Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசையும் கதையும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது கதையை இப்போதுதான் பார்கிறேன், இசையும் கதையும் நன்றாக இருக்கு தொடருங்கள்!

  • Replies 127
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்னா இருக்கு நெடுக்ஸ் அண்ணா........

தமிழில் தற்புகழ்ச்சி என்று கூறி மட்டம் தட்டுகின்றோம். அதையே யாராவது வெள்ளைக்காரன் ஏதாவது ஆராய்ச்சி செய்து மனிதனின் உளவளத்திற்கு தேவையான ஓர் விடயம் என்று கூறினால் தற்புகழ்ச்சியின் அவசியம் பற்றி கல்வி புகட்டுகின்றோம். இந்த வியாபார உலகில் சலசலக்கத் தெரியாவிட்டால் தப்பிப்பிழைப்பது கடினமே. ஆகாயத்தை எட்டுவேன் என்று கனவு கண்டால்தான் ஆகக்குறைந்தது பனையளவு உயர்வையாவது அடையமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்ததை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை கலைஞன்[நான் மற்றவர்கள் விளங்க கூடிய வகையில் எழுதவில்லையோ தெரியவில்லை]...இந்த கதையை நெடுக்ஸ் தொட‌ங்கும் போது அவர‌து நண்பரைப் பற்றி சொல்லத் தான் தொட‌ங்கினவர் ஆனால் அவர‌து நண்பரை பற்றி எழுதினதிலும் பார்க்க அவரைப் பற்றி எழுதினது தான் அதிகமாய் இருக்கிற மாதிரி எனக்குப் பட்டது...இது பற்றி நான் மேலே எழுதி விட்டேன் அதற்கு நெடுக்ஸ்சும் பதில் கொடுத்து விட்டார் மேலும் இது குறித்து விவாதிக்க விரும்பவில்லை

நான் பொதுவாகவே சொன்னேன். முன்பு வன்னிமைந்தன் என்று ஒருவர் இங்கு எழுதினார். அவரை கிண்டல் செய்தவர்கள் பலர். ஆனால் தேனிசை செல்லப்பா அவரது பாடலை பாடியதும் ஆகா ஓகோ என பாராடப்பட்டார். கவிஞர்/பொயட் அவர்களை பலர் தூற்றினார்கள். இன்று தமிழ் சினிமாவில் உயர்ந்த விருது பெறும்போது பாராட்டுகின்றார்கள். எமக்கு பொதுவாக அருகில் உள்ளவற்றின் பெருமைகள் தெரிவதில்லை. அருகில் உள்ளவற்றின் அம்சங்களை ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ முடிவதில்லை. ஆனால் வேறேதோ வகையில் அவற்றுக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது அங்கலாய்க்கின்றோம்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிக்கும் ஒரு காரணம் இருக்கும் கலைஞன்...வன்னி மைந்தனை பற்றி எனக்குத் தெரியாது ஆனால் பொயட்டின் அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அவரது நடிப்பும்,எழுத்தாற்றலும் புகழதக்க வகையில் இருந்ததால் ஒரு தமிழனாய் சக உறவாய் பாராட்டி உள்ளார்கள்.இரண்டும் இரு வேறு நிலைகள்...நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஒருவரது எழுத்துகளோ,செய்கைகளோ எமக்கு பிடிக்காமல் இருந்தாலும் விமர்சிக்க கூடாது போல் உள்ளது அல்லது ஒருவரது கருத்துக்கள்/செய்கைகள் எமக்கு பிடிக்கவில்லை என்று அவர்களை விமர்சித்தால் அதன் பின் அவரை வேறு எதற்கு வாழ்த்தக் கூடாது போல் உள்ளது

கருத்துக்களத்தில் நெடுஸ்சோடு கருத்துக்களால் மோதுப் பட்டாலும் அவர் ஒரு விஞ்ஞானியாக வந்து சாதனை செய்தால் வாழ்த்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்...அதே மாதிரித் தான் மற்றவர்கள் சாதித்தாலும் பாராட்டுவேன்[அவர்கள் கருத்துக்களத்தில் எனக்கு பிடிக்காத ஆட்களாக இருந்தாலும்]...இது என்னுடைய கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா ரதி அக்கா..நானும் உங்களோட கருத்துக்களை எல்லாம வாசிச்சு ஒரு மெய்ஞானி ஆக போறன் அப்ப என்னையும் வாழ்த்துவிpங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் அன்பான தலை தடவலில்.. .. தாய்மடி மீது கண்ணயர்ந்து தூங்கவும்.. எழும்பிப் போய் கட்டிலில படடா என்ட அம்மாவின் அதட்டலில்... அரைகுறை நித்திரைத் தூக்கத்தில்... தூக்கத்துக்குப் போனதும் தான் தெரியும். அதிகாலை ஒன்றிரண்டு மணி இருக்கும்.. குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும் வெடிக்கும் சத்தங்களுமே அன்று எனக்கான திருப்பள்ளி எழுச்சி பாடிக் கொண்டிருந்தன..!

பலாலிப் பக்கமா இடை விடாமல்.. ஒரே குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருந்தன. அராலியில கொப்பேகடுவிற்கு முழங்கினது போல.. கிட்டடியில பலாலிப் பக்கமும் முழக்கம் இருக்கென்று.. குண்டன் சொன்னது ஞாபகத்துக்கு வந்து தொலைக்க... சமர்க்களம் உக்கிரமாகித் தணிந்து கொண்டிருந்தது.

ஆனால் மனதிலோ..... சமர்க்களம் பற்றிய நினைவோட்டம் போர்க்களம் போல.. தனிவதும் தீவிரமாவதுமாக இருந்தது. சண்டை தணிய.. ஆமிக்காரன் பலாலி பக்கமிருந்து.. அடிக்கிற.. செல்களும் தாறுமாறாக விழுந்து வெடிக்கும் சத்தங்களும் கேட்க.. சண்டை உக்கிரமா நடந்திருக்குமோ.. ஆமிக்காரனுக்கு நல்ல இழப்பாய் இருக்குமோ.. எங்கட அண்ணாமாருக்கு வெற்றியோ.. தோல்வியோ.. என்ற எண்ணங்கள் மனதை ஆளத் தொடங்க.. செய்தி அறிவதன் தாகம் மேலிட.. மீதி நித்திரையும் விடியும் வரை பறிபோனது.

