Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம்

Featured Replies

நான் ஹரிபோட்டர் பார்க்கப் போயிருந்தன். அப்ப கண்டன்..!

முடிஞ்சால்.. screen 1 இல் போட்டா பாருங்க. அது பெருந்திரை..! :D:)

screen சின்னதாக இருந்தாலும், படத்தை நிம்மதியாகப் பார்க்க வேணும்... :D

நான் தமிழ் படத்திற்கு ஒரு நாளும் அங்க போனது இல்லை

தமிழ் படத்திற்கு போய்வந்தவர்கள் சொன்னார்கள் கணவாய்க் கறி பார்சலோட வந்திருந்து எல்லாம் சாப்பிடுவினமாம் என்று... :blink:

  • Replies 50
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் படம் பார்க்க ஆசைதான். பட்...............தனியே போகத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கு.

உங்கள மாதிரி ஆக்களுக்கு கம்பனி கொடுக்கத்தான்.. றோட்டில நிப்பினமே. பேசாம.. இரவு 9 மணிக்கு சோவுக்கு போங்க. அங்கின றோட்டில நிக்கிறதுகளை கூட்டிக் கொண்டு போகலாம். என்ன.. காசு கொடுத்து நோயை வாங்கிறது போல.. காரியம். அதைக் காட்டிலும்.. தனிய போய் பார்க்கிறது நல்லம். சொல்லிப்புட்டன். அப்புறம் ஏதாச்சு நடந்திச்சு என்னில வரப்படாது. :lol::D

screen சின்னதாக இருந்தாலும், படத்தை நிம்மதியாகப் பார்க்க வேணும்... :D

நான் தமிழ் படத்திற்கு ஒரு நாளும் அங்க போனது இல்லை

தமிழ் படத்திற்கு போய்வந்தவர்கள் சொன்னார்கள் கணவாய்க் கறி பார்சலோட வந்திருந்து எல்லாம் சாப்பிடுவினமாம் என்று... :blink:

இரண்டு மூன்று தடவை.. தமிழ் படங்கள் சில பார்க்கப் போயிருக்கன். அப்படி பெரிய குழப்படி என்றில்ல. படம் தொடங்கினாப் பிறகு சத்தம் போட்டால் வெளில பிடிச்சு துரத்திப் போடுவினம். கூட்டம் அதிகம் என்றால் பொலிஸை வெளில போடுவினம். வெளி இடங்களிலும் பார்க்க.. குழப்படி தான். ஆனால் தமிழ் சனமே தமிழ் சனத்தைப் பற்றி மிகைப்படுத்திச் சொல்லுற கணக்கா அங்க காணேல்ல..! :D:)

எனக்கும் படம் பார்க்க ஆசைதான். பட்...............தனியே போகத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கு.

எந்தப் படமாக இருந்தாலும் தனியா பார்க்கிறது தான் safe...

screen சின்னதாக இருந்தாலும், படத்தை நிம்மதியாகப் பார்க்க வேணும்... :D

நான் தமிழ் படத்திற்கு ஒரு நாளும் அங்க போனது இல்லை

தமிழ் படத்திற்கு போய்வந்தவர்கள் சொன்னார்கள் கணவாய்க் கறி பார்சலோட வந்திருந்து எல்லாம் சாப்பிடுவினமாம் என்று... :blink:

அட பாவிங்களா

'ஹரிபோட்டர்' படம் பார்க்கும் பொழுதும் கணவாய்க் கறியா? :o

...

இரண்டு மூன்று தடவை.. தமிழ் படங்கள் சில பார்க்கப் போயிருக்கன். அப்படி பெரிய குழப்படி என்றில்ல. படம் தொடங்கினாப் பிறகு சத்தம் போட்டால் வெளில பிடிச்சு துரத்திப் போடுவினம். கூட்டம் அதிகம் என்றால் பொலிஸை வெளில போடுவினம். வெளி இடங்களிலும் பார்க்க.. குழப்படி தான். ஆனால் தமிழ் சனமே தமிழ் சனத்தைப் பற்றி மிகைப்படுத்திச் சொல்லுற கணக்கா அங்க காணேல்ல..! :D:)

முதல் தடவையா தமிழ் படத்திற்கு தியோட்டர் பக்கம் உங்கட பேச்சை நம்பி அங்கே போகலாம் என்று இருக்கிறேன்... :D:)

the o2 greenwich-க்கு நண்பர்களோடு போய் இருக்கிறேன் Senna பார்ப்பதற்கு வித்தியாசமான atmosphere அமைதியான, மிகுந்த கரகோசத்துடன் பார்த்த படம் :)

அட பாவிங்களா

'ஹரிபோட்டர்' படம் பார்க்கும் பொழுதும் கணவாய்க் கறியா? :o

ஹிஹி... :lol::D தமிழ் படத்திற்கு போய்வந்த சிலதுகள் எனக்கு றீல் விட்டு இருக்குதுகள் போல...

