Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியலா.. மனிதமா.. உங்கள் முடிவென்ன..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

817_822_2.jpg

அண்மையில் ஒரு நிகழ்வு தொடர்பான இணையக் கதையைப் படிச்சிருந்தேன். அது எனது மனதில் ஆழமான பாதிப்பை உண்டு பண்ணிவிட்டுள்ளது. அதில் ஒரு பெண்.. திருமண வயதில். சுமாரான அழகு. நல்ல படிப்பு. அவளுக்கு இயற்கையாக ஒரு சின்னக் குறைபாடு. உதட்டுப் பிளவு. அவளின் பிற குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் அது உள்ளது. அவளை திருமணம் செய்ய வருபவர்கள்.. அந்தக் குறையை நிறையாக பார்க்கவில்லை. குறையாகப் பார்த்ததால்.. அவளுக்கு திருமணம் சரிப்பட்டு வரவில்லை.

அந்தப் பெண்ணிற்கோ.. இரட்டைக் கவலை. ஒன்று தனது தோற்றம் பற்றியது. இரண்டு எதிர்கால வாழ்க்கை பற்றியது.

அறிவியலோ.. சொல்கிறது.. இது ஒரு பரம்பரை சார்ந்த நிலை என்று. மனிதமோ சொல்கிறது.. பாவம் அந்தப் பெண் என்று..??! அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் உதட்டுப் பிளவு தோன்றலாம் என்ற நிலை... தோன்றும் அல்ல... தோன்றலாம்.

இந்த இடத்தில் நீங்கள்.. அது ஆணாக இருக்கலாம்.. பெண்ணாக இருக்கலாம்.. உங்கள் பிள்ளையாக.. சகோதரியாக அந்தப் பெண்ணை பாவனை செய்து.. அல்லது அவளை திருமணம் செய்ய வரும் ஆணை உங்கள் பிள்ளையாக.. சகோதரனாக பாவனை செய்து என்ன முடிவை எடுப்பீர்கள்.

நிதானமாக சிந்தித்து முடிவைச் சொல்ல வேண்டும். இது சும்மா கதை மட்டுமல்ல.. சமூகத்தில் நடக்கிற ஒரு விடயத்தை ஒட்டியது. எத்தனையோ முற்போக்கு நிலைகளை பற்றி எல்லாம் ஆராய்கிறோம்.. இப்படி அறிவியலுக்கும் மானிடத்துக்கும் இடையில் சலனம் வருகின்ற போது எது வெல்லப்பட வேண்டும். அதன் தேவை என்ன.. காரணங்கள் என்ன..??!

குறிப்பு: உங்களில் சிலருக்கு இதில் நேரடி அனுபவமும் இருக்கலாம். நீங்கள் பெயர் ஊர் ஆகியவற்றைக் குறிப்பிடாது.. உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். இது முழுக்க முழுக்க உங்கள் சுய முடிவின் பால் பட்டது. ஆனால் அந்த அனுபவப் பகிர்வு சலனப்படும் உள்ளங்களுக்கு நல்ல வழிகாட்டலை வழங்கி அப்பாவி பெண்களுக்கு அல்லது ஆண்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்ள விரும்பின் பகிர்ந்து கொள்ளலாம்.

Edited by nedukkalapoovan

எனக்கு தெரிந்தவர்கள் சகோதரிகள் இருவருக்கும் உதட்டுப் பிளவு. உள்ளது...அவர்கள் இருவரும் திருமணம் முடித்து விட்டார்கள் பிள்ளைகளும் இருக்கிறார்கள்... ஆனால் இவர்களுக்கு இருக்கும் உதட்டுப் பிளவு. அவர்கள் பிள்ளைகளுக்கு இல்லை... அதனால் என்ன சொல்லுகிறேன் என்றால் பயப்படாமல் கல்யாணம் பண்ணுகிறவர்கள் பண்ணுங்கோ........ :rolleyes:

உணர்சிபூரவமாக இதைப் பார்த்தால் அங்கவீனம் உள்ள பெண்களை வாழ்கைத்துணையாக தெரிவு செய்வதில் நான் உடன் படுகின்றேன். ஆனால் ஆறிவியல்ரீதியிலான சில குறைபாடுகள் உள்ள பெண்களை உ+ ம் பரம்பரை மூலக்கூறின் பிறள்வால் [ maladi genetic , (genatic decisis)] ஏற்படும் குறைபாடுகளுக்கு தீர்வில்லாத நிலையில் வாழ்கைதுணையாக தெரிவு செய்வதற்கு ஒரு அசாத்தியதுணிச்சலும் பரந்த ஆழமாக உழப்பட்ட மனதுடைய ஒரு நபர்தேவை இது எமது சமூக அமைப்பில் மிகவும் அரிது நெடுக்கர். ஆனால் அவர்களும் வாழவேண்டியவர்களே திருமணபந்தத்தில் மனதிற்கு முக்கியம் கொடுக்கும் பொழுது இவைதெரிவதில்லை என்பதும் எனது கருத்தாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பிடித்திருந்தால் கல்யாணம் கட்டுங்கள் கல்யாணத்திற்கு கட்டாயம் கூப்பிடுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொன்ன.. சுஜி.. கோமனுக்கு நன்றிகள். :)

