Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவப்பு விளக்கு (சிறுகதை)

Featured Replies

அவசரம் அவசரமாக கதவை திறந்தான் .அறையில் யாரும் இல்லை .நேரத்தோடை சுரேஸ்க்கு சொல்லியிருந்தும் இன்றும் அலட்சியபடுத்தியது என்னவோ போல் இருந்தது அவனுக்கு ,வழமையாக எங்கும் போகாமல் இதுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் சுரேஸின் மைத்துனனை கூட காண கிடைக்கவில்லை . .இன்றைக்கென்று எங்கு போய் தொலைஞ்சாங்கள் சனியன்கள் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான். இந்த எட்டாவது மாடிக்கு ஏறி வந்த மூச்சு அடங்காத நிலையில் அதே வேகத்திலையே கதவை சாத்தி விட்டு இறங்கி கொண்டிருந்தான். ,படி இறங்கின்ற இடத்தில் எந்த நேரம் சென்றாலும் அழுக்கு உடை அணிந்த கறுத்த இனத்தவன் ஒருவன் குந்தி இருப்பது வழக்கம் .அவனையும் சிறிது இடித்து தள்ளிக் கொண்டு வேகமாக போக , அவன் முதலில் டச்சு மொழியில் ஏதோ இவனை நோக்கி சத்தம் போட்டான் ,பிறகு தனக்கு தெரிந்த ஆங்கிலமாக வந்த எதையோ சத்தம் போட,,எந்த மொழியும் கேட்காத மாதிரி சென்று கொண்டிருந்தான்

அந்த நாட்டு தலை நகரத்தின் இருக்கும் பல அடுக்கு மாடி குடியிருப்புகளுக்குள் இவன் தங்கி இப்பொழுது வசித்து வரும் மாடி குடியிருப்பு பகுதியின் பெயரை சொன்னாலே பலர் பயந்து நடுங்குவார்கள். .,சிலர் அங்கு வாழ்பவர்களை எதுக்கும் பயப்படாத வீர்ர்கள் சூரர்கள் பயங்கர வாதிகள் என்றும் நினைப்பது உண்டு.இவனும் சுரேஸும் அவனது மைத்துனனும் அப்படியானவர்கள் அல்லர். அவர்கள் அண்மையில் அந்த நாட்டுக்கு வந்த அகதிகள் .அகதி தொண்டு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு இந்த விபரங்கள் பற்றி சொல்லி கொள்ளமாலே குடியமர்த்தியது.விபரம் தெரிந்தது அண்மையில் தான். .வேறிடத்துக்கு மாறுவதற்க்கான் முயற்சி ஒன்றுக்கு தான் இன்று இவர்களை இந் நேரத்தில் ஆயத்தமாக நிற்க சொல்லி விட்டு கீழை வந்து மேலை வருவதுக்குள் எங்கையோ மாறி விட்டுதுகள். .

எங்கை போறது உதுகளுக்கு .வேலை செய்யவும் அனுமதி இல்லை ,உந்த கடைத் தெரு வழிய வாய் பார்த்து கொண்டும் அங்கே தூரத்தில் தெரியும் சிவப்பு விளக்கு பகுதி தெருக்களில் சுற்றி திரிந்து வேடிக்கை பார்க்க போயிருக்குங்கள் ..நல்ல ஒரு சனத்தோடை றூம் மேற்றாய் கூட்டு சேர வேண்டிய தலை விதியை நினைத்து தலையில் அடித்து கொண்டான் , இந்த கொஞ்சம் நாட்களுக்குள் உவன்களின் கதைகளை கேட்டு கேட்டே அவன் அரை பைத்தியமாய் போயிட்டான் வேறை

அவன் முதல் முதலாக அந்த அறையினுள் வந்த பொழுது அங்குள்ள நாலு கட்டில்களில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கும் அவற்றில் இரண்டு வெறுமையாக இருந்தது ,இரண்டில் ஒன்று தான் அவனுக்காக காத்திருந்தது. ஏற்கனவே அங்கு தங்கியிருந்த சுரேஸ் தான் பேச தொடங்கினான், பழக தொடங்கினான்,,அதிகாரம் காட்ட தொடங்கினான், .தான் முந்தி வந்தவன் என்ற திமிர் என்றதோடல்லாமால் கனக்க தெரிந்தவன் போல காட்டி கொண்டான்..மற்றவன் அவன் கேட்டதுக்கு பதிலும் சொல்லமாட்டான் .சிலவேளை எல்லாத்துக்கும் ஓம் அல்லது தெரியாது .. சிலவேளை குப்புறமாக படுத்த கொண்டு பெட்சீட்டுக்குள் தான் எந்நேரமும் ஜீவனம் நடத்திக்கொண்டிருந்தான் .சில நேரம் தன்னிலை மறந்து கலந்த தலையுடன் எதையோ உற்றும் பார்த்து வெறித்த படி இருப்பான். .ஏற்கனவே பயங்கரமாக இருக்கும் அபார்ட்மென்டின் மூலையில் உள்ள அறையில் அவனது ஒவ்வொரு அசைவும் நடவடிக்கையும் பயங்கரத்தை கூட்டுவது மாதிரியே இருக்கும். யாரேனும் பார்ப்பவருக்கு .ஏன் அவனுக்கே அப்படித்தான் இருந்தது. .இன்று வரை அவனுடன் ஒரு வார்த்தை கதைத்து பேசி கொண்டாடவில்லை என்றாலே பாருங்கள். .அவன் பேசாக்குறைக்கு எல்லாத்தையும் சேர்த்து .சுரேஸ் பொரிஞ்சு தள்ளுவான் ..அவனுடைய அண்ட புளுகு ஆகாச புழுகு எல்லாத்தையும் கேட்டே தீர வேண்டிய நிர்பந்தம் இருந்தது வந்த புதிதில். அது அவனுக்கு செய்யும் ராகிங் போல் எடுத்து கொள்ள வேண்டி இருந்தது.

