Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயாநிதி மாறன் ராஜினாமா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24-dayanidhi-maran-200.jpg

பிரதமரை வீட்டில் சந்தித்தார் தயாநிதி மாறன்- ராஜினாமா கடிதம் ஒப்படைப்பு

சென்னை/டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். கால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.

முன்னதாக தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க திமுக தலைவர் கருணாநிதியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தனது விலகல் கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்துக் கொடுத்தார்.

ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமம் வழங்கியதில் பெரும் முறைகேடுகளைச் செய்தார் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. சிவசங்கரன் தலைவராக இருந்தவரை ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்காமல் வேண்டும் என்றே தாமதப்படுத்தினார். ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்க நிர்ப்பந்தம் செய்தார். விற்றவுடன் உடனடியாக ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமங்களை வாரி வழங்கினார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் தயாநிதி மாறனின் பதவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரஸும் சரி, பிரதமரும் சரி தயாநிதி மாறன் தொடர்பாக பெருத்த அமைதி காத்து வந்தனர். இருந்தாலும் இதை ஆறப் போட முடியாத என்பதால் நிலைமை சிக்கலாகியது.

பாதியிலேயே வெளியேறினார்

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். இருப்பினும் கூட்டத்தின் பாதியிலேயே அவர் வெளியேறினார்.

அதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை.

கருணாநிதி வீட்டில் அவசர ஆலோசனை

இதற்கிடையே, சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பல தலைவர்களும், தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதை திமுக தடுக்கக் கூடாது என்று கருணாநிதியை வலியுறுத்தியதாக தெரிகிறது.

அவர்களது கருத்துக்களை கருணாநிதியும் மறுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து திமுகவின் கருத்து பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள டி.ஆர்.பாலு இன்று மாலையில் பிரதமரை சந்திக்கவுள்ளார்.

பிரதமரை வீட்டில் சந்தித்தார்

இந்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாலை 3 மணியளவில் பிரமதரை நேரில் சந்தித்து தயாநிதி மாறன் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் பிற்பகல் ஒன்றரை மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்திற்குக் கிளம்பினார் தயாநிதி மாறன். கால் மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போது சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் உடன் இருந்தார்.

கால் மணி நேரத்தில் இந்த சந்திப்பு முடிவடைந்து விட்டது. பிரதமர் வீட்டை விட்டு வெளியே வந்த தயாநிதி மாறன் வெளியே காத்திருந்த பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார். இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரிடம் கொடுத்தார்.

அவர் இன்று மாலை 4. 30 மணிக்கு சென்னைக்குக் கிளம்பும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து வைத்துள்ளார். ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்ட நிலையில் இன்றே அவர் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

"எல்லாம் முடிந்து விட்டது"

முன்னதாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்த தயாநிதி மாறன் தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம், எல்லாம் முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் ராஜினாமா செய்வது உறுதியானது.

முன்னதாக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் தனது வீட்டுக்குத் திரும்பிய தயாநிதி மாறன் அங்கு வைத்து தனது ராஜினாமா கடிதத்தை டைப் செய்ததாகவும், பின்னர் அதை எடுத்துக் கொண்டு பிரதமரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

தயாநிதி மாறன் பதவி விலகல் ஏற்கனவே நடந்திருக்க வேண்டியது: ஜெயலலிதா

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்திருப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அளித்த பேட்டி ஒன்றில்,

தயாநிதி மாறனை பதவி விலக கோரி அ.தி.மு.க., நீண்ட காலமாக கூறி வருகிறது. இது குறித்து பிரதமரை நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தயாநிதி மாறன் பதவி விலகல் ஏற்கனவே நடந்திருக்க வேண்டியது. இருந்தாலும் இப்போது நடந்திருப்பது நல்லதுதான். கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது உள்ள புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=57356

தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை: டி.ராஜா

தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்திருப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா அளித்த பேட்டி ஒன்றில்,

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் நீண்ட காலத்துக்கு முன்பே ராஜினாமா செய்திருக்க வேண்டும். தயாநிதி மாறனின் ராஜினாமா எதிர்பார்த்ததுதான். அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. நீண்ட காலத்துக்கு முன்பே அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு பிரதமர்தான் பொறுப்பு என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57357

Edited by தமிழ் அரசு

கருநாநிதியை தனது தவறான பொய் கூறல் மூலம் ,தவறாக வழிநடாத்தி இவ்வளவு ஈழத்தமிழர் அழிவுக்கும் காரணமானவர்.

