Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா வா ம் ...பி ற பா க ர ன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

........................................................................

குறுந்தொடர்.

முற்குறிப்பு. ...இந்தத் தொடரின் தலைப்பை படிக்கிறவர்களிற்கும். அதன் சம்பவங்களை படிக்கிறவர்களிற்கும்.அவரவர் மனதில் பலவித உணர்ச்சிகள் தோன்றலாம். தொடரின் தலைப்பை படித்தவர்களிற்கு நான் எழுத்துப் பிழை விட்தைப்போல தோன்றலாம். அல்லது வேண்டுமென்றே நக்கலாக எழுதியது போல தோன்றலாம்.அல்லது ஏதாவது அர்த்தம் இருக்குமென்றும் தோன்றலாம்.. தொடரும் சம்பவங்கள் பலரும் சந்தித்த அனுபவித்து வாழ்ந்த அனுபவங்களே. கதையில் நான் சொல்லும் அனுபவங்களை அனுபவித்தவர்கள். நினைவுளை மீட்டிப்பார்பார்கள். அதனை பகிர்ந்தும் கொள்வார்கள்.சிலர் எரிச்சலடைந்து திட்டுவார்கள்.சிலர் கேள்விகள் கேட்பார்கள்.சிலர் எங்கே பிழை பிடித்து மடக்கலாம் என் யோசிப்பார்கள். சிலரோ பொறுத்திருந்து பார்க்கலாம் கடைசியில் சாத்திரியின் முடிவை பாத்திட்டு எழுதலாம் என நினைப்பார்கள்.சிலர் படித்துவிட்டு ம்...ஏதோ எழுதினான் என நினைப்பார்கள். எனவே உங்கள் அனுபவங்கள். கோபங்கள்.திட்டுக்கள். பாராட்டுக்கள்.கேள்விகள் .மெளனங்கள் அனைத்துடனும். தொடர்கிறேன்.

பிற்குறிப்பு. மேற் குறிப்பை இடையிடையே கருத்துக்களுடன் பகிர்ந்திருந்தேன் அதனை பலர் கவனிக்காமல் கருத்துக்களை எழுதியதால்.முற்குறிப்பாக இங்கு இட்டுள்ளேன்.

LEADER070.jpg

ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு சங்கானைக்கிராமம்.அதிகாலை 5 மணி

..................................................................................................................................

தம்பிப்பிள்ளையர் கொட்டிலுக்கு முன்னால் இருந்த சாக்குக் கட்டிலில் சாரத்தாலை போத்தபடி இருமியபடி சுருண்டு படுத்திருந்தார்.கண்விழித்து பார்த்த நல்லம்மாவிற்கு விழங்கியது இண்டைக்கும் மனுசன் தொழிலுக்கு போகாது போலை கிடக்கு. இரண்டுநாள் எப்பிடியோ சமாளிச்சாச்சு இனி கஸ்ரம்தான் .நாசமாய்போற மனுசன் ஆசுப்பத்திரிக்கும் போகுதில்லை.இண்டைக்கு எப்பிடியும் கொண்டு போறதுதான். "மோகன் டேய் மோகன் எழும்படா. கொப்பர் இண்டைக்கும் தொழிலுக்கு போறமாதிரி இல்லை நீயாவது பெட்டியை கட்டிக்கொண்டு போட்டுவாடா. இல்லாட்டி இண்டைக்குபாடு பிச்சைதான்.

சும்மா கிடவணை நான் உந்த பெட்டி கட்டமாட்டன் சொல்லிப்போட்டன் நான் பள்ளிக்கூடம் போகவேணும்.சும்மாகிட எனக்கு நித்திரை வருது. மோகன் காலை சொறிந்துவிட்டு திரும்பவும் சுருண்டுகொண்டான்.

ஊகும்.வயித்துபாட்டுக்கே வழியைகாணேல்லை.இவர் படிச்சு கிழிச்சு பெரிய இஞ்சினியராகப்போறாராக்கும்.காஞ்ச வயித்தோடையே பள்ளிக்கு போப்போறாய்.மல்லன் மாதிரி வளந்ததுதான் மிச்சம் ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லை.இந்த மனுசன் உழைக்கிறதை குடிச்சுப்போடும்.ஏதோ என்ரை தம்பி தப்பித்தவறி வெளிநாட்டுக்கு போனதாலை அப்பப்ப அவன் போடுற பிச்சையை வைச்சு உங்களை கொண்டிழுக்கிறன்.அதுவும் இல்லாட்டி எப்பவே உங்களுக்கெல்லாம் சோத்திலை விசம்வைச்சிட்டு நானும் செத்திருப்பன். நல்லம்மா புறுபுறுத்தபடியே கேத்திலை எடுத்து தேய்க்கத் தொடங்கினாள்.

மோகனிற்கு நித்திரையை தொடர முடியவில்லை. உண்மைதான் ஜயா மூண்டுநாளாய் தொழிலுக்கு போகேல்லைத்தான்.அம்மா சின்ன சின்ன கூலி வேலையளிற்கு போறவா.மாமாவின்ரை உதவியோடை ஒரு மாதிரி அக்காவை கட்டிக்குடுத்தாச்சு.வீட்டிலை அடுத்தது நான்தான் பெரியாள்.பதினேழுவாயதாயிட்டுது.நாட்டு நிலைமையாலையும் ஒழுங்காயில்லாததாலை படிக்காததாலையும்.முதல்தரம் பத்தாம் வகுப்பு சோதினையை கோட்டை விட்டிட்டன்.இப்ப அடுத்த தரம் எடுக்கிறதுக்கு அப்பப்ப பள்ளிக்கூடம் போறன்.நானும் வேலை ஏதாவது செய்தால் குடும்பம் கொஞ்சம் நல்லா ஓடும்.தங்கச்சியவையாவது ஒழுங்காபடிப்பினம்.நானும் வெளிநாட்டுக்கு போயிட்டன் எண்டால் பிரச்சனை முடிஞ்சுது.சிந்தனைகளை முறித்துவிட்டு மெல்ல எழும்பி கேத்தில் கொதித்துக்கொண்டிருந்த அடுப்புக்கரையில் போய் குந்தினான்.

மவராசன் எழும்பிட்டார்.இண்டைக்கு தேத்தண்ணியாவது இருக்கு நாளைக்கு சுடுதண்ணிதான்.

சும்மா புறுபுறுக்காதையணை.நான் வேலைக்கு போறன்.ஆனால் ஜயா மாதிரி பெட்டியை கட்டி பிரயோசனம் இல்லை இப்ப மீன் விக்கிற விலையிலை 500 ருபாய்க்கு வாங்கியந்து வித்தால் 100 ருபாயும் லாபம் வராது.மிச்சம் நாறிப்போம்..மினக்கெட்டு சைக்கிள் உழக்கிறதுக்கும் பத்தாது.

ஓ................அப்ப என்ன வைர யாவாரம் செய்யப்போறியளோ??இருக்கிறதைவிட்டிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதை தம்பி.

பறக்கிறதில்லை இதுவும் இருக்கிறதுதான்.நான் மண்ணெண்ணை வாங்கியந்து விக்கப்போறன்.கொஞ்சம் கயிற்றம்தான் ஆனா நல்ல லாபம் வரும்.

அதுக்கு உந்த வன்னி கின்னியெல்லாம் கடந்தல்லோ போகவேணும் உந்த பாதையள் எல்லாம் உனக்கு தெரியுமே.

