Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர் என்றுகூற வெட்கம் என்றார்: சந்திரிகா

Featured Replies

இலங்கையின் கொலைக்களங்களை பார்த்த என் மகன், இலங்கையர் என்றுகூற வெட்கம் என்றார்: சந்திரிகா

பிரித்தானிய தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஆவணப்படத்தைப் பார்த்த 28 வயதான தனது மகன், தான் ஓர் இலங்கையர் எனவும் பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக தெரிவித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிகழ்த்திய, முன்னாள் நீதியரசர் கே.பாலகிட்ணர் நினைவுச் சொற்பொழிவின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'பொருளாதார அபிவிருத்தி, உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் சமாதானம்' என்ற தலைப்பில் திருமதி சந்திரிகா குமாரதுங்க பிரதான உரையாற்றினார்.

28 வயதான எனது மகன் பிரித்தானிய தொலைக்காட்சியில் பார்த்தபின்னர் தான் ஓர் இலங்கையர் எனவும் பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த காலை வேளையை நான் எனது வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். எனது மகளும் இதேபோன்ற கருத்தை தெரிவித்தார். எமது நாட்டவர்கள் இத்தகைய பயங்கர நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பது குறித்து அவர் அதிர்ச்சியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தினார்.

எனது மகனும் மகளும் மற்றவர்களை கவனித்துக்கொள்கிறார்கள் என்பது குறித்து நான் பெருமையடைகிறேன். அவர்கள் தமது தந்தை, தாய் விரும்பியபடியான மனிதர்களாக வளர்ந்துள்ளார்கள் என்பது குறித்து நான் பெருமையடைகிறேன் என உணர்ச்சிவசப்பட்டவராக திருமதி சந்திரிக்கா குமாரதுங்க கூறினார்.

'ஒரு தேசம் என்ற வகையில் இலங்கையர்கள் தோல்வியடைந்துவிட்டோம்' என்பதை ஏற்றுக்கொள்ளும் தன்னடக்கத்தை நாம் கொண்டிருப்போம். எமது தவறுகளை ஒப்புக்கொள்வதற்கான நேர்மையையும் திருத்தங்களை செய்வதற்கான பெருந்தன்மையையும் நாம் கொண்டிருப்போம். நிரூபிக்கப்பட்ட உண்மைகளையும் நேர்மையான விமர்சனங்களையும் தொடர்ச்சியாக நிராகரிப்பது எவரினதும் பிரச்சினையைத் தீர்க்காது. நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பை அடையும் உயரிய இலக்கிற்கு எமது தலைவர்கள் தலைமை தாங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் பயங்கர வன்முறை மோதல்களுக்கு 1956 ஆம் ஆண்டின் தனிச்சிங்கள சட்டமே காரணம் என அவர் கூறினார்.

தமிழ் இயக்கத்தின் மொழி சமத்துவத்துக்கான கோரிக்கை அரசினால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டமை சமஷ்டி கோரிக்கைக்கும் இறுதியாக தனிநாட்டு கோரிக்கைக்கும் இட்டுச் சென்றது. 1958, 1977, 1980, ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை என்பன சமாதானத்திற்கு ஆதரவான தமிழ் பொதுமக்களைகூட, சிங்கள ஆதிக்கமுள்ள நாட்டில் நீதியையும் சமவுரிமையையும் அடைய முடியாது என்று நம்பச் செய்தன.

சிறுபான்மையினரின் அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 1972, 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புகள் தவறின.

யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி கொண்டமை குறித்து நானும் மிக மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் நாம் யுத்தத்தில் வென்றாலும் சமாதானத்திற்கான யுத்தத்தில் இன்னும் வெற்றி பெற ஆரம்பிகக்க்கூட இல்லை என்ற உண்மையை குறித்து நான் கண்மூடியிருக்க முடியாது.

