Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரெண்டு பவுண் !! பகுதி: [01] [02] [03]...

Featured Replies

[01]

அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்! பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை.

அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்சம் தப்பீட்டா. ஆனாலும் 1975 இலயே 25பவுண் தாலிக்கொடிக்குச் சொந்தக்காரி.

இந்த மயிலிட்டிச் சம்மாட்டியாருக்கு... ஒன்று ஆணும் மற்றது பெண்ணுமாய், இரண்டே இரண்டு வாரிசுகள். அதுகளையும் பொத்திப் பொத்தித்தான் வளர்த்தார் செல்லமாக. எல்லாமே நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. என்ன ஆச்சுது? என்று விளக்கம் தேவையில்லாத விதமாக, எல்லாருமே அனுபவித்த இடப்பெயர்வு இழப்புக்களினால்...... இன்று, இந்தக் கடற்கரையில் வலைபின்னிக் கொண்டிருந்தார் 'முன்னாள் சம்மாட்டியார்' குட்டிப்பவுண்.

அலைகளின் மிதமான சத்தம்... இதமான கடற்காற்று...நிலவின் ஒளி... மணற்கரை... என எல்லாமே இயற்கையின் கைகளில் அழகாகத் தவழ்ந்து கொண்டிருந்த பருத்திக்கடலின் அழகிய இயல்பினைக் கெடுப்பதாய்.... எங்கோ தூரத்தில் ஒரு டோறாப் படகின் குறு குறு இரைச்சல் மட்டும் குழப்பிக் கொண்டே இருந்தது.

எப்பவுமே ஏழெட்டு மணிக்குள்ள வாற சிவலிங்கத்தார் அப்பொழுதுதான்.... தன்ர பேரனுடன் கடற்கரை வந்தடைந்தார். ஒரு தென்னம்பிள்ளையுடன் தன்ர பழைய "ரளி" சைக்கிளை சாத்தி நிப்பாட்டிட்டு... ஆறு வயது பேரனை கையில பிடித்துக்கொண்டு குட்டிப்பவுண் இருந்த இடத்தை நோக்கி நடந்தார்.... வழமைபோல.

பாதித் தூரம் தாண்ட முன்னரே.... பேரன் அவர் கையிலிருந்து தன்னைத் தானே விடுவித்தவனாய்... கடற்கரை அலைகளில் 'நிலவு நண்டு' பிடிக்க ஆர்வமாய் ஓடிப்போனான். ஓயாத அலைகளும் அவனை வரவேற்பதாய் அவனை நோக்கி ஓடி வந்தன!

*****************************************************************************************************************************************************

தொடரும்...

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கதையொன்று, கவிதை நடையில்...

மண்வாசனை, எப்போதுமே இனிக்கும்...

தொடருங்கள், கவிதை>>>>>

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கு தொடருங்கள்

கவிதையும் கதை சொல்லும் என்பது இங்கு நிதர்சனம். படைப்பு நன்று. தொடருங்கள் உங்கள் கவிநயம் மிகு படைப்புக்களை...

அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்! பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை.

அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்சம் தப்பீட்டா. ஆனாலும் 1977இலயே 25பவுண் தாலிக்கொடிக்குச் சொந்தக்காரி.

இந்த மயிலிட்டிச் சம்மாட்டியாருக்கு... ஒன்று ஆணும் மற்றது பெண்ணுமாய், இரண்டே இரண்டு வாரிசுகள். அதுகளையும் பொத்திப் பொத்தித்தான் வளர்த்தார் செல்லமாக. எல்லாமே நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. என்ன ஆச்சுது? என்று விளக்கம் தேவையில்லாத விதமாக, எல்லாருமே அனுபவித்த இடப்பெயர்வு இழப்புக்களினால்...... இன்று, இந்தக் கடற்கரையில் வலைபின்னிக் கொண்டிருந்தார் 'முன்னாள் சம்மாட்டியார்' குட்டிப்பவுண்.

அலைகளின் மிதமான சத்தம்... இதமான கடற்காற்று...நிலவின் ஒளி... மணற்கரை... என எல்லாமே இயற்கையின் கைகளில் அழகாகத் தவழ்ந்து கொண்டிருந்த பருத்திக்கடலின் அழகிய இயல்பினைக் கெடுப்பதாய்.... எங்கோ தூரத்தில் ஒரு டோறாப் படகின் குறு குறு இரைச்சல் மட்டும் குழப்பிக் கொண்டே இருந்தது.

