Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கொதிரான இறுதி யுத்தத்தில் கருணாவின் படைகள். காணொளி

Featured Replies

இந்த திரியில் உள்ள சுகனின் கருத்துகள் அனைத்துடனும் உடன்படுகின்றேன். தொடர்ந்து எழுதுங்கள் சுகன்.

  • Replies 134
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உமா மகேஸ்வரன் சிறிசபாரத்தினத்ம் ஆகியோரோடு ஒத்துவரவில்லை என்று தலைவர் பிரிந்தது தவறில்லை அதே போல் கருனா பிரிந்ததும் தவறில்லை ஆனால் ?????????

தலைவர் பிரிந்தாரா?

நான் எழுதியது ஈழத்தில் டெலோ plot என்று இயக்கம் தொடங்கிய உமா சிறியை பற்றி.

நீங்கள் டொரோண்டோ ம்ச்டோனல்ட்ஸ் இல் வேலை செய்யும் சிறியையும் உமாவையும் போட்டு குழப்பியுள்ளிர்கள் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உமா மகேஸ்வரன் சிறிசபாரத்தினத்ம் ஆகியோரோடு ஒத்துவரவில்லை என்று தலைவர் பிரிந்தது தவறில்லை அதே போல் கருனா பிரிந்ததும் தவறில்லை ஆனால் ?????????

கருணா என்றவரும் அவருக்கு நெருக்கமானவையும் பிரிஞ்சதை தலைவர் தடுக்கேல்ல. விடுதலைப் போராட்ட வரலாறுகள் எங்கனும்.. பிரிவுகளும் துரோகங்களும் பதிவிடப்பட்டே உள்ளன.

கருணா பிரிஞ்சாப் பிறகும்.. தென் தமிழீழத்தை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

தென் தமிழீழ... வட தமிழீழ மாவீரர்களும் போராளிகளும் மக்களும் இணைந்து நடத்திய.. ஆயுதப் போராட்டப் பின்னடைவிற்கும்.. இன்று எம்மினம்.. இவ்வளவு இழப்புக்களை சந்திக்கவும் கருணா காரணமானது தான் துரோகமாகிறதே அன்றி.. கருணா சாதாரண போராளிகள் போல ஐந்தாண்டு சேவைக்காலம் முடிய பிரிஞ்சு போக உரித்துடையவரே..! ஆனால் காட்டிக் கொடுக்கும் நோக்கோடு பிரிய இடமளிக்க உலகில் எங்கும் எவரும் வாய்ப்பளிக்க மாட்டினம். அப்படி எதிர்பார்ப்பது முழு முட்டாள் தனம்.

கருணா.. பிள்ளையான் போன்றவர்கள்.. மக்களுக்கு ஆற்றிய துரோகத்தில் இருந்து இன்று எதிரிகளால் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நிச்சயம் அவர்கள் அதற்காக மக்களால் தண்டிக்கப்படும் நேரமும் வந்தே தீரும்..!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் தனித்து வந்தும்

தமிழ்மக்களின் தாகத்தை மறவாதிருந்தார்

தனது போராளிகளுக்கு தான் கொடுத்த வாக்கை மறவாதிருந்தார்

அதற்காக தன்னிடமுள்ள எதனையும் இழக்க தயாராகஇருந்தார்.

தன்னைக்காக்க அல்லது தனது குடும்பத்தைக்காக் தமிழ் மக்களது எதனையும் அடைவு வைக்க விரும்பாதிருந்தார்.

Edited by விசுகு

இந்த திரியில் உள்ள சுகனின் கருத்துகள் அனைத்துடனும் உடன்படுகின்றேன். தொடர்ந்து எழுதுங்கள் சுகன்.

திரி ஜெகஜோதியாக எரியட்டும் என கூறியுள்ளீர்கள் :D , நல்லது.

அந்த வெளிச்சத்தில், பிரகாசத்தில் ஒற்றுமை, தெளிவு.. பலமெடுக்கட்டும்.

பிரிவுகள், பிளவுகள் சிறுகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

திரி ஜெகஜோதியாக எரியட்டும் என கூறியுள்ளீர்கள் :D , நல்லது.

அந்த வெளிச்சத்தில், பிரகாசத்தில் ஒற்றுமை, தெளிவு.. பலமெடுக்கட்டும்.

பிரிவுகள், பிளவுகள் சிறுகட்டும்.

நமது கருத்து மோதல் முடிவில் வாழ்வது தமிழாக இருக்கட்டும்

உருவாவது தமிழீழமாக இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி(லி) யில் உள்ளவர்களும் புலிகளாகத்தான் இருந்தவர்கள்.. படம் கீறித் தாக்குதலை விளக்கப்படுத்தியதைப் பார்த்தபோது ஜெயசுக்கிறுச் சமரிலும் இப்படித்தான் செய்திருப்பார்கள் என்று தோன்றியது.

மேலும் சுகனின் தெளிவாக விளக்கங்களுக்கு நன்றி.

என்னதான் புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழரின் கறுத்த பின்புறத்தை வெள்ளையாக்க முடியாது என்ற பேருண்மை சிலரின் பதிவுகளில் தெரிகின்றது. :icon_mrgreen:

//இதில் எவன் மேலானவனோ அவனே இனத்தின் பிரதிநிதியாக தன்னை அடயாளப்படுத்தி இனத்துக்கொரு வரையறையை கொடுக்கின்றான். இதுதான் கலாச்சாரம் பண்பாடு என்கின்றான். அதன் பின்னால் உருவாகும் அரசியல் என்பதும் இதையொட்டியே உருவாகின்றது. அரசியல் இயங்க முற்படும் இந்த சமூகத்தளத்தில் தான் ஆயுதப்போராட்டமும் நடந்தது தவிர இந்த தளத்தை உடைத்தெறிந்து புதிய தளத்தில் இல்லை. இந்தத் தளத்தின் மீதுதான் பல மாற்றங்கள் நல்லவிதமாக ஆயுதப்போராட்டத்தில் கொண்டுவர முற்பட்டது.ஆனால் இந்த சமூக இயங்குதளம் உடையாமல் இனம் விடுதலை அடைய முடியாது என்பதையே காலம் சொல்லிக்கொண்டிருக்கின்றது.

//

சுகன் நீங்கள் மேலே சொல்லியவை எல்லாச் சமூகங்களிலும் நடக்கும் ஒரு விடயம்.முதலில் சமூக இயங்கு தளம் என்பது எங்கிருக்கிறது? அதை இயக்குபவர்கள் யார்? இதனைச் சிந்தியுங்கள். ஒரு சமூகத்தில் அங்கம் வகிப்பவர்கள் தான் அதை இயக்குகிறார்கள். ஒரு இனம் என்பது திடீரென உருவாவதில்லை.அதே போல் தான் தமிழ் என்னும் அடையாளம் திடீரென உருவாவதில்லை. நாகர் ,இ்யக்கர் என்று பல பண்டைய திராவிட இனங்கள் இருந்தன, காலப் போக்கில் அவை தமிழர் எனவும் சிங்களவர் எனவும் மாறினர்.சிங்கள சமூகத்திற்குள்ளேயே பல பிரிவுகள் இருந்து அவை உட்கலந்து ஒரு பேரின அடையாளம் சமூகத்தில் பலம் மிக்க அணியினால் உருவாக்கப்படுகிறது.சமூக இயங்கு தளம் அவ்வாறு தான் உருப்பெறுகிறது.

தமிழர் வரலாற்றிலும் இவ்வாறு தான் சமூகத் தளம் மாற்றம் பெற்றது.இசுலாமியத் தமிழரை தனிமைப் படுத்தி அவர்களை தனியாகப் போகவைத்தது உண்மை தான்.அது தவறு தான்.ஆனால் நாங்கள் அந்த வரலாற்றை மீள மடித்து புதிதாகத் தொடங்க முடியாது.

