Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தில் உங்கள் சாட்சி..............

Featured Replies

இந்த திரியை ஆரம்பிக்கும் போது, என்னால் அதனை ஏனையவருக்கும் விளங்கபடுத்த முடியுமா என பயம் கவ்வுகின்றது

நேற்று முன்தினம், கனடாவின் டொரன்டோ சாலையோரம் நடந்து போகையில் ஒரு வீடற்ற மனிதன் கழுத்து வரை போர்த்திக் கொண்டு ஆனால் தலையை மூடாமல் படுத்துக் கிடந்ததை பார்க்க வேண்டி வந்தது. அவரை பார்த்த கணம், நான் 12 வயதில் யாழ்ப்பாணத்தில் அதிகாலை 5 மணிக்கு நகுலேஸ்வரன் மாஸ்ரரிடம் ரியூசன் போகும் போது சுண்டிக்குளி கணக்கர் சந்தியில் மண்டையர் குழுவால் 86களில் (இந்திய ஏவல் படை காலம்) மண்டையில் சுட்டுக் கொன்ற ஒரு 'இனம்தெரியாதவரின்' சடலத்தை பார்த்த நினைவு எங்கிருந்தோ திடீரென வந்தது. இப்படி சம்பந்தமில்லா காட்சிகளுடன் யுத்தத்தின் சாட்சியங்களாகிப் போன எம் மனதில் வந்து போகும் காட்சிகள் ஏராளம்.

இவ் யாழ் இணையத்தின் உறவுகள் பலரும் மனதால் மறக்க முடியாத பல யுத்த காட்சிகளின் சாட்சியங்களாக இருப்பீர்கள். உங்களால் மறக்க முடியாத அல்லது மறக்க எத்தனித்தும் ஏதோ ஒரு வினாடியில் முழு வடிவமாக வந்து போகும் காட்சிகள் இருப்பின் இந்த திரியில் எழுதவும். யுத்தத்தின் சாட்சியங்களாக நாம் இருந்தோம் என்பதற்கான ஒரு ஆவணமாக இதை மாற்றும் கடமை உங்களிடமே.

என் அனுபவங்களையும் எழுதுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம் நிழலி கட்டாயம் நானும் எழுதனும் நிறை விடயங்கள் இப்படி என் மனதில் இரட்டிப்பாக வருகின்றன...

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலிருந்து விடுமுறைக்கு (?) யாழ்ப்பாணம் போயிருந்த காலம்!

அந்தக் காலத்தில், ஓட்டோக்கள் அறிமுகமாயிருக்கவில்லை!

ஒரு a-40 காரோன்ரை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு கச்சேரிக்குக் கிட்டவுள்ள வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்! வாகன ஓட்டுனர் ஒரு சாராயப் போத்திலோன்ரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் படி கூறினார். அதிலிருந்து ஒரு குழாயோன்று, எஞ்ஞினை நோக்கிப் போய்க கொண்டிருந்தது. இது என்னண்ணை என்று கேட்கப் 'பெட்ரோல்' என்று சொன்னார்.

அப்போது வாழ்க்கையில் என்றுமே கேட்டிருக்காத ஒரு வெடிச்சத்தம் ஒன்று கேட்டது!

நாவற்குழியில், பொன்னம்மான் வெடித்த வெடி என்று பின்பு அறிந்தேன்!

இன்றும் ஒரு சின்ன வெடிச்சத்தம் கேட்கும் போதும், அந்த நினைவு உடனே வரும்!உ

பொன்னம்மானைக் கல்லூரியில் படித்த காலத்திலேயே தெரியும். அந்த இடத்தைப் பின்பு போய்ப் பார்த்தேன். ஒரு பெரிய கிடங்கு மட்டுமே இருந்தது!

காலம் 1987 மாசி மாதம்,

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாக அன்றைய காலையும் குண்டுத்தாக்குதல்களுடன் காலை விடிந்த்தது. முன்னேறிப்பாய்தல் இராணுவ நடவடிக்கையின் இரண்டாவது நாள் ஆனைக்கோட்டை நவாலி மற்றும் சுற்றுப்புறங்கள் அனைத்தும் குண்டுத்தாக்குதல்கள் சண்டிலிப்பாயிலிருந்து இடம்பெயர்ந்து உயரப்புலத்தில் முதல் னாள் வந்திருந்த தாய் தந்தை மகளுடன் ஒரு குடும்பம் கொடிய விதி துரத்துகின்றது அங்கிருந்து நல்லூரடி நோக்கி இடம்பெயர்வதாக உத்தேசம். புக்காரா வருகுது ஒரு வீட்டின் போட்டிக்கொ தடுப்புக்குள் ஒதுங்குகிறார்கள் நேராக அவர்கள் குறிவைக்கப்படுகறார்கள் இடி இறங்குகிறது சம்பவ இடத்தில் பல்கலைகழக மாணவியும் அவரது பதிண்ம வயது மைத்துணணும் பலியெடுக்கப்படுகின்றனர். தாயார் நிலைகுலைந்து சுதாகரித்துக்கொண்டு மகளது தங்கச்ச்ங்கிலியை சிதறிய உடல்களுக்கிடையில் தேடிஎடுத்துக்கொண்டு காணாமற்போன பென்ரனையும் கணநேரம் தேடியெடுத்து அடுத்த புக்காரா வரமுதல் பெற்றோர் நல்லூர் வந்தடைந்துவிட்டார்கள்.

