Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யா ம ச விற்கு வாக்களித்த பிருந்தனுக்கு

கட்சியின் சார்பில் நன்றிகள் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையே ஒரு கனவு தானேங்க சேர். அதுல.. இப்படியான குட்டிக் கனவுகள் காண்பதற்கும் தடையா..! இருக்கும் வரை மகிழ்ச்சியா இருப்பமே..! :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆண்டில் களமாளுமன்றத்தில் பொறுப்பு வகிக்க இவ்வாண்டில் நடந்தப்பட்ட களமாளுமன்றுக்கான முதல் தேர்தல் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. GMT நேரப்படி இன்னும் 30 நிமிடங்களில் குறித்த வாக்களிப்பு மையம் மூடப்படும்.

இதுவரை வாக்களிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. இன்னும் வாக்களிக்காதவர்கள் தங்கள் சனநாயக உரிமையை பிரயோகிக்க வேண்டப்படுகின்றனர்.

தகவல்:

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

தற்போதைய GMT நேரப்படி 2332 வாக்கு நிலவரம் :

  1. ஏமுக - ஏக்கமுள்ளோர் கட்சி - நடுத்தர செயற்பாடு (4 votes [12.90%] - View)
  2. பமேக - படிக்காத மேதைகள் கட்சி - தீவிர செயற்பாடு (15 votes [48.39%] - View)
  3. யாமச - யாழ்கள மன்னர்கள் சபை - தீவிர செயற்பாடு (6 votes [19.35%] - View)
  4. யாஉகு - யாழ்கள உயர் குழாம் - மந்த செயற்பாடு (2 votes [6.45%] - View)
  5. யாகாக - யாழ் கள காதலர் கட்சி - மிக மந்த செயற்பாடு (3 votes [9.68%] - View)
  6. வாவா - வாழ்க்கை வாழ்வதற்கே கட்சி - மிக மந்த செய்பாடு (1 votes [3.23%] - View)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண அப்படியே எத்தனை வயதுக்கு உட்பட்டவர்கள் வாக்களிக்க ஏலாது என்றதையும் ஒருக்கால் அறியத்தந்தால் நல்லம்,அந்தப் பட்டியலுக்குள் யாயினியை போட்டு விடுங்கோ. :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி.. நீங்கள் யாழில் பதிவு செய்ய முடிந்திருக்கிற படியால்.. உங்களுக்கும் வாக்களிக்க உரிமை உண்டு. :lol::):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் சரி போட்டாச்சு...கள்ள வோட்டோ வெள்ளை வோட்டோ எனக்கு புரிய இல்லை..படிக்காத மேதைகள் கட்சி முன்ணணியில் நின்றிச்சு போட்டன்..:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றம் - தேர்தல் முடிவுகளும் - களமாளுமன்ற பொறுப்பாட்சி பற்றிய அறிவிப்பும். (26-12-2011)

yarlhouse.jpg

கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் களமாளுமன்றில் அவற்றின் ஆசனங்கள் தீர்மானிக்கப்படுகிறது.

ப. மே. க: 16 வாக்குகள் மொத்தம் 32 வாக்குகளில், மொத்த ஆசனங்கள் : 16

யா. ம. ச: 6 வாக்குகள் மொத்தம் 32 வாக்குகளில், மொத்த ஆசனங்கள்: 6

ஏ.மு.க: 4 வாக்குகள் மொத்தம் 32 வாக்குகளில், மொத்த ஆசனங்கள்: 4

யா.கா.க: 3 வாக்குகள் மொத்தம் 32 வாக்குகளில், மொத்த ஆசனங்கள்: 3

யா.உ.கு: 2 வாக்குகள் மொத்தம் 32 வாக்குகளில், மொத்த ஆசனங்கள்: 2

வா.வா: 1 வாக்கு மொத்தம் 32 வாக்குகளில், மொத்த ஆசனம்: 1

இந்த அதிகாரபூர்வ முடிவுகளின் பிரகாரம் முதலாவது யாழ் கள களமாளுமன்றில் அதிக ஆசனத்தைப் பெற்ற தனிக் கட்சியாக ப. மே. க உள்ளது. இருந்தாலும் எதிர்க்கட்சிகளும் மொத்தமாக 16 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. இதனால் ப.மே.க களமாளுமன்றில் ஆட்சிப் பொறுப்பேற்க தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.

