரிவித்துள்ளார்.

இதைத் தான் இஸ்லாமியரின் ஈனப் புத்தி என்பது. தொப்பி பிரட்டிகளின் ஈனப் புத்திகள் செயலிழக்கும் காலம் மிக விரைவில் வரும்.

சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலிதான் இந்த அஸ்வர். இவனது இந்த அறிவிப்பை வைத்தும் சிங்கள பயங்கரவாதிகளை மடக்கலாம்.

  • தொடங்கியவர்

பொறுப்பற்ற முறையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றவேண்டாம் - அஸ்வருக்கு கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை

பொறுப்பற்ற முறையில் நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டாமென அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டாலும் அவரின் மனைவி பிள்ளைகளை ஜனாதிபதி பராமரிக்கிறாரென அஸ்வர் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விவாதத்தில் கூறினார். தமிழ்ச் செல்வன் என்று கூறுவதற்குப் பதிலாக பிரபாகரன் என்று கூறியதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

நேற்றிரவு தொலைபேசியில் அஸ்வருடன் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, தேவையற்ற தகவல்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமென எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அரசதரப்பு உறுப்பினர் அஸ்வருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச்சரிக்கை விடுத்தமை குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்;சினை ஒன்றை எழுப்பவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் தயாஸ்ரீ ஜயசேகர தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு சாதாரண அரச அதிகாரியான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச்சரிக்கை விடுக்க முடியாதெனவும், அது நாடாளுமன்றத்தின் ஜனநாயக சிறப்புரிமையை மீறும் செயலெனவும் தயாஸ்ரீ ஜயசேகரா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாடாளுமன்ற ஹன்சாட் பதிவு புத்தகத்தில் சர்ச்சைக்குரிய உரையில் மாற்றங்களை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் குறிப்பிட்டன.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8307

  • கருத்துக்கள உறவுகள்

அரசதரப்பு உறுப்பினர் அஸ்வருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச்சரிக்கை விடுத்தமை குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்;சினை ஒன்றை எழுப்பவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் தயாஸ்ரீ ஜயசேகர தெரிவித்தார்.

அதிமுக vs திமுக...

விடுதலைக்கு போராடுபவர்கள்... இந்த மாறி மாறி சொறிந்துவிடும் ஜக ஜல ஜலாபத்தில் சிக்கி கொள்ளகூடாது.

டிஸ்கி:

மாறி மாறி சொறிந்துவிடுவதற்கு பேர்தான் ஜனநாய்கமாம் :o

போனது போகட்டும். அஸ்வரைப் பற்றி எமக்கு கவலை இல்லை.

தமிழ் செல்வனின் மனைவி பிள்ளைகளூக்கு யாரும் தண்டச் சோறு போடவேண்டியதில்லை. சமாதான் தூதுவனைக் கொன்று அவன் மனைவி மக்களை சிறைப்பிடித்தது ஈன அரசென்றல் அவர்களைப் பற்றிய விவரம் வேண்டும். அவர்கள் வெளியே வரவேண்டும். TNA இதை தனது பேச்சு வார்த்தைகளின் போது உள்ளடக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.