Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஸ்புக் மூலம் இளம்பெண்களை வசப்படுத்திய இளைஞனுக்கு 50 ஆண்டுகள் சிறை

Featured Replies

  • தொடங்கியவர்

தூசணம் பேச முடிந்தால் சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தமே?

நல்லது. நடக்கட்டும். நடக்கட்டும். :( :( :(

இதில் எங்கு தூசணம் வந்தது விளக்கினால் நல்லது விசுகர் . எனது கேள்வியின் உட்கரு பெண்கள் கருத்துக்களத்தில் தங்கள் கருத்துகளை சொல்ல சுதந்திரம் உள்ளவர்களா ? இல்லையா ? என்பது தான் :) :) :) .

  • Replies 69
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுஜி

நானோ வாத்தியாரோ அல்லது இங்கு எழுதும் எந்த உறவுமே உங்களை தங்களது மகளாக கருதியே பழகுகின்றோம். எழுதுகின்றோம். அப்படி பார்த்ததன் கோபம்தான் இது. எனது மகள் யாருடனாவது இது போன்ற வசனங்களைப்பாவிப்பதை நான் அனுமதிக்கமாட்டேன். இல்லை நான் அதற்கு தகுதியற்றவள். எதற்காக அந்தளவுக்குகு என்னை நீங்கள் பாதுகாக்கின்றீர்கள்? என தாங்கள் நினைத்தால் அதுது தங்களைப்பொறுத்தது. ஆனால் ஒரு அப்பனாக இதை நான் அங்கீகரிக்கமாட்டேன். இல்லை எங்களுடன் நடித்துவிட்டுப்போகின்றேன் என்ற தங்கள் எழுத்தும் தங்களையே பலவீனப்படுத்தும். எப்படியாயினும் நாம் எம் கடமையிலிருந்து மாறிவிடமுடியாது. நன்றி

உபயம் ரதி

நன்றி :( :( :(

நான் எழுதியதுக்கு ரதிக்கு என்ன சமந்தம்... ஏன் தேவை இல்லாமல் ரதியை இழுக்கிறீர்கள் விசுகு அண்ணா.... நான் எழுதியதுக்கு நான் தான் பொறுப்பு மற்றவர்கள் மேல் பழியை போடாதீர்கள் விசுகு அண்ணா.... நீங்கள் எல்லாரும் டபிள் மினிங்கில் எழுதுவது எல்லாம் சரி மற்றவர்கள் கொஞ்சம் எழுதிவிட்டால் தூக்கி பிடிப்பீர்களே ஆண்களின் [பிறவிக்குணம்... எல்லோரையும் சொல்லவில்லை...

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எங்கு தூசணம் வந்தது விளக்கினால் நல்லது விசுகர் . எனது கேள்வியின் உட்கரு பெண்கள் கருத்துக்களத்தில் தங்கள் கருத்துகளை சொல்ல சுதந்திரம் உள்ளவர்களா ? இல்லையா ? என்பது தான் :) :) :) .

நான் கொஞ்சம் சைவமாக வளர்ந்தவன். எங்கள் வீட்டில் இப்படி கதைத்தால் அது தூசணம்தான்.

எனது வாயிலிருந்தோ எனது மனைவி வாயிலிருந்தோ பிள்ளைகள் வாயிலிருந்தோ இது போன்ற சொற்கள் வரா. கண்டிப்பான உத்தரவுண்டு.

சுஜி

நானோ வாத்தியாரோ அல்லது இங்கு எழுதும் எந்த உறவுமே உங்களை தங்களது மகளாக கருதியே பழகுகின்றோம். எழுதுகின்றோம். அப்படி பார்த்ததன் கோபம்தான் இது. எனது மகள் யாருடனாவது இது போன்ற வசனங்களைப்பாவிப்பதை நான் அனுமதிக்கமாட்டேன். இல்லை நான் அதற்கு தகுதியற்றவள். எதற்காக அந்தளவுக்குகு என்னை நீங்கள் பாதுகாக்கின்றீர்கள்? என தாங்கள் நினைத்தால் அதுது தங்களைப்பொறுத்தது. ஆனால் ஒரு அப்பனாக இதை நான் அங்கீகரிக்கமாட்டேன். இல்லை எங்களுடன் நடித்துவிட்டுப்போகின்றேன் என்ற தங்கள் எழுத்தும் தங்களையே பலவீனப்படுத்தும். எப்படியாயினும் நாம் எம் கடமையிலிருந்து மாறிவிடமுடியாது. நன்றி