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தடவையா தமிழ் படத்திற்கு தியோட்டர் பக்கம் உங்கட பேச்சை நம்பி அங்கே போகலாம் என்று இருக்கிறேன்... :D:)

வெளியிடங்களில் இருக்கிற செளகரியத்தை விட குறைவு என்றாலும்.. படம் பார்க்க முடியும். நான் 9 மணி சோக்குத் தான் நண்பர்களோடு போனனான். பகலில் போக நேரம் கிடைக்கல்ல. அதுவும் இல்லாம நமக்கு மாணவர்கள் ரிக்கெட் என்பதால்.. விலைக் கழிவுகளும்.. இலவசங்களும் உண்டு. அதைப் பயன்படுத்திறது. :lol::D

Edited by nedukkalapoovan

நல்லதொரு தமிழ் சினிமா பார்த்து கனகாலம்.

சிலதுகள் வந்தாலும் வேற்று மொழியின் தழுவலாகவே இருக்கும். தமிழில் அதிகமாக வன்முறைக்கே முதலிடம். திரையில் யாராவது அரிவாளைத் தூக்கினாலே, இருக்கையை விட்டு ஓடிவந்து விடுவேன்.

இங்கு, இந்தப் படத்திற்கு அதிகம் வரவேற்புள்ளது. லண்டனில் பல இடங்களில் திரையிடுகிறார்கள். அடுத்த கிழமை பார்க்கலாம் என்றுள்ளேன்.

வெளியிடங்களில் இருக்கிற செளகரியத்தை விட குறைவு என்றாலும்.. படம் பார்க்க முடியும். நான் 9 மணி சோக்குத் தான் நண்பர்களோடு போனனான். பகலில் போக நேரம் கிடைக்கல்ல. அதுவும் இல்லாம நமக்கு மாணவர்கள் ரிக்கெட் என்பதால்.. விலைக் கழிவுகளும்.. இலவசங்களும் உண்டு. அதைப் பயன்படுத்திறது. :lol::D

செளகரியங்களுக்காக என்று இல்லை, எம்மவர்கள் அன்புத் தொல்லையைக் காட்டி நெஞ்சடைக்கப் பண்ணிவிடுவார்கள் என்று ஒரு பயம்.... ^_^:blink::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் படம் பார்க்க ஆசைதான். பட்...............தனியே போகத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கு.

கைகாவலுக்கு........ துணையாய் நான் வரட்டே? :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைகாவலுக்கு........ துணையாய் நான் வரட்டே? :wub:

நீங்களே! ஒன்று மப்போட வருவிங்கள் அல்லது தேவார புத்தகத்தோட வருவிங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே! ஒன்று மப்போட வருவிங்கள் அல்லது தேவார புத்தகத்தோட வருவிங்கள்.

:lol::lol:

நெடுக்கர் நல்லாத்தான் கடலை போடுறார். :lol:

கு. சா வும் கறுப்பியை விடுவதாக இல்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=0sy5mKRTU8c

மேலே இருக்கும் இந்த இரண்டு திரைப்படங்களையும் தியேட்டரில் கூட்டிப்போய் காட்டினால்தான் எனக்குத் தெய்வத்திருமகள் படத்திற்கான அனுமதி கிடைக்குமாம் :(

http://www.youtube.com/watch?v=TG3HENOagdc

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் பெயர் சீயான் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