சமாதானத்தை வெல்வதற்கு ஏனையோரை அபிவிருத்தியில் மாத்திரமல்லாமல், அதிகார பரவலாக்கத்துக்கான அரசாங்கத்தின் செயன்முறைகளில் முழுமையான, சமத்துவ பங்களார்களாக முழுமையாகவும் நேர்மையாகவும் உள்ளடக்க வேண்டும்.

நீண்டகாலமாக தீர்க்கப்படாத தமிழர் பிரச்சினையின் விளைவான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தமிழ் சிவில் சமூகம் வேறுபட்டது என்பதை யுத்தத்தில் வெற்றி கொண்ட அரசாங்கமும் சிங்கள சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் ஏனையோரைப்போன்றே இலங்கையில் சமத்துவமான பிரஜைகளாக வாழும் அவாவைக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் ஐக்கியமான அமைதியான இலங்கையில், சமத்துவமான உரிமைகளையும் வாய்ப்புகளையும் கொண்டவர்களாக சிங்களவர்களுடன் எமது சகோதர சகோதரிகளாக வாழ விரும்புகிறார்கள். இலங்கை பிரிக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த செயன்முறையாக இருக்கும்.

அதேவேளை, மறுபுறம் சிங்களவர்களின் அச்சத்தை நியாயப்படுத்துவற்கு காரணங்கள் இருக்கின்றன என்பதை நான் கூறத் துணிகிறேன். இலங்கை மீது 14 நூற்றாண்டு காலத்தில் 52 தடவை தென்னிந்திய ஆட்சியாளர்கள் படையெடுத்துள்ளனர் என்பதை வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. அவர்கள் சில தடவை வெற்றிகொண்டார்கள். சிங்கள மக்களின் பொதுவான அச்சத்திற்கு இது போதுமானதாக இருக்கலாம்.

பலமான தேசிய அடையாளத்தை ஒன்றிணைந்து ஏற்படுத்துவதற்காக அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் பௌதத்தை அரச மதமாக பின்பற்றினர். அத்துடுன் எதிரிக்கு எதிராக போரிடுவதற்கு படைத்திரட்டுவதற்கும் அதை பயன்படுத்தினர். நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வழங்கப்பட்ட மாகாண சபை முறைமையை வடக்கு கிழக்கிற்கு ஏன் வழங்க முடியாது? சிறுபான்மையினருடனும் அவர்களின் தலைவர்களுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எம்மிடமிருப்பதை பகிர்ந்துகொள்வதால் எமது பலம்குறைந்துவிடப்போவதில்லை. மாறாக அது பிரிந்திருக்கும் சமூகங்களை ஒன்றிணைக்கும்.

நாட்டின் தலைவராக இருந்த எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் நான் தனிப்பட்ட ரீதியில் சமஷ்டிக்கு அர்ப்பணிப்புடன் இருந்தேன் எனவும் அவர் கூறினார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/25251-2011-07-24-23-32-06.html

  • கருத்துக்கள உறவுகள்
:lol: உவான்ர அப்பாதான் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்ததே. அதிலிருந்துதான் மற்ற எல்லாச் சிங்களத் தலைவர்களும் இனவாதம் பேசத் தொடங்கினார்கள். அம்மா வந்து இன்னும் இனவாதம் பேசினா. இவ 94 இல வந்து சமாதானத்துக்கான போர் எண்டு ஆயிரக்கணக்கில கொன்றுகுவிச்சவ. நவாலித் தேவாலயம், சூரியக்கதிர், புதுக்குடியிருப்புப் பாடசாலை, மன்னார் மடுத்தேவாலயம் எண்டு இண்டைக்கு மகிந்த செய்தத்தைத்தான் அண்டைக்கு அவவும் செய்தவ. இதுக்குள்ள இலங்கையர் எண்டு சொல்ல வெட்கமாக் கிடக்காம். சாத்தான் வேதம் ஓதுது !!!!!
  • கருத்துக்கள உறவுகள்

கிறிசாந்தி படுகொலை, செம்மணிப் படுகொலை ஒன்றையும் இந்த அம்மையாருக்கு தெரியாதா?????