அதெல்லாம் எனக்கு தெரியும் நீ எனக்கொரு ஜயாயிரம் ரூபாய் ஒழுங்குபண்ணித்தா.

ஆத்தை படுற பாட்டிலை குத்தியன் மொன்னிக்கழுத கதையாய் கிடக்கு நானே கஞ்சிக்கு வழியில்லைணெ்டு இருக்க ஜயாரத்துக்கு எங்கை போறது

ஏணேய் எனக்குத் தெரியும் நீ பதுக்கி வைச்சிருப்பாய் பயப்பிடாதை ஒரு கிழைமையிலை உன்ரை காசை திருப்பித் தந்திடுவன். தேதண்ணியை கெதியாய் பேடு.. ஜயாவை ஆசுப்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போட்டு வாறன்.காசை றெடிபண்ணு.கரித்துண்டென்றை எடுத்து கடித்து பல்லில் தேய்த்தபடி கிணத்தடிப்பக்கமாய் போனான்.

......................................................................................................................................................................................

ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு ஆறுகால்மடம் கிராமம். காலை 8 மணி.

ரகு பாடசாலைக்கு தயாராகியபடி தன்னுடைய 200 சி.சி மேர்டார்சைக்கிளை துடைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பாடசலை சீருடையில் ஒரு இளவயது பெண்ணை அழைத்தபடி அவளின் தந்தையார் ரகுவின் வீட்டின் அகன்ற இரும்புக் கதவில் தட்டினார் .அவர்களை கண்டதும் ஜயையோ...என்றபடி ரகு வீட்டின் உள்ளே ஓடிவிட்டான். ரகுவின் தந்தையார் தாமோதரம் பிள்ளை வெளியே வந்து பார்த்தால்.அவருக்கு தெரிந்தவர்தான் சுடலைக்கு பக்கத்தில் மரக்காலை வைத்திருக்கும் ரங்கன்.

என்ன ரங்கன் இந்தப்பக்கம்.

ரங்கன் கோபத்தில் கொதித்தவனாய் சத்மாய் .இஞ்சை பாருங்கோ ஊருக்குள்ளை இருக்கிறவர் தெரிஞ்சவர் எண்ட ஒரு மரியாதையிலைதான் தான் வீடு தேடி வந்தனான்.உங்கடை மகனை கட்டுப்படுத்தி வையுங்கோ இல்லாட்டி பெரிய பிரச்னையிலை வந்து முடியும் சொல்லிப்போட்டன்.

தாமேதரம் பிள்ளையருக்கு தன்ரை மகன் ஏதோவம்பிலை மாட்டிப்போட்டான் எண்டது மட்டும் புரிந்தது."கோபத்திலை கத்தாமல் விளக்கமா சொல்லன் அவன் கடைசிப்பெடி வீட்டிலை செல்லமாய் வளந்திட்டான் ஏதாவது சின்ன குளப்படி பண்ணியிருப்பான் சொன்னத்தானே தெரியும்.

ஓ உங்களை மாதிரி காசுக்காருக்கு இதுகள் சின்னக்குளப்படிமாதிரித்தான் தெரியும்.மகளை பின்னுக்கும் முன்னுக்கும் கலைச்சு திரியிறானாம். அண்டைக்கு கடிதம்வேறை குடுத்தவனாம்.அதை இவள் கிழிச்செறிஞ்சு போட்டாளாம்.இவளை கடத்தப்போறனெண்டு வெருட்டியிருக்கிறானாம். அதாலை இவள் வேறை பயத்திலை பள்ளிக்கூடம் போகமாட்டணென்டு சொல்லிப்போட்டாள்.இண்டைக்குத்தான் எனக்கு விசயம் தெரியும். உங்கடை மகனை கண்டிச்சு வையுங்கோ. இல்லாட்டி அடுத்ததா நான் காவல்துறையிட்டை போகவேண்டிவரும். இனியும் என்ரை பெட்டைக்கு பின்னாலை திரிஞ்சதெண்டு கேள்விப்பட்டன் அதுக்கு பிறகு நான் மனிசனாயிருக்கமாட்டன்.மரம் அரியிற வாளாலை இரண்டா அரிஞ்சு தாட்டுப்போடுவன் சொல்லிப்போட்டன். என்று கோபமாய் பொரிந்து விட்டு மகளையும் அழைத்துக்கொண்டு ரங்கன் போய்விட்டான்.

தாமோதரத்தாருக்கு தலை சுத்துவதுபோலை இருந்தது அக்கம் பக்கத்திலை ஆரும் கேட்டிருப்பினமே எண்டு மெல்ல றோட்டுக்கு வந்து எட்டிப்பாத்தார். எப்பவுமே வேலை வெட்டியில்லாமல் மடத்திலை குந்தியிருக்கும் கூட்டம் இவரின்ரை வீட்டையே பாத்துக்கொண்டிருந்தது.அவமானம் மதம் பிடித்த பெரிய யானையைப்போல அவரைத்துரத்தத் தொங்கியது இரும்புக்கதவை இழுத்துப் பூட்டியவர். முன்னால் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துவிட்டு அங்கு மல்லிகைச்செடிக்கு கொழுகொம்பாய் நட்டிருந்த பெரிய தடியை ஆட்டி இழுத்தெடுத்தபடி டேய்ரகு என்று கத்தினார்.

குசினிக்குள் மீனாச்சிக்கு பின்னால் பம்மிக்கொண்டு நிண்ட ரகுவை இழுத்தெடுத்து விளாசத்தொடங்கினார்." டேய் நாயே பளார்....உனக்கு செல்லம் கூடிப்போச்சு.பளார் .....எல்லாருமே செல்லம் தந்து தந்துதான் உன்னை கெடுத்துப்போட்டினம்.பளார்.... இவளிட்டை சொன்னாலும்.கேக்கமாட்டாள். பளார்.... ..அப்பவே சொன்னனான் பத்தாம் வகுப்பு படிக்கிற பெடியனுக்கு மோட்டச்சைக்கிள் வேண்டாமெண்டு .பளார்.... .அதுவும் அதுகளுக்கு போய் லவ்லெட்டர் குடுத்திரக்கிறாய். பளார்.....அதுகளார்..நாங்களார்..பளார்..... மானம் மரியாதையெல்லாம் போட்டுது..பளார்..பளார்..பளார்....கம்பு தும்பாய்போயிருந்தது. அடித்த அடி விலக்குப்பிடித்த மீனாச்சி மேலையும் பாதிவிழுந்தது.குசினியில் பாத்திரங்கள் சிதறிய சத்தமும் ரகுவின் அலறலும் நாலைந்து வீடுகளிற்கு கேட்டிருக்கும்.

தாமோதரத்தாருக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது ரகு பிறந்ததிலிருந்து ஒருநாளும் இப்படி அவனிற்கு அடித்தில்லை.எப்பவாவது காதிலை பிடிச்சு செல்லமாய் திருகியிருப்பார் அவ்வளவுதான்.அவனுடைய அம்மா மீனாச்சி சொல்லவே வேண்டாம்.ரகுவிற்கு மூக்கில் தூசிபோய் தும்மினாலே போதும் பதறிப்போய்விடுவார். ரகுவிற்கு மூத்தவர் அண்ணனும் அக்காவும் இங்கிலாந்தில் திருமணமாகி குடும்பமாய் வசிக்கிறார்கள்.இன்னொரு அண்ணன் கொலண்நாட்டில். பலவருட இடைவெளிக்கு பின்னர் பிறந்தவன்தான் ரகு.கடைக்குட்டி என்பதாலும். மூத்தவர்கள் வெளிநாட்டிற்கு போகும்போது இவன் சின்னவனாக இருந்ததாலும் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை.எனவேதான் அவன் கேட்டது எதற்கும் மறு பேச்சு கிடையாது உடைனையே கிடைத்துவிடும்.இப்பவும் தானக்கு திருமணம் தோவையெண்டு சொல்லியிருந்தால் வயதைக்கூட பாக்காமல்.சொந்தத்தில் யாரையாவது பாத்து கட்டிக்கொடுத்திருப்பார்கள் ஆனால் அவன் காதல் கடிதம் குடுத்தது அதுவும் மரக்காலைக்காரனின்ரை பெட்டைக்கு குடுத்ததுதான் தாமேதரத்தாருக்கு பிறசர் ஏத்தியது.

