Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்...! ;)

Featured Replies

சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்!

சூடான பாலை-வனத்திலே .... நீராடினோம்!!

என் அங்கத்தில் ஒரு கை மட்டுந்தான் அங்கிருந்தது!

மற்றையவை எல்லாம் மற்றவை நாடி... தேடத் துணிந்தது!!

தடுத்தவள் கைகளில் உணர்ந்த நாற்குணமும் - என்

முற்றுந்துறந்த "போர்க்குணத்தில்" அடங்கிப் போனதோ என்னவோ???

பெண்மையை புதிதாய்..... பார்த்த துடிப்பு!

பருவங்களுக்கே.... உரிய வெடிப்பு!!!

இதுவரை விஞ்ஞானம் கண்டுபிடிக்காத வேகத்தில்,

நம் பயணம் தொடர்ந்தபோதும்...,

சொர்க்கம் அருகில் வந்து நின்றபோதும்...,

பயண நேரங்கள் நீடிக்க வேண்டுமென பேராசைப்பட்டது ஆசை!!

மூடியும் மூடாத விழிகள்... தேடிடும் வழிகள்...

அந்நியம் பார்க்காமல் எழுப்பிய ஒலிகள் - அத்தோடு

பாதி தெரிந்த உருவங்கள்... தெறித்த திரவங்கள் என,

முற்றிலும் தீர்ந்து நிசப்தமாய் ஆகி.... இறுக்கிய கரங்களில்,

அவள் மட்டுமே இருந்தாள்!

காதல்,காமம் என்ற சொற்பதங்கள் தரும் அர்த்தம்,

முழுமையாய்ப் புரிந்தது அன்றல்ல!!!!!

தொடர்ந்த புணர்வுகள்... தந்த உணர்வுகளை விட,

எம் இறுக்கங்கள்... தந்த கிறக்கங்களை விட...

நான் அப்பாவும் அவள் அம்மாவுமாய் ஆகியதாய் உணர்ந்த...

அந்தக் கணப்பொழுதில்... முழுமையாய்ப் புரிந்து,

முழுமையடையும் ஒன்றுக்காய் காத்திருக்க ஆரம்பித்தோம்!

சிற்றின்பம் தாண்டிய பேரின்பம்.... காதலோடு காத்திருக்கின்றது!

"உறவுகள்" தொடரும்..................!

post-8737-0-84275600-1316635274_thumb.jp

Edited by கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேலைத்தலைப்பு நல்ல கவிதை.உதுக்கு பதில்கவிதை எழுதோணும் போலை கிடக்கு....வேண்டாம்............. பிறகு பெரியாக்கள் பேசுவினம் எண்டு பயமாய்க்கிடக்கு :mellow:

  • தொடங்கியவர்

சேலைத்தலைப்பு நல்ல கவிதை.உதுக்கு பதில்கவிதை எழுதோணும் போலை கிடக்கு....வேண்டாம்............. பிறகு பெரியாக்கள் பேசுவினம் எண்டு பயமாய்க்கிடக்கு :mellow:

அண்ணோய்! எழுதுங்கோ அண்ணை! போன தடவை நீங்கள் எழுதின கவிதையை எத்தின தடவை படிச்சிருப்பன் தெரியுமோ!? நீங்க தாண்டினதை விட ... நீங்கள் எழுதின கவிதையை நான் நோண்டினதுதான் அதிகம் அண்ணை! :wub::lol:

இங்க எழுதி வாசிச்சுக் களைச்சுப் போன ஆக்களுக்கு ஒரு "உற்சாகம் குடுக்கிற" மாதிரி ஒண்ட எடுத்து விடுங்கோ அண்ணை! அதை விழுந்தடிச்சு வாசிக்கிற முதல் ஆள் நானாத்தான் இருப்பன்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிரின்பம் & பேரின்பம் இரணைடையும் இணைத்து கவிதை படைத்துள்ளீர்கள், அருமை, இதே மாதிரி நான் ரசிச்ச இன்னுமொரு கவிதை...............

