Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதை/எவரை நீங்கள் தெரிவு செய்வீங்க/ஏன்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் இதயம்.. உண்டா.. மனிதாபிமானம் உண்டா... அளவு கடந்த அன்பு உண்டா.. விரைந்து அல்லது மெதுவாக.. முடிவெடுக்கும் நபரா.. எது என்றாலும்..

ஆம் என்றால்.. தொடர்ந்து படியுங்கள்.. பதில் அளியுங்கள்... கூடவே பதிலுக்கான காரணத்தையும் சொல்லிவிடுங்கள்..

1. நீங்கள் உயர்கல்வி கற்கும் வயதை அடைந்துள்ள நிலையில் உங்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் சம நேரத்தில் அளிக்கப்படுகிறது. நிபந்தனையாக ஒரு வாய்ப்பை மட்டுமே நீங்கள் தேர்வு செய்து பாவிக்க முடியும். நீங்கள் தவற விடும் மற்ற வாய்ப்பை வாழ்க்கையில் எப்போதுமே நீங்கள் அடைய முடியாது.

அ: பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு.

ஆ: திருமணம்.

இதில் நீங்கள் எதனை தெரிவு செய்வீகள்.. ஏன்..??!

2. உங்களிடம் மிகவும் காக்கப்பட வேண்டிய ரகசியம் உள்ளது. அதை எதிர்காலத்தின் தேவை கருதி ஒரே ஒரு இடத்தில் பகிர.. பாதுகாத்து வைக்க கேட்கப்படுகிறீர்கள். கீழ் வருவனவற்றில் எதனை நீங்கள் தெரிவு செய்வீர்கள். ஏன்..?!

அ: பிறர் ஊடுருவ முடியாத திருட முடியாத மிகவும் பாதுகாக்கப்பட்ட கணணி.

ஆ: உங்கள் மனைவி.

3. உங்கள் ஊரில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு.. கடல் மட்டத்திற்கு மேல் நீர் ஓடுகிறது. ஊரே வெள்ளத்தால் அழிந்து போய்விட்டுள்ள நிலையில்.. வெள்ளம் எப்போது வடியும் என்பதே தெரியாத நிலையில்.. நீங்கள் மட்டும் ஒரு படகில் தொற்றிக் கொண்டு உங்களை பாதுகாக்க முடிகிறது. இந்த நிலையில்.. உங்களின் படகருகே.. முளை விடக் கூடிய ஒரு தானிய மூட்டையும்.. உயிருடன் ஒரு குழந்தையும் தத்தளித்து வரும் நிலையில்... உங்கள் படகுக்குள்.. இதில் ஏதாவது ஒன்றை தான் ஏற்ற முடியும் என்ற நிலையில்.. நீங்கள் எதனை தேர்வு செய்து படகில் கொண்டு செல்வீர்கள்... ஏன்..??!

அ: தானிய மூட்டை.

ஆ: குழந்தை.

4. சுற்றுலாச் சென்ற இடத்தில் உங்கள் மனைவியும்.. தாயும் இருந்த வீடு திடீர் என்று தீக்கு இரையாகிறது. இந்த நிலையில்.. இவர்களில் ஒருவரை மட்டுமே நீங்கள் காக்க முடியும் என்ற நிலை. இதில் நீங்கள் யாரைக் காக்க முனைவீர்கள்.. ஏன்..??!

அ: தாய்

: மனைவி.

5: ஒரு இடத்தை சிங்கள ஆமி சுற்றி வளைத்துள்ளது. அங்குள்ள மக்கள் ஒரு மறைவிடத்தில் பதுங்கிக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சத்தம் செய்தாலும் இராணுவம் மக்கள் உள்ள இடத்தை கண்டுபிடித்து அங்கிருக்கும் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் எல்லோரையும் கொன்றுவிடும். இந்த நிலையில்.. ஒரு தாயின் மடியில் இருந்த குழந்தை அழ ஆரம்பிக்கிறது. தாய்க்கோ.. அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களுக்கோ.. அந்தக் குழந்தையின் மூச்சை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. இந்த நிலையில்.. நீங்கள் என்ன முடிவை எடுப்பீர்கள்.. ஏன்..??!

அ: அந்த குழந்தையின் மூச்சை அடைப்பீர்கள்.

ஆ: அங்கு அடைக்கலம் தேடி இருந்த மக்கள் எல்லோரையும் இராணுவம் சுட்டுக் கொல்ல அனுமதிப்பீர்கள்.

(இந்தக் கேள்விகள்.. உங்கள் மன ஆளுமை.. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் தன்மை.. நீங்கள் முதன்மை அளிக்கும் விடயங்கள்.. என்பன குறித்தான உங்களின் மன ஓட்டத்தை அளவிட செதுக்கப்பட்டுள்ளன. வேறு எந்தக் காரணங்களும் இதில் இல்லை. எனவே பயப்பிடாமல் பதில் அளிக்கலாம்.)

