Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் இரகசியமாக நடந்த தீபாவளி நிகழ்வுகள் அம்பலம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி போட்ட இரு படங்களிலும் உள்ள ஐய்யர் ஒரே ஆள்த்தான், ஆனால் லண்டன் தீபாவளிப் படத்தில் இருக்கும் ஐய்யர் வேற ஆள் போலக் கிடக்கு. ஒண்டு கறுப்பு மற்றது சிவப்பு.

சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்த்தால்த்தான் பிழைக்க முடியும் என்றபிறகு இவர்களுக்கு வேறு வழியிருப்பதாக தெரியவில்லை. இங்கும் பலர் ஓடுப்பட்டுத் த்ரியினம். சிங்கள அரச நிகழ்வுகளில் பங்குபற்ற தமிழ்ப் பாடசாலைச் சிறார்களைக் கேட்டுக்கொண்டு ஒருத்தர் ஓடித்திரிந்தவர். போதாதெண்டு, சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றின் நிர்வாக அங்கத்தவர் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தையும் சிங்கள தூதுவரும் முன்னால் கடற்படை தளபதியுமான போர்க்குற்றவாளிக்கு கொடுத்து உதவினவர் அவர்.அதுக்குப் பிறகு, ஒவ்வொரு குடியரசு தினம், சுதந்திர தினமெண்டு அவங்கள் தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கு தொலைபேசி எடுத்து தேசிய கீதம் பாட வா, தமிழ் வாழ்த்துப் பாட வா எண்டு தொல்லை.

போதாக்குறைக்கு, இப்ப ரேடியோக்காரர் சிலரும், "சேர்ந்து வாழலாம், தனிய நிண்டு ஒண்டும் செய்ய ஏலாது" எண்டு கருத்துப்பட கதைச்சு வரீனமாம், யாரெண்டு விளங்குதுதானே??

நெல்லை, இதில் பாண்டர் யார், தலையை நடுவுச்சி பிரிச்சு மீசை வைச்சு, கத்தரித் தோட்டத்து வெருளிபோல கண்ணாடி போட்டுக்கொண்டு பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கிற ஆள்த்தானே??

  • Replies 58
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டது படத்தில் இருக்கும் ஐயரை பற்றி நீங்கள் போட்ட இணைப்பில் உள்ளவர் வேறு ஐயர்,

சாத்திரி உங்களுக்கு மேலே உள்ள படத்தில் உள்ள ஐயரை தெரியுமா ? தெரியாதா ?

ஓ தாரளமாய் அப்படத்தில் நிற்கும் பார்பான் ஜெயதேவனின் கோவிலில் நின்றவர் சமீப காலமாக கோவிலில் ஆளைகானவில்லை பெயர் ராமநாதன் குருக்கள் கொழும்பில் இருந்து வந்தது இது கானும் இப்போதைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ தாரளமாய் அப்படத்தில் நிற்கும் பார்பான் ஜெயதேவனின் கோவிலில் நின்றவர் சமீப காலமாக கோவிலில் ஆளைகானவில்லை பெயர் ராமநாதன் குருக்கள் கொழும்பில் இருந்து வந்தது இது கானும் இப்போதைக்கு

நன்றி பெருமாள்

நீங்கள்தான் எனது கேள்வியை சரியாக புரிந்துள்ளீர்கள் உந்த ராம நாதன் குருக்களைத்தான் யார் எனக்கேட்டிருந்தேன் அதற்க்கு சாத்திரி செய்தி விளக்கிச்ச முழுமையாக படித்தனா என கேள்வி கேட்டு தானும் குழம்பி என்னையும் குழப்புகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பெருமாள்

நீங்கள்தான் எனது கேள்வியை சரியாக புரிந்துள்ளீர்கள் உந்த ராம நாதன் குருக்களைத்தான் யார் எனக்கேட்டிருந்தேன் அதற்க்கு சாத்திரி செய்தி விளக்கிச்ச முழுமையாக படித்தனா என கேள்வி கேட்டு தானும் குழம்பி என்னையும் குழப்புகின்றார்.

