Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கற்பென்பதும் களவேன்பதும் யாதெனில்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கற்பென்பதும் களவேன்பதும் யாதெனில்....

இன்று நமதெனப்படுவது நேற்று நமதில்லை

நேற்று நமதெனப்பட்டது இன்று நமதில்லை

குழப்பமாக உள்ளதா? முன்பு கோவில்களில் தமிழர்களால் ஆடப்பட்ட தேவரடியாள் ஆட்டம் எனபது இன்று பரதநாட்டியம் என்ற பெயரில் ஆடப்பட்டு தமிழர்களுக்கு அன்னியமாகிப்போனது(இதுபோல கர்நாடக இசை, தற்காப்பு கலை இன்னும் நிறைய சொல்லலாம்).அதுபோல நாம்

கற்பு பற்றி கொண்டிருக்கும் வரையறையானது நமதில்லை எனபதும் தெளிவு.

"கற்பெனப்படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்காப்பியம் கற்பியல் 140)

கரண் - உடம்பு

கொளற்குரி - பெறுவதற்குரிய

கிழவன் - உரியவன்;தலைவன்

கொடைக்குரி - கொடுத்தற்குரிய

கிழத்தி - உரியவள்;தலைவி

கற்பெனப்படுவது உடம்போடு புணரக், ஆணைப் பெற்றோர் பெண்ணைக் கொள்வதும், பெண்ணைப் பெற்றோர் பெண்ணைக் கொடுப்பதுமாகும்.

கற்பு என்பதை பின்வருமாறும் கூறுவர்...

கற்பு என்ற சொல்லுக்குக் கற்றதைப் பின்பற்று என்று பொருள். அதாவது பெரியோர்கள் கற்பித்தபடி இல்லறம் நடத்தலே கற்பு எனவும் அவற்றை மீறும் தலை மக்கள் கற்பிழந்தவர்களாகவும் கருதப் பெறுவர்.

ஆக கற்பு என்பதற்கும் கன்னித்தன்மை இழத்தல் என்பதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. மேலும் கற்பு என்ற சொல் பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. அது ஆண் பெண் இருவருக்கும் உரித்தான ஒரு சொல்.

களவு:

"காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்

பாங்கோடு தழாலும் தோழியிற் புணர்வுமென்று

ஆங்கநால் வகையினும் அடைந்த சார்போடு

மறையென மொழிதல் மறையோர் ஆறே"

காமப் புணர்ச்சியும் - மனம் ஒத்த இருவர் தாமே கூடி புணர்வது(பெற்றோர்கள் சம்மதமின்றி).இதை இயற்கைப் புணர்ச்சி எனவும் கூறுவர்.

இடந்தலைப் படலும் - இயற்கைப் புணர்ச்சி கொண்ட தலைவன் தலைவி மீண்டும் அவ்விடத்தே சென்று கூடுதல்

பாங்கோடு தழாலும் - (பாங்கன்:தோழன்) தோழனை தலைவியிடம் தூது அனுப்பி அவளை குறியிடத்தே வரச் சொல்லி கூடுதல்

தோழியிற் புணர்வுமென்று - தலைவியின் தோழி வழியே தூது அனுப்பி அவளை குறியிடத்தே வரச் சொல்லி கூடுதல்

..ஆக களவை நான்கு வகைபடுத்துகின்றனர்

"உளமலி காதல் களவு எனப்படுவது

ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்

யாழோர் கூட்டத்தின் இயல்பினது என்ப" (களவியல் நூற்பா -1)

கொடுப்போரும், பெறுவோரும் இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது. இதுவே யாழோர் கூட்டம் எனப்படும்.