புலிகள் ஆரம்ப காலங்களில் தவறிழைத்தனர் தான் அந்தத் தவறுகள் தமிழச் சமூகத்தின் பிற்போக்குத் தளத்தில் இருந்து வந்தது என்பதும் உண்மை தான்.அவை போராட்டம் அரசியல் முதிர்ச்சி அற்று வெறும் எதிர்ப் புணர்வாக வெளிவந்த காலங்கள்.ஆனால் புலிகள் தமது சுயனலனை முன் நிறுத்தி மக்களின் அரசியல் அபிலாசைகளை விற்கவில்லை.அதனை மற்றைய எல்லோரும் செய்தனர்.பிரதேச வாதாம் பேசி கருணாவும், தலித்தியம் பேசி சோபாசக்தி,இராகவன் முதலானோரும், இன்று பெண்ணியம் பேசி ராஜேசு அம்மையாரும், சனனாயகம் பேசி நிர்மலாவும் இப்படி இன்னொரன்ன தனி நபர்களும் தமது சுய நலனுக்காக மக்கள் நலனை விற்றனர்.அதனாலையே அவர்களை மக்கள் நிராகரித்தனர்.

தமிழ் மக்களின் போராட்டம் சக்திமிக்கதாக இருக்க வேண்டும் எனில் அது முற்போக்கான அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தமிழ் அடையாளத்துடன் முன் எடுக்கப்பட வேண்டும் என்பதே புலிகளினதும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற எல்லோரினதும் அவாவாக இருந்தது , இருக்கிறது.புலிகள் விட்ட தவறுகளை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொண்டு வந்தனர் அதனாலையே மக்கள் அவர்களை நம்பினர்.அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியில் தான் அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் தொடர்ந்து கூட்டமைப்புக்கு வாக்களித்து வருகின்றனர்.

ஆகவே இன்னும் பழைய கதைகளைப் பேசி கருணா போன்ற பச்சோந்திகளின் காட்டிக் கொடுப்புக்களை நியாயப்படுத்திக் கொண்டு இருப்பதில் பயன் இல்லை.அவர் பின்னால் சென்றோரே அவரைக் கை கழுவி விட்டனர்.புலிகள் என்றும் பிரதேச வாதிகளாகவோ, சாதிய மான்களாகவோ இருந்ததில்லை.புலிகளே தமிழத் தேசிய அடையாளத்தை உருவாக்கிய சக்திகளாக இருந்தனர்.சமூக இயங்கு தளத்தை அவர்களே முன் நகர்த்தினர். சமூக இயங்கு தளம் என்பது எலும்பும் சதையும் ஆன மனிதர்களால் ஆனது.அது எதோ அருவ சக்தி போல நீங்கள் உருவகிக்கிறீர்கள்.

அதனால் தான் நீங்கள் தமிழத் தேசியத்தை விமர்சிக்கும் போதெல்லாம் அதனை முன் நகர்த்திய புலிகளையே விமர்சிக்க வேண்டி இருக்கிறது.இதில் ஏன் உங்களுக்குச் சங்கடம் இருக்கிறது?

மேலும் இனி என்ன செய்யலாம் என்று சொல்ல வருகிறீர்கள்.பரந்து பட்ட தமிழ் அடையாளத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்களா அல்லது குறுகிய பிரதேச, சாதிய அடையாளங்களின் அடிப்படைகளில் போராட்டம் முன் எடுக்கப் பட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? தலித்தியம், வடக்குக், கிழக்கு இவை எல்லாம் குறுகிய அடையாளங்கள் , இருக்கின்ற சமூகப் பிளவுகளை பாதுகாத்து போராட்டத்தை தொடர்ந்தும் சிதைவுற வைக்கக்கூடிய கருத்தாக்கங்கள்.

இவற்றின் அடிப்படையில் தமிழத் தேசியப் போரை நலிவடையச் செய்யும், எதிரியின் தயவில் செயற்படும் தனி நபர்களின் வழியா, உங்கள் வழியும்?

என்னதான் புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழரின் கறுத்த பின்புறத்தை வெள்ளையாக்க முடியாது என்ற பேருண்மை சிலரின் பதிவுகளில் தெரிகின்றது. :icon_mrgreen:

எல்லாம் பார்ப்பவனின் கண்களில்தான் உள்ளது. எதுவானாலும் அந்த சிலரையும் அணைத்து செல்லுவோம்.

சுகனின் பதிவும் கோமகனின் கருத்துமே எனதானதும் ஆகும்.

மற்றவர்களின் மேல் குற்றச்சாட்டை அள்ளிதெளிப்பவர்கள் அதே பிழைகளை தாமும் விட்டார்கள் .

சிறி எந்த ஒருகாலமும் புலியில் இருக்கவில்லை ஆனால் பிரபாகரன் சிறிதுகாலம் டெலோவுடன் இணைந்து இருந்தார்,குட்டிமணியுடன் சேர்ந்து இரு கொள்ளை சம்பவங்களில் வேறு ஈடுபட்டார் .

புலி தடை செய்யமுதல் எந்த ஒரு இயக்கமும் அரசுடன் சேரவில்லை,புலிகளுடன் முரண்பட்டவர்கள் தமது உயிர்வாழ்தலுக்கு இந்தியஅரசுடனோ,இலங்கை அரசுடனோ சேர வேண்டிய கட்டாயம்.உங்கள் கதையை பார்த்தால் புலி கொல்லும் நீங்கள் சாகுங்கோ என்ற மாதிரி இருக்கு .பின்னர் புலிகளும் தமது உயிர்வாழ்தலுக்கு இலங்கை அரசுடன் சேர்ந்தனர்.

கலியாணக்கதையும் அதேபோல் தான் முடிந்தது.

புலிகள் பலம் பெற்று ஏகப்பிரநிதித்துவம் பெற்றபின் கூட அவர்கள் மாறததுதான் எம்மினத்திற்கு வந்த சாபக்ககேடு.ஏகப்பிரநிதிதுவம் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் மனதுள் இருந்ததொன்று.மற்றவர்கள் விலை போய்விடுவார்கள் என்று பயந்ததும்,தன்னை விட வேறொருவரை அவர் நம்பாததும் முக்கிய காரணம் .

மற்றவர்கள் தமிழீழதிற்காக போராட போனார்கள் புலிகள் தமது தலைமையில் மட்டுமே தமிழிழம் என்று போராடினார்கள்.மாற்று இயக்கங்களை எதிரியாக நினைத்தது புலிகள் ஒன்றுதான் .

இன்றும் அவர்கள் விதைத்த "என்னுடன் வா அல்லது நீயும் எதிரி" என்ற மனப்பாங்கிலே தான் பலரும் செயற்பட நினைக்கின்றார்கள் .மற்றவன் கருத்து சொல்வது கூட ஏற்கமாட்டதவ்ர்களாக

ஆகிவிட்டார்கள் .

நாட்டில் கதை முடிந்துவிட்டது புலத்திலும் வெகு நாட்களில்லை.அந்த மனப்பாங்கு மாற.

புலிகள் பலம் பெற்று ஏகப்பிரநிதித்துவம் பெற்றபின் கூட அவர்கள் மாறததுதான் எம்மினத்திற்கு வந்த சாபக்ககேடு.ஏகப்பிரநிதிதுவம் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் மனதுள் இருந்ததொன்று.மற்றவர்கள் விலை போய்விடுவார்கள் என்று பயந்ததும்,தன்னை விட வேறொருவரை அவர் நம்பாததும் முக்கிய காரணம் .

மற்றவர்கள் தமிழீழதிற்காக போராட போனார்கள் புலிகள் தமது தலைமையில் மட்டுமே தமிழிழம் என்று போராடினார்கள்.மாற்று இயக்கங்களை எதிரியாக நினைத்தது புலிகள் ஒன்றுதான் .

- எத்தனையோ போராளிகள் எத்தனையோ துறைகளுக்கு, உயர்தர பல்கலைக்கழகங்களுக்கு சென்றார்கள்.

- க.வே. பாலகுமாரன் உட்பட்ட பல போராளிகள் முழுமையாக உள்வாங்கப்பட்டனர்

- சர்வதேச பேச்சுவார்த்தைகளுக்கு தனது சார்பில் பலரையும் வெளிநாட்டுக்கு அனுப்பினார்

- புலிகள் மட்டுமே இறுதிவரை தமிழீழம் என்று போராடினார்கள்

மிக அப்பட்டமான வரலாற்றுத் திரிபுகள்.

