Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தில் சிந்து பாடும் ஆண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காய்கறிக் கடைக்குப் போகிறோம். எல்லாம் வாங்கிய பின்னர் கொஞ்சம்போல கொத்தமல்லி கொசுறாக கேட்போம். கேட்பதுதான் கொஞ்சம், ஆனால் கடைக்காரர் கேட்டதற்கும் மேலாகவே கொடுத்தாலும் கூட, என்னப்பா இவ்ளோதானா, இன்னும் கொஞ்சம் கொடேன் என்று கேட்காதவர்களே கிடையாது. இதற்கு அடிப்படை காரணம்- ஆசை.

எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.

என்னதான் கிளி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு போல ஒன்று கேட்குதாம் என்பார்கள் கிராமங்களில். இது உண்மைதான். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள் என்கிறார் வில்லியம் நிக்கல்சன்.

நிக்கல்சன், இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. குறைந்தது செக்ஸ் விஷயத்தில்.

என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.

ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் சந்தில் சிந்து பாடும் மன நிலைதான் அத்தனை ஆண்களுக்கும் என்பதை அவர்கள் பெரும்பாலும் அறிவதில்லை.

எனக்கு கல்யாணமாகி 22 ஆண்டுகளாகி விட்டது. இதுவரை எனது மனைவிக்கு நான் துரோகம் செய்ததில்லை. உண்மையாகவே துரோகம் செய்ததில்லை. ஆனால் நானும் ஒரு ஆண்தான். சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் நானும் அந்தத் தவறைச் செய்வேன்தான்-பின்விளைவுகள் இல்லாவிட்டால். ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன் என்கிறார் நிக்கல்சன்.

ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள். இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை.

ஒரு பெண்ணுடன் உடலுறவுக்குத் துடிக்கும் ஆண்கள், அவர்களை உண்மையாக காதலிப்பதில் கவனம் செலுத்துவதில்லை, முக்கியத்துவம் தருவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.

நிக்கல்சன் தொடர்ந்து கூறுகையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் உணர்வுகள் வேறுபாடானவை. பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்புவிக்க முன்வருவார்கள். இவன் நமக்கு நல்ல காவலனாக இருப்பான், இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள்.

ஆனால் ஆண்கள் அப்படி இல்லை. பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் முதலில் அவர்கள் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள். இதுதான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் உள்ள ஒரு வேற்றுமை.

எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்ளுதல் நலம்

senthilvayal.wordpress.com

post-8644-0-49727900-1313638458.jpg

  • Replies 79
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பின் விளைவுகள் வராது என்றால்.. பெண்களும் ஆண்களுக்கு குறைச்சல் இல்லாமல்.. வேறு ஆண்களோடும் தொடர்பு வைப்பினம். ஆண்கள் மட்டும் தான் இப்படி என்றில்லை. எதுஎப்படி இருந்தாலும்.. எங்க எண்ணத்தை எங்களால் ஆள முடிந்தால்.. எதுவும் எங்களை எங்கள் கொள்கையில் இருந்து அசைக்க முடியாது. நான் என்றால் தவறாக எண்ணும்.. நடக்க முயலும் பெண்களுக்கு நல்ல வழிகாட்டுதலை சொல்லிட்டு.. விலகிப் போயிடுவேன். எல்லாம் நாங்கள் வளர்ந்த முறை.. மற்றும் எங்கள் சிந்தனை.. செயலைப் பொறுத்தே அமைந்துள்ளது. :):icon_idea:

இது நல்லதுக்கில்லை உடையரர் . அந்தக்காலத்தில நீங்கள் சொல்லுறமாதிரி அரசல்புரசலா உதெல்லாம் நடந்ததுதான். ஆனா ,இப்பகண்டியளோ பெடிச்சியளும் உதில விண்ணியள் . சும்மா எங்ளை மட்டும் புறட்டணியம் படியாதையுங்கோ ...

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் நீங்கள் போட்ட படம் சரியில்லை.இதனால் இந்தப் பகுதியிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன். :icon_idea:

Edited by sathiri

ஆண்கள் தனியாகவா தப்புச் செய்கிறார்கள். அதற்கு ஒரு துணை வேண்டுமல்லவா? :blink:

வெளியிலை என்ன நடக்குது என்று தெரியாமல் தன்றபாட்டுக்கு புனைகதை எழுதியிருக்கிறார்.