  • தொடங்கியவர்

சந்திரிக்காவின் இந்த கூற்றை நாம் எமக்கு சாதகமாக பாவிக்கலாமா?

அதாவது அவர்களுக்குள் 'நாம் இலங்கையர்' என கூற வெட்கம் என்பது அவர்களின் தேசப்பற்று என்ற ஒற்றுமைக்குள் ஒரு வெடிப்பு வந்துள்ளதாக பார்கலாமா?

இந்த சனல் நாலு ஒளிப்பதிவை இளைய சிங்கள தலைமுறைகள் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் 'தாம் இலங்கையர்' என கூற வெட்கப்படுவது என்ற செய்தி முடங்கியுள்ளது. இந்த கருவை நாம் பரப்புரை ரீதியாக சிங்கள இளைய தலைமுறையை நோக்கி நகர்த்திப்பார்க்கலாம்?

சிங்களவனால் நடத்தப்படும் Daily Mirror ஆங்கிலப் பத்திரிகையில் இதே பேச்சுஇடம்பெற்றுள்ளது. அதில் இத்திரியில் இடப்பட்டுள்ள தலைப்புடன் தொடர்புடைய கருத்துக்கள் எதையும் காணவில்லை. குறிப்பாக 1956 உம் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

சிங்களவனின் கீழ் முஸ்லிம்களால் நடத்தப்படும் Daily Mirror தமிழ் பத்திரிகையில் சிங்களக் காட்டுமிராண்டிகளில் நல்லவர்களும் உண்டு என்று தமிழரை ஏமாற்றும் முயற்சியா? அல்லது போர்குற்றச் சாட்டு உண்மையாகிவிடும் என்ற பயத்தில் ஆங்கிலத்தில் இவற்றை மறைத்துவிட்டனரா?

ஆனால் ஒருசில மாற்றுக் கருத்துத் தமிழனோ, புலிகள் செய்யாதவற்றையும் செய்ததாக, அதுவும் காலத்துக்குக் காலம் புதுப்புதுக் காரணங்களைக் கண்டுபிடிப்பதுடன் அது உண்மை எனவும் நம்பி, தானும் ஏமாந்து, மற்றவரையும் ஏமாற்றி தமிழினத்துக்கு குழிபறித்து வருகிறான்.

Power sharing will bring communities together-CBK

Monday, 25 July 2011 00:00

By Yohan Perera

Former President Chandrika Bandaranaike Kumaratunga, while posing the question why the North and the East cannot be given provincial councils like the rest of the country, said yesterday that the government should negotiate with minorities and come to a consensus as to what could be offered to them.

“We must negotiate with the minorities and their leaders and make concessions as required. Sharing what we possess with others will not reduce our strength but enhance it by bringing together divided communities” she pointed out while delivering the late Justice K. Palakidnar memorial lecture at SLFI yesterday (24).

Recalling how she strived for peace during her tenure as the President of Sri Lanka, Ms. Kumaratunga said that her government was able to change the attitude of the majority Sinhalese as they had opted for peace and devolution of power when her government had only been in power for two years. Ms. Kumaratunga also posed a question as to whether she would have been wrong to abolish executive presidency. “I wonder when I see the state the country is in today if the government has adopted an authoritarian rule not to strengthen democracy and strengthen human rights but to do the opposite,” she said.

She said that our victorious government that had defeated terrorism should comprehend that the Tamil civil community was different to the LTTE which was an extremist outfit making use of a long unresolved Tamil problem. On the other hand she pointed out that there were reasons to justify the fears Sinhalese hold as history showed that ancient Lanka had been invaded 52 times in 14 centuries by the South Indian rulers. She also explained that consecutive Lankan rulers adopted Buddhism as the main religion to respond to specific events that took place historically.