யாழ் வைத்திய சாலை சவக்கிடங்கு முண்ணூருக்கு மேற்பட்ட நீத்தார் உடல்களுக்குள் இருவரது உடல்களையும் கண்டெடுக்கும்போது இன்னமும் இரத்தம் உறைந்துவிடவில்லை. கொக்குவில் சுடலையில் தேவாரம் பாடி எரித்ததுடன் எல்லாமே முடிந்துவிட்டது. பலியானது எனது தம்பியை கையால் அடித்தே கொலை செய்த புளொட் குழு சித்தார்த்தனது சொந்தக்காரப் பெண்.

1978 ஒரு பாடசாலை இல்லாத நாள் அதிகாலை ஆறு மணியளவில் ஊரே விழித்துவிட்டது.நானும் கூட்டத்துடன் கூட்டமாக ஓடினேன்.எனது நண்பனின் அக்கா வீட்டிற்கு அடுத்தவீட்டின் முன்பாக சனங்கள்.வீட்டு வாசல் கேற்றடியில் பெரிய அல்செசியன் நாய் அரைஉயிரில் துடித்துக்கொண்டிருக்கின்றது.மெதுவாக உள்ளே போனல் தங்கராசாவின் காலடியில் மனைவியார் இருந்து குளறிக்கொண்டு இருக்கின்றார்.நான் பயத்தில் வடிவாக பார்க்காமல் வெளியே வந்து விட்டேன்.

யார்? ஏன் கொலை செய்தார்கள் என்று அப்போ எவருக்கும் தெரியாது.வெளிநாடு வந்து பல வருடங்களின் பின் தான் அறிந்தேன் குட்டிமணி ,தங்கத்துரை தான் செய்தார்கள் என்று.

1997 ஆம் ஆண்டு ஆடி மாதம் நாங்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வவுனியா வந்திருந்த காலம்... விடிய உயர்தர வகுப்புக்கு போன அண்ணா வீட்டை வரேல்லை.. நான் அம்மாவை ஏத்திக்கொண்டு ஒவ்வொரு army camp ஐயும் வவுனியா police station லையும் தேடி அலைந்த்து வீட்டை வர, இரவு 8 மணி.அண்ணா ஒரு இடமும் இல்லை. ஒரு 9 மணிக்கு முகமெல்லாம் வீங்கின படி அண்ணா வீட்டை வந்து சேர்ந்தார். பிறகு அவர் தான் சொன்னார் தன்னையும் அவரோட நன்பனையும் plot ஆக்கள் மறிச்சு அடையாள அட்டை பார்த்ததாகவும், அது யாழ்ப்பாணத்தில வழங்கப்பட்டிருந்ததால இரண்டு பேரையும் கோவில்க்குளம் plot camp ல கொண்டு போய் ஐந்தாறு 12,13 வயது சின்னப் பெடியள கூப்பிட்டு அவங்களை பெரிய பொல்லுகளால இவையல அடிக்க வைச்சவை..நல்ல காலம் அண்ணாவினுடைய உயிர் தப்பினதெண்டு நாங்கள் இந்த விடயத்தை ஒருத்தரிடமும் சொல்ல இல்லை.இப்ப அண்ணர் வைத்தியரா இருக்கிரார்.. அதுக்காக அவர் படித்ததை விட வகுப்புக்கு போக வர அடிவாங்கினது கூட..:)

arjun இட்கு சமர்ப்பணம்..

சிலருக்கும்,சிலவற்றிற்கும் பதில் எழுதி பிரயோசனமில்லை.எனக்கு சமர்பித்திருப்பதால் எழுதுகின்றேன் .

இவ்வளவு நாட்களும் நான் எழுதிவருவதே இதற்கான பதில்.உமது அண்ணர் படிக்க போனதால் இப்போ வைத்தியர்,படிக்காமல் இயக்கத்தில் இணைந்திருந்தால் அவரும் உதைத்தான் செய்திருப்பார்.