யார் இந்தத் துரோகி நிக்கல்சன். :lol:

.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை..இணைப்பிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உந்த நிக்கல்சன் என்னை ஒளிச்சிருந்து பார்த்திருக்கிறார் போல :icon_idea: மனுஷன் என்ட கதையை அப்படியே புட்டு புட்டு வைக்குது ..மவனே இருக்கு ஒரு நாளைக்கு :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார் நீங்கள் போட்ட படம் சரியில்லை.இதனால் இந்தப் பகுதியிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன். :icon_idea:

உசுப்பேத்தி உசிப்பேத்தி ஆதிவாசியிடம் என்னை மாட்டிவிட பார்க்கிறீங்க

உந்த நிக்கல்சன் என்னை ஒளிச்சிருந்து பார்த்திருக்கிறார் போல :icon_idea: மனுஷன் என்ட கதையை அப்படியே புட்டு புட்டு வைக்குது ..மவனே இருக்கு ஒரு நாளைக்கு :lol: :lol:

இப்படி எல்லாம் செய்விங்களா,

post-8644-0-98188900-1313733908_thumb.jp

post-8644-0-91963000-1313733920.jpg

Edited by Udaiyar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின் விளைவுகள் வராது என்றால்.. பெண்களும் ஆண்களுக்கு குறைச்சல் இல்லாமல்.. வேறு ஆண்களோடும் தொடர்பு வைப்பினம். ஆண்கள் மட்டும் தான் இப்படி என்றில்லை. எதுஎப்படி இருந்தாலும்.. எங்க எண்ணத்தை எங்களால் ஆள முடிந்தால்.. எதுவும் எங்களை எங்கள் கொள்கையில் இருந்து அசைக்க முடியாது. நான் என்றால் தவறாக எண்ணும்.. நடக்க முயலும் பெண்களுக்கு நல்ல வழிகாட்டுதலை சொல்லிட்டு.. விலகிப் போயிடுவேன். எல்லாம் நாங்கள் வளர்ந்த முறை.. மற்றும் எங்கள் சிந்தனை.. செயலைப் பொறுத்தே அமைந்துள்ளது. :):icon_idea:

ம்....ம்....அதுதான் சம உரிமை, பரதியின் வழியில் நல்ல சிந்தனை, ஒருநாள் காந்தி மாதிரி குந்தியிருக்க போறீங்க

  • கருத்துக்கள உறவுகள்

ம்....ம்....அதுதான் சம உரிமை, பரதியின் வழியில் நல்ல சிந்தனை, ஒருநாள் காந்தி மாதிரி குந்தியிருக்க போறீங்க

ஏன் நாங்க எங்க வாழ் நாளில் காணாத.. காந்தியையும் புத்தனையும் தேடனும். எங்களுக்கு வழிகாட்டியா நாங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தியாகிகள் எத்தனையோ பேர் இருக்கினம். திலீபன் அண்ணா.. மில்லரண்ணா என்று எத்தனை பேர் வழிகாட்டியா இருந்திருக்காங்க. அவங்க எல்லாம் என்ன கெட்ட பையங்களா... இல்லையே. நல்ல பையங்களா வாழ்ந்து நாட்டுக்காக தங்களையே தந்தவங்க. காந்தி போல.. உறவுக்காரச் சிறுமிகளோட நிர்வாணத் தூக்கம் போட்டு சல்லாபம் பண்ணிய "பீடோ"க்களாக எங்கட தியாகிகள் இருந்ததில்லை..! அவங்க வழிகாட்டலே போதும். பாரதியையும் ஏற்றுக் கொள்ளலாம். அவனும் பாவம்.. தனக்கென்று சம்பாதிக்காம.. நாட்டுக்காகவே வாழ்ந்தவன்.. அந்த மீசைக்கார தமிழ் கவிஞன்..! :)