நானும் உங்களையும் வாத்தியார் அண்ணாவையும் ஒன்றுமே சொல்லவே இல்லையே.... ஆனால் நான் எழுதிய கருத்து வேணும் என்றால் ஓவராக இருக்கலாம் ஆனால் சொல்ல வந்த விடயம் ஏனோ உண்மைதான்... உங்கள் நாட்டில் நடந்தது விசுகு அண்ணா.... பெண் அழகாக இருக்கும் ஒரு காரணத்தால் அவாவும் எண்ணி எண்ணி கல்யாணம் பண்ணுகிறார் ... ஆண்களும் தொடர்ந்து அவாவை கல்யாணம் பண்ண ரெடியாக இருக்கிறார்கள்.. அதுதான் கேவலமாக உள்ளது.... உங்களுக்கு ஊர் விடயங்கள் தெரியுமே கொஞ்சம் விசாரித்து பாருங்கள்... இத்துடன் இந்த தலைப்பில் கருத்தாட எனக்கு விருப்பமில்லை... உங்கள் ஊரில் நடந்த விடயம் மாதிரி லண்டனில் நடந்தது...

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஊரில் நடந்த விடயம் மாதிரி லண்டனில் நடந்தது...

இதுவும் எம்மை கடந்து போகக்கடவது.....

.....

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி முதலில் உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்...உள்ளதை உள்ளபடி எழுதுங்கள்...யருக்காகவும் உங்கள் தனித்துவத்தை விட்டுக்கொடுக்கவேண்டியதில்லை..பெண்கள் ஏதாவது சொல்லவந்தால் முளையிலேயே மூடிபோட்டு வெந்துபோகவைத்துவிடுவார்கள்..கடைசி ஆயுதமாக குடும்பம் மாமன்,மாமி,மகள் சென்டிமென்டைப்போட்டு வீட்டுக்குள்ளேயே பெண்களை முடக்கிவிடுவார்கள்..வீணர்கள் நிறைந்த சமூகம் எங்களது..பெண்களே பிற்போக்குவாதிகளின் பிணாத்தல்களை காதில்போடாமல் நீங்கள் தொடர்ந்து சுய சிந்தனாவாதிகளாக இருங்கள்,எழுதுங்கள்..யாழிலும் கொஞ்சம் துணிச்சல் மிக்க பெண்கள் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது..அண்ணை...கொஞ்சம் நான், என்ர குடும்பம்,மகள்,மகன் புராணம் பாடுவதை யாழிலாவது தள்ளிவைத்துவிட்டு நாங்கள் என்று கதையுங்கள்..எங்கட சமூகத்துக்காக இருப்பது யாழ்...யாழில் உந்த வட்டத்தை விட்டு முதலில் வெளியால வாருங்கள்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

<p>

அப்ப......... எப்பிடி ஒரு பெண் எழுதவேணும் எண்டு எதிர்பாக்கிறியள் வாத்தியார் ? இது கருத்துக்களம் , ஒருவர் தனது கருத்தை சொல்வதற்கு பூரணசுதந்திரமுடையவர் . இதில் எங்கே ஆண் பெண் பேதம் வருகின்றது ?வாத்தியார் எப்போது இந்தப் பிற்போக்குத்தனமான சிந்தனைகளில் இருந்து விடுபடப் போகின்றீர்கள் :) :) :) ?