சக இயக்கப் படுகொலைகளை சுழிபுரத்தில் ஆரம்பித்து வைத்தது ப்லொட்.உள் இயக்க முரண்பாடுகளுக்காகப் படுகொலை சித்திரவதை எல்லாம் முதல் முதல் செய்தது ப்லொட். இது வரலாறு.

டெலோ இயக்கம் , ரோவின் வழி நடாத்துதலில் செயற்பட்டு , மற்றைய இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க இருந்த நேரம் புலிகளால் தடை செய்யப்பட்டது. மாற்று இயக்கத்தவரைக் கொல்லும் வழமை புலிகள் மட்டும் நிகழ்த்தியது அன்று எல்லா இயக்கங்களும் செய்தன.உட்படுகொலை மாற்று இயக்கத்தவனைக் கொலை செய்தல் என்பதைச் செய்யாத இயக்கம் ஒன்றும் இருக்கவில்லை. சுகன் எழுதியதை மீண்டும் வாசித்தால் அவர் இதனைத் தான் சமூக இயங்கு நிலை என்று சொல்லி இருப்பது புரியும்.இத் தகைய பிற்போக்கான ஒரு சமூக இயங்கு நிலையில் இருந்தே அனைத்து இயக்கங்களும் ஊற்றெடுத்ததன என்பது உண்மையே.இந்தச் சமூக இயங்கு நிலையை புலிகள் தமது தியாக வேள்வியின் மூலம் மாற்ற முனைந்தனர் என்பதே உண்மை.

மீண்டும் மீண்டும் புலிக காச்சல் என்னும் மிகக் கொடிய நோய் சிலரை வாட்டுகிறது.எந்த ஆரோக்கியமான விவாதமோ கருத்து நிலை சார்ந்த அரசியல் உரையாடலோ நிகழ்த்த முடியாத வெற்றுக் குடங்களுக்கு புலிகளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் தூற்றுவது மட்டுமே வாழ் நாள் பொழுது போக்கு.வெட்கமற்ற சீவன்கள்.

இன்றும் அவர்கள் விதைத்த "என்னுடன் வா அல்லது நீயும் எதிரி" என்ற மனப்பாங்கிலே தான் பலரும் செயற்பட நினைக்கின்றார்கள் .மற்றவன் கருத்து சொல்வது கூட ஏற்கமாட்டதவ்ர்களாக

ஆகிவிட்டார்கள் .

நாட்டில் கதை முடிந்துவிட்டது புலத்திலும் வெகு நாட்களில்லை.அந்த மனப்பாங்கு மாற.

நீங்களும் "என்னுடன் வா அல்லது நீயும் எதிரி" என்ற மனப்பாங்கிலே உள்ளீர்கள், அது உங்களுக்கு தெரிந்தும் தெரியாதமாதிரி உள்ளீர்கள்.

உதாரணத்திற்கு, நாட்டில் கதையை சிங்களவன் முழுமையாக முடித்துக்கொண்டு இருக்கிறான்:

- கிரீஸ் பூதம், குடியேற்றம்

- வாழ்வியலை மறுத்தல், இராணுவமயமாக்கல்

- கடத்தல், கொலை ...

மொத்தத்தில் முழுத்தமிழனையுமே 'எதிரியாக; அவன் அழித்தவண்ணம் உள்ளான். அவை பற்றி இங்கே இணைக்கப்படும்பொழுது நீங்கள் கருத்துக்களை வைப்பதில்லை.

நீங்களும் கொஞ்சம் மாறுங்களேன்!

//மற்றவர்களின் மேல் குற்றச்சாட்டை அள்ளிதெளிப்பவர்கள் அதே பிழைகளை தாமும் விட்டார்கள் //

இதைத் தானே நாமும் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிரிக்கிறோம். நீங்களும் பிழை விட்டீர்கள் ,புலிகளும் விட்டார்கள். நீங்கள் போராட்டத்தைக் கைவிடீர்கள் ,புலிகள் விடவில்லை.மக்கள் புலிகளின் பின்னால் சென்றார்கள்.

ஏன் புலிகளின் பிழைகளை மட்டும் சொல்லிச் சொல்லியே உங்கள் வாழ் நாட் பொழுதைக் கழிக்கிறீர்கள். உங்கள் பிழைகளை எப்போது திருத்தி , எப்போது சரியான வழியில் செயற்படுவீர்கள். அவை பற்றி நீங்கள் எப்போதாவது பேசியது உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

நாரதருடைய விளக்கங்களை 2009 மே க்கு முதல் எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் ஏற்றிருப்பேன். எனினும் அதன் பின்னாலுள்ள வரலாறுகளைப் பார்த்தால் ஒட்டுமொத்தப் புலியும் நந்திக்கடலினுள் மூழ்கிவிட்டதாகவே காட்டுகின்றது.

அகூதா, உங்களது வேண்டல்களைப் பார்தால் சனி, ஞாயிறுகளில் சளைக்காமல் பிரசங்கிக்க வரும் இறைதூதர்களின் நினைவுதான் வருகின்றது!

அகூதா, உங்களது வேண்டல்களைப் பார்தால் சனி, ஞாயிறுகளில் சளைக்காமல் பிரசங்கிக்க வரும் இறைதூதர்களின் நினைவுதான் வருகின்றது!

வேறுமாதிரி எழுதலாம், ஆனால் அதுக்கும் நீங்கள் இன்னொன்றை ஏளனமாக சொல்வீர்கள் இல்லை 'Report' இனை அழுத்துவீர்கள்.

விழ மாட்டோம் உங்கள் வலைகளில் :D :D

பின்குறிப்பு: முடிந்தால் கருத்தை கருத்தால் விவாதியுங்கள். களத்திற்கு சிறப்பை அது தரும், வளர்ச்சிக்கும் உதவும்.

Edited by akootha

மேலும் இனி என்ன செய்யலாம் என்று சொல்ல வருகிறீர்கள்.பரந்து பட்ட தமிழ் அடையாளத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்களா அல்லது குறுகிய பிரதேச, சாதிய அடையாளங்களின் அடிப்படைகளில் போராட்டம் முன் எடுக்கப் பட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? தலித்தியம், வடக்குக், கிழக்கு இவை எல்லாம் குறுகிய அடையாளங்கள் , இருக்கின்ற சமூகப் பிளவுகளை பாதுகாத்து போராட்டத்தை தொடர்ந்தும் சிதைவுற வைக்கக்கூடிய கருத்தாக்கங்கள்.

ஒரு பரந்து பட்ட தமிழர் ஒருங்கிணைவுக்கு எது தடையாய் இருக்கின்றது என்பதையே எனது கருத்துக்கள் கிளற முற்படுகின்றது. தற்போது வரை செயற்பாட்டில் முனைப்புக் காட்டுவோர் எல்லாம் கருத்தளவில் மற்றும் கற்பனையில் தமிழ்த்தேசியத்தை ஒரு பொதுமைப்பட்டதாக முன்வைத்து அதற்கு தலமை தாங்குவதற்கு முண்டியடித்தக்கொண்டிருக்கின்றனர். இதனால் தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடுகடந்த அரசு என்னும் நிறுவனமயமான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாற்றீடாக ஒரு புனர்வாழ்வு மனித உரிமை சார்ந்த கட்டமைப்பே சிறந்தது என்று வாதிட்டேன். அதன் பின்னரான இந்த அமைப்பு இரண்டாக உடைந்து செயற்பாடுகள் முடங்கி மிகக் குறுகிய வட்டத்துள் சுருங்கிக் கிடக்கின்றது.

என்னும் புலத்தின் தமிழ்த்தேசியத்துக்கான செயற்பாட்டை அது சார்ந்த நிகழ்வுகளுக்கு தலமை வகிப்பது என்பது போட்டி நிலையிலேயே உள்ளது. தேசியத்துக்காக மக்கள் பாடுபடுவதும் தேசியத்தை தமது தேவைகளுக்காக கையில் எடுக்க முற்படுவதும் வேறு வேறானது. இங்கே நடப்பது இரண்டாவது ரகம். இந்த நிலையை எமது இன அழிவின் மூல சூத்திரமாக நான் பார்க்கின்றேன். மேலும் இது இன்றய பிரச்சனையில்லை. புலிகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடர்கின்றது.