ஞானக்கூத்தன் களவு பற்றி இவ்வாறு கூறுகிறார்

"நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும் தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது"

நன்றி - thalaivanankatamilan.blogspot.com

அட இதைதான சொன்னார்கள் "களவும் கற்று மற" என்று, தெரியாம போச்சே

கற்பு என்றால் , < ஒரு மனிதனது (ஆண் , பெண் ) சுய ஒழுக்கத்தைக் குறிக்கும் > என்றும் செம்மைப் படுத்தலாம் . தமிழர் வாழ்வியல் கூறும் எந்த இலக்கியங்களுமே < பெண்சார்ந்த பிறப்புறுப்பு கன்னித்தன்மை தான் கற்பு > என்று வரையறை செய்யவில்லை . இடையில் வந்த ஆணாதிக்க வாதிகளும் , ஆரியர்களும் , மிக நுட்பமாக பெண்களின் பிறப்புறுப்பு சார்ந்த கன்னித் தன்மையுடன் கற்பைப் புகுத்தித் தங்கள் மன அரிப்பையும் , உடல் அரிப்பையும் , சொறிந்து மகிழ்தனர் . பின்பு வந்த பெண்ணியவாதிகள் கூட இந்த சுழற்சியின் அடிப்படையிலயே கற்புக்கு வியாக்கியானம் தேட வெளிக்கிட்டது வேதனையான விடையம் . அதிலும் குஸ்பூ...................... உட்பட :) :) :) .

Edited by komagan

பெண்ணின் கற்பை அவள் மனசாட்சி தீர்மானிக்கிறது,ஆணின் கற்பை சந்தர்ப்பங்கள்,வாய்ப்புகள் தீர்மானிக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் கற்பை அவள் மனசாட்சி தீர்மானிக்கிறது,ஆணின் கற்பை சந்தர்ப்பங்கள்,வாய்ப்புகள் தீர்மானிக்கின்றன

இது இருபாலாருக்கும் பொருந்தும்.

நீங்கள் சொல்லும் விதத்தில் வைத்துப்பார்த்தால் ஆண்களுக்கு மனச்சாட்சி இல்லை என்ற அர்த்தத்தை தருகிறது. இது தப்பு வீணை.

'கற்பு' இன் அளவுகோல் உடல் மாத்திரமா?

அல்லது மனத்தால் / நினைவால் புணர்ந்தாலும் களவு ஒழுக்கமா?

  • கருத்துக்கள உறவுகள்

'கற்பு' இன் அளவுகோல் உடல் மாத்திரமா?

அல்லது மனத்தால் / நினைவால் புணர்ந்தாலும் களவு ஒழுக்கமா?

இப்படிப்பாத்தால் ஒன்டும் தேறாது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது இருபாலாருக்கும் பொருந்தும்.

நீங்கள் சொல்லும் விதத்தில் வைத்துப்பார்த்தால் ஆண்களுக்கு மனச்சாட்சி இல்லை என்ற அர்த்தத்தை தருகிறது. இது தப்பு வீணை.

விசுகு அண்ணையின் கருத்து சிந்திக்க வைக்குது..! :rolleyes:

எங்களுக்கெல்லாம் சந்தர்ப்பம் வரேல்லையா என்ன!? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

'கற்பு' இன் அளவுகோல் உடல் மாத்திரமா?

அல்லது மனத்தால் / நினைவால் புணர்ந்தாலும் களவு ஒழுக்கமா?

மனிதன் அடிப்படையில் விலங்குராச்சியத்துக்குள் அடங்கும் பாலூட்டி. மனித உடல் இரசாயனமாற்றங்கள்.. மற்றும் உடற்தொழில்.. சார்ந்து.. அவனுடைய உறுப்புகளும்..சிந்தனைகளும் பாலுணர்வின் வழி.... பாலினப்புணர்ச்சிக்கு தம்மை தயார் செய்வது தவிர்க்க முடியாத ஒன்று. தயார் செய்வதால் மட்டும் மனிதன் புணர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அது மனிதனில் மட்டுமன்றி.. பிற விலங்குகளில் கூட.. பாலுணர்வுத் தூண்டல்கள் எல்லாம் புணர்ச்சியில் முடிபவையாக விலங்கு இராட்சியத்தில் 100% அமைவதில்லை.

அந்த வகையில்.. புணர்ச்சி பற்றிய ஆண் - பெண் பாலியல் தூண்டல்கள் எண்ணங்கள் கற்பு என்பதற்குள் அடங்காது. உடல் சார்ந்து..புணர்ச்சியில் ஈடுபடுதல்.. அல்லது இன்னொருவரை ஈடுபடத் தூண்டுதல் இதுவே கற்புக்குள் அடங்கும். இங்கு கற்பென்பது.. பாலியல் சார்ந்த தனிமனித நடத்தை ஆகும். சிலர் நினைப்பது போல.. அல்லது விளங்கி வைத்திருப்பது போல.. இது சில உறுப்புக்கள் சார்ந்த அம்சம் கிடையாது.