தமிழரசு நான் யேர்மனியை பற்றி எழுத நீங்கள் இலண்டனை பற்றி எழுதியதால் வந்த குழப்பம் அது கிடக்கிட்டும் உதிலை லண்டன் எம்பசியிலை கோலம் போடுறவா நல்ல வடிவாய் இருக்கிறா அவா யாரெண்டு என்ன பேர் எண்டு யாருக்காவது தெரியுமா?? எல்லாம் ஒரு பொது அறிவை வளக்கத்தான் கேக்கிறன் தப்பா நினைக்கக்கூடாது :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு நான் யேர்மனியை பற்றி எழுத நீங்கள் இலண்டனை பற்றி எழுதியதால் வந்த குழப்பம் அது கிடக்கிட்டும் உதிலை லண்டன் எம்பசியிலை கோலம் போடுறவா நல்ல வடிவாய் இருக்கிறா அவா யாரெண்டு என்ன பேர் எண்டு யாருக்காவது தெரியுமா?? எல்லாம் ஒரு பொது அறிவை வளக்கத்தான் கேக்கிறன் தப்பா நினைக்கக்கூடாது :lol: :lol:

ஐயோ ....... ஐயோ இதெல்லாம் பொதறிவு என்று இப்போதுதான் தெரிகின்றது :rolleyes:

அதைப்பற்றி அறிவதாயிருந்தால் பெரியளவில் படிப்பு வேண்டும் என்று நினைக்கின்றேன் :huh:

நான் கோட் சூட் போடுவதில்லை போடுவபவர்கள் பெரியபடிப்பெல்லாம் படித்திருப்பினம் :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவா யாரெண்டு என்ன பேர் எண்டு யாருக்காவது தெரியுமா??

சிலோன் நமீதாவாம் :lol:

சிலோன் நமீதாவாம் :lol:

20111129_LN1.jpg

1.jpg

... கிட்டத்தட்ட சரி போலத்தான் கிடக்குது :icon_mrgreen:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

20111129_LN1.jpg

1.jpg

... கிட்டத்தட்ட சரி போலத்தான் கிடக்குது :icon_mrgreen:

எதை வைச்சுச் சொல்லுகிறீர்கள்?? நெல்லை, நீங்கள் அளவெடுப்பதில் கில்லாடிதான் போங்கோ !!!!!!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

:D:lol:

... மாலை தமிழ்க்கடை ஒன்றில் இருவர் ..

.. உந்தப் படங்களை பார்த்தனியோ?

.. எதைச் சொல்கிறாய்?

.. உதுதான் எங்கடை ஆக்களை, சிங்களவனே படம் பிடித்து வெளியிட்டதை!

.. ஓ அதையா?

.. நான் உந்த சரஸ்வதி பவன் காரனும் போவன் என்று நினைக்கவில்லை?

.. ம்ம்ம்... அவன்தானே இங்கத்தையான் கேபியின் முக்கிய புள்ளிகளில் ஒன்றாம்!

.. அட எனக்கு தெரியது, தோசை சாப்பிட போகும் போதெல்லாம் தமிழ்த்தேசியம் கதைப்பான்!!!!

.. உதுதான்ன்ன்ன்!!! .... சிங்களவன் செய்த சாதனை!!! .. தமிழ்த்தேசியம் கதைத்ததுகளையே வைத்து ஓட்டுகிறான்!!

.. உந்தப்படம் வந்த பின்பும் ... என்னன்று முகம் இனி காட்டப்போகிறானோ???

.. ம்ம்ம் .. உது பெரிய கஸ்ரமானதோ உதுகளுக்கு??? அங்குள்ள போராளிகளை காக்கத்தான் உது ஆட வேண்டி இருக்குது என்பார்கள்!!!!!

.. ம்ம்ம் உதை நாம் நம்புவோம் ஆக்கும்??

.. நம்புகிறீர்களோ? இல்லையோ? ... பணம் என்று வந்து விட்டால் ... விபச்சாரம் எல்லாம் ...??????????????????

எங்க ரூற்ரீங் இல இருக்கிற சரஸ்வதி பவான் உரிமையாளரோ? அவருடைய படத்தை காணவில்லை அந்தாள் அப்படி செய்யாது. போன கிழமையும் வெளியில இருந்து வந்த ஒரு தொகை ஆட்களை கூட்டி கொண்டு போய் சாப்பிட்டாங்கள்.. ஒருக்கா சரியா சொல்லுங்கோ

வலுவிழந்தோர் தினம் என்பதை மாற்றவேண்டும்: வைத்தியர். தி.குமுதறஞ்சன்(காணொளி இணைப்பு)