“I too am glad that the war has ended and terrorism was defeated. But I cannot blind my self to the fact that although we have won the war we have not even begun to win the battle for peace,” she said stressing that winning peace meant including others in development and power sharing too. Ms. Kumaratunga said that the Sinhalese only policy of 1972 and the 1978 constitutions, both contributed to the escalation of the ethnic problem. She became emotional when speaking of her children’s sentiments on viewing the recent documentary, “Sri Lanka Killing Fields” on Channel 4.

http://print.dailymirror.lk/news/news/51015.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கொலைக்களங்களை பார்த்த என் மகன், இலங்கையர் என்றுகூற வெட்கம் என்றார்: சந்திரிகா

அட, உங்களுக்குக் கூட இந்த உணர்ச்சிகள் எல்லாம் இன்னும் இருக்கின்றதா?

நவாலிப் படுகொலைகளைப் பற்றி உங்கள் மகனுக்குச் சொல்லுங்கள்!

அதையும் நீங்களே செய்ததாகச் சொல்லுங்கள்!

உங்கள் மகன் உங்களுடன் இனிமேலும் இருக்க மாட்டான்!

உங்கள் ரத்வத்தை மாமாவைப் பற்றியும் உங்கள் மகனுக்குச் சொல்லி வையுங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் நிரந்தரமாக நண்பன்என்றும் பகைவன்என்றும் என்று இரண்டு இல்லை. .

ரணில் மகிந்தாவுடன் சேருகிறார். சந்திரிகாவும் ஒரு புதிய பாதையில் போவதால்த்தான் தன்னை வேறுபடுத்திக்கொள்ள முடியும்.

இலங்ககை அரசியலில் சந்திரிக்கா ஒருவர் மட்டுமே தான் தமிழர்களுடன் சமாதானம் செய்யப்போகிறேன் என்று கூறி பதவிக்கு வந்தவர். மற்றவர்கள் அதை கனவிலும் நினைக்கமுடியாது.

" இந்நாட்டின் பயங்கர வன்முறை மோதல்களுக்கு 1956 ஆம் ஆண்டின் தனிச்சிங்கள சட்டமே காரணம்" இந்த வசனத்தை அவர் முன்னைய காலங்களிலும் கூறிஉள்ளார்.

இன்னமும் எல்லா நாடுகளிளும் (சீனா, இந்தியா, ரூசியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து) அதிக நட்புப் பலம் கொண்டவர். இவரது பலம்தான் புலிகளை சர்வதேச பயங்கரவாதிகள் போல் காட்டியது. இதைத்தான் ராசபக்சா ஆயுதம் வாங்க பாவித்தது.

நிறைய வாதிடலாம். ஆனால் காற்றுள்ள போது தூற்றி கொள்.

இவரின் முளுமையான ஆங்கில உரையை பார்த்து விட்டு அதை எல்லா அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் அனுப்ப வேண்டும்.

Edited by மல்லையூரான்

வெட்கப்படத்தானே வேண்டும். கிடைத்த சந்தர்பங்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழனை இலங்கையராக நடத்தாத சிங்களவர் அனைவரும் இதற்கு வெடகப்படத்தான் வேண்டும். இலங்கையர் என்றல்ல சக மனிதனுக்குரிய உரிமைகளைக் கூட மறுத்தமைக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்த முடியும் - சந்திரிக்கா :