(இவை முற்றிலும் எமது ஆக்கம்.)

Edited by nedukkalapoovan

ஆணாக இருந்தால்.........(கற்பனை)

1. திருமணம் ( நாம் என்ன நெடுக்கரே புத்தகத்தோடு அலைய)

2. பிறர் ஊடுருவ முடியாத திருட முடியாத மிகவும் பாதுகாக்கப்பட்ட கணணி (சந்தேகப் புத்தி விட்டே போகாதே)

3.தானிய மூட்டை ( சரவணா மன்னித்து விடு அப்பாவிக் குழந்தை, குழந்தையைக் காப்பாற்ற வெளிக்கிட்டால் சின்ன வீட்டின்ரை பிள்ளை எண்ட சந்தேகம் கிளம்பீடும், மனிசிக்கும் தெரிய வந்திடும், அவளைச் சமாளிக்கவும் முடியாது)

4.தாய் ( எப்பவுமே ஒரே ஒரு தாய் தானே இது தானே சந்தர்ப்பம் ஒண்டு போய் தொலையட்டும் தாய் இருந்தா தானே நல்ல சீதனத்தோடு மற்றது வந்து லான்பண்ணும்)

5.அங்கு அடைக்கலம் தேடி இருந்த மக்கள் எல்லோரையும் இராணுவம் சுட்டுக் கொல்ல அனுமதி..... ( இதுதானே சந்தர்ப்பம் மற்றவனை மாட்ட)

Edited by அலைமகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில fake ஆக என்றாலும்.. ஒரு இதயம் உள்ள ஆள் நீங்கள் மட்டும் தான்..! மிச்ச ஆக்களுக்கு இதயமே இல்ல..! :):lol:

Edited by nedukkalapoovan

யாழில fake ஆக என்றாலும்.. ஒரு இதயம் உள்ள ஆள் நீங்கள் மட்டும் தான்..! மிச்ச ஆக்களுக்கு இதயமே இல்ல..! :):lol:

:lol: :lol: :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

1- பல்கலைக்கழக அனுமதி

ஆனால் எனது வாழ்க்கையில் அதை மாறித்தான் நடந்துள்ளது. அதற்கு காரணம் நானல்ல.

2- மனைவி பாதுகாப்பார் என்பதைவிட கணணியை யார் நம்புவது?

அப்படிப்பார்த்தால் மனைவிதான்

3- நீங்கள் எம்மை விழுத்த இதைப்பாவிக்கின்றீர்கள் என்று தெரிந்தாலும்

என்னால் அந்தக்குழந்தையை விட்டுவிட்டு உணவை உட்கொள்ளமுடியாது. அதைவிட அதன் சிரிப்புடன் வாழலாம்.

எனவே குழந்தை

4- மனைவியைத்தான் காப்பாற்றுவேன். என் தாயும் அதைத்தான் சிபார்சு செய்வார்.

5- எல்லோரும் இறக்க வேண்டுமென்பதால் குழந்தைக்கொன்றுவிடுவேன். ஏனெனில் இல்லாவிட்டாலும் அதுவும் சாகத்தான் போகிறது. நாலு பேர் வாழவேண்டுமென்றால்ஒருவரைப்பலி கொடுப்பது தப்பில்லை(நன்றி மணிரத்தினம்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

1) பல்கலைக்கழக அனுமதி :rolleyes: (ஏனென்றால் பல்கலையில்தான் பல கேர்ள் ஃபிரண்ட்ஸ் கிடைப்பினமே.. ^_^ )

2) மனைவி (யாரும் ஊடுருவமுடியாது என்று யாரோ சொல்வதை நம்பப்போகும் நான் என் மனைவியை நம்ப மாட்டேனா? :wub: )

3) குழந்தை ( கரைக்குப் போனால் ஏதாவது உண்ணக் கிடைக்காமலா போகும்?? :huh: )

4) யார் முதலில் தென்படுகிறாரோ, அவரை.. :huh:

5) இது எனக்கு உண்மையிலேயே நேர்ந்த அனுபவம்.. 83 கலவரத்தில் தப்பி ஓடி ஒளிந்திருக்கும்போது இப்படி ஒரு சூழ்நிலை வந்தது.. என்ன நடந்தாலும் குழந்தையைக் கொல்லமாட்டேன்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

1 ) திருமணம். ( உலகமே என்னை மன்னித்துவிடு, நான் படிக்காதது உனக்கு பெரும் இழப்பு.)

2 ) மனைவி. ( எப்படியும் விக்கி லீக்ஸ் ஊடுருவத்தான் போகுது. அதைவிட இது பெட்டர்.)

3 ) குழந்தை . ( குழந்தையையும், தானிய மூட்டையையும் படகில் ஏற்றி விடுவேன். மன்னிக்கவும், எனக்கு நீச்சல் தெரியாது.)