எப்பவுமே ஏழெட்டு மணிக்குள்ள வாற சிவலிங்கத்தார் அப்பொழுதுதான்.... தன்ர பேரனுடன் கடற்கரை வந்தடைந்தார். ஒரு தென்னம்பிள்ளையுடன் தன்ர பழைய "ரளி" சைக்கிளை சாத்தி நிப்பாட்டிட்டு... ஆறு வயது பேரனை கையில பிடித்துக்கொண்டு குட்டிப்பவுண் இருந்த இடத்தை நோக்கி நடந்தார்.... வழமைபோல.

பாதித் தூரம் தாண்ட முன்னரே.... பேரன் அவர் கையிலிருந்து தன்னைத் தானே விடுவித்தவனாய்... கடற்கரை அலைகளில் 'நிலவு நண்டு' பிடிக்க ஆர்வமாய் ஓடிப்போனான். ஓயாத அலைகளும் அவனை வரவேற்பதாய் அவனை நோக்கி ஓடி வந்தன!

*****************************************************************************************************************************************************

தொடரும்...

கவி (தை ) க்குள் கதையுண்டு!!! ஒரு சிறிய சீண்டலின் விளைவே கவி (தை )கதை சொல்லவந்த கதை . தண்டையல்கள் , சம்மாட்டிகள் , என்கின்ற பதவி அவர்களுடன் ஒட்டிப்பிறக்கவில்லை . மாறாக , அவர்கள் அந்தப் பதவி நிலையை அடைவதற்குப் பின்னணியில் வலியும் , ரணமுமாகிப்போன வாழ்கையின் சமரசங்கள் நிறையவே உண்டு . சூசைப்பிள்ளையரும் வாழ்கையில் பல சமரசங்களைச் செய்தே சம்மாட்டியராகியிருப்பார் . ரெண்டுபவுண் கட்டாயம் குத்தும் என்றே நினைக்கின்றேன் . தொர்ந்து கவி (தை ) கதைக்க வாழ்துக்கள் :) :) :) 1.

கவிதை கதை எழுதும் விதம் மிகவும் நன்றாக உள்ளது. தொடரட்டும் உங்கள் கதைப்பயணம்.

கவிதைக்கு நன்றாகக் கதையும் எழுதத் தெரியுது. வாழ்த்துக்கள் கவி :)

  • தொடங்கியவர்

[02]

"வணக்கம்! வாங்கோ சிவலிங்கத்தார்! ஏன் இண்டைக்கு பிந்திப்போட்டுது? வழமையா... ஏழு மணிக்கெல்லாம் வந்திடுவியள்... இன்டைக்கு என்ன ரொம்ப வேலையோ?" என சிரித்துக்கொண்டே வரவேற்றார்.... குட்டிப்பவுண். "அப்பிடியெல்லாம் இல்ல குட்டிப்பவுண்... கொஞ்சம் வேலைதான். என்ர மகளோட கொஞ்சம் கதைச்சிட்டு வந்தன். சம்மந்தம் பேசி வந்திருக்கு....... ! அதுவிசயமா அவளோட கதைச்சிட்டு வர பிந்திப்போட்டுது " என விஷயத்தினை சிவலிங்கத்தார் சொல்ல....

"ஓ... அப்பிடியே விஷயம்... நல்லது!!!!!!! மாப்பிள்ளை எந்த இடம்?" எனக் கேட்டார் குட்டிப்பவுண் சந்தோசமாக...!

"மாப்பிள்ளை பிரான்சில.... சீதனம் தேவையில்லையாம். அவருக்கு முதல்தாரம் 'டிவொர்ஸ்' எடுத்திட்டாவாம். பிள்ளையள் இல்ல. என்ர மகளின்ர 'போட்டோ'வை ஏற்கனவே பார்த்திட்டினம். அவையளிற்கு பிடிச்சுப் போச்சு. இவளும் சின்ன வயசில தன்ர வாழ்க்கையை தொலைச்சுப்போட்டு இந்த பெடியனோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்..." என நண்டு பிடித்து விளையாடுவதில் மும்முரமாயிருந்த தன் பேரனை பார்த்துக்கொண்டே சொல்லும்போது... சிவலிங்கத்தாரின் குரல் கொஞ்சம் கரகரத்தது.