மனிதன் சிந்திக்கத் தெரிந்த சிறப்பு விலங்கு என்பதாலும்.. பலமான சமூகக் கட்டமைப்பை காண்பிக்கும் விலங்கு என்பதனாலும்.. அவனுடைய வெற்றிகர வாழ்க்கை.. இவ்வாறான தனிமனித ஒழுக்க நடத்தைகளில் தங்கி இருப்பதனாலும்.. பாலியல் சார்ந்த தனிமனித ஒழுக்கம்.. என்பது அவனிடத்தில் கூர்ந்து அவதானிக்கப்படும் விடயமாக அமைகிறது. இருந்தாலும்.. அது இன்று பிராந்தியங்கள்.. கலாசாரங்கள்.. பாலினம் சார்ந்து குறுகி நிற்கும் அம்சமாகவும் மாறியுள்ளது. உண்மையில் கற்பு எனும் தனிமனித பாலியல் புணர்ச்சி ஒழுக்கம் என்பது.. ஆண் பெண் இருபாலாருக்கும் பொருந்தும்.. மொத்த மனித இனத்திற்கும் சிறப்பாக அமையக் கூடிய ஒன்றாகும். இவ்வாறான நடத்தைகள் மனிதனல்லாத சிந்திக்கத் தெரியாத விலங்குகள் மற்றும் பறவைகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளன.

எனவே பெண்ணிலைவாதிகள் சித்தரிக்கின்றது போல.. இவை.. பெண்ணின் உடலுறுப்பு அல்லது உள்ளாடைகள் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அது சிந்தனையற்றவர்களின் தவறான கருத்தியல்..! அதேபோல்.. ஆண்களுக்கு கற்பு இல்லை என்பதும் தவறான கருத்தியல். இந்த ஒழுக்கம் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் பொதுவாக அமையக் கூடிய ஒன்று. அவ்வளவே. :)

Edited by nedukkalapoovan

என்ன நடந்தது உடையாருக்கு :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலுணர்வையும் புணர்ச்சியையும் மனிதவிலங்கு அடக்கினால்.... இவ்வுலகில் மிஞ்சியிருப்பது எது?

பாலுணர்வும் புணர்ச்சியும் இல்லாமல் சோம்பேறிகளாக இருக்கும் அரியபெரிய இனங்கள் அழிந்துவருவதை தடுப்பதில் பல சமூக நிறுவனங்கள் ஆற்றும் தொண்டு அளப்பெரியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனவே பெண்ணிலைவாதிகள் சித்தரிக்கின்றது போல.. இவை.. பெண்ணின் உடலுறுப்பு அல்லது உள்ளாடைகள் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அது சிந்தனையற்றவர்களின் தவறான கருத்தியல்..! அதேபோல்.. ஆண்களுக்கு கற்பு இல்லை என்பதும் தவறான கருத்தியல். இந்த ஒழுக்கம் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் பொதுவாக அமையக் கூடிய ஒன்று. அவ்வளவே. :)

நல்ல அருமையான விளக்கம் நெடுக்கு

என்ன நடந்தது உடையாருக்கு :wub:

தெரியாம இடிச்சி தட்டிப்போட்டன் அதுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலுணர்வையும் புணர்ச்சியையும் மனிதவிலங்கு அடக்கினால்.... இவ்வுலகில் மிஞ்சியிருப்பது எது?

பாலுணர்வும் புணர்ச்சியும் இல்லாமல் சோம்பேறிகளாக இருக்கும் அரியபெரிய இனங்கள் அழிந்துவருவதை தடுப்பதில் பல சமூக நிறுவனங்கள் ஆற்றும் தொண்டு அளப்பெரியது.

யார் அடக்க சொன்னது, அடக்க கூடது, செய்ய வேண்டிய நேரத்தில கட்டுப்படுகளுடன் பூட்டிய அறையில் செய்தால் நல்லது.