உவன் சுரேஸை இப்ப நல்லாய் தெரிந்தா பிறகு கூட அன்று ஒரு நாள் அவனுடன் அப்படி விடாப்பிடியாக வாதிட்ட தன்னுடைய முட்டாள்தனத்தை உணர்ந்து பின்னும் இப்பவும் அவனுடைய கதைக்கு கதை பதில் சொல்லிக்கொண்டிருக்கிறான்..சுரேஸை பற்றி அவனுக்கு இப்ப நல்லாய் தெரிந்தாலும் சுரேஸை தெரியாத ஆட்களுக்கு அவனை பற்றி கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும்.

சுரேஸ் அவனது மைத்துனன் மாதிரி பெண் சகோதர பொறுப்போ தாய் தகப்பன் ஊரிலை வறுமை கோட்டு கீழ் கஸ்டப்படுற மாதிரி ஒன்றும் இல்லை ,மைத்துனனுக்கு ராஜா என்று ஏதோ பெயர் ..அது கூட ஒருதருக்கும் தெரியாது .சுரேஸ் அதிகாலையிலே டிப் டொப்பாக வெளிக்கிட்டு செல்வான் .விஸ்தரிப்பானேன் அவளுக்கு காதலி இருந்தாள் ஒரு தமிழ் பெட்டை ..தன்னுடைய உடைந்த தத்துவங்கள் எல்லாவற்றையும் ஏற்றி அவனுடைய காதலுடன் அவளிடம் திணித்திருந்தான் .உவருக்கு உந்த தமிழ் பண்பாடு கலாச்சரம் என்பவற்றில் படுதீவிரம் .இந்த கட்டிடத்தின் மூலை யன்னலில் இருந்து பார்க்கும் பொழுதே அந்த தலைநகரத்தின் பிரசித்து பெற்ற சிவப்பு விளக்கு பகுதியின் வீதியின் தொடக்க பகுதி தெரியும் . என்னதான் கதைத்தாலும் சுரேஸும் பொழுது போகாமால் அத்தெருக்களில் திரியும் சில தமிழ் பொடியளின் கரெக்டர்தான்

பனை மரத்துக்கு கீழே இருந்து பாலை குடித்தாலும் கள்ளு என்று தான் நினைப்பினம் அவன் வர விரும்பவில்லை என்று பல முறை சொன்னாலும் அவகளோடை ஒன்றும் படுக்க போக வேண்டாம் .சும்மா வந்து தெருவை ஒருக்கா வேடிக்கை பார் என்று சொல்லி சுரேஸ் ஒருக்கா கூட்டி கொண்டு போனவன். அந்த தெருவின் ஒவ்வொரு வீட்டின் முன் கண்ணாடி கூண்டுக்குள் பல தேசத்து பல மொழி பேசும் பல வயது உடைய பெண்கள் .விலையும் அப்படி இப்படி தராதரத்தை அழகை பொறுத்து போலை. .

வேடிக்கை பார்க்க கூட்டி கொண்டு போன சுரேஸு கூட ஒரு தீடிரென்று கண்ணாடி அருகில் சென்று அந்த பெண் இந்திய வம்சாவளி சூர்ணாம் பெண் போல இருந்தாள் .,சந்தையில் பேரம் பேசுவது மாதிரி பேசிக் கொண்டிருந்தான் .அவளும் அப்படியே .இத்தனை நிமிடத்தில் முடித்துவிடனும் இதுக்கு மேலை ஒரு நிமிடம் என்றாலும் வேற கணக்கு.உனக்கு வைக்கிறதுக்கு மட்டும் தான் அதுக்கு மேலை என்னில் எதுவும் எதிர்பார்க்க கூடாது என்று ஒரு மூச்சில் சொல்லி முடித்தாள் . அவனுக்கு சுரேஸையும் அவளையும் பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தது ... உப்பிடி பேரம் பேசி பேசி போய் எந்த உணர்வு பரிமாற்றம் இல்லாமால் என்னத்தை காணுறியளோ தெரியலை.,இதிலும் பார்க்க ஏதாவது சந்து பொந்துக்குள்ளை வையுங்குவோடா சொல்லி அவனை இழுத்து கொண்டு போக முயற்சி செய்தான் ..அப்பெண் தீடிரென்று கூச்சிலிட்டு கூறினாள் ..நீங்கள் சிறிலங்கன் தானே .இஞ்சை எல்லாரும் முடிவெடுத்து இருக்கிறம் உங்களை எல்லாம் அண்டுறதில்லை எண்டு ...அண்டை கொரு நாள் அந்த மூன்றாம் கண்ணாடியில் உள்ள டச்சு காரியின்ரை மார்பை ஆழமாக உங்கடை பொடியன் ஒன்று கடித்து போட்டானாம் ..காணதாதை கண்ட மாதிரி...எங்கத்தை காண்டுமிராண்டி ஆட்களப்பா நீங்கள் என்று பட பட கூறி ஆத்திரத்தை கொட்டினாள்..