Edited by nedukkalapoovan

உசுப்பேத்தி உசிப்பேத்தி ஆதிவாசியிடம் என்னை மாட்டிவிட பார்க்கிறீங்க

உங்களை உசுப்பேத்துவதால் நீங்கள் ஏன் ஆதிவாசிக்குப் பயப்பிட வேண்டும் உடையார்? :o

கதை அப்பிடிப் போகுதா? அல்லது அப்படித்தான் போனதா? :icon_idea::lol::D:icon_mrgreen:

Edited by குட்டி

ஆண் சமுதாயமே நிக்கல்சன் போல உண்மை பேசி உத்தமனாக வாழப்பழகவும் :lol:

ஆண் சமுதாயமே நிக்கல்சன் போல உண்மை பேசி உத்தமனாக வாழப்பழகவும் :lol:

ஒரு பெண்ணின் துணையின்றி எப்படி ஆண்கள் மட்டும் தப்புப் பண்ணலாம்? :blink:

அந்தத் தப்புக்கு உடன்பட பெண்கள் மறுக்கும் பட்சத்தில், ஆண்கள் தப்புப் பண்ண சந்தர்ப்பமே இல்லையே? :rolleyes:

நிக்கல்சனின் கருத்து ஒருபக்கச் சார்பானது. எதையும் சரியாக அவதானித்து ஆராயாமல் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் துணையின்றி எப்படி ஆண்கள் மட்டும் தப்புப் பண்ணலாம்? :blink:

அந்தத் தப்புக்கு உடன்பட பெண்கள் மறுக்கும் பட்சத்தில், ஆண்கள் தப்புப் பண்ண சந்தர்ப்பமே இல்லையே? :rolleyes:

ஊசியை ஆட்டிக்கொண்டிருந்தால், நூல் கோர்க்க முடியாது என்று அன்றைய அப்புக்காத்துமார் சொன்ன விளக்கம் மாதிரியில்லே இருக்கு உங்கள் கதை!

ஊசியை ஆட்டிக்கொண்டிருந்தால், நூல் கோர்க்க முடியாது என்று அன்றைய அப்புக்காத்துமார் சொன்ன விளக்கம் மாதிரியில்லே இருக்கு உங்கள் கதை!

அது வேறு விதமான வாதம். பாலியல் வல்லுறவைச் சரியென நிரூபிக்க எங்கட அதிமேதாவிகள் பாவித்த முட்டாள்தனமான வாதம்.

இருவர் இணங்கி தப்புச் செய்யும் பொழுது இருவருமே குற்றவாளிகள். நீங்களும் லண்டனில்தான் இருக்கிறீர்கள். நிக்கல்சனின் ஆய்வு கூறிய மாதிரியா நிலைமை உள்ளது?

இருவரும் இணங்கி உடலுறவில் ஈடுபட்டால் அதில் தப்பு ஏது? ஏன் அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கவேண்டும்?

ஒழுக்கசீலர்களாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் சமூகத்தின் கட்டுப்பாடுகளால் உண்டாவது. சமூகக் கட்டுப்பாடுகளற்றவர்களும் தனியன்களாக உள்ளவர்களும் தாங்கள் விரும்பியவாறு வாழலாம்.

Fatal Attraction (தமிழில் சிலுக்கு நடித்த "அன்று பெய்த மழையில்" படம் என்று நினைக்கின்றேன்) படத்தில் வருவது மாதிரி இன்னும் நேரடியாகக் காணவில்லை!

சும்மா சகட்டுமேனிக்கு எவனும் எதுவும் எழுதலாம்.

இயற்கையின் படைப்பே இருவருக்கும் வித்தியாசமான உணர்வுகளுடன் தான்.நாகரீகம் என்ற போர்வையில் நாம் ஆயிரம் கட்டுப்பாடுகள் போடலாம் ஆனால் ஆண் என்பவன் சுற்றி சுற்றி அதற்குள்தான் நிற்கின்றான்.தனக்கு பிடித்த ஆணுக்காக சில வேளைகளில் பெண்களும் கட்டுப்பாட்டை மீறலாம், ஆனால் ஆணானவன் சந்தர்ப்பம் கிடைத்தால் எப்போதும் அதை மீற தயாராக இருக்கின்றான்.