நான் யாழ் கோட்டை.. மண்டைதீவு என்று.. சண்டைகள் உக்கிரமாக நடக்கிற காலங்களில கூட... சத்தங்களை உற்றுக் கேட்டுக் கொள்ளுறனான். அப்படித்தான் இந்தச் சண்டையிலும் நித்திரையால முழிச்சதில இருந்து சத்தங்களை வெகு அவதானமாகக் கேட்டுக் கொண்டே இருந்தனான்... ஆரம்பத்தில அண்ணாமாரின் துப்பாகிகள் அடிக்கடி பேசியதையும் அப்புறம் ஆமிக்காரனின் துப்பாக்கிகள் இடைவிடாமல் அலறியதையும் அவதானிக்க முடிஞ்சுது. அண்ணாமாரின் துப்பாக்கிகள் எப்பவும் விட்டு விட்டு அடிக்கும். ஆமிக்காரன் ஓட்டோரில விட்டு பொழிஞ்சு தள்ளுவான். அண்ணாமாரின் கை ஓங்கினால்.. ஓட்டோரில பொழியிற சத்தம் அடங்கி... விட்டு விட்டு அடிக்கிற சத்தம் ஓங்கி இருக்கும். அண்ணாமார் நிலைமை சங்கடமென்றால்.. மாறி இருக்கும். இது என் தற்துணிவு. இது பல தடவைகள் களத்தைப் பற்றி அறிய எனக்கு உதவி இருக்குது. இப்ப எல்லாம் இதை அவதானிக்கிறதே.. எனக்கு சண்டை என்றால் பழக்கமாகவும் போயிட்டுது.

இப்படி மனம் களத்தை பற்றிய நினைவில்.. குழப்பத்தில் முற்றாக மூழ்கி இருக்க.. பொழுதும் வழமைக்கு மாறாக விரைவாக விடிவது போல.. விடிந்து கொண்டது. உடனவே.. முகம் கழுவி.. அண்ணாமாரின் வெற்றிக்காக சாமிக்கும் ஒரு கும்பிடு போட்டிட்டு.. சைக்கிளை எடுத்துக் கொண்டு.. நாவலர் வீதியில் கைலாசபிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்த உதயன் அலுவலம் நோக்கி ஸ்பெசல் பேப்பர் வாங்க ஓடினன். அங்க போனால்.. செய்தி இன்னும் கிடைக்கல்ல.. பின்னேரம் தான் எல்லாம் தெரியும் எண்டிச்சினம். ஏமாற்றத்தோடு.. திரும்பி.. கோவில் வீதியில் இருந்த ஈழநாதம் அலுவலகம் நோக்கி ஓடினன். அங்கையும் சொல்லிச்சினம்.. பின்னாரம் போல தான் ஸ்பெசல் பேப்பர் வரும் என்று.

அப்புறம் என்ன.. முழு ஏமாற்றத்தோடு.. வீடு திரும்பும் வழியில்.. குண்டனின் வீட்டிற்கு முன்னால நின்று சைக்கிள் மணியை அடிச்சன். அவனும் சண்டையின் உக்கிரம் அறிஞ்சு.. நித்திரை கொள்ளாதவன் போல.. உடனவே கேற்றுக்கு ஓடி வந்தான்.

என்னவாம்.. நீ.. சொன்னது போல.. முழங்குது எண்டன். அதற்கு அவன் சொன்னான்.. எல்லாம் எங்கட கரும்படை போல இருக்குது. சண்டை அதிகம் நீளல்ல.. என்றால்.. அதாத்தான் இருக்கும் என்றான்.

ஓம்.. எனக்கும் அப்படித்தான் தெரியுது.. என்றேன்.

நாங்கள் அப்படி கதை பேசிக் கொண்டிருக்க.. அண்ணாமாரின் பஜிரோ ஒன்று அன்னசத்திர லேனுக்கால வந்திச்சு. குண்டன் கேற்றில நிக்கிறதைக் கண்டிட்டு... அவை வாகனத்தை நிற்பாட்டிச்சினம். குண்டனும் வணக்கம் அண்ணா.. என்ன சத்தமா இருக்கு என்றான். அதுக்கு அந்த அண்ணா சொன்னார்.. பலாலிக்க புகுந்திருக்குப் போல. வடிவாய் தெரியல்ல... எதுக்கும் பின்னேரம் ஒருக்கா வீட்டுக்கு வாங்கோ என்று.. பஜிரோவில வந்தவ சொல்ல.. ஓம்.. வாறன் என்று குண்டன் சொல்லி முடிக்க முதலே.. பஜிரோ புறப்பட்டு போயிட்டுது.

இதை பேசாமல் அவதானிச்சுக் கொண்டிருந்த நான்.. என்ன நீயும் ஜோதியில இரண்டறக் கலந்திட்டியோ எண்டன். அதுக்கு அவன்.. உனக்கு தெரியும் தானே... இந்த அண்ணா எங்கட ஸ்கூலில படிச்சிட்டு இருக்கிறப்பவே.... இந்தியன் ஆமி.. இங்க.. இருக்கேக்க இயக்கத்துக்குப் போனவர். அதால எனக்கு நல்ல பழக்கம் என்று சொல்லி சமாளிச்சான். இருந்தாலும் எனக்குள்ள பல சந்தேகங்கள் முளைக்க... மீண்டும் அவற்றை கேள்வியாக்காமல்.. மெளனமாக்கி அடக்கிக் கொண்டன்.

அப்போது.. குண்டனின் வீட்டில் இருந்து.. ஒலித்துக் கொண்டிருந்த..புலிகளின் குரல் வானலையில்..

பாடல்.. ஒலிக்கத் தொடங்கியதும்... நெஞ்சமெங்கும் ஒரு இனம்புரியாத.. குற்றவுணர்வு படர்ந்து கொள்ள.. அப்ப நான் போயிட்டு பிறகு வாறன் என்று சொல்லி விடைபெற்றேன்..! குண்டனும் நிலைமையை உணர்ந்து விடை தந்தான்..!