ரகு இன்னமும் குசினிக்குள் விக்கி விம்மிக்கொண்டிருந்தான். பாளாய்போன மனிசன் இந்தாளுக்கு விசர் கிசர் பிடிச்சிட்டுது போலை இப்பிடி என்ரை பிள்ளையை போட்டு அடிச்சுப்போட்டுது. என்ரை பிள்ளை வாட்டசாட்டமாய் வசதியாய் இருக்கிறானெண்டு அவள் பல்லைக்காட்டியிருப்பாள்.அதுவும் மோட்டச்சைக்கிள்ளை வேறை திரியிறான்.சும்மா விடுவாளைவையே. தகப்பன் காரன் கண்டதும் கதையை பிரட்டியிருப்பாளவை அவளவையளின்ரை பரம்பரையே ஆம்பிளையளை மயக்கிறதுதானே வேலை என்ரை கையிலை அம்பிடட்டும் அவளின்ரை.............................கிழிச்சு விடறன்.என்று திட்டியபடியே மீனாச்சி அவனது அடிகாயங்களை டெற்றோல் போட்டு பஞ்சினால் தடவிக்கொண்டிருந்தார்.

இவன் படிச்சு பட்டம் வாங்கினது போதும் முதல்வேலையா இவனை லண்டனுக்கு அனுப்பிற அலுவலை பாததிட்டு வாறன்.இவனை வெளியிலை போக விடாதை மோட்டச்சைக்கிள் இருந்தால்தானே ஊர் சுத்துவான் எங்கை அதுகின்ரை திறப்பு..எண்டபடி மோட்டச்சைக்கிள் திறப்பை தேடியெடுத்து தனது பொக்கற்றுக்குள் போட்டபடி பக்கதிலை இருந்த கொமினிக்கேசனிற்கு போய் மூண்டு பிள்ளையளின்ரை நம்பரையும் குடுத்து அப்பா நிக்கிறார் அவசரமாம் எண்டு சொல்லி விடுங்கோ.

முதலில் கொலண்டில் இருந்த மகனின் தொலைபேசி அழைப்பு வந்தது.தாமேதரத்தார் மளமளவெண்டு தொடங்கியவர் மற்றயவையோடையும் கதைச்சு உடனடியாய் அவனை எடுக்கிற வழியை பாருங்கோ எண்டு ஒரே மூச்சிலை சொல்லி முடிச்சார்.

அவனையும் கூப்பிட்டு அம்மாக்கு நானும் உங்களுக்கு அக்காவும் எப்பவோ ஸ்பொன்சருக்கு குடுக்கிறதுக்கு கதைச்சனாங்கள்.நீங்கள்தான் அவன் இந்த வருசம் ஓ எல் எடுக்கிறான் முடியட்டும் எண்டு இழுத்தனியள். சரி அண்ணை அக்காவோடை கதைச்சு உடனடியா அவனை கூப்பிடுற ஒழுங்கை செய்யிறன்.அதோடை உங்கடை ஸ்பொன்சர் அலுவல்களையும் பாக்கிறன் என்று கொலண்டில் இருக்கும் மகனின் பதிலோடு வீட்டிற்கு போன போது ரகுவை காணவில்லை.

எங்கையடி போட்டான் அதுக்கிடையிலை.

நீங்கள் மாட்டுக்கு அடிச்சமாதிரி அடிச்சுப்போட்டியள்.பாவம் கடையிலைபோய் சோடா குடிச்சிட்டு வாறனெண்டு காசு வாங்கிக்கொண்டு போனவன் இப்ப வந்திடுவான் மீனாச்சி ஆறுதல் சொன்னார்.ரகு திரும்ப வரவில்லை.தமோதரத்தாருக்கும் மீனாச்சிக்கும் பயம்பிடிக்கத்தொடங்கியது. சிலவேளை அந்தப் பெட்டையோடை ஏதும் லவ் இருந்திருக்குமோ?அதை கூட்டிக்கொண்டு......எங்கையாவது போய் தற்கொலை.................இப்படி பல சிந்தனைகள் ஓடியபடியே ஒரு நாள் போய்விட்டது.மறுநான் ரகுவின் நண்பர்கள் வீடுகளிலெல்லாம் போய் விசாரித்தனர். அதோடை மரக்காலை பக்கமும் போய் பார்த்தார்கள்.எந்த செய்தியும் கிடைக்கவில்லை.எதுக்கும் காவல் துறையிலை போய் புகார் குடுக்கலாமெண்டு யோசித்தாலும் தாமோதரத்தாருக்கு கெளரவ குறைச்சாயிருந்தது.சிலநேரம் இயக்கத்துக்கு போயிருக்கலாமெண்டு மீனாச்சிக்கு பயமாயும் இருந்தது.இரண்டு நாளாகிவிட்டது காவல்துறைக்கு போறதைத் தவிர வேறை வழியில்லை காவல் துறையில் போய் புகார் குடுத்திருந்தனர்.சிலநேரம் இயக்கத்திற்கு போயிருந்தால் பயிற்சிக்கு போனவர்களின் பெயர் விபரம் கோண்டாவில் அல்லது எழுது மட்டுவாள் முகாமில் இருக்கும் அங்கு போய் சரி பார்க்கச்சொல்லியனுப்பி விட்டிருந்தனர்.மீனாச்சி எல்லாக் கோயிலுக்கும் நேர்த்தி வைத்தபடி கோண்டாவில் முகாமில் போய் விசாரித்தார்கள்.ரகு இயக்கத்திற்கு போய்விட்டான்..................

Edited by sathiri

  • Replies 113
  • Views 17.3k
  • Created
  • Last Reply

சாத்திரி தொடக்கமே பட்டையைக் கிளப்புது. வயித்துப்பாட்டுக்கு ஒருவன் மண்ணெண்ணை விக்கப்போறான் , இன்னொருத்தன் சந்தணம் மிஞ்சி இயக்கத்துக்குப் போறான் . இங்கைதான் வில்லங்கம் வரப்பாக்குது :o :o . தொடருங்கள் . வாழ்த்துக்கள் :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கோமகன் கதையின் தலைப்பும் பின்னர் தொடரும் சம்பவங்களும். பலரிற்கும் பல கேள்விகளையும் சில நேரம் சர்ச்சைகளையும் எழுப்பும் என்பது நிச்சயம். ஏனெனில் இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்துமே அனைவரும் சந்தித்த அனுபவித்தவைகள்தான். பல விடயங்களை பலரிற்கும் பகிரங்கமாக சொல்லமுடியாத அல்லது எழுத முடியாத விடயங்கள் பலதையும் இந்தத் தொடர் தொட்டுச்செல்லும். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

Hmmmmm.......