இயல்பாகவே இருவரினதும் விருப்பு வெறுப்புகள் வித்தியாசமானவை.

பெண் கூடுதலாக ஆணினது சந்தோசத்திற்காக வாழ்கின்றாள்.(குடும்பம்,வீடு,பிள்ளைகள் இத்தியாதி )

ஆண் தனது சந்தோசதிற்காக மட்டுமே வாழ்கின்றான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாங்க எங்க வாழ் நாளில் காணாத.. காந்தியையும் புத்தனையும் தேடனும். எங்களுக்கு வழிகாட்டியா நாங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தியாகிகள் எத்தனையோ பேர் இருக்கினம். திலீபன் அண்ணா.. மில்லரண்ணா என்று எத்தனை பேர் வழிகாட்டியா இருந்திருக்காங்க. அவங்க எல்லாம் என்ன கெட்ட பையங்களா... இல்லையே. நல்ல பையங்களா வாழ்ந்து நாட்டுக்காக தங்களையே தந்தவங்க. காந்தி போல.. உறவுக்காரச் சிறுமிகளோட நிர்வாணத் தூக்கம் போட்டு சல்லாபம் பண்ணிய "பீடோ"க்களாக எங்கட தியாகிகள் இருந்ததில்லை..! அவங்க வழிகாட்டலே போதும். பாரதியையும் ஏற்றுக் கொள்ளலாம். அவனும் பாவம்.. தனக்கென்று சம்பாதிக்காம.. நாட்டுக்காகவே வாழ்ந்தவன்.. அந்த மீசைக்கார தமிழ் கவிஞன்..! :)

எங்கள் தியாகிகள் கடவுளுக்கு சமனானவர்கள் அவர்களை யாருடனும் ஒப்பிட்டு எழுத விரும்பவில்லை, அந்த அருகதை எனக்கு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சகட்டுமேனிக்கு எவனும் எதுவும் எழுதலாம்.

இயற்கையின் படைப்பே இருவருக்கும் வித்தியாசமான உணர்வுகளுடன் தான்.நாகரீகம் என்ற போர்வையில் நாம் ஆயிரம் கட்டுப்பாடுகள் போடலாம் ஆனால் ஆண் என்பவன் சுற்றி சுற்றி அதற்குள்தான் நிற்கின்றான்.தனக்கு பிடித்த ஆணுக்காக சில வேளைகளில் பெண்களும் கட்டுப்பாட்டை மீறலாம், ஆனால் ஆணானவன் சந்தர்ப்பம் கிடைத்தால் எப்போதும் அதை மீற தயாராக இருக்கின்றான்.

இயல்பாகவே இருவரினதும் விருப்பு வெறுப்புகள் வித்தியாசமானவை.

பெண் கூடுதலாக ஆணினது சந்தோசத்திற்காக வாழ்கின்றாள்.(குடும்பம்,வீடு,பிள்ளைகள் இத்தியாதி )

ஆண் தனது சந்தோசதிற்காக மட்டுமே வாழ்கின்றான்.

இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. உலகில்.. ஜேசு வில் இருந்து மகான்கள் எல்லாம் தியாகிகள் எல்லாம் ஆண்களாகவே அதிகம் இருக்கின்றனர். அன்னை தெராசா போன்ற ஒரு சில பெண்களே அந்த இடத்தை நிரப்பி உள்ளனர். ஆண்கள் தவறு செய்ய அதற்கான சந்தர்ப்பத்தை பெண்களும் வழங்குகின்றனர் என்ற அடுத்த பக்கம் வெகு கச்சிதமாக இங்கு மறைக்கப்பட்டுள்ளது. சந்தர்ப்பம் என்பது பெண்ணால் உருவாக்கப்படும் போது ஆண்கள் அதனைப் பயன்படுத்துகிறார்கள். பெண்களால் உருவாக்கப்படும் சந்தர்ப்பங்களை தவிர்த்து.. தங்கள் ஒழுக்கப்பாட்டில் உறுதியாக வாழும் எத்தனையோ ஆண்களை நான் கண்டிருக்கிறேன். இங்கு நீங்கள் பாலியல் ரீதியான மனப் பலவீனமான ஆண்கள்.. பெண்களின் கருத்தையே எழுதி இருக்கிறீர்கள்.