என்ற தலைப்பில் ஒரு செய்திபோட்டேன் 113 பேர் பார்தார்கள். ஒருதரும் மூச்சக்காட்டவில்லை! இங்கு 2000இற்கும் மேற்பட்ட பார்வைகள் 2 பக்க கருத்துகள். இந்த நாசமாய்போன கொசிப் கலாச்சாரம் தன் எங்கள் விடுதலைப் போராட்டத்தை நாசமாக்கியது இன்னமும் தமிழர்களின் உரிமை போராட்டங்களையும் நாசமாக்குகிறது. எந்த நாய் எங்கு போனல் உங்களிற்கு என்ன? பொறாமையாக இருந்தால் நீங்களும் போக வேண்டியது தானே? இல்லை உணர்வு முட்டுகிறதா பாரக்க பல அலுவர்கள் இருக்கிறது உதாரணத்திற்கு இந்த செய்தியை பாருங்கள்

விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாடடில் விசேட தேவைக்குட்பட்டோர் தினம் 2011. 04.12.2011 ஞாயிற்று கிழமை மு.ப 10.00 மணியளவில் யாழ் விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் திரு.ஆர்.மகேந்திரன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி கேட்போh கூடத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக பேராசிரியர் இரா.சிவசந்திரனும் திருமதி சறோஐh சிவசந்திரனும் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண சமூக சேவை திணைக்களத்தை சேர்ந்த திரு.ஏ.ஞானவேல், திரு.எஸ்.அகிலன் அவர்களும் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபர் எஸ்கே.எழில்வேந்தன் அவர்களும் சட்டத்தரணி மு.றெமீடியஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் இரா சிவசந்திரன் தமது பிரதம விருந்தினர் உரையில் பின்வரும் விடயங்களை முன்வைத்தார்.

சர்வதேச சமூகம், ஆசிய சமூகம், தென்னாசிய சமூகம், இலங்கை சமூகம், தமிழ் சமூகம் என பல படிநிலைகளில் சமூகங்கள் இனம் காணப்படுகின்றன. இலங்கையில் தமிழ் சமூகத்தினர் அரச அதிகாரம் அற்றவர்களாகவும் ஐனநாயக ஆட்சி முறையின் கீழ்; எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்பதால் பெரும்பான்மையினரால் கடந்த 63 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டு வந்துள்ளனர். ஆட்சி அதிகாரம், நிர்வாகம,; பாதுகாப்பு எல்லாமே சிங்கள பெரும்பான்மையோர் கையில் இருந்து வருகிறது. தமிழர்கள் தமக்கான தேவைகள் ஒவ்வொன்றையும் போராடித்தான் பெறவேண்டி உள்ளது. தற்போது அன்றாட வாழ்வு தேவைகளுக்கே போராடவேண்டியுள்ளது.

இச் சமூகத்தில் பிறந்ததினால் அப்பாவிகள் பலர் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எடுத்துக்காட்டாக வன்னியுத்தத்தின் போது கால்இழந்தோர். கை இழந்தோர், உடல் இயக்கமற்றோர் என விசேடதேவைக்குட்பட்டோர் தொகை அதிகரித்துள்ளது. இயற்கையாக ஏற்பட்ட ஊனமுற்றோர் தொகையைவிட செயற்கையாக, தவறான அரசியல் நடவடிக்கையால் அப்பாவிகள் மீது பாய்ச்சப்பட்ட வன்முறையால் பலர் விசேட தேவைக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். யுத்தத்தின்போது வன்னிப்பகுதியில் இருந்த சிறுவர்களில் ஆயிரக்கணக்கானோர் உடம்பில் உள்ள ஷெல் துண்டுகள் அகற்றப்படாது திரிகின்;றனர். உடம்பினுள் உள்ள இவை இச்சிறுவர்களின் எதிர்காலத்தில் எவ்வகையில் பாதிக்கப்போகிறது என்பதை நாம் அறியோம். இவ்வாறு உள்ள சிறுவர்களின் தொகை எவ்வளவு, அவயங்களை இழந்தோர் தொகை எவ்வளவு என யுத்தம் முடிந்து இரண்டரை வருடங்கள் ஆகியும் கணக்கெடுக்கப்படவில்லை. யுத்தத்தில் ஒருவரும் காயப்படவில்லை என கூறும் அரசு இவற்றை கணகெடுத்து ஆவணப்படுத்தும் என்று எண்ணுவது பேதமை.

