Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசரனை சந்தித்தேன்

Featured Replies

visaran.jpg

லண்டனில் இன்று தமிழ் புத்தக சந்தை ஒன்று நடைபெற்றது .நல்ல முயற்சி என்று நினைத்து நானும் எனது வலைபதிவில் அது பற்றிய விபரம் போட்டிருந்தேன்.காலை பத்துமணியிலிருந்து இரவு 7 மணிவரையும் நிகழ்வு என்று அறிவித்திருந்தார்கள்.எனது எதிர்பார்ப்பு பிழையோ தெரியாது அப்படி எதிர்ப்பாத்து போன அளவுக்கு அங்கு புத்தங்கள் பார்வைக்கோ விற்பனைக்கோ வைக்கப்பட்டிருக்கவில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

அங்கு நின்ற சிலர் எனக்கு இணையத்தில் அல்லது தொலைக் காட்சியில் பார்த்த முகங்கள் தான் என்று தென்பட்டாலும் அவர்கள் யார் யார் என்று உடனடியாக அனுமானத்துக்கு வர முடியவில்லை .அங்கு நின்ற சிலர் வலிந்து வந்து என்னை யார் என்று அறிமுக படுத்து படி கேட்டார்கள்..நானும் சும்மா இப்படித்தான் வலைபதிவு என்று சொல்லுவாங்களே அதிலை எழுதிறனான் , சின்னக்குட்டி என்ற புனைப்பெயர் இருக்கு .என்று கூறினேன்...நாங்களும் இணையம் பார்க்கிறனான்கள் அப்படி உங்களை தெரிந்ததாக ஞாபகம் வரவில்லை என்றார்கள்.

இப்படி பேசி கொண்டு இருக்கும் பொழுது இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த நூலகர் செல்வராசா அவர்கள் நீங்களா சின்னக்குட்டி? காலமை ஒருவர் வந்து உங்களுடைய வலை பதிவில் இந்த நிகழ்ச்சியை பற்றி பார்த்து வந்ததாக கூறினார் மிக்க சந்தோசம் என்றார்..அங்கே ஆளவந்தான் ஸ்டைலில் முழு மொட்டையுடன் ஒரு சிலருடன் பேசி கொண்டிருந்தார் ஒருவர்.அவரை எங்கையோ நெருக்க மாக பார்த்திருக்கிறேன் என்று எனது மூளை சொல்லி கொண்டிருந்தது, எங்கை என்று மொழி பெயர்க்க மறுத்து கொண்டிருந்தது.என்க்கென்னவோ அவர் நோர்வே இலிருந்து வந்திருக்க வேணும் மாதிரி என்று பட்டுது ஏனோ தெரியவில்லை .அவர் அருகில் போய் நீங்கள் நோர்வேயிலிருந்தா வந்திருக்கிறீர்களா என்று கேட்டேன் ,