  • கருத்துக்கள உறவுகள்

1) பல்கலைதான்.படிக்க இல்லை.பிடிக்க.விதம்விதமாக அனுபவிக்கலாமே. :lol:

2)கணனி.இரன்டும் ஒன்றுதான் ஆனால் கணனி இரன்டாம் தாரமாக கலியானம் கட்டாது :D

3)குழந்தை.இனி உணவே கிடைக்காது என்றால் இந்த தானிய மூட்டை முடிந்த பின் என்ன செய்வது.அதிலும் பாக்க குழந்தையை கொஞ்ச நேரம் காப்பாற்றிய திருப்தியாவது கிடைக்கும். :)

4)தாய் தான்.கலயானம் கட்டி வைத்ததற்க்கு திட்ட வேனுமே. :lol:

5)குழந்தையின் மூச்சுதான்.(இதை எழுத எனக்கு மனம் கஸ்ரப்பட்டாலும்)ஆமி வந்தால் அதுவும் சேர்ந்துதான் அழியும்.அதைவிட எம் காவல் தெய்வங்கள் காட்டிய வளியும் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்விக்கு நான் ஆணாக இருந்தால் எனது பதில்கள் இப்படித்தான் இருக்கும்.

1. பல்கலைக்கழகம்

காரணம் திருமணம் என்பது முழுமையான நிறைவைக் கொடுக்கக்கூடியதல்ல... திருமணம் ஒரு இனவிருத்திக்கானது மாத்திரமே... பல்கலை என்பது உலக விருத்திக்குரியது. இனவிருத்தியை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் இன்று இந்தக்கணனியில் நாம் இவற்றையெல்லாம் எழுதிக் கொண்டிருக்க முடியாது.

2. மிகப்பத்திரப்படுத்தப்பட்ட கணனி

காரணம் மனித மனங்கள் மாறிவிடக்கூடிய இயல்பைக் கொண்டவை ஒரு வேளை என்னை நேசிக்கும் மனைவியிடம் நான் அந்த ரகசியத்தை பாதுகாக்கும்படி கூறியிருந்தால் என்னையோ அல்லது பிள்ளைகளையோ சித்ரவதை செய்வதன் மூலம் என் மனைவியின் வாயில் இருந்து விடயத்தை எதிரிகள் இலகுவாக எடுத்துவிடக்கூடும் ஆகவே மனைவி என்பது என்னுடைய தேர்வில் இவ்வகையான விடயங்களைக்கையாளவதற்கு உகந்தவரே அல்ல.

3. தானிய மூட்டை

வெள்ளம் வடிந்தபின்னால் தப்பியிருக்கக்கூடிய ஜீவராசிகளுக்கு உணவு வேண்டுமே அவற்றை உற்பத்தி செய்ய தானிய மூட்டை அவசியமாகிறது. ஒரு குழந்தையின் உயிரைப்பார்த்து சில நாட்களில் இந்த அனர்த்தங்களிலிருந்து தப்பி வாழும் பல் உயிர்கள் உணவின்றி அழியப்போவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால்... தானியமூட்டையே அவசியமாகிறது.

ஹலோ நெடுக்கு இந்தப்பதிலை எழுதிவிட்டு இரவுபூராவும் தூங்க முடியாமல் மனச்சாட்சி என்னை சித்ரவதை பண்ணிவிட்டது அதனால சின்னத் திருத்தம் குழந்தையைக் காப்பாற்றுவது தெரிவு செய்யப்பட்ட பதில்

4. மனைவி

காரணம் தாயைக்காப்பாற்றுவதால் இனவிருத்திக்கான வாய்ப்புகள் இல்லை. இந்த இயற்கையின் அனர்த்தங்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். இழப்புகளை நிரவ இனவிருத்தியை உருவாக்கக்கூடிய பெண்ணே முதன்மை பெறுகின்றார் ஆதலால் மனைவி

5. குழந்தையின் மூச்சை நிறுத்தமாட்டோம்

குழந்தை அழும் அதன்மூச்சை நிறுத்துவதற்குப்பதில் அழிவது உறுதி என்று தெரியுமிடத்து எதிர்த்துப்போராடத்தயாராவோம்.

நெடுக்கு இதென்ன கொடுமையான. பரீட்சை?

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான சிந்தனை ஓட்டங்கள். ம்ம்.. பதில்கள் தொடரட்டும்.. முடிவுகளை கடைசில அலசி ஆராய்வம்..! :):lol:

உங்களிடம் இதயம்.. உண்டா.. மனிதாபிமானம் உண்டா... அளவு கடந்த அன்பு உண்டா.. விரைந்து அல்லது மெதுவாக.. முடிவெடுக்கும் நபரா.. எது என்றாலும்..

ஆம் என்றால்.. தொடர்ந்து படியுங்கள்.. பதில் அளியுங்கள்... கூடவே பதிலுக்கான காரணத்தையும் சொல்லிவிடுங்கள்..