அவனை இழுத்து அந்த தெருவை விட்டு வெளியேறும் பொழுது நம்மடை பொடியள் சிலர் தோளின் தோளின் மேல் கை போட்டு சாகாவசமாக தெருவுக்குள் சென்று கொண்டிருந்தனர் .சுரேசின் மேல் இருந்த ஆத்திரத்திலும் பார்க்க நம்ம அந்த பொடியள் மேல் ஆத்திரம் மேலோங்கியது .ஏனென்றால் வந்த கொஞ்சம் நாளில் அந்த றெட் குறொஸில் வேலை செய்யிற பெட்டை அவனிலை ஒரு இது .அவனுக்கு அவளில் மேலை ஒரு சீரியசான இது இருக்கோ தெரியாது .அவர்களிடையே புத்திஜீவதமான பரிமாற்றத்தில் தொடங்கி உணர்வு உடல் ரீதியாக வரை சென்று விட்டது .அவள் தான் அந்த இனவாத டெலிகிராப் பத்திரிகையில் வந்த செய்தியை மொழி பெயர்த்து சொல்லும் பொழுது முதலில்ஆத்திரம் தான் வந்தது .தோளுடு தோள் போட்டு செல்லுவது நம்மவர்களின் சாதரணமான விசயத்தை இப்படி தங்களுடைய கண்ணோட்டத்துடன் பார்த்தது. ஒரு காட்டுமிராண்டி ஓரினசேர்க்கை கூட்டம் தலைநகரை நோக்கி வந்து இறங்கியுள்ளது என்றது தான் அந்த செய்தி.

.சிவப்பு விளக்கு போவது பற்றி விவாதித்து வரும்பொழுது எல்லாம் சுரேஸ் கேட்ட கேள்வி அவனை பார்த்து அந்த றெட் குறஸ் காரியோடு படுக்கிறியே அது என்ன மாதிரி என்று...அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் தெரியாமால் என்னடப்பா அந்த தமிழ் பெட்டையை லவ் பண்ணுறாய் என்று,நக்கலாய் கேட்டான் அவன்.

,அதுக்கு கலங்கிய கண்களுடன் பதில் சொல்லும் பொழுது கோபம் ஆத்திரம் எல்லாம் சேர்ந்து வார்த்தையாக வெளியில் வந்தது.அவள் வேசையை பற்றி கதையாதை ..அவள் உண்மையில் வேசையாடுறவள் தான் ..அவள் இப்ப உந்த கண்ணாடி அறையிலையும் நிக்க போறாள் என்ற கதையும் அடிபடுது ...அந்த மூதேசி என்ரை ஆளாய் கொஞ்ச காலம் இருந்தது என்றதுக்காக சொல்லவில்லை ..ஒரு தமிழ் பெட்டை நிக்கிறதை என்னாலை தாங்க முடியாமால் இருக்குது.அதோடை அனுமதிக்க இயலாது .எங்கடை கலாச்சரம் என்ன பண்பாடு என்ன ? அதனாலை இங்க இருக்கிற இயக்க பொடியளிட்டை சொல்லி இருக்கிறன் ..அவள் அப்படி கண்ணாடிக்குள் நிக்கிறதுக்குள்ளை அக்சன் எடுக்க சொல்லி ...அவன்களும் பார்ப்பம் என்று இருக்கிறான்கள்

அதெல்லாம் இருக்கட்டம் சுரேஸ்.... என்று விளித்து உனக்கு ஒரு கதை சொல்லவேணும் என்று நினைத்தனான் .இந்த இடையில் சொல்லுறன் ..உன்ரை மைத்துனன் கஸ்ட பட்ட குடும்பத்திலை இருந்து வந்தவன் என்று சொல்லி இருக்கிறாய் .அவனும் உன்னைப்போல் உப்பிடி திரிய விடாதை ..அவனது போக்கே சரியில்லை. ...எனக்கென்னவோ அவனது ஒவ்வொரு அசைவும் சந்தேகத்தை தருகுது என்று சொல்லி முடித்தான் அவன். ..ராஜா அப்படி ஆள் இல்லை அப்படி ஏதும் இருந்தால் கை காலை எடுத்து போடுவன் என்று அவனுக்கே தெரியும் என்று சுரேஸ் பதில் கூறினான்.

இவர்களை கீழை இறங்கியும் தேடியதில் தோல்வி கண்ட அவன் .இதுகளோடை இழுபடுறதிலும் பார்க்க தானே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படி ஏறிக்கொண்டி இருந்தான்.

கொஞ்சம் முன் இறங்கும் பொழுது, இடித்து தள்ளிய கறுவல் இப்பவும் அதே இடத்தில் இருந்து புகைத்து கொண்டிருந்தான் .ஏனோ தெரியவில்லை இப்பொழுது கோபிக்கவில்லை இவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தான் .அவனுக்கு சிரிக்கும் மூட்டில் இல்லை ,அறையை திறந்து உள்ளே சென்றான் .சுரேஸின் மைத்துனன் ராஜாவின் கட்டிலில் தலையணையின் பின் ஒரு கட்டு பொருள் தென்பட்டது ,

இவனுக்கு இவளவும் என்னத்துக்கு என்று வாய் உளறியது ..

அவனறியாமாலே...

அப்பொழுது டெலிபோன் அடித்தது.

மறு முனையில் ஒரு மிகவும் வயதான மூதாட்டி

ராஜாவை தேடி வந்த அவசர அழைப்புக்கு அவள் கூறிய காரணத்தினால்

தலையணை கீழ் இருந்த அவ்வளவு கட்டு கொண்டெம் ஏன் என்று விளங்கியது

ஆம் ,,கோல் கேள் மாதிரி ....ராஜா ஒரு கோல் போய்

சுரேஸ் அறிந்தால் ,,அறியத்தான் போறான் ..

.கண்ணாடி அறையில்லாத தான் வசிக்கும் இந்த இடத்தில் இருந்தும் ..என்று,,,......

(யாவும் கற்பனை)

http://mithuvin.blog.../blog-post.html

Edited by நாகேஷ்

  • Replies 77
  • Views 15.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல, ஒரு வித்தியாசமான, ஆனால் ஆக்கபூர்வமான ஒரு அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள், நாகேஷ்!

ராஜாவுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது ஒரு பக்கம் இருக்க, நாங்கள் எங்கே போய்க கொண்டிருக்கின்றோம் என்பதை நினைக்கையில் மிகவும் வேதனையாக இருக்கின்றது!

ஓரினச் சேர்க்கைக்கு எதிரான கருத்துக்கள் என்னிடம் இல்லை.

ஆனால் ஓரின விபச்சாரம் வரையும் எமது உலகம் விரிந்து விட்டது தான் எனது கவலை!

வழக்கம் போலப் பணத்திற்காகத் தானே இந்தச் சீர்கேடும்!

வாழ்த்துக்கள், நாகேஷ்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கதையும்...கதைக்கருவும்..பாராட்டுகள்...

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை சொல்லும் பாணியே தனி, கதையின் போக்கில் நேரம், காலனிலை, வீதி அமைப்பு என மனம் தானாகவே சொல்லாமலே கற்பனையுணர்வுடன் கதையில் ஊன்றி விடுகிறது,இருந்து பாருங்கள் நீங்கள் ஒரு சர்வதேச தரமிகுந்த எழுத்தாளராக வருவீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு கதை.பாராட்டுகள்... :)

சத்தியமான வார்த்தைகள் அண்ணா. :)

இப்படியான இடமொன்று கொலன்ட் இல்உள்ள HAGUE சிட்டிக்கு போன போது பார்தேன் .ஒரு முறை என்னுடன் வந்த நண்பன் தான் போக விரும்புவதாக சொல்ல சிறிதேவி போலிருந்த ஒரு சுரினாம் இனப் பெண்ணை அவனுக்கு காட்டினேன் ,ஆனால் அவன் ஒரு பிலிப்பைன் பெண்ணிடம் போனான் .வந்து அங்கு நடந்ததையும் சுகாதார நிலை பற்றியும் சொன்னான்.அதை பதியலாமோ தெரியவில்லை.நான் பாரில் பியர் அடித்துக்கொண்டிருந்தேன்.

அடுத்து கனடாவில் உள்ள ஸ்ட்ரிப் ஜோயின்ருக்கு போய் வரும் வெள்ளை இனநண்பன் சொன்னது .உங்கட ஆட்கள் எப்பவும் மேசைக்கு டான்ஸ் ஆட கூப்பிட்டு விட்டு பின்னர் கையை வைத்து பின் பவுன்சரால் வெளியேற்றப்படுகின்றார்கள் அல்லது தூக்கிஎறியபடுகின்றார்கள் .

ஏன் முன்னர் பின்னர் பெண்களை அவர்கள் பார்க்கவில்லோயோ என்று.என்னிடம் அதற்கு பதில் இல்லை .

இந்த இடத்தில் எமது பொத்தி வைத்த கலாச்சாரம் சரியோ என எனக்கு கேள்வி எழுவதுண்டு.

நல்ல அனுபவங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் புங்கையூரான்

நல்ல ஒரு கதையும்...கதைக்கருவும்..பாராட்டுகள்...

நன்றிகள் சுபேஸு பாரட்டுகளுக்கு

  • தொடங்கியவர்

உங்கள் கதை சொல்லும் பாணியே தனி, கதையின் போக்கில் நேரம், காலனிலை, வீதி அமைப்பு என மனம் தானாகவே சொல்லாமலே கற்பனையுணர்வுடன் கதையில் ஊன்றி விடுகிறது,இருந்து பாருங்கள் நீங்கள் ஒரு சர்வதேச தரமிகுந்த எழுத்தாளராக வருவீர்கள்.

#

வசீ..மிக்க நன்றிகள்

புலம் பெயர் பிரபல எழுத்தாளர் ஒருவரை அண்மையில் வந்த கதை தொடர்பாக சர்வதேச தர எழுத்தாளர் என்று விமர்சித்து காமடி பண்ணின மாதிரி இல்லை தானே ... ஏதோ சொல்லுறீங்கள் ..சந்தோசமாக இருக்கு...நான் ரொம்ப அப்பாவி எதையும் நம்பிவிடுவன் ..இதையும் அப்பபடியே நம்புறன்.. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதைகளை தொகுத்து நூலாக வெளியிடுங்கள்

  • தொடங்கியவர்

நல்ல ஒரு கதை.பாராட்டுகள்... :)

சத்தியமான வார்த்தைகள் அண்ணா. :)

மிக்க நன்றிகள் ஜீவா...வசீ கருத்து ஆமா போட்டிருக்கிறீர்கள் ...வசிக்கு சொன்னது தான் உங்களுக்கும் சொல்லுறன் ..நான் ரொம்ப அப்பாவி எதையும் நம்பி விடுவன் ..நம்புறன் :D :D

இப்படியான இடமொன்று கொலன்ட் இல்உள்ள HAGUE சிட்டிக்கு போன போது பார்தேன் .ஒரு முறை என்னுடன் வந்த நண்பன் தான் போக விரும்புவதாக சொல்ல சிறிதேவி போலிருந்த ஒரு சுரினாம் இனப் பெண்ணை அவனுக்கு காட்டினேன் ,ஆனால் அவன் ஒரு பிலிப்பைன் பெண்ணிடம் போனான் .வந்து அங்கு நடந்ததையும் சுகாதார நிலை பற்றியும் சொன்னான்.அதை பதியலாமோ தெரியவில்லை.நான் பாரில் பியர் அடித்துக்கொண்டிருந்தேன்.

அடுத்து கனடாவில் உள்ள ஸ்ட்ரிப் ஜோயின்ருக்கு போய் வரும் வெள்ளை இனநண்பன் சொன்னது .உங்கட ஆட்கள் எப்பவும் மேசைக்கு டான்ஸ் ஆட கூப்பிட்டு விட்டு பின்னர் கையை வைத்து பின் பவுன்சரால் வெளியேற்றப்படுகின்றார்கள் அல்லது தூக்கிஎறியபடுகின்றார்கள் .