(மீண்டும்.. பலாலியின் முழக்கத்துக்கான விடையோடு.. எங்கட அண்ணாமாரின் நினைவுகளோட அப்புறமா வாறன்... இப்ப கண்ணீரை துடைச்சுக் கொள்ளுறன்..!) :(

Edited by nedukkalapoovan

...

நான் யாழ் கோட்டை.. மண்டைதீவு என்று.. சண்டைகள் உக்கிரமாக நடக்கிற காலங்களில கூட... சத்தங்களை உற்றுக் கேட்டுக் கொள்ளுறனான். அப்படித்தான் இந்தச் சண்டையிலும் நித்திரையால முழிச்சதில இருந்து சத்தங்களை வெகு அவதானமாகக் கேட்டுக் கொண்டே இருந்தனான்... ஆரம்பத்தில அண்ணாமாரின் துப்பாகிகள் அடிக்கடி பேசியதையும் அப்புறம் ஆமிக்காரனின் துப்பாக்கிகள் இடைவிடாமல் அலறியதையும் அவதானிக்க முடிஞ்சுது. அண்ணாமாரின் துப்பாக்கிகள் எப்பவும் விட்டு விட்டு அடிக்கும். ஆமிக்காரன் ஓட்டோரில விட்டு பொழிஞ்சு தள்ளுவான். அண்ணாமாரின் கை ஓங்கினால்.. ஓட்டோரில பொழியிற சத்தம் அடங்கி... விட்டு விட்டு அடிக்கிற சத்தம் ஓங்கி இருக்கும். அண்ணாமார் நிலைமை சங்கடமென்றால்.. மாறி இருக்கும். இது என் தற்துணிவு. இது பல தடவை களத்தைப் பற்றி அறிய எனக்கு உதவி இருக்குது. இதை அவதானிக்கிறதே.. எனக்கு சண்டை என்றால் பழக்கமாகவும் போயிட்டுது.

...

...

பல இரவுகள் பதுங்கு குழியில் இருந்து கோட்டை, மண்டைதீவு பகுதிகளில் நடந்த சண்டையை துப்பாக்கி சத்தங்களை வைத்து அப்பாவும், நானும் அவதானித்து இருக்கிறோம்... இருந்தாப் போல ஒரு பெரிய இடி விழுற சத்தம் போல கேட்கும், மேல வைச்ச மண் சாக்கு இன்னும் இருக்கா இல்லை வானம் தெரியுதா என்று பார்த்த ஞாபகங்கள்..

இதே காலப் பகுதியில் அண்ணாமார் யாழ் சம்பத்திரிசியார் பாடசாலையில் பொருட்காட்சி நடத்தினார்கள், அந்த நிகழ்வு ஆரம்பித்த முதல் நாள் தொடக்கம் கடைசி நாள் வரை முதல் பாட்டாக இந்தப் பாட்டுத் தான் ஒலிபெருக்கியில் போட்டார்கள்... பலர் மனதில் பதிந்த பாடலும் கூட...

இந்தப் பகுதியை வாசிக்கும் போது மீண்டும் அந்த நாட்களுக்குத் திரும்பிய உணர்வு,

தொடருங்கள்...

இசையும் கதையும் திரி ரொம்ப நல்லா இருக்கு நெடுக்கு .............

குறை ஏதும் சொல்லணும்னா...........

2 வது பக்கத்துக்கு அப்புறம்,,, இசையை காணல்ல ..

ஒன்லி கதைதான்!! <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையும் திரி ரொம்ப நல்லா இருக்கு நெடுக்கு .............

குறை ஏதும் சொல்லணும்னா...........

2 வது பக்கத்துக்கு அப்புறம்,,, இசையை காணல்ல ..

ஒன்லி கதைதான்!! <_<

நன்றி பகர்தலுடன்.. உங்கள் கருத்தைக் கவனத்தில் கொள்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "இந்தியன் ஆமி.. இங்க.. இருக்கேக்க இயக்கத்துக்குப் போனவர். அதால எனக்கு நல்ல பழக்கம் என்று சொல்லி சமாளிச்சான். இருந்தாலும் எனக்குள்ள பல சந்தேகங்கள் முளைக்க... மீண்டும் அவற்றை கேள்வியாக்காமல்.. மெளனமாக்கி அடக்கிக் கொண்டன்"

நெடுக்கு, தொடர் வாசிக்க ஆர்வத்தை கூட்டிக் கொண்டு போகின்றது, இனிதான் சீரியசான விடயத்தை தொடப்போகின்றீகள் போலுள்ளது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையும் நன்றாக இருக்கிறது. தங்கள் பகிர்வுக்குநன்றி ....... ..... மீண்டும் தாயக் நினைவுககளுடன்

......மேலும்தொடர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ... மரணித்த வீரனே.. பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எழுந்த குற்ற உணர்வோடு.. குண்டனிடம் இருந்து விடைபெற்று வீடு வந்து சேர்ந்த நான்.. வானலையில் புலிகளின் குரலைப் பரவ விட்டேன்.

புலிகளின் குரல்.. விசேட செய்தி அறிக்கை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தது. அச் செய்தி அறிக்கையின் பிரதான செய்தி இப்படி அமைந்திருந்தது..

இன்று அதிகாலை.. பலாலி கூட்டுப்படைத் தளம் மீது கரும்புலிகள் துணிகர தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். அதன் போது விமான ஓடு தளம் வரை ஊடுருவிய புலி வீரர்கள்.. சிறீலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்திகளை தகர்த்தும் தேசப்படுத்தியும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டை சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. தாக்குதலை அடுத்து சிறீலங்காப் படையினர் மக்கள் வாழ்விடங்களை நோக்கி கண்மூடித்தனமான ஆட்லறி ஷெல் தாக்குதல்களை நடத்தினார்கள்.. என்று அந்தச் செய்தி குறிப்பிட்டுக் கொண்டிருந்தது.