24 ஜூலை 2011

என் பெயர் சாம் என்பது தமிழில் தெய்வமகனாகத்தான் இருக்க முடியும். அனாதைகளும் மாற்றுத்திறனாளிகள் என அழைக்கப் பெறும் ஏதேனும் ஒரு பிறவிக்குறை கொண்டவர்களையும் கடவுளின் குழந்தைகள் என அழைப்பதும் நமது மரபு. தெய்வமகன் சிவாஜிகணேசனின் பேடன்ட்ரைட் என்று அவரது புதல்வர் பிரபு சொல்ல, தெய்வமகள் தெய்வத் திருமகனாகி, அதுவும் தேவர் குலதெய்வம் முத்துராமலிங்கத்தின் பேடன்ட்ரைட்டாக இருக்க, திருமகன் திருமகளாகி, இறுதியில் தெய்வத்திருமகள் படம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

தெய்வத்திருமகள் படத்தின் மூலமான ஐ ஆம் சாம் - என் பெயர் சாம் பார்த்திருந்தேன். அதில் கதாநாயகனாக நடித்திருந்த சான் பென்னை பல காரணங்களுக்காக எனக்குப் பிடிக்கும். ஹாலிவுட் சினிமாவில் இருக்கக் கூடிய இயக்குனர்களான பிரான்சிஸ் போர்ட் கொப்போலா, ஆலிவர் ஸ்டோன் போன்று, அரசியல் கடப்பாடுடைய நடிகர்களில் ஒருவர் சான் பென். கியூபாவின் ஆதரவாளர். அதனோடு ஈராக் யுத்தத்தின் எதிர்ப்பாளர். செப்டம்பர் தாக்குதல் குறித்து அற்புதமானது குறும்படம் தந்தவர். பாடகி மடோனாவின் முன்னாள் கணவர் மற்றும் மிகச் சிறந்த நடிகர்.

முதலில் ஒன்றை முழுமையாகச் சொல்லிவிட வேண்டும். தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் உழைப்புக்கும் நடிப்புக்கும், குழந்தை சாராவின் நடிப்புக்கும் நமது தலைதாழ்ந்த வணக்கத்தைச் செலுத்திவிடுவோம். படத்தின் தனித்தனித் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நமது சந்தோஷத்தைத் தெரிவித்துவிடுவோம். இன்னும் சிற்சில ஷாட்களை - குறிப்பாக நிலவுடன் பேசும் விக்ரம் மற்றும் விக்ரமும் தோழர்களும் பலூன்களுடன் சாலையைக் கடக்கும் காட்சி - ஒவியம் போல ஆக்கியிருக்கும் நீரவ்ஷாவுக்கும் எமது மகிழச்சியைத் தெரிவித்து விடுவோம்.

ஆராரோ ஆரிரரோ பாடலுக்காகப் பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கும், தொழில்ரீதியில் இவை அனைத்தையும் ஒன்றினைத்தற்காக இயக்குனர் விஜய்க்கும் ‘சாதாரண’ திரை ரசிகராக எமது மகழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்வோம். எல்லாம் இருந்தாலும் தெய்வத்திருமகள் படத்தினை விமர்சனமற்றுக் கொண்டாடுவது தமிழ் சினிமாவுக்கு நல்லது அல்ல என்பதையும் சொல்லி விடுவோம்.

ஐ ஆம் சாம் அமெரிக்கத் திரைப்படம். படம் வெளியாகி பதின்மூன்று ஆண்டுகளில் பின் தமிழில் அதனை விஜய் உருவாக்கி இருக்கிறார். தமிழில் இப்படி வெளிநாட்டுப் படங்களின் கருத்தாக்கங்களை மட்டுமல்ல காட்சி அமைப்புக்களையும் உருவி நிறைய படங்கள் வந்திருக்கிறது.

கமல்ஹாஸன், பாலுமகேந்திரா, மிஸ்கின், மணிரத்னம் என எல்லோருமே இதனைச் செய்துவருகிறார்கள். கருத்தாக்கங்களை உருவுவதை, அந்தத் திரைப்படத்தின் தாக்கம், அதை எமது மக்களின் சூழலுக்குத் தகுந்த மாதிரி செய்திருக்கிறேன் என ஒரு இயக்குனர் சொல்ல முடியும். ஓரு நல்ல கலைஞன் அப்போதும் கூட தனது ஆதாரத்தைச் சொல்வதுதான் அழகு. அது போகட்டும், காட்சியமைப்பையே உருவி வைத்துவிட்டு அதுவும் தன்னுடையதுதான் எனச் சொல்லிக் கொள்வது அசலான கலைஞனுக்கு அழகு இல்லை.