1. நீங்கள் உயர்கல்வி கற்கும் வயதை அடைந்துள்ள நிலையில் உங்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் சம நேரத்தில் அளிக்கப்படுகிறது. நிபந்தனையாக ஒரு வாய்ப்பை மட்டுமே நீங்கள் தேர்வு செய்து பாவிக்க முடியும். நீங்கள் தவற விடும் மற்ற வாய்ப்பை வாழ்க்கையில் எப்போதுமே நீங்கள் அடைய முடியாது.

அ: பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு.

ஏன்..??!

காலத்தின் தேவை!

2. உங்களிடம் மிகவும் காக்கப்பட வேண்டிய ரகசியம் உள்ளது. அதை எதிர்காலத்தின் தேவை கருதி ஒரே ஒரு இடத்தில் பகிர.. பாதுகாத்து வைக்க கேட்கப்படுகிறீர்கள். கீழ் வருவனவற்றில் எதனை நீங்கள் தெரிவு செய்வீர்கள். ஏன்..?!

அ: பிறர் ஊடுருவ முடியாத திருட முடியாத மிகவும் பாதுகாக்கப்பட்ட கணணி.

இணைய சேவை இல்லாத கணணி

3. உங்கள் ஊரில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு.. கடல் மட்டத்திற்கு மேல் நீர் ஓடுகிறது. ஊரே வெள்ளத்தால் அழிந்து போய்விட்டுள்ள நிலையில்.. வெள்ளம் எப்போது வடியும் என்பதே தெரியாத நிலையில்.. நீங்கள் மட்டும் ஒரு படகில் தொற்றிக் கொண்டு உங்களை பாதுகாக்க முடிகிறது. இந்த நிலையில்.. உங்களின் படகருகே.. முளை விடக் கூடிய ஒரு தானிய மூட்டையும்.. உயிருடன் ஒரு குழந்தையும் தத்தளித்து வரும் நிலையில்... உங்கள் படகுக்குள்.. இதில் ஏதாவது ஒன்றை தான் ஏற்ற முடியும் என்ற நிலையில்.. நீங்கள் எதனை தேர்வு செய்து படகில் கொண்டு செல்வீர்கள்... ஏன்..??!

ஆ: குழந்தை.

வாழ வேண்டிய குழந்தையையும், தானிய மூட்டையையும் ஏற்றி விடத்தான் விருப்பம், ஆனால் எமகாதகர்கள் குழந்தையை விட்டு விட்டு தானிய மூட்டையோடு எஸ்கேப் ஆகிவிடுவார்கள் :blink::lol: அதனால் நான் குழந்தையை மட்டும் தான் ஏற்றுவேன்.

4. சுற்றுலாச் சென்ற இடத்தில் உங்கள் மனைவியும்.. தாயும் இருந்த வீடு திடீர் என்று தீக்கு இரையாகிறது. இந்த நிலையில்.. இவர்களில் ஒருவரை மட்டுமே நீங்கள் காக்க முடியும் என்ற நிலை. இதில் நீங்கள் யாரைக் காக்க முனைவீர்கள்.. ஏன்..??!

அ: தாய்

: மனைவி.

(ஒரு சந்தேகம்... மனைவியின் தாயா? அல்லது எனது தாயா?? ^_^:lol:)

முதலில் கண்ணில் தெரிபவரை

5: ஒரு இடத்தை சிங்கள ஆமி சுற்றி வளைத்துள்ளது. அங்குள்ள மக்கள் ஒரு மறைவிடத்தில் பதுங்கிக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சத்தம் செய்தாலும் இராணுவம் மக்கள் உள்ள இடத்தை கண்டுபிடித்து அங்கிருக்கும் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் எல்லோரையும் கொன்றுவிடும். இந்த நிலையில்.. ஒரு தாயின் மடியில் இருந்த குழந்தை அழ ஆரம்பிக்கிறது. தாய்க்கோ.. அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களுக்கோ.. அந்தக் குழந்தையின் மூச்சை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. இந்த நிலையில்.. நீங்கள் என்ன முடிவை எடுப்பீர்கள்.. ஏன்..??!

அ: அந்த குழந்தையின் மூச்சை அடைப்பீர்கள்.

அந்தக் குழந்தையின் மூச்சை நிறுத்துவதன் மூலம் அங்குள்ள மக்களின் உயிர்களை நிச்சயம் காப்பாற்ற முடியுமானால் மட்டும்...

(இந்தக் கேள்விகள்.. உங்கள் மன ஆளுமை.. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் தன்மை.. நீங்கள் முதன்மை அளிக்கும் விடயங்கள்.. என்பன குறித்தான உங்களின் மன ஓட்டத்தை அளவிட செதுக்கப்பட்டுள்ளன. வேறு எந்தக் காரணங்களும் இதில் இல்லை. எனவே பயப்பிடாமல் பதில் அளிக்கலாம்.)