குறிப்பாக மாற்று தமிழ் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தோர்.. கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருந்துள்ளனர். அதுவும் அவர்களை மக்கள் வெறுக்க முக்கிய காரணம். இந்தியாவிற்கு போய் அரசியல் செய்யுறோம்.. ஆயுதப் பயிற்சி எடுக்கிறோம் என்று கொண்டு நடிகைகளோடு கட்டிப்புரண்டவர்களே அதிகம். அவர்களிடம் போய்.. கருத்துக் கேட்டால்..????! :):lol::icon_idea:

"ஜேசு வில் இருந்து மகான்கள் எல்லாம் தியாகிகள் எல்லாம் ஆண்களாகவே அதிகம் இருக்கின்றனர்". ஆனால் ஒவ்வொரு தாயும் தியாகி தான்...அவர்கள் வித்தியாசமாய் எதாவது செய்து தான் தியாகியாய் இருக்க வேண்டும் என்ட அவசியம் இல்லை...ஒரு தாயிற்கு குழந்தை கருவில் உண்டானதில் இருந்து,பத்து மாதம் சுமந்து பாலுட்டி,சீராட்டி ஒரு முழுமையான மனிதராக உருவாக்குவதில் தாயின் பங்கு எவ்வளவு என நான் சொல்லி இங்கே ஒருத்தருக்கும் தெரிய வேண்டியதில்லை.

யாருடனாவது போய் படுத்திட்டு வா என்று எந்த தாயும் அல்லது எந்த மனைவியையும் மகனையோ,கண்வனை அனுப்புவதில்லை...எங்கு சந்தர்ப்பம் கிடைக்கும் தப்பு செய்யலாம் என்று அலையும் ஆண்களே அதிகம்..."கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி தேவையாயிருக்கு"என்று முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்...எதற்கு எடுத்தாலும் குற்றத்தை செய்து விட்டு அதை பெண் பிள்ளை போடுவதை நிறுத்துங்கள்.தைரியமில்லாத கோழைகள் தான் அப்படி செய்வார்கள்

இந்தப் பகுதி பேசாப் பொருள்...இப் பதிவின் தலைப்பு "சந்தில் சிந்து பாடும் ஆண்கள்" இதில் வந்து அரசியலையும்,மாற்று தமிழ் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தோர் பற்றியும் எழுதி இருக்கிறீர்கள்... கருத்துக்கு பஞ்சம் என்பது இதிலிருந்து தெரியுது...ஒருவர் கருத்து பகிர்ந்தால் அவர் என்ன எழுதி இருக்கிறார் என படித்து விட்டு,அத்தோடு தலைப்பு சார்ந்து பதிலை எழுதவும்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு சந்தர்ப்பம் கிடைக்கும் தப்பு செய்யலாம் என்று அலையும் ஆண்களே அதிகம்..."கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி தேவையாயிருக்கு"என்று முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்

வயது வந்த ஆணும் பெண்ணும் பேசிப் பழகிக் கொண்டிருக்கும்போது ஆணின் மனதில் ஏதாவது ஒரு மூலையில் கண நேரமாவது சபல/காம எண்ணம் வந்து நிற்கும். சகோதர பாசத்துடன் , புனித நட்புடன் (!) பழகும்போது கூட இந்த எண்ணம் எட்டிப் பார்க்கும். நல்ல மனதுடையவன் தோன்றிய எண்ணத்தை அடக்கி மிரட்ட அது மின்னலாக ஓடி மறையும் :) . அசிங்க மனமுள்ளவன் இத்தகைய எண்ணங்களை ஏற்று ஆராதித்து கற்பனையிலேயே ரசிக்கவும் செய்வான் :( .

நல்ல மனதுக்காரர்களை விட அசிங்க மனதுள்ளவர்களே தற்போது அதிகமாக உள்ளார்கள், ஆனால் தமது கோழைத்தனத்தை மறைக்க நல்ல மனதுக்காரர்கள் போல மாயவேடம் பூண்டுவருகின்றார்கள்!