கமல்ஹாஸன் முதல் விஜய் வரையிலும் இதுவரையிலும் இந்த ஒப்புதலை, மகேந்திரன்(உதிரிப்பூக்கள் மற்றும் சாசனம்) மற்றும் வெற்றிமாறன் (ஆடுகளம்) தவிர, எந்தத் தமிழ் சினிமா இயக்குனரும் செய்ததில்லை. இப்போது விஜய் ஐ ஆம் சாம் படத்தினை அதனது சில காட்சிகளோடு உருவி, ஊட்டிக்கும் தமிழ்சினிமா சென்டிமெனட்டுக்குத் தகுந்த வகையில் திரைப்பாத்திரங்களையும் உருவாக்கி, ‘எ பில்ம் பை விஜய்’ என நமக்கு முன்பாக வைத்திருக்கிறார்.

இதனால் பெற்றிருப்பதனைவிடவும், பெற்றிருக்கு வேண்டிய, பெற வேண்டிய, நாம் இழந்துவரும் பண்புகளைச் சுட்டிக் காட்டுவது தமிழ் சினிமாவின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதால் அவைகளைச் சுட்டிக்காட்ட வெண்டியிருக்கிறது.

ஐ ஆம் சாம் திரைப்படம் நிகழும் சூழலும் காலமும் கதைமாந்தரின் இருப்பும் குறித்துப் பார்ப்போம். சாம் அவனது தாயினால் வளர்க்கப்பெற்ற, ஆடிசம் எனும் பிறவிக் குறைக்கு உள்ளான,மனநிலப் பாதிப்புக் கொண்ட ஒரு ஆண். அவன் சிறுவனாக இருந்தபோதே அவனது தந்தை அவனது தாயை விட்டுப் போய்விடுகிறான். அமைதியான குடும்பத்தில் வளரும் வாய்ப்பை இதனால் இவன் இழக்கிறான். இவனது குறையிலிருந்து மீள்வதற்கான வாயப்பு இதனால் இவனுக்கு இல்லாது போகிறது. இவன் உறவு கொள்கிற பெண் வீடற்ற ஒரு பெண். இவனுக்கும் நிரந்தரமான ஆதாரங்கள் கொண்ட இருப்பிடம் இல்லை. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தையையும் இவனையும் நடுத்தெருவில் விட்டுப் போகிறாள் இவனது பெண்தோழி. குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பு முழுமையாக இப்போது சாமுக்கு வருகிறது.

சாமின் உலகம் என்பது இவ்வாறு ஏதேனும் ஒருகையில் குறையுடன் பிறந்த, பிரதான சமூகத்தினின்று ஒதுக்கப்பட்ட அவனது நண்பர்கள்தான். சாமுக்கும் அவனது குழந்தைக்கும் இடையிலான நெகிழ்ச்சியான உறவுதான் படத்தின் பிரதான மையம். இப்படத்தில் விளிம்புநிலை மனிதர்களின் உருவாக்கம், அதற்கான காரணங்கள், அவர்கள் பிரதான சமூகத்துடன் நெறிகளுடன் கொள்ளும் முரண், நிலவும் சட்டமுறைகள் அவர்களுக்கு எதிராக இருப்பது என எத்தனையோ விடயங்கள் படத்தில் ஒரு சமூகத்தின் சித்திரம் எனும் அளவில் நமக்குள் விரிகிறது.

ஆட்டிசம் என்பது அமெரி;க்காவிலும் மேற்குலகிலும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அதைப்போலவே டிசிலக்சியா என்பதும் குழந்தைகளின் வளர்ச்சியில் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. சொற்களைக் கோர்வையாக அமைத்து தர்க்கபூர்வமாக, நிதானமாகப் பேசுவது என்பது இவ்வகையிலானவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கும். நிதானமாக சொற்களைக் கோர்வைப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் இவர்கள், சிந்தனையின் பாய்ச்சலாக இருக்கும் அருவ கணிதத்தில், அதனது சூத்திரவடிவிலான ஒழுங்கில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் வளரும் சூழலில், குடும்பநிலைமை, இவர்களோடு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உரையாடல்கள் போன்றன காலப்போக்கில் இவர்களிடம் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

