Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் பிரமாண்ட பிரச்சார கூட்டத்திற்கு வந்திருக்கும் மக்கள் தொகையை பாருங்கள்

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பென்னெ உன் இதயம் கோயில் அல்லவா அதில் நான் பத்தன் அல்லவா

http://www.youtube.com/watch?v=6Uv8dISSxH4

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் கட்ச்சில இணைந்தா உங்களுக்கு கலர் கலரா கனவு வரும் . அத்தோடு மகிழ்ச்சி வரும் தேவதை கண் முன்னால் வந்து நிக்கும் போல் ஒரு பீலிங் வரும்........ காதலை எப்படி ஆரம்பிக்கிரது என்று எங்களிடம் கேக்கவும்........உங்களுக்காக்கத் தான் இந்த கட்ச்சி...........நீங்கள் காதலை பற்றி என்னவும் கேக்கலாம் , அதுக்கு எங்களிடம் நிறைய மருந்து இருக்கு............

Edited by பையன்26

இதோ 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியின் சார்பில்:

http://www.youtube.com/watch?v=PC2Z3bqCXzY&feature=fvsr

மேலும் தொடரும் :wub: :wub: :wub:

Edited by தமிழச்சி

மதுவிலக்கு பற்றி எந்த கட்சி தனது தெளிவான கொள்கை பிரகடனத்தை வைக்கின்றதோ அதில் $500.00 டிபோசிட் கட்டி அங்கத்தவராக ரெடி.(மாது விலக்கு கொள்கை பிரச்சனையில்லை அது கொள்கையில் இல்லாவிட்டாலும் வைக்கத்தானே போறம் )

டாஸ்க்மா லைசென்சும் பின்னர் மந்திரியானதும் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதும் முன் நிபந்தனை. இடையில் வசதிக்கேற்ப கட்சிமாறலாமா? அப்பிடி மாறினால் போட்டு தள்ள மாட்டீர்கள் தானே.

அர்ஜுன், அதற்கு ஏற்ற கட்சி நம்ம கட்சிதான். அதிலை உங்களைப் பதிந்து விடுங்கோ. இப்ப எங்கள் கட்சிதான் முன்னணியலில் இருக்கிறது.

http://popsop.com/28342

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சிக்கு புதிதாக இணைந்துள்ள தமிழச்சி அக்கா, சஜீவன் அண்ணா மற்றும் நுனாவிலான் அண்ணா எல்லோரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். இவர்களைப் போல ஏனைய கள உறவுகளும் நலதொரு முடிவினை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

தமிழச்சி அக்காவின் சொல்படி ரதி அக்காவையும் தணந்து கட்சியை கலைத்து விட்டு எம்முடன் இணைந்து வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ருசித்து வாழ அழைக்கிறேன். அர்ஜுன் அண்ணா இணையும் பட்சத்தில் அவருக்கு குடிமக்கள் தலைவர் :wub: பதவியை வழங்குவது பற்றி கட்சி மத்திய குழு முடிவெடுக்கும். வேறு கட்சிகளை தொடங்க முடியாது என்று களமாடுமன்ர இயக்குனர் நெடுக்ஸ் கூறியிருப்பதால் ராஜவன்னியன் அண்ணா அவர்களையும் செஞ்சிக்கோட்டை சிங்கம் புரட்சி, மதராசி அவர்களையும் எங்களுடன் இணைந்து வாழ்கையை அனுபவித்து வாழ அழைக்கிறோம். பிரான்சிலிருந்து இரு முக்கிய புள்ளிகளையும் ஜெர்மன் அன்பர் ஒருவரையும் நாம் இன்னமும் எதிர் பார்த்தபடி உள்ளோம் என்பதையும், அவர்கள் இருவருக் வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழ்பவர்கள் என்பதால் அவர்கள் எமது கட்சியில் இணைவார்கள் என்ற பெரும் நம்பிக்கை எமக்கு ஏற்ற்பட்டிருக்கிறது :icon_mrgreen:.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு எங்களிடம் நிறைய மருந்து இருக்கு............