உங்களுக்கு பிடித்திருந்தால் கல்யாணம் கட்டுங்கள் கல்யாணத்திற்கு கட்டாயம் கூப்பிடுங்கள்

ஐயோ அக்கா இது எனக்கில்ல. நானே உதுகள் எதுவுமே வேணான்னு ஒதுங்கி இருக்கிறன். இது நான் இணையத்தில் ஒரு பதிவில் கண்டதை இட்டு எழுதினேன். குறிப்பிட்டவர்கள் விரும்புவார்களோ தெரியாது என்பதால்.. அந்த இணைப்பை வழங்க முடியவில்லை.

மனிதனின் பார்வையில், சகலருக்கும் ஏதோ ஒரு குறைபாடு உண்டு.

இதை வெளி அவையவங்களில் காணும் போது ஊனம் என்பார்கள். உள்ளுறுப்பு ஊனம் ஏதோ ஒரு வியாதியாய் வெளிப்படும். இது சகலருக்கும் பொருந்தும். நாம் எல்லோருமே உடல், மன ரீதியாய் ஊனப்பட்டிருக்கிறோம். அந்தப் பெண்ணின் மீது அவருக்குள்ள ஈர்ப்பைப் பொறுத்தே இது அமையும். மரபணுக் குறைபாடுகளின் தாக்கங்கள் திருமணத்தின் பின்பும் வெளிப்படலாம்.

என்னுடன் வேலை செய்யும் வெள்ளையின நண்பரின் சகோதரருக்கு motor neurone disease உண்டு. அதிகமாக சக்கர நாற்காலியிலேயே இருப்பவர். அவரும், அவருடைய பெண் சிநேகிதியும் சந்தோசமாக வாழ்கிறார்களாம்.

இந்த விடயத்தை தத்துவார்த்த ரீதியில் அணுகுவதிலும் நடைமுறை சாத்தியம் என்பதன் கீழ் அணுகுவதே சிறந்தது என்று நினைக்கிறேன்.

பலர் தத்துவார்த்த ரீதியில் இதனை அணுகி கருத்துக் கூறுகிறார்கள். எனது வினவல்.. உங்கள் சொந்த சகோதரனுக்கு இப்படி ஒரு நிலையில் உள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்க முன் வருவீர்களா என்பதாகவே இருக்கிறது.

அண்மையில் வைத்தியசாலையில் நடந்த சம்பவம்.. ஒரு பெண்.. திருமணமாகி நீண்ட காலத்தின் பின் கருவுற்றிருந்தாள். பல கனவுகள் அந்தக் குழந்தையை இட்டு அவளுக்கு. அவளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இருந்து அவளின் குழந்தைக்கு பிறப்புரிமை சார்ந்த தீர்க்க முடியாத பிரச்சனை என்று இனங்கண்டு கொண்டார்கள். பெற்றோரிடத்திலும் மரபணு பரிசோதனை செய்து கொண்டு குறைபாட்டை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இறுதியில் பெற்றோரிடம் முடிவுக்காக விடயத்தைச் சொன்னார்கள்.

அதைக் கேட்டுவிட்டு அந்தப் பெண்.. ஒரே அழுகை. அவருக்கு வழங்கப்பட்டது இரண்டு தீர்வுகள்..

1. அந்தக் குழந்தையை தொடர்ந்து வளர்த்து பெற்றெடுப்பது.

2. இன்றேல் அந்தக் குழந்தையைக் கருக்கலைப்புச் செய்ய வேண்டும் என்பது.

இறுதியில் பெற்றோர் முடிவு இரண்டுக்கு இணங்கினர். ஒரு சில மணி நேரங்கள்.. ஒரு சில ஊசிகள்.. சில நாட்களில் எல்லாம் முடிந்து போய்விட்டது. அறிவியல் ரீதியில் எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால் அதன் பின்னால் எழுந்த உளவியல் தாக்கம்.. அந்தப் பெண்ணை.. குடும்பத்தை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை அறிவியலால் கணக்கிட முடியாது. அந்தப் பெண்ணின் கண்ணீர் இப்போதும் எனக்குள் நிழலாடுகிறது. அவள் அந்தக் குழந்தையை இட்டு வளர்த்திருந்த கனவுகள் கலையும் போது எவ்வளவு துடித்திருப்பாள்..??! இதுவும் அறிவியலை தாண்டிய ஒன்று.