"பிறகென்ன..... நல்ல சம்மந்தம்தான் வந்திருக்கு. அவளுக்கும் சின்ன வயசுதான். பாவம் பிள்ளை! முடிக்க வேண்டியதுதானே! உங்களின்ர மகள்புருசன் செல்லடியில செத்ததில் இருந்தே நீங்களும் சரியா நொந்து போட்டியள். ஏதோ... உங்களுக்கு பென்ஷன் காசு வாறதால மகளைப் பார்க்கிறியள். உங்களுக்குப் பிறகு யார் பார்ப்பினம்...??? சொந்தபந்தம் எல்லாம் பார்க்குமெண்டு நினைக்காதையுங்கோ.... ! அதெல்லாம் நாள் கணக்குத்தான். 'என்னத்தைப் பண்ணியாவது..... அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுத்திடுங்கோ...!' எண்டு சொல்ல நினைச்சனான்...... அதுக்குள்ள அந்த சிவனின்ர அருளால நல்ல சம்மந்தம் வந்திருக்கு...! நல்லபடியா இதைப் பேசி முடிச்சிடுங்கோ...!" என சொல்லி முடித்தார் 'சூசைப்பிள்ளை' எனும் குட்டிப்பவுண் .

குட்டிப்பவுண்... என இழுத்தபடி ஆரம்பித்தார் சிவலிங்கத்தார். "ஏதோ அந்தோனியாரின்ர ஆசீர்வாதத்தால நல்ல சம்மந்தம் வந்திருக்கு... !! ஆனால், என்ர நிலமை.... உங்களுக்கு நல்லாத் தெரியுந்தானே?! எங்கட சீவியமே என்ர பென்ஷன் காசிலதான் ஓடுது."

"அவையளுக்கு சீதனம் தேவையில்லை என்றுதானே சொன்னவையள். பிறகென்னத்துக்கு யோசிக்கிறியள்?" என்று இடைமறித்துக் கேட்டார் குட்டிப்பவுண்.

"ஓம் ஓம்.... அது பிரச்சினை இல்லை .... ஆனால் இப்ப எங்கட பெடியள்..... எல்லாக் குடும்பத்திட்ட இருந்தும் ஆகக் குறைஞ்சது 'ரெண்டு பவுண்' குடுங்கோ எண்டு கேக்கத் தொடங்கியிருக்காங்களாமே... ???!!! .....'மண்மீட்பு நிதி' எண்டு! அங்கதான் குட்டிப்பவுண் என்ர பிரச்சினையே...." என ஒரு பெருமூச்சோடு சொன்னார் சிவலிங்கத்தார்.

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே..... அன்பரசன் தன்னுடைய 'ரேடியோ'வை எடுத்துக்கொண்டு அப்போது அங்கிருந்த (தேசத்தின் குரல்) "அன்ரன் பாலசிங்கம் பேஸ்" என அழைக்கப்பட்ட 'கடல்புறா 'காம்'பிலிருந்து' ........."புலிகளின்குரல் வானொலி" அலைவரிசையை திருகியபடி.... இவர்கள் இருந்த இடத்தை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான்.

அவனுடைய சின்னஞ்சிறிய 'பொக்கற் றேடியோ' ரொம்பச் சின்னதுதான். ஆனால் அப்போதிருந்த பொருளாதாரத் தடைகள்.... அவனது 'ரேடியோ'விற்குப் பின்னால் 'எஸ்லோன் பைப்'புக்குள் போடப்பட்ட பெரிய 'பற்றரிகளின்' சக்தியில் இயங்கும்படி அமைக்கப்பட்ட "தமிழீழ தொழில்நுட்பம்" சின்னஞ்சிறிய அந்த ரேடியோவையும் கொஞ்சம் பெரிதாகவே காட்டியது.அந்த நாட்களில் இப்படியான அசாதாரணங்கள் சாதரணமானவையாகவே இருந்தன.

"புலிகளின் குரல்" கேட்கவந்த இந்த அன்பரசனிற்கு....... குட்டிப்பவுண் அண்ணரும், சிவலிங்கத்தாரும் கதைச்சுக்கொண்டிருந்த "ரெண்டு பவுண்" கதை காத்துவாக்கில் தெளிவாகக் கேட்க....................இதைக் கேட்பதற்காகவே அவர்களை நோக்கி நெருங்கினான்.