எனவே தமிழ் சமூகத்தில் உள்ள சமூக நேயமிக்க அமைப்புக்களே இப்பணியை செய்ய வேண்டும். இப்பணிக்கு புலம்பெயர் தமிழரது ஆதரவு பெரிதும் வேண்டப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் தங்களை ஒரு சமூகமாக ஒன்றிணைத்து அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி தமது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். இதற்கு சுற்றி வாழும் சமூகம் உதவ வேண்டும்.

ஆனால் நாங்கள் இன்னமும் விடுப்பும் பூராயமும் கதைத்தத படி வெட்டிப்பொழுதைக் கழிக்கிறோம். இன்னும் ஒரு 5 வரியத்தில் இந்த தீபாவழி விழாவிற்கு ஒரு டபெரிய கியூ நிக்கும் அப்பவும் நீங்கள் இந்த குப்பைகளை தான் கொட்டுவீர்கள்!

இந்த படத்தில் லண்டனில் பிரபலமான ஒரு நாடக நடிகரும் இருக்கிறார்.

எல்லாமே வேஷம் தான் போல.

...

இன்னும் ஒரு 5 வரியத்தில் இந்த தீபாவழி விழாவிற்கு ஒரு டபெரிய கியூ நிக்கும் அப்பவும் நீங்கள் இந்த குப்பைகளை தான் கொட்டுவீர்கள்!

மொட்டை அடித்தவர்/அடிக்கிறவர் கேளும், ... இப்பவல்ல ஏறக்குறைய இப்படி பத்து பதினைந்து போய்க்கொண்டிருக்குதுதான் .... என்ன முன்னம் மா.க.மாணிக்கங்கள், அந்தப் பதினைந்தில், இப்ப அதில் கூட பலதுகள் திருந்தி விட்டுதுகள்!!!! ... ஆனால் இங்கு புலி என்று பூச்சாண்டி காட்டி திரிந்ததுகள், கொஞ்சம் உதில் புதுவரவு!!! இன்னும் கொஞ்சம், உந்த நாகதஅ, பி.பி.எவ், GTV, TRO என்று இருக்கிறதுகளில் இருந்து இடறிக் கொண்டு போகும்தான்!!! ... மூண்டு லச்சத்தில் பத்து பதினைந்து போகுதெண்டாம் ... ???? ... என்ன இன்னும் 5 வருசத்திலை, புலத்தில் மொட்டை அடித்து திரியும் கும்பலுகளை சனம் இனம் கண்டு விடும்!!

இந்த படத்தில் லண்டனில் பிரபலமான ஒரு நாடக நடிகரும் இருக்கிறார்.

எல்லாமே வேஷம் தான் போல.

அரோகரா ... அவர் .. நடிகர்தான் ...

1) முன்னால் ஆயுதம் தூக்கிய புலி பயங்கரவாதி(அவரது பாசையில்)

2) பின் புலம் கொண்டுவரப்பட்டு மா.க.மாணிக்கமாக அலைந்தவர்

3) யுத்த நிறுத்த காலத்தில் பொட்டரின் புலத்து புலனாய்வுத்துறை முக்கியஸ்தகர்

4) பின் இடைக்காலத்தில் கேணல் ராமின் ஊதுகுழல்

5) இப்போ தான்தோன்றித்தலைவர் கேபியின் வலது

... இத்தனைக்கும் மேலாக சிங்களத்தின் தேசாபிமன்ய விருது பெறக்கூடிய சிங்கள புலனாய்வுத்துறையின் முக்கிய அதிகாரியாம்!!!!!!!!!

.... உதை விட சிவாசி காணேசனால் செய்ய முடியுமா??????????????? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நாங்கள் இன்னமும் விடுப்பும் பூராயமும் கதைத்தத படி வெட்டிப்பொழுதைக் கழிக்கிறோம். இன்னும் ஒரு 5 வரியத்தில் இந்த தீபாவழி விழாவிற்கு ஒரு டபெரிய கியூ நிக்கும் அப்பவும் நீங்கள் இந்த குப்பைகளை தான் கொட்டுவீர்கள்!

ஏன் தலை நல்லவன் என்று நடிச்சவங்களை சந்திக்கு கொன்டு வந்தால் உங்களுக்கு குத்துதோ??? இந்த குதி குதிக்கிறியள்.

அரோகரா ... அவர் .. நடிகர்தான் ...