அந்த வகையில்.. இப்படியான ஒரு நிலையை நோக்கி ஒரு திருமணம்.. ஒரு தம்பதியை இட்டுச் செல்லலாம்.. என்பதை முன்கூட்டியே சொல்லி வைப்பது இந்த இடத்தில் அவர்களுக்கு நல்லதாக அமையும். அதுமட்டுமன்றி.. இப்படியான ஒரு நிலையை தாங்கும் சக்தி.. இருவருக்கும் இருக்கா.. அவர்களைச் சார்ந்தவர்களுக்கு இருக்கா என்பதெல்லாம்.. அறிவியலுக்கு அப்பால் மனிதம் சார்ந்து எழுந்து நிற்கிறது..!

வெகு இலகுவாகச் சொல்லலாம்.. இன்னாருக்கு இப்படி இருந்து சாதாரண குழந்தை பிறந்திருக்கிறது என்று. ஆனால் அவை பிரச்சனைகளுக்கு அப்பால் பிறந்த குழந்தைகளா என்பதும் அறியப்பட வேண்டும்.

திருமணம் என்பதில் குழந்தை என்பது ஒரு முக்கிய காரணி. அதற்காகத் தானே பலர் திருமணமே செய்கிறார்கள். அந்த விடயத்தில் பிரச்சனை வராமல் இருக்க.. அறிவியலும் மனிதமும்.. என்ன செய்தாக வேண்டும்.. ??! இதுவே இவ்விடயத்தில் எனது வினவல். இவை இப்படியான சூழ்நிலைகளால் சலனப்படும் உள்ளங்களுக்கு தீர்வை வழங்கலாம்.

உதட்டுப் பிளவு இன்று தீர்க்கக் கூடிய ஒரு பிரச்சனை என்பதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும்.. அதன் விளைவுகள்.. பூரணமாக தீர்க்கப்பட முடியுமா..??! உதட்டுப் பிளவுக்கு பிறப்புரிமை மட்டுமல்ல.. பிற காரணிகளும் உதவி நிற்கின்றன. அந்த வகையில் வெறும் பிறப்புரிமை சார்ந்து மட்டும் அதன் மீது குற்றம் சுமத்தி முடிவெடுப்பது சரியா..??! இல்லை அங்கு பிரச்சனைக்கு கூடிய சந்தர்ப்பம் உள்ளது.. என்பதை சொல்வதும் அதற்கேற்ப முற்கூட்டிய பாதுகாப்பு, அவதானம் பெறுவதும் தம்பதிகளுக்கு நல்லதா..???! இல்லை இப்படியான திருமணங்களை தவிர்ப்பது நல்லதா.. அதனால் ஏற்படும் உளவியல் தாக்கங்களுக்கு அறிவியல் சொல்லும் விடை தான் என்ன..???! எல்லாம் சிக்கலாக அமைகிறதே..??!

எப்படி இப்படியான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் யுவதிகளை.. இளைஞர்களை மீட்டு வந்து சாதாரண குடும்ப வாழ்வில் இணைய வைப்பது..??! இதுவே இந்தத் தலைப்பின் நோக்கமும் கூட.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் என்டால் என்ட சகோதரங்களுக்கு கட்டி வைக்க மாட்டன் என்டதை விட அவங்கள் கட்ட மாட்டாங்கள் :mellow: ஆனால் தற்போதைய நவீன சிகிச்சை முறைகளால் குணப்படுத்தலாம் என்டால் பிரச்சனை இல்லை...கால்,கை ஊனமானோர் எத்தனையோ பேர் கட்டி சந்தோசமாய் இருக்கிறார்கள்...ஆனால் சில பேர் சொல்கிறார்கள் அவர்களுக்கு இருந்தால் பிள்ளைகளுக்கும் வரும் என்று எனக்கு வடிவாய் தெரியாது...இன்றைய நவீன உலகில் இது எல்லாம் சாதரணம் அவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கவும் ஆட்கள் இருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அழகு என்பது அவரவர் மனத்தைப் பொறுத்தது! சிலருக்கு அழகாகத் தெரிவது, மற்றவருக்கு அழகில்லாமல் இருக்கலாம்!

ஆனால் முடிவெடுக்க வேண்டியவர்கள், சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்!

இரக்கம், பரிதாபம் என்பவற்றின் அடிப்படையில் முடிவெடுக்காமல், அந்தப் பெண்ணின் உள்ளத்தால், அறிவால் கவரப் பட்டவர்கள் மட்டும் திருமணம் செய்ய வேண்டும்!

காலம், கட்டாயம் அவளுக்கொரு துணையைத் தேடித்தரும்!

பொதுவாக எல்லோரும் தமக்கு வரும் வாழ்கைத்துணையை கற்பனை செய்து வைத்திருப்பார்கள், அவர்களின் புற அழகின் கற்பனைக்கு மட்டும் அளவே இருக்காது... அப்படி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒருவருக்கு ஒரு சராசரி ஒரு நபர் தனது வாக்கைத்துனையாக அதுவும் முகத்தில் குறை உள்ளவரை அடைய முன்வருவாரா என்பது சந்தேகம்.

