Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஷமிகளால் தீ வைத்து அழிக்கப்பட்ட லண்டன் முத்துமாரியின் சித்திரத் தேர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஷமிகளால் தீ வைத்து அழிக்கப்பட்ட லண்டன் முத்துமாரியின் சித்திரத் தேர்

  • Saturday, November 19, 2011, 11:28

லண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவிலின் சித்திரத் தோர் கடந்த 16 ஆம் திகதி இரவு 11 மணிக்குத் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி ஆலயம் கடந்த 15 வருட காலமாக லண்டன் ரூட்டிங் பகுதியில் சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருவதுடன், மேற்படி சம்பவத்தை சிவயோகம் அறங்காவலர் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப் பூசை முடிவுற்று திருக்கோயில் நடைசாத்தப்பட்டது. சுமார் இரவு 11.00 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று எரிபொருட்கள் (எரிதிரவம்) சகிதம் வந்து, கடந்த 11 வருடங்களாக அம்பாள் திருவீதி உலாவந்த, சித்திரத் தேரை தீவைத்து அழித்துள்ளனர்.

இச்சம்பவத்தை கண்ட அயலில் உள்ளவர்கள் கொடுத்த தகவலில் விரைந்து வந்த பொலிசாரும் தீயணைப்புப் படையினரும் செயற்பட்டு தீயை ஏனய கட்டிடங்களுக்குப் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும், சித்திரத்தேர் மீண்டும் உபயோகிக்க முடியாத அளவிக்கு எரிந்துவிட்டது.

அதே சித்திரத்தேரைத் தற்போது செய்வதாயின் £100,000 ற்கு மேல் செலவாகும் என்று கூறிய இத் சித்திரத்தேரை உருவாக்கிய சிற்பாசிரியார் கலாநிதி ஜெயகாந்தன் சரவணமுத்து அவர்கள் மேலும் கூறுகையில்,

இத்தேரில் காணப்படும் சிற்பங்களும் அதன் அமைப்பும் பிரத்தியேகமானவை என்றும், அவ்வாறு மீண்டும் உருவாக்கப்படுவது என்பது சாத்தியமற்றுது என்றும் தெரிவித்தார்.

நான்கு பேர்களால் நடாத்தப்பட்ட இந்த நாசகாரச் செயற்பாடுகள் அனைத்தும் துல்லியமாக திருக்கோயில் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. இப்பதிவுகள் அனைத்தும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் அமைந்திருக்கும் கட்டிடத்தின் குத்தகைக் காலம் மார்ச் 2011 உடன் முடிவடைந்துவிட்டது. நீதிமன்றம் கட்டிடத்தில் இருந்து உடனடியாகத் திருக்கோயிலை வெளிக் கொண்டு செல்லவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பிற்கமைய, அம்பாளுக்குச் சொந்தக் காணிக்கொள்வனவிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இம்முயற்சிகளுக்கெதிராகச் சிலர் செயற்பட்டும் வருகின்றனர். புதிய காணிக்கான கொள்வனவிற்கு யாரும் நிதியுதவி செய்யக்கூடாது என்ற பரப்புரைகளும் இடம்பெற்றுவருகின்றது.

“அனுக்கிரகம் பெறுவதிற்கு பணம் கொடுத்துதவி கோயில் கட்டுவதால் எந்த நன்மையும் அடையப்போவதில்லை” என்றும் “ கற்களால் ஆலயம் எழுப்பி வணங்க வேண்டுமென எந்த நியதியுமில்லை” போன்ற கருத்துக்களை பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்குப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுப்பிவருகிறார்கள்.

முத்துமாரிக்கு ஆலயம் ஒன்று இருக்ககூடாது என்று ஒருசிலர் பிரச்சாரம் செய்து வரும் காலங்களில் சித்திரத்தேர் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயம் தனியாக வழிபாட்டுத்தலமாக அமையாது இந்நாட்டில் தமிழர்களின் கலாசாரச்சின்னமாகவும், தாயகத்தில் பல நூற்றுக்கணக்கான மக்களின் துயர் துடைக்கும் பணியிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக இந்துக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது.

இந்துக்களின் நம்பிக்கையை அழிக்கும் முயற்சியிலும் அம்பாளின் சின்னங்களை உதாசீனப்படுத்தி அம்பாளை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவளுடைய சீற்றத்தில் இருந்து தப்பமுடியாது என்பது நியதி.

http://www.tamilthai.com/?p=30615

விஷமிகளால் தீ வைத்து அழிக்கப்பட்ட லண்டன் முத்துமாரியின் சித்திரத் தேர்

இவ்வாலயம் தனியாக வழிபாட்டுத்தலமாக அமையாது இந்நாட்டில் தமிழர்களின் கலாசாரச்சின்னமாகவும், தாயகத்தில் பல நூற்றுக்கணக்கான மக்களின் துயர் துடைக்கும் பணியிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக இந்துக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது.