1) முன்னால் ஆயுதம் தூக்கிய புலி பயங்கரவாதி(அவரது பாசையில்)

2) பின் புலம் கொண்டுவரப்பட்டு மா.க.மாணிக்கமாக அலைந்தவர்

3) யுத்த நிறுத்த காலத்தில் பொட்டரின் புலத்து புலனாய்வுத்துறை முக்கியஸ்தகர்

4) பின் இடைக்காலத்தில் கேணல் ராமின் ஊதுகுழல்

5) இப்போ தான்தோன்றித்தலைவர் கேபியின் வலது

... இத்தனைக்கும் மேலாக சிங்களத்தின் தேசாபிமன்ய விருது பெறக்கூடிய சிங்கள புலனாய்வுத்துறையின் முக்கிய அதிகாரியாம்!!!!!!!!!

.... உதை விட சிவாசி காணேசனால் செய்ய முடியுமா??????????????? :icon_mrgreen:

மொததுல, அடுத்தவன் என்ன பண்ணுறான் எங்கிறதிலயே , எங்க டைம் போவுது!

இந்த இடைவெளிதான் சிங்களவனுக்கு,, தமிழனுல ரொம்ப புடிச்சது& expectation!

ஒருபக்கம் இருக்குறதும் , மத்த பக்கம் ஓடுறதும்...& ஓடினாதானே,,

அவன் உண்மையான தமிழன்! இல்லைனா அவன் Fake!

இங்க பாருங்க... சிங்களவனின் காய் நகர்த்தலை விட,,,,,

படத்துல இருக்குற தமிழனுங்க யாரு எங்கிறத ஆராயுறதுலயே, எங்க கவனம் திரும்பிடுச்சு!

தனக்கெதிராய் போகும்...பத்து இலட்சம் புலம்பெயர் தமிழர்களை..

இந்த பத்துபேர் இருக்கும் போட்டோவை வைத்து ... திசைதிருப்ப முடிகிற்தே.....

புலம்பெயர் தமிழர்களுக்கெதிராய்...இதுதான் அவனோட வெற்றி பார்முலா..!.

திசை திருப்பல்!!

ஏறக்குறைய.. அவன் வின் பண்ணிட்டான்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ற தலைப்பில் ஒரு செய்திபோட்டேன் 113 பேர் பார்தார்கள். ஒருதரும் மூச்சக்காட்டவில்லை! இங்கு 2000இற்கும் மேற்பட்ட பார்வைகள் 2 பக்க கருத்துகள். இந்த நாசமாய்போன கொசிப் கலாச்சாரம் தன் எங்கள் விடுதலைப் போராட்டத்தை நாசமாக்கியது இன்னமும் தமிழர்களின் உரிமை போராட்டங்களையும் நாசமாக்குகிறது. எந்த நாய் எங்கு போனல் உங்களிற்கு என்ன? பொறாமையாக இருந்தால் நீங்களும் போக வேண்டியது தானே? இல்லை உணர்வு முட்டுகிறதா பாரக்க பல அலுவர்கள் இருக்கிறது உதாரணத்திற்கு இந்த செய்தியை பாருங்கள்

ஆனால் நாங்கள் இன்னமும் விடுப்பும் பூராயமும் கதைத்தத படி வெட்டிப்பொழுதைக் கழிக்கிறோம். இன்னும் ஒரு 5 வரியத்தில் இந்த தீபாவழி விழாவிற்கு ஒரு டபெரிய கியூ நிக்கும் அப்பவும் நீங்கள் இந்த குப்பைகளை தான் கொட்டுவீர்கள்!

ஏன் நீங்களோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களோ இந்தப்படத்தில் உள்ளீர்களா ?இவளவு கோபம் வருகின்றது இரட்டை வேடம் போடுபவர்கள் கண்டிப்பாக மக்கள் மத்தியில் அடையாளம் காட்டப்படவேண்டியவர்களே.

இதில் என்ன மாற்று கருத்துக்கு இருக்கு ?

ஏன் நீங்களோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களோ இந்தப்படத்தில் உள்ளீர்களா ?இவளவு கோபம் வருகின்றது இரட்டை வேடம் போடுபவர்கள் கண்டிப்பாக மக்கள் மத்தியில் அடையாளம் காட்டப்படவேண்டியவர்களே.

இதில் என்ன மாற்று கருத்துக்கு இருக்கு ?