சிங்களப் படையினருக்கோ.. அதன் விமானப்படைக்கோ.. ..புலி வீரர்களுக்கோ ஏற்பட்ட இழப்புக்களின் விரிவான விபரங்கள் பற்றி செய்தியில் குறிப்பிடாமலே.. இத்துடன் இந்த விசேட செய்தி அறிக்கை முடிவடைகிறது. மேலதிக விபரங்களை நீங்கள் பிரதான செய்தி அறிக்கையின் போது கேட்கலாம் என்று சொல்லி முடித்தார்கள்.

வழமையா.. தாக்குதல் பற்றிய செய்தி அறிக்கையில்.. இறந்த சிறீலங்காப் படையினர்.. பாதிக்கப்பட்ட விமானங்கள்.. கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பற்றிய ஸ்கோர் விபரங்களுக்காக காத்திருந்து பழகிவிட்ட எனக்கு இந்த அறிக்கை ஏமாற்றத்தையே தந்தது. ஒருவேளை பிரதான செய்தி அறிக்கையில் எல்லாம் விரிவாச் சொல்லுவினமோ.. என்ற எதிர்பார்ப்போடு.. பிரதான செய்திக்காக வானொலிப் பெட்டியின் முன் அமர்ந்திருக்கத் தொடங்கினேன்.!

வினாடிகள் மணித்துளிகளைப் போலக்.. கழிய.. பிரதான செய்தி அறிக்கையும் ஒருவாறு.. வந்து சேர்ந்தது. அதில்.. விசேட செய்தியில் வாசிச்சதையே மீண்டும் வாசித்தார்கள். மேலதிக விபரங்கள் எதனையும் அதில் அடக்கவில்லை. இப்படி செய்தி வாசிக்கப்பட்டதால்... அந்த தாக்குதல் முயற்சி தோல்வி என்பதற்கான மறைமுக அறிவிப்போ என்று என் மனம் எண்ணத் தொடங்கியது. அப்படியாத்தான் கடந்த கால தோல்வியில் முடிந்த தாக்குதல் முயற்சிகளின் போதும் செய்தி வாசிக்க.. கேட்டிருந்த அனுபவங்கள்.. மனதை ஆளத் தொடங்க.. அட்ராக்.. பிசக்கிட்டுது போல.. என்று எனக்குள் நானே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டு.. அமைதியானேன்..!

இருந்தாலும்... மனம் அடங்குவதாக இல்லை. வானொலிப் பெட்டியை திருகி.. லங்காபுவத் செய்தி வழங்கும்.. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.. தமிழ்ச் சேவையைப் பிடித்து.. அதிலும் செய்திக்காகக் காத்திருந்தன். அதிலும் செய்திக்கான நேரம்.. வந்தது. பிரதான செய்தியாக.. இன்று அதிகாலை பயங்கரவாதிகள் பலாலி விமானப்படை முகாம் மீது நடத்திய தாக்குதலை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்ததுடன்.. பயங்கரவாதிகளுக்கு பலத்த இழப்புக்களையும் ஏற்படுத்தி உள்ளனர். பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட இழப்புப் பற்றிய விபரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என்று சொல்லி முடித்தார்கள்.

இரண்டு செய்திகளையும் கேட்ட என் மூளை.. வழமையான அதன் அலசல் தொழிலை செய்ய ஆரம்பித்தது. புலிகளின் குரலும்.. சேதங்கள்.. இழப்புக்கள் பற்றிய விபரங்களை தெளிவாச் சொல்லேல்ல. சேதம்.. தகர்த்தம் என்று தான் சொல்லுது. ஆமிக்காரனும் சொல்லேல்ல.. முறியடிச்சம் என்று தான் சொல்லுறான். அப்படிப் பார்க்கேக்க.. களம் இரு தரப்புக்கும் இறுக்கமாகவே இருந்திருக்குது... என்றதை மட்டும் என் மூளை அலசலின் விடையாகத் தர மீண்டும் அமைதியானேன்.

அன்று பாடசாலை விடுமுறை நாள் என்றபடியால்.. வீட்டில் நின்றிருந்த எனக்கு.. இந்தத் தாக்குதல் பற்றிய செய்தி அறிவதே பிரதான தொழிலாக இருந்தது. இருந்தாலும்.. எதிர்பார்ப்புக்கு அப்பால் செய்திகள் வந்து கொண்டிருந்ததால்.. சரி.... எது என்றாலும் கிடக்கட்டும்... இப்ப எங்கட வேலையைப் பார்ப்பம் என்று இருக்க... வானில் பேரிரச்சல்களுடன்.. மிகை ஒலி விமானங்கள் தோன்றின. அவற்றை காதால் பிந்தொடர்ந்த நான்.. சற்று நேரத்திலேயே அவை மறைந்து விட்டதையும் உணர்ந்தேன். தாக்குதல் எதனையும் நடத்தாமலே அவை போயும் விட்டன. ஏன் தாக்குதல் நடத்தாமல் போறாங்கள்.. ஆமிக்காரனுக்கு வெற்றி போல.. என்று நினைச்சிட்டு.. எப்படியாவது போகட்டும்... என்று சலிப்போடு உட்கார்ந்தேன். இப்படியே.. அன்றைய பொழுது ஏக்கங்களோடும்.. எதிர்பார்ப்புக்களோடும்.. ஏமாற்றங்களோடும்.. கழியத் தொடங்கியது.

நேரம் மாலையை எட்டியது. வேலைக்குப் போயிருந்த அப்பா.. ஈழநாதம்.. விசேட செய்திப் பேப்பரோட வந்தார். ஓடிப்போய் பேப்பரை பறிச்சுப் படிச்சன். அதில்..

பிரதான செய்தியாக.. பலாலி கூட்டுப்படை தளம் மீது கரும்புலிகள் தாக்குதல். தளத்தின் மையத்தில் அமைந்திருந்த.. விமான ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க தயாரிப்பு பெல் 212 ரக உலங்குவானூர்தியை கரும்புலிகள் அணி தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலில் சிறீலங்கா படையினருக்கு பலத்த ஆளணி தளபாட இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கரும்புலிகள் தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. என்று செய்தி குறிப்பிட்டு இருந்தது.