கோமகன் நான் இங்கு யாருடைய கருத்தையும் பிழை என்று கூறவில்லை. அவர் எழுதிய அல்லது பாவித்த சொற்களையே முன்னிலைப்படுத்தினேன். அதுவும் தங்கை சுஜி அவர்களிடம் இருந்து இப்படியான எழுத்துக்களை நான் எதிர்பாத்திருக்கவில்லை. அதனாலேயே அப்படிக் கேட்டேன்இப்படிக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள் என்றால் நானும் அவர்களில் ஒருவராக இருந்துவிட்டுப் போகின்றேன்.உங்கள் கையெழுத்தை ஒருமுறை திரும்ப வாசியுங்கள். நாம் எதைச்செய்கின்றோமோ அதுவாகவே மாறிவிடுகின்றோம்... சிறப்பு என்பது செயலில் அல்ல பழக்கத்தில்..அது மட்டும் அல்ல எழுத்தில் பேச்சில்..  அதுவும் பெண்கள் என்றால் நடையில் உடையில்.. இன்னும் பல கண்டிக்கப்பட வேண்டிய நேரத்தில் கண்டிப்பதும் தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுப்பதும் எப்போதுமே சிறந்தது :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து வெளியால வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்சம் சைவமாக வளர்ந்தவன். எங்கள் வீட்டில் இப்படி கதைத்தால் அது தூசணம்தான்.

எனது வாயிலிருந்தோ எனது மனைவி வாயிலிருந்தோ பிள்ளைகள் வாயிலிருந்தோ இது போன்ற சொற்கள் வரா. கண்டிப்பான உத்தரவுண்டு.

எனக்கு உங்க வயசு அனுபவம் இல்லாவிட்டாலும்.. நீங்கள் குறிப்பிட்டது போல.. சில பெண் உறுப்பினர்கள் பாவிக்கும் சில சொற்கள் இயல்பாக அருவருப்பை தரவல்லனவாக அமைந்திருப்பதை நானும் உணர்கிறேன்.. சுட்டிக்காட்டியும் இருக்கிறேன். எனக்கு அருவருப்பாக இருப்பது மற்றவர்களுக்கு அப்படி இல்லாது இருக்கலாம். அதற்காக பாவிக்கிறவையை கள நிர்வாகம் அதைப் பாவிக்க தவிர்க்க கேட்காதவரை நாம் சகித்துக் கொள்ள வேண்டியது தான்.

ஆனால் விசுகு அண்ணா.. இப்ப பெட்டையள் தான் அதிகம்.. ஆங்கிலம்.. மற்றும் பிறமொழிகளில்.. வார்த்தைக்கு வார்த்தை தூசணம் கதைக்கினம். அதுவும் இல்லாமல்.. மான்.. கம் கியர் என்றெல்லாம் சொல்லுகினம்.

தாய்.. தகப்பனையே.. ஏய்... மான் என்று அழைக்கினம்...! இப்படியாப்பட்ட சூழலில்.. அதிகம் எதிர்பார்க்கக் கூடாது.

என்னை யாராவது மான் என்று அழைத்தால் நான்.. அவர்களின் மொழியை செவிமடுப்பதில்லை. அவைக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அப்படி அழைக்க.. அதே அளவு உரிமை அதை நிராகரிக்க எனக்கும் இருக்குது.

நான் பார்த்த அளவில்.. கல்வி வட்டாரத்தில் உயர்மட்டத்தில் உள்ளவர்களும்.. சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களும்.. வயதானவர்களும் எப்போதும் ஆங்கில மொழி பேசுகிறவர்கள்.. தெளிவான நல்லாங்கிலம் பேசுவதையும்.. நாகரிகமாக அது இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். அது professionalism சார்ந்ததாக இருக்கலாம். அதை எல்லாம் யாழில் ஒரு அளவுக்கு மிஞ்சு எதிர்பாத்தா.. எங்களைத் தான்.. மட்டம் தட்டுவீனம்.

நாங்களும் பதிலுக்கு.. பீச்சாங் கையை மூஞ்சில வைக்க.. எண்டம் எண்டா.. தன்பாட்டில போவினம்.. அல்லது அடக்கி வாசிப்பினம்.

இதைத் தான் நம் முன்னோர் சபை அறிந்து ஒழுகுதல் என்று சொல்லிச்சினம் போல . :):icon_idea:

Edited by nedukkalapoovan

ஜயோ பாவம் சின்னப் பிள்ளை வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாது...தம்பியைப் பொறுத்த வரை பெரும்பான்மையான ஆண்கள் எல்லாம் நல்லவர்கள் ரொம்ப நல்லவர்கள் ஆனால் பெரும்பான்மையான பெண்கள் ரொம்ப கெட்டவர்கள்...எத்தனை நாளைக்கு தான் ஏமாற்றுவார் இந்த உலகத்தை எங்கட யாழை :D ...தம்பி சொல்கிறார் படிக்காதவர் தான் அநாகரீமாக நடப்பாராம் படித்தவர் எல்லாம் ரொம்ப டிசன்டாம்[அவர்கள் தான் அமசடக்கு கள்ளர் என்பது வேற விசயம்] இதைத் தான் சொல்கிறது கேட்பது கேணையன் என்டால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்