ஐ ஆம் சாம் படம் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நுட்பமாக பதிவு செய்திருக்கிறது. ஓரு தேநீர்விடுதியில் வேலை செய்வதில் சாம் காட்டும் ஒழுங்கு முறை, பிற்பாடு தனது வழக்குரையுரின் வழிகாட்டுதலுடன் அவன் மேற்கொள்ளும் வழக்குமன்ற உரையாடல்கள் எல்லாம் சாமின் இந்த வளர்ச்சியைச் சொல்லிக் கொண்டே போகின்றன. அமெரிக்கச் சட்டம் சாமினால் பெண் குழந்தையை வளர்க்க முடியாது எனச் சொல்ல, வழக்குமன்றம் குழந்தையை ஒப்புவிக்கும் வளர்ப்புப் பெற்றோர், குறிப்பாக அந்தப் பெண் சாமின் குழந்தை ஜெஸ்ஸிகாவை இறுதிக் காட்சியில் சாமினிடமே ஒப்படைக்கிறார்கள். சாம் ஜெஸிக்காவுக்கென ஒரு தாயைத் தேடிக் கொண்டிருக்கும் அவனது ரகசியத்தை அப்பெண்ணிடம் சொல்கிறான்.

குறைவளர்ச்சியுள்ள மனிதர்கள் கொண்ட சமூகக் குழ. அந்தக் குழவின் நிராதரவான மனிதர்கள் பிரதான சமூகத்தவரிடம், நீதிநிறுவனங்களிடம் எதிர்கொள்ளும் பாராமுகம், அதை எவ்வாறு மகத்தான அன்பின் வழி அவர்கள் வென்று வாழ்கிறார்கள் என்பதுதான் ஐ ஆம் சாமிக் கதைக் கரு.

குழந்தை இறுதியில் சாமிடம்தான் வளர்கிறாள். அது மட்டுமல்ல இந்தத் திரைப்டத்தில் சாமுக்காக வாதிடும் வழக்குரைஞர் பெண்மணி, குழந்தையுடன் நெருக்கம் என்பது பெற்றோருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கிறாள். அவளது கணவன் அவளை விட்டுப் போய்விடுகிறான். என்றாலும் தனது ஆண்குழந்தையை அவள் மிகுந்த கவனிப்புடன் வளர்க்கவேண்டியது தனது பொறுப்பு என்பதை இப்போது அதிகமாக உணர்கிறாள். இந்த உணர்வு தான் சாமிடமிருந்து பெற்றது என்பதை அவள் சாமிடம்; சொல்லவும் செய்கிறாள்.

ஓரு வகையில் சாம் போன்ற மனிதர்களின் குறைகளுக்கான காரணம் சரியான பெற்றோரது கவனிப்பும், உரையாடலும் இல்லாததுதான் எனும் உண்மையையும் படம் நமக்குச் சொல்லிச் செல்கிறது.

தமிழ்படத்தில் பாத்திரப்படைப்புக்களுக்கு வரலாறு என்பதும் அவர்களது வாழ்க்கைச் சூழல் என்பதும் சொல்லப்படுவது இல்லை. விக்ரமுக்கு ஏன் அவ்வாறு நேர்ந்தது? அவரது குடும்பப் பின்னணி என்ன? விக்ரமை பணக்கார வீட்டுப்பெண் எப்படிச் சந்தித்தாள்? அவளுக்கு விக்ரமை திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? விக்ரமின் குழந்தையிடம் மட்டும், அவர் யாரென்று அறியாமலே அக்குழந்தையிடம் மட்டும் ஒரு பள்ளியின் தாளாளருக்குத் தனிக் கவனம் வரவேண்டிய அவசியம் என்ன? விக்ரம் ஏன் கடைசி வரையிலும் கொஞ்சமும் மாறாமலேயே படைக்கப்பட்டிருக்கிறார்? அனுஷ்க்காவின் தகப்பனுக்கும் அவரது தகப்பனான ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இருக்கும் விலக்கத்திற்கான காரணம் என்ன?

இந்தப் படத்தில் விக்ரம் குறைவளர்ச்சியுள்ள மனிதர்களின் ஒரு சமூகத்தைப் பிரதிபலிப்பதில்லை. விஜய்க்கு வேண்டியிருந்ததெல்லாம் விக்ரமுக்கு நடிக்க ஸ்கோப் உள்ள ஒரு நல்ல உணர்ச்சிகரமான தமிழ் சினிமா நாடகப் பாணி கதை. குழந்தையைக் கடைசியாக தனது மனைவியின் தங்கையிடமும், குழந்தையின் தாத்தாவிடமும் விட்டுவிட்டு விக்ரம் இருளில் கரைந்துவிடுகிறார்.