*******************************************************************************************************************************************************************

தொடரும்...

Edited by கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெண்டுபவுண் கட்டாயம் குத்தும் என்றே நினைக்கின்றேன் .

:o

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கவிதை.ஒரு ஆவல்தான். :)

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::):rolleyes:

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா... :icon_mrgreen: :icon_mrgreen:

நான் சிமைலி போட்டதற்காக இப்படியா பச்சைப்புள்ளிகளைப் போட்டு பப்ளிக் பண்ணுவது? :icon_mrgreen:

கவிதை இந்தக்கதை ஒரு காலத்தின் பதிவாக அமையும் என்று நம்புகிறேன்....

அட.. கடல்புறா அது சூசையின் பேஸ் அல்லவா..... :)

சரி நம்ம ஏரியாவிலேயே கதை சுத்தப்போகுது போல

கவிதை,

கதையின் உள்படிமத்துள் நிற்கின்ற அதே வேளை புறச்சூழலை மிகைப்படுத்தி எழுதுவதுகூட கதையை அலங்கரிக்கும். அப்போது கதையை வாசிக்கும் ஒரு வாசகனை தானே அவ்விடத்தில் நிற்பதாக அவ்விடயங்கள் அவ்வாசகனை ஆக்கிரமிக்கும் அப்போது வாசகன் தான் ஒரு வாசகனாக உணரமாட்டான் நேரில் நின்று அதனைப்பார்த்துக் கொண்டிருப்பான். ஆகையால் புறச்சூழலை எழுதும் போது கதையின் மையம் இலாவகமாக வாசகரின் இதயத்தைச் சென்றடையும். நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் ஆனால் இன்னும் அவற்றை மெருகேற்றி எழுதலாம். தொடர் 3 இல் அவற்றை எதிர்பார்க்கிறேன்...

கவிதை

இது இந்தச் சகோதரியின் பார்வையே தவிர மற்றவர்களுக்கு வித்தியாசப்படலாம். நான் இப்படி எழுதியது உங்களுக்குச் சங்கடமாக இருப்பின் மன்னிக்க. :rolleyes:

ஓய் கவிதை இப்படி குட்டி குட்டியா அனுமர் வால் மாதிரி நீட்டி விசுகு அண்ணாவின் கனடாப்பதிவு மாதிரி கொண்டு போனா பிறகு நடக்கிறதே வேற... சொல்லிட்டேன். :lol:

நன்றாக இருக்கிறது கவிதை. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை! பின்னீட்டீங்க...தொடர்ந்து எழுதுங்க...மிகுதியை கெதியெண்டு எழுதுங்கோ....சும்மா காக்கவைச்சு எங்கட பொறுமையை சோதிக்கப்படாது...சொல்லிப்புட்டன்...மாப்பிள்ளை பிரன்சில எண்டவுடன் நான் ஒருகணம் திகைத்து விட்டேன்...நம்ம கோமகனோ எண்டு... :D கோமகன் அண்ணை கோவிக்க வேண்டாம்...சும்மா தமாஸிற்க்கு... :icon_mrgreen:

கவிதை! பின்னீட்டீங்க...தொடர்ந்து எழுதுங்க...மிகுதியை கெதியெண்டு எழுதுங்கோ....சும்மா காக்கவைச்சு எங்கட பொறுமையை சோதிக்கப்படாது...சொல்லிப்புட்டன்...மாப்பிள்ளை பிரன்சில எண்டவுடன் நான் ஒருகணம் திகைத்து விட்டேன்...நம்ம கோமகனோ எண்டு... :D கோமகன் அண்ணை கோவிக்க வேண்டாம்...சும்மா தமாஸிற்க்கு... :icon_mrgreen:

ஏன் ராசா.................? மனிசியால இவருக்கு ( கோவுக்கு ) ஒரு மண்டகப்படி குடுக்கவேணுமெண்டு ஒரு அற்ப ஆசை :lol::lol: :lol: .