ஏன் முன்னர் பின்னர் பெண்களை அவர்கள் பார்க்கவில்லோயோ என்று.என்னிடம் அதற்கு பதில் இல்லை .

இந்த இடத்தில் எமது பொத்தி வைத்த கலாச்சாரம் சரியோ என எனக்கு கேள்வி எழுவதுண்டு.

நல்ல அனுபவங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

அர்ஜன் ..இந்த பதிவு தொடர்பாக ...உங்கள் அனுபங்களையும் கூறி மெருகூட்டியதுக்கு நன்றிகள் ..பேஸ் புக் பக்கம் எல்லாம் சிறுகதைகள் தொடர்பாக விமர்சிக்கும் நல்ல விமர்சகர்கள் என்று ஆக்கள் சொல்லினம் ..என்னுடைய கதை பற்றி ஏதாவது சொல்லாமால் விட்டீங்கள்...இந்த கதை அரை அவித்த முட்டை மாதிரி இல்லை தானே ...உங்கள் பாணியில் சொல்வதன்றால் :lol:

உங்கள் கதைகளை தொகுத்து நூலாக வெளியிடுங்கள்

ரதி உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் ...ஏதாவது சஞ்சிகையில் போடுவதற்கு கூட எனக்கு என்னும் எனது கதையில் நம்பிக்கை வரவில்லை ..புத்தகம் போட சொல்லுறீயள் ..எனக்கில்லாத நம்பிக்கை உங்களுக்கு இருப்பது கண்டு சந்தோசமாக இருக்குது ..மிக்க நன்றிகள் மீண்டும் ரதி :)

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜன் ..இந்த பதிவு தொடர்பாக ...உங்கள் அனுபங்களையும் கூறி மெருகூட்டியதுக்கு நன்றிகள் ..பேஸ் புக் பக்கம் எல்லாம் சிறுகதைகள் தொடர்பாக விமர்சிக்கும் நல்ல விமர்சகர்கள் என்று ஆக்கள் சொல்லினம் ..

ம்ம்..நானும்தான் அறிஞ்சன் நாகேஸ்...ஆள் நல்ல ரசனையுள்ள ஆள்போல... முகப்புத்தகத்தில நானும் ஒரு நாலஞ்சு மாசமா அப்பிளிக்கேசனைப் போட்டிட்டுக் காத்திருந்தன்..கிட்டடியிலதான் கதவு திறந்தார்.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றிகள் ஜீவா...வசீ கருத்து ஆமா போட்டிருக்கிறீர்கள் ...வசிக்கு சொன்னது தான் உங்களுக்கும் சொல்லுறன் ..நான் ரொம்ப அப்பாவி எதையும் நம்பி விடுவன் ..நம்புறன் :D :D

அண்ணா இந்த உசுப்பேத்தி விடவேண்டும் என்று சொல்வதில்லை அண்ணா நிச்சயம் உங்கள் எழுத்து உங்களை இன்னொருதளத்திற்கு எடுத்துச்செல்லும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கதையின் கருவாக இருந்தாலும் அது எடுத்துச்சொல்லப்படும் விதமும் எமக்கு புதிது. இல்லை என்னுடைய வாசிப்புதிறன் குறைவாகவும் இருக்கலாம் ஆனால் கண்முன்னால் நாம் காணும் வாழ்க்கையை அதுவும் எமது சமூகத்தில் அதிகம் பேசப்படாத விசயங்களை அருமையாக எழுத்துக்களூடு சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா.

இப்படி ஒரு சூழ்நிலையை நேரில் கண்டதால் கண்முன்னே பார்த்த விடயங்களை பகிரும் போது எனது சொந்த அனுபவத்தை இன்னொருவரின் எழுத்துக்களில் படிக்கும் போது இருக்கும் சுகமே தனி.

நானும் வெளிநாடு வர என்று முதலில் மலேசியாவில் johor bahru

இல் இருந்த போது 3மாத விசா தான் முடிந்ததும் சிங்கப்பூர் போய் அங்கை 15 நாள் விசா குத்திபோட்டு 2,3நாள் இருந்துபோட்டு திரும்பவும் மலேசியா வர திரும்ப 3மாதம் விசா தருவான். இப்படி கொஞ்சகாலம் காலத்தை ஓட்டினோம்.

நானும் சிலாபம் பொடியன் ஒருவனும் தான் போட்டு வருவோம். சிங்கப்பூரில் 30 டொலர் க்கு(ஓர் இரவு மட்டும்) 2 பேரும் ரூம் ஒன்றை எடுத்துப்போட்டு மூட்டை பூச்சிகடி தாங்க முடியாது இரவிரவா சிங்கப்பூரின் வீதிகளில் நடந்து போட்டு ஏலாதகட்டத்திலை தான் போய் தூங்கிறது. ஒரு நாள் என்னுடன் கூட வந்தவன் தான் போட்டு வரபோறேன் வா என்று என்னட்டை இருந்த காசையும் பிடுங்கி(மலேசியா வந்து திருப்பி தந்தவன்) நான் வரவில்லை என்று சொல்ல அடம்பிடிச்சு கூட்டிக்கொண்டு போய் வெளிய நிக்க வச்சவன். விரலால் 1,2 காட்டி 1க்கு ஒரு ரேட் 2 க்கு ஒரு ரேட் என்று பேசி போய் வந்தவன். இதுக்கு மேலதிக விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். சொன்னால் அது ஆபாசம் ஆகிவிடும். (அதுக்காக ஜீவாவுக்கு அனுபவமா என்று கேட்க கூடாது :D ஜீவா இந்த நொடிவரை கைபடாத ரோசா தான்..... நம்புங்கப்பா :lol::icon_mrgreen: )