தாய்மை பெண்களுக்கு மட்டும் உரியது அல்ல. அது ஆண்களுக்கும் உரியதுதான். இதுதான் ஐ ஆம் சாம் படத்தின் அழகிய செய்தி. இந்த மகத்தான செய்தியை தெய்வத்திருமகள் படம் அழித்திருக்கிறது. படத்தின் இறுதிக் காட்சி கதாநாயகனை தியாகி ஆக்குவதன் மூலம் அவனை தெய்வத் திருமகன் ஆக்குவதற்காகவே வைக்கப்பட்ட காட்சி.

ஓரு கண்ணீர்க் காவியத்தை விஜய் கொடுத்திருக்கிறார் என எவரும் சொல்ல முடியும். இதைப் போன்ற பல கண்ணீர்க் காவியங்களை சிவாஜிகணேசன் ஏற்கனவே தந்து சென்றிருக்கிறார். இரத்தமும் கவிச்சையும் நாறும் தமிழ் சினிமா வெளியில்; தெய்வத்திருமகள் ஆறுதலாகவும் அமைதியாகவும் வந்திருப்பது வரவேற்கத்தக்க முயற்சிதான் என்றாலும், ஐ ஆம் சாம் படத்தின் ஆதாரமான, அழகான தந்தைமை அன்பு எனும் செய்தியை அதற்காக நாம் இழந்திருக்கிறோம் எனும் போது, இந்தப் படத்தினை, தமிழ் சினிமாவில் அபூர்வமான சிருஷ்டிகளை எதிர்பார்ப்பவர்களால் கொண்டாட முடியாது போகிறது.

தெய்வத் திருமகள் எந்தவகையிலும் ஐ ஆம் சாமின் மேன்மை கொண்டது இல்லை, ஜஸ்ட், ஐ ஆம் சீயான்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64553/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் அழகான விடயங்களில் ஒன்று அதன் ஒளித்தொகுப்பு...முடிந்தால் தியேட்டர் போய் வாருங்கள்; இன்னும் அதிகமாக ரசிப்பீர்கள் சிறி

நிழலி, தியேட்டருக்குப் போய் படத்தைப் பார்த்த்தால்.... அங்கு நமது சகோதரங்கள் செய்யும் வேலைகளைப் பார்த்து பிரஷர் கூடிவிடும்.

கடைசியாக அறிவிலி இணைத்ததையாவது பார்ப்போம் என்றால்... அந்த இணப்பில் எழுத்தோட்டம் வரை வந்து ... அப்படி நின்றுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

படம் இணையத்தில் பார்த்தேன். சின்னப் பெண்ணின் நடிப்பு மற்றும் விக்ரத்தின் நடிப்பைத்தவிர படம் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. இதைவிட அண்மையில் பார்த்த நந்தலாலா படம் பிடித்திருந்தது.

நடிப்பு: மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வத் ராம்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி

தயாரிப்பு: அய்ங்கரன்

இயக்கம்: மிஷ்கின்

  • கருத்துக்கள உறவுகள்

அழுகிறதுக்கு ஆயிரம் விசயங்கள் இருக்கு.காசு கொடுத்தோ அல்லது இலவசமோ ஒன்றில் சிரிச்சு மகிழ வேனும்.அல்லது கிழுகிழுப்பாய' இருக்க வேனும்.மற்றும் படி ரோற்றல் வேஸ்ற் :lol:

நிழலி, தியேட்டருக்குப் போய் படத்தைப் பார்த்த்தால்.... அங்கு நமது சகோதரங்கள் செய்யும் வேலைகளைப் பார்த்து பிரஷர் கூடிவிடும்.

கடைசியாக அறிவிலி இணைத்ததையாவது பார்ப்போம் என்றால்... அந்த இணப்பில் எழுத்தோட்டம் வரை வந்து ... அப்படி நின்றுவிட்டது.

என்ன மிஸ்டர்.தமிழ்சிறி...இதுக்கெல்லாம்போயி யாராச்சும் மனச உடைஞ்சிபோகவிடுவாங்களா?