vffddddd.jpg

,,ஓம் என்று சொன்னார்...எனக்கே ஆச்சரியமாய் இருந்தது எப்படி எல்லாம் அனுமானிக்கிறேன் என்று என்னையே புகழ்ந்து கொண்டிருந்த பொழுது ..நீங்கள் சரவணன் தானே என்று கேட்டேன் ...நான் சரவணன் இல்லை எனக்கு சரவணனையும் தெரியும் என்றார் . நானும் விடுவதாய் இல்லை ஏன் என்றால் இந்த வலை பதிவுலத்தில் எங்கேயோ தான் இவரை சந்தித்து இருக்கிறன் என்று எனது உள் மனது தொடர்ந்து சொல்லி கொண்டிருந்தது.அதனால் திரும்ப கேட்டேன் நீங்கள் இந்த வலை பதிவுகளிலை தலை காட்டுறனீங்களோ என்று கேட்டேன் ..ஓம் என்று மகிழ்வுடன் கூறீனார் ,என்ன பெயர் என்று கூற முடியுமோ என்று கேட்டேன் ..சஞ்சயன் என்றார் ...எனது முக பாவம் அவருக்கு அப்படி என்ற பெயரை கேள்வி பட்டது இல்லை என்றது போல் பாவனை செய்திருக்க வேணும் ...தன்னை சுதாகரித்து கொண்டு விசரனை தெரியுமோ என்றார் (சாதாரணமானவனின் மனது என்ற தலைப்பில் எழுதும வலைபதிவர்அவர்)..தெரியுமாவது உங்கள் எழுத்துக்கு ரசிகன் நான் என்று கூறினேன் ...அப்ப தாங்கள் யாரோ என்று கேட்டார் .....ஏற்கனவே பலர் சின்னக்குட்டி யார் என்று தெரியாது என்று கூறிய அனுபவத்தால் ..தயங்கிய படி தான் கூறினேன் சின்னக்குட்டி என்ற வலை பதிவர் நான் தெரியுமா என்று ? நல்லாய் தெரியுமே என்றார் ஒரு சந்தோச குறியோடு. கொஞ்சம் நேரம் பின்பு எனக்கு முன்பே தெரிந்த சபேசன் வந்திருந்தார் அவர் கவிஞர் இலக்கியவாதி மனித உரிமை ஆர்வலர் என்று அவருக்கு அப்படி பல அடை மொழி பின்னால் இடலாம் .. அவருக்கு அங்கு இருந்த எழுத்தாளர் இலக்கியவாதிகளை தெரிந்து இருந்ததால் ..அவரை சுற்றி நிறைய கூட்டம் அளவளவாகி கொண்டிருந்தது. அதிலும் நான் கொஞ்சம் நேரம் நின்றிருந்தேன். தீப்ம் தொலைக் காட்சி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான அனஸ் இவரை முன் பார்த்ததில்லை இவர் யார் என சபேசனிடம் வினாவினார்.அதற்கு சபேசன் உங்களை மாதிரி இவரும் எழுதிறவர் தான் ஆனால் வலை பதிவில் எழுதிறவர் சின்னக்குட்டி அவருடைய பெயர் என்றார் ..அதற்கு..அனஸ் அப்படி ஒரு ஆளை நான் இதுவரை கேள்விபட்டது இல்லையே என்றார்....

நோர்வையில் இருந்து வந்த விசரன் என்ற பெயரில் எழுதிற சஞ்சயனை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ,,,நான் ஊர் உளவராம் என்ற வலை பதிவு வைத்திருக்கு பொழுது என்னுடன் பல நண்பர்கள் தொடர்பு கொண்டு என்னுடன் பழக விரும்பிய காலத்தில்..எனது முகமூடியை கழட்டாமால் தயங்கி அவர்களின் வேண்டுகோளை எல்லாம் அலட்சியம் செய்திருந்தேன்.. அதை நினைக்கும் பொழுது இப்பொழுது வேதனைப்படுகிறேன்...எனக்கு பிடித்தமான எழுத்தை எழுதும் விசரன் என்ற ஒரு வலை பதிவரை கண்ட மட்டற்ற மகிழச்சி ஒன்றே . அந்த புத்தக சந்தையில் பெற்றது ..அந்த ஒரு பாக்கியமாகவாது அங்கு கிடைத்ததே என்ற சந்தோசத்துடன் அங்கிருந்து விடை பெற்றேன்

விசரனின் வலைபதிவை பார்க்க இங்கே அழுத்தவும்

http://sinnakuddy1.blogspot.com/2011/10/blog-post_17.html

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சின்னக்குட்டி பகிர்வுக்கு, இதுவரை நான் இந்த வலைப்பதிவை பார்க்கவில்லை, பல நல்ல ஆக்கங்கள் இருக்கு, வாசித்து பார்க்கனும் கட்டாயம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சின்னக்குட்டி இணைப்புக்கு!

நல்ல ஒரு வலைப் பூத்தளத்தைக் காட்டியமைக்கு!

இப்படி பேசி கொண்டு இருக்கும் பொழுது இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த நூலகர் செல்வராசா அவர்கள் நீங்களா சின்னக்குட்டி? காலமை ஒருவர் வந்து உங்களுடைய வலை பதிவில் இந்த நிகழ்ச்சியை பற்றி பார்த்து வந்ததாக கூறினார் மிக்க சந்தோசம் என்றார்

அடியேன்தான் அது. :icon_mrgreen:

தெரிந்த முகங்கள் சிலதைக் கண்டேன். யாரென்று அனுமானிக்க முடியவில்லை.

நான் தேடிச் சென்ற புத்தகங்கள் இருக்கவில்லை. சில புத்தகங்கள் வாங்கினேன்.