மருந்தா? "வயாக்ரா" விக்கிறதுக்கெல்லாம் ஒரு கட்சி தேவையா? அதுக்குத் தான் பார்மசி இருக்கே? :lol::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

எமது கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள அமெரிக்க அன்பர் ஜஸ்டின் அண்ணாவை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதிகரிக்கும் வா.வா. கட்சியின் உறுப்பினர் தொகையை பார்த்து மற்றைய கட்சிகாரர் வாயை பிளந்து நிற்பதை கடைசியாக கிடைத்த சட்லைட் படங்கள் உறுதி செய்கின்றன. இன்னமும் முடிவு எடுக்காதவர்களையும் விரைவாக நல்லதொரு முடிவை எடுத்து எமது கட்சியில் சேருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். எம்மீது நம்பிக்கை வைத்து எம்மோடு இணைந்த அனைத்து தோழர்களுக்கும் உளம் கனிந்த நன்றிகள்.

பி.கு - வட்டச்செயலாளர் பதவி வெற்றிடமாக இருப்பதால் தகுதியானவர்களை பிரேரணை செய்யுமாறு கட்சித் தோழர்களிடம் அன்பு வேண்டுகோள் விடுவிக்கப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சகாராவின் "படிக்காத மேதைகள் "கட்சியில் உறுப்பினராக வர விரும்புகிறேன்.

அதன் சிந்தனைகளை மாற்றங்களை கொள்கைகளை அவ்வப்போது அறியத்தரவும். :lol:

ப.மே.க. கட்சியில் இணைந்து கொண்ட நிலாமதி அக்காவுக்கு பூச் செண்டுflower.gif கொடுத்து வரவேற்கின்றோம்.

நிலா அக்காவை மகளிர் அணியின் தலைவியாக, கட்சி நியமிக்கின்றது.

மகளிர் அணியினரை கொண்ட ஒரே கட்சி ப.மே.க. தான்...

பெண்களுக்கு 50% உரிமை கிடைக்க எமது கட்சி பாடுபடும் என்பதால்....

யாழில் மிச்சமுள்ள மகளிரும் வந்து இணையும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

ராஜவன்னியன், புரட்சி ஆகியோர் எமது கட்சியில் இணைவதற்காக.... எமது கட்சி அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகsmileycar107.gif செய்தி கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். :)

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

பல மணி நேர தாகம் எடுத்து தவிக்கும் போது எதிரே தெரியும் தெளிந்த நீரோடையில் கையை பரப்பி தாகத்துக்கு தண்ணி அள்ளி குடிக்கும் போது வரும் சந்தோசத்தை ஜஸ்ரினின் இணைவு எம் கட்சிக்கு ஏற்படுத்துகின்றது. தன் கருத்தில் தனக்கு தெட்டத் தெளிவான பார்வையை கொண்டிருக்கும் மிகச் சில யாழ் கருத்தாளர்களில் ஒருவரான ஜஸ்ரினின் இணைவு பெரு உவகையை தருகின்றது

நாம் எல்லாரும் பல சாவு பார்த்தவர்கள். கண் முன்னே நாம் அன்புற்று பழகிய பல உறவுகளை சில வினாடிகளில் நினைத்தும் பார்க்கா வண்ணம் சிதறிப் போனதை பார்த்தவர்கள். சாவும் வாழ்வும் எமக்கு மிக மிக அருகில் பயணித்ததை உணர்வு பூர்வமாக அறிந்தவர்கள். ஆகவே தான் ஒவ்வொரு நிமிட வாழ்வும் எமக்கு மிகப் பெறுமதியாகின்றது. இவ்வளவு இழப்பின் பின்னும் நாம் வாழ்வை ரசிக்கின்றோம். ஒரு புதிய குழந்தையின் வரவை கைதட்டி வரவேற்கின்றோம். ஒரு நல்ல இசையை ரசிக்கின்றோம்... வாழ்வை அதன் முழுப் பரிமாணங்களினூடு ரசிக்கின்றோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே;

எத்துணை இடர் வரினும், எந்த சவால்கள் வரினும் எமக்கான இந்த வாழ்வை; எமக்காக மற்றவரால் வாழமுடியாது எம்மால் மட்டுமே வாழக்கூடிய இந்த பெருவாழ்வை வாழ்வோம்