எமது போராட்டத்தில் சிங்கள இராணுவம் ,இந்தியன் இராணுவம் கொன்ற அளவிற்கு தமிழ் மக்களை இயக்கங்கள் கொன்றிருக்கு,புலிகள் கொன்றதுடன் ஒப்பிடும் போது மற்ற இயக்கங்கள் கொன்றது மிக கொஞ்சம்.

இயக்கங்களில் முக்கிய பதவிகளில் இருந்த சிலரின் பெயர்பட்டியல் முன்னர் ஒருமுறை பதிந்திருந்தேன் அதில் பார்த்தல் தெரியும் இயக்கங்கள் எப்படியானவை என்று.பலர் பள்ளிக்கூட பக்கமே போகாதவர்கள்.

1978 ஒரு பாடசாலை இல்லாத நாள் அதிகாலை ஆறு மணியளவில் ஊரே விழித்துவிட்டது.நானும் கூட்டத்துடன் கூட்டமாக ஓடினேன்.எனது நண்பனின் அக்கா வீட்டிற்கு அடுத்தவீட்டின் முன்பாக சனங்கள்.வீட்டு வாசல் கேற்றடியில் பெரிய அல்செசியன் நாய் அரைஉயிரில் துடித்துக்கொண்டிருக்கின்றது.மெதுவாக உள்ளே போனல் தங்கராசாவின் காலடியில் மனைவியார் இருந்து குளறிக்கொண்டு இருக்கின்றார்.நான் பயத்தில் வடிவாக பார்க்காமல் வெளியே வந்து விட்டேன்.

யார்? ஏன் கொலை செய்தார்கள் என்று அப்போ எவருக்கும் தெரியாது.வெளிநாடு வந்து பல வருடங்களின் பின் தான் அறிந்தேன் குட்டிமணி ,தங்கத்துரை தான் செய்தார்கள் என்று.

நீங்கள் சொல்வது , இந்து ஸ்கூல் லேன் க்கை இருக்கிற தாடித்தங்கராசாவை என்று நினைக்கின்றேன் . கோண்டாவிலுக்கை கிட்ட வாறியள் மாட்டுறிங்கள் இல்லை . தாடித்தங்கராசா அப்பொழுது சுதந்திரக்கட்சியின் முன்னணி அமைப்பாளர்களில் ஒருவர் :) :) :) .

Edited by komagan

அப்போது நான் சிறவனாக இருந்தபொழுது நடந்தது . எனது மூத்த அண்ணையின் வலதுகரம் , இளைஞர் பேரவையில் முக்கிய தூண் , கோப்பாயைச் சேரந்த பரமேஸ்வரன் படுகொலை . முதன் முதல் நடைபெற்ற அரசியல் படுகொலையும் அருடையது தான் .77ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்புகையில் , இன்ஸ்பெக்ட்டர் பத்மநாதன் தலமையிலான பொலிசார் கோப்பாய் தரவையில் போட்டுத் தள்ளினார்கள் . ஆர்வக்கோளாறால் அந்த வயதில் ஓடிப்போய் பார்த்ததால் , மூன்று நாட்கள் பயத்தால் நித்திரை போய்விட்டது .அம்மாவுக்கு பக்கத்திலைதான் படுத்தேன் :( :( :( .

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு திரிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அதில் இயக்கப்பிழைகளை மட்டுமே எழுதி திரியைக்குளறுபடிக்குள்ளாக்கும் நிலை தொடர்கிறது. இந்த திரிக்கும் அதுவே கதி..