டில்லிக்கும் கருநாநிதிக்கும் இடையில் கள்ள வேலை செய்த முதல் நபர்.

அழிவு வருகிறது என்று தெரிந்தும் மூடி மறைத்து காரியம் சாதித்தவர்.

பாவம் விடாது. எல்லாரும் நடு றோட்டுக்கு வருவார்கள்.

கனிமொழி உள்ளே இவ்வளவு காலம் இருக்கிறதே சொந்த இனத்துக்கு செய்த ஈனத்தனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருநாநிதியை தனது தவறான பொய் கூறல் மூலம் ,தவறாக வழிநடாத்தி இவ்வளவு ஈழத்தமிழர் அழிவுக்கும் காரணமானவர்.

டில்லிக்கும் கருநாநிதிக்கும் இடையில் கள்ள வேலை செய்த முதல் நபர்.

அழிவு வருகிறது என்று தெரிந்தும் மூடி மறைத்து காரியம் சாதித்தவர்.

பாவம் விடாது. எல்லாரும் நடு றோட்டுக்கு வருவார்கள்.

கனிமொழி உள்ளே இவ்வளவு காலம் இருக்கிறதே சொந்த இனத்துக்கு செய்த ஈனத்தனம்.

:) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

கருநாநிதியை தனது தவறான பொய் கூறல் மூலம் ,தவறாக வழிநடாத்தி இவ்வளவு ஈழத்தமிழர் அழிவுக்கும் காரணமானவர்.

டில்லிக்கும் கருநாநிதிக்கும் இடையில் கள்ள வேலை செய்த முதல் நபர்.

அழிவு வருகிறது என்று தெரிந்தும் மூடி மறைத்து காரியம் சாதித்தவர்.

பாவம் விடாது. எல்லாரும் நடு றோட்டுக்கு வருவார்கள்.

கனிமொழி உள்ளே இவ்வளவு காலம் இருக்கிறதே சொந்த இனத்துக்கு செய்த ஈனத்தனம்.

இதைத்தான் நானும் சொல்லவந்தேன்

பணம் பணம் பணம் என தேடத்தொடங்கி அதற்காகவே எல்லாவற்றையும் செய்த நரி இவன்தான். இவனது முகத்தைப்பார்த்தாலே எனக்கு ஆத்திரம் வரும். :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

RAGI+MUDDE.jpg

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த செய்தி ஊர்புதினத்தில் இருக்கிறது

அப்படியே சண் பிக்சர்ஸ், சண் டீவி போன்றனவும் நிறுத்தப்பட்டால், எமதினத்திற்கு நன்மையாக அமையலாம்.

தன்னைத்தின்னும் தாழ்வான நாய்கள். ( dog eat the dog. Sheer cannibalism).

ஈழத்தமிழர்களைத்தின்று பசி அடங்காமல் தங்கள் குடும்பங்களையும் தின்று ஏப்பம் விட்டுவிட்டார்கள்.

வீடுவரை தான் உறவு போகும். ஆனால் பணம் பாதளம் வரை பாயும்.

அவர்களுக்குள் போட்டி "எல்லாம் முடிந்துவிட்டது". ஆனால் வஞ்சிக்கப்ட்டவர்களுக்கு வேதனை இப்போதான் ஆரம்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகபிரசித்தி பெற்ற ஏராளமான ஊடகங்களுக்கு சமமாக சண் நெற்வேக்........உலகளாவி வியாபித்திருப்பது...கொஞ்சம் தலையை சொறிய வைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கருநாநிதியை தனது தவறான பொய் கூறல் மூலம் ,தவறாக வழிநடாத்தி இவ்வளவு ஈழத்தமிழர் அழிவுக்கும் காரணமானவர்.

டில்லிக்கும் கருநாநிதிக்கும் இடையில் கள்ள வேலை செய்த முதல் நபர்.

அழிவு வருகிறது என்று தெரிந்தும் மூடி மறைத்து காரியம் சாதித்தவர்..