ஒவ்வொரு நிமிடமும் எமக்கானவை; அதில் ஒரு நிமிட எம் நடவடிக்கை உலகையே மாற்றி விடலாம் எனும் நம்பிக்கையில்

தன்னம்பிக்கை கொண்ட அனைவரையும் எம் கட்சிசயில் சேருமாறு அழைக்கின்றோம்

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றுக்கு தம்மை பதிவு செய்துள்ள கட்சிகளின் விபரம் வருமாறு. இதுவரை களமாளுமன்ற அங்கீகாரத்திற்கு வேண்டப்பட்ட ஐந்து கட்சிகள் நிரந்தர பதிவுக்கான அங்கத்துவ ஆதரவைப் பெற்றுள்ளன. அனைவருக்கும்.. யாழ் கள களமாளுமன்ற திட்டமிடல் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

எமது பணி.. முதல் தேர்தல் வரை இருக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் நாங்கள்.. தேர்தல் திணைக்களப் பணி மற்றும் தேர்தல் கண்காணிப்பு.. (சுயாதீன தேர்தல் குழு ஒன்றே தேர்தல்களை அறிவிக்கவும்.. நடத்தவும் செய்யும். எதிர்கால தேர்தல்கள்.. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில்.. கட்சிகளுடனான ஆலோசனையின் பின் தீர்மானிக்கப்படும்.) தவிர்ந்த மற்றைய பொறுப்புக்களில் இருந்து எம்மை விடுவித்துக் கொண்டு.. சுதந்திரமான கட்சி செயற்பாடுகளுக்கு முற்றாக இடமளிப்போம்.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) + நிரந்தரப் பதிவு நிலை

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (2) பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (4) பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (1)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (2) பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) (4) பதியப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) (6) பதியப்பட்டுள்ளது.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா.) (0)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி.) (0)

நிரந்தரப் பதிவு பெற்றுள்ள கட்சிகள்.. தங்கள் அங்கத்துவர் பட்டியலை வெளியிடுவதோடு.. தேர்தல் மற்றும் கட்சி கொள்கை வகுப்புக்கள்.. கட்சிக்கான கொடி.. இலட்சினை.. போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம். 5 வது கட்சியும் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும்.. இன்னும் 24 மணி நேரங்கள் GMT 22:00 19-11-2011 இல் இருந்து மேலும் வாய்ப்புக் கோரும் கட்சிகள் இரண்டுக்கு (ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டும்.. புதிய கட்சிகளை எனிப் பதிய முடியாது.)நிரந்தரமாகப் பதிய வாய்ப்பளிக்கப்படும். அதற்கு மேல் எந்தக் கட்சிகளுக்கும் நிரந்தரப் பதிவு வழங்கப்படமாட்டாது. அதன் பின்னர்.. தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதற்கு முன் களமாளுமன்ற பொதுவிதிகள் சமர்பிக்கப்பட்டு.. அங்கீகாரம் கோரப்படும்.

நன்றி. :):lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரேரிக்கப்பட்டுள்ள முதற்கட்சி: குளவி கூட்டமைப்பு கட்சி (கு. கூ.க)

கட்சியின் அடிப்படை நோக்கு: யாழ் களத்திற்கு வருவோரை கதை, கவிதை, கருத்தென்று கடிப்பது. மற்றைய கட்சிகள் செயற்படமால் செய்து தமிழ் ஒற்றுமைக்கு பெருமை சேர்ப்பது.

கட்சி வாக்கு: போடு வோட்டு, வாங்கு குத்து.

கட்சி பிரேரிப்பு: கொசு

கட்சித் தலைவர்: குளவிண்ட குவீன் குத்தம்மா

கட்சி உறுப்பினர்கள்: தேனீ, நுளம்பு, இலையான், கொசு, குவீன் குத்தம்மாவின் உடன் பிறவா சகோதரி சொறியம்மா (அமைச்சர் ஈசல் வந்தானந்த யாழ் செர்வர் ஊழலில் ஈடுபட்டு இப்போது இராஜினாமா செய்துள்ளார். )

கட்சி இலக்குகள்: மற்றைய கட்சிகள் திறம்பட செயல்படுவதை தடுத்தல். நாமும் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருத்தல். சன நாயகம் பற்றி விரல்கள் திணற திணற கருத்து பதிவு செய்தல். தும்புத்தடி, மலத்தியோன், டி.டி.க்கு உடனடி தடை விதித்தல்.