முன்னர் நான் எழுதிய கருத்துக்களில் ஒரு அமைப்பை நிறுவும்போது அதில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கி கட்டமைப்பை உருவாக்குங்கள். குறிப்பாக மதம் பிரதேசம் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். நீங்கள் கேட்டீர்கள் எதிரி எமது முரண்பாட்டை பயன்படுத்துவதை எவ்வாறு தடுக்கலாம் என்று. அதற்கான அடிப்படை நாம் ஏற்படுத்தும் அமைப்பின் கட்டமைப்பின் வலிமையிலேயே தங்கியுள்ளது. நாடுகடந்த அரசில் ஒரு இஸ்லாமியப் பிரதிநிதியும் இல்லை. ஆனால் தற்போது இலங்கையில் வாழும் தமிழர்களில் இஸ்லாமியத்தமிழர்களின் எண்ணிக்கை சரிபாதியாகின்றது. இதை தனியே நா க அரசுக்கு சொல்லவில்லை ஒவ்வொரு அமைப்பையும் சொல்கின்றேன்.

இவற்றின் அடிப்படையில் தமிழத் தேசியப் போரை நலிவடையச் செய்யும், எதிரியின் தயவில் செயற்படும் தனி நபர்களின் வழியா, உங்கள் வழியும்?

நாம் இலகுவாக எதிரியின் தயவு என்று கூறிவிடலாம். ஆனால் எனக்குத் தெரிந்தளவில் எம்மை முரண்படுத்துவதிலும் பிளவுபடுத்துவதிலும் எதிரி அதிக நேரத்தை செலவளிக்கத்தேவையில்லை. எதிரி புதிதாக எந்தவொரு பிளவையும் ஏற்படுத்தவில்லை ஏற்கனவே இருப்பில் இருக்கும் பிளவுகளையே அவன் பயன்படுத்துகின்றான். நாம் எதிரியை சுட்டிக்காட்டுவது என்னுமொருவகையில் எமது பிளவுகளை தக்கவைக்கவும் உதவும் என்றே கருதுகின்றேன்.

1902 ம் ஆண்டில் இருந்து தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் வந்தேறு குடிகள் பெளத்தத்தை அழிக்க வந்தவர்கள் என்று தனது இனவாதத்தை விஸ்தரித்தார் தர்மபாலா. புதிய வரலாறுகளை எழுதினார். ஆங்கிலேய அரசின் நிர்வாகத்தில் சிங்களவர் மட்டும் அங்கம் வகிப்பதை தலையாய கடமையாக நிறைவேற்ற முற்பட்டார். 1915 இல் இஸ்லாமியத் தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதல் இனவாதக் கலவரம் இது. இந்தக் கலவரத்தில் கைதுசெய்யப்பட்ட தர்மபாலாவின் இரு சகோதரர்கள் மற்றும் சிங்களத் தலைகளை பிரிட்டிஷ் அரசிடம் இருந்து விடுவிக்கப்போராடினர் ராமநாதன். இங்கே யாருக்காக ராமநாதன் போராடுகின்றாரோ அவர்களேதான் ராமநாதனைப் பார்த்து நீ வந்தேறு குடி உனக்கு இந்த நாட்டில் உரிமையில்லை என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். தமிழ் உயர்குடிகளின் அடிமைப்புத்தியும் இஸ்லாமிய விரோதமும் நாளைக்கு எமக்கும் சிங்களவர்களால் இந்தக் கதி என்பதை தெரிந்தே இருந்தது. போராட்ட காலத்தில் யு ரி எச் ஆர் என்று தமிழ்ப் புத்திஜீவிகளால் இயங்கிய மனித உரிமை அமைப்பும் இதே அடிமைத்தனத்துடன் சிங்களவர்களுக்கு வக்காலத்து வாங்கியது. இது அடிமைக்குணத்தில் உள்ள பிரச்சனை. இந்தக் குணத்தை தான் எதிரி பயன்படுத்துகின்றான். மாறவேண்டியது குணமே. நாம் சரியாய் இருந்தால் எதிரியோ இந்திய ரோவோ எப்படி எம்மை பயன்படுத்த முடியும்? நான் எங்களிடம் உள்ள பிரச்சனையை உற்றுநோக்குகின்றேன். ஏன் எமக்கு அதிக கோபம் ஏன் அதிக பிடிவாதம் ஏன் அதிக உணர்ச்சிவசப்படுதல் இது எங்கிருந்து பழக்கப்படுகின்றது. இவற்றை கண்டுபிடித்து சரிசெய்யாதவரை எம்மை எதிரி பயன்படுத்துவதில் இருந்தும் விடுபட முடியாது.

இதே சிங்களவன் எத்தனையோ சண்டைகளை வழிநடத்திய பல நூறு சிங்கள காவலர்களை கொன்ற கருணாவை நிதானமாக தனது தேவைக்காக கையாழ்கின்றான். (காரியம் முடிந்தவுடன் போட்டுத் தள்ளலாம் அது வேறு விடயம்) இந்த நிதானம் எமக்கேன் இல்லை? இப்படி எத்தனை பேரை பயன்படுத்துகின்றான் !!. ஒரு வயலில் நெல்லுக்கு நடுவில் புல்லிருந்தால் புடுங்கி வரம்பில் போட்டுவிடுதல். அவ்வளவுதான். ஆனால் நெல் எது புல் எது என்று தெரியாதளவுக்கு இருக்கும் சமூகத்தில் புல்லை புடுங்கி காலுக்குள் போட்டு கசக்கி உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். வெட்டொன்று துண்டு ரெண்டு என்னும் போக்கு எல்லாவிடத்திலும் பொருந்தாது.

  • கருத்துக்கள உறவுகள்

சுகனின் பதிவும் கோமகனின் கருத்துமே எனதானதும் ஆகும்.

மற்றவர்களின் மேல் குற்றச்சாட்டை அள்ளிதெளிப்பவர்கள் அதே பிழைகளை தாமும் விட்டார்கள் .

சிறி எந்த ஒருகாலமும் புலியில் இருக்கவில்லை ஆனால் பிரபாகரன் சிறிதுகாலம் டெலோவுடன் இணைந்து இருந்தார்,குட்டிமணியுடன் சேர்ந்து இரு கொள்ளை சம்பவங்களில் வேறு ஈடுபட்டார் .

புலி தடை செய்யமுதல் எந்த ஒரு இயக்கமும் அரசுடன் சேரவில்லை,புலிகளுடன் முரண்பட்டவர்கள் தமது உயிர்வாழ்தலுக்கு இந்தியஅரசுடனோ,இலங்கை அரசுடனோ சேர வேண்டிய கட்டாயம்.உங்கள் கதையை பார்த்தால் புலி கொல்லும் நீங்கள் சாகுங்கோ என்ற மாதிரி இருக்கு .பின்னர் புலிகளும் தமது உயிர்வாழ்தலுக்கு இலங்கை அரசுடன் சேர்ந்தனர்.

கலியாணக்கதையும் அதேபோல் தான் முடிந்தது.

புலிகள் பலம் பெற்று ஏகப்பிரநிதித்துவம் பெற்றபின் கூட அவர்கள் மாறததுதான் எம்மினத்திற்கு வந்த சாபக்ககேடு.ஏகப்பிரநிதிதுவம் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் மனதுள் இருந்ததொன்று.மற்றவர்கள் விலை போய்விடுவார்கள் என்று பயந்ததும்,தன்னை விட வேறொருவரை அவர் நம்பாததும் முக்கிய காரணம் .

மற்றவர்கள் தமிழீழதிற்காக போராட போனார்கள் புலிகள் தமது தலைமையில் மட்டுமே தமிழிழம் என்று போராடினார்கள்.மாற்று இயக்கங்களை எதிரியாக நினைத்தது புலிகள் ஒன்றுதான் .

