Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரன் கிட்டு வந்த கப்பல்: காட்டிக் கொடுத்தது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன் கிட்டு வந்த கப்பல்: காட்டிக் கொடுத்தது யார்?

Thursday, June 23, 2011, 22:15

கட்டுரைகள்

ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்கள், படு கொலைகளை உருவாக்கி திட்டமிட்டு, அரங் கேற்றிய சதிக் கும்பலே, உளவு நிறுவனங்கள்தான் என்ற உண்மையை முற்றாக ஒதுக்கிவிட்டு, உளவுத் துறையின் ஒலி குழலாகவே ஒலிக்கிறது இந்த நூல்.

1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளி களுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. இந்திய உளவு நிறுவனத்தோடு நெருக்கமாக இருந்தவரும், உளவு நிறுவனங்கள் போற்றிப் பாராட்டுகிற நூலை எழுதியவருமான எம்.ஆர். நாராயணசாமி, தனது ‘இலங்கையின் புலிகள்’ (Tigers of Lanka)என்ற நூலில் – அவரே, இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு மட்டும் உளவு நிறுவனத்தின் பிடிக்குள் சிக்குவதற்கு தயாராக இல்லை. நாட்டின் விடுதலையில் மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதுதான் அவர்களின் “குற்றம்”; ஆனால் ஈழத்தில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வழியாக இலங்கை அரசுக்கு நெருக்கடி தந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் ஈழப் போராளிகளைக் கொண்டு வருவதுதான் இந்தியாவின் திட்டம். அதை செயல்படுத்துவதே உளவு நிறுவனங்களின் வேலை.

முதலில் ‘டெலோ’ என்ற அமைப்பை உளவு நிறுவனம் தனது ‘கைப்பாவை’யாக்கியது. அந்த அமைப்பு செயலிழந்தவுடன் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்பை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தார்கள். பிறகு பல்வேறு போராளிகள் குழுக்களில் ஏற்பட்ட பிளவுகளைப் பயன்படுத்தி விலகி வந்தவர்களை எல்லாம் இணைத்து ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ (ஈ.என்.டி.எல்.எப்.) என்ற அமைப்பை உளவு நிறுவனம் உருவாக்கியது. இந்திய உளவுத் துறைக்கு ஆதரவாக ‘இந்து’ பார்ப்பன நாளேட்டில் எழுதி வந்த டி.பி.எஸ். ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியிருக் கிறார்கள். உளவுத் துறை உருவாக்கிய, இந்த குழுக் களை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராகவும், தேவைப்படும்போது இலங்கை ஆட்சிக்கு எதிராக வும் உளவு நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.

கடைசியாக உளவு நிறுவனம் தனது ஏவல் படையாக பிடித்து வைத்த ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்புக்கு தலைவராக சென்னையில் கொலை, கடத்தல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, 1989 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப் பட்ட டக்ளஸ் தேவானந்தாவை தனது கைப்பிடிக் குள் உளவுத் துறையினர் கொண்டு வந்தனர். தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலிருந்தவரை விடுதுலை செய்து வெளியே கொண்டு வர முயற்சித்த வர்களே, ‘ரா’ உளவுத் துறையினர் தான். பிறகு உளவுத் துறையினரே, இந்திய ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து, டக்ளஸ் தேவானந்தாவை – அந்த ராணுவ விமானத்தில் ஏற்றி யாழ்ப் பாணம் கொண்டு போய் துரோகம் – குழி பறிப்பு வேலைகளுக்காக இறக்கி விட்டார்கள். இந்த உண்மையை ‘டெகல்கா வார’ ஏடு (ஜூலை 1, 2006) வெளிக்கொண்டு வந்தது.

ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனாவுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டு, அதை தமிழர்கள் மீது ஆயுத முனையில் திணித்தார். இந்தி யாவின் ‘கைப்பாவைக் குழுக்கள்’ கண்களை மூடிக் கொண்டு ஒப்பந்தத்தை ஆதரித்தன. உண்மையான விடுதலைப் போராட்டத்தை நடத்திய விடுதலைப் புலிகள் மட்டும் ஏற்க மறுத்தனர். ஆனாலும் இந்திய அதிகார வர்க்கம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மிரட்டி பணிய வைத்தனர். ‘இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை; தமிழ் மக்களை இந்தியா பாதுகாக்கும் என்று நம்பி, ஆயுதங்களை ஒப்படைக் கிறோம்’ என்று, விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். விடுதலைபுலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் சில போட்டிக் குழுக்களுக்கு உளவுத் துறை ஆயுதங்களை வழங்கி வந்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இதை வீடியோ படங்களுடன் ஆதாரத்தோடு அமைதிப் படை தளபதி ஹர்கிரத் சிங்கிடம் எடுத்துக் கூறினார். ஹர்கிரத் சிங்கும் உண்மையே என்று ஒப்புக் கொண்டார். இப்படி செய்வது தவறு, என்று இந்திய ராணுவத் தளபதியாக இருந்த கே.சுந்தர்ஜியிடம் சிங் புகார் கூறினார். சுந்தர்ஜியோ, ‘இது உயர்மட்டத்தின் முடிவு’ என்ற கூறிவிட்டார். இவையெல்லாம் ஹர்கிரத்சிங்கே வெளிப்படுத்திய உண்மைகள், மறுக்க முடியாது. அப்போதெல்லாம் ஹர்கிரத் சிங்கை பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார்.

ஒரு கட்டத்தில் நேரில் பேசுவதற்கு பிரபாகரன் வரும்போது பிரபாகரனை சுட்டுவிடுமாறு ராஜிவின் ஆலோசனைக் குழு இலங்கைத் தூதுவரக இருந்த ஜெ.என். தீட்சத் வழியாக உத்தரவிட்டது. ஆனால், நேர்மையான அதிகாரியாக இருந்த ஹர்கிரத்சிங் இந்த படுபாதகத்தை தன்னால் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை, அதன் போராட்டத்தைத் தொடரவிட்டால், அவர்கள் தமிழ் ஈழப் போராட்டத்தை விரைவுபடுத்தி விடு வார்கள் என்பதோடு, இந்தியாவின் ஏவல் படையாக எந்த காலத்திலும் மாறமாட்டார்கள் என்பதை உறுதியாக புரிந்து கொண்ட இராஜீவ் காந்தியும், அவரது ஆலோசனை குழுவும், உளவு நிறுவனமும், விடுதலைப்புலிகளின் தலைமையை தீர்த்துக் கட்டுவதற்கு திட்டங்கள் தீட்டின. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தே ஆட்களைப் பிடித்தார்கள். பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக செயல்பட்ட மாத்தையா அந்த சதிவலையில் வீழ்ந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கொண்டே இந்திய உளவு நிறுவனத்துக்காக ரகசியமாக செயல்பட்டு வந்தார். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், இந்தப் பின்னணியில்தான் ஈழத்தில் நடந்த ஒவ்வொரு செயல்பாடுகளையும் பார்க்க வேண்டும். ராஜீவ் சர்மாவின் இந்த நூல் உளவு நிறுவனங்களின் இந்த சதியை சூழ்ச்சிகளைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் மீது இந்த சதிகார நிறுவனங்கள் தமிழினப் பகைவர்கள் சுமத்திய களங்கத்தையும், வீண் பழிகளையும் அப்படியே நியாயப்படுத்துகிறது.

ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கிட்டு வந்த கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படைவழி மறித்தது. இந்த நிகழ்வை இந்த நூல் உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை தந்து நியாயப்படுத்துகிறது. ராஜீவ் கொலையை நடத்தி முடித்ததற்காகவே அதன் ‘வெகுமதியாக’ விடுதலைப் புலிகள் நவீன ஆயுதங்களையும், நவீன கப்பல்களை யும் வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பெறத் தொடங்கினர் என்று இந்த நூல் குற்றம் சாட்டுகிறது. அப்படி ராஜீவ் கொலைக்காக கிடைத்த நவீன ஆயுதங்களை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பெற்று கப்பலில் கொண்டு வரும்போது தான் கிட்டு பிடிபட்டார் என்று அபாண்டமாக பழி சுமத்து கிறது, இந்த நூல். உளவுத் துறையின் அவதூறு களையும், பழியையும் நியாயப்படுத்துவதற்காக திட்டமிட்டு உண்மைகளையே மறைத்து எழுதி யிருக்கிறார் நூலாசிரியர்.