  • தொடங்கியவர்

[03]

அன்பரசன்...... அவன் பெயருக்கு உகந்தாற்போல் அன்பானவன், பண்பானவன். வடமராட்சிப் பிரதேசத்தின்

அப்போதைய இயக்கப் பொறுப்பாளராக இருக்கின்றவன். அவனது வலது கையின் சுட்டுவிரலினை முன்னொரு களத்தினில் இழந்திருந்தான். அவனது உடலில் பல விழுப்புண் தழும்புகள் இருந்தாலும்,

அந்த 'நான்குவிரல்' விடயம் அவனுக்குரிய அடையாளமாகவே இருந்தது. பிரச்சாரக் கூட்டங்களில்

அதிகமாக ஈடுபடும் இவனை , இளையவர்கள் எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்திருக்கும்.

சிறந்த பேச்சாற்றல் கொண்ட ஒரு போராளி. ஆனாலும் பிள்ளையைப் பெற்றவர்கள் இவனைக்

கொஞ்சம் 'ஆபத்தானவனாகப்' பார்ப்பதும் காரணத்தோடு கூடிய வழக்கமாயிருந்தது.

இவனுக்கு இப்பொழுது மேலதிகமாக இன்னொரு பணியும் கொடுக்கப்பட்டிருந்தது. அது, இந்த 'ரெண்டு' பவுண் விஷயம். அவனது பொறுப்பிலுள்ள பிரதேசத்தில் உள்ள அத்தனை குடும்பங்களின் விபரங்கள் ... அதாவது, வருமான அளவு, வங்கியிருப்பு, வெளிநாட்டில் உள்ள இரத்த உறவுகள் விபரம், சொத்துப்பத்து..... இன்னபல என குடும்பங்களின் வருமான விபரங்கள் அனைத்தையும் திரட்டுதல் மற்றும்

மக்களுடன் இது சம்மந்தமாக உரையாடவேண்டிய பொறுப்பும் இப்போது, இந்த அன்பரசனின் கடமையாயிருந்தது. இண்டைக்கு பகல் முழுக்க இந்த வேலையாவே திரிஞ்ச இவனுக்கு சிவலிங்கத்தாரும் , குட்டிப்பவுணும் கதைச்சுக் கொண்டிருந்த அந்த விஷயம் அவையள் கதைக்கிறத கேக்கவேணும் என்ற ஆர்வத்தினைத் தூண்டியது அவனுக்குள் .

மணற்பரப்பில் நிலவின் ஒளி பட்டுத் தெறிக்க .... அவை தங்கம்போல தகதகவென மின்னியது.

அந்த அழகை அவன் ரசித்தான் என்றாலும்.... "இந்த மண் உண்மையிலயே தங்கமணலா இருந்தால், எங்கட சனத்திட்ட இப்பிடியெல்லாம் 'ரெண்டுபவுண்' கேட்டு அதுகளையும் கஷ்டப்படுத்த வேண்டியதேவை வந்திருக்காது....." என மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.

'அவர்களுக்குப் பக்கமாக எங்க போய்க் குந்தலாம்...?' என யோசித்தவனுக்கு.... போனகிழமை நேவிக்காரன் அடிச்சதில... இரண்டு உயிரற்ற மனிசரோடு கரையொதுங்கிய "மேரிமாதா" என பெயர் போட்ட அந்த 'போட்'தான் கண்ணில் பட்டது. மணலில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த அந்தப் படகோடு தன் முதுகினை சாய்த்து தன் ஒரேயொரு செல்லச் சொத்தான தன் ரேடியோவை தன் வலது பக்கத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தான் அன்பரசன்.

அந்த ரேடியோவை அவனுக்கு பரிசாகக் கொடுத்திருந்தது... ஈழத்தின் மதிப்புக்குரிய வீரப்பெண்மணி திருமதி. அடேல் அன்ரன் பாலசிங்கம் தான்!

அப்போதெல்லாம் எப்பொழுதாவதுதான் அவனது முகாமுக்கு வருவார்கள்.... பாலா அண்ணாவும் அடேல் அன்ரியும். அவர்கள் லண்டனில் இருக்கின்றார்களா....? அல்லது இங்கைதான் இருக்கின்றார்களா? என சொல்லமுடியாமல் இருந்தது. ஆனால், அடேல் அன்ரி வந்திருக்கிறா! என்றால் .... "கப்பல் வந்து போயிருக்கு" என்று மட்டும் ஊகிக்கக் கூடியதாக இருக்கும். அதேபோல....... அந்த முகாமில் வளர்க்கப்பட்ட மான்குட்டி, புறாக்கள்,லவ் பேர்ட்ஸ் என தன் அன்புக்குரிய ஜீவன்களையும்..... அதற்குமேல் தன் பிள்ளைகளாய் அவ நேசித்த கடல்புறாவின் செல்லச் சிட்டுக்களையும் பார்க்க வராமல்.....