இன்றும் அவர்கள் விதைத்த "என்னுடன் வா அல்லது நீயும் எதிரி" என்ற மனப்பாங்கிலே தான் பலரும் செயற்பட நினைக்கின்றார்கள் .மற்றவன் கருத்து சொல்வது கூட ஏற்கமாட்டதவ்ர்களாக

ஆகிவிட்டார்கள் .

நாட்டில் கதை முடிந்துவிட்டது புலத்திலும் வெகு நாட்களில்லை.அந்த மனப்பாங்கு மாற.

மேல எழுதியது சுகன் அவர்களுடைய மற்று கருத்துக்கான இன்னொரு பார்வை.

அதை வந்திகளுக்கான பதிலாக எடுப்பதும் சுகனுடைய பார்வையை வாந்திக்கு வக்கலத்தாக மாற்றுவதும் ஏற்புடையதல்ல. பிரபாகரன் டேலோவில் இருந்தாரா? தெரியவே இல்லை முன்பு இலக்கு ஒன்றாக இருந்தது ஒன்றாக பயணம் போகவும் முடிந்தது. வெலிக்கடை சிறை மீது ஒரு தாக்குதலை தொடுத்து குட்டிமணியும் மற்றவரையும் காப்பாற்ற சிறியும் பிரபாகரனும் பல திட்டம் தீட்டியும் ஒன்றும் கைகூடவில்லை. ஆனால் தனது இயக்கத்தில் இருந்த தாசை சுட்டுக்கொள்ள சிறியால் முடிந்தது. காவடியை எடுத்து ஆட தொடங்கும்போது விலை தெரியவில்லை........

பின்பு பழியை புலிமீது போட்டுக்கொள்ள மட்டும் நல்ல தெரிகின்றது.

அண்ணாச்சி நாங்களும் ஈழத்தில இருந்துதான் வந்தனாங்கள் இந்த பாராட்ட கொத்து ரொட்டியை எதாவது இந்திய தளங்களில் போட்டுபருங்கள் விலைபோகலம். இஞ்ச டைம் வேஸ்ட்.

புலி தன்னை காப்பாற்ற இலங்கையிடம் போனதா? அழிய இருந்த புலியை சிங்களவன் பாதுகாத்து காப்பாற்றினான? இதை விட மகாவம்சம் பெட்டெர்.

மோதல் தொடங்கிய நாட்களில் சில கசப்பான சம்பவங்கள் நடந்தவை என்பதை யாரும் மறுக்கவில்லை என்பதை விட அதற்கு புலிகளும் வருந்தினார்கள் என்பதுதான் உண்மை. தென்மராட்சி பொறுப்பாக இருந்த அங்கிள் என்னையும் சும்மா அடித்து ஒருநாள் பிடித்தும் வைத்திருந்தார்கள். அது அவர்களுடைய வாழ்வையும் விட ஈழம் என்ற இலக்கு ஒரு நுலில் தொங்கிய நேரம். ஈழத்தின் வரலாறே தலைகீழாக மாற இருந்த தருணம் ஆயுத போராட்டம் அழிந்து சிங்களவன் எந்த போரும் இன்றி தமிழனை கொல்ல இருந்த தருணம். எந்த பலமும் இன்றி சும்மா பூச்சாண்டி காட்டியே புலிகள் தமது இருப்பை தக்கவைத்தார்கள். ஆள் தொகை கூடியது ஈப்பி ஆயுத பலம் கூடியது டெலோ சீக்கிய போத்கொவில்லிலே கைப்பற்றிய ak எல்லாம் டேலோவிடமே இந்தியா கொடுத்திருந்தது. புலிகளிடம் ஐந்து பேருக்கு ஒரு ak கூட இருக்கவில்லை. ஆள் தொகையையும் ஆயுத தொகையையும் தூரோகத்தையும் அறிவும் உண்மையும் வென்றது என்பதே உண்மை. ( இதற்குள் plot என்று ஒன்று அதை மக்களே கணக்கெடுப்பதில்லை புலிகள் எடுத்திருப்பார்கள?)

எல்லோரையும் புலிகள் பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்தார்கள் டெலோ முக்கிய பல பேரை தமது வண்டியிலே ஏற்றி தமிழ்நாட்டில் இறக்கிவிட்டார்கள். ஈப்பி யில் ஐயோ பாவம் பல சிரங்கும் சொரியும் ஆகா ற்றைன்னிங் எட்டுத்து முழங்கை எல்லாம் காதோடு இருந்தார்கள் இவர்கள் தமது வீடுகளுக்கு போவதானால் ஆனைறவை கடந்தே போகவேண்டும் ஆமிடம் சிக்கிவிடுவார்கள் எப்படி போனார்கள் என்பதை நன்றி உடைய யாராவது இருந்தால் கேட்டுபாருங்கள் . புலிகளை பற்றி அவர்கள் சொல்லுவார்கள்.

மற்றய படி உங்கள் பாராட்ட நல்லம் கொஞ்சம் உறைப்பு கானது அடுத்தமுறை கவனம் எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா, தமிழர்களாகிய நாம் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளத் தொடர்ந்தும் போராடவேண்டும் என்பது தெரிந்ததுதான். ஆனால் இதுவரை நடந்தவற்றில் இருந்து பாடங்களைக் கற்காமல் சும்மா போராடவேண்டும் என்பதற்காக போராட வெளிக்கிட்டால் (ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை மட்டுமே குறிக்கின்றேன்) தொடர்ந்தும் இப்படியே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கலாம்.

போர்க்குற்றங்களை ஆவணப்படுத்துவது முக்கியவேலைதான். இதன்மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று தமிழர்கள் விரும்புகின்றார்கள். அதற்கு மேல் குற்றவாளிகளை தமது தலைவர்களாகவும் இரட்சகர்களாகவும் நம்பும் சிங்களவர்களின் மனதை மாற்றவேண்டும் என்பதும் முக்கியம். இல்லாவிடில் சிங்கள மக்களின் ஆதரவு மகிந்த போன்றவர்களுக்குத் தொடர்ந்தும் இருக்கவே செய்யும். அதன் காரணமாக சர்வதேசமும் (ஐ.நா. உம்) இலங்கையரசுடன் ஒரு தளர்வான போக்கையே காட்டும். இதைத்தான் சனல்-4 வெளியிட்ட கொலைக்களம் ஆவணப்படத்தின் பின்னரான நாட்கள் சொல்கின்றது. தற்போது கூட உலகத் தமிழர் அவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்ததன் மூலம் இந்தியா தமிழருக்கு சொல்லும் செய்தி மிகவும் எளிமையானது.

அதாவது நடந்த கசப்பான அனுபவங்களைப் புறந்தள்ளி தமிழர்களும் சிங்களவர்களும் தமக்கிடையேயான பேதங்களை மறந்து, நட்புறவை வளர்த்து தென்னாபிரிக்கா போன்று பிரிந்துபட்ட இனங்கள் ஒன்றானது மாதிரி ஒற்றுமைப்பட்ட இலங்கையை உருவாக்கவேண்டும் என்பதைத்தான் இந்தியா விரும்புகின்றது.

இந்தியாவின் விருப்பத்திற்கு ஒத்துழைக்காதவர்களுக்கு நெருக்குவாரத்தைக் கொடுக்கின்றது. பல வழிகளிலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்குள் ஊடுருவி தமிழர்களின் தேசியப் போராட்டத்தை நலிவுறச் செய்கின்றது. ஏற்கனவே பதவி, அதிகாரப் போட்டிகளில் சிக்குப்பட்டுள்ள தமிழர்களையே பிளவுகள் உருவாக்குவது கடினமான காரியம் இல்லைத்தானே.

