Jump to content

யாழ் விவசாயி


Recommended Posts

பதியப்பட்டது

கொட்டில் முறையில் ஜமுனாபாரி வெள்ளாடு வளர்ப்பு

இம்முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமைத்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டகை யிலேயே தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும்.

இந்த முறையில் கொட்டகையில் தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கடலைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண்டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்பவேண்டும். இதனால் சிறுநீர் மற்றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளியாகும் வாயுக்களான அமோனியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம்முறையில் ஒவ்வொரு ஆட்டிற்கும் 20 சதுரடி இடமும், 15 அடி உயரமும் உள்ள கொட்டகை அமைத்தல் நன்று.

பயன்கள்: விவசாய நிலமற்றோரும் ஆடு வளர்ப்பை மேற்கொள்ளலாம். சுகாதாரமான பராமரிப்பு முறைகளை கையாண்டால் அதிக எடையுடைய குட்டிகளை பெறமுடியும்.

மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை: மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ள இடங்களில் 4-5 மணி நேர மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகைகளில் அடைத்து பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர்தீவனம் கொடுத்து பராமரிப்பதாகும்.

பயன்கள்: இம்முறையில் ஆடுகள் நல்ல உடல் வளர்ச்சி அடைந்து அதிக எடையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படுகின்றன. மேய்ச்சல் முறையில் வளரும் ஆட்டின் வளர்ச்சியைவிட 3-4 மடங்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும். இம்முறையில் வளரும் ஆடுகளில் இருந்து 49 விழுக்காடு இறைச்சி கிடைக்கும்.

தீவிர முறை (உயர் மட்ட தரை முறை): இம்முறையில் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் சல்லடைத்தரையை மரப்பலகையிலோ அல்லது கம்பிகளிலோ கட்டவேண்டும். இரு பலகைகளுக்கிøடேய உள்ள இடைவெளி 2 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைப்பதால் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் 3 அடி பள்ளத்தில் விழுந்துவிடும். இதன்மூலம் ஆடுகள் நோய் பாதிப்பின்றி சுகாதாரமாக இருக்கவும் வழிவகுக்கும். இம்முறையில் கொட்டகையினை நன்முறையில் பராமரித்தால்

ஆடுகள் சுகாதாரமாகவும், அதிக எடையுடனும் காணப்படும். ஆடு இரண்டு வருடத்திற்கு மூன்று முறை குட்டி போடுகின்றன. 1 தடவை 2 குட்டிகள் போடும். அதன்படி 2 வருடத்திற்கு 6 குட்டிகள், 1 ஆண்டுக்கு 3 குட்டிகள்.

http://www.vivasaayi...g-post_642.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாருங்கள், விவசாயி!

உங்கள் வலைத்தளம் பார்த்தேன்! அருமை!

'உயிர்ப்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்!

இபப்டித் தான் நாங்களும், ஆரம்பித்தோம்! முப்பதாண்டுகளின் முன்பு!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் விவசாயி வாருங்கள் வந்து உங்கள் ஆக்கங்களைத்தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் விவசாயி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Posted

வணக்கம் விவசாயி.

ஆனால் இந்த முறையில் வளர்க்கப்படும் ஆடுகளின் வாழ்க்கைத்தரம் ( வாழும் வரையாவது) குறைந்துவிடும் என்று மேலை நாடுகளில் குறிப்பிடுகிறார்கள்.

Posted

வணக்கம் விவசாயி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Posted

அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் விவசாயி வாருங்கள் ஆக்கங்களைத்தாருங்கள்.

Posted

வாங்க விவசாயி. வாங்க... ஆடுவளர்ப்பது பற்றி எழுதுதியிருந்தீர்கள். எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஆடு கணனியில் வளர்க்கும் ஆடா? அல்லது கழனியில் வளர்க்கும்

ஆடா? புரியவில்லை.

Posted

வணக்கம் விவசாயி வாங்கோ.

மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த கொட்டில் முறையில் ஆடு வளர்ப்பது பயனுள்ளது. கூடுதலான இறைச்சியும் கிடைக்கும். ஆனால் இயற்கையாக ஆரோக்கியமாக மேய்ச்சல் நிலத்தில் வளர்க்கப்படும் ஆடு, மாடு. கோழிகளின் இறைச்சிதான் சுவையாக இருக்கும்.

உங்கள் தளத்தில் நல்ல பயனுள்ள தகவல்கள் உள்ளன. தமிழில் விவசாயம் தொடர்பான தளங்கள் குறைவு. நல்ல முயற்சி.

'இயற்கை முறையில் பூச்சிக் கட்டுப்பாடு' நல்ல பயனுள்ள தகவல். மேற்கைய நாடுகளிலும் இந்த முறையை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். வீட்டுத் தோட்டத்திலும் இந்த முறையையே உபயோகிக்கிறேன்.

  • 4 weeks later...
Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • 4 weeks later...
Posted

அனைவருக்கும் நன்றிகள் விவசாய பணிகள் தொடரும்

  • 3 weeks later...
  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.