"தும்மலையும் உணர்ச்சியையும் அடக்கினால் வெளிப்படக் கூட இடத்தில வெளிப்பட்டுவிடும்"

நீங்க இணைத்த வீடியோ நல்லா இருக்கு நன்றி,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் கோமகன் எல்லா பெண்ணியவாதிகளும் தங்களின் பெயர் அடிபட வெந்த புண்ணில் வேலை பாச்சுவது போல்தான் இப்ப நடக்கிறார்கள்.

குஸ்பூ பாவம் ஐயா தன்னுடைய பூ வாட முதல் எல்லாரும் நூகர்ந்து பார்த்தால் நல்லது என்று சொல்லவர அதை பெரிது படுத்திவிட்டார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் கற்பை அவள் மனசாட்சி தீர்மானிக்கிறது,ஆணின் கற்பை சந்தர்ப்பங்கள்,வாய்ப்புகள் தீர்மானிக்கின்றன

வீணா நீங்க சொல்வதை பார்த்த ஒருத்தி கல்யாணத்திற்கு முதலே உடலுறவு கொண்டாலும், அவள் மனது சரியென்றால், அது கற்பை இழக்கவில்லை என்ற மாதிரி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வீணா நீங்க சொல்வதை பார்த்த ஒருத்தி கல்யாணத்திற்கு முதலே உடலுறவு கொண்டாலும், அவள் மனது சரியென்றால், அது கற்பை இழக்கவில்லை என்ற மாதிரி இருக்கு

மனது சார்ந்து மனித எண்ண ஓட்டங்களை.. செயல்களைக் கணிப்பது அவ்வளவு சாத்தியமான ஒன்றல்ல. அந்த வகையில் தான்.. உடல் சார்ந்த தனிமனித ஒழுக்கமாக இந்தக் கற்பெனும்.. புணர்ச்சி ஒழுக்கத்தை நிறுவி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நீதிமன்றில் போய்.. எனது மனதில்.. இப்படி ஓடுகிறது.. நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சொன்னாலும்... கூட அதனை சாட்சியாக கொள்ளமாட்டார்கள். காரணம்.. மனதில் ஓடுவதை அப்படியே பிரதிபலிக்கக் கூடிய கருவிகள்.. இல்லை என்பதால்.. உடல் சார்ந்த ஒழுக்கத்தை கைவிட்டுவிட்டவர்கள்.. காண முடியாத மனக் காட்சிகளால்.. தம்மை இற்றைப்படுத்த முயல்வதையே செய்வர். அதனை ஒழுக்கப் பிறழ்வற்ற நிலை என்று கொள்ள முடியாது. உடல் சார்ந்த ஒழுக்கத்தோடு மனதிலும் ஒரு கட்டுப்பாடு இருந்தால்.. அது சிறப்பு. உடல் சார்ந்த ஒழுக்கம் சீரழிய.. மனதில் ஒழுக்கம் இருப்பதாகச் சொல்வது ஏற்பதற்கு கொஞ்சம் கடினமான விடயம். காரணம்.. மனம் பற்றி அளவிட எம்மிடம் ஏதும் இல்லை..! சொல்வதை நம்ப வேண்டிய நிலை அங்கு. :)

Edited by nedukkalapoovan

அந்த வகையில் தான்.. உடல் சார்ந்த தனிமனித ஒழுக்கமாக இந்தக் கற்பெனும்.. புணர்ச்சி ஒழுக்கத்தை நிறுவி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நெடுக்கு ,, இந்த உடல் சார்ந்த கற்பு , கண்ணிவெடி,,, கிளைமோர் சமாச்சாரமெல்லாம்..,,, ஏன் ..சார்க் நாடுகளில மட்டும்தான் கொடிகட்டி பறக்குது? மே பி ,, அவங்க சாக்குகள் போல எங்கிறதாலயா? <_<

ஆண்களுக்கு கற்பு இல்லை என்பதும் தவறான கருத்தியல். இந்த ஒழுக்கம் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் பொதுவாக அமையக் கூடிய ஒன்று. அவ்வளவே. :)

தேவையானதொரு கருத்து. மேற்கோ கிழக்கோ தனி மனித ஒழுக்கமில்லாவிட்டால் அந்த இனமே சீரழிந்துவிடும்.