25 ஜூலை 2011

அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பினை ஏற்படுத்த முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களுடன் அரசாங்கம் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஏனைய மாகாணசபைகளைப் போன்றே வடக்கு கிழக்கிலும் மாகாணசபைகள் இயங்குவதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்வதன் மூலம் பலவீனமடைவதாகக் கருத முடியாது எனவும், பல்வேறு இன சமூகங்கள் ஒன்றிணைவதனால் எமது பலம் மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதவான் கே. பாலகிட்னார் நினைவுப் பேருரையில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்காமையின் மூலம் தாம் தவறு இழைத்து விட்டதாக கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினை குறித்த பெரும்பான்மை சிங்கள மக்களின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்த அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் மாறுபட்ட விதத்தில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்ற போதிலும் சமாதானம் என்ற போராட்டத்தை வென்றெடுப்பதற்கு உரிய முனைப்பு காட்டப்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனிச்சிங்கள சட்டங்களினால் இனப்பிரச்சினை உக்கிரமடைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரலாற்று காலம் முதல் தென்னிந்தியர்களினால் இலங்கையின் மீது படையெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 14 நூற்றாண்டகளில் 54 தடவைகள் தென்னிந்திய படையினர் இலங்கை மீது படையெடுப்புக்கள் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதன் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு தொடர்பில் அச்சம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64602/language/ta-IN/article.aspx

இவா நல்லா நடிப்பா.

எல்ல சிங்கள தலைமையும் துவெசிகள் தான்.

நல்ல பெயர் எடுத்து ஜ.நா வில் வேலை தேடி அலைகிறா.

கெட்டவன் ரத்வத்தை செய்த அநியாயம் மறக்க முடியாது.

யாழ்ப்பாணத்தை சனம் இல்லாம பிடித்து போட்டு இவளுக்கு பரிசு என்டு பாராளுமனறத்தில் ஓலை கொடுத்தவன்.

சிங்களம் பழி வாங்க பட வேண்டிய இனம். எம்சந்ததி மறக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் ஆட்சிக்காலத்தில் இவரால் ஏவிய இராணுவத்தினர் செய்த கொடூர கொலைகள் இவருக்கும், இவாவின் அருமை மகனுக்கும் செரியாதா .........................?

  • கருத்துக்கள உறவுகள்

பதில் ரொம்ப சுலபமானது

எந்த பதவியும் இல்லாததால் வந்த வரிகள்

பண்டாரநாயக்க குடும்பத்தை மறக்க மன்னிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, கொழும்பில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் வீடியோ குறித்து கண் கலங்கி தழுதழுத்த குரலில் உரையாற்றினார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணரின் நினைவுப் பேருரையில் சொற்பொழிவாற்றுகையிலேயே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு கண்கலங்கினார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பாக தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா குமாரதுங்க, உரையின் இறுதிப் பகுதியில் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த “இலங்கையின் கொலைக்களம்” என்ற வீடியோ தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

இந்த வீடியோவை பிரிட்டன் தொலைக்காட்சியொன்றில் பார்வையிட்ட 28 வயதான தனது மகன், தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக விம்மியழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார்.மேலும் தனது மகளும் இதே கருத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கண் கலங்கிய சந்திரிகா, சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார்.மேலும் தனது பிள்ளைகள், பாதிக்கப்பட்ட மற்றவர்களின் நலன் குறித்து சிந்திப்பது தொடர்பாக, தான் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டார்.

“சமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி” என்ற தலைப்பில் சந்திரிகா குமாரதுங்க இந்நிகழ்வில் சொற்பொழிவாற்றியது குறிப்பிடத்தக்கது. ஈழ இணையம்

இப்போ இப்படியானவர்களின் வாக்குமூலத்தை வைத்து ராஜபக்சாவை எப்படி விழுத்தலாம் என்பதைவிட்டு நீர் என்ன திறமோ என்பதுதான் தமிழன் பலவீனம்.இதில் தான் சிங்களவன் மீண்டும் மீண்டும் வெற்றிபெறுகின்றான்.

சந்திரிக்கா பதவியிலில்லாவிட்டாலும் உலகமறிந்த,செல்வாக்கான பிரமுகர்.எமது ஆய்வாளார்கள் எவ்வளவு கத்தியும் வெளியில் போகாதது சந்திரிகா சொன்னது பீ.பீ.சீ தலையங்க செய்தி.