இந்தச் செய்தியை வாசிச்ச எனக்குள் மீண்டும்.. ஓர் குற்ற உணர்ச்சி.. அட எங்கட கரும்புலிகள் நடத்திய.. வெற்றித் தாக்குதலை.. நான் தவறாக அனுமானிச்சிட்டனே.. அதுவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியை நம்பி... என்று அமைய.. மீண்டும் ஓடிப்போய்.. வானொலிப் பெட்டியில்.. தினமும் மாலையில் ஒலிக்கும்.. தமிழீழ வானலையை பிடித்தேன். அதில்...

http://www.youtube.com/watch?v=Zd9z87hPFi0

இந்தக் கானத்தைக் கேட்ட எனக்கு.. ஸ்கோர் விபரங்கள் அறியும் மன நிலை போய்.. கரும்புலிகளின் தியாகங்கள்.. நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையை.. உயிர்களை அர்ப்பணிக்கும் அந்த தியாகிகள்.. பற்றிய எண்ணமே மேலிட்டது. என்னை நானே ஒரு கரும்புலியாக பாவனை செய்யவும் தூண்டியது.... அப்படியான ஒரு மன நிலையோடு.. அமைதியாக இந்தப் பாடலை கேட்டுக் கொண்டிருந்த என்னை.. குண்டன்.. கேற்றடியில் நின்று பதட்டத்தோடு... அழைப்பது கேட்க..... அவனை நோக்கி ஓடலானேன்.....

(மீண்டும்.. இன்னொரு அனுபவப் பகிர்வோடு.. உங்களைச் சந்திக்கும் வரை.... கரும்புலிகள் நினைவோடு.. இப்போ.. போயிட்டு அப்புறம் வாறன்..!)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, என்ன கருத்து எழுதுவது நீங்கள் கரும்புலிகள் பாட்டை இணைத்தபின், நன்றி இணைப்பிற்கு, மனம் வேலையில் ஓடவில்லை பாட்டை கேட்டபின்

கரும்புலிகள்:

நாங்கள் அழகு மாணிக்கங்கள் அல்ல,

அத்திவாரக் கற்கள்

அழகான ஈழம் அமைவதற்காக

வெளியில் தெரியாமல் புதைந்து போனவர்கள.;

எங்கள் சிலரின்

முகங்களையும் முகவரிகளையும்

சுவரொட்டிகளில் தேடாதீர்கள்

நாங்கள்

உங்கள் பாதங்கள்

உரிமையுடன் நடப்பதற்காக

எங்கள் உடல்களைப்

பஸ்பமாக்கிக் கொண்டவர்கள்.

மண்ணின் விடிவுக்காக

மாற்றானின் அருகிற் சென்று

கூற்றுவனை வலிந்தழைத்து

குசலம் விசாரிப்பவர்கள்

மின்னல்க் கீற்று வெடி முழக்கத்துடன்

கண்ணில் படாமல் கரைந்து போன

எங்கள் கல்லறைகள்

வெளியில் தெரிவதில்லை.

அநேகமான சமயங்களில் நாங்கள்

அஞ்சலிக்கு வைக்கப் படாத

அநாமதேய வித்துடல்கள்.

நன்றி - தீட்சண்யன்

  • கருத்துக்கள உறவுகள்

போரின் வலியை நேரில் காணாத அறியாத என் போன்றவர்களுக்கு இந்த இசையும் கதையும் நன்றாகவே பயன்படும்.

தொடருங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேற்றில் பதட்டத்தோடு நின்று கொண்டிருந்த குண்டனிடன்.. என்ன விசயம்.. உங்கட அம்மாக்கு ஏதேனும் பிரச்சனையோ என்று கேட்டேன். அதற்கு அவன்.. அம்மாக்கு ஒன்றும் பிரச்சனை இல்ல... எங்கட கபிலன் அண்ணா வீரமரணம் அடைஞ்சிட்டாண்டா.. இப்ப தான் கேள்விப்பட்டன் என்டான்...!

கபிலன் அண்ணா.. அந்தக் காலத்தில் எங்களின் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சீனிய மாணவர். நல்ல திறமைசாலி. சாரணர் இயக்கத்தின் முதன்மைச் செயற்பாட்டாளராக இருந்து.. சிறீலங்கா சனாதிபதி விருதெல்லாம் பெற்றவன். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும்... தேசத்தின் விடுதலைக் கனவை.. அண்ணன் தியாக தீபம் திலீபனின் வழியில் உதித்த... மக்கள் போராட்டமே மக்களின் விடுதலையை சாத்தியமாக்கும் என்ற கருத்தை.. நேசித்தவன். அதற்காக தன்னை அர்ப்பணிக்கப் போறன் என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்வான்.

எங்கட யாழ் இந்து மண்ணில.. திலீபன் அண்ணாவின் கால் பதிந்த மண்ணில.. உதித்த நாங்கள்.. இந்தச் சமூகத்திற்கு உபயோகமுள்ள.. கெளரவமுள்ள.. பிரஜைகளாக மட்டுமன்றி.. தேசத்தின் விடுதலை என்ற இலட்சியத்தை மனதில் எப்போதும் சுமந்து கொண்டு வாழ வேண்டும்.. தேசத்தைக் காட்டிக் கொடுக்கிற வகைக்கு ஒருபோதும் செயற்படக் கூடாது என்று சத்தியம் செய்து கொள்ள வேண்டும் என்று கபிலன் அண்ணா அடிக்கடி சொல்லுவான். தேசத்தின் விடிவுக்காக தரப்படுகிற ஒவ்வொரு உயிரும்.. விலைமதிப்பற்ற பொக்கிசங்கள். அந்த உயிர்களின் கனவு வீணாகும் படிக்கு நாங்கள்.. யாழ் இந்துவின் மைந்தர்கள்... நடக்கக் கூடாது.. இப்படித்தான் எப்போதும்.. அவனைச் சந்திக்கும் போது புத்திமதி சொல்லிக் கொண்டிருப்பான்.