இரவின் மடியில் துயிலும் பொழுதில்

இருகண்மூடி என்னருகே உறங்கிகொண்டே

கனவிலும் வந்து காட்சிகொடுத்து

உறக்கம் கெடுக்கும் தேவதையை

நினைத்தபடியே புரண்டு படுக்கும்

தருணங்களில் திறந்திடும் கண்களில்

தற்செயலாய்த் தெரியும் தேவதையின் முகம்.

தூக்கம் பறந்தோட ரசிகன் உயிர்பெற்று

கண நேரத்தில் பரிணாம வளர்ச்சியுமுற்று

கவிஞனாகிக் கட்டிலில் சம்மனமிட்டு

மடியில் வைத்த தலையனையை விடவும்

மிருதுவான தேவதையின் முகத்தை

ஒப்பிட முயன்று ஒப்பேதும் இல்லாத

உண்மை உணர்ந்து ஞானியாகிறான்.

நைட் லேம்ப்பின் மங்கிய ஒளியிலும்

பளிச்சென தெரிகிறாள் என் தேவதை

ஒருவிரல் கொண்டு கண்ணம் தொடுகையில்

சற்றே நெளியும் அவளிரு புருவங்களும்

அந்தக் கணநேர கண் இமைச் சுருக்கங்களும்

எந்தக் கவிஞனுக்கும் சாமி கொடுத்த வரம்.

எனக்கோ என் தேவதையால் வாய்க்கிறது தினம்.

தூங்கும் போதும் அழகாய்த் தெரிய

தேவதைகளால் மட்டுமே முடியும் என்பது

என் தேவதை தூங்கும் அழகைக்

கண்ணால் கண்ட பின்னரே எனக்குப் புரிந்தது

தூக்கத்திலும் புன்னைக்கக் கற்றுக்

கொடுத்தது யார் என் தேவதைக்கு.

வான்நிலவே பூமிவந்தாலும் ரசிகர்

மன்றம் வைக்கும் அவள் புன்னகைக்கு

உடல்சார் உணர்வுகளால் இயங்கி முடித்து

கலவியிற் களைத்த மனைவியை ரசிக்க

உடல்கொண்ட எவனாலும் முடியுமிங்கே

உள்ளத்தாற் கூடி ஓரலையில் ஓடி

சொர்க்கமது தேடி பேரின்பம் நாடிக்

களைக்கச் செய்யவும், களைத்தவளை

ரசிக்கவும் கவிஞன் வேண்டுமங்கே.

உடலெனும் மாயை மறைந்து

மனமெலாம் காதலெனும்

ஞானம் மட்டும் நிறைந்து

உள்ளத்துச் திசுக்களில்

காதலெனும் உணர்வூறி

உணர்வுகள் இடம் மாறி

மன மொழி மெய் கடந்த

பேரின்பப் பெருவெளியில்

தோன்றும் தேவதையின் முகம்.

ஏஸி மெஷினின் சப்தம் தவிர்த்து

எங்கும் நிறைந்த இரவின் நிசப்தம்

சாட்சி சொல்லும் காமம் கடந்த

நைஷ்டிக சந்நியாசக் காதலுக்கு.

கதவிடுக்கின் வழியே கசிந்த காதல்

மெல்ல மெல்லக் காற்றில் கலந்து

ஆக்சிஜனுக்கும் உயிரூட்டி

பூமிப்பந்தைக் காதலில் நனைக்கும்.

சற்று நேரத்தில் லௌகீகக்

கடமைகள் தொடங்குவதற்காய்

புலரக் காத்திருக்கும்

காதலில் நனைந்த உலகம்.

நிசப்த தேரேறி உலகை வலம்வரும்

காதலால் ஒளிர்ந்த இரவு.

நன்றி - மதுரை இராஜா, நிலாமுற்றம்

  • தொடங்கியவர்

ம்ம்ம்ம் :wub: நல்ல கவிதை உடையார். பகிர்வுக்கு நன்றி. :)

நீங்கள் பகிர்ந்த கவிதையின் நிலைதான் எனக்கும் தற்பொழுது....! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை காதலில் இப்போது கவிபடைக்கத் தொடங்கீட்டீங்கள் அசத்துங்கோ.