இன்னொரு முக்கியமானது சந்திரிகா ஒரு சிங்களவர்,அவர்கள் வாயில் இருந்து இப்படியான கருத்துக்களை கேட்பதே அபூர்வம்.இப்படியானவற்றிற்றுதான் நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.அதைவிட்டு மனம் திருந்தி விட்டாரா,உண்மையாக சொல்லுகின்றாரா என்பதெல்லாம் தேவையில்லாதது.

இப்போ இப்படியானவர்களின் வாக்குமூலத்தை வைத்து ராஜபக்சாவை எப்படி விழுத்தலாம் என்பதைவிட்டு நீர் என்ன திறமோ என்பதுதான் தமிழன் பலவீனம்.இதில் தான் சிங்களவன் மீண்டும் மீண்டும் வெற்றிபெறுகின்றான்.

சந்திரிக்கா பதவியிலில்லாவிட்டாலும் உலகமறிந்த,செல்வாக்கான பிரமுகர்.எமது ஆய்வாளார்கள் எவ்வளவு கத்தியும் வெளியில் போகாதது சந்திரிகா சொன்னது பீ.பீ.சீ தலையங்க செய்தி.

இன்னொரு முக்கியமானது சந்திரிகா ஒரு சிங்களவர்,அவர்கள் வாயில் இருந்து இப்படியான கருத்துக்களை கேட்பதே அபூர்வம்.இப்படியானவற்றிற்றுதான் நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.அதைவிட்டு மனம் திருந்தி விட்டாரா,உண்மையாக சொல்லுகின்றாரா என்பதெல்லாம் தேவையில்லாதது.

உணமைய சொல்லணும்னா , இந்த களத்தில ,பல இடங்களில உங்களபத்தி நீங்களே எடுத்துவிடுற , வில்லுப்பாட்டை பார்த்தாலே எனக்கு அலர்ஜிக்! ஆனா அத்தி பூத்தாற்போல சில கருத்துக்களை சொல்லுவீங்க பாருங்க, அங்கினதான் எல்லாரையும் விட சிலசமயம் ,நீங்க உயர்ந்து நிக்கிறீங்க சார்! கையோட பச்சையும் குத்திடுறேன்!

  • தொடங்கியவர்

Former Sri Lankan President speaks out on Killing Fields

Former Sri Lankan President Chandrika Bandaranaike Kumaratunga delivered a landmark speech in Colombo on Sunday in which she spoke of the horror her children expressed after viewing Sri Lanka's Killing Fields.

Jon Snow's critically-acclaimed investigation into the final weeks of the quarter-century-long civil war between the government and the secessionist rebels, the Tamil Tigers, featured devastating new video evidence of war crimes and crimes against humanity - some of the most horrific footage Channel 4 has ever broadcast.

http://www.channel4.com/info/press/news/former-sri-lankan-president-speaks-out-on-killing-fields

சந்திரிகா ஒரு சிங்களவர்,அவர்கள் வாயில் இருந்து இப்படியான கருத்துக்களை கேட்பதே அபூர்வம்.இப்படியானவற்றிற்றுதான் நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.அதைவிட்டு மனம் திருந்தி விட்டாரா,உண்மையாக சொல்லுகின்றாரா என்பதெல்லாம் தேவையில்லாதது.

மிக நல்ல கருத்து.

ஆனால், ஈழத்தமிழர் படுகொலைகளில் முக்கிய பாத்திரம் வகித்த சந்திரகா குமாரதுங்க என்ற சிங்களப் பயங்கரவாதியின் கூற்றுக்களை சமயோசிதமாக பயன்படுத்தும் அதேவேளை, சந்திரகா குமாரதுங்க என்ற சிங்களப் பயங்கரவாதிக்கு வெள்ளைப் பூச்சு அடிக்க இம்மியேனும் இடம் கொடுத்துவிடாது தமிழரும், நீதிக்காக குரல் கொடுப்பவர்களும் நடந்துகொள்ளவேண்டும்.