கபிலன் அண்ணாவிடம்.. தமிழீழ தேசப்பற்று மட்டுமில்ல.. தன் கல்லூரி மீதும் அளவு கடந்த பற்றுதலும் இருந்தது. ஒரு முறை.. குகதாசன் அதிபராக இருந்த காலத்தில, மாணவர்கள்.. கல்லூரி நிர்வாகம் எடுத்த சில ஒழுக்காற்று நடவடிக்கைகளில்.. தனிமனித செல்வாக்கு இருந்தது என்றதற்காக.. வகுப்புப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட போது.. கபிலன்.. அந்தப் பிரச்சனையைக் கூட.. சுமூகமாக தீர்க்கனும் என்ற கருத்தைத் தான்.. தனக்கு நெருக்கமான நண்பர்களிடமும் தெரிவித்து வந்திருக்கிறான். நாங்கள் இந்தப் பிரச்சனையை பெரிதுபடுத்தினம் என்றால்.. அது எங்கட யாழ் இந்து அன்னைக்கு மட்டுமல்ல தலை குனிவு.. எமது கல்லூரிக்கு புகழீட்டித் தந்த பழைய மாணவர்களுக்கும்.. இந்தக் கல்லூரியை ஒட்டியுள்ள கல்விச் சமூகத்திற்கும்... அது அவமானம்.. அதுமட்டுமில்லாம.. இது எமது சமூகத்திற்கு தவறான உதாரணத்தை நாம் தந்துவிட்ட ஒன்றாகவும் அமையலாம் என்பான். இறுதியில் அந்த விடயம்.. சமூகமாகவும் விரைந்தும் தீர்க்கப்பட்டுக் கொண்டது.

இப்படி எமக்கெல்லாம்.. நல்ல அண்ணாவாக.. வழிகாட்டியாக இருந்த கபிலன் அண்ணா வீரமரணம் அடைஞ்சிட்டார் என்ற அந்தச் செய்தி என்னை திக்குமுக்காடச் செய்தது. சோகத்தில் மூழ்கச் செய்தது. கபிலன் அண்ணாவுடனான எங்கள் நட்பின் நினைவுகளை அலையலையாக மனதெங்கும் பரவச் செய்தது.

கபிலன் அண்ணா.. குண்டனின் நல்ல நண்பனாக மட்டுமல்ல.. என்னோடும் நட்புப் பாராட்டிய ஒருவர். கபிலன் அண்ணாவுடனான எங்கள் நட்பு உதயமானது கல்லூரிக்கு உள்ளிருந்து என்பதிலும் வெளியில் இருந்து என்பது தான் உண்மை.

எங்கட மண்ணை ஆக்கிரமிச்சு.. எங்கட போராட்டத்தை நசுக்கி.. தனக்கு விருப்பமான ஆக்களை வைச்சு தனக்கு விருப்பமான தீர்வைத் தந்து.. அதன் கீழ் எங்கட மக்களை அடிமைகளாக வைத்திருக்க என்று.. எங்கட மண்ணுக்கு வந்த.. இந்திய இராணுவம்.. வீதிக்கு வீதி.. சந்திக்கு சந்தி சீமெந்தால..சென்றி கட்டி வைச்சிட்டு.. எங்கட விடுதலை வீரர்களை குறிவைச்சு.. காத்திருந்த காலத்தில.. திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்கு துண்டுப்பிரசுரம் அடிச்சுக் கொடுக்கிறதே முடியாத காரியமா இருந்தது. அப்படியான காலத்தில கபிலன் அண்ணா அதை துணிகரமாக செய்து வந்தான். துண்டுப் பிரசுரங்களோடு.. திடீர் என்று தனியார் கல்விக்கூடங்கள்.. மற்றும் பள்ளிகளுக்குள்.. அனுமதியோடு நுழையும் கபிலன் அண்ணா அவற்றை வகுப்பில் மாணவர்களிடம் கொடுத்துவிட்டு.. அந்தத் தகவல் இந்தியப் படைகளுக்கு கசிவதற்கிடையில்.. வெளியேறி விடுவான். அந்தளவுக்கு அவன் செயற்பாட்டில் வேகவும் விவேகமும் இருக்கும். அப்போது.. அவனுக்கு ஒரு 15 வயது தான் இருந்திருக்கும்.

இப்படித்தான் ஒருமுறை துண்டுப்பிரசுரம் கொண்டு போகும் போது.. கே கே எஸ் வீதியில் அமைந்திருந்த.. சிவலிங்கப்புளியடி காவலரணில் வைத்து இந்தியப் படைகள்.. கபிலன் அண்ணாவை வழிமறிச்சு.. சோதனை போட.. என்ன செய்யுறது என்று தெரியாமல் முழிச்சுக் கொண்டிருந்த கபிலன் அண்ணா... ஆமிக்காரன் கேட்க முதலே தோள் பையைக் கழற்றி.. இதுக்குள்ள புத்தகம் தான் இருக்கென்று.. சொல்ல.. அவனும் பாடசாலை சீருடையில் இருந்த கபிலன் அண்ணா சொன்னதை.. நம்பிட்டு.. புத்தகப் பையை தீவிரமாக பிரிச்சுப் பார்க்காமலே மேலோட்டமாகப் பார்த்துவிட்டு.. கபிலன் அண்ணாவை அனுப்பிட்டான். இப்படி தனது சமயோசித புத்தியுள்ள செயற்பாடுகளால்.. கபிலன் அண்ணா தன்னை தற்காத்துக் கொண்ட சந்தர்ப்பங்கள் பல. அதுமட்டுமன்றி.. பிற பல வழிகளையும் கபிலன் அண்ணா தனது செயற்பாடுகள் வெற்றிகரமாக அமையச் செய்து கொள்வான்.