யாழில் கண பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு பெண்கள் என்டால் எதிர்த்துக் கதைக்க கூடாது,கேள்வி கேட்கக் கூடாது,ஆண்கள் என்ன சொன்னாலும் அடங்கிப் போக வேண்டும் மொத்தத்தில் தாங்கள் சொன்னதைக் கேட்கும் பொம்மைகளாக இருக்க வேண்டும்

அக்கீ நான் அதிகம் வாழ்ந்த இடம் கல்விச் சமூகம் என்பதால்.. எனக்கு அதில பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தான் அதிகம் கதைக்க முடியும்.

சுட்டிக்காட்டும் தவறை உணர்ந்து அதை திருத்த வேண்டும் என்றால் திருத்திக் கொள்ளக் கூடியவர்கள் நிறைந்த இடத்தில் தான் என் வாழ்க்கை அதிகம் ஓடி இருக்கிறது. அந்த வகையில் அந்த அனுபவத்தையே பகிர்ந்து கொண்டேன். தெரியாதவற்றை பற்றி நான் ஏன் பேசனும் சொல்லுங்க...!

மேலும்.. ஆண்கள் எல்லாம் நல்லவங்க என்றதிலும்.. நல்ல ஆண்களையும் பெண்கள் கெட்டவங்க ஆக்கிறவங்க என்பதையும் உலகில காண முடியுது. அந்த வகையில் பெண்கள் தொடர்பில் ஒரு விழிப்புணர்வு ஆண்களிடம் இருப்பது அவசியம்.

மேலும்... என்னைப் பொறுத்தவரை கருத்துச் சொல்லும் போது ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பால் மனிதன் என்ற நிலையில் வைத்தே அநேகரின் கருத்தை உள்வாங்கிறன். இன்னொரு மனிதன் சகிக்க முடியாத ஒன்றை சக மனிதன் தெரிந்தோ தெரியாமலோ எழுதும் போது.. அந்த இன்னொருவனுக்கும் எழுதப்பட்ட வடிவம் தொடர்பில்.. தனது உணர்வை வெளிப்படுத்த உரிமை இருக்குது. அது ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பாலானது..! இப்படி நீங்கள் எடுத்துக் கொண்டால்.. நிச்சயம்.. ஆண்களை சாட்டி.. பெண்கள் தங்களைத் தாங்களே சுய தாழ்வைச் செய்ய வேண்டிய அவசியம் வராது. :icon_idea::)

கூடாத அல்லது தகாத வார்த்தைகள் பாவித்தல் கூடாது,இதில் ஆண் பெண் எங்கே வருகின்றது .

பழக்க வழக்கங்களில்தான் இப்பவும் அடைத்து வைத்திருக்கின்றோம் ,கொஞ்சம் எழுத,கதைக்க ஆவது விடுங்கோ.

நீங்கள் குறிப்பிட்டது போல.. சில பெண் உறுப்பினர்கள் பாவிக்கும் சில சொற்கள் இயல்பாக அருவருப்பை தரவல்லனவாக அமைந்திருப்பதை நானும் உணர்கிறேன்.. சுட்டிக்காட்டியும் இருக்கிறேன். எனக்கு அருவருப்பாக இருப்பது மற்றவர்களுக்கு அப்படி இல்லாது இருக்கலாம். அதற்காக பாவிக்கிறவையை கள நிர்வாகம் அதைப் பாவிக்க தவிர்க்க கேட்காதவரை நாம் சகித்துக் கொள்ள வேண்டியது தான்.

அப்போ ஆண் உறுப்பினர்கள் மட்டும் , எதை வேணும்னாலும் எழுதிட்டுபோலாமா?

ஏனுங்க கற்புக்கரசரே................

அருவெருப்பு எங்கிறது ,, அத எழுதுறது,, ஆணா இல்ல பொண்ணா ,,, எங்கிறததிலயா இருக்கு?