“1993 ஜனவரி 13 ஆம் தேதி சென்னை துறைமுகத் திலிருந்து 700 கி.மீட்டர் தொலைவில் இக்கப்பல் இடைமறிக்கப்பட்டது” என்கிறார் நூலாசிரியர். இந்திய எல்லைக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கப்பலை, இந்திய கப்பல் படை சட்ட விரோதமாக சென்று வழி மறித்ததை இந்த நூல் குறிப்பிடாமல், அப்படியே மூடிமறைக்க விரும்புகிறது. ‘700 மைலுக்கு அப்பால் சென்ற கப்பல்’ என்ற வார்த்தையோடு நிறுத்தி விடுகிறார்கள். சர்வதேச கடற்பரப்பில் கப்பலை மடக்கி, இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வரப்பட்ட உண்மையை மறைத்துவிட்டு, சென்னை துறைமுகத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும்போது, அதாவது இந்திய கடற்பரப்பில் இருக்கும்போது அக்கப்பல் கிட்டுவால் வெடிக்கச் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? கிட்டுவின் கப்பல் – சர்வதேச கடல்பரப்பில் 440 கடல் மைலுக்கு அப்பால் வந்து கொண்டிருந்தபோது, உளவுத் துறைக்கு மாத்தையா வழியாக அத்தகவல் கிடைக்கப் பெற்றது. கப்பலை வழி மறிக்க இந்திய கப்பல் படை சென்றது. கப்பலை இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வருமாறு கப்பல் படையினர் மிரட்டினர். அதற்கு கிட்டு ஒத்துழைக்காத நிலையில், அதிரடிப் படையினர் ஹெலிகாப்டர் துணையுடன் கப்பலுக் குள் குதித்தனர். அப்போது கிட்டுவும், உடன் வந்த போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வீரச் சாவைத் தழுவினர்.

கிட்டு என்ற மாவீரன் தனது இரு கால்களையும் இழந்த பிறகும் உள்ள உறுதியோடு விடுதலைக்காக களத்தில் நின்ற போராளி. இந்தியாவின் துரோகத் தினால் தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டு, வீரமரணத்தை தழுவினார்.

கப்பலில் உயிருடன் பிடிபட்ட 9 போராளிகள் மீது இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடந்தது. சம்பவம் நடந்த இடம் ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்டது. இந்திய கப்பல் படை சர்வதேச பரப்பில் அத்துமீறி நுழைந்து, மேற்கொண்ட இந்த நடவடிக்கை சட்ட விரோத மானது என்று அறிவித்த ஆந்திர உயர்நீதிமன்றம்,

9 புலிகளையும் விடுதலை செய்தது மட்டுமல்ல, கப்பல் புறப்பட்ட இடமான மத்திய அமெரிக்கா வுக்கு அவர்களை அரசாங்கமே சொந்த செலவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் தீர்ப்பளித்தது. ஈழ விடுதலையில் இந்தியாவின் சதிக்கும், கீழறுப்பு நடவடிக்கைகளுக் கும், இந்திய நீதிமன்றமே தந்த செருப்படிதான் இந்த தீர்ப்பு. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்ட இந்த நூல், இந்த வழக்கு தமிழ்நாடு நீதிமன்றத்தில் நடந்ததாக ஒரு பொய்யான தகவலைத் தருவதோடு, இந்த விசாரணைக்காக அரசு 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும் பலன் கிடைக்காமல் போய் விட்டதே என்று கவலைப்பட்டு வருந்துகிறது.

இந்தக் கப்பல் பிடிபட்டதற்கு, புலிகள் இயக்கத் திற்குள்ளே நடந்த துரோகம் பற்றி இந்த நூல் மவுனம் சாதிக்கிறது. பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக செயல்பட்ட மாத்தையா தான். இந்த கப்பல் வரும் சேதியை ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு தந்தார் ஆதாரங்களோடுதான், கூறுகிறோம்.