ஆனால் இதே மானங்கேட்ட சூடு சுறணையற்ற ஈழத்தமிழர்கள் சிலர் தங்களது வீட்டில் காசு கொடுத்து சன் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள். சிட்னியில் GTV யை விட சன் தொலைக்காட்சியைத் தான் அதிகளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பது கவலையான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதே மானங்கேட்ட சூடு சுறணையற்ற ஈழத்தமிழர்கள் சிலர் தங்களது வீட்டில் காசு கொடுத்து சன் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள். சிட்னியில் GTV யை விட சன் தொலைக்காட்சியைத் தான் அதிகளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பது கவலையான விடயம்.

என்ன செய்வது, கந்தப்பு? நானும் எனக்குத் தெரிந்த, எல்லா வயதுக் காரருக்கும் சொல்லிப் பார்கின்றேன்!

என்னைத் தான் வலது குறைந்தது மாதிரிப் பார்க்கின்றார்கள்!

சன் டி.வி. ஒரு நாளைக்குப் பார்க்காவிட்டால் இவர்களது தலை, வெடித்து விடும் போல் இருக்கின்றதாம்!!!

பிடிபடும் திமிங்கிலங்கள்

அதென்னவோ.. என்ன மந்திரமோ என்ன மாயமோ தெரியவில்லை?

’அம்மா’ டெல்லிக்குச் சென்று திரும்பினாலே திமுகவிற்கு ஏதாவது ஏழரை கூடுகிறது! இப்போதைய விக்கெட் ‘தயாநிதி மாறன்’.

அம்மாவின் அடுத்த டெல்லி விசிட் எப்போது என்று திமுகவினர் ‘திக்..திக்’கென்று பார்த்து விக்கித்துப் போய் உட்கார்ந்திருப்பார்கள்!

தயாநிதி மாறன் வீட்டிலிருந்து சுமார் ஆறரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சன் டிவி அலுவலகத்திற்கு தரையின் கீழ் அமைக்கப்பட்ட உயர்தர கேபிள்கள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று ஜெ. டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே சன் டிவியின் சக்சேனா உள்ளே இருக்கிறார். இது தவிர நித்யானந்தாவின் சீடர் ஒருவர் சக்சேனா மீதும், கலாநிதி மாறன் மீதும் ‘நித்யானந்தா மீது களங்கம் கற்பிக்க முயன்றார்கள்’ என்று புகார் கொடுத்திருக்கிறார். இன்னும் சிலர் வேறு சில சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க முன் வரப்போகிறார்களாம்.

இப்படியே ரவுண்டு கட்டி அடித்தால் என்ன தான் செய்வார்கள் திஹார் முன்னேற்றக் கழகத்தினர்.. பாவம்!

-------------------------

தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சியின் போது நில அபகரிப்பு மற்றும் ஆக்கரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போதே சொன்னார் ஜெ!

இது வரை சுமார் ஐநூற்று சொச்சம் பேரின் மீது வழக்குகள் பாய்ந்துள்ளனவாம். இன்னமும் பல பெரிய திமிங்கிலங்கள் பிடிபடுமாம்.

வரவேற்கத்தக்க ஒன்று!

http://www.tamilpaper.net/?p=3731&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+tamilpaper%2FQQvv+%28TamilPaper%29

நாங்கள் திருந்த மாட்டோம்.

போன கிழமை இலன்டன் சட்டன் பகுதியில் யெயபாலன் நடாத்தும் தமிழ் பள்ளி ஆண்டு விழா. சிநேகிதன் கூப்பிட்டான் பார்க்க போனேன்.

அங்க பிரதம் விருந்தினராக அமிர்தலிங்கத்தின் மகன் வந்திருக்கிறார்.....

காட்டி கொடுத்து எத்தனையோ இளைஞர்களை அழிய விட்டு விட்டு தன் பிள்ளைகளை இலன்டனுக்கு அனுப்பி இப்பவும் சிறிலங்காவுடன் உரசும் குடும்பம் தான் அமிர்தலிங்கம் குடும்பம்.

எந்த தகுதியோ இல்லை பிரதமவிருந்தினராக வர வெளிகிட்டினம்.

யெய்பாலன் இப்படிதான் நரி வேலைகள் செய்வதில் வல்லவர்.

நோட்டீஸ் இல் கடைசிவரை யார் என்று வெளியிட வில்லையாம்.

இனி ஒரு பேப்பரிலும் படம் வரும். அவர் ஒரூ பேப்பருக்கும் ஊர் வாசம் என்டு உழுகிறார்.

