Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனிற்கு தமிழ்மக்களின் வாழ்த்துக்கள் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்த தகுதியில்லை ; வணங்குகிறேன்.

வால்ட்டர் வில்லியம்ஸ் :

நிறைவாகும் வரை, நீ மறைவாகவே இரு ;

பலம் வாய்ந்த பகைவர்களின் படை அணிகளை

எதிர்கொள்ளுகின்ற அளவுக்குப் பலம்

பெறுகின்ற வரையிலும் மறைவாகவே இரு; இருப்பாய்

விடுதலை நெருப்பு எங்கள் தமிழீழ மண்ணில் நெஞ்சமெல்லாம் பூத்து நிற்கும்

வீரத்தோடு புலிப்படை நாள்தோறும் தலைவரின் ஆணைக்கு காத்து நிற்கும்

படை கூடி எதிர்ப்பினை தமிழீழ மண்ணை எவனடா எவன் வெல்லுவான்

பகைவனை கேளுங்கள் பலமுறை தோற்றவன் அவனே பதில் சொல்லுவான்.

அடிமைகள் தாய்மண் விடிவுறும் வரைக்கும்

புலியின் அனல் விழி உறங்காது

படை ஒரு கோடி எதிர்ப்பினும்

காற்றில் பறக்கும் புலிக்கொடி இறங்காது.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

எமது தமிழினச் சூரியன் எவரும் அறியாது

எங்கோ தலைமறைவாயிருக்கிறது.

இருளாக விழித்திருப்போம்

அது திரும்பிவரும் வரையில்….

எமது தமிழ்த் தேசியத் தாய்ப்பறவை

எங்கோ தலைமறைவாயிருக்கிறது.

வெறும் வயிறாக காத்திருப்போம்

அது திரும்பிவரும் வரையில்…

எமது அழியாச் செல்வம்

எங்கோ பழங்கலத்தில் பதுங்கியிருக்கிறது.

ஏழைகளாக காத்திருப்போம்

அது திரும்பி கிடைக்கும் வரையில்…

எமது அரிய உயிர்

எங்கோ தலைமறைவாயிருக்கிறது.

பிணமாக காத்திருப்போம்

அது திரும்பிவரும் வரையில்…

எமது இனியமொழி

எங்கோ தலைமறைவாயிருக்கிறது.

ஊமைகளாக காத்திருப்போம்

அது திரும்பிவரும் வரையில்…

எமது அடையாளம்

எங்கோ மறைந்திருக்கிறது

முண்டமாக காத்திருப்போம்

அது திரும்பிவரும் வரையில்

எமது சமரசமற்றத் தலைமை

எங்கோ மறைந்திருக்கிறது.

உண்மையாக காத்திருப்போம்

அது திரும்பிவரும் வரையில்…

எமது தோற்காத போர்க்கருவி

எங்கோ தலைமறைவாயிருக்கிறது.

நிராயுதபாணியாக காத்திருப்போம்

அது திரும்பிவரும் வரையில்…

எமது உயிரான தமிழீழம்

எங்கோ பதுங்குகுழிகளில் பதுங்கியிருக்கிறது.

நம்பிக்கையாக காத்திருப்போம்

அது ஐந்தாம் போர் தொடங்கும் வரை..

மது சுதனன் :

தலைவர் பிறந்த இன்றைய தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் அன்பையும் நேசத்தையும் வீரத்தையும் தியாகத்தையும் பரிமாறிக் கொண்டு வீரத் தமிழினம் வீழ்ந்து விடவில்லை இன்னும் என்று உலகிற்கு சூளுரைப்போம்!!!

வாழ்க தலைவர் புகழ்!!!!

பரணி கிருஷ்ணரஜனி :

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும்.

-பா .சங்கிலியன் -

தமிழீழம் காணும்வரை

அழியாது உந்தனுயிர்

படைதவனே வந்தாலும்

எடுத்திட முடியாது..!!

பார்முழுதும் உன்புகழ்

கொடிகட்டிப் பறக்கும்

செந்தமிழில் இசை பாடி

செய்தி சொல்லி மகிழ்ந்திடும்

பொய்யுரைத்த பொய்யரெல்லாம்

வெக்கித் தலை குனிவர்

புல்லுருவிக் கூட்டமெல்லாம்

புதருக்குள் மறைந்திடுவர்

பூலோகம் முழுவதிலும்

பூச்சொரிந்து வாழ்த்திடுவர்..!