இப்படி இந்த கதையும் எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில் கண்ட வாழ்வின் சுவடுகளை வருடிச்செல்வதால் அதன் சுவை அதிகம் தான். யதார்த்தமான எழுத்துக்கள் அண்ணா. தொடர்ந்து எழுதுங்கள் பாராட்டுக்கள் அண்ணா. :)

மிக்க நன்றி ஜீவா ...இந்த கதையின் மூலம் உங்கள் கதையையும் கேட்க கூடியதாக இருந்தது ....மீண்டும் எனது அன்பான நன்றிகள் :)

  • கருத்துக்கள உறவுகள்

வழமையான நாகேஷ் பாணிக் கதை.. தமிழினத்தின் பெருமைகள் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் புலம்பெயர்ந்த சூழலில் எப்படிக் காணாமல் போகின்றது என்பது தெரியும்தான். எனினும் தமிழர்களின் இரத்தத்தில் ஊறிய சில சிந்தனைகள் அப்படியே மாறாமல் இருக்கின்றது.

< இவனுக்கு இவளவும் என்னத்துக்கு என்று வாய் உளறியது ..

அவனறியாமாலே...

அப்பொழுது டெலிபோன் அடித்தது.

மறு முனையில் ஒரு மிகவும் வயதான மூதாட்டி

ராஜாவை தேடி வந்த அவசர அழைப்புக்கு அவள் கூறிய காரணத்தினால்

தலையணை கீழ் இருந்த அவ்வளவு கட்டு கொண்டெம் ஏன் என்று விளங்கியது

ஆம் ,,கோல் கேள் மாதிரி ....ராஜா ஒரு கோல் போய்

சுரேஸ் அறிந்தால் ,,அறியத்தான் போறான் ..

கண்ணாடி அறையில்லாத தான் வசிக்கும் இந்த இடத்தில் இருந்தும் ..என்று,,,......>

அமைதியாக , அதிக ஆரவாரமில்லாமல் , இரண்டு விடையங்களை நறுக்கென்று மண்டை கலங்கச் சொல்லியுள்ளீர்கள் நாகேக்ஷ் . முதலாவதாகப் , புலம்பெயர்ந்த பிரம்மச்சாரிகளது வாழ்கை முறையும் , அவர்கள் பார்வையில் பாலியல் என்றால் என்ன ? என்பதும் . இரண்டாவதாகப் புலம் பெயர் வாழ்வில் எமது சமூகத்தின் < அரை அவியல் முட்டைக் கலாச்சாரத்தால் > எற்பட்ட பிறள்வினால் , பாலியல் தொழிலில் எமது சமூகத்தின் விலைமகன்களது பங்களிப்பு . இதைச் சொல்வதிற்கு ஒரு எழுத்தாளனுக்குத் தனியான துணிச்சல் வேண்டும் . அதை நீங்கள் செய்தது உண்மையிலேயே பராட்டப்படவேண்டிய விடையம் . மேலும் , நீங்கள் பன்முகப்பட்ட படைபுகளைத் தரவேண்டும் என்பதே எனது ஆவல் :):):):) 6 .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

< இவனுக்கு இவளவும் என்னத்துக்கு என்று வாய் உளறியது ..

அவனறியாமாலே...

அப்பொழுது டெலிபோன் அடித்தது.

மறு முனையில் ஒரு மிகவும் வயதான மூதாட்டி

ராஜாவை தேடி வந்த அவசர அழைப்புக்கு அவள் கூறிய காரணத்தினால்

தலையணை கீழ் இருந்த அவ்வளவு கட்டு கொண்டெம் ஏன் என்று விளங்கியது

ஆம் ,,கோல் கேள் மாதிரி ....ராஜா ஒரு கோல் போய்

சுரேஸ் அறிந்தால் ,,அறியத்தான் போறான் ..

கண்ணாடி அறையில்லாத தான் வசிக்கும் இந்த இடத்தில் இருந்தும் ..என்று,,,......>

அமைதியாக , அதிக ஆரவாரமில்லாமல் , இரண்டு விடையங்களை நறுக்கென்று மண்டை கலங்கச் சொல்லியுள்ளீர்கள் நாகேக்ஷ் . முதலாவதாகப் , புலம்பெயர்ந்த பிரம்மச்சாரிகளது வாழ்கை முறையும் , அவர்கள் பார்வையில் பாலியல் என்றால் என்ன ? என்பதும் . இதில் , எந்தப் பிரம்மச்சாரியாவது தான் சிவப்புப் பகுதிக்குச் செல்லவில்லை என்றால் , அது வடிகட்டின பொய் என்று தான் சொல்வேன் . இரண்டாவதாகப் புலம் பெயர் வாழ்வில் எமது சமூகத்தின் < அரை அவியல் முட்டைக் கலாச்சாரத்தால் > எற்பட்ட பிறள்வினால் , பாலியல் தொழிலில் எமது சமூகத்தின் விலைமகன்களது பங்களிப்பு . இதைச் சொல்வதிற்கு ஒரு எழுத்தாளனுக்குத் தனியான துணிச்சல் வேண்டும் . அதை நீங்கள் செய்தது உண்மையிலேயே பராட்டப்படவேண்டிய விடையம் . மேலும் , நீங்கள் பன்முகப்பட்ட படைபுகளைத் தரவேண்டும் என்பதே எனது ஆவல் :):):):) 6 .