- தொடரும்

நன்றி : பெரியார் முழக்கம்

http://www.tamilthai.com/?p=20110

தமிழன் தமிழினத்திற்குச் செய்த துரோகத்தனங்களுக்கு அளவேயில்லை. துரோகங்களைத் தவிர்த்திருந்தால் தமிழனின் நிலையே வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு மறுபிறப்பு ஒன்று இருந்து வந்தாலும் குலைநடுங்கிற மாதிரி போட்டுதள்ளனும்....................

ஆனா மனிதநேய............. சர்வதேச அரசியல் ஞானிகள் ஒத்துவருவார்களா???? இத்தனை மக்களை போட்டுதள்ளுறான் ஒரு கேள்வி இல்லை.

காட்டிகொடுப்பவனை போட்;டால் எத்தனை கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளைச் சொல்ல கிட்டுவும் இல்லை, மாத்தயாவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வழக்கின் உண்மையை சொல்ல தவறாது நீதிமன்று சென்வர்கள் போதும் தானே?

துக்கு கைதிதான் மீண்டெழுந்து வரவேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளைச் சொல்ல கிட்டுவும் இல்லை,

மாத்தயாவும் இல்லை.

விசாரணை முடிந்ததால்தான் மாத்தையா இல்லை :(

தலைவனைக் காட்டிக் கொடுப்பவனும்

தாயைக் கூட்டிக் கொடுப்பவனும் ஒன்று தான்.

தாயைக் கூட்டிக் கொடுப்பவனை வறுமை என்ற காரணத்துக்காக மன்னித்து விடலாம். ஆனால் ஒரு இனத்தின் விடுதலைக்காக தலைமைத்துவம் கொடுப்பவரை அந்த இனத்தினை அழிக்க முனைபவர்களிடமே காட்டிக் கொடுப்பவனை எக்காலத்திலும் மன்னிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் விடுதலைக்காக தலைமைத்துவம் கொடுப்பவரை அந்த இனத்தினை அழிக்க முனைபவர்களிடமே காட்டிக் கொடுப்பவனை எக்காலத்திலும் மன்னிக்க முடியாது.

ஆனால் தமிழர்களாகிய நாங்கள் மன்னித்து மணிமகுடமும் சூட்டத் தயாராக இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தமிழர்களாகிய நாங்கள் மன்னித்து மணிமகுடமும் சூட்டத் தயாராக இருப்போம்.

கிருபன்

தங்களைச்சொல்கின்றீர்களா?

ஆனால் இந்த தமிழருக்குள் நான் எப்போதுமே வரமாட்டேன் :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்

தங்களைச்சொல்கின்றீர்களா?

ஆனால் இந்த தமிழருக்குள் நான் எப்போதுமே வரமாட்டேன் :(:(:(

முன்னர் தேசியம், தமிழீழம் என்று பேசிய பெரிய பெரிய தலைகள் எல்லாம் தமிழர்களிடம் இருந்து சேர்த்த பணத்தை வைத்து பசில், கோத்தாவுடன் "டீல்" வைத்து நல்ல முதலீடுகள் செய்கின்றார்கள்.

பி.கு. நான் இப்படியான "டீல்" களுக்குள் போகுமளவிற்கு மற்றவர்களைப் பேய்க்காட்டும் யுக்தியை இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் தேசியம், தமிழீழம் என்று பேசிய பெரிய பெரிய தலைகள் எல்லாம் தமிழர்களிடம் இருந்து சேர்த்த பணத்தை வைத்து பசில், கோத்தாவுடன் "டீல்" வைத்து நல்ல முதலீடுகள் செய்கின்றார்கள்.

பி.கு. நான் இப்படியான "டீல்" களுக்குள் போகுமளவிற்கு மற்றவர்களைப் பேய்க்காட்டும் யுக்தியை இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை.