(இவை முற்றிலும் எமது ஆக்கம்.)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் இதயம்.. உண்டா.. மனிதாபிமானம் உண்டா... அளவு கடந்த அன்பு உண்டா.. விரைந்து அல்லது மெதுவாக.. முடிவெடுக்கும் நபரா.. எது என்றாலும்..

ஆம் என்றால்.. தொடர்ந்து படியுங்கள்.. பதில் அளியுங்கள்... கூடவே பதிலுக்கான காரணத்தையும் சொல்லிவிடுங்கள்..

1. நீங்கள் உயர்கல்வி கற்கும் வயதை அடைந்துள்ள நிலையில் உங்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் சம நேரத்தில் அளிக்கப்படுகிறது. நிபந்தனையாக ஒரு வாய்ப்பை மட்டுமே நீங்கள் தேர்வு செய்து பாவிக்க முடியும். நீங்கள் தவற விடும் மற்ற வாய்ப்பை வாழ்க்கையில் எப்போதுமே நீங்கள் அடைய முடியாது.

அ: பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு.

ஆ: திருமணம். (பல்கலைக்கழகம் சென்றுதான் அறிவு வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை - எனது மனதில் எப்பவும் எழும் ஆனாலும் பதில் கிடைக்காத கேள்வி "எனது வாழ்க்கையின் நேக்கம் என்ன?" இதற்கு மற்றவர்கள் கூறிய பதில் இனவிருத்தி - ஆனால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத பதிலாகவே உள்ளது....இருந்தும்....)

இதில் நீங்கள் எதனை தெரிவு செய்வீகள்.. ஏன்..??!

2. உங்களிடம் மிகவும் காக்கப்பட வேண்டிய ரகசியம் உள்ளது. அதை எதிர்காலத்தின் தேவை கருதி ஒரே ஒரு இடத்தில் பகிர.. பாதுகாத்து வைக்க கேட்கப்படுகிறீர்கள். கீழ் வருவனவற்றில் எதனை நீங்கள் தெரிவு செய்வீர்கள். ஏன்..?!

அ: பிறர் ஊடுருவ முடியாத திருட முடியாத மிகவும் பாதுகாக்கப்பட்ட கணணி. (அனுபவம் ;) )

ஆ: உங்கள் மனைவி.

3. உங்கள் ஊரில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு.. கடல் மட்டத்திற்கு மேல் நீர் ஓடுகிறது. ஊரே வெள்ளத்தால் அழிந்து போய்விட்டுள்ள நிலையில்.. வெள்ளம் எப்போது வடியும் என்பதே தெரியாத நிலையில்.. நீங்கள் மட்டும் ஒரு படகில் தொற்றிக் கொண்டு உங்களை பாதுகாக்க முடிகிறது. இந்த நிலையில்.. உங்களின் படகருகே.. முளை விடக் கூடிய ஒரு தானிய மூட்டையும்.. உயிருடன் ஒரு குழந்தையும் தத்தளித்து வரும் நிலையில்... உங்கள் படகுக்குள்.. இதில் ஏதாவது ஒன்றை தான் ஏற்ற முடியும் என்ற நிலையில்.. நீங்கள் எதனை தேர்வு செய்து படகில் கொண்டு செல்வீர்கள்... ஏன்..??!

அ: தானிய மூட்டை.

ஆ: குழந்தை. (ஊர் தான் அழிந்து விட்டது... வேறெங்காவது உணவு கிடைக்கும்)

4. சுற்றுலாச் சென்ற இடத்தில் உங்கள் மனைவியும்.. தாயும் இருந்த வீடு திடீர் என்று தீக்கு இரையாகிறது. இந்த நிலையில்.. இவர்களில் ஒருவரை மட்டுமே நீங்கள் காக்க முடியும் என்ற நிலை. இதில் நீங்கள் யாரைக் காக்க முனைவீர்கள்.. ஏன்..??!

அ: தாய் (அறிவு பூர்வமான காரணம் தெரியவில்லை....உணர்வு பூர்வமாக முடிவெடுத்ததால் அம்மா)

: மனைவி.

5: ஒரு இடத்தை சிங்கள ஆமி சுற்றி வளைத்துள்ளது. அங்குள்ள மக்கள் ஒரு மறைவிடத்தில் பதுங்கிக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சத்தம் செய்தாலும் இராணுவம் மக்கள் உள்ள இடத்தை கண்டுபிடித்து அங்கிருக்கும் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் எல்லோரையும் கொன்றுவிடும். இந்த நிலையில்.. ஒரு தாயின் மடியில் இருந்த குழந்தை அழ ஆரம்பிக்கிறது. தாய்க்கோ.. அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களுக்கோ.. அந்தக் குழந்தையின் மூச்சை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. இந்த நிலையில்.. நீங்கள் என்ன முடிவை எடுப்பீர்கள்.. ஏன்..??!