தமிழினப் படுகொலையில் தன்னையும் பல மடங்குகளால் மீறிய மகிந்த ராஜபக்ச கும்பலின் வெறியாட்டத்தின் பின், இலங்கையில் சிங்கள வெறியர்கள் மத்தியில் தனக்கு எந்த இடமும் இனியில்லை என்றுணர்ந்த சந்திரகா குமாரதுங்க என்ற சிங்களப் பயங்கரவாதி தனது போர்க்குற்றங்களை மூடி மறைத்து சர்வதேசம் மத்தியில் வெறும் வார்த்தை ஜாலங்களால் நற்பெயரை பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சியே இது.

சந்திரகா குமாரதுங்க என்ற சிங்களப் பயங்கரவாதி ஏனைய பயங்கரவாதிகளை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்ற தோற்றத்தால் உணர்ச்சி வசப்பட்டு தமிழர் இந்தக் கொலைகாரக் கும்பலுக்கு வெள்ளைப் பூச்சு அடிக்க இம்மியேனும் இடம் கொடுத்து விடக்கூடாது.

  • தொடங்கியவர்

இன்று வெளிவந்த சனல் நாலு ஒலிப்பதிவிலும் சந்திரிக்காவின் பேச்சு பாராட்டப்பட்டுள்ளது. அவர் முன்னை நாள் சனாதிபதி என்பது, கொழும்பில் இருந்து கூறிய கருத்தும் ' துணிவுகரமானவை' என கூறப்பட்டுள்ளது. அங்கே மூன்று சகோதரர்களின் கொடுங்கோலாட்சி நிகழும் இடத்தில் இந்த கூற்று முக்கியமானதகின்றது.

இதை தொடர்ந்து இன்னும் பல அரசியல்வாதிகள் மகிந்த குடும்பத்தில் இருந்து தம்மை அந்நியப்படுத்தக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்த நேரத்தில் கருத்து தெரிவித்த சந்திரிக்கா அம்மையாருக்கு பாராட்டுக்கள். :lol:

  • 2 months later...
  • தொடங்கியவர்

WIKILEAKS – “RAJAPAKSAS ARE UNEDUCATED AND UNCULTURED RASCALS” – CBK

“President Kumaratunga found the Rajapaksa family involvement in politics very distasteful and called them ‘uneducated and uncultured rascals.’ She worried that the political climate since her term had become “vindictive and threatening” and that Rajapaksa had ‘muddied the thinking’ of masses.” The US ambassador wrote to Washington.

The Colombo Telegraph found the leaked cable from the WikiLeak database. The cable classified as “CONFIDENTIAL” and recount details of a meeting ambassador Patricia A. Butenis has had with former President Chandrika Kumaratunga on 14th December 2009.

The cable said “Former President discussed President Rajapaksa’s abuse of power and said that under his leadership, the economy, the political climate, health care, education and international relations had spiraled down reaching a new low in the country’s history. Kumaratunga remarked that governance had broken down and corruption was appallingly bad. She noted that while she was responsible for nominating President Rajapaksa for the Sri Lanka Freedom Party, he had a detrimental impact on the party.”

In response to Ambassador’s query on elections and General Fonseka’s candidacy, Kumaratunga said, while she was surprised by Fonseka’s entry in to politics, if ‘free and fair’ elections were held today, Fonseka would win. “While Fonseka came from a Buddhist extremist background, he seemed more honest than Rajapaksa and might not go back on his promises.” Butenis wrote.

“Kumaratunga acknowledged the mood and the thinking in the country was changing. People were hopeful of changing and were interested in moving ahead. Although Kumaratunga was no longer directly involved in politics, she remarked that President Rajapkasa feared her influence and had restricted her movements.” the ambassador further wrote to Washington. Read the below US diplomatic cable for full details.

http://colombotelegr...ed-rascals-cbk/

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.