ஆகவேதான் நாம் முதலில் நமது தளத்தை சரியாக ஆராயவேண்டும். இல்லாவிடின் எதிர்காலத்தில் மீண்டும் ஒருதடவை இந்த இடத்திற்கு வந்து நிற்கவேண்டு வரும். அப்போது தமிழர்கள் இலங்கையில் இருப்பதே கேள்விக்குறியாக இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் இந்த காணொளியை இணைத்தற்கு கொஞ்ம் பயன் இருக்கின்றது என நினைக்கிறேன். அடுத்ததாக சுகனின் கருத்துக்கள் உண்மையானவை அனைத்து இயக்கங்களுமே தவறுகள் விட்டிருக்கின்றன. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற நினைப்பிலேயே பொதுவாக எல்லா இயக்கங்களும் நடந்திருக்கிறார்கள். அதே நேரம் அர்ஜீன் சொல்வது போல புலிகள் தான் மற்றைய இயக்கங்களை முதலில் அழிக்க முற்பட்டது என்பது போலவும் அதனால்தான் அவர்களிற்கு வேறு வழியில்லாமல் எதிரியுடன் இணைந்தார்கள் என்பது தவறானது. புலிகள் இயக்கத்தினை முதலில் ஒழிப்பதற்கு அல்லது ஒடுக்குவதற்கு புளொட் அதிகளவு முயற்சி செய்தது. 84 களில் புளொட்டின் உறுப்பினர்கள் அதிகம். அவர்கள் யாராவது புலி அமைப்பை சேர்ந்தவர் எண்டு தெரிந்தாலே கலைத்து கலைத்து அடிப்பார்கள். நான்கூட அடிவாங்கியிருக்கிறேன் புளொட்டிடம்;அதன் உச்சம் தான் சுழிபுரம் கொலைகள்.

அடுத்ததாக ரெலோ யாரை யார் கை முந்துவது என்கிற போட்டி நடந்தது தாஸ் குழுவினர் ஒரு இரவு இரவுக்காவலில் வீதியில் இரவுக் காவலில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பினர் 3 பேரை மருதனாமடம் சந்தியில் சுட்டுக் கொன்றனர். அதற்கு பின்னர் சண்டிலிப்பாய் கல்வளையில் அமைந்திருந்த ரெலோ முகாமில் இரண்டு புலி உறுப்பினர்களை கைது செய்ய முற்பட்டனர் தகராறு ஆகி இரண்டு புலி உறுப்பினர்களும் கைக்குண்டை கழற்றி கையில் வைத்து வெடிக்கவைக்கப் போகிறோம் என்று விட்டு கிட்டுவிற்கு செய்தியனுப்பிய பொழுது கிட்டு சொன்ன விடயம் சரணடையுங்கள் நான் உங்களை வெளியிலை எடுக்கிறன் எண்டதுதான். (அந்த இருவரில் நான் ஒருவன்) பின்னர் கிட்டுவே நேரடியாக வந்து கதைத்து எடுத்தார் அதன் பின்னர் ஒரு கிழைமையில் தாஸ் ரெலோவினாலேயே கொல்லப்பட்டார். பின்னர்தான் முரளி காக்கா வை ரெலோ கைது செய்ததை தொடர்ந்து புலிகள் ரெலோ சண்டை தொடங்கியத

இறுதியாக கருணா விடையம். கருணாவின் பிரிவின் போது ஆரம்பகால கோரிக்கைகள் நியாயமானதுதான் காரணம் வட கிழக்கில் சாதி மதத்தினை ஒழிப்தற்காக பாடுபட்ட புலிகள் இயக்கத்தால் புலிகள் இயக்கத்திலேயே பிரதேச பிரிவை ஒழிக்கமுடியாமல் போனது சோகமானது காரணம் புலிகளின் ஆரம்பத்திலிருந்தே யாழ் வன்னி என்கிற பிரச்சனை இருந்தது இதனை யாரும் மறுக்க முடியாது அதன் ஆரம்பம்தான் மாத்தையா கிட்டு மோதல். அது காலப்போக்கில். வன்னி கிழக்கு ஆகிப்போனது. இந்த பிரிவு முதலாவது ஆனையிறவுச்சமரில் வெளியாகிருந்தது.(ஆகாய வெளிச்சமர்) ஆனாலும் அது அமத்தி வாசிக்கப்பட்டதால் தொடரந்தது . இல்லாவிட்டால் அந்த சமரிலேயே ஆனையிறவு கைப்பற்றபப் பட்டிருக்கும். ஆனால் கருணாவின் கோரிக்கைகளின் நியாயத்தை வைத்து பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டி சமரசத்திற்கான பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த காலத்திலேயே கருணாவும் பிரதேசவாதத்தை கையில் எடுத்தது தவறானது

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் "என்னுடன் வா அல்லது நீயும் எதிரி" என்ற மனப்பாங்கிலே உள்ளீர்கள், அது உங்களுக்கு தெரிந்தும் தெரியாதமாதிரி உள்ளீர்கள்.

உதாரணத்திற்கு, நாட்டில் கதையை சிங்களவன் முழுமையாக முடித்துக்கொண்டு இருக்கிறான்:

- கிரீஸ் பூதம், குடியேற்றம்

- வாழ்வியலை மறுத்தல், இராணுவமயமாக்கல்

- கடத்தல், கொலை ...

மொத்தத்தில் முழுத்தமிழனையுமே 'எதிரியாக; அவன் அழித்தவண்ணம் உள்ளான். அவை பற்றி இங்கே இணைக்கப்படும்பொழுது நீங்கள் கருத்துக்களை வைப்பதில்லை.

நீங்களும் கொஞ்சம் மாறுங்களேன்!

அகூதா,

இங்கே இரண்டு பக்கம் உண்டு, இந்த மாதிரி செய்திகள் வரும் போது, சிலர் வலுக்கடாயமாக புலிகள் இல்லாத படியால் தான் இப்படி நடக்கிறது என்றோ, அல்லது இதை ஏன் அங்குள்ள அல்லது இங்குள்ள "மாற்றுக்கருத்தாளர்கள்" தடுக்க கூடாதோ என்கிறமாதிதான் எழுதுவார்கள். எங்களுக்கு வந்த துன்பம் எதிரியால் அல்ல துரோகியால் என்று கட்ட முனைவார்கள். முன்பு ஒரு பதிவில் போட்டிருந்தேன், ராணுவம், மல்லாவிய பிடித்தது, கிளிநொச்சியை பிடித்தது என்கிற செய்திக்கு கொடுக்கிற முக்கியத்துவம்- மட்டக்களப்பில் 2 துணை ராணுவ வீரர்கள் பதுக்கித்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என்கிற செய்திக்கும் கொடுக்கப்பட்டது. இது ஒரு வகையில் ஒருவித புளகன்திதத்தை கொடுத்தது, நாங்களும் எதோ வெல்லுகிறோம் என்கிற மனப்பான்மையை கொடுத்தாலும் நீண்ட பயணத்தில் ஏதேனும் விளைவு இருந்ததா என தேடித்தான் பர்ர்க்க வேண்டும்.

இந்த துரோகி தியாகி விளையாட்டுகளுக்குள் நாங்கள் சுழண்டு சுழண்டு சில்லுகள் கழண்டு விழுந்தால் பிறகும், அதை வைத்துதான் அடுத்த கட்டம் என்றால் இப்ப இருக்கிற 10 - 15 ம் இன்னும் குறையும்.

இன்னுமொன்று, எனக்கு தெரிந்த சிலருக்கும் இந்த மாதிரி 2 மாவீரர் தின விடயம் வந்திருக்குது, இப்படியே போனால் நல்லது ஒன்று வாக்கிய பஞ்சங்கப்படி, மற்றது திருக்கணிதப்படி என்று 2 ஆக கொண்டாடுவது நல்லம். இவர்களில் யாருக்கு தியாகி, துரோகி பட்டம் கொடுப்பதை விட. -

அதை தவிர என் இதை சாத்தியார் இணைத்தாரோ தெரியாது, மற்றது இதைப்பக்க- உந்த வீடியோவை பார்க்க எதோ களவுக்கு போற ஆக்கள் கூடிகதைகிற மாதிரித்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பின்னர் புலிகளும் தமது உயிர்வாழ்தலுக்கு இலங்கை அரசுடன் சேர்ந்தனர்.

கலியாணக்கதையும் அதேபோல் தான் முடிந்தது.