அ: அந்த குழந்தையின் மூச்சை அடைப்பீர்கள். (இதில் பெரிய சிறிய உயிர் வேறுபாடு இல்லை. ஆமி வந்தால் குழந்தையின் உயிரும் சேர்த்து தான் அழிக்கப்படும்... அதனால் ஒன்றை கொன்று பலதைக்காப்பதில் தப்பில்லை.)

ஆ: அங்கு அடைக்கலம் தேடி இருந்த மக்கள் எல்லோரையும் இராணுவம் சுட்டுக் கொல்ல அனுமதிப்பீர்கள்.

(இந்தக் கேள்விகள்.. உங்கள் மன ஆளுமை.. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் தன்மை.. நீங்கள் முதன்மை அளிக்கும் விடயங்கள்.. என்பன குறித்தான உங்களின் மன ஓட்டத்தை அளவிட செதுக்கப்பட்டுள்ளன. வேறு எந்தக் காரணங்களும் இதில் இல்லை. எனவே பயப்பிடாமல் பதில் அளிக்கலாம்.)

(இவை முற்றிலும் எமது ஆக்கம்.)

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் இதயம்.. உண்டா.. மனிதாபிமானம் உண்டா... அளவு கடந்த அன்பு உண்டா.. விரைந்து அல்லது மெதுவாக.. முடிவெடுக்கும் நபரா.. எது என்றாலும்..

ஆம் என்றால்.. தொடர்ந்து படியுங்கள்.. பதில் அளியுங்கள்... கூடவே பதிலுக்கான காரணத்தையும் சொல்லிவிடுங்கள்..

1. நீங்கள் உயர்கல்வி கற்கும் வயதை அடைந்துள்ள நிலையில் உங்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் சம நேரத்தில் அளிக்கப்படுகிறது. நிபந்தனையாக ஒரு வாய்ப்பை மட்டுமே நீங்கள் தேர்வு செய்து பாவிக்க முடியும். நீங்கள் தவற விடும் மற்ற வாய்ப்பை வாழ்க்கையில் எப்போதுமே நீங்கள் அடைய முடியாது.

அ: பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு.

ஆ: திருமணம்.

இதில் நீங்கள் எதனை தெரிவு செய்வீகள்.. ஏன்..??!

கல்விக்கு பின்னர் தான் எதுவுமே சாத்தியமாகும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. படிக்கும் வயதில் திருமணத்துக்கு என்ன அவசியம் வேண்டிக்கிடக்கிறது??

2. உங்களிடம் மிகவும் காக்கப்பட வேண்டிய ரகசியம் உள்ளது. அதை எதிர்காலத்தின் தேவை கருதி ஒரே ஒரு இடத்தில் பகிர.. பாதுகாத்து வைக்க கேட்கப்படுகிறீர்கள். கீழ் வருவனவற்றில் எதனை நீங்கள் தெரிவு செய்வீர்கள். ஏன்..?!

அ: பிறர் ஊடுருவ முடியாத திருட முடியாத மிகவும் பாதுகாக்கப்பட்ட கணணி.

ஆ: உங்கள் மனைவி.

ஏனெனில் உண்மையான மனைவி,கணிணியை விட பல மடங்கு encrypted ஆனவரானால் மட்டுமே மனைவியாவார்.

3. உங்கள் ஊரில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு.. கடல் மட்டத்திற்கு மேல் நீர் ஓடுகிறது. ஊரே வெள்ளத்தால் அழிந்து போய்விட்டுள்ள நிலையில்.. வெள்ளம் எப்போது வடியும் என்பதே தெரியாத நிலையில்.. நீங்கள் மட்டும் ஒரு படகில் தொற்றிக் கொண்டு உங்களை பாதுகாக்க முடிகிறது. இந்த நிலையில்.. உங்களின் படகருகே.. முளை விடக் கூடிய ஒரு தானிய மூட்டையும்.. உயிருடன் ஒரு குழந்தையும் தத்தளித்து வரும் நிலையில்... உங்கள் படகுக்குள்.. இதில் ஏதாவது ஒன்றை தான் ஏற்ற முடியும் என்ற நிலையில்.. நீங்கள் எதனை தேர்வு செய்து படகில் கொண்டு செல்வீர்கள்... ஏன்..??!

அ: தானிய மூட்டை.

ஆ: குழந்தை.

குழந்தை தண்ணீரில் மிதப்பார். ஒரு சிறு கயிற்றினால் வேணுமானால் கட்டி விடலாம்.படகில் நிறையை எப்படியும் பாதிக்காது.தானியத்தையும் கொண்டு போய் சேர்த்தாகவும் முடியும்.

4. சுற்றுலாச் சென்ற இடத்தில் உங்கள் மனைவியும்.. தாயும் இருந்த வீடு திடீர் என்று தீக்கு இரையாகிறது. இந்த நிலையில்.. இவர்களில் ஒருவரை மட்டுமே நீங்கள் காக்க முடியும் என்ற நிலை. இதில் நீங்கள் யாரைக் காக்க முனைவீர்கள்.. ஏன்..??!