சராசரிக்கும் மேலே ஒரு படி சென்று பார்த்தால், சிலர் இவர்களுடனும் தமது வாழ்கையை பகிர்ந்து வாழ்கிறார்கள்...

1) ஊரில் எனக்குத் தெரிந்த உதட்டுப் பிளவுடன் ஒரு அண்ணர் இருந்தார், அவர் கதைப்பதை புரிந்து கொள்ளவது மிகவும் சிரமமாக இருக்கும். ஒருதரம் ஆமியின் சுற்றிவளைப்பில் துரதிஸ்ரவசமாக பிடிபட்டு அவங்கள் கொண்டு போய் வாயில் துவக்கால் அடித்ததில் காதுவரைக்கும் கிழிந்து தையல் போட்டு இருந்தார்... அதன்பிறகு அவரின் முகத்தை பார்க்கவே மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

சமாதான காலத்தில் ஊருக்குப் போனபோது தற்செயலாக காணும் சந்தர்ப்பம் கிடைத்தது அவரின் வீடு வரைக்கும் போனேன். தமது திருமணம் காதல் திருமணம் என்று (பெண்வீட்டாரின் எதிர்ப்புடன்) கூறினார். அவர்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகளும் கடைசி பெண்பிள்ளையும் உண்டு. இருவருக்கு அவரைப் போன்று உதட்டுப் பிளவு இல்லை, ஆனால் கடைசி மகளுக்கு அவரைப் போலவே இருந்தது. பெண்பிள்ளைக்கு வந்திருப்பதால், தமக்குத் 'தீராத கவலை' என்று கண்கலங்க சொன்னார்கள்.

2) என்னுடன் வேலை செய்யும் நண்பர் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர் அவருக்கோ அல்லது அவரது மனைவிக்கோ இப்படியான வருத்தம் இல்லை ஆனால், அவர்களின் [தற்போது ஏழுவயது] மகன் குறை மாதத்தில் பிறந்ததால் நீண்ட காலம் tubes பொருத்ததிய படியே தான் சாப்பாடு, தண்ணீர் எல்லாம் கொடுத்தார்கள், அதனால் மேலுதடில் ஒரு பகுதி மிகக் குறைவு. கதைப்பது தாய்க்கே சில சமையங்களில் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும் என்று சொன்னார். இன்னும் Great Ormond Street Hospital-க்கு அடிக்கடி செக் அப் என்று கொண்டு போவார்கள். சாதாரண பள்ளிக்கூடத்திற்கே அனுப்புகிறார்கள், இருப்பினும் அங்கே மனரீதியாக அந்தப் பிள்ளை சில நெருக்கடிகளை சந்திப்பதாக சொல்லிக் கவலைப் படுவார்.

எனக்கு அறிவியல் சம்பந்தமாக சொல்லத்தெரியவில்லை... மனுசத்தன்மையின் படி பார்த்தால், எல்லோரும் வாழப் பிறந்தவர்கள், குறைபாடு இல்லாத மனிதன் என்று யாரும் இல்லை. கடவுளின் படைப்பில் ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது.

இப்படி ஒருவரின் வாழ்க்கையுடன் எனது வாழ்க்கையையும் சேரும் சூழ்நிலை ஏற்படின், அதை ஏற்றுக் கொள்ளவேன், அதே நேரம் எதிர் காலத்தில் எமக்கு பிள்ளை ஒன்று வேணும் என்பதற்காக குறையுடன் ஒரு உயிரை உருவாக்குவத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. [அதனை சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை எனக்கு இருக்குமா என்பதும் சொல்லத்தெரிய இல்லை.] வாழ்க்கைத்துணை சமதித்தால் குறைந்தது ஒரு பிள்ளையாவது தத்தெடுத்து வளர்ப்பதையே ஊக்குவிப்பேன்.

எனது சகோதர சகோதரிக்கு இப்படி இருந்தால், அவர்களின் விருப்பத்தை அறிந்து மேற்கொண்டு செயல்படுவேன்.

எனது சகோதர, சகோதரி இப்படி இருப்பவர் ஒருவரை வாழ்க்கைத்துணையாக்க விரும்பினால், எனது நிலைமையில் இருந்து என்ன செய்வேன் என்று கூறினேனோ அதையே கூறுவேன். அதற்கு மேல் அவர்களின் முடிவு, ஆனால் என்னால் முடித்தளவு ஆதரவு இருக்கும்.