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள். "பா வா ம் பி ற பா க ர ன்" என எழுத்துப்பிழையாக தலைப்பு இட்டதற்கும் காரணம் இருக்குமென நம்புகிறேன்.

தொடருங்கள், வாழ்த்துக்கள்! இரண்டாவது கதையைப் பார்த்தால் சிறி தன்னுடைய அனுபவத்தை எழுதிய மாதிரி இருக்குது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

"சும்மா புறுபுறுக்காதையணை.நான் வேலைக்கு போறன்.ஆனால் ஜயா மாதிரி பெட்டியை கட்டி பிரயோசனம் இல்லை இப்ப மீன் விக்கிற விலையிலை 500 ருபாய்க்கு வாங்கியந்து வித்தால் 100 ருபாயும் லாபம் வராது.மிச்சம் நாறிப்போம்..மினக்கெட்டு சைக்கிள் உழக்கிறதுக்கும் பத்தாது.

ஓ................அப்ப என்ன வைர யாவாரம் செய்யப்போறியளோ??இருக்கிறதைவிட்டிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதை தம்பி.

பறக்கிறதில்லை இதுவும் இருக்கிறதுதான்.நான் மண்ணெண்ணை வாங்கியந்து விக்கப்போறன்.கொஞ்சம் கயிற்றம்தான் ஆனா நல்ல லாபம் வரும்". சாத்திரி அண்ணா மண் வாசனை நன்றாக வீசுகின்றது, உங்கட கதை 1999 படம் மாதிரி தொடங்குது போகப் போகப் பார்ப்பம் விறு விறுப்பை

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா, ஆரம்பமே அருமை வாழ்த்துக்கள். அது சரி உங்கட கை காயம் மாறீட்டுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

." டேய் நாயே பளார்....உனக்கு செல்லம் கூடிப்போச்சு.பளார் .....எல்லாருமே செல்லம் தந்து தந்துதான் உன்னை கெடுத்துப்போட்டினம்.பளார்.... இவளிட்டை சொன்னாலும்.கேக்கமாட்டாள். பளார்.... ..அப்பவே சொன்னனான் பத்தாம் வகுப்பு படிக்கிற பெடியனுக்கு மோட்டச்சைக்கிள் வேண்டாமெண்டு .பளார்.... .அதுவும் அதுகளுக்கு போய் லவ்லெட்டர் குடுத்திரக்கிறாய். பளார்.....அதுகளார்..நாங்களார்..பளார்..... மானம் மரியாதையெல்லாம் போட்டுது..பளார்..பளார்..பளார்....கம்பு தும்பாய்போயிருந்தது. அடித்த அடி விலக்குப்பிடித்த மீனாச்சி மேலையும் பாதிவிழுந்தது.குசினியில் பாத்திரங்கள் சிதறிய சத்தமும் ரகுவின் அலறலும் நாலைந்து வீடுகளிற்கு கேட்டிருக்கும்.

சாத்தியண்ணா, என்னை நினைத்து, நினைத்து, இப்படி சிரிக்க வைச்சிட்டிங்கள் இப்பவரை. வீட்டில் அம்மா உதே மாதிரி கேட்டு கேட்டு தான் பூசை விழும் செய்கிற குழப்படிக்கு, நாங்கள் வீட்டை போக முதல் செய்தி போயிடும், நரி சொன்ன மாதிரி "அடிச்சது காய முதல்...."

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி தொடக்கமே பட்டையைக் கிளப்புது.  வயித்துப்பாட்டுக்கு ஒருவன் மண்ணெண்ணை விக்கப்போறான் , இன்னொருத்தன் சந்தணம் மிஞ்சி இயக்கத்துக்குப் போறான் . இங்கைதான் வில்லங்கம் வரப்பாக்குது :o :o . தொடருங்கள் . வாழ்த்துக்கள் :) :) .

உணர்ந்து போராட போனவர்களும் உண்டு கோமகன் .....இப்படியானவர்களும் உண்டு அப்படியானவர்களும் உண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hmmmmm.......

இழுவை பலமாயிருக்கு................

சாத்தியண்ணா, என்னை நினைத்து, நினைத்து, இப்படி சிரிக்க வைச்சிட்டிங்கள் இப்பவரை. வீட்டில் அம்மா உதே மாதிரி கேட்டு கேட்டு தான் பூசை விழும் செய்கிற குழப்படிக்கு, நாங்கள் வீட்டை போக முதல் செய்தி போயிடும், நரி சொன்ன மாதிரி "அடிச்சது காய முதல்...."

அது நரியா சிங்கமா?

Edited by I.V.Sasi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள். "பா வா ம் பி ற பா க ர ன்" என எழுத்துப்பிழையாக தலைப்பு இட்டதற்கும் காரணம் இருக்குமென நம்புகிறேன்.

நிச்சயமாக.... :icon_idea:

சாத்திரி

வாசகர்களின் நாடி பிடித்து அடுத்த அத்தியாயம் எழுதும் விளையாட்டெல்லாம் இனிச் சரிவராது. 'மலரக்கா' வில் நொந்தவர்கள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.

இனியெல்லாம் கதை முடியத்தான் விமர்சனம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சாத்திரியார், வாழ்த்துகள்! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா, ஆரம்பமே அருமை வாழ்த்துக்கள். அது சரி உங்கட கை காயம் மாறீட்டுதோ?

நலம் விசாரித்ததற்கு நன்றிகள்.கை காயம் ஆறிவருகின்றது. :)

  • கருத்துக்கள உறவுகள்

அது நரியா சிங்கமா?

மன்னிக்கவும், சிங்கம் தான், சசி நன்றி அறிய தந்ததிற்கு

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் படம் உண்மையான படமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் படம் உண்மையான படமே?

கிருபன் நல்லா உத்துப்பாருங்கோ உண்மையான படம்தான்.இந்தியனாமிநேரம்.மணலாறு காட்டுப்பகுதியில் எடுத்தபடம். அப்பிடியும் நம்பாட்டில் அதே இடத்திலை எடுத்த இன்னொரு படம் போடுறன் இரண்டையும் மாறி மாறி உத்துப்பாருங்கோ :lol: :lol:

LEADER072.jpg

கிருபன் கேட்டதில ஞாயம் இருக்குப்பா , ஏன் இந்த விளையாட்டு :) :) ?

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கமே அசத்தலாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முடிவோடதான் இறங்கியிருக்கிறியள்போல.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

வாசகர்களின் நாடி பிடித்து அடுத்த அத்தியாயம் எழுதும் விளையாட்டெல்லாம் இனிச் சரிவராது. 'மலரக்கா' வில் நொந்தவர்கள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.

இனியெல்லாம் கதை முடியத்தான் விமர்சனம். :lol:

மலரக்காவாலை கனபேர் பாதிக்கப்பட்டிருக்கினம். :lol: :lol:

கிருபன் கேட்டதில ஞாயம் இருக்குப்பா , ஏன் இந்த விளையாட்டு :) :) ?

கோமகன் எனக்குத் தெரிந்த பிரபாகரன் இவர்தான். பிறகு எப்படியெல்லாமோ மாறிப்போச்சு :(

தலைப்பு, படங்கள், கதையின் ஆரம்பம் எல்லாமே ஒரு தினுசாகத்தான் இருக்கிறது. ஹ்ம்.. தொடருங்கள். அதிகம் காக்க வைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

09.07.1995: ஆண்டு சனிக்கிழைமை.

....................................................................................................................................................................................