அ: தாய்

: மனைவி.

ஒரே ஒரு தாயை தான் வாழ் நாளில் காண முடியும்.

5: ஒரு இடத்தை சிங்கள ஆமி சுற்றி வளைத்துள்ளது. அங்குள்ள மக்கள் ஒரு மறைவிடத்தில் பதுங்கிக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சத்தம் செய்தாலும் இராணுவம் மக்கள் உள்ள இடத்தை கண்டுபிடித்து அங்கிருக்கும் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் எல்லோரையும் கொன்றுவிடும். இந்த நிலையில்.. ஒரு தாயின் மடியில் இருந்த குழந்தை அழ ஆரம்பிக்கிறது. தாய்க்கோ.. அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களுக்கோ.. அந்தக் குழந்தையின் மூச்சை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. இந்த நிலையில்.. நீங்கள் என்ன முடிவை எடுப்பீர்கள்.. ஏன்..??!

அ: அந்த குழந்தையின் மூச்சை அடைப்பீர்கள்.

ஆ: அங்கு அடைக்கலம் தேடி இருந்த மக்கள் எல்லோரையும் இராணுவம் சுட்டுக் கொல்ல அனுமதிப்பீர்கள்.

மிகுதி பேரின் உயிரை காப்பாற்ற குழந்தையை கொல்ல வேண்டும்.

கூட்டத்தில் ஒருவர் குழந்தைக்கு பாலை கொடுத்தாலே குடித்து விட்டு படுத்து விடுவான்/ள்.

(இந்தக் கேள்விகள்.. உங்கள் மன ஆளுமை.. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் தன்மை.. நீங்கள் முதன்மை அளிக்கும் விடயங்கள்.. என்பன குறித்தான உங்களின் மன ஓட்டத்தை அளவிட செதுக்கப்பட்டுள்ளன. வேறு எந்தக் காரணங்களும் இதில் இல்லை. எனவே பயப்பிடாமல் பதில் அளிக்கலாம்.)

(இவை முற்றிலும் எமது ஆக்கம்.)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

1. நீங்கள் உயர்கல்வி கற்கும் வயதை அடைந்துள்ள நிலையில் உங்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் சம நேரத்தில் அளிக்கப்படுகிறது. நிபந்தனையாக ஒரு வாய்ப்பை மட்டுமே நீங்கள் தேர்வு செய்து பாவிக்க முடியும். நீங்கள் தவற விடும் மற்ற வாய்ப்பை வாழ்க்கையில் எப்போதுமே நீங்கள் அடைய முடியாது.

அ: பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு.

கற்றல், கீழுள்ளவற்றிக்கு மிக முக்கியமானது...

வேலை வாய்ப்பு, ஆளுமை, திறமை.

சூழலையும், தொடர்பாடலையும் சரிவர அறிதல்.

பண்பு, நல்லொழுக்கம்.

2. உங்களிடம் மிகவும் காக்கப்பட வேண்டிய ரகசியம் உள்ளது. அதை எதிர்காலத்தின் தேவை கருதி ஒரே ஒரு இடத்தில் பகிர.. பாதுகாத்து வைக்க கேட்கப்படுகிறீர்கள். கீழ் வருவனவற்றில் எதனை நீங்கள் தெரிவு செய்வீர்கள். ஏன்..?!

அ: பிறர் ஊடுருவ முடியாத திருட முடியாத மிகவும் பாதுகாக்கப்பட்ட கணணி.

ஏனெனில் கணனி எமக்கு முழுமையாகக் கட்டுப்பட்டது..சூழ் நிலைக்கேற்ப மாறி, சுயமாக சிந்திக்கும் திறன் அதற்கு இல்லையென்பதாலும், அதன் உள்ளும் புறமும், செயலும் எமக்கு அத்துபடியென்பதாலும் இத்தெரிவு.

3. உங்கள் ஊரில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு.. கடல் மட்டத்திற்கு மேல் நீர் ஓடுகிறது. ஊரே வெள்ளத்தால் அழிந்து போய்விட்டுள்ள நிலையில்.. வெள்ளம் எப்போது வடியும் என்பதே தெரியாத நிலையில்.. நீங்கள் மட்டும் ஒரு படகில் தொற்றிக் கொண்டு உங்களை பாதுகாக்க முடிகிறது. இந்த நிலையில்.. உங்களின் படகருகே.. முளை விடக் கூடிய ஒரு தானிய மூட்டையும்.. உயிருடன் ஒரு குழந்தையும் தத்தளித்து வரும் நிலையில்... உங்கள் படகுக்குள்.. இதில் ஏதாவது ஒன்றை தான் ஏற்ற முடியும் என்ற நிலையில்.. நீங்கள் எதனை தேர்வு செய்து படகில் கொண்டு செல்வீர்கள்... ஏன்..??!