Edited by குட்டி

தலைப்பில் உள்ள மேற்கண்ட பெண்ணின் படத்தை சில வருடங்களிற்கு முன்னர் வலைத்தளத்தில் பார்த்த ஞாபகம். நான் அறிந்தவரையில் யாராவது உதட்டுபிளவுடன் பிறந்தார்கள் எனும் காரணத்தினால் திருமணம் செய்யமுடியவில்லை என்று கேள்விப்படவில்லை. அத்துடன் அவ்வாறு திருமணம் செய்த எவருக்காவது அதே குறைபாட்டுடன் குழந்தைகள் பிறந்ததாகவும் காணவில்லை. எனது நண்பன்; மருத்துவன் ஒருவன் மேற்கண்ட குறைபாடு உள்ள பெண் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கின்றார்.

பரம்பரை வியாதிகள் என்று பார்த்தால் பெற்றோரில் இருந்து பிள்ளைக்கு தொடர்கின்ற உயிரையே கொல்கின்ற ஆயிரம் வியாதிகள் உள்ளன. அந்தவகையில் ஒப்பிட்டு பார்க்கும்போது மேற்கண்ட குறைபாடு ஓர் பொருட்டு அல்ல. தற்செயலாக குழந்தை பிளவடைந்த உதடு/அன்னத்துடன் பிறந்தாலும் வெளிநாடுகளை பொறுத்த அளவில் தகுந்த சிகிச்சைகளை பெறுவதன்மூலம் குறைகளை நிவர்த்தி செய்யமுடிகின்றது.

இந்த விடயத்தை தத்துவார்த்த ரீதியில் அணுகுவதிலும் நடைமுறை சாத்தியம் என்பதன் கீழ் அணுகுவதே சிறந்தது என்று நினைக்கிறேன்.

பலர் தத்துவார்த்த ரீதியில் இதனை அணுகி கருத்துக் கூறுகிறார்கள். எனது வினவல்.. உங்கள் சொந்த சகோதரனுக்கு இப்படி ஒரு நிலையில் உள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்க முன் வருவீர்களா என்பதாகவே இருக்கிறது.

அண்மையில் வைத்தியசாலையில் நடந்த சம்பவம்.. ஒரு பெண்.. திருமணமாகி நீண்ட காலத்தின் பின் கருவுற்றிருந்தாள். பல கனவுகள் அந்தக் குழந்தையை இட்டு அவளுக்கு. அவளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இருந்து அவளின் குழந்தைக்கு பிறப்புரிமை சார்ந்த தீர்க்க முடியாத பிரச்சனை என்று இனங்கண்டு கொண்டார்கள். பெற்றோரிடத்திலும் மரபணு பரிசோதனை செய்து கொண்டு குறைபாட்டை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இறுதியில் பெற்றோரிடம் முடிவுக்காக விடயத்தைச் சொன்னார்கள்.

அதைக் கேட்டுவிட்டு அந்தப் பெண்.. ஒரே அழுகை. அவருக்கு வழங்கப்பட்டது இரண்டு தீர்வுகள்..

1. அந்தக் குழந்தையை தொடர்ந்து வளர்த்து பெற்றெடுப்பது.

2. இன்றேல் அந்தக் குழந்தையைக் கருக்கலைப்புச் செய்ய வேண்டும் என்பது.

இறுதியில் பெற்றோர் முடிவு இரண்டுக்கு இணங்கினர். ஒரு சில மணி நேரங்கள்.. ஒரு சில ஊசிகள்.. சில நாட்களில் எல்லாம் முடிந்து போய்விட்டது. அறிவியல் ரீதியில் எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால் அதன் பின்னால் எழுந்த உளவியல் தாக்கம்.. அந்தப் பெண்ணை.. குடும்பத்தை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை அறிவியலால் கணக்கிட முடியாது. அந்தப் பெண்ணின் கண்ணீர் இப்போதும் எனக்குள் நிழலாடுகிறது. அவள் அந்தக் குழந்தையை இட்டு வளர்த்திருந்த கனவுகள் கலையும் போது எவ்வளவு துடித்திருப்பாள்..??! இதுவும் அறிவியலை தாண்டிய ஒன்று.

அந்த வகையில்.. இப்படியான ஒரு நிலையை நோக்கி ஒரு திருமணம்.. ஒரு தம்பதியை இட்டுச் செல்லலாம்.. என்பதை முன்கூட்டியே சொல்லி வைப்பது இந்த இடத்தில் அவர்களுக்கு நல்லதாக அமையும். அதுமட்டுமன்றி.. இப்படியான ஒரு நிலையை தாங்கும் சக்தி.. இருவருக்கும் இருக்கா.. அவர்களைச் சார்ந்தவர்களுக்கு இருக்கா என்பதெல்லாம்.. அறிவியலுக்கு அப்பால் மனிதம் சார்ந்து எழுந்து நிற்கிறது..!

வெகு இலகுவாகச் சொல்லலாம்.. இன்னாருக்கு இப்படி இருந்து சாதாரண குழந்தை பிறந்திருக்கிறது என்று. ஆனால் அவை பிரச்சனைகளுக்கு அப்பால் பிறந்த குழந்தைகளா என்பதும் அறியப்பட வேண்டும்.