Edited by விசுகு

ஒரு பிழை இன்னொரு பிழையை சரி செய்யாது arjun.. அதை விட நான் போரடவில்லை அல்லது படித்தவை போராட இல்லை என்கிறதுக்காக ஒரு போராட்டத்தையே குறை சொல்லிறது எனக்கு சரியா படேல்லை.. தூங்கிறவர்களை எழுப்பலாம் ஆனால் நடிக்கிறவையை எழுப்பேலாது..உங்களுக்கு எதையும் விழங்க படுத்தவோ மேலதிக பதில் வழங்கவோ எனக்கு மனசில்லை.. நன்றி உங்கள் பதிலுக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் இதே காலத்தில்தான் எனது தம்பியாரும் புளொட் குழுவால் தெருவில் போகும்போது கூட்டிச் செல்லப்பட்டு (சிறிது மனநிலை பாதிக்கப் பட்டவரும்கூட, அதாவது சின்ன வயதிலேயே அந்தநேரம் 1983ல் ஜேர்மனிபோய் தனிமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகி பின்பு ஜேர்மனியில் தொடர்ந்து வாழமுடியாது இலங்கை திரும்பியவர்) கண்டபடி அடித்து தெருவில் தூக்கி வீசப்பட்டபின்பு எனது அக்கா கண்டெடுத்து ஆட்டோவில் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டுபோகுபோது என்ன நடந்தது என அக்கா கேட்டா, அதுக்கு அவனால் பேச முடியாது மூச்சுமுட்டிக் கொண்டு இருந்ததால் இரண்டு கண்களாலும் கண்ணீர் மட்டுமே வந்ததாகவும் வைத்திய சாலையில் சேர்த்த சிறிதுநேரத்தில் செத்துப்போட்டான் எனவும் அறிந்தேன். யார் கண்டது அர்சுணும் சேர்ந்துதான் எனது தம்பியை அடித்தார்களோ. அனைவரும் நல்லாக இருப்பியள். இத்தனைக்கும் அவன் ஒரு பெண்பிள்ளைப் பிள்ளைக்குத் தகப்பன். அம்மா பாரிய இடம்பெயர்வினால் வன்னி சென்று அங்கு செத்துப்போனா, அதுக்கு நாற்பதாம் நாள் எனது தந்தயார் வவுனியாவில் செத்துப்போனார், அதன்பின்பு ஒர் இரு கிழமையில் எனது தம்பியும் போய்ட்டான்.

சற்று மனம் நோந்தாலும் பதில் தரவேண்டிய தேவையாகின்றது .

துரையப்பாவை ,சென் ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜாவை ,ரஜனி திரணிகமவை,ஒபேரே தேவனை சுட்டததை எல்லாம் நியாயப்படுத்தி,

சக இயக்க போராளிகளையே கொன்று குவிக்கும் போது மவுனமாக இருந்த இந்த இனம்,

நாலு பேரை பாதுகாக்க நாப்பதாயிரம் அப்பாவிகளை பலி கொடுக்க அனுமதித்த இந்த இனம் இதைவிட பெரிய அழிவை கூட இன்னமும் சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .

Edited by arjun

  • தொடங்கியவர்

எல்லாத் திரியிலும் வந்து போராளிகளுக்கிடையான சண்டையை மட்டுமே வாந்தி எடுத்து அந்ததந்த திரிகளை அசுத்தம் பண்ணுபவர்களில் அர்ஜுன் நீங்களும் முதலிடத்தில். சிங்கள இராணுவத்தின், இந்திய ஏவல் படைகளின், சிங்கள குண்டர்களின் அட்டூளியங்கள் 48 ஆம் ஆண்டின் பின் பல்லாயிரம் நடந்தும் உங்கள் கண்ணுக்கு சகோதரச் சண்டையும், அதுவும் புலிகள் செய்தவை மட்டும்தான் தெரிவதில் தான் புளொட் இயக்கத்தின் துரோக அரசியலை தெளிவாக புரிய முடிகின்றது

எனது பெயரை இழுக்காத எந்த இடத்திலும் நான் வந்ததில்லை .விசுகுவின் கனடா விஜயம் தொட்டு இந்த திரி வரை .

எதாவது ஒரு திரியில் நான் முதலில் விதண்டாவாதம் தொடங்கியதை காட்டினால் இனி நான் யாழுக்கு வராமல் இருக்கின்றேன் .

வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் .

உங்களது சட்ட திட்டங்கள் ,வரைவிலக்கணங்கள் ,நியாயம்,நீதி எல்லாம் உங்களுடன் மட்டும் தான் .

ஜனநாயகம்,பன்முகத்தன்மை இல்லாத ஒரு சமூகம் எங்களுடையது ,நாய் வாலை நிமித்தினாலும் அதை நிமித்த முடியாது என்பதை எப்போதோ உணர்ந்து கொண்டவன் .இருந்தும் ஒரு நப்பாசையில் உங்கள் எல்லோருடனும் பழகினேன்.2009 may இற்கு முதலே யாழை பார்க்க தொடங்கியிருந்தாலும் எழுத தொடங்கவில்லை .ஏனென்று உங்களுக்கே தெரியும்.

பொய்யாக வாழ்ந்தால் தான் பிழைக்கலாம் என்றால் எனக்கு அந்த வாழ்க்கையே எனக்கு தேவையில்லை .

நன்றி யாழ் உறவுகளே.