இதில் கிருபனையும் விசுகுவையும் பற்றித்தான் நானும் நீங்களும் எதையுமே நிச்சயமாக சொல்லமுடியும்

முதலில் எம்மைத்திருத்திக்கொள்வோம்

சமூகம் தானாக திருந்தும்

முன்னர் தேசியம், தமிழீழம் என்று பேசிய பெரிய பெரிய தலைகள் எல்லாம் தமிழர்களிடம் இருந்து சேர்த்த பணத்தை வைத்து பசில், கோத்தாவுடன் "டீல்" வைத்து நல்ல முதலீடுகள் செய்கின்றார்கள்.

பி.கு. நான் இப்படியான "டீல்" களுக்குள் போகுமளவிற்கு மற்றவர்களைப் பேய்க்காட்டும் யுக்தியை இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை

.

தோழரே இந்தப்பணத்தை வைத்துத்தான் எத்தனை எத்தனை வதந்திகள்,குழப்பங்கள்,காட்டிக்கொடுப்புகள், துரோகத்தனங்கள்,ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச்சொல்லமுடியும், தர்மத்திற்காகவும், நீதிக்காகவும் தமிழர்களாகிய எம்மால் வழங்கப்பட்ட இந்தப்பணத்தை யாரும் இலகுவில் ஏப்பம் விடமுடியாது.இந்தக்காலத்தில் இப்படியான கருத்துக்களை அடக்கி வாசிப்பது சாலச்சிறந்தது. எமது கருத்துக்கள் எதிரிக்கு எப்போதும் சாதகமாய் அமையாமல் நகருவது புலம்பெயர் வாழ் தமிழர் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

தோழரே இந்தப்பணத்தை வைத்துத்தான் எத்தனை எத்தனை வதந்திகள்,குழப்பங்கள்,காட்டிக்கொடுப்புகள், துரோகத்தனங்கள்,ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச்சொல்லமுடியும், தர்மத்திற்காகவும், நீதிக்காகவும் தமிழர்களாகிய எம்மால் வழங்கப்பட்ட இந்தப்பணத்தை யாரும் இலகுவில் ஏப்பம் விடமுடியாது.இந்தக்காலத்தில் இப்படியான கருத்துக்களை அடக்கி வாசிப்பது சாலச்சிறந்தது. எமது கருத்துக்கள் எதிரிக்கு எப்போதும் சாதகமாய் அமையாமல் நகருவது புலம்பெயர் வாழ் தமிழர் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

பணத்தை விழுங்கி, கழிச்சு, கழிவில இருந்து உருளைகிழங்கு விழைவிக்குமளவுக்கு எல்லாம் போய்முடிந்துவிட்டது...

இப்படி அடக்கி வாசியுங்கோ.... அடக்கி வாசியுங்கோ..... எண்டுதான் 300,000 சனம் செத்ததுகூட யாருக்கும் தெரியாமல் போய்விட்டது...

எமக்கு சுதந்திரம்....... ச்சே. து . :lol: ....... எமக்கு மனித உரிமைகள் கேக்க முதல் எம் உரிமைகளை நாமே மதிக்கப்பழகுவோம்

.

.

இந்தக்காலத்தில் இப்படியான கருத்துக்களை அடக்கி வாசிப்பது சாலச்சிறந்தது. எமது கருத்துக்கள் எதிரிக்கு எப்போதும் சாதகமாய் அமையாமல் நகருவது புலம்பெயர் வாழ் தமிழர் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இப்படியான திரிகளுக்கான உங்களின் பதில் இப்படித்தான் அமைகின்றது. மக்களுக்கு எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு மக்கள் விடுதலை பற்றி கதைகின்றீர்கள். தாயக விடுதலைக்கு நிதி என்ற பெயரில் கொள்ளை அடித்த பெருங்கூட்டமே எம்மிடம் இருக்கு. இவர்கள் பற்றி நாங்கள் இன்னும் மிக தெளிவாக பேச வேண்டும். எமக்கு எம் மக்களுக்கு தெரிந்ததை விட எம் எதிரிக்கு தெரிந்த விடயங்கள் பல

இனியாவது மக்களை இருட்டுக்குள் வைத்திருக்கக் கூறும் ஆலோசனைகளை நிறுத்தினால் எம் சமூகத்துக்கு பெரும் பயனாக இருக்கும்

போராட்டத்திற்கு சேர்த்த பணம் மக்களின் பணம். அதனை போராளிகளின் மறு வாழ்வுக்கோ அல்லது தமிழர்களின் நலனுக்கோ பாவிக்காமல் சுருட்டும் கழுகுகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். முன்பு போல் புலிகள் இயங்கும் நிலையில் இருந்திருந்தால் இந்த கயவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.