கட்சி மார்கெடிங் இலவசம்: உங்கள் வீக்கமும், நோவும் மாற புளியும் சாம்பலும் இலவசமாக அளிப்போம்.

கட்சியின் சின்னம்/படம்:

NoBroomS-794697.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

yarlhouse.jpg

யாழ் கள களமாளுமன்றம்: "Yarliament" - Governing Body.

அடிப்படைக் கட்டமைப்பு:

அ: உறுப்பினர்கள் சபை- Members' council (ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி)

ஆ: மக்கள் சபை - People's Council (யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும்)

ஆளும் கட்சி பதவி நிலைகள்:

பிரதமர் + இரண்டு அமைச்சுக்கள் (மட்டும்) + களமாளுமன்ற உதவிச் சபாநாயகர் (தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி.. ஆட்சி அமைக்க அழைக்கப்படும். கட்சித் தலைமை பதவி நிலைகளை தீர்மானிக்கும். அதுவே பதவிகளை நிரல்படுத்தும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை. மக்கள் சபை.. பதவிக்குரியவர்களை பெரும்பான்மை கொண்டு நிராகரிப்பின்.. பதவி நிலைகள் மாற்றப்பட வேண்டும். ஒருவர் ஒரே தடவையில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது. போதிய உறுப்பினர்கள் இல்லையேல் பதவி வெற்றிடமாக விடப்பட வேண்டும். மக்கள் சபை அந்தப் பதவியை தமக்குள் எடுத்துக் கொண்டு பணி செய்யும்.)

எதிர்க்கட்சி பதவி நிலைகள்:

நிழல் பிரதமர் + ஆளும் தரப்பு அமைக்கும் அமைச்சுக்களுக்கு ஒத்த.. இரண்டு நிழல் அமைச்சுக்கள் (மட்டும்) + களமாளுமன்ற சபாநாயகர். (எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பதவி அளிக்கப்பட வேண்டும். தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கான பதவிகள் நிரல்படுத்தப்படும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை)

(களமாளுமன்றம் 5 கட்சிகளுக்கு மட்டுப்படுத்திய ஒரு மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்பு என்ற வகையில்.. இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கட்சிகளின் எண்ணிக்கையை சிறிது அதிகரிக்கும் போது பதவி நிலைகளில் சில அதிகரிப்புக்கள் நிகழலாம். மற்றும்படி அடிப்படை விதி முறைகள் பெரிதாக மாற்றப்பட மாட்டாது.மிகுதி விதிமுறைகளும்... அடிப்படை கட்டமைப்பு விபரங்களும் தொடரும்..!)

==========================================================================================

பிரேரிக்கப்பட்டுள்ள முதற்கட்சி: குளவி கூட்டமைப்பு கட்சி (கு. கூ.க)

கட்சியின் அடிப்படை நோக்கு: யாழ் களத்திற்கு வருவோரை கதை, கவிதை, கருத்தென்று கடிப்பது. மற்றைய கட்சிகள் செயற்படமால் செய்து தமிழ் ஒற்றுமைக்கு பெருமை சேர்ப்பது.

கட்சி வாக்கு: போடு வோட்டு, வாங்கு குத்து.

கட்சி பிரேரிப்பு: கொசு

கட்சித் தலைவர்: குளவிண்ட குவீன் குத்தம்மா

கட்சி உறுப்பினர்கள்: தேனீ, நுளம்பு, இலையான், கொசு, குவீன் குத்தம்மாவின் உடன் பிறவா சகோதரி சொறியம்மா (அமைச்சர் ஈசல் வந்தானந்த யாழ் செர்வர் ஊழலில் ஈடுபட்டு இப்போது இராஜினாமா செய்துள்ளார். )

கட்சி இலக்குகள்: மற்றைய கட்சிகள் திறம்பட செயல்படுவதை தடுத்தல். நாமும் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருத்தல். சன நாயகம் பற்றி விரல்கள் திணற திணற கருத்து பதிவு செய்தல். தும்புத்தடி, மலத்தியோன், டி.டி.க்கு உடனடி தடை விதித்தல்.