எல்லாரையும் போலத்தான் நீங்களும் உடனடியாக உணர்ச்சி வசப்படுகின்றீர்கள் அர்ஜுன். ஆதாரம் என்று காட்டப் போனால், மீண்டும் நான் செய்தது குற்றமா அல்லது அவர் செய்தது குற்றமா என்ற விவாதத்தில் தான் போய் முடியும். என்னைப் பொறுத்தவரைக்கும் மற்றவர்களும் தேவை இல்லாமல் (தம்மை தமிழ் தேசியவாதியாக பொய்க்கேனும் காட்டிக் கொள்ள) உங்களை இழுத்த பல திரிகள் இருக்கு; நீங்களும் பல திரிகளில் வேணும் என்றே வலிந்து மற்றவரை கோபப் படுத்தும் விதமாக எழுதியவைகளும் உண்டு.

ஆனால், விட்டுட்டு போகப் போறன் என்பதெல்லாம் உங்களைப் போன்றவர்களிடம் எதிர்பார்க்காத ஒன்று. உங்கள் பதிலுக்கு வரும் மறு பதில்களே யாழில் தவிர்க்க முடியாத ஒருவர் என்ற ஒன்றை நிரூபித்து இருக்கும்.

உங்கள் முடிவை பரிசீலனை செய்தால் நன்று

நன்றி

எனது பெயரை இழுக்காத எந்த இடத்திலும் நான் வந்ததில்லை .விசுகுவின் கனடா விஜயம் தொட்டு இந்த திரி வரை .

எதாவது ஒரு திரியில் நான் முதலில் விதண்டாவாதம் தொடங்கியதை காட்டினால் இனி நான் யாழுக்கு வராமல் இருக்கின்றேன் .

வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் .

உங்களது சட்ட திட்டங்கள் ,வரைவிலக்கணங்கள் ,நியாயம்,நீதி எல்லாம் உங்களுடன் மட்டும் தான் .

ஜனநாயகம்,பன்முகத்தன்மை இல்லாத ஒரு சமூகம் எங்களுடையது ,நாய் வாலை நிமித்தினாலும் அதை நிமித்த முடியாது என்பதை எப்போதோ உணர்ந்து கொண்டவன் .இருந்தும் ஒரு நப்பாசையில் உங்கள் எல்லோருடனும் பழகினேன்.2009 may இற்கு முதலே யாழை பார்க்க தொடங்கியிருந்தாலும் எழுத தொடங்கவில்லை .ஏனென்று உங்களுக்கே தெரியும்.

பொய்யாக வாழ்ந்தால் தான் பிழைக்கலாம் என்றால் எனக்கு அந்த வாழ்க்கையே எனக்கு தேவையில்லை .

நன்றி யாழ் உறவுகளே.

//ஒரு சொட்டு சீண்டினாலும் பெருங்கோபம் வருகின்றது. பிரிவினைகள் வெறுப்புகள் எழுகின்றது. ஒதுங்கிச் செல்லும் நிலை ஏற்படுகின்றது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான இறுக்கமான மனநிலை இருக்கும்போது பல்வேறு இயக்கங்கள் குழுக்களுக்கு ஒன்றுசேர்ந்து ஒரு அணியில் நிற்கமுடியாததற்கு உளவியல் காரணங்கள் இருக்கவே செய்கின்றது.//

இது முன்னர் என்னுமொரு கருத்தாளர் போகவா வேண்டாமா என்று ஆரம்பித்த திரியில் எழுதியது.

உதறித்தள்ளிவிட்டுப் போகும் அளவுக்கு எமக்கு கோபம் வருவது இயல்பு. இந்த இயல்பில் மாற்றம் வேண்டும். முகமறியாது கருத்துப்பகிர்ந்துகொண்டிருக்கும் கருத்துக்களத்தில் ஒற்றுமையுடன் அனுசரித்துப் போக முடியாதுள்ளது. நிஜக்களத்தில் இயக்கங்கள் குத்துப்பட்டதற்கும் இந்த இயல்புதான் காரணம். தவறுகளை அதன் பிறப்பிடத்தில்தான் திருத்தவேண்டும் நாம் அதன் விளைவிடத்தில் திருத்த முற்படுகின்றோம். அப்போதெல்லாம் காலம் கடந்துவிடுகின்றது.

எமது சமூகத்துக்கும் ஜனநாயகம் பன்முகத்தன்மைக்கும் ஒரு மண்ணாங்கட்டித்தொடர்பும் இல்லை. இது ஜனநாயக விரோத சமூகம். இந்தச் சமூகத்துக்குள்ளாகவே நாமெல்லோரும் வாழ்ந்தாகவேண்டும். ஜனநாயகம் பன்முகத்தன்மையை நோக்கி நகர முற்பட வேண்டும். அதற்கு உணர்ச்சிவசப்படுதல் கோபப் படுதல் ஒதுங்கிச் செல்லல் பிரிந்து செல்லல் என்பதே எதிரி என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை இழுக்காத எந்த இடத்திலும் நான் வந்ததில்லை .விசுகுவின் கனடா விஜயம் தொட்டு இந்த திரி வரை .