எனினும் இப்படியான தருணங்களில் பெண் மனது எப்படி வேலை செய்யும் என்று தெரியாது. பெண்கள்தான் வந்து சொல்லவேண்டும்! :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

"ஜேசு வில் இருந்து மகான்கள் எல்லாம் தியாகிகள் எல்லாம் ஆண்களாகவே அதிகம் இருக்கின்றனர்". ஆனால் ஒவ்வொரு தாயும் தியாகி தான்...அவர்கள் வித்தியாசமாய் எதாவது செய்து தான் தியாகியாய் இருக்க வேண்டும் என்ட அவசியம் இல்லை...ஒரு தாயிற்கு குழந்தை கருவில் உண்டானதில் இருந்து,பத்து மாதம் சுமந்து பாலுட்டி,சீராட்டி ஒரு முழுமையான மனிதராக உருவாக்குவதில் தாயின் பங்கு எவ்வளவு என நான் சொல்லி இங்கே ஒருத்தருக்கும் தெரிய வேண்டியதில்லை.

யாருடனாவது போய் படுத்திட்டு வா என்று எந்த தாயும் அல்லது எந்த மனைவியையும் மகனையோ,கண்வனை அனுப்புவதில்லை...எங்கு சந்தர்ப்பம் கிடைக்கும் தப்பு செய்யலாம் என்று அலையும் ஆண்களே அதிகம்..."கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி தேவையாயிருக்கு"என்று முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்...எதற்கு எடுத்தாலும் குற்றத்தை செய்து விட்டு அதை பெண் பிள்ளை போடுவதை நிறுத்துங்கள்.தைரியமில்லாத கோழைகள் தான் அப்படி செய்வார்கள்.

இந்தப் பகுதி பேசாப் பொருள்...இப் பதிவின் தலைப்பு "சந்தில் சிந்து பாடும் ஆண்கள்" இதில் வந்து அரசியலையும்,மாற்று தமிழ் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தோர் பற்றியும் எழுதி இருக்கிறீர்கள்... கருத்துக்கு பஞ்சம் என்பது இதிலிருந்து தெரியுது...ஒருவர் கருத்து பகிர்ந்தால் அவர் என்ன எழுதி இருக்கிறார் என படித்து விட்டு,அத்தோடு தலைப்பு சார்ந்து பதிலை எழுதவும்

அக்கோய்.. உலகத்தில நீங்கள் ஒருவர் தான் ஒரு கையால் ஓசை எழுப்பக் கூடியவர். நான் சொல்கிறேன்.. ஒரு ஆண் தப்புச் செய்ய பெண்ணும் உடந்தையாக அவனுக்கு ஈடாக தப்புச் செய்கிறாள் என்பதைத் தான். ஒரு ஆண் தப்புச் செய்ய முயல்கிறான்.. சந்தர்ப்பம் தேடுகிறான் என்றால்.. அதை தவிர்க்க பெண்ணுக்கு ஆயிரம் வழிகள் உண்டு. ஏன் அவர்கள் அவற்றைத் தெரிவு செய்வதில்லை. மாறாக ஆண் தப்புச் செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் அல்லது அதற்கு இசைந்து கொள்கிறார்கள். இதுவே என்னுடைய கருத்துக்களின் பிரதிபலிப்பு. இதுவே யதார்த்தமும் கூட..!

சந்தியில் சிந்துபாடும்.. ஆண்களை பெண்களை நான் எனது சமூகத்தில்.. மாற்று ஆயுதக் குழுக்களின் காலத்தில் தான் அதிகம் கண்டிருக்கிறேன். தங்கள் முகாம்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள பெண்களோட கதைச்சுப் பழகி.. அவர்களை தவறாக வழிநடத்தி பாவித்துவிட்டு.. கைவிட்ட பல மாற்றுக் குழு ஆயுத தாரிகளை நாங்கள் வரலாற்றில் கண்டிருக்கிறோம். அதுமட்டுமன்றி.. கடத்திச் சென்றும் அப்படி செய்துள்ளனர். சில பெண்கள் விருப்பட்டும் அவர்களுடன் போய் இருக்கின்றனர். ஆக எல்லா இடத்திலும் பெண்களும் முன்னெச்சரிக்கை இன்றி நடந்து கொண்ட சந்தர்ப்பங்களால் அவர்கள் ஆண்களுக்கு தவறு செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதை காண முடிந்திருக்கிறது. அந்த வகையில் தான் மாற்றுக் குழு ஆயுத தாரிகளை இங்கு கொண்டு வந்தோம்.