இந்துக்களின் நம்பிக்கையை அழிக்கும் முயற்சியிலும் அம்பாளின் சின்னங்களை உதாசீனப்படுத்தி அம்பாளை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவளுடைய சீற்றத்தில் இருந்து தப்பமுடியாது என்பது நியதி.

http://www.tamilthai.com/?p=30615

...தம் பக்கம் மக்களை கவர எப்படியெல்லாம் தமிழ் மக்களிடையே மத உணர்வுகளை தூண்டி விடுகின்றார்கள் எம் தமிழ் மக்களிடையே..!! இவர்கள் தான் சாதி, மதம் கடந்து தமிழ் இன மக்களை ஒன்றிணைக்க தம் உயிரை மயிராக எண்ணி கொடை செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போகினமாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரே போனபோது கவலைப் படாத சனங்கள் இதுகள்!

வெறும் தேர் போனதுக்கே, இந்தத் துள்ளல் துள்ளுதுகள்?

காப்புறுதி விளையாட்டாகவும் இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

"தம் உயிரை மயிராக எண்ணி கொடை செய்தவர்களுக்கு"

அப்படியல்ல. இது கொஞ்சம் ... இல்லை இல்லை நிறையவே ஓவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...தம் பக்கம் மக்களை கவர எப்படியெல்லாம் தமிழ் மக்களிடையே மத உணர்வுகளை தூண்டி விடுகின்றார்கள் எம் தமிழ் மக்களிடையே..!! இவர்கள் தான் சாதி, மதம் கடந்து தமிழ் இன மக்களை ஒன்றிணைக்க தம் உயிரை மயிராக எண்ணி கொடை செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போகினமாம்

இதில் நிழலியுடன் என் கருத்தும் ஒத்துப்போகின்றது.

மதக்கருத்துகளால் கோமா நிலையில் இருக்கும் மக்கள் மத்தியில் இதைப்போன்ற

கருத்துகளை பரப்பி ஆதாயம் அடைவதுதான் எப்போதும் சிறுமுதலாளிகளுக்கு வழக்கம்.

இந்த மத்தின் பெயரால்தான்மனிதனின் வாய்க்குள் மனிதனே மலம் ஊற்றும் கிகழ்வுகளும்

கிராமங்களை பிரிக்கும் சிறுசிறு பேர்லின் சுவர்களும் முளைக்கின்றன.

பராசக்தி பட வசனங்கள்தான் நினைவுக்கு வருகிறது.

கோவில் கொடியரின் கூடாரம்

உலகத்தையே காக்கிற கடவுளால கடசியில தன்னையே காக்க முடியாம போச்சே.

ஆமா இதுக்கு நம்மடி இந்து அமைப்புகள் ஒன்டும் கண்டனம் தெரிவிக்கேலையா? கண்டன அறிக்கையள் வந்து குவிஞ்சிருக்கனுமே இவ்வளாத்துக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/yrKkWv44v8E

நாங்கள் ஒரு லெக்சசை வாங்கிச் சவாரி செய்தால் உவருக்கேன் இந்த ஆடம்பர வாகனம் எண்டு கேப்பினம்.

ஆனால் அவாக்கு ஒரு லட்சம் பவுணிலை வாகனம் வேணும்…….. :D

ஆனால் இன்னொரு விசயத்தையும் சொல்ல வேணும். புலத்திலை இருக்கிற மற்றக் கோயில்களோடை ஒப்பிடேக்கை ரூற்றிங் கோயில் தாயகத்திலை கஸ்ரப்படுற சனத்துக்காக முக்கியமா ஏதிலிக் குழந்தைகளுக்காக நல்ல பல வேலைத்திட்டங்களை செய்தது எண்டதையும் சொல்ல வேணும். ஆனாப் பாருங்கோ இதைப் போலை ஏராளமான பணிகளைச் செய்யிற அளவுக்கு சனம் கொட்டிக் குடுக்குது…

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...தம் பக்கம் மக்களை கவர எப்படியெல்லாம் தமிழ் மக்களிடையே மத உணர்வுகளை தூண்டி விடுகின்றார்கள் எம் தமிழ் மக்களிடையே..!! இவர்கள் தான் சாதி, மதம் கடந்து தமிழ் இன மக்களை ஒன்றிணைக்க தம் உயிரை மயிராக எண்ணி கொடை செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போகினமாம்

நிழலி அண்ணாக்கு ஒரு பச்சை.

answer-fella-applause-0209-lg.jpg

ஊரே போனபோது கவலைப் படாத சனங்கள் இதுகள்!

வெறும் தேர் போனதுக்கே, இந்தத் துள்ளல் துள்ளுதுகள்?