அகவை ஐம்பத்தேழில்

நீடுழி நீர் வாழ நாமெல்லாம்

வாழ்த்திடுவோம் வாழ்கவென்று

தமிழ்நேயன்

என் தமிழ் இனத்துக்கு முகவரி தந்த தலை குனியா தமிழ்மகன் எங்கள் தேசியத்தலைவருக்கு அன்புத் தம்பியின் 57 வது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா………..

யாழ் வசந்தன்

ஆற்றல் மிகு தலைவனுக்கு

இன்று அகவை 57

ஈழமண்தந்த சொத்தே எம்

ஆழக்கடல் தந்த முத்தே

ஆழ பிறந்தஇனம் ஆண்டியாகி நிற்கயிலே

அவதரித்த அற்புதமே

புதிய வரலாறு எழுதும்

புலி வீரன் – தோல்விகளைத்

தோண்டத் தோண்டத்தான்

வெற்றிப்புதையல் வெளியே வரும்…”

என் தமிழ் இனத்துக்கு முகவரி தந்த தலை குனியா தமிழ்மகன் எங்கள் தேசியத்தலைவருக்கு அன்புத் தம்பியின் 57 வது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா………..

வாழ்த்தும் வாய்ப்பு வரமாய்த் தோன்றுகிறது. தமிழரின் சரித்திரம் நீங்கள்.

அன்புக்குச் சமுத்திரம் நீங்கள்.

வீரத்தின் விளை நிலம் நீங்கள்.

வாழ்க பல்லாண்டு

.இனிய வரவிற்காய் காத்திருக்கும் தமிழரோடு நானும்…

thalaivar.jpg

gh.jpg

http://www.tamilthai.com/?p=31105

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/emspDKNkZwk

386790_296019970430761_100000682801383_999764_1379631535_n.jpg

<p>

தலைவர் பிறந்த இன்றைய தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் அன்பையும் நேசத்தையும் வீரத்தையும் தியாகத்தையும் பரிமாறிக் கொண்டு வீரத் தமிழினம் வீழ்ந்து விடவில்லை இன்னும் என்று உலகிற்கு சூளுரைப்போம்!!!தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தமிழரசு

தமிழரின் ஒப்பற்ற தலைவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...........

இணைப்பிற்கு நன்றி தமிழரசு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ஒப்பற்ற தலைவனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! video_icon.jpeg

National-leeder-prabaharan150bamini.jpg

ஈழத்துச் சூரியனே வேங்கையாக வந்தவரே

அக்கினிக் குஞ்சாய் உறங்கிய தமிழரின்

வீரத்தை உலகறியச் செய்த

தன்மானத் தமிழ் உணர்வின்

தாய்மான உயிர்த்துடிப்பே

மண் மானம் காக்க

வந்துதித்த காரிகாலனே

எம் தலைவா நீ வாழ்க நீ வாழ்க நீ வாழ்க

-பாமினி-

http://youtu.be/ZlWQ4cRDcUU

http://www.seithy.co...&language=tamil

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

உன் பெயர் சொன்னால் அது தமிழ் என்று

உலகம் சொல்லுது இன்று

கொண்ட கொள்கையில் உறுதி

விலைபோகாத நெஞ்சு

தன்னையும் தன்னிடமுள்ள எதையும்

கொள்கையின் பின் என்ற விரதம்

என்றுமே போராளி என்ற நிலையெடுப்பு

உலகுக்கே அரசன் என்றாலும்

தமிழனைத்தொட்டால் திருப்பி அடியென்ற நெஞ்சுறுதி

எதைச்செய்தாலும்

அதை தரமாகச்செய்யும் பாங்கு

இராணுவ உக்திகளின் நீரூற்று

தீண்டாமைகளின் பகைவன்

வாய்ப்பேச்சில் அல்லாது

செய் அல்லது செத்துமடி என்ற சொல்லின் நாயகன்

உலகமே சொல்லுது

உன்னிடம் கற்கவேண்டியவை ஆயிரமென்று

என் தலைவா

என் அண்ணா

என் அப்பனே

உனக்கு பிடிக்காது இது

உன் கண் சிவக்கும் இதைக்கேட்டால்

இரந்து கேட்கின்றேன்

இனியாவது உனக்காக சில நாள் வாழ்ந்துவிடு.

எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by விசுகு

நன்றி விசுகு.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

”தமிழிற்க்கு ஒரு தமிழ் அது என் தலைவன் பிரபாகரன்”

என் இனிதான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் எங்கள் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

தமிழனுக்கு முகவரி தேடித்தந்த எங்கள் தேசியத்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

methakuru.pngthalaivan.png

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.