சுய ஒழுக்கமுள்ள எந்த ஒரு தனி மனிதனோ அல்லது அமைப்போ இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காவது இல்லை. அப்படியானவர்கள்.. சந்தர்ப்பங்கள் அமைந்தால் கூட அவற்றில் இருந்து விலகி நடந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றையும் நீங்கள் உதாரணமாக்கி பழகிக் கொள்ள வேண்டும். வெறுமனவே ஆண்களில் மட்டும் தவறு காண்பது கூட ஒரு வகையில் தவறாகும்..! அங்கு பெண்களுக்குள்ள பங்களிப்பை சரிவர உணர்த்தினால் தான் தவறுகள் நிகழ்வதை எதிர்காலத்தில் குறைக்க முடியும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நான் உங்கட வழிக்கே வாறன் ஆண்கள் தப்பு செய்ய அவனுக்கு உடந்தையாக,அவனுக்கு ஈடாக பெண்களும் தப்பு செய்கிறார்கள் என்று எப்படி,எதை வைத்து நீங்கள் சொல்வீர்கள்?...இதற்கு முதலில் உங்கள் பதிலை அளியுங்கள் அதன் பின்னர் நான் எனது பதிலை தருகிறேன்.

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று" அவர்கள் நன்கு படித்திருக்கலாம்,நல்ல வேலையில் இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்று வரும் போது கோட்டை விட்டு விடுவார்கள்...இந்த ஆராய்ச்சியை செய்தவரோ அல்லது நானோ எல்லாப் பெண்களும் உத்தம புத்திரிகள் என்றோ எல்லா ஆண்களும் அயோக்கியர்கள் என சொல்லவில்லையே!...ஒப்பிட்டளவில் பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு குற்றம் செய்ய சந்தர்ப்பம் அதிகம்,அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் யாருடனும் படுக்க தயங்க மாட்டார்கள்...நீங்கள் புலம் பெயர் நாட்டில் தானே இருக்கிறீர்கள் எத்தனை பெண்கள் சொந்த தகப்பனாலேயோ,சகோதரங்களாலேயே கற்பழிக்கபட்டார் என எந்த ஒரு விதத்திலும் நீங்கள் கேள்விப் படவில்லையா?

புலம் பெயர் நாட்டில் கூட பெண்கள் திருமணம் முடித்த பின்[திருமணத்திற்கு முன் 10,12 ஆண் நண்பர்கள் வைத்திருந்தாலும்] திருமணத்திற்கு பின்னர் கணவர்,குழந்தைகள் என வாழ்வதால் அவர்களது மனதில் வேற ஆண்களோடு படுக்க வேண்டும் என்ட எண்ணம் வராது[சில விதி விலக்கு இருக்கு அதை விடுவோம்]... ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் அப்படி இல்லை :icon_idea: ஆனால் நீங்கள் சொல்கின்ற மாதிரி ஒருத்தியோடு சுய ஒழுக்கமாய் வாழும் ஆண்களும் இருக்கிறார்கள் இல்லை என்று இல்லை ஆனால் அவர்களது வீதம் சந்தப்பம் கிடைத்தால் பிழை விடும் ஆண்களோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவு அதே மாதிரி சந்தர்ப்பம் கிடைத்தால் பிழை விடும் பெண்களோடு ,பிழை விடும் ஆண்களை ஒப்பிடுகையில் ஆண்களது வீதம் அதிகம் என்பதே இந்த கட்டுரையாளாரினதும்,எனதும் கருத்தாகும் :):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நான் உங்கட வழிக்கே வாறன் ஆண்கள் தப்பு செய்ய அவனுக்கு உடந்தையாக,அவனுக்கு ஈடாக பெண்களும் தப்பு செய்கிறார்கள் என்று எப்படி,எதை வைத்து நீங்கள் சொல்வீர்கள்?...இதற்கு முதலில் உங்கள் பதிலை அளியுங்கள் அதன் பின்னர் நான் எனது பதிலை தருகிறேன்.