யாழ்கள வாசகர்கள் இப்போ களத்தில் எழுதுபவர்களை நிறைய அடையாளம் கண்டு கொண்டுள்ளார்கள். எங்கே தேவையான முகங்களின் பெயர்களை யாராவது போடுவார்களா என்று இந்த திரியிற்கு திரும்ப திரும்ப வருகிறார்கள்.

இங்கிலாந்திற்கு மந்திரிமார் வரபோகிறார்கள். அங்கே போபவர்களின் படங்கள் கிடைத்தால் தயவு செய்து போடவும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பெண்கள் மாவீரர் தினத்தில் போய் நின்று எதாவது உதவி செய்து கொண்டு இருக்கும் போது அதைப் படம் எடுத்து மாற்றுக் கருத்து இணையத்தில் போட்டு அவர்களை கவர்ச்சி நடிகைகளோடு ஒப்பிட்டு எழுதினால் எங்களுக்கு எப்படி இருக்கும்? அதை நாங்கள் ஏற்போமா?...அவர்களும் எழுதுகிறார்கள் நாங்களும் எழுதுவோம் என்டால் எங்களுக்கும்,அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?இது ஒரு அப்பட்டமான தனி மனித தாக்குதல் அதுவும் யார் என்டே தெரியாத பெண்ணை விமர்சிப்பது என்பது?...இப்படி கேவலமாக எழுதுவது தீவிர தேசியம் கதைப்பவர்களும்,புலியில் இருந்தவர்களும்,புலி ஆதரவாளர்களும் தான் நெல்லையனும் இப்படி எழுதுவார் என்று நான் நினைத்தே பார்த்து இருக்கவில்லை</p></p>

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கேவலமாக எழுதுவது தீவிர தேசியம் கதைப்பவர்களும்,புலியில் இருந்தவர்களும்,புலி ஆதரவாளர்களும் தான்

ஆதாரம்???

புலி என்ற தேசியச்சொத்து இந்தளவுக்கு மலிவாக கணக்குப்போடப்படுவதை பார்க்க அதை உயிர் கொடுத்து வளர்த்தவர்கள் இல்லை என்பது நிம்மதி தருகிறது.

ரதி, உங்கள் ஆதங்கத்துக்கு ... முதலில் அப்படி ஒன்றும் எழுதப்படவில்லை, எழுதினாலும் ...

அதற்கு மேல் உவர்கள் விள்ம்பரத்துக்காக/பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்!! எத்தனை எம்மின பெண்கள் இலண்டனில் இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் உந்த தூதுவராலய நாடகத்துக்கு போனார்கள்? ஏன் மற்றவர்கள் போகவில்லை? ... விடுங்கள் ... நரம்பற்று, மானத்தை விற்று, பணத்துக்காகவும், விளம்பரங்களுக்காகவும் ஆடும் விபச்சாரிகளை ... எம் மற்றைய பெண்களுடன் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள்!!!!!!!!!!!

Edited by Nellaiyan

எங்கட பெண்கள் மாவீரர் தினத்தில் போய் நின்று எதாவது உதவி செய்து கொண்டு இருக்கும் போது அதைப் படம் எடுத்து மாற்றுக் கருத்து இணையத்தில் போட்டு அவர்களை கவர்ச்சி நடிகைகளோடு ஒப்பிட்டு எழுதினால் எங்களுக்கு எப்படி இருக்கும்? அதை நாங்கள் ஏற்போமா?...அவர்களும் எழுதுகிறார்கள் நாங்களும் எழுதுவோம் என்டால் எங்களுக்கும்,அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?இது ஒரு அப்பட்டமான தனி மனித தாக்குதல் அதுவும் யார் என்டே தெரியாத பெண்ணை விமர்சிப்பது என்பது?...இப்படி கேவலமாக எழுதுவது தீவிர தேசியம் கதைப்பவர்களும்,புலியில் இருந்தவர்களும்,புலி ஆதரவாளர்களும் தான் நெல்லையனும் இப்படி எழுதுவார் என்று நான் நினைத்தே பார்த்து இருக்கவில்லை</p></p>

தமிழீழ விடுதலைப்புலிகளாகிய தமிழினத்தின் வித்தாக பிறந்த ஒருவர் இப்படி எழுதியிருப்பது .......................சாத்தியமில்லை ...............................சாத்தியம் என்று நீங்கள் சொன்னால் தயவு செய்து நீங்கள் ..................................................................................................