அது ஆர்கியூமெண்ட் சம்பந்தப்பட்டது!!

கருத்துக்கள் காரசாரமா வரும்போது , எல்லாருமே கோவத்த காட்டுவாங்க!

இதில ஆண் பெண் என்று வித்யாசமே இல்ல..................!

இதுல ,,கள நிர்வாகத்த வேற துணைக்கு இழுக்குறீங்களா நெடுக்கு?!

கள நிர்வாகம் முன்னால்............ எல்லாருமே ஒண்ணுதானே!! :)

அர்ஜுன் அண்ணாவுக்கு , பச்சை குத்தினது நானேதான்! :)

  • கருத்துக்கள உறவுகள்

கூடாத அல்லது தகாத வார்த்தைகள் பாவித்தல் கூடாது,இதில் ஆண் பெண் எங்கே வருகின்றது .

பழக்க வழக்கங்களில்தான் இப்பவும் அடைத்து வைத்திருக்கின்றோம் ,கொஞ்சம் எழுத,கதைக்க ஆவது விடுங்கோ.

அப்போ ஆண் உறுப்பினர்கள் மட்டும் , எதை வேணும்னாலும் எழுதிட்டுபோலாமா?

ஏனுங்க கற்புக்கரசரே................

அருவெருப்பு எங்கிறது ,, அத எழுதுறது,, ஆணா இல்ல பொண்ணா ,,, எங்கிறததிலயா இருக்கு?

அது ஆர்கியூமெண்ட் சம்பந்தப்பட்டது!!

கருத்துக்கள் காரசாரமா வரும்போது , எல்லாருமே கோவத்த காட்டுவாங்க!

இதில ஆண் பெண் என்று வித்யாசமே இல்ல..................!

இதுல ,,கள நிர்வாகத்த வேற துணைக்கு இழுக்குறீங்களா நெடுக்கு?!

கள நிர்வாகம் முன்னால்............ எல்லாருமே ஒண்ணுதானே!! :)

யாரும் களத்தில் உள்ள பெண்களை.. உங்கள் படுக்கை அறை... படுத்தல்.. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை உங்களைப் போன்றோர் வாசிச்சு.. பயன்பெற வேண்டாம் என்றும் யாரும் இங்கு சொல்லேல்ல. ஏதோ அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக காட்டி.. அதில் பெண்களுக்கு ஏதோ மறுக்கப்படுவதாகக் காட்டி.. அதை இங்குள்ள ஆண்கள் செய்ய.. அர்ஜீன் ஆகிய நான் அதில் இருந்து.. மாறுபட்டிருக்கிறேன்.. என்ற விண்ணானங்கள் பலவற்றை நாங்கள் நம்மவர்களிடம் கண்டிட்டம் அண்ணா. உதெல்லாம்.. அந்தக் கால.. சோத்துப்பாசல் கலாசாரம்..! நாங்கள் உதுகளை எல்லாம் கடந்து எங்கையே வந்து நிற்கிறம்.

இன்று.. பெண்களை யாரும்.. இதைப் பேசாத.. அதைப் பேசாத என்று சொல்லுறதில்ல. அதேபோல ஆண்களுக்கும். அதே நேரம்.. பெண்கள்.. ஆண்கள் பேசுறது.. அருவருப்பா இருந்தா.. அதை சொல்ல பெண்கள்.. ஆண்கள் பேசுறதை கேட்டுக் கொண்டிருக்கிறவைக்கும் உரிமை இருக்குது. அதை முதலில நீங்கள் உள்வாங்கிக் கொள்ளனும். உங்களுக்கு ஒன்றைப் பேச உரிமை இருக்கென்றால்.. அதே நேரம் மற்றவனுக்கு அதுபிடிக்கல்லைன்னா.. அதை மறுதலிக்கவும் உரிமை இருக்குது. இதை நீங்கள் உணர்ந்துக்கனும்..!