போராளிகளின் / மக்களின் இன்றைய ஏழ்மை நிலையை கதைக்க பலர் விரும்புவதில்லை.

Edited by thappili

நேற்று கலாதரனின் வானொலியில் சாலினி என்ற யுனிவெர்சிடியில் படிக்கும் ஒரு மாணவியின் நேர்காணல் கேட்டேன்.அதே நேரம் இளையவர் அமைப்பு லண்டனில் கொடி ஏற்றி கொண்டாடுவதை பேஸ்புக் இல் பார்த்தேன்.அடுத்த கிழமை நட்சத்திர திருவிழா இங்கு அந்த மாதிரி களை கட்டுகின்றது.

சிங்களவனாக பார்த்து ஏதும் தமிழனுக்கு கொடுத்தாலொழிய நாம் எதையும் பெறப்போவதில்லை.சிங்களவனுக்கு தமிழனைப் பற்றி நன்குதெரியும் தனக்கு என்றுவந்தால் பறந்துவிடுவான் என்று.

கிட்டுவை காட்டிக்கொடுத்தது யார் என எல்லோருக்கும் தெரியும் இப்ப புதிதாக தமிழ்நாட்டில் இருந்து அவர்கள் எங்கள் வரலாற்றை புதிதாக எழுதுகின்றார்கள்.இது மிக கேவலம்.

அது சரி யார் இதற்கு முதலே கிட்டுவிற்கு குண்டெறிந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி யார் இதற்கு முதலே கிட்டுவிற்கு குண்டெறிந்தது?

என்ன தெரியாத மாதிரி கேள்வி கேட்கிறீர்கள்?. ரெலோ ஆட்கள் தான் எறிந்ததாக பல மக்களும் பேசிக்கொண்டார்கள்.(சிறி சபாரத்தினத்தை கொன்றதற்கு பழி வாங்கலாம்)

இப்படியான திரிகளுக்கான உங்களின் பதில் இப்படித்தான் அமைகின்றது. மக்களுக்கு எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு மக்கள் விடுதலை பற்றி கதைகின்றீர்கள். தாயக விடுதலைக்கு நிதி என்ற பெயரில் கொள்ளை அடித்த பெருங்கூட்டமே எம்மிடம் இருக்கு. இவர்கள் பற்றி நாங்கள் இன்னும் மிக தெளிவாக பேச வேண்டும். எமக்கு எம் மக்களுக்கு தெரிந்ததை விட எம் எதிரிக்கு தெரிந்த விடயங்கள் பல

இனியாவது மக்களை இருட்டுக்குள் வைத்திருக்கக் கூறும் ஆலோசனைகளை நிறுத்தினால் எம் சமூகத்துக்கு பெரும் பயனாக இருக்கும்

வணக்கம் நிழலி கொள்ளை அடித்தவர்களையும். காட்டிக்கொடுத்தவர்களையும். துரோகம் இழைத்தவர்களையும் நிச்சயம் நாம் வெளிக்கொணர்ந்து மக்களுக்கு இனம் காட்ட வேண்டும். இந்தக்கருத்தில் நான் நூறு வீதம் உடன்படுகிறேன்.ஆனால் நான் இங்கு குறிப்பிட்ட விடயம் இன்னும் உண்மையாக எம் இன விடுதலைக்காக உழைத்தவர்கள் பலர் புலம் பெயர் மண்ணில் அவமானத்துடனும் பல சட்டச்சிக்கல்கள்மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.எது உண்மை எது பொய் என்று தெரியாமல் எம் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.எம்மை அழித்தவனும் அவனின் கைக்கூலிகளும் இந்தச்சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.எமது தற்கால எழுச்சியை முடக்கி மக்களைப்பயமுறுத்தி பல அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந் நிலையில் மக்களையும். உண்மையான தேசப்பற்றுள்ள பணியாளர்களையும் வேறுபடுத்தி அவர்களிற்கிடையில் ஒரு பிணக்கு உருவாகாமல் ஒரு உண்மையான புரிந்துணர்வை உரு வாக்குவதன் மூலம் நாம் நமது தற்போதய நடவடிக்கைகளை நகர்த்த வேண்டும் என்பதே என் கருத்து.கொள்ளையடித்தவர்களும்,துரோகிகளும் இனம் காணப்பட்டு அவர்களை தண்டிக்கும் காலத்தை உருவாக்குவது எம் ஒவ்வொருவர் கையிலும்தான் தங்கியுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் பல சம்பவங்கள் பற்றிய விடயங்கள் தகவல்கள் தவறான தகவல்கள்