சந்திரிக்கா போட்ட மோசமான பொருளாதாரத்தடை மோகனை மண்ணெண்ணெய் வியாபாரத்தில் வேகமாக முன்னேற்றியிருந்தது சைக்கிளை விட்டு 90 சி.சி றீசைக்கிள் மோட்டார் சைக்கிளிற்கு மாறியிருந்தான். தானும் அடுத்ததொரு மண்ணெண்ணை மகேஸ்வரனாகவேண்டும் ஒரு கல்வீடு கட்டவேணும்.என்பதுதான் அவனுடைய கனவு. அப்படி மகேஸ்வரன் றேஞ்சிற்கு வந்தாலும் எலெக்சனிலை நிக்கிறேல்லையெண்டு முடிவெடுத்திருந்தான். ஊரில் பெற்றோல் எண்டாலே என்னவெண்டு சனத்திற்கு மறந்து போயிருந்தது எல்லாமே மண்ணெண்ணெய்தான்.பெற்றோலிற்கு மாற்றீடாக ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்தது சிலர் கசிப்பில் வாகனம் ஓட முயற்சிகளும் நடந்துகொண்டிருந்தது.மண்ணெண்ணெய்க்கும் செஞ்சிலுவை கப்பலையே காவலிருக்கவேண்டிய நிலைமை .இந்த நேரத்தில்தான் யாம்போத்தல் பஞ்சு விளக்கு பிரபல்யமானது.மற்றும்படி யாராவது சிரமப்பட்டு வன்னிக்குப்போய் வவுனியாவிற்கு உள்ளே போய் அல்லது தரகுகளிடம் காசு கொடுத்து மண்ணெண்ணையை கொண்டுவந்து விற்பார்கள்.அதைத்தான் மேகன் செய்துகொண்டிருந்தான்.அப்பொழுதுதான் அதுவரை கேள்விப்பட்டேயிருக்காத ஊர்களான ஊரியான் கொம்படி கிளாலி என்பன உலகத்திற்கே தெரியவந்தது.

ஊர் நிலைமையும் மோசமாகிக்கொண்டிருந்தது அம்மான் ரத்வத்தை யாழ்ப்பாணத்தை பிடிச்சு புலியளை ஒழிக்கிறதெண்டு சபமெடுத்திருந்தார்.

வழைமை போல இரண்டு பிளாஸ்ரிக் மண்ணெண்ணெய் கலன்களை கட்டிக்கொண்டு அவனது மோட்டச்சைக்கிளையும் மண்ணெண்ணையிலையே ஓடியபடி வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தான்..ஆமி முன்னேறி பாஞ்சதும் பிறகு புலிபாய்ஞ்சதும் நடக்கேக்குள்ளை வன்னியலை வந்துகொண்டிருந்த மோகன் பளைப்பக்கமாய் இரண்டுநாளாய் பதுங்கியிருந்திட்டு ஊருக்கு புறப்பட்டான் .அண்டைக்கும் வலிகாமம் பக்கம் அளவெட்டியிலை இருந்த ஆமி அடிச்ச செல்லுகள் பரவலாய் விழத்தொடங்கியிருந்தது.எந்தநேரமும் பெரிய சண்டைவரலாமெண்டு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் புலியள் இருக்கினம்தானே பிறகென்ன கவலையெண்டு நினைச்சபடி மோகனின் மோட்டசைக்கிள் புகையை கக்கியபடி போய்க்கொண்டிருந்தது .திடீரெண்டு சங்கானை மெயின் வீதியிலையும் ஒரு கெலி அடிக்கத்தொங்கியது.மோகனிற்கு தனக்கு வெடி விழுந்தாலும் பரவாயில்லை மண்ணெண்ணை கானிலை விழக்கூடாதெண்ட பயம்.குறுக்கு பாதையாலை போகலாமெண்டு நவாலி றோட்டிலை மோட்டச்சைக்கிளை இறக்கினான்.

ஒரு பனங்கூடல் அதுக்கு பிறகு சின்ன வயல் வெட்டை அதைதாண்டிட்டால் முருகன் கோயில் சேச்சடி வரும் பிறகு அங்காலை குடிமனையள் போய்சேந்திடலாமென நினைச்சவன் அந்தப்பக்கமும் கெலிசத்தம் வந்தது.நாசமறுப்பார் இண்டைக்கு என்ரை மண்ணெண்ணைக்கு அழிவு வைக்கமால் விடமாட்டாங்கள் போலை கிடக்கு எண்டு. நினைத்தபடி பனங்கூடலுக்குள் பதுங்கினான்.

அங்கு உருமறைப்பு செய்திருந்த இயக்காரரரின்ரை 50 கலிபர் ஒண்டு சடசடத்தது.கெலிக்கு வால்லை வெடிவிழுந்திருக்வேணும் புகைஞ்சபடி ஒரு பக்க செட்டை பிஞ்ச தும்பி மாதிரி சாய்வா பறந்தபடி காரைநகர் பக்கமாய் போனது .போக வெளிக்கிட்ட மேகனை இயக்கபெடியள் மறிச்சிட்டினம்.ஒரு கொஞ்ச நேரத்திலை திடீரெண்டு ஒரு புக்காரா இயக்கத்தின்ரை 50 கலிபர் சடசடத்ததுதான்.ஆனால் பெரிய வெடிச்சத்தங்கள் ஊரே அதிர்ந்தது.மேகன் காதைப்பொத்தியபடி குப்புற படுத்திருந்தான்.பலநுறுபேரின் அலறல் சத்தம் பொத்திய அவனது கைகளையும் ஊடுருவி காதில் புகுந்துகொண்டது. சேச்சுக்கு (சென் பீற்றஸ் தேவாலயம்)அடிச்சிட்டாங்கள்.மோகன் மண்ணெண்ணை கானை கழட்டி பத்திரமாய் காவேலையால் முடிவிட்டு காயம்பட்டவர்களை மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு ஏத்தி இறக்கினான்.150 பேரிற்கு மேல் இறந்து போயிருந்தனர்.

navali-church-boming.jpg

22.07.1995:ம் ஆண்டு

.............................................................................................................................................................................................

முன்னேறி பாய்ச்சல்லை இடம்பெயர்ந்தவையள் திரும்பவும் வீடுகளிற்கு வந்துகொண்டிருந்தார்கள்.இயக்கமும் 100 கோடி ரூபாய் தேவையெண்டு தேசிய பாதுகாப்பு நிதியெண்டு ஒரு திட்டத்தை தொடங்கி வீடு வீடாய் காசு சேர்க்கத் தொடங்கியிருந்தவை வெளிநாட்டுக்காரருக்கு ஒரு லச்சம் அரக்காது.மோகனிட்டையும் 25ஆயிரம் கேட்டு மோகன் கெஞ்சி கூத்தாடி வீட்டு நிலைமை விளங்கப்படுத்தி 15ஆயிரமாய் குறைச்சிருந்தான். அந்தக் காசும் ஒரு கிழைமைக்குள்ளை குடுக்கவேணும் அதோடை இரவுக்கு பொன்னாலைக்கு பங்கரடிக்க வரச்சொல்லி இயக்கம் கேட்டிருந்தது கட்டாயம் போகவேணும் என நினைச்சபடியே மோகனும் சங்கானை சந்தியிலை வழைமை போல பின்னேரமாய் ஒரு மேசையை போட்டு மண்ணெண்ணை யாவாரத்தை ஆரம்பித்திருந்தான்.