அந்த வகையில் தொங்கு களமாளுமன்றம் அமையும் நிலை ஏற்பட்டுள்ளதால்.. ப.மே.க தேர்தலுக்குப் பின்னான கூட்டணி அமைத்து களமாளுமன்ற ஆட்சிப் பொறுப்பை ஏற்க கோரப்படுகிறது.

ப.மே.க வால் வரும் 01-01-2012 க்கு முன்னர் எதிர்க்கட்சிகளோடு பேசி கூட்டணி அமைத்து களமாளுமன்றில் அதன் அறுதிப் பெரும்பான்மையை (17 ஆசனங்களுக்குரிய உறுப்பினர்களின் ஆதரவு) நிரூபிக்காவிடத்து.. எதிர்க்கட்சிகளில் கூடிய ஆசனம் பெற்றுள்ள யா.ம.ச.. கூட்டணி ஆட்சி அமைக்க கோரப்படும்.

இந்தத் தேர்தல் அமைதியாகவும் கூடிய அளவு நேர்மையாகவும் நடக்க ஒத்துழைத்த கட்சிகள் மற்றும் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றிகள். வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

ஆணையாளர்:

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

Edited by nedukkalapoovan

ஏக்கமுள்ளோர் கட்சிக்கு வாக்களித்து ஆதரவு தந்த வாக்காளப் பெருமக்களுக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகள். :) :) :) :)

இந்தத் தேர்தலை மிகத்திறமையாக நடத்திய யாழகளமாளுமன்ற தேர்தல் ஆணையாளர் நெடுக்காலபோவானிற்கு எமது கட்சி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். :)

அதிக வாக்குகளைப் பெற்றுள்ள 'படிக்காத மேதைகள்

கட்சி' இற்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். :):icon_idea:

அத்துடன் இந்த தேர்தலில் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கலந்து கொண்டு களத்தை கலகலப்பாக்கிய படிக்காத மேதைகள் கட்சி, யாழ்கள மன்னர் கட்சி தோழர்களுக்கு வாழ்த்துக்கள். :lol::D

obama_poster_051110.jpg

அதிக வாக்குகளைப் பெற்றுள்ள 'படிக்காத மேதைகள்

கட்சி' எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் வா.வா கட்டசியின் பிந்திய தலைவர்.சிறி உங்கள் தலைவியை பேச்சுவாத்தைக்கு வரச்சொல்லுங்கோ.தகுந்த பதவி கிடைத்தால் ஆதரவு தர தயார் :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் வா.வா கட்டசியின் பிந்திய தலைவர்.சிறி உங்கள் தலைவியை பேச்சுவாத்தைக்கு வரச்சொல்லுங்கோ.தகுந்த பதவி கிடைத்தால் ஆதரவு தர தயார் :):lol:

வா.வா கட்சியை ஸ்தாபித்தவர் உங்களை கட்சியின் தலைமைக்கு தேர்வு செய்திருந்தால் அன்றி.. அதை அவர் இங்கு உறுதிப்படுத்தி இருந்தாலே அன்றி.. றோட்டால போற வாற எல்லாரும் நான் தான் கட்சித் தலைவன்னு வந்து நிற்க அதை ஏற்கும் நிலையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம் இல்லை.

வா.வா கட்சியின் ஸ்தாபகர் வந்து தனது கட்சியை தங்களிடம் ஒப்படைத்து அதற்கு தாங்கள் தலைமை தாங்குவதை உறுதி செய்தால்.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தாலும் அது உறுதி செய்யப்படும் வரை.. எந்தக் கட்சியினரும் மக்களும் இவ்வாறான அறிவிப்புக்களை கண்டு ஏமாற வேண்டாம்.