புலிகள் பலம் பெற்று ஏகப்பிரநிதித்துவம் பெற்றபின் கூட அவர்கள் மாறததுதான் எம்மினத்திற்கு வந்த சாபக்ககேடு.ஏகப்பிரநிதிதுவம் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் மனதுள் இருந்ததொன்று.மற்றவர்கள் விலை போய்விடுவார்கள் என்று பயந்ததும்,தன்னை விட வேறொருவரை அவர் நம்பாததும் முக்கிய காரணம் .

மற்றவர்கள் தமிழீழதிற்காக போராட போனார்கள் புலிகள் தமது தலைமையில் மட்டுமே தமிழிழம் என்று போராடினார்கள்.மாற்று இயக்கங்களை எதிரியாக நினைத்தது புலிகள் ஒன்றுதான் .

இன்றும் அவர்கள் விதைத்த "என்னுடன் வா அல்லது நீயும் எதிரி" என்ற மனப்பாங்கிலே தான் பலரும் செயற்பட நினைக்கின்றார்கள் .மற்றவன் கருத்து சொல்வது கூட ஏற்கமாட்டதவ்ர்களாக

ஆகிவிட்டார்கள் .

நாட்டில் கதை முடிந்துவிட்டது புலத்திலும் வெகு நாட்களில்லை.அந்த மனப்பாங்கு மாற.

புளொட்டின் கொடூரமான அணுகுமுறைகளை விட.. புலிகளின் நிதானமான அணுகுமுறைகள் மேலானவை.

விடுதலைப் புலிகள் 1987 ஒக்டோபரில் இந்தியப் படைகளோடு மோதத் தொடங்கியது பிரேமதாவின் தயவில் அல்ல. புலிகள் உயிர் வாழ்ந்தலுக்காக அல்ல.. பிரேமதாசவோடு சேர்ந்தது. ஜே வி பி மீதான தனது கவனத்தை முற்றாக திருப்ப.. சிங்களத்திற்கு புலிகளை அரவணைக்க வேண்டிய சூழல் இருந்தது. பலம் பொருந்திய இந்தியப் படைகளை நாட்டை விட்டு விரட்ட சிங்களமும்.. தமிழ் மக்களும் விரும்பிய சமயத்தில்.. புலிகளின் நகர்வு மக்களின் விருப்பை நோக்கியதாக அன்று இருந்தது. புளொட் உட்பட அனைத்து தேச விரோத சக்திகளின் செயற்பாடும் மக்களின் விருப்புக்கு மாறாக இருந்தது.

இலங்கைத் தீவில் சரிந்து கொண்டிருந்த.. இந்திய வல்லாதிக்கத்தின் நன்மதிப்பை காக்க.. மாலைதீவை இந்திய றோவின் திட்டத்திற்கு அமைய கைப்பற்றி.. சர்வதேச அரங்கில் இந்தியா இந்து சமுத்திரத்தின் பிரதான சக்தி என்று காட்ட எஜமானர்களின் எடுபிடிகளாக உழைத்து அழிந்தது புளொட். சொந்த மக்களுக்காகக் கூட சிங்களப் படைகளுக்கு எதிராக.. புளொட் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தது கிடையாது.

இந்தச் சூழ்நிலையில் பதவிக்கு வந்த முன்னாள் இந்தியப் பிரதமர் வி பி சிங் மக்கள் விரும்பாத இடத்தில் பெரும் பொருட் சொலவோடு.. இழப்புக்களோடு.. படைகளை நிறுத்தி வைத்திருக்க விரும்பவில்லை. இந்தியப் படைகள் வாபஸாக.. சிறீலங்காவில் ஜே வி பியின் கதை அரைகுறையாக முடிய.. மீண்டும் சிங்கள வேதாளம்.. முருக்கை மரத்தில் ஏறத் தொடங்க.. புலிகள்.. முந்திக் கொண்டார்கள்..!

விடுதலைப்புலிகள் ஏக பிரதிநிதித்துவக் கொள்கையை சிறீலங்காவுடனான பேச்சுக் களத்தில் பாவித்தார்களே அன்றி அரசியல் களத்தில் அல்ல. நியாயமான தமிழ் மக்கள் மீது தார்மீக அக்கறை கொண்டு செயற்பட்ட அனைத்து அரசியல் தலைமைகளையும்.. சிங்களமாகட்டும்.. முஸ்லீம் ஆகட்டும்.. தமிழாகட்டும்.. புலிகள் அரவணைத்தே வந்துள்ளனர். சிறீலங்காவோடு வலுவான ஒரு பிரதிதித்துவத்தோடு ஒரே தலைமையின் கீழ் தமிழ் மக்கள் பிரச்சனைகளை சர்வதேசம் நோக்க வைப்பது.. தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி சர்வதேச அழுத்ததை அதிகரிக்கச் செய்யலாம் என்பதே புலிகளின் ஏக பிரதிநிதித்துவத்தின் நோக்கமாக இருந்ததே அன்றி.. ஒட்டுக்குழுக்கள்.. கருணா கனவு கண்டது போல.. பிரபாகரன்.. தான் மன்னனாக வேண்டும் என்பது அல்ல.. அதன் அர்த்தம்..!

உங்களை போன்றவர்கள்.. சொல்லும் கருத்தை கொண்ட புளொட் போன்ற ஒட்டுக்குழு அமைப்புக்களோடு.. இணக்கப்பாடுகளை எட்ட.. தலைவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்று நினைச்சுப் பார்க்கிறப்போ.. அவரின் அசாத்தியப் பொறுமை கண்டு வியக்கவே முடிகிறது..!

இங்கு சிலர் 100% கருத்தியல் உடன்பாடோடு.. தமிழர்கள் போராடினால் நல்லது என்று கனவு கண்டு கருத்தெழுதிக் கொண்டிருக்கினம். அது தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல.. எங்கும் சாத்தியமில்லை.

ஒரு அரசியல் வேலைத்திட்டத்திற்காக இளம்பரிதி அண்ணாவை சந்தித்த போது.. நாங்கள் ஒட்டுக்குழு ஒட்டுக்குழு என்று கதைக்கிறமே.. ஏன் அவர்களை எமது இலக்கு நோக்கி கொண்டு வர முடியாது உள்ளதென்று கேட்க.. அவர் சொன்னது.. அவர்களின் இலக்கு தமிழ் மக்களினதை ஒத்ததாக இருந்தால்.. நாங்களே கேட்கத் தேவையில்லை அவர்களாகவே எம்மை நோக்கி வைத்திருப்பார்கள் என்று.

இன்னொன்றையும் சொன்னார்.. ஒட்டுக்குழுக்களை முதன்மைப்படுத்துவதை நிறுத்துவது கூட.. அவர்கள் மக்கள் பொது விருப்பை நோக்கி வர அனுமதிக்கலாம் என்று. மக்களில் 20,000 புலிப் போராளிகளாக இருந்த இடத்தில் 5,000 பேரே ஒட்டுக்குழுக்களே மொத்தமாக இருந்தனர். 20,000 பேரின் பொதுக்கருத்துக்கு முதன்மை அளிப்பது அவசியமா.. 5,000 பேரின் பிறழ்வைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது அவசியமா என்று ஒரு பதில் கேள்வியை இளம்பரிதி அண்ணா கேட்டார். அதற்கு பலராலும் பதிலளிக்க முடியவில்லை. சிறீலங்காவின் ஜனாதிபதி சந்திரிக்கா.. கூட... 62% வாக்குகளே பெற்றுள்ளார். மிகுதி 38% பேர் அவரை எதிர்ப்பதற்காக.. அவர் ஜனாதிபதியாக முடியாது இருக்க முடியுமா என்றார்.

ஆக.. மனித சனத்தொகையிடம்.. 100% உடன்பாட்டை எட்டுவது என்பது இலகுவான காரியம் அல்ல. அந்த வகையில்.. ஒட்டுக்குழுக்களை ஒட்டுக்குழுக்களுக்கான நிகழ்ச்சி நிரலின் கீழ் அணுகுவதோடு.. பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடுகளோடு ஒட்டி.. பிரதான அரசியல்.. இராஜதந்திர.. சமூக.. பொருண்மிய திட்டங்கள் அமைக்கப்படுவதே இன்றைய தேவை.