சுந்தரத்தார் நல்ல வெறியிலை கொஞ்சம் தள்ளாடியபடி பிளாஸ்ரிக் கானோடை வந்தவர் டேய் எனக்கு 5 லிற்றர் ஊத்து எண்டார்.

ஜயா ஆழுக்கு ஒரு லீற்றர்தான் இருக்கிறதை எல்லாருக்கும் பகிரவேணும்.அதுவும் முக்கியமா படிக்கிற பிள்ளையளிற்கு.உங்களுக்கெதுக்கு 5 லிற்றர்.

காசை எடுத்து எறிஞ்சவர்"டேய் உனகென்ன காசுதானே வேணும் இந்தா.. ....ஊத்து நான் தோட்டம் செய்யப்போறன் ஊத்து.

பிள்ளையளும் மனிசியும் பிரான்சிலை பேசாமல் நீங்களும் போய் சேருறதை விட்டிட்டு தோட்டம் செய்யப் போறாராம்.இந்தாங்கோ ஒரு லீற்றர்தான் விரும்பினால் வாங்குங்கோ இல்லாட்டி போங்கோ.

முறைத்தபடி ஒரு லீற்றர் மண்ணெண்ணையுடன் ..உந்த அகதி நாயளிற்கு என்ன செய்யிறன் பாரெண்டு புசத்தியபடி போய்க்கொண்டிருந்தார்.

அகதிகளாய் இடம்பெயர்ந்து வந்திருந்தவர்கள் அவரின்ரை வீட்டு கிணத்திலை தண்ணி அள்ளினம் எண்ட கோபத்திலை கிணத்துக்கை மண்ணெண்ணையை ஊத்திப்போட்டாராமெண்டு காவல்துறை சுந்தரத்தாரை பிடிச்சுக்கொண்டு போட்டினமாம் எண்டு அடுத்தநாள் கேள்விப்பட்டான்.சனம் மண்ணெண்ணெய்க்கு படுற பாட்டிலை விசர் மனுசன் கிணத்துக்கை ஊத்திட்டுதாம்.நல்ல மிதி குடுக்கவேணும்.என்று மனதில் நினைத்தபடி. அடுத்தநாள் இயக்கத்திற்கு குடுக்கவேண்டி 15 ஆயிரத்தை எண்ணியெடுத்து கடதாசில் சுற்றி தலைமாட்டில் வைத்தபடிபடுத்துக்கொண்டான்.

மறுநாள் காலை செல் சத்தங்களுடன் விடிந்தது சிறிது நேரத்திற்கு பின்னர் மக்களை அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு இயக்கம் அறித்துக்கொண்டு திரிந்தார்கள்.ஆமி வந்தாலும் இயக்கம் திரும்பவும் பிடிக்கும்தானே என்கிற நினைப்பில் மோகனும் தன்னிடமிருந்த மண்ணெண்ணையை பத்திரமாக ஒரிடத்தில் ஒழித்து வைத்துவிட்டு இருந்த பணத்தையும் ஆளிற்கொரு மாற்றுத்துணிகளை மட்டும் எடுத்தபடி குடும்பமாக வெளியேறினார்கள். போற வழியிலையிலையே அரசியல் துறை அலுவலகத்திலை அவைக்கு குடுக்கவேண்டிய காசையும் குடுத்திட்டு போகவேணும் என மனதில் நினைத்தபடி "எணோய் நான் ஜயாவையும் கடைசியையும் ஏத்திக்கொண்டு போறன் நீ மற்றவளோடை கோப்பாய் பக்கமாய் வாந்துசேர் " என்றுவிட்டு ""முன்னேறிப் பாய்வதென்ன அம்மா நீ பின்னாடி ஓடுவதேன் சும்மா என்று சிட்டுவின் பாடலை முணு முணுத்தபடி தன்னுடைய 90 இயக்கினான்.தம்பிப் பிள்ளையரிற்கு இருமல் கூடிக்கொண்டே போனது. சூரியக்கதிரின் வெப்பமும் அதிகமாகிக்கொண்டே போனது.

......................................................................................................................................................................................

கோப்பாய் ..சாவகச்சேரி ..கிளாலி யெண்டு மல்லாவி வரை வந்து சேர்ந்தாயிற்று எங்கும் மக்கள் வெள்ளம் யார் எங்கே தங்குவதெண்டு தெரியவில்லை..வன்னியில் சொந்தங்கள் இருந்தவர்கள் பாடு ஓரளவு பரவாயில்லை .மற்றும்படி மரங்களின் கீழும் தரப்பாள்களும்.தடியில் கட்டிய சேலைகளும்தான் இருப்பிடமாகியது. தங்களின் நிலங்களையெல்லாம் மனிதர்கள் பிடித்துவிட்டார்கள் என்கிற கோபத்தில் பாம்புகளும் கலைத்து கலைத்து கொத்தியது. எங்காவது மிருகங்களை தேடியலைந்த நுளம்புகளிற்கு மனிதஇரத்தம் விருந்தாகி மலேரியாயும் வயிற்றுப்போக்கும்.தேசிய வியாதியாய்போனது.

ஆறேழு லச்சம் சனத்தை திடீரெண்டு வெளியேறுங்கோ எண்டு சொல்லிப் போட்டாங்கள்.எங்கை போறது?? எங்கை தங்கிறது?? எத்தினை நாளைக்கு தங்கிறது எண்டு ஒரு இழவும் தெரியேல்லை. போற இடத்திலை சாப்பாடு தண்ணியாவது கிடைக்குமே எண்டும் தெரியாது. மூண்டு பேர் வெளிநாட்டிலை எண்டு சொல்லி மூண்டுலச்சம் காசு மட்டும் வாங்கிப் போட்டு இப்பிடி வீடு காணியெல்லாம் விட்டு அனாதையாய் நடக்கவைச்சிட்டாங்களே என்று புலம்பிய படியே .கொஞ்சம் .காசு.. நகை காணி உறுதி ..எல்லாத்தையும் ஒரு துவாயில் போட்டு சுருட்டி இடுப்போடு சேர்த்துக்கட்டியபடி மீனாச்சியும் தாமோதரத்தாருக்கு பின்னலை ஓடிக்கொண்டிருந்தாள்..

கோண்டாவிலில் இருந்து மகனைத்தேடத்தொடங்கிய மீனாச்சி வன்னிக்குள் வந்ததுதம் தேடலை தொடர்ந்துகொண்டேயிருந்தார். அவரின்ரை சொந்தக்கார பெடியனொருத்தன் இயக்கத்திலை அரசியல் பிரிவிலை பொறுப்பிலை இருந்தவன் .இயக்கப்பெயர் பொழிலன் அவனைத் தேடிப்பிடித்து விசயத்தை சொன்னவர். அவனை ஒருதரம் பாத்து கதைச்சால் மட்டும் போதும் எங்கையிருக்கிறாணெண்டு சொல்லு என்று அழுது புலம்பினார். மீனாச்சியின் அழப்பறை தாங்காமல் அவனும் எல்லா இடமும் தவகல் அனுப்பி ரகுவை கண்டு பிடித்தவன்... அம்மா ஆள் பயிற்சி முகாமிலை இருக்கு இப்ப ஒண்டும் செய்யேலாது பொறுத்தனீங்கள் இன்னும் ஒரு மாதம் பொறுங்கோ பயிற்சி முடிஞ்சு வந்ததும் பாக்கலாம்" மீனாச்சி கொஞ்சம் ஆறுதலடைந்தாலும் அடிக்கடி அரசில் பிரிவு முகாமிற்கு போய் பொழிலனை நச்சரித்தபடியேதான் இருந்தாள்.