திருமணம் என்பதில் குழந்தை என்பது ஒரு முக்கிய காரணி. அதற்காகத் தானே பலர் திருமணமே செய்கிறார்கள். அந்த விடயத்தில் பிரச்சனை வராமல் இருக்க.. அறிவியலும் மனிதமும்.. என்ன செய்தாக வேண்டும்.. ??! இதுவே இவ்விடயத்தில் எனது வினவல். இவை இப்படியான சூழ்நிலைகளால் சலனப்படும் உள்ளங்களுக்கு தீர்வை வழங்கலாம்.

உதட்டுப் பிளவு இன்று தீர்க்கக் கூடிய ஒரு பிரச்சனை என்பதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும்.. அதன் விளைவுகள்.. பூரணமாக தீர்க்கப்பட முடியுமா..??! உதட்டுப் பிளவுக்கு பிறப்புரிமை மட்டுமல்ல.. பிற காரணிகளும் உதவி நிற்கின்றன. அந்த வகையில் வெறும் பிறப்புரிமை சார்ந்து மட்டும் அதன் மீது குற்றம் சுமத்தி முடிவெடுப்பது சரியா..??! இல்லை அங்கு பிரச்சனைக்கு கூடிய சந்தர்ப்பம் உள்ளது.. என்பதை சொல்வதும் அதற்கேற்ப முற்கூட்டிய பாதுகாப்பு, அவதானம் பெறுவதும் தம்பதிகளுக்கு நல்லதா..???! இல்லை இப்படியான திருமணங்களை தவிர்ப்பது நல்லதா.. அதனால் ஏற்படும் உளவியல் தாக்கங்களுக்கு அறிவியல் சொல்லும் விடை தான் என்ன..???! எல்லாம் சிக்கலாக அமைகிறதே..??!

எப்படி இப்படியான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் யுவதிகளை.. இளைஞர்களை மீட்டு வந்து சாதாரண குடும்ப வாழ்வில் இணைய வைப்பது..??! இதுவே இந்தத் தலைப்பின் நோக்கமும் கூட.

எனது சகோதரன் அந்தப் பெண்ணை விரும்பினால் குறுக்கே நிற்கமாட்டேன். அன்னப்பிளவு குறைபாட்டை சத்திரசிகிச்சைகளால் குணப்படுத்தலாம் எனக் கூறுகிறார்கள். அதே வேலை பிறக்கும் குழந்தைக்கும் இந்தக் குறைபாடு கடத்தப்படலாம் என்பதையும் விளக்கிக் கூற வேண்டும். நீங்களே கூறியுள்ள மாதிரி இது மிகவும் சிக்கலான விடயம். வாழப்போகும் இருவரும்தான் முடிவெடுக்க வேண்டும்.

மருத்துவத்துறையில் சாத்தியமானால், எல்லோரும் திருமணத்திற்கு முன்பு மரபணுப் பொருத்தம் பார்ப்பது நல்லதென நினைக்கிறேன்.

உங்கள் தொழில் நடந்த அந்த துயரச் சம்பவம் போல் இங்கு சில தமிழ் தம்பதியர்களுக்கும் நடந்துள்ளது. கருவில் உள்ள குழந்தைக்கு down syndrome கண்டுபிடிக்கப்பட்டு கருக்கலைக்கப்பட்டுள்ளது. ஆசையாய் எதிர்பார்த்த குழந்தையை அழிப்பது மிகவும் வேதனையான விடயம். சிலர் அடுத்த குழந்தை வேண்டாமென்றும் இருக்கிறார்கள்.

இது நல்லதொரு திரி.

குடும்ப வாழ்க்கை என்று வரும்பொழுது தமிழர்களிடையே காதல், விவாகரத்து, பொருளாதாரப் பிரச்சனை......... போன்றவைகள்தான் ஆராயப்படுகின்றன. இப்படியான விடயங்களுக்கு முகம் கொடுக்க எதோ ஒரு தயக்கம்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியலா...மனிதமா..

தலைப்பு எடுப்பாக இல்லைப்போலும்.ஆகவே கருத்தாளர்களின் கண்களுக்கு தெரியமறுக்கிறது..சில தலைப்புக்கள் கருத்துக்காக விடப்பட்ட சொற்ப நேரத்துக்குள்ளயே பல பக்கங்களை தாண்டிப்போய் விடும்..சிலதுகள் அப்படியே கிடக்கும்............ஏன்????????????????????????????????????? think_smiley_57.gif :rolleyes:

உண்மைதான் யாயினி.

முறிந்து போன இதழ்களில் முத்தம் இடலாமா? என தலைப்பு இட்டிருந்தால் பதிவர்களின் மனதில் ஒரு சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவியலா அல்லது மனிதமா என்பதை விட ஒரு மனிதனின் மனபக்குவம்தான் சகலதையும் முடிவெடுக்கும்.