இவ்வாறான போலித் தலைமைகளோடு நீங்கள் நடத்தும் பேச்சுக்களை சுயாதீன தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளாது. <_<:):D

  • கருத்துக்கள உறவுகள்

vanakkam.jpg

நேற்று நடைபெற்ற, யாழ் களமாளுமன்றத் தேர்தலில் ப.மே.க.வுக்கு 50% விகித வாக்குகளை அளித்து எம்மை வெற்றிபெறச் செய்த அனைத்து வாக்காளர்களுக்கும், சிரம் தாழ்ந்த நன்றிகளையும், வணக்கங்களையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம்

:rolleyes::):wub:

அத்துடன் இத்தேர்தலில் பங்குபற்றிய யா.ம.ச., ஏ.மு.க.,யா.கா.க.,யா.உ.கு.,வா.வா.கட்சியினர்க்கும்... அவர்களுக்கு வாக்களித்த, வாக்காளர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும். :)

மேலும்... இத் தேர்தலை வன்முறை, காழ்ப்புணர்ச்சி, மட்டுறுனத்தினர்களின் கத்திரிக்கோலுக்கு வேலை வைக்காமல்... கொண்டு சென்ற கள உறவுகளை நினைக்க, உண்மையிலேயே.... நான், யாழ் கள உறுப்பினர் என்னும் முறையில் பெருமைப்படுகின்றேன் :wub: .

மிகுந்த நகைச்சுவையாகச் சென்ற பதிவு எனது மனதை விட்டு அகலாது :D .

இத் தேர்தலுக்கான அடித்தளத்தை இட்ட... நெடுக்காலைபோவானுக்கு மிக, மிக நன்றி :icon_idea: .

நெடுக்ஸ் இத் தேர்தலை 17.11.11 அன்று ஆரம்பித்து இதுவரை உள்ள 39 நாட்களில்... 20,789 பார்வையாளர்களையும், 1061 பதிவைகளையும் கடந்த இந்தத் தேர்தல் பலரையும் கவர்ந்ததற்கு அத்தாட்சி. பலரையும் கவர்ந்த இந்தத் தேர்தலை திறம் பட நடத்தியமைக்காக..... நெடுக்ஸிற்கு மீண்டும் பாராட்டுக்கள். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எமது தலைவர் தலைக்கு கீழ் வேலை கூடியதால் தற்காலிகமாக ஓய்வில் சென்றுள்ளார்.அவர் மீன்டு வரும் வரை நான் காபாந்து தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் நன்பர்களே. :)

வா.வா.கட்சியின் கால்பந்து தலைவராக சஜீவன் பொறுப்பெடுத்துள்ளார்.

நீங்க எப்படி, அந்தக் கட்சியினரை உங்கள் கட்சிக்கு, இழுப்பீர்கள்.

இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இதை எதிர்த்து சுப்ரீம் கோட் போக... ப.மே.க. தீர்மானித்துள்ளது.

இந்தத்துறை அலுத்துப்போச்சு. :rolleyes: .மற்றது எங்கட கட்சியோட சீன்டுறது நெருப்போட விளையாடுறதுக்கு சமன் :lol:

வா.வா கட்சியை ஸ்தாபித்தவர் உங்களை கட்சியின் தலைமைக்கு தேர்வு செய்திருந்தால் அன்றி.. அதை அவர் இங்கு உறுதிப்படுத்தி இருந்தாலே அன்றி.. றோட்டால போற வாற எல்லாரும் நான் தான் கட்சித் தலைவன்னு வந்து நிற்க அதை ஏற்கும் நிலையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம் இல்லை.

வா.வா கட்சியின் ஸ்தாபகர் வந்து தனது கட்சியை தங்களிடம் ஒப்படைத்து அதற்கு தாங்கள் தலைமை தாங்குவதை உறுதி செய்தால்.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தாலும் அது உறுதி செய்யப்படும் வரை.. எந்தக் கட்சியினரும் மக்களும் இவ்வாறான அறிவிப்புக்களை கண்டு ஏமாற வேண்டாம்.