அந்தப்படம் மட்டுமில்ல........ தமிழ்சினிமாவில இதுவரை வந்த எந்தப்படம்பார்க்கணும்னாலும் இந்த வெப்சைட்ல பார்க்கலாம்!

http://www.tamilflix.net/2011/07/16/matomy/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுகிறதுக்கு ஆயிரம் விசயங்கள் இருக்கு.காசு கொடுத்தோ அல்லது இலவசமோ ஒன்றில் சிரிச்சு மகிழ வேனும்.அல்லது கிழுகிழுப்பாய' இருக்க வேனும்.மற்றும் படி ரோற்றல் வேஸ்ற் :lol:

நல்ல ...அடக்க ஒடுக்கமான கருத்து :)

  • கருத்துக்கள உறவுகள்

அரிவிலியின் புண்ணியத்தில் நானும் படம் பார்த்தேன். தற்போது வெளிவந்த படங்களில் தரமான படம். ஆனால் இடையே அனுஷ்க்காவும் விக்ரமும் கனவில் டூயட் பாடுவது கதைக்குப் பொறுத்தமில்லை. அதேபோல விக்ரம் பிள்ளையைக் கடைசியாக மனைவியின் தங்கையிடம் கொடுத்துவிட்டுப் போவதும் புரியவில்லை. நாசர் சொல்லும்வரை விக்ரமுக்கு அது புரியவில்லை (தன்னால் பிள்ளையைப் பராமரிக்க முடியாதென்பது) என்பதும் சந்தேகம்தான். நிறைய ஓட்டைகள், ஆனால் விக்ரமும், பிள்ளையும் அசத்தியிருக்கிறார்கள்.

கமலுக்குப் பின்னர் யாரென்று பார்த்திருந்தோம், நானிருக்கிறேன் என்று விக்ரம் காட்டியிருக்கிறார்.

படம் இணையத்தில் பார்த்தேன். சின்னப் பெண்ணின் நடிப்பு மற்றும் விக்ரத்தின் நடிப்பைத்தவிர படம் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. இதைவிட அண்மையில் பார்த்த நந்தலாலா படம் பிடித்திருந்தது.

நடிப்பு: மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வத் ராம்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி

தயாரிப்பு: அய்ங்கரன்

இயக்கம்: மிஷ்கின்

எனக்கென்னமோ.............மொதல்ல வந்த குழந்தைகள் படத்துல மனச பாதிச்சது இதுதான்....!

யாராச்சும் முழுசா பாத்து இருக்கிங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மிஸ்டர்.தமிழ்சிறி...இதுக்கெல்லாம்போயி யாராச்சும் மனச உடைஞ்சிபோகவிடுவாங்களா?

அந்தப்படம் மட்டுமில்ல........ தமிழ்சினிமாவில இதுவரை வந்த எந்தப்படம்பார்க்கணும்னாலும் இந்த வெப்சைட்ல பார்க்கலாம்!

http://www.tamilflix.net/2011/07/16/matomy/

இணைப்பிற்கு, நன்றி அறிவிலி. வருகின்ற சனி, ஞாயிறு தான்..... ஆறுதலாக பார்க்க முடியும். :)

இணைப்பிற்கு, நன்றி அறிவிலி. வருகின்ற சனி, ஞாயிறு தான்..... ஆறுதலாக பார்க்க முடியும். :)

அதுக்குள்ளே இணைப்பை தூக்கிடுவாங்க. :lol: :lol:

அதுக்குள்ளே இணைப்பை தூக்கிடுவாங்க. :lol: :lol:

அடங்கொண்ணீயா............அதுவும் போய்ச்சா?? ?????????

நல்ல ராசிப்பா...தெய்வதிருமகளுக்கும் ...நம்ம தமிழ்சிறிக்கும்! அதனால என்ன? விட்டுருவோமா?

மறுபடியும் படம் காட்டுவம்ல! (இது எப்போ புட்டுகிடுதோ எவனுக்கு தெரியும்)! :unsure:

http://www.tubekolly.com/watch/69eab0a3862d50018a9b/Deiva-Thirumagal-PRE-DVD

  • 3 weeks later...

தெய்வதிருமகள்,அழகர்சாமியின் குதிரை இரண்டும் பார்த்தேன் ரசித்தேன்.இப்படிஇடைக்கிடை படங்கள் வரவேண்டுமேன்பதே எனது அவா.

குட்டி குறும்படமும் பல வருடங்களின் முன் பார்த்து அசந்ததுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.