817_822_2.jpg

அண்மையில் ஒரு நிகழ்வு தொடர்பான இணையக் கதையைப் படிச்சிருந்தேன். அது எனது மனதில் ஆழமான பாதிப்பை உண்டு பண்ணிவிட்டுள்ளது. அதில் ஒரு பெண்.. திருமண வயதில். சுமாரான அழகு. நல்ல படிப்பு. அவளுக்கு இயற்கையாக ஒரு சின்னக் குறைபாடு. உதட்டுப் பிளவு. அவளின் பிற குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் அது உள்ளது. அவளை திருமணம் செய்ய வருபவர்கள்.. அந்தக் குறையை நிறையாக பார்க்கவில்லை. குறையாகப் பார்த்ததால்.. அவளுக்கு திருமணம் சரிப்பட்டு வரவில்லை.

அந்தப் பெண்ணிற்கோ.. இரட்டைக் கவலை. ஒன்று தனது தோற்றம் பற்றியது. இரண்டு எதிர்கால வாழ்க்கை பற்றியது.

அறிவியலோ.. சொல்கிறது.. இது ஒரு பரம்பரை சார்ந்த நிலை என்று. மனிதமோ சொல்கிறது.. பாவம் அந்தப் பெண் என்று..??! அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் உதட்டுப் பிளவு தோன்றலாம் என்ற நிலை... தோன்றும் அல்ல... தோன்றலாம்.

இந்த இடத்தில் நீங்கள்.. அது ஆணாக இருக்கலாம்.. பெண்ணாக இருக்கலாம்.. உங்கள் பிள்ளையாக.. சகோதரியாக அந்தப் பெண்ணை பாவனை செய்து.. அல்லது அவளை திருமணம் செய்ய வரும் ஆணை உங்கள் பிள்ளையாக.. சகோதரனாக பாவனை செய்து என்ன முடிவை எடுப்பீர்கள்.

நிதானமாக சிந்தித்து முடிவைச் சொல்ல வேண்டும். இது சும்மா கதை மட்டுமல்ல.. சமூகத்தில் நடக்கிற ஒரு விடயத்தை ஒட்டியது. எத்தனையோ முற்போக்கு நிலைகளை பற்றி எல்லாம் ஆராய்கிறோம்.. இப்படி அறிவியலுக்கும் மானிடத்துக்கும் இடையில் சலனம் வருகின்ற போது எது வெல்லப்பட வேண்டும். அதன் தேவை என்ன.. காரணங்கள் என்ன..??!

குறிப்பு: உங்களில் சிலருக்கு இதில் நேரடி அனுபவமும் இருக்கலாம். நீங்கள் பெயர் ஊர் ஆகியவற்றைக் குறிப்பிடாது.. உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். இது முழுக்க முழுக்க உங்கள் சுய முடிவின் பால் பட்டது. ஆனால் அந்த அனுபவப் பகிர்வு சலனப்படும் உள்ளங்களுக்கு நல்ல வழிகாட்டலை வழங்கி அப்பாவி பெண்களுக்கு அல்லது ஆண்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்ள விரும்பின் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் நினைக்கவில்லை இப்ப பாவம் பார்த்து யாராவது திருமணம் செய்வினம் என்று. ஒரு தமிழ் தந்தை எனக்குச் சொன்னார் இப்பத்தையத் தமிழ் ஆண் சமுதாயம் வடிவு பார்த்து இந்திய பெண்களைத் திருமணம் செய்வதாக. அதனால் எமது பெண் பிள்ளைகளுக்கு மணமகன் தேடுவது மிகக் கடினம் என்று. :( இப்படிக் குறைபாடடும் இருந்தால்....... :wub:

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி பிளவு உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புவதும் மணந்து கொள்வதும் இரு வேறுபட்டவர்கள் தாங்கள் ஏதோ வகையில் கவரப்பட்டு காதலர்களாக ஏன் திருமணம் வரை கூட செல்லாம். விருப்பத்தை கட்டாயப்படுத்த முடியாது. அது தானாக வரவேண்டும்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் இப்படியான குறைபாடு உடையவர்கள் நுண்ணியமான சத்திர சிகிச்சை மூலம் தம்மை குணப்படுத்திக்கொள்கிறார்கள்.ஆகவே இதெல்லாம் இப்போ ஒரு குறை என கூற முடியாது.

புற அழகு நிலையற்றது. திருமணமான பெரும் அழகிகளும்.. ஆன்ரிகளாகும் போது அழகு குலைந்து போயிருக்கிறார்கள். இதற்கு சாட்சியாக முன்னாள் உலக அழகிகள்.. நடிகைகளைக் காட்டலாம்.