ஆ: குழந்தை.

உயிரற்ற தானிய மூடை இல்லையென்றாலும் சமாளிக்க இயலும். உயிர் முக்கியமானது.

4. சுற்றுலாச் சென்ற இடத்தில் உங்கள் மனைவியும்.. தாயும் இருந்த வீடு திடீர் என்று தீக்கு இரையாகிறது. இந்த நிலையில்.. இவர்களில் ஒருவரை மட்டுமே நீங்கள் காக்க முடியும் என்ற நிலை. இதில் நீங்கள் யாரைக் காக்க முனைவீர்கள்.. ஏன்..??!

அ: தாய்

எனது தெரிவு தாய் தான்...

ஆனால் என் தாய், அதை மறுதலித்து என் மனைவியை காப்பாற்றி அனுப்பிடுவார்.

5: ஒரு இடத்தை சிங்கள ஆமி சுற்றி வளைத்துள்ளது. அங்குள்ள மக்கள் ஒரு மறைவிடத்தில் பதுங்கிக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சத்தம் செய்தாலும் இராணுவம் மக்கள் உள்ள இடத்தை கண்டுபிடித்து அங்கிருக்கும் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் எல்லோரையும் கொன்றுவிடும். இந்த நிலையில்.. ஒரு தாயின் மடியில் இருந்த குழந்தை அழ ஆரம்பிக்கிறது. தாய்க்கோ.. அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களுக்கோ.. அந்தக் குழந்தையின் மூச்சை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. இந்த நிலையில்.. நீங்கள் என்ன முடிவை எடுப்பீர்கள்.. ஏன்..??!

அ: அந்த குழந்தையின் மூச்சை அடைப்பீர்கள்.

தர்ம சங்கடமான கேள்வி.

பல உயிரைக் காப்பாற்ற ஒரு உயிர் பலியாவது தவிர்க்க இயலாதது.

இதைப் போனற் ஒரு உண்மை சம்பவம் வாரணாசியில் நடந்ததாக நினைவு...

இறுதிக் கிரியைகள் முடிந்தவுடன் கங்கையில் எறியப்படும் சடலங்களை உண்டு கொழுத்த முதலைகளின் அருகே, படகில் சுற்றுலா சவாரி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு சிறுமி, கையை நீரில் அமிழ்ந்தவாறே மகிழ்வுடன் வர, முதலை அச்சிறிமியின் கையைக் கவ்வி முழுப்படகையும் இழுத்தது...

படகு நதியில் மூழ்கி குடும்பமே பலியாகும் நிலை..

படகோட்டி உடனே அக்குழந்தையின் தந்தையிடம் உரக்கக் கூவி அறிவுறுத்துகிறார்.. "மற்ற எல்லோரையும் காப்பாற்ற வேண்டுமெனில் முதலையிடம் அகபட்ட சிறுமியை நதியில் தள்ளிவிடுங்கள்"...

பரிதவித்த அத்தந்தை, அழுதவாறே அக்குழந்தையை முதலைக்கு பலி கொடுத்து, தன் குடும்பத்தின் ஏனையோரை காப்பாற்றினார்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "படகோட்டி உடனே அக்குழந்தையின் தந்தையிடம் உரக்கக் கூவி அறிவுறுத்துகிறார்.. "மற்ற எல்லோரையும் காப்பாற்ற வேண்டுமெனில் முதலையிடம் அகபட்ட சிறுமியை நதியில் தள்ளிவிடுங்கள்"...

பரிதவித்த அத்தந்தை, அழுதவாறே அக்குழந்தையை முதலைக்கு பலி கொடுத்து, தன் குடும்பத்தின் ஏனையோரை காப்பாற்றினார்."

  • கருத்துக்கள உறவுகள்

படகோட்டி உடனே அக்குழந்தையின் தந்தையிடம் உரக்கக் கூவி அறிவுறுத்துகிறார்.. "மற்ற எல்லோரையும் காப்பாற்ற வேண்டுமெனில் முதலையிடம் அகபட்ட சிறுமியை நதியில் தள்ளிவிடுங்கள்"...

பரிதவித்த அத்தந்தை, அழுதவாறே அக்குழந்தையை முதலைக்கு பலி கொடுத்து, தன் குடும்பத்தின் ஏனையோரை காப்பாற்றினார்.

காப்பாற்றிய தந்தையும், சுற்றியிருந்த பயணிகளும், படகோட்டியும் இப்போது அரைப் பைத்தியங்களாக அலைந்து கொண்டிருப்பார்கள் (Post-traumatic stress syndrome). சிலர் தற்கொலையும் செய்துகொண்டிருக்கலாம்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் எழுதின மாதிரி குழந்தையை பலி கொடுத்த சம்பவம் ஈழத்திலும் நடந்துள்ளதாக நான் கேள்விப் பட்டு உள்ளேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.