காப்புறுதி விளையாட்டாகவும் இருக்கலாம்!

thinking_ape-7628.gif

... இது உள்வீட்டு கூத்து என்கிறார்கள், ரூட்டிங் வாசிகள்! ... சில மாதங்களுக்கு முன்பு ரூட்டிங் அம்மன் ஆலயம் சிறிலங்கா தூதரக சதியினால் மூடப்பட முயற்சிப்பதாக ஒரு செய்தியை விகடன் போட்டது நினைவிருக்கலாம், பின் அச்செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பாக ஒருபேப்பர் விளக்கமாக எழுதியிருந்தது! இதுவும் அப்படி ஒரு கூத்து என்கிறார்கள்!

... என்ன வித்தியாசம் இரு சம்பவங்களுக்கும் என்றால் ... முன்னையதை தகப்பன், மகன் கும்பல் சிங்களவன் மேல் போட்டது! இப்போதையதை தகப்பன், மகன் இன்று இணைந்திருக்கும் முகமூடிக்கும்பல் காஸ்ரோக்களின் மேல் போட முற்படுவதாக தெரிகிறது!

... இம்முறை என்ன குமுதத்துக்கா மகன் இதனை எழுதப் போகிறார் ????... என்ன ஆலய காசை அள்ளி எறிந்தால் குமுதமென்ன நியூஸ்வீக்கிலும் வரச்செய்யலாம்!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் மக்கள் இவளவு கஷ்டப்படும் வேளையிலும் இத்தனை பணசெலவில் எனக்கு தேர் செய்கிறீர்களே? என்று கோவம் அடைந்து மேரி அம்மனே தேரை கொளுத்தி இருக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகத்தில் மக்கள் இவளவு கஷ்டப்படும் வேளையிலும் இத்தனை பணசெலவில் எனக்கு தேர் செய்கிறீர்களே? என்று கோவம் அடைந்து மேரி அம்மனே தேரை கொளுத்தி இருக்கலாம் அல்லவா?

இதைப்போய்..தாயகத்திலும் கேளுங்கள்.....அங்கேயும் இதே பிரச்சனைதான்...

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகளின் வயிற்றில் ஓடும் எந்த தேரும் கடவுளால் ஏற்றுகொள்ளபடமாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகளின் வயிற்றில் ஓடும் எந்த தேரும் கடவுளால் ஏற்றுகொள்ளபடமாட்டாது.

ஒரு பச்சை மருதங்கேணிக்கு.

ஊரிலையும் மூலைமுடுக்கெல்லாம் உள்ள கோயில்களில் இப்போது திருவிழாக்களுக்கு பெரும்தொகை பணம் செலவு செய்கின்றார்கள் அந்தபணத்தை போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதில்லையே இப்படி செய்வது கடவுளுக்கே ஏற்பு உடையதாக இருக்காது

...தம் பக்கம் மக்களை கவர எப்படியெல்லாம் தமிழ் மக்களிடையே மத உணர்வுகளை தூண்டி விடுகின்றார்கள் எம் தமிழ் மக்களிடையே..!! இவர்கள் தான் சாதி, மதம் கடந்து தமிழ் இன மக்களை ஒன்றிணைக்க தம் உயிரை மயிராக எண்ணி கொடை செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போகினமாம்

இந்த மாதிரி விடயங்களுக்கெல்லாம் மதச் சாயமும், சாதிச் சாயமும் பூசுவதில் நிழலி கில்லாடி தான்!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் உள்ள ஒரு கோயிலை புணரமைக்க 100 கோடி ரூபா தேவை என இங்குள்ள அவ்வூர் மக்கள் நிதி வசூலிக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அதே சித்திரத்தேரைத் தற்போது செய்வதாயின் £100,000 ற்கு மேல் செலவாகும் என்று கூறிய இத் சித்திரத்தேரை உருவாக்கிய சிற்பாசிரியார் கலாநிதி ஜெயகாந்தன் சரவணமுத்து அவர்கள் மேலும் கூறுகையில்,"

இது இன்சூரன்ஸ் விளையாட்டு தான். சிங்கள புத்தபிக்குகள் தங்களது விகாரைகளை இரு வருடங்களுக்கு ஒருகால் கொழுத்தி தமிழரில் பழிபோடுவார்கள்.

மற்றும் இன்சூரன்ஸ் பணத்தோடு மற்றும் காணிக்கை சேர்ப்பில் ஒரு அரை மில்லியன் பவுண்ட்சு வரி இல்லாமல் சேர்க்கலாம்.

கல்லும், மரமும் தானப்பா முக்கியம். அநாதை குழந்தைகளும், விதைவைகளும் போட்டோக்கு போஸ் கொடுக்க பாவிக்கும் பொருட்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.