குறிப்பாக அறிவிலி அண்ணரும்.. எடுத்தேன் கவுத்தேன் என்று விசனத்தை கொட்டிறதைச் செய்யாமல்.. கொஞ்சம் நிதானமா கருத்தில என்ன சொல்லப்படுது.. என்ன சந்தர்ப்பம் என்றெல்லாம் பார்த்து கதைக்கலாம் என்று நினைக்கிறன். இல்ல.. எல்லாத்துக்கும்.. எடுத்தேன் கவுப்பேன் என்றால்.. அவர் அதையே செய்து கிட்டு இருக்கலாம். அது அவரின்ர பிரச்சனை.

யாழ் கள உறவுகளை வழிநடத்திற தேவை.. நிர்வாகத்திற்கு உண்டு. இன்றேல்.. கத்தரிக்கோலோட அவை அலைய வேண்டிய அவசியம் இல்லை. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அக்கீ நான் அதிகம் வாழ்ந்த இடம் கல்விச் சமூகம் என்பதால்.. எனக்கு அதில பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தான் அதிகம் கதைக்க முடியும்.

சுட்டிக்காட்டும் தவறை உணர்ந்து அதை திருத்த வேண்டும் என்றால் திருத்திக் கொள்ளக் கூடியவர்கள் நிறைந்த இடத்தில் தான் என் வாழ்க்கை அதிகம் ஓடி இருக்கிறது. அந்த வகையில் அந்த அனுபவத்தையே பகிர்ந்து கொண்டேன். தெரியாதவற்றை பற்றி நான் ஏன் பேசனும் சொல்லுங்க...!

மேலும்.. ஆண்கள் எல்லாம் நல்லவங்க என்றதிலும்.. நல்ல ஆண்களையும் பெண்கள் கெட்டவங்க ஆக்கிறவங்க என்பதையும் உலகில காண முடியுது. அந்த வகையில் பெண்கள் தொடர்பில் ஒரு விழிப்புணர்வு ஆண்களிடம் இருப்பது அவசியம்.

மேலும்... என்னைப் பொறுத்தவரை கருத்துச் சொல்லும் போது ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பால் மனிதன் என்ற நிலையில் வைத்தே அநேகரின் கருத்தை உள்வாங்கிறன். இன்னொரு மனிதன் சகிக்க முடியாத ஒன்றை சக மனிதன் தெரிந்தோ தெரியாமலோ எழுதும் போது.. அந்த இன்னொருவனுக்கும் எழுதப்பட்ட வடிவம் தொடர்பில்.. தனது உணர்வை வெளிப்படுத்த உரிமை இருக்குது. அது ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பாலானது..! இப்படி நீங்கள் எடுத்துக் கொண்டால்.. நிச்சயம்.. ஆண்களை சாட்டி.. பெண்கள் தங்களைத் தாங்களே சுய தாழ்வைச் செய்ய வேண்டிய அவசியம் வராது. :icon_idea::)

ஆண்,பெண் பேதங்களுக்கப்பால் ஒரு மனிதன் என்ட நிலையில் இருந்து நீங்கள் கருத்து சொன்னால் முதலில் இதே கருத்துக்களத்தில் ஆண்கள் பெயரில் எழுதுபவர்கள்[எதற்கெடுத்தால் பாலியல் வக்கிரம் அது,இது என எழுதும் சில பேரின் எழுத்து ஏன் உங்கள் கண்களுக்குப் படவில்லை?]....அதை எல்லாம் ஏன் நீங்கள் தட்டிக் கேட்கவில்லை?...யாஎ அப்படி எழுதினது? எனக்குத் தெரியாது என நடிக்க வேண்டாம்.

உங்கள் கருத்துகள் எல்லாம் ஆண்கள் என்ன வேண்டுமானாலும்,எவ்வளவு பாலியல் வக்கிரம் நிறைந்த வசனங்களையும் பாவிக்கலாம் அதை நீக்குவதும்,நீக்காமல் விடுவதும் மட்டூஸ் வேலை ஆனால் அதே பெண்கள் படுக்கை சம்மந்தமாக எழுதினால் உடனேயே அதை ஒரு ஸ்சுவாக்கி,கருத்துக் களத்தில் பெரிதாக்கி விடுகிறது இதைத் தான் சொல்கிறது ஆணாதிக்கம் என்று...நீங்கள் இப்ப சொன்ன படுக்கை சம்மந்தமான கருத்துக்களை ஒரு ஆண் சொல்லும் போதோ அல்லது கருத்துக்களை கருத்துக்களால் எழுத முடியாதவர்கள் ஒரு பெண்ணை ஒரு ஆணோடு தேவையில்லாமல் சேர்த்து வைத்து எழுதும் போதோ வந்து எழுதி இருந்தால் நீங்கள் நியாயவாதி...முதலில் நீங்கள் திருந்துங்கள் பிறகு மற்றவனைத் திருத்தலாம்.