இங்கு புற அழகிற்கு அப்பால்.. பிறப்புரிமை சார்ந்த பிரச்சனை என்பது அறிவியல் சார்ந்து எழுகின்ற போது.. அது அவர்களின் சந்ததிக்கும் காவப்படலாம் என்ற நிலையில் அவை தொடர்பில் வரக் கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம் இந்த விடயத்தில் கூட வர வேண்டும். பலர் தங்களுக்கு அழகான குழந்தை வேணும் என்று தான் நினைப்பார்கள். அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு. ஆனால் திருமணங்கள் மன விருப்பம் போல.. எப்போதும் சந்ததிகளை உருவாக்குவதில்லை. அங்கு பிறப்புரிமை.. டி என் ஏ.. தனது வேலையை செய்யவும் வேண்டி உள்ளது. அந்த வகையில் இங்கு பிரச்சனைக்கான வாய்ப்பு சாதாரணமானவர்களிலும் சற்று அதிகம் என்பதால்.. இந்த விடயத்தில் தோன்றக் கூடிய பிரச்சனைகளை மனக் கோணல் இன்றி.. கையாளக் கூடிய நல்ல மனப் பக்குவம்.. வேண்டும். அதை வரவழைத்துக் கொள்ளக் கூடியவர்கள்.. நிச்சயம் இவ்வாறான பெண்களுக்கு வாழ்வளிப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதற்கு சமூகத்தில் இது தொடர்பான அறிவு வேண்டும். அது எம்மத்தியில் நிறைந்திருகிறதா என்பது கேள்விக் குறியே..??!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி பிளவு உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புவதும் மணந்து கொள்வதும் இரு வேறுபட்டவர்கள் தாங்கள் ஏதோ வகையில் கவரப்பட்டு காதலர்களாக ஏன் திருமணம் வரை கூட செல்லாம். விருப்பத்தை கட்டாயப்படுத்த முடியாது. அது தானாக வரவேண்டும்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் இப்படியான குறைபாடு உடையவர்கள் நுண்ணியமான சத்திர சிகிச்சை மூலம் தம்மை குணப்படுத்திக்கொள்கிறார்கள்.ஆகவே இதெல்லாம் இப்போ ஒரு குறை என கூற முடியாது.

பிரச்சனைக்கு தீர்வு இருக்கு. ஆனால்.. சில சத்திர சிகிச்சைகள் அல்ல.. பல சத்திர சிகிச்சைகளும் சில வேளைகளில் தேவைப்படலாம். அதுமட்டுமன்றி கேள் திறன்.. பேச்சுத் திறன் மற்றும் உளவியல் பிரச்சனைகளும் இங்கு தோன்றலாம். இவற்றை எதிர்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வராது. தனது குழந்தைக்கு பல தடவைகள்.. சத்திர சிகிச்சை செய்வதை பெற்றோர்கள் தாங்கிக் கொள்வார்களா..??! சில சந்தர்ப்பங்களில் பிரச்சனை சிக்கலுக்குரியது என்றால் கருக்கலைப்புக்கும் கோரப்படலாம். அவற்றை எல்லாம் எதிர்கொள்ளும் சக்தி இருக்கிறதா.. என்பதும் இங்கு அவசியம். கருக்கலைப்புக்கள் பின் விளைவுகளையும் உண்டு பண்ணலாம். அதனால் எதிர்காலத்தில் குழந்தைகள் கிடைக்கக் கூடிய வாய்ப்பையும் இழக்க நேரிடலாம். இவை எதுவுமே இன்றி சாதாரண குழந்தைகளும் பிறக்கலாம். அந்த வகையில் தோன்றும் சூழல் இங்கு பல்தேர்வுக்குரிய ஒன்றாக இருக்கையில்.. எப்படி இத்தகைய தம்பதிகள்.. தங்களை சூழ்நிலைக் கேற்ப சமாளித்துக் கொண்டு மீள்வார்கள்..?! அதற்கான வழிமுறைகள் என்ன.. இவற்றை தெளிவு படுத்தும் போது.. இப்படியான பிரச்சனைகளோடு வாழும் பிரஜைகளுக்கு நிச்சயம் நல்ல வாழ்வு கிடைக்க வழி பிறக்கும் என்றே நினைக்கிறேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக மனதில் எழுந்தவை.

இப்படிப்பட்ட நிலையில் பாதிப்புக்குள்ளானவரை திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்போது சொத்தின் மதிப்பை அறிய வேண்டிய ஆவல் ஏற்படுகிறது.

பிள்ளையாக.. சகோதரியாக அந்தப் பெண்ணை பாவனை செய்யும் பட்சத்தில் பிரத்தியேக சத்திர சிகிச்சை செய்து, திருமணம் என்றுவரும்போது சொத்துகளை கொடுத்தாவது திருமணத்த்தை நடத்தி விட வேண்டும் என்றே நினைப்பே இருக்கும். அதே சமயம் பணத்துக்காக திருமணம் செய்யாதவராக இருக்க வேண்டும் என்பதில் அவதானம் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.