பெண்ணே நீயும் பெண்ணா........................................

post-7765-0-14336200-1323283291_thumb.jp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவி செய்து கொண்டு இருக்கும் போது அதைப் படம் எடுத்து மாற்றுக் கருத்து இணையத்தில்

உதவி செய்தல் - கூலிக்கு மாரடித்தல். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? தன் இனத்தை கொன்று கருவழித்த ஒரு அரச இயந்திரத்துக்கு விலைபோன ஒரு பெண்ணோடு ஒப்பிடும் போது, சம்பளத்துக்காக கவர்ச்சி காட்டி நடிக்கும் நமீதா கோடி மடங்கு சிறந்தவர். உண்மையில் இந்தப் பெண்ணை ஒப்பீடு செய்ததன் மூலம் எத்தனையோ சிரமங்களை எதிர்கொண்டு நடிகையாக தொழில் செய்யும் நமீதாவைத் தான் கேவலப்படுத்தியுள்ளோம்.

ஈனத்தை கனலாக்கிய கண்ணகி அடிதொடியில் பிறந்த வீரமங்கைகள், அச்சம் நாணம் மட நாய்களுக்கு வேண்டுவதே என்ற சுதந்திரகவி பாரதியின் மற வாக்கை தங்கள் வேதவாக்காக்கி, உடல், பொருள் ஆவி மட்டுமல்ல, தங்கள் ஆவியிலும் மேலாக அவர்கள் காத்தவற்றையும் எல்லாம் களத்திலெறிந்து கட்டி வைத்த போராட்ட பாதை இது. இப்போது இது ஜனநாயகப் பாதை. யாரவது, எதாவது ஒரு காரணத்திற்கு பங்குபற்ற மறுத்தால், போராட்டம் முன் செல்லாது. ஆனால் அதற்காக மாவீரர் வணக்க இடங்களின் இயல்பை மாற்றி, கொண்டாட்ட இடங்களைப்போன்று தனி மரியாதைக்கு இடம் அளிக்க முயல்வது போராடங்களை இன்னும் பின்னோக்க வைக்கும் என்பதல்ல, சகலதையும் கொடுத்துவிட்டு சரிந்து படுத்திருக்கும் அந்த வீர மங்கைகளின் அரும் பெரும் செயல்களையே பண்பாட்டு சாயம் பூசி சிறுமைப்படுத்தும் .

,

நேற்று ஒரு போராட்ட நிகழ்வு. மிகச் சில தமிழர்களே பிரசன்னம் (ஆண்கள் சரி பெண்கள் சரி). பெரும்பாலோர் தமது படம் வெளியே வந்தால் இலங்கைக்கு பயணிக்க முடியாது என்று ஒரு கவலை. இந்த முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். படங்களை பிரசுரிப்பதால் அரச ஆடம்பர தீபாவளிக் கொண்டாடங்களுக்கு இன்பம் தேட போவோர் அரசுக்கு அதை தெரிய வைத்து , நாம் இனிமேல் மாவீரர் தினம் போன்ற வணக்க நாள்களுக்கு செல்வதை படம் எடுத்து ஆராய விடாமல் பார்த்துக் கொள்வார்கள். நாம் ஆரம்பிக்க வில்லை படம் எடுப்பதை.

ஆனால் யாராவது காட்ட முயல்வது போன்று இந்த படங்கள் எந்த தமிழ் போராளியாலோ, அல்லது சுதந்திர அமைப்பாலோ எடுத்து வெளியிடப்பட்டவை அல்ல. இலங்கை தூதரகத்தால், வேண்டியபடி புல்லுருவிகளை நிரைப்படுத்தி, எவ்வளவத்திற்கு தமிழர் போராட்டங்கக்ளை சிதைத்து விட்டோமென்று காட்ட அவர்களின் விருப்புடன் எடுக்க பட்டு பிரசார நோக்கங்களுக்காக இலங்கை தூதரகத்தின் முத்திரையுடன் வெளியே கை அளிககப் பட்டவை. இவை யாழ் போன்ற கருத்துகளங்களில் படங்களை பற்றி என்ன் பேசிக்கொள்வார்களோ அதை பேசிக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக பணம் செலவழித்து கொண்டாட்டம் நடத்தி, எடுக்கப் பட்டு வெளியிடப்பட்டவை. இந்த படங்களில் இருப்போர்க்கெல்லாம் தாம் ஏன் போஸ் கொடுக்கிறார்கள் என்பது தெரியும். நடிப்பின் கடைசி கட்ட மாக அவர்களை காப்பற்றுவது போல நடிக்கவே பணம் கொடுத்து இலவச யாழில் பிரச்சார மேதைகள்(spin doctors) எழுதுவதற்கும் ஒழுங்கும் செய்யபட்டு அவர்களும் தங்கள் தொழிலை கச்சிதமாக செய்கிறார்கள். அந்த பிரச்சார காற்றில் விபரம் தெரியாமல் அள்ளுண்டு போனோர் தான் தங்கள் செய்வதை சற்று தெளிந்து கொள்ள வேண்டும்.