இவ்வாறான போலித் தலைமைகளோடு நீங்கள் நடத்தும் பேச்சுக்களை சுயாதீன தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளாது. <_<:):D

இவளவு ஆதரங்கள் சமர்பித்துள்ளேன் :rolleyes: .மற்றும் நான் தலைமைப் பொறுப்பை ஏற்று இவளவு காலமும் ஸ்தாபக மலைவர் எந்த வித ஆட்ச்சேபனையும் தெரிவிக்கவில்லை.அத்துடன் இனியும் அவர் இந்த அரசியல் சாக்டையில் காலோ கையோ வைக்க மாட்டார் :lol: என்பதால்.நான்தான் தலைவன்.இதை ஏற்க்கா விட்டால் சர்வதேச நீதி மன்றம் வரை போவேன் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தீர்ப்பிற்கும், கள்ள ஓட்டுக்கும் மன்னர்கள் சபை தலை வணங்குகிறது..! :lol: பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் தேர்தலை திறம்பட ஒழுங்கமைத்து நடத்திய ஆணையருக்கும் நன்றிகள்..! :wub:

தேர்தல் ஆணையருக்கு..

விகிதாச்சார அடிப்படையில் இருக்கைகள் வழங்கியிருக்கிறீர்கள்..! :unsure:மொத்தம் 16 உறுப்பினர்கள் பமேக சார்பாக பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்..! :oஅவ்வளவு உறுப்பினர்கள் அவர்களது கட்சியிலேயே இல்லையே?? :lol:

ஆகவே களமாளுமன்றில் மொத்த ஆசனங்கள் 10 என்று அறிவித்துவிட்டால், அதன் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்களைக் கட்சிகள் தேர்ந்தெடுத்து பதவியை ஏற்றுக்கொள்ளச் செய்ய வசதியாக இருக்கும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர்களே..

நேற்றையதினம் நடைபெற்ற தேர்தலில் ப.மே.க 16 ஆசனங்களைப்பெற்று தற்காலிக வெற்றியடைந்துள்ளது.. அவ்வெற்றியை எமக்கு அள்ளி வழங்கிய தோழர்களுக்கு நன்றிகள் ஏற்கனவே நேற்று மதியம் வரை வாக்களித்தவர்களுக்கு ஊதாப்பூக்கள் கொடுத்துமதிப்பளித்திருந்தோம் மதியத்திற்கு பின்னரான நேரத்தில் வாக்களித்தவர்களுக்கு மதிப்பளிக்க ஒரு சங்கடம்; ஏற்பட்டிருந்தது அதாவது கடைசி நிமிடம் வரைக்கும் பதிவிட்ட வாக்குகளை அழித்து மீண்டும் வேறு கட்சிகளுக்கு குத்தக்கூடிய வகையில் தேர்தல் ஆணையகம் மிகச் சுதந்திரமான முறையில் வாக்குச்சாவடி முறையை அமைத்திருந்தது ஆதலால் கடைசி நிமிடம் வரைக்கும் மாற்றம் ஏற்படக்கூடிய சூழலை வாக்குச்சாவடிகள் கொண்டிருந்தமையால் எமக்கு அளிக்கப்பட்டவாக்குகளை வாக்குச்சாவடி மூடும் தருணத்திலேயே உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது... அந்தவகையில் நேற்று மதியத்திற்குப் பின்னான நேரத்தில் எமக்கு வாக்களித்தவர்களுக்கு எமது ஊதாப்பூ நன்றிகள்.

அந்த அட்டவணையில்...

"தத்துவச் சுரங்கம்" தோழர் வீணாவுக்கும்

blue-to-purple-perennial-flowers-1.jpg

"முத்து நகை" தோழர் நிலாமதிக்கும்

20071213124856_purple-flower.jpg

"ஆழநோக்கான்" தோழர் நீலப்பறவைக்கும்

tall_purple_flower2.jpg

"அட்டில் கலைச்சிற்பி" தோழர் சயீவனுக்கும்

165551698_ca888726c7_o.jpg

"ஆழித்திருமகள்" தோழர் அலை அரசிக்கும்

Asters.jpg

"யௌவன நிலவு" தோழர் யாயினிக்கும்

100518_purple-flower.jpg

இந்த ஊதா மலர்களைக் கொடுத்து ப.மே.க தனது அன்பினையும் மதிப்பினையும் அளிக்கிறது.