எதாவது ஒரு திரியில் நான் முதலில் விதண்டாவாதம் தொடங்கியதை காட்டினால் இனி நான் யாழுக்கு வராமல் இருக்கின்றேன் .

வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் .

உங்களது சட்ட திட்டங்கள் ,வரைவிலக்கணங்கள் ,நியாயம்,நீதி எல்லாம் உங்களுடன் மட்டும் தான் .

ஜனநாயகம்,பன்முகத்தன்மை இல்லாத ஒரு சமூகம் எங்களுடையது ,நாய் வாலை நிமித்தினாலும் அதை நிமித்த முடியாது என்பதை எப்போதோ உணர்ந்து கொண்டவன் .இருந்தும் ஒரு நப்பாசையில் உங்கள் எல்லோருடனும் பழகினேன்.2009 may இற்கு முதலே யாழை பார்க்க தொடங்கியிருந்தாலும் எழுத தொடங்கவில்லை .ஏனென்று உங்களுக்கே தெரியும்.

பொய்யாக வாழ்ந்தால் தான் பிழைக்கலாம் என்றால் எனக்கு அந்த வாழ்க்கையே எனக்கு தேவையில்லை .

நன்றி யாழ் உறவுகளே.

அர்ஜுன், உங்கள் கருத்தைப் பலர் விமரிசிப்பதே, உங்கள் கருத்தை அவர்கள் வாசிக்கின்றார்கள் என்ற படியால் தான்!

பலர் உங்கள் கருத்தை உள்வாங்குகின்றார்கள் என்பதே உண்மை.

அண்மையில் ஒரு பதிவில், நான் பொயட்டிடம் 'அவரது' கவித்துவத்தைப் பயன்படுத்தி எமது தாயக உறவுகளின் நிலையை ஒரு 'விரிந்த தளத்திற்கு' எடுத்துச் சொன்னால் என்ன என்று கேட்டிருந்தேன்! அவர் தனது கருத்தாடல்களை யாழில் பதியத் தயங்குவது போலப் பதில் தந்திருந்தார். ஏனெனில் தனது கருத்துக்களைக் கள உறவுகள் தேவையில்லாமல் விமரிசிக்கக் கூடும் என்று என்று நினைத்தார் போலும்!

என்னைபொறுத்த மட்டில், நீங்கள் சுவையாக எழுதக்கூடியவர். நல்ல ஒரு கள உறவு!

ஓடி ஒளிவதால், பிரச்சனைகள் தீர்ந்ததாகச் சரித்திரம் இல்லை.

ஜின்னாவின் கருத்துக்குக் காந்தி பயந்து ஓடியிருந்தால்,இன்றைக்கும் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்காது!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவ் யாழ் இணையத்தின் உறவுகள் பலரும் மனதால் மறக்க முடியாத பல யுத்த காட்சிகளின் சாட்சியங்களாக இருப்பீர்கள். உங்களால் மறக்க முடியாத அல்லது மறக்க எத்தனித்தும் ஏதோ ஒரு வினாடியில் முழு வடிவமாக வந்து போகும் காட்சிகள் இருப்பின் இந்த திரியில் எழுதவும். யுத்தத்தின் சாட்சியங்களாக நாம் இருந்தோம் என்பதற்கான ஒரு ஆவணமாக இதை மாற்றும் கடமை உங்களிடமே.

எமது போராட்டத்தில் சிங்கள இராணுவம் ,இந்தியன் இராணுவம் கொன்ற அளவிற்கு தமிழ் மக்களை இயக்கங்கள் கொன்றிருக்கு,புலிகள் கொன்றதுடன் ஒப்பிடும் போது மற்ற இயக்கங்கள் கொன்றது மிக கொஞ்சம்.

இயக்கங்களில் முக்கிய பதவிகளில் இருந்த சிலரின் பெயர்பட்டியல் முன்னர் ஒருமுறை பதிந்திருந்தேன் அதில் பார்த்தல் தெரியும் இயக்கங்கள் எப்படியானவை என்று.பலர் பள்ளிக்கூட பக்கமே போகாதவர்கள்.

எங்கு திரிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அதில் இயக்கப்பிழைகளை மட்டுமே எழுதி திரியைக்குளறுபடிக்குள்ளாக்கும் நிலை தொடர்கிறது. இந்த திரிக்கும் அதுவே கதி..

அர்ஜூன், இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில்...

தொலைபேசி வசதி குறைவு, தொலைக்காட்சி இல்லை, இணைய வசதி அறவே இல்லை, பத்திரிகைத்தணிக்கை ஒரு புறம்.