ஒரு கிழமை போனாலும் விளங்கும்......... அவர்கள் தற்போது தொலைவில் என்று.

"அம்மப்பா...... இந்த நண்டுக்கு ஒரு கொடுக்கு இல்ல பாருங்கோ!" என ஒரு நண்டினை கையில் பிடித்தவாறு

சிவலிங்கத்தாரை நோக்கி ஓடிவந்த அவர் பேரனின் சின்னக்குரல்....... இந்தவாறான பாலா அண்ணாவின்

சிந்தனையில் இருந்த அன்பரசனை மீண்டும் நினைவுக்கு கொண்டுவர..... தன் வலது கையின் நான்குவிரல்களையும் தன் றேடியோவிலிருந்து விடுவித்தவனாய்..... குட்டிப்பவுண், சிவலிங்கத்தார் பக்கம் தன் கவனத்தினைச் செலுத்த ஆரம்பித்தான்........அன்பரசன்.

*****************************************************************************************************************************************

தொடரும்...

Edited by கவிதை

< "அம்மப்பா...... இந்த நண்டுக்கு ஒரு கொடுக்கு இல்ல பாருங்கோ!" என ஒரு நண்டினை கையில் பிடித்தவாறு

சிவலிங்கத்தாரை நோக்கி ஓடிவந்த அவர் பேரனின் சின்னக்குரல்....... இந்தவாறான பாலா அண்ணாவின்

சிந்தனையில் இருந்த அன்பரசனை மீண்டும் நினைவுக்கு கொண்டுவர..... தன் வலது கையின் நான்குவிரல்களையும் தன் றேடியோவிலிருந்து விடுவித்தவனாய்..... குட்டிப்பவுண், சிவலிங்கத்தார் பக்கம் தன் கவனத்தினைச் செலுத்த ஆரம்பித்தான்........அன்பரசன் >

ஓற்றைக் கொடுக்கால நண்டு குத்தப்போகுதெண்டறியள் :unsure: :unsure: . தொடருங்கோ . வல்லவையக்கா சொன்னதையும் கவனத்தில் எடுத்தால் நல்லது . வாழ்துக்கள் கவிதை :):)1.

கவிதை க(வி )தை எப்போ????????????????? :D :D :D :D

  • தொடங்கியவர்

கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். தனித்தனியே பதிலிடுவது என் பொதுவான பழக்கம். ஆனாலும் இன்னும் சற்று .... கதை, தான் சொல்லவந்த விடயத்தினை ஆரம்பிக்குமிடத்தில்... ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், கதையினைத் தொடர்வதற்கும் சற்றுத் தாமதமாகிவிட்டது! தயவுசெய்து மன்னிக்க வேண்டுகின்றேன்!

வேலைப்பழுவும் , என் மனநிலையும் எழுத்துக்களுக்குள் ஈடுபடுத்திக்கொள்ள முடியாத மனோநிலையினை ஏற்படுத்தியிருந்தன. அதிலிருந்து விடுபட்டு...

வெகுவிரைவில் தொடர்கின்றேன்...!

உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! :)

  • 1 month later...
  • தொடங்கியவர்

இந்த தொடர்கதையின் ஒவ்வொரு பகுதியினையும் தனித்திரியாக இணைத்தால்,

அதனை வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும் என்ற காரணத்தினால் தனித்திரியாக (பகுதி - 04 ) ஆரம்பித்துள்ளேன்.

பகுதி [04] உடன்... பழைய (01,02,03) பகுதிகளையும் சேர்த்து இணைத்துள்ளேன்.

இனிவரும் பகுதிகளில்... அதாவது பகுதி [05]இல் இருந்து...

முன்னைய இணைப்புடன் புதிய பகுதிக்கான கதையினையும் படங்களையும் மட்டும் கொடுக்கக் கூடியவாறான வகையில் இருக்கும்.

தாமதத்திற்கு வருந்துகின்றேன். இனிவரும் நாட்கள் தொடர்ந்த எழுத்துக்களுடன் என்னையும் உங்களையும் மகிழ்விக்கும் நாட்களாக அமையட்டும்! :)

மிக்க நன்றி உறவுகளே...! :)

Edited by கவிதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.