ஆஹா என்னோட அக்கா கட்சி ஜெயிச்சதால ஒரு பாட்டு போட போறனாம்............... :)

http://www.youtube.com/watch?v=5UQ2dzIm6QY

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு ஆதரங்கள் சமர்பித்துள்ளேன் :rolleyes: .மற்றும் நான் தலைமைப் பொறுப்பை ஏற்று இவளவு காலமும் ஸ்தாபக மலைவர் எந்த வித ஆட்ச்சேபனையும் தெரிவிக்கவில்லை.அத்துடன் இனியும் அவர் இந்த அரசியல் சாக்டையில் காலோ கையோ வைக்க மாட்டார் :lol: என்பதால்.நான்தான் தலைவன்.இதை ஏற்க்கா விட்டால் சர்வதேச நீதி மன்றம் வரை போவேன் :D :D

தேர்தல் ஆணையருக்கு..

சஜீவன் வாக்களித்ததே பமேக கட்சிக்கு.. :Dஇப்போது வாவா கட்சியின் தலைவர் பதவியும் வேண்டுமாம்.. பலே.. :lol:

விட்டால் வாவா கட்சியையே பமேகவுடன் இணைத்துவிடுவார்..! :Dகட்சிகளின் எண்ணிக்கை குறைந்தால் ஜனநாயகம் பஞ்சர் ஆகிவிடும் யுவர் ஆனர்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திரி ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை கலகலப்பாக்கி கொண்டிருக்கும் தோழர்களுக்கு மிகவும் நன்றிகள். ஆரம்ப நாள் முதல் இங்கு தனிமனிதத் தாக்குதல்கள் இடம்பெற்று இத்திரி மூடப்பட்டுவிடும் என்று அஞ்சியவர்கள் ஒதுங்கி இருக்க மிகத் தைரியமாக தனிமனித தாக்குதல்கள் இடம்பெறாவண்ணம் அவற்றை வென்று நட்பு வெளிகளின் கலகலப்பை நிலைநிறுத்துவோம் என்பதைப் பறைசாற்றி இங்கு கழகங்களை ஆரம்பித்து கடைசிவரை தன்னம்பிக்கையோடு கலகலப்பாக்கிய தோழர்கள் வாழ்த்திற்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.

இனி எங்களோடு கலகலப்பாய் இந்தத்திரியில் பயணித்த எதிர்க்கட்சிகளான

"எழுதாத இலக்கியம்"

ஏமுக - ஏக்கமுள்ளோர் கட்சிக்கும்

purple-wedding-bouquets.jpg

"வம்பர்கள் சபை"

யாமச - யாழ்கள மன்னர்கள் சபைக்கும்

purple-Balloon-Bouquet-2011.jpg

"திருந்தாத உலகம்"

யாஉகு - யாழ்கள உயர் குழாமுக்கும்

purple%20on%20plack%205.jpg

"காதலர் தேசம்"

யாகாக - யாழ் கள காதலர் கட்சிக்கும்

purple-wedding-bouquets5.jpg

"வாழ்வோம் இன்றே"

வாவா - வாழ்க்கை வாழ்வதற்கே கட்சிக்கும்

sweet_exchange_BF835_300.jpg

ஊதாப்பூங்கொத்துக்களை வழங்கி உவகையோடு கைகள் குலுக்குகிறோம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றுக்கு மேலாக "யாழ்க்கருத்துக்கள களமாளுமன்றம்" என்ற தலைப்புடன் சிரிப்பு வெடிகளுடன் ஒரு சுயாதீனத் தேர்தலை நடாத்தி முடித்துள்ள தேர்தல் ஆணையாளர் "அஞ்சா நெஞ்சன்" நெடுக்கருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். இந்த அஞ்சா நெஞ்சனையும் மதிப்பளித்து ப.மே.கழகம் அவருக்கு உகந்த உவப்பான சிறு பரிசை வழங்கி மதிப்பளிக்கிறது :lol:

purple_mens_tie_hanky.jpg

எதிர்காலத்தில் இப்பரிசுப்பொதி மாறவேண்டும் என்று அஞ்சா நெஞ்சனுக்காக படிக்காத மேதைகள் கழகம் பிரார்த்திக்கிறது. :lol: :lol: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற படிக்காத மேதைகள் கட்சிக்கு எனது வாழ்த்துக்களையும் தேர்தலை திறம்பட நடாத்திய நெடுக்கண்ணாவுக்கும் நன்றிகளையும் யாழ்கள காதலர் கட்சி சார்பில் தெரிவித்து கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ப .மே . கட்சியின் தலைவி எந்த கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது என்பதினை அறிவிக்கவேண்டும்.

meeting_table.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ப .மே . கட்சியின் தலைவி எந்த கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது என்பதினை அறிவிக்கவேண்டும்.

meeting_table.jpg

தோழர் கொள்கைக் கொம்பன் நானே நன்றியைச் சொல்லிவிட்டு ஆளைவிட்டால் காணும் என்று பின்னங்கால் பிடரியில அடிபட ஓடிக்கொண்டிருக்கிறேன் இப்படி மாட்டி விடலாமோ? :(

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தீர்ப்பிற்கும், கள்ள ஓட்டுக்கும் மன்னர்கள் சபை தலை வணங்குகிறது..! :lol: பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் தேர்தலை திறம்பட ஒழுங்கமைத்து நடத்திய ஆணையருக்கும் நன்றிகள்..! :wub:

தேர்தல் ஆணையருக்கு..

விகிதாச்சார அடிப்படையில் இருக்கைகள் வழங்கியிருக்கிறீர்கள்..! :unsure:மொத்தம் 16 உறுப்பினர்கள் பமேக சார்பாக பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்..! :oஅவ்வளவு உறுப்பினர்கள் அவர்களது கட்சியிலேயே இல்லையே?? :lol:

ஆகவே களமாளுமன்றில் மொத்த ஆசனங்கள் 10 என்று அறிவித்துவிட்டால், அதன் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்களைக் கட்சிகள் தேர்ந்தெடுத்து பதவியை ஏற்றுக்கொள்ளச் செய்ய வசதியாக இருக்கும்..! :rolleyes:

மன்னர் இசைக்கலைஞன் அவர்களின் வேண்டுகோளை யாழ்கள மன்னர்கள் சபை ஆதரிக்கின்றது.  பத்து அடிப்படை உறுப்பினர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிராத  ஒரு கட்சி எந்த அடிப்படையில் பதினாறு உறுப்பினர்களை களமாளுமன்றிற்கு  அனுப்பலாம்.   ஆகவே மொத்தக் களமாளுமன்றிற்கான  உறுப்பினர்களை பத்தாகக் குறைப்பதே நல்லது.  பின்னர் பெற்ற வாக்குகள் அடிப்படையில் விதாசார முறைப்படி கட்சிகளுக்கு அங்கத்தவர்களை ஒதுக்கலாம்.   ஒவ்வொரு கட்சியும் தங்கள் உறுப்பினர்களைப் பிரேரித்து களமாளுமன்றிற்கு அனுப்பலாம்     பதவியேற்பு நாள்  தேர்தல் ஆணையாளர் அவர்களால் அறிவிக்கப்பட்டு அவர் முன்னிலையில் நடைபெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்   :rolleyes: யா ம ச

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையருக்கு..

விகிதாச்சார அடிப்படையில் இருக்கைகள் வழங்கியிருக்கிறீர்கள்..! :unsure:மொத்தம் 16 உறுப்பினர்கள் பமேக சார்பாக பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்..! :oஅவ்வளவு உறுப்பினர்கள் அவர்களது கட்சியிலேயே இல்லையே?? :lol:

ஆகவே களமாளுமன்றில் மொத்த ஆசனங்கள் 10 என்று அறிவித்துவிட்டால், அதன் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்களைக் கட்சிகள் தேர்ந்தெடுத்து பதவியை ஏற்றுக்கொள்ளச் செய்ய வசதியாக இருக்கும்..! :rolleyes:

மன்னர்கள் சபையின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு.. களமாளுமன்றிற்கான மொத்த ஆசனங்கள் 10 (ஆளும் கட்சி + எதிர்கட்சி) ஆகவும்.. கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளுக்கு இணங்க ஆசன ஒதுக்கீடுகளும் வழங்கப்பட களமாளுமன்ற யாப்பிற்கான இரண்டாவது திருத்தம் இதனூடு வெளியிடப்படுகிறது.