கல்வி சமூகம்,அனுபவம் அடிப்படையில் உங்கள் கருத்துக்களைப் பதிந்தால் பின் எப்படி படிக்காத சமூகத்தை பற்றீ உங்களால் கருத்துக்களை எழுத முடியுது?....உங்களுக்கு படிக்காதவர்களோடோ அல்லது அகதியாய் வந்தவர்களோடோ பழகின அனுபவம் இருக்காதே?

ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் அவர்களை பெண்கள் தான் கெட்டவங்கள் ஆக்கிறாங்கள் என நான்கு சுவற்றுக்குள் இருந்து நீங்கள் சொல்லிக் கொண்டு இருங்கள்[அப்படி பார்த்தாலும் ஆண்களுக்கு சுய அறீவு இல்லையா?] அதை யாழில் உள்ள ஆண்களே நம்ம மாட்டார்கள் என்பது வேற விச‌யம்.

எங்கட‌ பெரியவர்கள் தெரியாமலா சொன்னார்கள் "ஏட்டு சுரைக்காய் கறீக்கு உதவாது" என :)

பேசாப் பொருளில் எழுதும் தலைப்புக்கள் தவிர வேறு இடங்களில் பகிரப்படும் அநாகரிகக் கருத்துக்களை.. சொல்லாடல்களை பல தடவைகள் கண்டித்திருக்கிறேன். அந்த வகையில் இதிலும் என் கருத்தை உணர்தலை தெரிவித்திருக்கிறேன். இதை நீங்கள் அவதானிக்காதது எனது பிரச்சனை அல்ல..!

ஆணாதிக்கம் என்பதற்கு தாங்கள் அளித்துள்ள விளக்கத்தின் படி பார்த்தால் உலகின் மூலை முடுக்கெல்லாம்... பெண்ணாதிக்கம் எல்லோ அதிகம் இருக்கும்..! :lol:

கல்விச் சமூகம் என்பது 100% கல்வி கற்றவர்களை மட்டும் கொண்டதல்ல. அங்கு சராசரிக் கல்வியைக் கற்றவர்களும் நாகரிகமாக நடந்து கொள்ளும் சூழல் அதிகம்..! அந்த அடிப்படையில் தான் என் கருத்தைச் சொன்னேன்.

நான் மட்டுமல்ல.. இந்தப் பூமிப் பந்தில் எல்லா மனிதர்களும்.. நாலு சுவருக்க தான் வாழினம். ஏன் இந்தப் பூமி கூட இந்தப் பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் கிடக்குது. அப்படி நோக்கின்.. எல்லாமே.. வீண் சுரைக்காய் தான். நிலையில்லா மனித வாழ்வில்.. எது நிலையானது..???! ஏட்டுச் சுரைக்காய் மட்டுமல்ல.. நிஜ சுரைக்காயும் தான். இதையும் உங்கள் மூத்தோரிடம் சொல்லி வையுங்கோ..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

<p>

கோமகன் நான் இங்கு யாருடைய கருத்தையும் பிழை என்று கூறவில்லை. அவர் எழுதிய அல்லது பாவித்த சொற்களையே முன்னிலைப்படுத்தினேன். அதுவும் தங்கை சுஜி அவர்களிடம் இருந்து இப்படியான எழுத்துக்களை நான் எதிர்பாத்திருக்கவில்லை. அதனாலேயே அப்படிக் கேட்டேன்இப்படிக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள் என்றால் நானும் அவர்களில் ஒருவராக இருந்துவிட்டுப் போகின்றேன்.உங்கள் கையெழுத்தை ஒருமுறை திரும்ப வாசியுங்கள். நாம் எதைச்செய்கின்றோமோ அதுவாகவே மாறிவிடுகின்றோம்... சிறப்பு என்பது செயலில் அல்ல பழக்கத்தில்..அது மட்டும் அல்ல எழுத்தில் பேச்சில்.. அதுவும் பெண்கள் என்றால் நடையில் உடையில்.. இன்னும் பல கண்டிக்கப்பட வேண்டிய நேரத்தில் கண்டிப்பதும் தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுப்பதும் எப்போதுமே சிறந்தது :)