ரகுவிற்கு பயிற்சிக்கு போனதிற்கு பிறகுதான் ஏனடா வந்தம் எண்டிருந்திச்சிது. நேரத்துக்கு நேரம் வித விதமான சாப்பாடு கைநிறைய காசு மோட்டார் சைக்கிளில் சினேகிதங்களோடை ஜாலியாய் ஊர் சுத்தித் திரிந்தவனிற்கு ...பயிற்சி முகாமில் ஒவ்வொருநாளும் ஒரேசாப்பாடு கல்லு மண் கடிபடும் . அவிச்ச கடலைக்குள்ளை சிலநேரம் பூச்சி புளுவும் அம்பிடும் . கொட்டில்லை மணல்தரையிலை படுக்கை... சிலநேரம் பங்கர் .நுளம்பு இலவச இணைப்பு.எல்லாத்துக்கும் மேலை காலங்காத்தாலை பயிற்சி தொடங்கிறதுக்கு அடிக்கிய விசில் சத்தத்தை கேக்க உயிர் போறமாதிரி இருக்கும். தப்பியோடுவமா எண்டு சில நேரம் யோசிச்சிருக்கிறான். ஆனால் பயிற்சி முகாம் தொடங்கி ஒரு கிழைமையிலை தப்பியோடின ஒருத்தனை திரும்ப பிடிச்சுக்கொண்டுவந்து எல்லாருக்கும் முன்னாலை அடிச்ச அடியை பாத்த ரகுவுக்கு வயித்தை கலக்கியது. ஓடுற யோசினையை கைவிட்டவன் அதுமட்டுமல்ல நாள் செல்லச்செல்ல பயிற்சியும் பழகிப்போனது.ஒருமாதிரி பல்லைக்கடித்படி பயிற்சியை முடித்துவிட்டான்.

பயிற்சி முடிந்து வேயொரு முகாமிற்கு அனுப்பபட்டிருந்த ரகுவை பொழிலனே நேரடியாக தேடிவந்து அழைத்துப்போய் தன்னுடைய அரசியல் பிரிவு முகாமில் வைத்து மீனாச்சியிடம் ஒப்படைத்துவிட்டு

அக்கா ஆளை கூட்டிக்கொண்டு போங்கோ நான் அவனின்ரை பொறுப்பாளரோடை கதைச்சு மூண்டுநாள் லீவு கேட்டு கூட்டியந்தனான்..தேடிவாறஅளவிலை வைக்காமல் மூண்டாம் நாள் ஆளை கொண்டுவந்து இஞ்சை விடவேணும் பிறகு எனக்கு பிரச்சனையை தரக்கூடாது... என்று பொழிலன் கண்டிப்பாக சொல்லியனுப்பி விட்டிருந்தான்.

என்ன தளுதளு வெண்டிருந்த என்ரை பிள்ளை இப்பிடி காஞ்சு கறுத்துப்போய் வருத்தக்காரன் மாதிரி வந்து நிக்கிது ..இதெல்லாம் உனக்குத் தேவையோடா என்று புலம்பியபடியே மீனாச்சி ரகுவை கட்டிப்பிடித்து அழுதபடியே அழைத்து போனார்.

அந்தக் கஸ்ரமான சூழ்நிலையிலும் மீனாச்சி காசை விட்டெறிந்து ரகுவிற்கு பிடிச்சமாதிரி விதம் விதமாய் சமையல் சாப்பாடு தடல்புடலாய் நடந்தது .கண்மூடி முழித்தது போலை மூண்டுநாள் ஓடிவிட்டது. ரகு திரும்ப முகாமிற்கு போகவேணும்.

தம்பி நான் அடிச்சுப்போட்டன் எண்டுதானே இயக்கத்துக்கு ஓடினனி.. இனி அடிக்கமாட்டனடா திரும்பி வாடா தளுதளுத்தார் தமோதரத்தார்.

எடேய் உன்ரை காம்ப் எங்கையிருக்கெண்டு காட்டு நான் வந்து உன்ரை பொறுப்பாளரோடை கதைச்சு கையிலை கால்லை விழுந்தாவது உன்னை கூட்டிக்கொண்டு வாறன் சொல்லடா என்றபடி ரகுவைக்கட்டிப்பிடித்து அழுதார் மீனாச்சி

ரகுவுக்கும் அழுகையாய் வந்தது ""அங்கையெல்லாம் ஒருத்தரும் வரேலாது எங்கடை காம்ப் வன்னிவிளாங்குளத்திலை இருந்து உள்ளுக்கை காட்டுக்கை போகவேணும்.கொஞ்நாள் போகட்டும் நானே பொறுப்பாளரோடை கதைச்சிட்டு வாறன்.""

அரசியல் முகாம்வரை தாமோதரத்தாரும் மீனாச்சியும் கொண்டுபோய் ரகுவை விட்டுவிட்டார்கள்.சில மாதங்கள் கடந்தது தாமோதரத்தாருக்கு இலண்டன் ஸ்பொன்சர் சரிவந்து அவர் மகளிடம் போய்விட்டார். மீனாச்சியோ ரகுவை விட்டு வரமாட்டன் எண்டு அடம் பிடித்து நிண்டதாலை அவரது ஸ்பொன்சர் இழுபட்டது. தாமோதரத்தார் லண்டன் போய் சேந்ததும் மீனாச்சி அதிரடி திட்டத்தில் குதித்தார் .பொழிலனின்ரை அரசியல் முகாமிற்கு போனவர் ரகுவை கொண்டுவாங்கோ இல்லாட்டி அன்னம் தண்ணி இல்லாமல் இதிலையே சாகப்போறனெண்டு முகாமுக்கு முன்னாலை குந்திவிட்டார்.

மனிசி கொஞ்சநேரம் குந்தியிருந்திட்டு பேசாமல் போயிடும் எண்டுதான் பொழிலன் நினைத்தான்.ஆனால் மனிசி அங்கையே படுத்திட்டுது.ஒரு நாள் போயிட்டுது மனிசியை விடுப்புப் பாக்கிற சனமும் சமாதானப்படுத்தி வீட்டை கூட்டிக்கொண்டு போறதுக்கு சொந்தபந்தங்களும் முகாமுக்கு முன்னாலை குவியத் தொங்கிட்டினம். பொழிலனிற்கு தர்மசங்கமாய் போகவே ரகுவின்ரை முகாம் பொறுப்பாளரோடை வோக்கில் தொடர்புகொண்டு விசயத்தை சொன்னான்.

முகாம் பொறுப்பாளர் ரகுவை கூப்பிட்டு

உன்ரை அம்மா பொழிலன்ரை காம்ப் வாசல்லை ஒரே பிரச்சனையாம் இந்தா அவாவோடை கதைச்சு சமாதானப்படுத்தி அனுப்பிவிடு இந்தா வோக்கியிலை கதைச்சுப்பார் இல்லாட்டி நேரை போய் கதைக்கப்போறியா ??நேரிலை போய்த்தான் கதைக்கவேணுமெண்டால் நானும் கூடவாறன். வோக்கியை நீட்டினான்.

இல்லையண்ணை ................

என்ன வோக்கிலை சொன்னால் கேக்கமாட்டாவே சரி வெளிக்கிடு நேரிலை போய் கதைச்சிட்டு வலருவம்.

அதுவுகும் இல்லை.....

அப்ப என்ன செய்யப்போறாய்.??