சேலைத்தலைப்பு நல்ல கவிதை.உதுக்கு பதில்கவிதை எழுதோணும் போலை கிடக்கு....வேண்டாம்............. பிறகு பெரியாக்கள் பேசுவினம் எண்டு பயமாய்க்கிடக்கு :mellow:

இதென்ன பயம் எழுதுங்கோ. உங்கடை தாண்டல் கவிதையாலை கனபேர் தாண்டு போன காதலையெல்லாம் நினைச்சுப்பாத்தமெண்டு சாட்சி சொன்னவையெல்லாம் மறந்திட்டீங்களோ....? அந்த பாருங்கோ கவிதையே ஒரு சாட்சி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்...!

சேலை கசங்காமல் தந்த கவிதையும் அழகு

  • தொடங்கியவர்

கவிதை காதலில் இப்போது கவிபடைக்கத் தொடங்கீட்டீங்கள் அசத்துங்கோ.

காதலித்துக் கட்டிய மனைவியை இன்னும் காதலிக்கிறதில இருக்கிற சுகமே தனி! :wub:

மனசில தோன்றும் எண்ணங்களை கொஞ்சம் கொட்டினால் நல்லது! அதுதான் இப்படி! :)

என்னவள் இதை வாசிப்பாளோ எனக்கு தெரியாது! :unsure:

சேலை கசங்காமல் தந்த கவிதையும் அழகு

சேலை இருக்கிற இடத்தில இருந்தால்தானே கசங்கும் கறுப்பி! :wub::rolleyes:

அத்தோடு "ரொம்ப" அழகாகவும் இருக்கும்! :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை..அழகான கவிதை..உங்கள் எழுத்துக்கள் அழகாக மெருகேறுகின்றன..தொடர்ந்து எழுதுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா கவிதை.. :wub: ஒரே கவுச்சிவாடையா இருக்கு??! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை விஞ்ஞானம் கண்டுபிடிக்காத வேகத்தில்,

நம் பயணம் தொடர்ந்தபோதும்...,

சொர்க்கம் அருகில் வந்து நின்றபோதும்...,

பயண நேரங்கள் நீடிக்க வேண்டுமென பேராசைப்பட்டது ஆசை!!

காலம் காலமா இப்படியே எழுதி ஏமாற்றிக்கிட்டு திரியுறாங்க.. மனித வரலாற்றில்.. விஞ்ஞானமோ.. மெஞ்ஞானமோ.. சொர்க்கத்தை தரிசித்ததாக வரலாறில்லை. சொர்க்கம் எப்படி என்ற ஒரு அளவீடு கூட சரியாக இல்லை. இப்படியான ஒரு நிலையில்.. ஜஸ்ட்.. ஒரு விலங்கு நிலை மனித உணர்விற்கு.. சொர்க்கம் என்ற பெயரிடலும்.. உவமை இடலும் எந்த வகையில் சரியானது. அப்போ.. மிருகங்களும் அடிக்கடி சொர்க்கத்துக்குப் போய் சொர்க்கிச்சிட்டா வருகுதுங்க.

சொர்க்கம் காணாமல்... இன விருத்தி செய்யும் உயிரினங்களும் உள்ளனவே... ஏன் அவற்றிற்கு மட்டும் சொர்க்கத்தை தரிசிக்க விடமாட்டினமோ..??????!

சேலை கட்டாதவங்க.. எங்க ஆரம்பிப்பாங்க.. கொடுமை சரவணா. எங்க ஆரம்பிச்சாலும்.. முடியப் போறது.. நரகத்தில் தான்...!

இன்னும் எத்தினை காலந்தான்.. மனித ஆணை.. பெண்ணையும் சேர்த்து வைச்சு.. இன விருத்திக்கு வழிகுக்க.. காணாத சொர்க்கத்தை கணக்கு காட்டப் போறாய்களோ... ?????! எல்லாம் மனித மனங்களை ஏமாற்றி.. சிக்கலில் மாட்டிவிட வைக்கும்.. தந்திரமே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

கவிதை,கவிதை அந்தமாதிரி.