இப்படிப்பாத்தால் ஒன்டும் தேறாது :rolleyes:

மனத்தால் கூட மற்றையவர்களை இச்சிக்க கூடாது என்று தமிழ் கலாச்சாரத்தில் கூறுவது எவ்வளவு சாத்தியமானது என்று தெரியவில்லை.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு முன்பு கற்போ, களவோ என்று ஆராயப் போனால், அலங்கோலம் தான் வெளிப்படும்!

ஆயினும் தமிழ்த் திருமணங்களில், ஒரு அம்மியில் காலைத் தூக்கி வைப்பார்கள்!

அதன் கருத்தானது, மணவாழ்க்கையில் புகுகின்ற ஆணுக்கும், பெண்ணுக்கும் அம்மிக் கல்லின் திண்மை நினைவூட்டப் படுகின்றது!ஹ

அம்மிக்கல்லு வளைவதில்லை! வளைத்தால் உடைந்து விடும்!

அதாவது திருமணத்தின் பின் தலைவனோ, அல்லது தலைவியோ வேலி தாண்டினால் திருமண பந்தமானது உடைத்து விடும்! அது வளைந்து கொடுக்கக் கூடாது என்பதை நினைவு படுத்தவே!

கற்பு எங்கிறது .. வேற ஒண்ணுமில்ல...

தனக்கு வர்ற கேர்ள் , Fresh ஆ இருக்கணும் எங்கிறதுக்காக .. ugly ஆண் போட்ட அவசரகால சட்டம்!

Edited by அறிவிலி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு ,, இந்த உடல் சார்ந்த கற்பு , கண்ணிவெடி,,, கிளைமோர் சமாச்சாரமெல்லாம்..,,, ஏன் ..சார்க் நாடுகளில மட்டும்தான் கொடிகட்டி பறக்குது? மே பி ,, அவங்க சாக்குகள் போல எங்கிறதாலயா? <_<

அமெரிக்காவில் virginity ஒரு பெரிய சமூகக் கருப்பொருளாக இருக்கிறது. இங்கிலாந்தில் இரண்டாம் போருக்கு முன்னரான சமூகத்தில்.. இவ்வாறான ஒழுக்க நடைமுறைகள் தீவிரமாக இருந்துள்ளன. இன்று எம்மவர்களைப் போர் எப்படி வெளிநாடுகளுக்கு ஓட வைச்சும்.. உள்நாட்டில் எதிரிகளிடம் கையளிச்சும்.. அடிப்படை மனித நாகரிக்கைத்தையே இழக்கச் செய்துள்ளதோ.. அப்படி.. மேற்கு நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட தொகை மக்கள் இந்த தனிமனித ஒழுக்கத்தை இழந்துள்ளார்கள் என்றாலும்.. இன்னும் கணிசமான மக்கள்.. இதனைக் கடைப்பிடிக்கவே செய்கின்றனர். அவர்களுக்கும் இது சார்ந்த பல சமூகப் பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் இருந்து அவர்களும் விடுபட போராடிக் கொண்டிருக்கின்றனர். அப்பன் தெரியாத பிள்ளைகளும்.. பிள்ளைகளுக்கு யார் அப்பன் என்று தெரியாத தாய்மாரும் என்று.. தாய் தந்தையரின் நீடிப்பற்ற குடும்ப வாழ்வால்.. வெறுத்து குடும்பங்களை விட்டு இளவயதில் பிரிந்து வன்முறைகளில்.. சமூகச் சீர்கேடுகளில் கலக்கும் சிறார்களும்.. இப்படிப் பெரிய பொருண்மிய தாக்க தரவல்ல.. சமூகப் பிரச்சனைகள்.. பிரிட்டன் போன்ற நாடுகளிலும் உள்ளன. இதில்.. இந்த தனிநபர் ஒழுக்கப் பிறழ்வால் வரும் பின் விளைவுகளும் ஒரு காரணமாகும்.