கட்சி மார்கெடிங் இலவசம்: உங்கள் வீக்கமும், நோவும் மாற புளியும் சாம்பலும் இலவசமாக அளிப்போம்.

கட்சியின் சின்னம்/படம்:

NoBroomS-794697.jpg

மன்னிக்கனும்.. களமாளுமன்றுக்கு அனுமதிக்கப்பட்ட 5 கட்சிகளும் பதிவுசெய்யப்படாகிவிட்டது. எனி புதிய கட்சிகளை தற்காலிகமாக வேணும் பதிய முடியாது. களமாளுமன்ற கொள்கைகள் மிக இறுக்கமானவை. அந்த வகையில் உங்கள் தெரிவு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இருந்தாலும்.. நீங்கள் ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டு.. நிரந்தரப் பதிவுக்கு காத்திருக்கும் கட்சி உறுப்பினர்களோடு கலந்து பேசி.. உங்கள் கட்சியை அவர்களின் இடத்தில் பதிவு செய்து நிரந்தர.. பதிவுக்கு அங்கத்தவர்களை திரட்ட வாய்ப்பளிக்கின்றோம். இதற்கும் ஒரு குறுகிய கால நேரம் அளவே தரப்பட்டுள்ளது. மேலே உள்ள விபரங்களை தாழ்மையுடன் படிக்க அன்போடு வினவிக் கொள்கின்றோம். உங்களின் தன்னார்வத்திற்கு மதிப்பும் வரவேற்பும் அளிக்கிறோம். :)

களமாளுமன்ற திட்டமிடல் மற்றும் தேர்தல் ஆயத்த அமையம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவார் பே. மா. க. கட்சியிடம் பச்சை புள்ளி இலஞ்சம் வாங்கி புது புது சட்டங்களை புகுத்தி யாழ் கள சன நாயகத்தை சாகடிப்பதை வன்மையாக கு. கூ. க. தலைவி, அம்மா, சித்தி, மாமி குத்தம்மா கண்டிக்கிறார்.

குளவிக்கட்சியில் இன்று சேர்வோருக்கு ஒரு முதுகு சொரியும் கரண்டி இலவசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவார் பே. மா. க. கட்சியிடம் பச்சை புள்ளி இலஞ்சம் வாங்கி புது புது சட்டங்களை புகுத்தி யாழ் கள சன நாயகத்தை சாகடிப்பதை வன்மையாக கு. கூ. க. தலைவி, அம்மா, சித்தி, மாமி குத்தம்மா கண்டிக்கிறார்.

குளவிக்கட்சியில் இன்று சேர்வோருக்கு ஒரு முதுகு சொரியும் கரண்டி இலவசம்.

இது எந்த அடிப்படைகளும் அற்ற குற்றச்சாட்டு. களமாளுமன்ற திட்டமிடல் அமைப்பின் ஆரம்பப் பதிவிலேயே நிபந்தனைகளை விளக்கிவிட்டோம். மன்னிக்கனும் நண்பரே. உங்கள் கட்சியை நீங்கள் பதிவு செய்ய உள்ள ஒரே மார்க்கம்.. ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டுள்ள கட்சிகளிடம் அனுமதிபெற்று.. அவர்களின் கட்சிக்குப் பதில் உங்களின் கட்சியை பதிவு செய்து அதற்கு நிரந்தர பதிவுரிமை பெற்றுக் கொள்வது மட்டுமே. மேலும் நாங்கள் வழங்கிய இரு வார கால அவகாசத்திற்கு முன்னரே 5 பிரதான கட்சிகளும் பதியப்பட்டுவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். கட்சிகள் இலஞ்சம் அன்பளிப்பு வழங்கலாம். ஆனால்.. திட்டமிடல் சபை அதற்கு எல்லாம் விலை போகாது. :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள மாமன்ற இயக்குனருக்கும், பொது மக்களுக்கும்.....

ப.மே.க.வின் மத்திய குழு நேற்று அவசரமாக கூடி,

தனது கட்யின் கொடியை மாற்றியுள்ளதை அறியத்தருகின்றோம்.