எல்லாம் நரிகளும்,தன்னலமும் தான்.

நாங்கள் திருந்த மாட்டோம்.

அங்க பிரதம் விருந்தினராக அமிர்தலிங்கத்தின் மகன் வந்திருக்கிறார்.....

காட்டி கொடுத்து எத்தனையோ இளைஞர்களை அழிய விட்டு விட்டு தன் பிள்ளைகளை இலன்டனுக்கு அனுப்பி இப்பவும் சிறிலங்காவுடன் உரசும் குடும்பம் தான் அமிர்தலிங்கம் குடும்பம்.

எல்லாம் நரிகளும்,தன்னலமும் தான்.

அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபந்தான் முதன் முதலில் லண்டனுக்கு அகதியாக வந்தவர் எனக் கேள்வி. :D

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 8, ஜூலை 2011 (23:11 IST)

ராஜினாமா ஏன்? கலைஞரிடம் தயாநிதிமாறன் விளக்கம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளதை அடுத்து எதிர்கட்சிகள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் வீட்டில் 07.07.2011 அன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் கலந்து கொண்டார்.

பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் பிரதமர் இல்லத்தில் மன்மோகன்சிங்கை சந்தித்து பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வந்த தயாநிதி மாறன் தனது கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் தயாநிதிமாறன், சென்னையில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு உடன் இருந்‌தார். சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு கூற தயாநிதி மறுத்து வி‌ட்டார்.

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தயாநிதி, இந்‌த விவகாரம் குறித்து கருணாநிதியிடம் விளக்கினார் என்று தெரிகிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57414

இதைத்தான் நானும் சொல்லவந்தேன்

பணம் பணம் பணம் என தேடத்தொடங்கி அதற்காகவே எல்லாவற்றையும் செய்த நரி இவன்தான். இவனது முகத்தைப்பார்த்தாலே எனக்கு ஆத்திரம் வரும். :(:(:(

நேசன், விசகு உங்கள் இர்வருடைய கருத்தும் மிகவும் பிழையானது, நீங்கள் கூறுவதைப்பார்த்தால் கருணாநிதி மிகவும் நல்லவர், தயானிதி தான் கெடுத்துப் போட்டார் என்பது போல் அல்லவா இருக்கிரது, கடைசிவரையும் அவ்வாறு இல்லை, கருனாநிதி நன்கு திட்டமிட்டே எம்து போராட்டதின் அழிவுக்கு துணை போனான் அதில் அவனுக்கு வருமானம் இருந்தது அது பணமோ அல்லது அரசியல் பல்மோ அல்ல, தமிழ் இனத்தின் தலைவன் என்ற அவந்து குறிக்கோள், அதாவ்து தமிழ் ஈழம் பிரபாகரனது தலைமையில் அடைந்து இருந்தால் தமிழ் இனம் உலகில் இருக்கும் இருக்கும் வரை கட்வுளுக்கு நிகராக இருந்திருப்பார் அதுக்காகத் தான் எமது போரட்டத்தின் அழிவுக்கு துணை போனார், இன்னும் தெளிவாகச் சொன்னால் தனது சிம்மாசனத்திற்கு போட்டியாக் வந்த ஒருவரை நீக்கினார் என்பதே உண்மை, இது அவனுக்கு கைவந்த கலை. 1997ம் ஆண்டு க்ருணாநிதி ஆதரவு கொடுத்து இருந்தால், வேட்டி கட்டிய தமிழ் நாட்டு பண்ணையாரான மூப்பனார் இந்தியாவின் பிரதமராகி இருப்பார், இவன் அதையும் கெடுத்தான். என்வே உங்கள் இருவரது கருத்தும் தவறு வன்மையாக கண்டிக்கபட வேண்டியது, தமிழரை தவறான் வழியில் இட்டுச் செல்லும் கருத்து. கருணாநிதி தனது கனவான தமிழ் இனத் த்லைவன் என்ற இலக்கை காப்பாறவே எம்மை அழித்தான், அதுக்கௌ அவனது குடும்பத்தினர் உடந்தை

கொலைஞன் கருணாநிதியின் தமிழினப் படுகொலைக் குடும்பமே உள்ளிருக்க வேண்டிய காட்டுமிராண்டிகள் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.