புதிய ஈழத்து நாவல்கள், தமிழர் வரலாறு, கவிதைத் தொகுப்புகள், சிறுவர் கதைகள் இருந்தன.

சிறிய முயற்சி என்றாலும் இது நல்லதொரு ஆரம்பம். எதிர்வரும் காலங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப் போவதாக 'நூல் தேட்டம்' N செல்வராஜா கூறினார். இவர் ஈழத்து நூல்களின் தொகுப்பை 'நூல் தேட்டம்' எனும் புத்தகத் தொகுதியாக வெளியிட்டுள்ளார். தேவையான நூல்களின் பெயர்களைத் தந்தால், எடுப்பித்துக் தருவதாகக் கூறினார். நூல்தேட்டம் வாசகர் வட்டத்தில் இணைந்தால், புதிய நூல்கள் வரும் பொழுது அறிவிப்பதாகக் கூறினார்.

இங்கு தமிழ் புத்தகங்கள் வாங்குவது சிரமம். அதனால் பலர் வாசிப்பதை விட்டு விட்டார்கள். தமிழக சினிமா சஞ்சிகைகள் மாத்திரமே தஞ்சம். சிரமத்திற்கு மத்தியில் இலாபமின்றி இப்படியான கண்காட்சிகள் நடாத்துவது பாராட்டுதலுக்கு உரியதே.

தொடர்புகளுக்கு :-

தொலைபேசி: 0044 1582 703 786

மின்னஞ்சல்: selvan@ntlworld.com

noolthettam.blogspot.com

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "அடியேன்தான் அது" தப்பிலி கொஞ்ச நேரம் குழப்பிவிட்டீர்கள், நீங்கதான் விசரணா அல்லது சின்னக்குட்டியின் வலைப்பதிவை பார்த்து போன ஆளா என்று :lol:

Quote: "அடியேன்தான் அது" தப்பிலி கொஞ்ச நேரம் குழப்பிவிட்டீர்கள், நீங்கதான் விசரணா அல்லது சின்னக்குட்டியின் வலைப்பதிவை பார்த்து போன ஆளா என்று :lol:

அட பாவிங்களா! என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்கள். :(

இனி எழுதுகிற ஒவ்வொரு சொல்லையும் கவனமாக யோசித்துத்தான் எழுத வேண்டும். :lol:

  • தொடங்கியவர்

விசரன் லண்டன் தமிழ் புத்தக கண்காட்சிக்கு சென்ற பின் எழுதிய பதிவு கீழே

http://visaran.blogspot.com/search?updated-min=2011-01-01T00%3A00%3A00%2B01%3A00&updated-max=2012-01-01T00%3A00%3A00%2B01%3A00&max-results=50

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகக் கண்காட்சிக்கு வரமுடியவில்லை. எனினும் தேடும் புத்தகங்கள் கிடைத்திருக்கமாட்டா என்று நினைக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

வலைப் பதிவர்கள் சந்தித்ததில் சந்தோஷம்

------------------------------------ :lol: :lol:

Edited by நாகேஷ்

  • தொடங்கியவர்

புத்தகக் கண்காட்சிக்கு வரமுடியவில்லை. எனினும் தேடும் புத்தகங்கள் கிடைத்திருக்கமாட்டா என்று நினைக்கின்றேன்!

இப்பதிவுக்கு பதில் எழுதியோர் யாவருக்குக்கும் மிக்க நன்றி ...உண்மை தான் நீங்கள் தேடும் புத்தகங்கள் இல்லை ..ஆனால் பலருக்கு தேவைப் படும் புத்தகங்களை சொன்னால் ஆவன செய்வதாக நூலகர் செல்வராசா கூறி இருக்கிறார்..தப்பிலி அது பற்றிய விபரங்களை மேலை போட்டிருக்கிறார் பார்க்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவுக்கு பதில் எழுதியோர் யாவருக்குக்கும் மிக்க நன்றி ...உண்மை தான் நீங்கள் தேடும் புத்தகங்கள் இல்லை ..ஆனால் பலருக்கு தேவைப் படும் புத்தகங்களை சொன்னால் ஆவன செய்வதாக நூலகர் செல்வராசா கூறி இருக்கிறார்..தப்பிலி அது பற்றிய விபரங்களை மேலை போட்டிருக்கிறார் பார்க்கவும்

தகவலுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் போக விருப்பமாயிருந்தது ஆனால் நல்ல காலம் போகவில்லை.பெரிதாக புத்தகங்கள் இல்லா விட்டால் போய் என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

------------------------------------ :lol: :lol:

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

:lol: :lol: :lol:

..நாகேஸ் பதிவு க்கு சம்பந்தமில்லமால் லூசு மாதிரி இரண்டு தரம் சிரிக்க ..ஏன் சாத்திரியார் நீங்கள் மூணு தரம் சிரிக்கிறீங்கள்
:D :D :D :D
  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப.... நாகேஷ் ஏன் கெக்கே... பிக்கே.... என்று சிரித்தவர்.

அவரும் கண்காட்சிக்கு போயிருந்தவரா?

அல்லது சின்னக்குட்டி சொன்னமாதிரி லூஸா.

அல்லது "விசரனை சந்தித்தேன்" என்றவுடன் நாகேஷுக்கு சிரிப்பு வந்துவிட்டதா?

எதெண்டாலும்... சொல்லிப் போட்டு சிரியுங்கப்பா...biggrin.giflaugh.gif

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.....! :o

இங்கே கெக்கே பிக்கே என்று சிரித்தவர்களுக்கு ஒருபச்சைப்புள்ளியையும் குடுக்கேல்லை நான் பச்சையாச் சிரித்ததற்கு பச்சைப்புள்ளி குத்தியிருக்காங்க..... :huh:

நான் ஏன் பச்சையாகச்சிரித்தேன் என்று யாருக்காவது விளங்கிச்சா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.....! :o

இங்கே கெக்கே பிக்கே என்று சிரித்தவர்களுக்கு ஒருபச்சைப்புள்ளியையும் குடுக்கேல்லை நான் பச்சையாச் சிரித்ததற்கு பச்சைப்புள்ளி குத்தியிருக்காங்க..... :huh:

நான் ஏன் பச்சையாகச்சிரித்தேன் என்று யாருக்காவது விளங்கிச்சா? :icon_mrgreen:

போட்டவர்கள், விசரர்களாக இருக்கும்!!!

அடப்பாவிகளா.....! :o

இங்கே கெக்கே பிக்கே என்று சிரித்தவர்களுக்கு ஒருபச்சைப்புள்ளியையும் குடுக்கேல்லை நான் பச்சையாச் சிரித்ததற்கு பச்சைப்புள்ளி குத்தியிருக்காங்க..... :huh:

நான் ஏன் பச்சையாகச்சிரித்தேன் என்று யாருக்காவது விளங்கிச்சா? :icon_mrgreen:

ஏங்க ஊங்களுக்கு வேற வேலை இல்லைங்களா....போய் புள்ளைகளை படிக்க வையுங்க

  • கருத்துக்கள உறவுகள்

------------------------------------ :lol: :lol:

அறிவிலி எங்கிருந்தாலும் உடன் வரவும்..... :D

அறிவிலி எங்கிருந்தாலும் உடன் வரவும்..... :D

அந்த ஆளு தெரிஞ்சோ தெரியோமா என்னாத்தோக்கோ சீறிச்சூ இறூக்கும் ...அதூக்கு அறிவிலி சார் வந்து என்னாங்கோ செய்ய போறாரூ :wub:
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கெக்கே பிக்கே என்று சிரித்தவர்களுக்கு ஒருபச்சைப்புள்ளியையும் குடுக்கேல்லை நான் பச்சையாச் சிரித்ததற்கு பச்சைப்புள்ளி குத்தியிருக்காங்க.....

நான் ஏன் பச்சையாகச்சிரித்தேன் என்று யாருக்காவது விளங்கிச்சா?greensmilies-007.gif

அம்மணி, நீங்க... ஏன் பச்சையாய் சிரிச்சீங்கள் எண்டு.... இன்னமும் விளங்கேல்லை.smiley-confused013.giflaugh.gif

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏன் பச்சையாகச்சிரித்தேன் என்று யாருக்காவது விளங்கிச்சா?

கள்ளம் கபடமில்ல பச்சை குழந்தை மாதிரி நீங்க, அதுதான் பச்சையா சிரிச்சனீங்க.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.