அத்துடன் எமது கட்யின் சின்னம் பாம்பு என்பதையும் பதிவு செய்யும்படி வேண்டிக் கொள்கின்றோம்.

249px-Purple_flag_waving.svg.png

99ae880d.gifsnake3.gifSnake_caraoke.gif

நான் ஜீவா அவர்களின் தலைமை ஏற்று காதலர் கட்சியில் இணைகிறேன். எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.(அப்பதான் பின்னர் ஆட்சியை பிடிக்கலாம்) நான் எங்கள் கட்சியின் கொள்கையை பரப்புவதற்காக எங்கள் கட்சியில் இணைபவர்களிற்கு தினமும் 10 முத்தங்கள் கொடுப்பதாக தீர்மானித்துள்ளேன் முதலாவதாக எங்கள் தலைவர் ஜீவாவிற்காக இதோ

images.jpg

என்னுடைய கட்சியில் ஒருவரும் இணையவில்லை என சோர்ந்து போக மாட்டார் இந்த ரதி...கட்சியில் ஒருவரும் இணையா விட்டாலும் தனித்து நின்று போராடுவேன்[விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை :D ]...தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்கா விட்டால் இந்த களமாளுமன்றத்தையே கலைப்பேன் என எச்சரிக்கை விடுகிறேன்

கவலைய விடுங்க ரதி உங்கள சோர்ந்துபோகவிடமாட்டோம் இதோ நான் உங்கள் கட்சில உடனே இணைகிறேன். ஆமா உங்கள் கட்சி பேர் என்னா சொன்னீங்க??

  • கருத்துக்கள உறவுகள்

செண்பகன் உங்களுக்காக இசைக்கலைஞனும் நானும் மன்னர்கள் சபையின் வாசலில் காத்திருக்கின்றோம். :wub:

முதலில் எங்கள் கட்சியில் சேருங்கள்.

பின்னர் எல்லோரும் கூடிப் பேசி பதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். :lol:

எங்கள் கட்சியில் இருந்து யாரும் எப்போதும் வெளியேறி வேறு கட்சியில்

சேரலாம்.

மாற்றுக் கட்சிக்குச் சென்று  அங்கிருக்கும் ஒரு சிலரையும் சேர்த்துக் கொண்டு மீண்டும் எங்கள் கட்சிக்கும் வரலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் குளவி அவர்களே உங்கள் கொள்கைகளும் மன்னர்கள் சபையின்

கொள்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. :)

அதனால் உங்கள் கட்சிப் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில்

நீங்களும் மன்னர்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்

உங்கள் பிரச்சாரம் மன்னர்கள் சபைக்கு அவசியம் :D

வாருங்கள் குளவி வந்து கொட்டுங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க.வின் மத்திய குழு நேற்று அவசரமாக கூடி,

தனது கட்யின் கொடியை மாற்றியுள்ளதை அறியத்தருகின்றோம்.

அத்துடன் எமது கட்யின் சின்னம் பாம்பு .

249px-Purple_flag_waving.svg.png

99ae880d.gifsnake3.gifSnake_caraoke.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாம்புகளையெல்லாம் காட்டி எங்களைப் பயமுறுத்த முடியாது என்பதையும் ப மே க வினருக்கு அறியத் தருகின்றோம். :lol:

யா ம ச வின் கொடி எது சின்னம் எது என்பது

இன்னும் இரண்டு உறுப்பினர்கள் சேர்ந்தால் தெரியும்

நிச்சயமாக சின்னம் கீரியாக இருக்காது :lol:

Edited by வாத்தியார்

இந்த திரி 28.11.11 வரை இழுத்து மூடப்படுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அண்ணன் மன்னன் நெப்போலியன்

வாழ்ந்த நாட்டிலிருந்து வந்திருக்கும்

சொல்லின் மைந்தன் சுவி அவர்களை :D

மன்னர்கள் சபைக்கு ஆதரவு நல்கும்படி

வேண்டிக்கொள்கின்றோம்

யா ம ச

தொடர்ந்து எங்கள் தளபதி  இசைக்கலைஞன் அவர்கள

யா ம ச விற்கு ஆதரவு தேடி உங்கள் முன் உரையாற்றுவார் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.