இது எனது தனிப்பட்ட கருத்து. சரி, பிழையை உங்களின் தனி மனங்கள் தீர்மானிக்கலாம்.

1 அந்த பெண் இங்கே குறிப்பிடப்படுவது போல அந்த கோலத்தை போடுவதாக படம் எடுக்கப் படவில்லை.

2.கோலம் தொழில் துறை அனுபவமுள்ள தொழிலாளிகளால் நிறைய பண செலவில் செய்யப்பட்டது.

3. பெண் எற்கனவே ஏற்றிய தீபங்களை அங்கேவைத்து அலங்கரிப்பது போன்று பாவனை செய்யவைத்து எடுக்க பட்டிருக்கிறது.

4. சந்தர்ப்பம், உடை அலங்காரம், ஆள் தெரிவு, (பொட்டு வைத்திருக்கும் முறை ஒன்றைத் தவிர) மற்றவை எல்லாம் ஒரு இந்து தமிழ் பெண் விளக்கேற்றுவது போல் நடிக்க வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது காட்டாறின் உள் மனதில் தமிழரல்லாத தமிழ் நடிகையை நினைவூட்டியது ஒன்றும் வியப்பல்ல. அதேமாதிரியான ஆழ் மன செயல்ப்பாட்டை நெல்லையான் முகங்களை சமப்படுத்த முயன்ற செய்கையிலும் காணலாம்.

5. அந்த இரண்டு படங்களும் பிரச்சார தேவைகளுக்காக மற்றைவைகளை விட கவனம் எடுத்து பார்ப்போரின் மனத்தை ஈர்க்க எடுக்கப் பட்டவை.

6. பெல் பொட்டிஞ்சரின் கருத்துகள் இங்கே பெறப்பட்டிருக்கலாம்.

7. இவை அரசியல் நோக்கத்திற்க்காக எடுக்க பட்ட படங்கள். இந்த படங்களை வைத்து அரசியலை விவாதிக்கலாம். குடும்ப பாங்கை வில்லங்கமாக உள் நுளைப்பது பொருத்தமற்றது.

Edited by மல்லையூரான்

//சிலோன் நமீதாவாம்//

...// கிட்டத்தட்ட சரி போலத்தான் கிடக்குது//

//எதை வைச்சுச் சொல்லுகிறீர்கள்?? நெல்லை, நீங்கள் அளவெடுப்பதில் கில்லாடிதான் போங்கோ !!!!!!!!//

தேசீய வாதிகள் ரொம்ப ஆழமா எல்லாம் அளவெடுத்து ஆராய வெளிக்கிட்டினம்.

இலங்கைக்கு செல்வது இலங்கை பொருள்களை வாங்குவது இலங்கை விமானசேவையை பயன்படுத்துவது பல்வேறு வழிகளின் இலங்கைக்கு அன்னியச் செலவாணியை ஈட்டித்தருவது இலங்கைத் தூதரகங்களுக்கு அலுவல் நிமிர்த்தம் செல்வது போன்ற காரியங்களை தவிர்த்து இலங்கை தூதரகங்களுடன் பண்டிகைகளை கொண்டாடுவதில் தேசீயவாதிகள் முரண்படுகின்றார்கள் சரி ஆனால் அதை ஒரு நியாயமான முறையில் நாகரீகமான முறையில் கருத்தாக முன்வைப்பது அவசியம். ஒருவரின் படத்தைப்போட்டு அதற்கு ஒப்பீடாக நடிகையின் படத்தைப்போட்டு போதக்குறைக்கு அளவெடுப்பது ஊடாக தேசீயத்தை வளர்க்க முடியும் என்று நான் கருதவில்லை. இவ்வாறான பாணியை புலிகளோ மாற்றியக்கங்களோ கடைப்பிடித்ததை நான் அறிந்திருக்கவும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.