கோமகன் அண்ணா நீங்கள் இவ்வாறு கூறுவது மிகத் தவறான பார்வை.ஏனெனில் எதிலும் நூறு சதவிகிதம் சொல்லமுடியாது என்பதும் நான் அறிந்த எத்தனையோ பேர் தூங்குவதற்கு கூட நேரமில்லாது குடும்பத்திற்காக உழைக்கும் பொது அவர்களைப்பற்றி நீங்கள் இவ்வாறு எந்த அடிப்படையை வைத்து கூறுகிறீர்கள் என்று கூறமுடியுமா ? நீங்கள் ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த பிர்மச்சாரிகளை நோக்கி கையை நீட்டுவது ரொம்ப தவறு .அதைவிட பொதுமைப்படுத்தல் என்பதும் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியாக , அதிக ஆரவாரமில்லாமல் , இரண்டு விடையங்களை நறுக்கென்று மண்டை கலங்கச் சொல்லியுள்ளீர்கள் நாகேக்ஷ் . முதலாவதாகப் , புலம்பெயர்ந்த பிரம்மச்சாரிகளது வாழ்கை முறையும் , அவர்கள் பார்வையில் பாலியல் என்றால் என்ன ? என்பதும் . இதில் , எந்தப் பிரம்மச்சாரியாவது தான் சிவப்புப் பகுதிக்குச் செல்லவில்லை என்றால் , அது வடிகட்டின பொய் என்று தான் சொல்வேன் . இரண்டாவதாகப் புலம் பெயர் வாழ்வில் எமது சமூகத்தின் < அரை அவியல் முட்டைக் கலாச்சாரத்தால் > எற்பட்ட பிறள்வினால் , பாலியல் தொழிலில் எமது சமூகத்தின் விலைமகன்களது பங்களிப்பு . இதைச் சொல்வதிற்கு ஒரு எழுத்தாளனுக்குத் தனியான துணிச்சல் வேண்டும் . அதை நீங்கள் செய்தது உண்மையிலேயே பராட்டப்படவேண்டிய விடையம் . மேலும் , நீங்கள் பன்முகப்பட்ட படைபுகளைத் தரவேண்டும் என்பதே எனது ஆவல் :):):):) 6 .

கோமகன் அண்ணா.. நாகேசு அண்ணா.. உங்கள் இருவருக்கும் நல்ல நடத்தைகளைக் கொண்ட மக்களைக் கொண்ட ஒரு உலகம் இருப்பதே தெரியாது போல. உங்களுக்கு அதை வேணுன்னா.. நாங்க காட்டிறம்..! புலம்பெயர் நாடுகளில் கூட.. எத்தனையோ இளைஞர்கள்.. யுவதிகள்.. தாங்களும்.. தங்கள் கல்வியும்.. வேலையும்.. நியாயமான பொழுதுபோக்கும் என்று இருக்கின்றனர்.

அண்மையில் ஒரு கணக்கெடுப்பு படி.. இந்தளவு பெரிய சனத்தொகை கொண்ட இங்கிலாந்தில் ஒரு 200,000 ஆட்கள் தான் விபச்சாரிகளை நாடுவதாக ஒரு மதிப்பீடு சொல்லியுள்ளது. இவர்களில் அநேகர்.. மற்றைய நாடுகளில் இருந்து தொழில் நிமித்தம் தற்காலிகமாக இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள்.

ஒரு சிலரின் நடத்தைப் பிறழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த மனிதர்களையும் தவறாக எடை போடும்.. கோமகன் அண்ணாவின் பார்வை கண்டிக்கத்தக்கது. இது எமது சமூகத்தின் ஒரு கேடுகெட்ட நிலையும் கூட..!

மற்றும்படி.. விபச்சாரம் செய்வது.. விடுவது அவரவர் சார்ந்த தனி விருப்புக்குரியது. ஆனால் அவர்களால் சமூகப் பாதிப்பு என்று வரும் போது.. அதை சமூகம் தட்டிக் கேட்க விளையும். அந்த வகையில் இந்தக் கதை.. ஒன்றும் பெரிய புதிரோ புதினமோ அல்ல. விபச்சாரத்தை தொழிலாகச் செய்து உழைப்புத் தேடும் இடத்தில்.. இவை சர்வ சாதாரணம். ஆனால்.. நம்மில் சிலர் இன்றும்.. இப்படியான சிவப்பு விளக்கு என்று தலைப்புப் போட்டாலே.. அது ஏதோ.. புரட்சிகரமான சிந்தனையின் முதற்படி என்று இனங்காட்ட சேர்ந்து நின்று கும்மியடிக்க விளைவது தான் இன்றைய அறிவியல் உலகில் வேடிக்கையாக உள்ளது..! :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன் அண்ணா.. நாகேசு அண்ணா.. உங்கள் இருவருக்கும் நல்ல நடத்தைகளைக் கொண்ட மக்களைக் கொண்ட ஒரு உலகம் இருப்பதே தெரியாது போல. உங்களுக்கு அதை வேணுன்னா.. நாங்க காட்டிறம்..! புலம்பெயர் நாடுகளில் கூட.. எத்தனையோ இளைஞர்கள்.. யுவதிகள்.. தாங்களும்.. தங்கள் கல்வியும்.. வேலையும்.. நியாயமான பொழுதுபோக்கும் என்று இருக்கின்றனர்.