கவிஞன் கண்டாலே கவிதை,சிலருக்கு அது வெறும் ஜடம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞன் கண்டாலே கவிதை,சிலருக்கு அது வெறும் ஜடம் தான்.

இப்படிக் கவிதை என்ற பெயரில.. உண்மைக்குப் புறம்பான அபரிமித கற்பனையில்.. மனிதனை வாழ வைக்கிறதை விட அவனை ஜடமாவே விடலாம்..!

எனக்குப் புரட்சிக் கவிஞர்களைப் பிடிக்கும்.. காரணம்.. எழுத்தில் ஒரு நேர்மை. ஓர்மம் பிறக்கும். அறிவியல் கவிஞர்களைப் பிடிக்கும்.. உண்மையை ரசிக்கக் கூடிய வகையில் எழுதுவதால்.. சமூகக் கவிஞர்களைப் பிடிக்கும்.. பகுத்தறிவை.. சுய சிந்தனையை.. ஊட்டுவதால்..ஆனால் காதல் கவிஞர்களைப் பிடிக்காது.. காரணம்.. பொய்களை கவிநயத்துக்காக.. இன்னும் மிகைப்படுத்திய பொய்களாக எழுதுவதால்...! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அறுசுவையில் இது ஒரு ரகம்.

பிரியமானவர்கள் சுவைக்கட்டுமே.....

கவிதை அழகு :wub:

அது தன்னையும் வாசிப்பவனையும் அசிங்கப்படுத்தாதவரை.... :lol:

நன்றி கவிதை

டிஸ்கி ... ஏற்கனவே இப்படி ஒரு கவிதை எழுதி ஒருவர் இங்கே ஒப்பாரி வைத்தபடி இருக்கிறார். அவரது அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்கள் கவிதை. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி ... ஏற்கனவே இப்படி ஒரு கவிதை எழுதி ஒருவர் இங்கே ஒப்பாரி வைத்தபடி இருக்கிறார். அவரது அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்கள் கவிதை. :lol::D

யாரந்தக் கவிஞன் விசுகு ? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கின்றது! தொடர்ந்து எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் கவிதையும் , உடையார் இணைத்த மதுரை இராஜாவின் கவிதையும் அழகாகவும் மனதைக் கவர்வதாகவும் அமைந்திருக்கிறது. தொடருங்கள் கவிதை கவிஞனுக்கு அழகே கற்பனைதானே

நெடுக்குத் தம்பி கவிஞனின் அபரிதமான கற்பனையில் மனிதகுலம் நெகிழ்வைத்தானே அடைகிறது. நெகிழ்வு என்பது வேண்டாத உணர்வா? நீங்கள் நேசிக்கும் பாரதியார் புரட்சிக் கவிஞனாக இருக்கலாம் ஆனால் அவரிடமும் அபரிதமான கற்பனைகள் அடங்கிக் கிடக்கின்றன. தம்பி கொஞ்சமாய் மனம் நெகிழ்ந்து ஒரு பெண்ணுடன் கூடி மகிழ்ந்து அவளின் அணைப்பில் கட்டுண்டு இருந்து பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் சடத்தனம் படிதாண்டி ஓடும்.

  • தொடங்கியவர்

கவிதை..அழகான கவிதை..உங்கள் எழுத்துக்கள் அழகாக மெருகேறுகின்றன..தொடர்ந்து எழுதுங்கள்..

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சுபேஸ்! என் எழுத்துக்கள் இன்னும் நிறையவே மெருகேறவேண்டி இருக்கின்றது. நிச்சயமாக நான் அதில் இன்னும் கவனமெடுக்கின்றேன். :)

  • தொடங்கியவர்

என்னையா கவிதை.. :wub: ஒரே கவுச்சிவாடையா இருக்கு??! :wub:

டங்குவார் அண்ணை! அவ்வளவு "இதுவாவா" இருக்குது???? :unsure::wub: உங்களுக்கும் பிடிக்கும் எண்டல்லோ நினைச்சனான்! :D இப்பிடிச் சொல்லிப்போட்டியள்? அது சரி, உங்களுக்கு 18 வயசுக்கு மேலதானே.... அப்ப வாசிக்கலாம் ... பிரச்சினையில்லை! :lol:

  • தொடங்கியவர்

காலம் காலமா இப்படியே எழுதி ஏமாற்றிக்கிட்டு திரியுறாங்க.. மனித வரலாற்றில்.. விஞ்ஞானமோ.. மெஞ்ஞானமோ.. சொர்க்கத்தை தரிசித்ததாக வரலாறில்லை. சொர்க்கம் எப்படி என்ற ஒரு அளவீடு கூட சரியாக இல்லை. இப்படியான ஒரு நிலையில்.. ஜஸ்ட்.. ஒரு விலங்கு நிலை மனித உணர்விற்கு.. சொர்க்கம் என்ற பெயரிடலும்.. உவமை இடலும் எந்த வகையில் சரியானது. அப்போ.. மிருகங்களும் அடிக்கடி சொர்க்கத்துக்குப் போய் சொர்க்கிச்சிட்டா வருகுதுங்க.

சொர்க்கம் காணாமல்... இன விருத்தி செய்யும் உயிரினங்களும் உள்ளனவே... ஏன் அவற்றிற்கு மட்டும் சொர்க்கத்தை தரிசிக்க விடமாட்டினமோ..??????!

சேலை கட்டாதவங்க.. எங்க ஆரம்பிப்பாங்க.. கொடுமை சரவணா. எங்க ஆரம்பிச்சாலும்.. முடியப் போறது.. நரகத்தில் தான்...!

இன்னும் எத்தினை காலந்தான்.. மனித ஆணை.. பெண்ணையும் சேர்த்து வைச்சு.. இன விருத்திக்கு வழிகுக்க.. காணாத சொர்க்கத்தை கணக்கு காட்டப் போறாய்களோ... ?????! எல்லாம் மனித மனங்களை ஏமாற்றி.. சிக்கலில் மாட்டிவிட வைக்கும்.. தந்திரமே..! :icon_idea:

தங்களின் நடுநிலையான விமர்சனத்தினைத் தந்தமைக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்! :)

விமர்சனங்களை மதிப்பவன் நான்!அதில் சுட்டிக் காட்டப்படும் விடயத்தில் உண்மையிலேயே தவறுகள் இருந்தால் அதை திருத்திக்கொள்ளுதல் நன்று!

தவறுகள் இருப்பின்... நிச்சயம் திருத்திக் கொள்ளுவேன்!

படைப்புக்களில் கவிதைக்கும், ஓவியத்துக்கும் ஒரு தனிச்சிறப்புண்டு!

ஏனெனில் அது பார்ப்பவர்களின் கண்களைப் பொறுத்து "புரிந்து கொள்ளல்" என்பது மாறுபடும்!

இரண்டுமே கற்பனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவை!

அதில் நான் சொல்ல வருவது என் கவிதையைப் பற்றி...

"சேலைத் தலைப்பில்தான்..." என்ற கவிதையில்

நான் விரசமாகவோ ஆபாசமாகவோ எழுதவில்லை என நம்புகின்றேன்!?

மனிதனின் "எண்ணங்களின் வேகம்" என்பது கணக்கிட முடியாதது. அதற்கு ஈடிணை வேறெதுவும் இல்லை. சில சமயங்களில்... உணர்ச்சி மயமான மகிழ்ச்சி நிலையை அடையும் போது அதற்கு "சொர்க்கத்தில் உள்ளது போன்ற நிலை" என குறிப்பது அளவுக்கு மீறிய கற்பனை என்று பொருளாகுமா???????

பொதுவாக பெரும்பாலான எல்லா உயிரினங்களும் இஷ்டப்பட்டே சேருகின்றன.

மிருகங்களுக்கும் மனிதரைப் போன்று பேசவும் எழுதவும் முடியுமாக இருந்திருந்தால் அவையும் "சொர்க்கம்" என்ற சொல்லை பாவிக்குமோ என்னவோ???????

"கவிதைகளில் கற்பனைகளை கலப்பதில் தவறே இல்லை" என்பது என் உறுதியான கருத்து.