கல்லூரி முடியுறப்போ.. அடிக்கடி.. கல்லூரி வீதியில் இருந்த இந்திய இராணுவ காவலரணிற்கு... தானே.. சும்மா போய்.. அந்தச் சென்ரியில் நிக்கிற இந்திய ஆமிக்காரங்களோட கதைப்பான்.. பழகுவான். இதன் மூலம் தன்னை அவர்களுக்கு யார் என்பதை பழக்கப்படுத்திக் கொள்வான். அந்தப் பழக்கம்.. அவன் மீதான இந்தியப் படைகளின் சந்தேகப் பார்வையை குறைக்கச் செய்ய... அந்தச் சந்தர்ப்பத்தை தாயகத்தின் விடுதலை உணர்வு தனிந்துவிடாதிருக்கும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்வான். அப்படியான ஒரு திறமைசாலி அவன். இருந்தாலும் அவன் அடிக்கடி அந்தக் காவலரணில் நின்று பேசிக் கொள்வதைக் கண்ட பிற மாணவர்களில் பலர் அவனை ஒட்டுக்குழு ஆள் என்று தான் நினைத்திருந்தனர். அதுவும் ஒரு வகைக்கு அவனைப் பற்றிய தகவல் கசிதலை தடுக்க உதவியது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் குண்டன் உடனான கபிலன் அண்ணாவின் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் அருகருகில் குடியிருந்ததால்.. கபிலன் அண்ணாவின் சில செயற்பாடுகளுக்கு குண்டனும் உதவி புரிந்திருக்கிறான். கபிலன் அண்ணாவின் செயற்பாடுகள் மாணவர் சிலருக்கு தெரிந்திருந்ததால்.. அது இந்தியப் படைகளுக்கும்.. இந்தியப் படைகளின் கூலிகளாக இருந்த.. வரதராஜப்பெருமாளின் தலைமையில் இயங்கிய.. ஈபிஆர்எல்எவ்.. ஆக்களுக்கும்.. கசிய வாய்ப்பிருந்தது. ஒருமுறை.. வரதராஜப்பெருமாளின் ஆக்கள்.. எங்கட கல்லூரிக்குள்ள புகுந்து புலி பதுங்கி இருக்கென்று சொல்லி.. ஆசிரியர்கள் மீதும்.. மாணவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்து.. ஆசிரியர் ஒருவர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தவர்கள். அதற்கு கல்லூரிக்குள் இருந்து கசிந்த செய்திகளே முக்கிய காரணம் என்று கபிலன் அண்ணா சொன்னவர்.

அந்த வகையில்.. துண்டுப்பிரசுரங்களை தானே தனி ஒருவனாக காவிச் சென்று பிரசுரிக்கும்.. செயற்பாடுகள்.. நீண்ட கால நோக்கில்.. தனக்கும் அந்தப் பணிக்கும் ஆபத்தாக முடியும் என்று அனுமானித்த கபிலன் அண்ணா.. எங்களை உதவிக்கு நாடினான். இந்தியப் படைகள்.. ஏ எல்.. ஓ எல் படிக்கிற ஆக்களை தான் வீதிச் சோதனை என்றால் வழிமறிக்கிறது. சின்னாக்களை மறிக்கிறதில்ல. அந்த வாய்ப்பை கபிலன் அண்ணா பயன்படுத்த திட்டமிட்டான். அதன்படி.. துண்டுப்பிரசுரங்களை சிறிய சிறிய பைகளில் கட்டி.. எங்களிடம் தருவார். நாங்கள் அவற்றை புத்தகங்கள் மத்தியில் மறைத்து வைத்து காவலரண்கள் தாண்டி கொண்டு சென்று கையளிப்போம். ஆனால் நாங்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதில்லை. அப்படி விநியோகித்தால்.. அந்தத் தகவலும்.. இந்தியப் படைகளுக்கு.. தேச விரோதக் கும்பல்களுக்குப் போய் சேர்ந்திடும்... என்றதால.. அப்படிச் செய்யுறதில்ல.

அப்படி துண்டுப் பிரசுரங்களை காவிக் கொண்டு காவலரண்களை நெருங்கிச் செல்லும் போது.. இதயம் பலமாக அடிச்சுக் கொள்ளும். பயம் கவ்வி இருக்கும்.. கால்கள் கொஞ்சம் நடுங்கும். இருந்தாலும்.. காவலரணை வெற்றிகரமாக தாண்டிட்டம் என்றால்.. அதுபோல.. ஒரு வெற்றிப் பெருமிதம் வேறு இருக்க வாய்ப்பில்லை. வகுப்பில் முதல் மாணவனாக வந்த போது கூட கண்டிரான ஒரு வெற்றிப் பெருமிதம்.. ஒவ்வொரு தடவையும்.. துண்டுப்பிரசுரங்களோடு.. காவலரண்களை வெற்றிகரமாக தாண்டும் போது கிட்டிவிடும்.

அதே காலத்தில்.. மக்களோ.. விடுதலைப் புலிகள்.. தோற்றுவிட்டார்கள்.. புலிகள் அழிந்துவிட்டார்கள்.. போராட்டம் எல்லாம் முடிஞ்சு போச்சு.. என்ற கவலையில் மூழ்கிப் போயிருந்தனர்... செயற்பாடற்றுக் கிடந்தனர். ஆனால் எதிரிகள் அப்படி இருக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்திருந்தது.. மக்களுக்குள் இருந்து.. போராட்ட சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கினம்.. புலிகளை உருவாக்கிக் கொண்டிருக்கினம் என்று... அன்றைய காலக்கட்டத்தில்.. மக்களை போராட்டத்தின் பால் நம்பிக்கை வைக்க.. இயங்கிக் கொண்டிருந்தவர்கள்... முணுமுணுத்த பாடல்களில் இதுவும் ஒன்று.... அது இன்றைக்கும் பொருந்தும்...

(இந்த வாரம்.. தியாக தீபம்.. திலீபன் அண்ணாவின் நினைவு வாரம் என்பதால்.. அவரோட நினைவுகளோடு.. கபிலன் அண்ணாவின் நினைவுகளையும் பகிர்ந்து செல்கிறோம்.. மீண்டும்.. மீண்டு.. வருவோம்..)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "எங்கட மண்ணை ஆக்கிரமிச்சு.. எங்கட போராட்டத்தை நசுக்கி.. தனக்கு விருப்பமான ஆக்களை வைச்சு தனக்கு விருப்பமான தீர்வைத் தந்து.. அதன் கீழ் எங்கட மக்களை அடிமைகளாக வைத்திருக்க என்று.. எங்கட மண்ணுக்கு வந்த.. இந்திய இராணுவம்.. வீதிக்கு வீதி.. சந்திக்கு சந்தி சீமெந்தால..சென்ரி கட்டி வைச்சிட்டு.. எங்கட விடுதலை வீரர்களை குறிவைச்சு.. காத்திருந்த காலத்தில்"