எனது கேள்வியை சரியாக உள்வாங்கி நீங்கள் பதில் தந்திருந்தால் , ஒரு மழுப்பலான பதிலாகவே எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன் வாத்தியார் . சிலவேளைகளில் எனது புரிதல்களில் குழப்பமோ தெரியவில்லை . கள உறவு சுஜி ஓர் ஆண் / பெண் என்று தெரியாத நிலையில் , அவரின் சொல்லாடலை பெண் பாலிற்குள் அடக்கி நீங்கள் வைத்த கருத்தாடல் விமர்சனத்திற்கு உரியது . ஏனெனில் எமது இனவிடுதலைக்காக ஈடுஇணையற்ர தியாகங்களையும் , பல சரித்திரங்களையும் படைத்த பல தமழிச்சிகளை பால்பேதங்கள் இன்றி உள்வாங்கிய உங்களைப் போன்றவர்கள் , ஒரு சாதாரண சொல்லாடலுக்கு அவரின் உட்கருத்தைப் பாராது தரம் பிரித்து விமர்சிப்பது ஒருவரின் சுயசிந்தனையை பால் பேதம் பார்த்து நசுக்குவதுக்கு ஒப்பானதாக இருக்காதா வாத்தியார் ???????????

பி கு : உங்கள் கருத்துக்களில் நான் மிகவும் உயர்வான மதிப்பு வைத்திருப்பவன் எனது கருத்துகளை எதிர்மறையாக எடுக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன் :) :) :) .

Edited by komagan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேஸ்புக் மூலம் ஆண்களை வசப்படுத்தும் பெண்களுக்கு என்ன தண்டனை?

இந்த விசயத்துல ஆண்,பெண் யாரும் யாருக்குமே குறைஞ்சவங்க இல்லைப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே இன்னும் மட்டுறுத்தினர்கள் இந்த தலைப்பை விட்டு வைத்திருக்கிறார்களா...?:(

  • தொடங்கியவர்

கடவுளே இன்னும் மட்டுறுத்தினர்கள் இந்த தலைப்பை விட்டு வைத்திருக்கிறார்களா...? :(

நன்றி சொல்ல மறந்து போனியளே யாயினி :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி,நன்றி,நன்றி:)

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை ஏமாற்றும் நோக்கம் மனதில் இல்லாவிடில்...........

ஏன் 10 வர்ண கலர்களை முகத்தில் பூசி உண்மையான முகத்தை மறைக்க வேண்டும்?

வெள்ளை பிள்ளை மனம் கொண்ட ஆண்கள் போல உண்மையான முகத்துடனேயே ரோட்டில் வரலாம்தானே?

எல்லாத்தையும் திட்டமிட்டு செய்துவிட்டு.......... பழியை ஆண்கள் மேலே போட மட்டும் நல்ல தெரியுது. பின்ன நாடகத்தை யாராவது சொல்லி கொடுக்கனுமா என்ன?

அவர்களுக்கு நிகர் அவர்களேதான்!

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி தவறான வார்த்தைகள் எதுவும் பாவித்ததாகத் தெரியவில்லை. அவரின் துணிச்சலான கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரின் சொற்பாவனையில் குற்றம்கண்டு அவரைத் தொடர்ந்தும் கருத்தாடமுடியாமல் செய்தது ஆண்களுக்கே உரிய ஆணாதிக்கம்தான் (நெடுக்ஸ் இந்தச் சொல்லை வெறுத்தாலும் இதைத் தவிர வேறு வார்த்தைகள் பாவிக்க முடியவில்லை!)

அழகான பெண் 10 பேருடன் படுத்திருந்தாலும் அடுத்தாளாக வரிசையில் தயங்காமல் நிற்கப் பலருக்குப் பிரச்சினையிருக்காது. இல்லாவிட்டால், நயன்தாரா, அசின், அமலா பால் என்று மோகித்துத் திரியாமல் இருப்போமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.