புலம் பெயர் நாட்டில் கூட பெண்கள் திருமணம் முடித்த பின்[திருமணத்திற்கு முன் 10,12 ஆண் நண்பர்கள் வைத்திருந்தாலும்] திருமணத்திற்கு பின்னர் கணவர்,குழந்தைகள் என வாழ்வதால் அவர்களது மனதில் வேற ஆண்களோடு படுக்க வேண்டும் என்ட எண்ணம் வராது[சில விதி விலக்கு இருக்கு அதை விடுவோம்]... ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் அப்படி இல்லை :icon_idea: ஆனால் நீங்கள் சொல்கின்ற மாதிரி ஒருத்தியோடு சுய ஒழுக்கமாய் வாழும் ஆண்களும் இருக்கிறார்கள் இல்லை என்று இல்லை ஆனால் அவர்களது வீதம் சந்தப்பம் கிடைத்தால் பிழை விடும் ஆண்களோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவு அதே மாதிரி சந்தர்ப்பம் கிடைத்தால் பிழை விடும் பெண்களோடு ,பிழை விடும் ஆண்களை ஒப்பிடுகையில் ஆண்களது வீதம் அதிகம் என்பதே இந்த கட்டுரையாளாரினதும்,எனதும் கருத்தாகும் :):rolleyes:

உ+ம்: விபச்சாரம். உலகில் ஆண்கள் விபச்சாரம் செய்யும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. பெண்களே ஆண் வாடிக்கையாளர்களை கவர்ந்து விபச்சார பாலியல் வியாபாரம் என்று சொந்த உடலை விற்றுப் பிழைக்கும் வேறு எந்த உயிரினத்திலும் இல்லாத ஒரு கேவலமான வேலையைச் செய்கிறார்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப உடலை விற்று ஆண்களைக் கவர்ந்து பிழைக்கின்ற பெண்களே ஆண்களின் தவறுக்கான பிரதான காரண கர்த்தாக்களாகவும் இருக்கிறார்கள். இந்த இடத்தில் இந்தக் கட்டுரையாளர் கண்ணை மூடிக் கொண்டதுதான் வியப்பாக இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் பள்ளிகளில் ஆசிரியைகள் பள்ளி மாணவர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட எத்தனையோ நிகழ்வுகள் நடந்துள்ளன. வீடுகளில் தந்தையர் மட்டுமல்ல.. பெண்களும் தகாத முறையில் நடந்து கொள்ள சம வாய்ப்பிருக்கிறது. பள்ளிகளில் நடப்பது ஏன் வீட்டில் நடக்க முடியாது. நீங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்.. இவற்றில் தவறிழைக்கும் ஆண்களின் சதவீதம் அதிகம் என்று. ஆண்கள் தவறிழைத்தால் அதைப் பூதாகரமாக்கிச் சொல்ல.. பல பெண்கள் அமைப்புக்கள் உண்டு. ஆனால் தவறிழைக்கும் பெண்களை உலகுக்கு காட்ட ஆண்களிடம் சங்கங்களும் இல்லை.. அமைப்புக்களும் இல்லை. அதனால் பெண்கள் இழைக்கும் தவறுகள் சரிவர வெளி உலகை வந்து சேர்வதில்லை. வீட்டுக்குள் அமுங்கி விடுகின்றன.

உ+ம்: வீட்டு வன்முறைகளில் பெண்களே அதிகம் வாய் மூல வன்முறைகளில் ஈடுபட்டு ஆண்களை பெளதீக வன்முறைக்குத் தூண்டுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆக பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஆண் தவறிழைக்கிறான் என்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல..! இந்த இடத்தில் அந்தக் கட்டுரையாளர் கண்ணைக் கட்டி காட்டில் விட நினைக்கிறார்.. வாசகர்களை. அவ்வளவே. :):icon_idea:

Edited by nedukkalapoovan

:icon_idea:

:icon_idea:

இரண்டு பேருக்கும் ஏன் தலைக்குமேல் பல்பு எரிகிது? பார்வைக்குறைபாடோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.