அம்மா என்ன சொன்னாலும் கேக்கமாட்டா....................

ம்........

நான் முதல் வீட்டை போட்டு வரேக்குள்ளையே சொல்லித்தான் விட்டவா

என்வெண்டு???

ரகுவிற்கு நாக்கு வரண்டது மெண்டு விழுங்கியவனாய்.."கெதியாய் இயக்கதை விட்டிட்டு வரச்சொன்னவா.....

அதுக்கு?????

எழுதித் தந்திட்டு போகலாமெண்டு................................

அங்கிருந்த மேசையில் ஓங்கி கையால் அடித்த பொறுப்பாளர்." என்னடா விழையாடுறீங்களா?? நினைச்ச உடனை வாறதுக்கும் விருப்பமில்லாட்டில் போறதுக்கும் நாங்கள் என்ன சத்திரமா நடத்திறம்.??ஒருதனை எடுத்து பயிற்சி குடுத்து வெளியாலை கொண்டு வாறதுக்கு எவ்வளவு கஸ்ரப் படுறம் ..எவ்வளவு செலவெண்டு தெரியுமோ??

வேணுமெண்டால்கேக்கிற காசை அம்மாட்டை காசு வாங்கி தாறன்..நான் போப்போறன்.

பொறுப்பாளரின் கை ரகுவின் கன்னத்தில் இறங்கியது." கழட்டடா குப்பியை நீ நினைச்சமாதிரியெல்லாம் போக ஏலாது .இனி நீ ஆயுதத்தை கையாலை தொடக்கூடாது நான் மேலிடத்திலை கதைச்சுப்போட்டுத்தான் முடிவு சொல்லுவன்.எனக்கு முன்னாலை நிக்காதை போ எண்டு கத்தினான்.

ரகு குப்பியை கழட்டி பொறுப்பாளரிடம் குடுத்துவிட்டு கன்னத்தை தடவி அழுதபடி போனான். முகாமிலிருந்த மற்றையவர்கள் கிண்டலடிக்கத் தொடங்கினார்கள்.

ரகு இயக்கத்தை விட்டு போவதாக எழுதிக் குடுத்ததன் பின்னர் ஆறு மாதங்கள் தண்டனைக்காலமாக அறிவிக்கப்பட்டு பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டான்.ஆறு மாத காலமும் பயிற்சி முகாமில் சமையல் செய்வது.முகாமை துப்பரவாக்குவதுதான் அவனது வேலை.அங்கையும் அவனிற்கு கிண்டல்கள் தெடரத்தான் செய்தது. ஆறுமாத காலத்தை முடித்து வீட்டிற்கு போய்விட்டான். மீனாச்சிக்கு இப்பதான் பெரியநிம்மதி. ஆனால் அடுத்த பிரச்சனை இயக்கத்தின்ரை பாஸ் முறையாலை இரண்டு பேரும் ஒரே நேரத்திலை வன்னியை விட்டு வெளியாலை பேகேலாத நிலைமை. என்ன செய்யலாமெண்டு மண்டையை போட்டுக் குளப்பிக்கொண்டிருந்வளிற்கு திடீரெண்டு வசந்தியின் நினைப்பு வந்தது.

வசந்தி மீனாச்சியின்ரை பெறாமகள் முறை .யாழ்ப்பாணத்திலை காதலிச்சு ஒரு பெடியனோடை ஓப்போய் பிரச்சனையெல்லாம் நடந்தது.சாதி மாறி காதலிச்ச பிரச்சனையெண்டபடியாலை தமிழீழ காவல்துறை தலையிட்டு அவைதான் கலியாணமும் கட்டி வைச்சவை. அதுக்குப்பிறகு அவளோடை மீனாச்சி கதைக்கிறேல்லை.இடம் பெயந்து வந்து இப்ப இஞ்சைதான் பக்கதிலை எங்கையே கொட்டில் போட்டு இருக்கினமாம். கையிலை குழந்தோடை நிவாரணம் வாங்கிக் கொண்டு போகேக்குள்ளை அவளை மீனாச்சி பாத்திருக்கிறா.முதல்வேலையா வசந்தியை தேடிப்பிடிக்கவேணும்.

வசந்தியை தேடிப்பிடிச்ச மீனாச்சி " எடியேய் உன்னை அண்டைக்கு றோட்டிலை கண்டனான் நீ சரியாய் கஸ்ரப் படுறியாம் எண்டு கேள்விப்பட்டன்.என்னதான் பிரச்சனையெண்டாலும் ஒருத்தருக்கு கஸ்ரம் எண்டால் சொந்த இரத்தம் துடிக்குமல்லோ. அதுதான் உன்னைத் தேடித்திரிஞ்சனான்.இந்தாடி பிடியடி" எண்டு பத்தாயிரம் ரூபாயை வசத்தியின் கைகளில் திணித்தார். வசந்தியும் கண்கலங்கினாள்.

அடுத்தடுத்து சிலநாட்கள் வசந்தியை சந்தித்து கதைச்ச மீனச்சி ஒருநாள் மெதுவாய் விசயத்தை அவிழ்த்தார். " எடியே உன்னட்டை சொன்னால் என்ன... எனக்கும் இப்ப ஏலாது அடிக்கடி நெஞ்சுவலி வருகிது இஞ்சை எல்லா டாக்குத்தர் மாரிட்டையும் காட்டிப்போட்டன். கொழும்புக்கு போகச்சொல்லிப் போட்டாங்கள்.நான் தனியா என்னெண்டு போறது இவன் ரகுவையும் கூட்டிக்கொண்டு போனால்தானே எனக்கு உதவியாயிருக்கும். ஆனால் இவங்கள் குறுக்காலை போவார் ஒராழுக்கு அதுவும் எனக்கு மட்டும்தானாம் பாஸ் தருவாங்கள். அப்பதான் உன்ரை நினைப்பு வந்தது. நான் கேட்டால் நீ மாட்டன் எண்டே சொல்லப் போறாய். நீ பிணை நிண்டியெண்டால் நான் போய் வருதத்தை மாத்திப் போட்டு வந்திடுவன். அதுவும் நீ சும்மா பிணை நிக்கவேண்டாம். நீயும் பாவம்தானே பிள்ளைகுட்டிக்காரி உனக்கு 50 ஆயிரம் தாறன். ஒண்டும் அவசரமில்லை யோசிச்சு உன்ரை மனிசனிட்டையும் கேட்டு சொல்லு. ஆனால் கட்டாயம் திரும்வந்திடுவன் பயப்பிடத் தேவையில்லை. ஏதோ நான் வருத்தத்திலை வன்னிக்கை சாகிறதோ இல்லை கொழும்பு போறதோ எண்டிறது உன்ரை கையிலைதான் இருக்கு.

வசந்தியும் யோசித்தாள் இருக்கிற கஸ்ரத்திற்கு ஜம்பதாயிரம் ரூபாய் கிடைச்சால் எவ்வளவு பெரிய உதவி அதே நேரம் வீட்டுக்காரர் எல்லாருமே வெறுத்து ஒதுக்கி இருக்கேக்குள்ளை மீனாச்சி பெரியம்மாதான் தேடிவந்து உதவினவா. வருத்தம் எண்டு தானே உதவி கேக்கிறா.பாவம் இந்த உதவிகூட செய்யாட்டில் மனிசரில்லை.

மீனாச்சியும்.வசந்தியும் புலிகளின் பாஸ் அலுவலகம் நோக்கி நடந்தனர்.

................................................................................................................................................................................................

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.