Edited by sathiri

கட்டுரையில் பல சம்பவங்கள் பற்றிய விடயங்கள் தகவல்கள் தவறான தகவல்கள்

தவறெண்டால்.. எது சரியென்டு சொல்லவேண்டும்....? இன்னும் ஏன் தயக்கம்?

.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

தவறெண்டால்.. எது சரியென்டு சொல்லவேண்டும்....? இன்னும் ஏன் தயக்கம்?

.

ஆயதவிடுதலைப்போராட்டம் பற்றி அக்குவேறை ஆணிவேறையாக தெரிந்த உங்களிற்கே தெரியாதததா?? :lol: :lol:

கிட்டுவுக்கு குண்டெறிந்தது ரெலோ.அதற்கும் ஒரு பச்சை புள்ளி.

குத்துமதிப்பில வரலாறு எழுத பலர் தொடங்கிவிட்டார்கள் போல?

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டுவுக்கு குண்டெறிந்தது ரெலோ.அதற்கும் ஒரு பச்சை புள்ளி.

குத்துமதிப்பில வரலாறு எழுத பலர் தொடங்கிவிட்டார்கள் போல?

அப்படித்தான் மக்கள் கூறுகிறார்கள்.வரலாறு மக்களை மீறி இந்தியாவில் இருந்து உங்களை போன்ற புலிகளை எதிரியாக பார்த்த புளட்டினால் எழுதப்படலாம் என நினைக்கிறீர்களோ? அப்படி ரெலோ இல்லையெனில் யாரென்று துணிந்து எழுத வேண்டியது தானே. புளட்டின் உண்மையான வரலாற்றையும் பார்க்க ஆசையாக உள்ளது.

அப்படித்தான் மக்கள் கூறுகிறார்கள்.வரலாறு மக்களை மீறி இந்தியாவில் இருந்து உங்களை போன்ற புலிகளை எதிரியாக பார்த்த புளட்டினால் எழுதப்படலாம் என நினைக்கிறீர்களோ? அப்படி ரெலோ இல்லையெனில் யாரென்று துணிந்து எழுத வேண்டியது தானே. புளட்டின் உண்மையான வரலாற்றையும் பார்க்க ஆசையாக உள்ளது.

அத்துடன் மாலை தீவில் புரட்சி செய்த தமிழர் வரலாறு கண்டிராத அஞ்சாத சிங்கங்களை பற்றியும் விலாவாரியாக எழுதலாமே ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான் மக்கள் கூறுகிறார்கள்.வரலாறு மக்களை மீறி இந்தியாவில் இருந்து உங்களை போன்ற புலிகளை எதிரியாக பார்த்த புளட்டினால் எழுதப்படலாம் என நினைக்கிறீர்களோ? அப்படி ரெலோ இல்லையெனில் யாரென்று துணிந்து எழுத வேண்டியது தானே. புளட்டின் உண்மையான வரலாற்றையும் பார்க்க ஆசையாக உள்ளது.

கிட்டுவிற்கு குண்டெறந்தவர்கள் தீப்பொறி குழுவினர்.அவர்களிற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என்.எல்.எவ்.ரி.யினர் முன்னரும் எனது பயண கட்டுரையில் எழுதியிருந்தேன். அதே நேரம் கட்டுரையில் உள்ளது போல கிட்டுவிற்கு இரண்டும் காலும் போகவில்லை ஒருகால்தான் போனது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.