யாழ் கள களமாளுமன்றம்.. யாப்புத் திருத்தம் 02.

1. யாழ் கள களமாளுமன்றில் உறுப்பினர் சபைக்கு மொத்தம் 13 உறுப்பினர்கள் என்ற வரையறையை களமாளுமன்றின் பிரதான எதிர்கட்சியான யா.ம.க வின் பரிந்துரையின் வடிவத்தினை அடிப்படையாகக் கொண்டு... சுயாதீன தேர்தல் ஆணையகம் வரையறுப்பதோடு.. இதனை கட்சிகளும் மக்கள் சபையும் ஏற்று களமாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதோடு அதற்கு ஏற்ப பதவிநிலைகளை அலங்கரிக்கச் செய்ய கேட்கப்படுகின்றன.

2. அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு விகிதாராச அடிப்படையிலும்.. ஒரு போனஸ் ஆசனமும் வழங்கப்படும். மற்றைய கட்சிகளுக்கு விகிதாசார அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

3. ஒதுக்கப்படும் ஆசனங்களின் அடிப்படையில் பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சியமைக்கும் உரிமையை தக்க வைக்கும்.

4. களமாளுமன்றி ஆட்சி அமைக்க குறைந்தது குறைந்தது 7 ஆசனங்களைப் பெற்றிருப்பது அவசியம்.

5. கட்சி ஒன்று ஆட்சி அமைக்க தேவையான குறைந்தது 7 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளாவிடத்து தேர்தலுக்குப் பிந்தைய.. (தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகளை யாப்பு அங்கீகரிக்காது.) கூட்டணிகளை அமைத்து ஆட்சி அமைக்க தேவைப்படும் உறுப்பினர் தொகையை ஈட்டி அந்தக் கட்சி/கட்சிகளுடன் ஆதரவோடு ஆட்சி அமைக்க இந்த யாப்புத் திருத்தத்தோடு வழி செய்யப்படுகிறது.

இந்தப் பதிவில் மாற்றங்களோ திருத்தங்களோ செய்யப்படலாகாது. செய்யப்படின் இந்தத் யாப்புத் திருத்தம் செல்லுபடியற்றதாகும். அதுமட்டுமன்றி இந்த யாப்புத் திருத்தம் ஏனைய யாப்பு விதிகளோடு சேர்த்து அவதானிக்கப்படுதல் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும். இவற்றை மக்கள் சபையோ உறுப்பினர்கள் சபையோ தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது. அப்படி நிராகரிக்க வேண்டின்... மக்கள் சபையின் முன் இந்தத் திருத்தம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 20 பச்சைப்புள்ளிகள் பெறப்படும் பட்சத்தில் மட்டுமே அந்த நிராகரிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு மாற்று யோசனையை சுயாதீன தேர்தல் ஆணையகம் களமாளுமன்றில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யும்.

திருத்தம் வெளியீடு: 26-12-2011

மேற்படி திருத்ததில்.. மன்னர்கள் சபையின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு.. களமாளுமன்றிற்கான மொத்த ஆசனங்கள் 10 (ஆளும் கட்சி + எதிர்கட்சி) ஆகவும்.. கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளுக்கு இணங்க ஆசன ஒதுக்கீடுகளும் வழங்கப்பட களமாளுமன்ற யாப்பிற்கான இரண்டாவது திருத்தம் இதனூடு வெளியிடப்படுகிறது.

சிவப்பில் காட்டிய தொகை 13 ஆக அமைய வேண்டும்.

இது மேற்படி திருத்தத்தின் பின் இணைப்பு.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.