நான் சந்தித்த பல வெள்ளையர்கள்.. ஒருவனுக்கு ஒருத்தி என்று தான்... அநேகம் வாழக்கண்டிருக்கிறேன். வயதானவர்களில் இருந்து இன்றைய இள வயதினர் வரை. அதேநேரம்.. வறிய வெள்ளையர்களிடமும்.. சமூகச்சீர்கேடுகளில் ஈடுபடும் வெள்ளைப் பெற்றோரைச் சார்ந்த அவர்களின் பிள்ளைகளும் அதிகம்.. இவ்வாறான தனிமனித ஒழுக்கத்தை இழந்து வாழவும் காண்கிறோம்.

ஆக.. கற்பு என்பது வெறுமனவே.. ஒரு பிராந்தியத்திக்கு என்று பார்க்க முடியாது.. ஆனால் சில பிராந்தியங்களில் அதிகம் அக்கறையோடு.. அது பின்பற்றப்படும் ஒழுக்கமாக இருக்கிறது என்பது கண்கூடு. :)

கற்பு எங்கிறது .. வேற ஒண்ணுமில்ல...

தனக்கு வர்ற கேர்ள் , Fresh ஆ இருக்கணும் எங்கிறதுக்காக .. ugly ஆண் போட்ட அவசரகால சட்டம்!

ஏன் பெட்டையள்.. நீ Virgina என்று கேட்டுப் பார்த்து பழகுவதில்லையோ..???! இல்லை என்று சொன்னால்.. அது ஒரு மகா பொய். மேலும்.. ஒரு மனிதன் தான் பின்பற்றும் தனிமனித ஒழுக்கத்தை மற்றவர்களிடமும் சாத்தியமாக்கிப் பார்ப்பது தவறல்ல. ஆனால் அதைக் கடைப்பிடிப்பதும் விடுவதும்.. அவரவர் விருப்பைப் பொறுத்தது. அப்படி தனிமனித ஒழுக்கத்தை விரும்பும் ஆணோ பெண்ணோ.. அப்படிக் கடைப்பிடிக்க விரும்பாதவர்களிடத்தில் இருந்து விலகிச் சென்று விடுவதே.. உள.. உடல்.. உலக வாழ்வியல் சிறப்பாக அமைய உதவும். :):icon_idea:

எது எப்டி இருந்தாலும் நெடுக்கு.. இந்த virginity எங்கிற ..Damn (Foolish) matter ..........,, காதலித்து திருமணம் செய்பவர்களை தவிர்த்து,, மற்றவர்கள் முன்னாடி ஒரு debate மேட்டரா இல்லியா? <_<

'கற்பு' இன் அளவுகோல் உடல் மாத்திரமா?

அல்லது மனத்தால் / நினைவால் புணர்ந்தாலும் களவு ஒழுக்கமா?

சட்டப்படி ஒருவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இன்னொருவை மனதில் நினைப்பது பெரும் களவு பாருங்கோ, அது மட்டுமல்ல மகிந்தா மாதிரி பிராயச்சித்தம் பண்ணவும் முடியாத கோடானு கோடி பாவமும் :(

கற்பு எங்கிறது .. வேற ஒண்ணுமில்ல...

தனக்கு வர்ற கேர்ள் , Fresh ஆ இருக்கணும் எங்கிறதுக்காக .. ugly ஆண் போட்ட அவசரகால சட்டம்!

நீதி, நியாயத்தைச் சொல்லும் அறிவிலிக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

சட்டப்படி ஒருவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இன்னொருவை மனதில் நினைப்பது பெரும் களவு பாருங்கோ, அது மட்டுமல்ல மகிந்தா மாதிரி பிராயச்சித்தம் பண்ணவும் முடியாத கோடானு கோடி பாவமும் :(

உப்பிடிப் பார்த்தால் உலகத்தில அத்தனை ஆண்களுக்கும் நரகம்தான்..! :rolleyes:

சட்டப்படி ஒருவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இன்னொருவை மனதில் நினைப்பது பெரும் களவு பாருங்கோ, அது மட்டுமல்ல மகிந்தா மாதிரி பிராயச்சித்தம் பண்ணவும் முடியாத கோடானு கோடி பாவமும் :(

:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.