அப்படியிருக்க, ஸ்ரீலங்கா பொலிசாராலும், புலனாய்வுப் பிரிவினராலும், இராணுவத்தாலும் கொல்லப்பட்ட தமிழர்களின் விபரம் எதுவுமே... வெளியே வருவதில்லை. அதனை கண் கண்ட சாட்சியாக இருப்பவர்களுக்கு இப்போது 35 வயது தொடக்கம் 70 வயது வரை இருக்கலாம். அப்படியானவர்கள் கண்ட சம்பவங்களை சாட்சியாக பதியவே... நிழலி விரும்பினார் என எண்ணுகின்றேன். அப்படி ஆரம்பித்த தலைப்பில், நீங்கள் பல புலி எதிர்ப்பு பத்திரிகைளிலும், இணையங்களிலும், இங்கும் பலமுறை விவாதிக்கப் பட்ட செய்தியை வேண்டுமென்றே... அந்த தலைப்புக்குள் திணிக்கும் போது.... விசுகுக்கு ஏற்பட்ட விசனமே, எனக்கும் ஏற்பட்டது. அதனைச் சுட்டிக்காட்டியது தவறா? இது எமது பொதுப்பிரச்சினை. அதனை வெளியே... கொண்டுவருவதில் உங்களுக்கும் பங்கு உண்டு. இப்போது அந்தச் சாட்சியங்களை பதியாவிட்டால்... இந்தத் தலைமுறையுடன் எமக்கு ஏற்பட்ட இழப்புகள் மறைந்துவிடும் என்பதை உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

மற்றும் படி உங்கள் கருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும்...

உங்கள் மீது தனி மரியாதை வைத்துள்ளேன்.

களத்தின் மீது கோவித்துக் கொண்டு போகாமல், வாருங்கள் அர்ஜூன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல தடவை கெஞ்சிக்கேட்டுள்ளேன். மன்றாடியுள்ளேன். எல்லோரும் மனிதர்கள் பிழை சரியை ஆராய்வோம்.

எல்லாவற்றையும் பேசுவோம் விவாதிப்போம்.

ஆனால் எடுத்தெறிந்து பேசுதல்

நக்கலடித்தல்தலைவர்களை நையாண்டி செய்தல்

ஒருவருடைய படிப்பு மற்றும் தராதரங்களை வைத்து அவரை சேறு பூசுதல்

முக்கியமாக போராளிகளை மாவீரர்களை தூற்றுதல் வசை பாடுதலை மட்டும் தவிர்ப்போம் என்று.

ஆனால் சிலருக்கு உடம்பு முழுவதும் இது பரவியிருப்பது போல அவர்களால் இவற்றைச்செய்யாமல் இருக்கமுடியவில்லை. நாம் நன்றாக எழுதிக்கொண்டிருந்தாலும் அதற்குள் வராமல் அவர்களால் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒன்று அவர்களை துரத்துகிறது. போ போ .... புகுந்து விளையாடு என. இது ஒருவகை சுய இன்பம் என்று தான் நான் நினைக்கின்றேன். நாலுபேரை கோபப்படுத்தி அவர்களது பிரசரை ஏற்றிவிட்டு கூத்துப்பார்ப்பது....

இயக்கங்கள் இது போன்றவர்களுக்கு தண்டனை கொடுத்தது சிலவேளை இந்த பிரசர் ஏறியதாலும் இருக்கலாம்.. கையில் ஆயுதத்தை வைத்திருப்பனிடம் இந்த பிரசர் பரிசோதனையைச்செய்தவரே அதற்கு பொறுப்பு. அதன் பின் தலைமையைப்பேசுவதால் என்ன பயன்?

திரு. அர்ஜூன்.

அவர்களுடன் பலமுறை எழுதியுள்ளேன்.பேசுவோம் என. ஆனால் போராடப்போன எவரையும் போராளியாக மதிப்பதாக தற்போது சொல்பவர் பிரபாகரனை மட்டும் அதற்குள் கொண்டுவரமாட்டாராம். புலிகள் என்றாலே ஒரு ஏளனம். அவர்களது வழிமுறைகள் எல்லாமே தரமற்றவை. எலும்பை சதையை ரத்தத்தை உயிரைக்கொடுத்தவனெல்லாம் முட்டாள் பைத்தியக்காரர்கள்.

இப்படியென்றால் எப்படி பேசுவது???

எநந்த அடிப்படையில் ஆரம்பிப்பது???

நான் இங்கு எழுதினேன்

உமா மகேசுவரன் அனாதைப்பிணமாக கடற்கரையில் கிடந்தபோது நான் அழுதேன் என.