:D :D

(உண்மைய நினைச்சேன் சிரிச்சேன்.) :D :D :D

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

:D :D

(உண்மைய நினைச்சேன் சிரிச்சேன்.) :D :D :D

ஜீவா உங்களுக்கு அப்பிடி ஒரு அனுபவம் இருப்பதை வைத்துக்கொண்டு எல்லாரும் அப்பிடித்தான் இருப்பினம் என்று நினைக்கக் கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

:D :D

(உண்மைய நினைச்சேன் சிரிச்சேன்.) :D :D :D

இதெல்லாம்.. பெட்டையளுக்குப் பின்னாடி திரியுறவங்களுக்கு மட்டும் தான். அதுக்கு நேரமும் இல்லாத.. அவங்களுக்கு செலவழிக்க என்று உழைக்காம.. தங்களுக்காக உழைக்கின்ற.. நல்லவங்களும் இருக்காங்க..! அப்படியான கூட்டங்களுக்கு இது காமடி.. நிஜம் இல்ல..! :lol::icon_idea:

கோமகன் அண்ணா.. நாகேசு அண்ணா.. உங்கள் இருவருக்கும் நல்ல நடத்தைகளைக் கொண்ட மக்களைக் கொண்ட ஒரு உலகம் இருப்பதே தெரியாது போல. உங்களுக்கு அதை வேணுன்னா.. நாங்க காட்டிறம்..! புலம்பெயர் நாடுகளில் கூட.. எத்தனையோ இளைஞர்கள்.. யுவதிகள்.. தாங்களும்.. தங்கள் கல்வியும்.. வேலையும்.. நியாயமான பொழுதுபோக்கும் என்று இருக்கின்றனர்.

ஏன் நெடுக்கர் இதுக்கு இவ்வளவு கஸ்டப்படுகின்றீர்கள்????? நீங்கள் , ஒரு சில பெண்கள் செய்யும் அட்டூழியங்களுக்காக ஒட்டு மொத்தமாய் பெண்குலத்தையே போட்டுத் தாக்கு தாக்கு என்று தாக்கேக்கை இப்ப யோசிச்ச மாதிரி ஏன் கொஞ்சம் கூட யோசிக்கேலை???? ஓ இப்ப விளங்குதா... தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான்........

உண்மைகளை, நடப்பவற்றை எடுத்துச் சொல்லிய நாகேஸ், கோவுக்கு நன்றிகள் :)

ஆமா.. இந்தக் கதை என்னைப் பாதிக்குது என்று சொல்லி நான் இங்க ஒப்பாரியா வைச்சேன். இல்லையே. இந்தக் கதையை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கனும் என்ற அவசியம் கூட நமக்கு இல்லை. இது யாரோடைய கதை.. அவ்வளவும் தான். அதற்கு மிஞ்சி இதற்கெல்லாம் முக்கியம் அளிக்க நாங்க முட்டாள்கள் இல்ல.

நாங்கள் வாழும் சமூகத்தில் நல்ல நடத்தை உள்ளவங்களும் இருக்காங்க.. கோமகன் அண்ணாவின் பொதுவான குற்றச்சாட்டு.. அவங்களையும் பாதிக்கும் என்று தான் அவரின் குறிப்பிட்ட கருத்துக்கு கண்டனம் பதிவு செய்தேன்.

அதேபோல.. நான் சமூகத்தில் நடத்தைப் பிறழ்வைக் காண்பிக்கும் பெண்களின் தவறைச் சுட்டிக்காட்டுவது.. அந்தத் தவறைச் செய்யும் பெண்களையும் செய்ய துடிக்கும் பெண்களையும் சிந்திக்க வைக்கனும் என்று தானே தவிர.. அது ஒட்டுமொத்த பெண்களையும் குறிவைக்கிறது என்று நீங்க நினைச்சா.. நாங்க அதுக்கு என்ன பண்ண முடியும்.

ஆனால் கோமகன் அண்ணாவின் குற்றச்சாட்டு.. பொதுவா புலம்பெயர் நாடுகளில் உள்ள எல்லோரையும் தாக்குவதால் அதனை சமூகத்தில் நல்லவங்களையும் அவதானித்தவன் என்ற வகையில் கண்டித்தேன். அவ்வளவும் தான். :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

வாதவூரன் , நெடுக்கர் , உங்கள் கருத்துக்களை நிதானமாக உள்வாங்குகின்றேன் . உங்கள் இருவரையும் தனிப்பட்ட முறையில் மனம் நோகப் பண்ணியிருந்தால் உங்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் . ஆனால் , எனது கருத்துக்களுக்கு இல்லை . காரணம் , நாகேசின் கதை எனது மனதில் ஏற்படுத்திய அதிர்வலைகளையே அவருக்குப் பதிவிட்டேன் . நீங்கள் கேட்ட கேள்விகளை பேசாப் பொருளில் ஒரு பதிவை ஆரம்பித்து விவாதிப்போம் . இங்கு வேண்டாமே !!!!!! :) :) :) :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா உங்களுக்கு அப்பிடி ஒரு அனுபவம் இருப்பதை வைத்துக்கொண்டு எல்லாரும் அப்பிடித்தான் இருப்பினம் என்று நினைக்கக் கூடாது

சாறி பாஸ் .. உங்களை பத்திய டேற்றா எல்லாம் இன்னும் சேவ் ஆகலை

இது வேறை ஒரு பிரதரை நினைச்சு சிரிச்சது .. தொப்பி அளவான ஆக்களுக்கு புரியும் அண்ணா. :lol::icon_mrgreen:

பை த வே.. மீண்டும் ஒருக்கா நான் எழுதினதை படிச்சு பார்த்திட்டு எழுதுங்கண்ணா.. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம்.. பெட்டையளுக்குப் பின்னாடி திரியுறவங்களுக்கு மட்டும் தான். அதுக்கு நேரமும் இல்லாத.. அவங்களுக்கு செலவழிக்க என்று உழைக்காம.. தங்களுக்காக உழைக்கின்ற.. நல்லவங்களும் இருக்காங்க..! அப்படியான கூட்டங்களுக்கு இது காமடி.. நிஜம் இல்ல..! :lol::icon_idea:

நீங்க சொன்னா உண்மை தான்... ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.