அதனால், நான் கற்பனை கலந்த எழுத்துக்களை மட்டுமே எழுதுபவன் என்ற அர்த்தம் இல்லை. எந்தப் படைப்பும் மற்றவர்களின் மனதினை நோகடிக்காதவரை, எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்தாதவரை தனது எல்லையைப் பேணுதலே ஒரு படைப்பாளிக்கு அழகு. அது கட்டாயமும் கூட. அந்த வகையில் நான் எப்படி என்பதை... எனது ஆக்கங்கள் அனைத்தையும் பார்ப்பவர்கள் சொல்வார்கள் என நம்புகின்றேன்.

எனது எழுத்துக்களுக்கான முழுப்பொறுப்பும் நான்தான் என்ற வகையில் , தங்களின் கருத்துக்கு பதில் தரவேண்டியது என் கடமை! அந்த வகையில் தங்களது விமர்சனக் கருத்துக்கு பதிலளித்திருக்கின்றேன்!

தங்களது நடுநிலையான விமர்சனங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்!

நன்றி நெடுக்ஸ்! :)

  • தொடங்கியவர்

கவிதை,கவிதை அந்தமாதிரி.

கவிஞன் கண்டாலே கவிதை,சிலருக்கு அது வெறும் ஜடம் தான்.

மிக்க நன்றி அர்ஜுன்! :)

உண்மையில அந்தக் கவிதை கொஞ்சம் "அந்தமாதிரித்தான்" போல கிடக்கு!!???? :lol::wub:

  • தொடங்கியவர்

அறுசுவையில் இது ஒரு ரகம்.

பிரியமானவர்கள் சுவைக்கட்டுமே.....

கவிதை அழகு :wub:

அது தன்னையும் வாசிப்பவனையும் அசிங்கப்படுத்தாதவரை.... :lol:

நன்றி கவிதை

டிஸ்கி ... ஏற்கனவே இப்படி ஒரு கவிதை எழுதி ஒருவர் இங்கே ஒப்பாரி வைத்தபடி இருக்கிறார். அவரது அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்கள் கவிதை. :lol::D

நன்றி விசுகண்ணை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும். உண்மைதான்!

உங்களுக்கு இந்தக் கவிதை பிடிச்சிருக்கும் என நம்புறன்! :wub:

அதுசரி.... யார் அண்ணை அது புலப்பிக் கொண்டிருக்கிறது? :rolleyes:

குமாரசாமி அண்ணையோ???? :lol: ஏன் அந்தக் கவிதையை அவரின்ர வீட்டுக்காரி பாத்துப் போட்டாவோ???? :o:lol:

  • தொடங்கியவர்

யாரந்தக் கவிஞன் விசுகு ? :huh:

சாந்தியக்கா! உங்களுக்காவது தெரிஞ்சுதோ அது யாரென்று? :rolleyes:

தெரிஞ்சா சொல்லிப்போடுங்கோ! நானும் அவரின்ர அனுபவத்தைக் கேக்கோணும்! :D

கவிதை நன்றாக இருக்கின்றது! தொடர்ந்து எழுதுங்கள்!

மிக்க நன்றி சுவியண்ணா! :)

  • தொடங்கியவர்

கவிதையின் கவிதையும் , உடையார் இணைத்த மதுரை இராஜாவின் கவிதையும் அழகாகவும் மனதைக் கவர்வதாகவும் அமைந்திருக்கிறது. தொடருங்கள் கவிதை கவிஞனுக்கு அழகே கற்பனைதானே

கவிதைகளில் கைதேர்ந்தவர் நீங்கள் அக்கா!

உண்மைதான்! கற்பனை இல்லாத கவிதைகளில் இரசனைகள் குறைந்துபோன வெற்றிடம் உருவாகும்! நானும் பலமுறை உணர்ந்திருக்கின்றேன்! கவிதைக்கு அழகு சேர்ப்பதும் புத்துணர்வைக் கொடுப்பதும் அந்தக் கற்பனைகள்தான்!

மிக்க நன்றி அக்கா! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.