ஏனெனில் எனக்காக போராட புறப்பட்டவர் அவர். அந்த அனுதாபமாவது என்னிடமுண்டு.

விசுவின் கனடாத்திரிக்குள் தானாக வரவில்லை என எழுதியுள்ளார். இது முழுப்பொய்.

ரதியின் சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு இவர்களிடமிருந்து (புலி ஆதரவாளர்களிடமிருந்து) உண்மை வராது என ஆரம்பித்தவர் இவரே? அதற்குள்ளும் புலியைக்கொண்டு வந்தவர் இவரே.

தற்போது நான் அவரது எந்தக்கருத்துக்கும் பதில் எழுதுவதில்லை. காரணம நேரம் பொன்னானது.

ஆனால் ஆகக்குறைந்தது மாவீரர்களையும் போராளிகளையுமாவது மதித்து எழுதுவாராக இருந்தால் நிச்சயம் பழையது எதையும் மனதில் வைக்காது மீண்டும அவருடன் எழுதுவேன்.

எனது நோக்கம் தாயகத்துக்கான ஏதாவது நன்மை என்பதே. இதற்குள் விசுகுவின் தனிப்பட்ட கோபதாபங்களுக்கு எந்த முக்கியமுமில்லை.

அர்ஜுன்

கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் உங்கள் கருத்தை ஆவலாக வாசிப்பேன். சரியோ பிழையோ நேரடியாகப் பேசுபவர். இவ்வளவு காலம் தாக்குப் பிடித்துள்ளீர்கள். கோபித்துக் கொண்டோ, மனவருத்தப்பட்டோ, வெறுத்தோ போக வேண்டாம்.

உங்கள் கருத்தை நிறையப் பேர் வாசிப்பதனால்தான் பலவிதமான கருத்துக்களும் வருகின்றன. அவர்களுடனான விவாதமே உங்களை ஒரு நல்ல கதை சொல்லியாகவும் உருவாக்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாக புலி ஆதரவு,தமிழ் தேசியம்,ஊரில் உள்ள மக்களுக்கு உதவி என கதைத்துக் கொண்டு பின் பக்கத்தால் அரசோடு சேர்ந்து கொண்டு மிச்சம் இருக்கிற தமிழ் மக்களையும்,தேசியத்தையும் அழிக்க துணை போவர்களை விட வெளிப்படையாக தன்ட‌ கருத்தை எழுதும் அர்ஜீன் அண்ணா எவ்வளவோ மேல் என்பது கருத்து.

யாழில் அநேகமானவர்கள் கருத்துக்கு பதில் கருத்து எழுதாமல் கருத்தை திசை திருப்புகிறார்கள் அதில் அர்ஜீன் அண்ணாவும் அட‌ங்குகிறார்...நிழலி பதிவை திசை திருப்ப வேண்டாம் என அர்ஜீன் அண்ணாவை குறித்து மட்டும் சொல்லாமல் எல்லோரையும் பார்த்து பொதுவாக சொல்லி இருந்தால் என்னும் அழகு.

அர்ஜீன் அண்ணா இதுக்காக யாழை விட்டு ஓட வேண்டாம் உங்கள் கருத்தை என்னோடு சேர்த்து பல பேர் வாசிக்கிறார்கள்...நீங்கள் எழுதா விட்டால் மாற்றுக் கருத்தை நாகரீகமாக எழுதுவதற்கு யாரும் இல்லை.

  • தொடங்கியவர்

யாழில் அநேகமானவர்கள் கருத்துக்கு பதில் கருத்து எழுதாமல் கருத்தை திசை திருப்புகிறார்கள் அதில் அர்ஜீன் அண்ணாவும் அட‌ங்குகிறார்...நிழலி பதிவை திசை திருப்ப வேண்டாம் என அர்ஜீன் அண்ணாவை குறித்து மட்டும் சொல்லாமல் எல்லோரையும் பார்த்து பொதுவாக சொல்லி இருந்தால் என்னும் அழகு.

உண்மை ரதி...தவறுக்கு வருந்துகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி என்கின்ற மானஸ்தர் ஒருவரைக்கண்டீர்களாப்பா?

கண்டால் கேட்டதாக சொல்லவும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை ரதி...தவறுக்கு வருந்துகின்றேன்

இதற்குப் பிறகும் ஒளிந்திருக்காதீர்கள், அர்ஜுன்!

'தில்லானா மோகனாம்பாளில் வருகின்ற அந்தப் பாட்டுத் தான் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது!

உங்களுக்கு விளங்கும், எந்தப் பாட்டு அது என்று!!! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.