உங்கட இசையும் கதை பழைய சோகங்களை தெட்டு செல்கிறது,

என்னுடைய இரு நண்பர்கள் இந்தியன் ஆமி வைத்த தேர்தல் நடக்க கூடது, மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது, ஆமி வந்திட்டான் அதில் நடந்த சண்டையில் சில ஆமிகாரர் இறந்துவிட்டார்கள், ஆனால் யாரோ கட்டி கொடுத்து அந்த இரண்டு பேரையும் பிடித்துவிட்டான், அடுத்த நாள் விடிய, அவர்களின் உடல்கள்தான் உடம்பு முழுக்க காயத்துடன் பல இடங்களில் றில்லர் போட்டு துளைத்த அடையாளங்களுடன், முழங்கால்...அவன்கள் செய்த அட்டூழியம்.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Quote: "எங்கட மண்ணை ஆக்கிரமிச்சு.. எங்கட போராட்டத்தை நசுக்கி.. தனக்கு விருப்பமான ஆக்களை வைச்சு தனக்கு விருப்பமான தீர்வைத் தந்து.. அதன் கீழ் எங்கட மக்களை அடிமைகளாக வைத்திருக்க என்று.. எங்கட மண்ணுக்கு வந்த.. இந்திய இராணுவம்.. வீதிக்கு வீதி.. சந்திக்கு சந்தி சீமெந்தால..சென்ரி கட்டி வைச்சிட்டு.. எங்கட விடுதலை வீரர்களை குறிவைச்சு.. காத்திருந்த காலத்தில்"

உங்கட இசையும் கதை பழைய சோகங்களை தெட்டு செல்கிறது,

என்னுடைய இரு நண்பர்கள் இந்தியன் ஆமி வைத்த தேர்தல் நடக்க கூடது, மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது, ஆமி வந்திட்டான் அதில் நடந்த சண்டையில் சில ஆமிகாரர் இறந்துவிட்டார்கள், ஆனால் யாரோ கட்டி கொடுத்து அந்த இரண்டு பேரையும் பிடித்துவிட்டான், அடுத்த நாள் விடிய, அவர்களின் உடல்கள்தான் உடம்பு முழுக்க காயத்துடன் பல இடங்களில் றில்லர் போட்டு துளைத்த அடையாளங்களுடன், முழங்கால்...அவன்கள் செய்த அட்டூழியம்.........

நன்றி உடையார்.. உங்களின் ஞாபகப் பதிவிற்கு..!

நான் நினைக்கிறேன்.. உங்களின் ஏ எல்.. பச்சாக இருந்திருப்பார்.. யாழ் பரியோவான் கல்லூரி முதன்மை மாணவன்.. "அறிவு" அண்ணன். அவரை சுட்டுப் போட்டு வெள்ளை வானில கொண்டு வந்து.. யாழ் பிறவுன் வீதி.. கந்தர்மட வீதி சந்திக்கும் சந்தியில் தூக்கி எறிந்து போட்டு.. மீண்டும் சில தடவைகள் சுட்டுவிட்டுப் போனதை நேரில் கண்டனான். விடிய ரீயூசனுக்கு போறப்போ.. இது நடந்தது. இன்றும் அந்தக் காட்சி மனதில் நிழலாடுகிறது. :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நெடுக்கு எனக்கு தெரியா, அவர் எங்களுக்கு முதல் பச், கேள்விப்பட்டனாங்கள் இந்த சம்பவத்தை..

பழைய நினைவுகளை (இடங்கள்/ சம்பவங்கள்) மீட்கிறது நெடுக்ஸ்.

திரியின் ஆரம்பப்பகுதி பதிவுகளைவிட அடுத்த பகுதிகளின் பதிவுகள் தரம் கூடிச்செல்கிறது.

IPKF காலத்தில் நாங்களும் யாழ். இந்துவில் தான்.

உடையார் மற்றும் நெடுக்ஸ் நன்றிகள் ஞாபகங்களை திரும்ப அழைப்பதற்கு.. நானும் ஒரு பரியோவான் கல்லூரி மாணவன் என்ற அடிப்படையிலும், திலீபன் அண்ணாவின் நினைவுகளையும் சுமந்து ,என் வாழ்வில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தையும் இங்கே பதியலாம் என்று நினைக்கிறன்.

இந்திய ராணுவ காலப்பகுதியில் புலிகளின் சின்னத்தை அடையாள படுத்த இருந்த ஒரே வழி, நல்ல வெள்ளை அல்லது நிறமான சுவர்களை பார்த்து புலிகளின் அச்சை (இலச்சினை ) வைத்து நிறப்பூச்சு பூசுவது தான். அப்படி திலீபன் அண்ணாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் அச்சை வைத்து நிறபூச்சை அடித்து கொண்டிருக்கும்போது இந்திய இராணுவத்திடம் கையும் மெய்யுமாக பிடிபட்டேன்.

என்னை ஒரு சின்ன பெடியன் என்று கூட பார்க்காமல் துவக்கு பிடியால் இடித்து, வாயிலே இரத்தம் சொட்ட சொட்ட கைகளை கட்டி விட்டு, நாக்கினாலும் வாயினாலும் நக்கியே அந்த வலிகாமம் பகுதில் ஓட்டபடிருந்த திலீபன் அண்ணாவின் பெரும்பாலான நினைவுநாள் பதிவுகளை உரிக்கவைத்தான்.(அதில் எனக்கு மிகவும் பிடிச்ச பச்சை நினைவுநாள் பதிவு ஒன்றும் இருந்தது )

பின்னாளில் என் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு அடிகோலிய சம்பவங்களில் அதுவும் ஒன்று.

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம் நேற்றே வாசித்துவிட்டு எழுத மனம் வரவில்லை, என்ன கொடூரம், இப்படி பண்டத்தரிப்பிலும் நடந்தது,

அவங்கட காலத்தில் எத்தனை அக்கிரமங்கள்

நெடுக்காலபோவான் நீங்க எழுதுகிற விதம் அருமை. வாழ்த்துக்கள். பல விடயங்களை அறிய கூடியதா இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.