கருணா.. 500 பேரோடு போய் முள்ளிவாய்க்காலில்.. புலிகளை அழித்தார் என்பது.. ஒரு அபரிமிதமான தோற்றப்பாடு மட்டுமன்றி.. கருணா பற்றிய பிரமாண்டமான விம்பத்தை தோற்றுவிக்கும் ஒரு ஊடக தந்திரமும் அதில் அடங்கி இருக்கிறது. கருணா சிங்களவனுக்கு உதவி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்பதைச் சொல்வதற்கான தெளிவான ஆதாரங்களை சேர்ப்பது அவசியம். ஆனால் அதேவேளை.. முள்ளிவாய்க்காலின் முழுமையான நிகழ்ச்சித் திட்டத்துக்குள் நின்று கொண்டிருந்த.. பிராந்திய.. சர்வதேச சக்திகளின் நடவடிக்கைகளே கருணாவையும் ஒரு காரணியாகப் பாவிக்க சிறீலங்காவைத் தூண்டின.. என்பது வெளிப்படை யதார்த்தமாகும்.

இவை எல்லாம்.. குறுந்தேசியம்.. பிரபாகரனியம்.. போன்ற பதங்களால் மூடி மறைக்கப்பட்டு.. ஏதோ உலகில்.. தமிழர்களுக்குள் தான் பிளவு.. இருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி.. தமிழ் மக்களின் கோரிக்கைகளின் நியாயத்தைப் பலவீனப்படுத்த நினைக்கிறார்கள் எதிரிகள். அவர்களுக்கு ஒத்தூத யாழ் களத்திலும் வல்லுனர்கள் இருக்கினம்..!

உலகின் பெரிய ஜனநாயக தேசமான அமெரிக்காவில் கூட மக்கள் 100% ஒரு பொதுக்கருத்தடிப்படையில் இணைக்கிச் செயற்படுவதாக இல்லை. பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடே.. முக்கியமான அரசியல்.. கருதுகோள்களாகின்றன.

ஒரு கருத்துக்களத்தில்.. கொலை என்ற ஒற்றைச் சம்பவம் கூட.. பெரிய தோற்றத்தைத் தரவல்லது. ஆனால் அதுவே.. ஒரு சனத்தொகையின் நாளாந்த இறப்புக்களோடு ஒப்பிடும் போது இலகுவாக மக்களால் புறக்கணிக்கப்படுகிறது. சில விடயங்களை நாம் அப்படி அணுகினால் அன்றி.. இடியப்பச் சிக்கல்களை விடுவித்து தெளிவான வழிகளைக் கண்டறிய முடியாது.

நாம் இடியப்பச் சிக்கலில் சிக்கி இருப்பதை விரும்பும் சக்திகள் எமக்குள்.. பல பலவீனங்கள்.. அவற்றில் இருந்து நாம் மீள முடியாது என்று நிறுவி எம்மை அதில் இருந்து வெளிவரவே முடியாமல் செய்து.. எமது பெரும்பான்மை விருப்பை சிறுபான்மை விருப்பாக்கி.. தங்கள் இலக்குகளை எதிரிகளோடு சேர்ந்து எட்டிக் கொள்வார்கள்.

இது விடயத்தில் யாழ் கள உறவுகள் மட்டுமன்றி.. அனைத்துத் தமிழ் மக்களும் ஒரு தெளிவோடு இருந்து செயற்படுவது அவசியம்.

சாதியம்.. ஊதியம்... இன்று எமக்கான ஒரு பிரச்சனையே அல்ல. கருணா இன்று எமக்கான ஒரு அரசியல் சக்தியும் அல்ல. அவர் போர்க்குற்றத்தை புரிந்த ஒரு அரசின் போர்க்குற்றப் பங்காளி. அதில் நாம் தெளிவாக இருந்து கொண்டு.. அதை வெளி உலகிற்கு நிறுவ முயல வேண்டுமே தவிர.. கருணா பிளவால்.. புலி அழிவு என்று படம் காட்ட விரும்புகிறவர்கள் வழியில் எடுபட்டுப் போய்க்கொண்டிருப்பதே.. எமது பெரும்பான்மைக் கருத்தை சிறுபான்மை ஆக்கி.. எமது இன அழிவை... செய்தவனை காப்பாற்றி விடும்.

அதற்காக இங்கு பலர் பல கருத்துக்களை முன் வைத்து மக்களை ஒரு மயக்க சூழலுக்குள் தள்ளி விட முனைவார்கள். ஆனால் மக்கள் இவர்களின் கருத்துக்களுக்குள் ஒளிந்திருக்கும்.. உண்மைகளை ஆராய்ந்து அறிந்து செயற்படுதலே இன்றை காலக் கட்டத்தில் அவசியமான ஒன்று.

மக்களே தீர்மானிக்கின்ற சக்திகள்..! எவரும் கருத்துச் சொல்லலாம். ஆனால் மக்கள் மீது அவற்றை திணிக்க முடியாது..! இன்றும் பெரும்பான்மை மக்கள்... புலிகளே தங்களின் கருத்துக்களோடு நின்ற தம் குழந்தைகள் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். இதனை நாம் உலகறியச் செய்து.. புலிகள் மீது குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையையும் துடைத்தழிக்க வேண்டிய கடமைப்பாடும்.. கடப்பாடும் நமக்கு உண்டு. அதைச் செய்ய நாம் தொடர்ந்து விழிப்புணர்வோடு இருந்து செயற்படுதல் அவசியம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகாலத்திற்குப்பின்னர் யாழ்க்கருத்துக்களத்தில் ஒருஆரோக்கியமான் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சளைக்காத கேள்விகளோடு நாரதரும் , சலனமில்லாத தெளிவோடு சுகனும் உரையாடலில் ஈடுபடுவது மட்டுமில்லாமல் இருவரும் எம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறார்கள். அத்தோடு கிருபனின் கருத்தும்... அகூதாவின்பொறுமையும் தொடரட்டும். :rolleyes:

வொல்கேனோ,

நன்றி உங்கள் கருத்திற்கு.

என்னைப்பொறுத்தவரையில் இன்று தாயக மக்கள் ஒரு இரும்பு பிடிக்குள் உள்ளனர். அவர்கள் அது

புலிகளால் வந்ததா இல்லை பிரதேச வந்ததால் இல்லையா என ஆராயும் நிலையில் இல்லை. அவர்களை அந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க புலம்பெயர் சமூகத்தால் முடியும். அதேவேளை அதற்காக எல்லோரும் அதை ஏற்று ஒரே புள்ளியில் இருந்துதான் தொடங்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. சரியானதை செய்யும்பொழுது மக்கள் அவர்களை இனம்கண்டு ஆதரவு வழங்கும் திறமை உள்ளது.

அந்தவகையில் இன்று எமது கையில் உள்ள ஆயுதம் போர்க்குற்றம். அதை இந்தியாவோ இல்லை யாரும் சொன்னாலும் விட முடியாது, விடக்கூடாது - ஒரு தீர்வு ஐ.நா. ஊடாக கிடைக்கும்வரை.

இங்கு நான் இந்த காணொளியை இணைத்தற்கு கொஞ்ம் பயன் இருக்கின்றது என நினைக்கிறேன்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொழுது கருணா குழுவினர் வெறும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மாத்திரம் தான் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்று கருணா என்று அழைக்கப்படும் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளில் கருணா குழவினர் நேரடியாக இராணுவ ரீதியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்காக இந்த காணொளியை இங்கு இணைத்திருக்கிறோம்.

இங்கே உண்மையில் விவாதிக்கப்படவேண்டியது 'மனித உரிமைகள்' என்ற பெயரில் சிங்களமும் அதன் துணைப்படைகளும் செய்த மனிதபடுகொலைகளை.

அப்படி செய்த ஒருவரை, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாத ஒருவரை, அமைச்சராக வைத்திருக்கும் அரசை பற்றி.

ஒட்டு மொத்த தமிழனுக்கும் கோபம் வரவேண்டியது சிங்களவன் மேலே.

அதை ஒருவர் என்றாலும் கூடுதலாக உணர்ந்தால், பயன் உள்ளது :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.