Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தையல் மிசின் நாயகிகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கால உள்ள காணியை

அடகுக்கு விட்டு

ஊர் சாகட்டும்

நீ பத்திரமா..

வடக்கை விட்டு ஓடு என்று

ஆத்தா விரட்டி அடிக்க..

ஓடி வந்து..

சிங்களக் குகையினில்

சிங்கிள் றூமில..

பதுங்கிக் கிடந்து..

எனக்கு முதலாவே

செல்லடிக்க முதலே

83 யூலையோட..

வசதியா தாம் வாழ என்று

இருந்த இரண்டு மாடி வீட்டை

வித்துப் போட்டு..

மேற்கால ஓடி வந்த குடும்பத்தில

வந்த ஒருத்தனை

செற்றப் பண்ணி..

நானும்

மங்கை என்று வந்து

செற்றிலாகி

இப்ப நாலு குழந்தை

பெத்து

அதுகளும் குழந்தை

பெறும் நிலைக்கு

வந்திட்டுதுகள்..!

ஒரு நாள்

தற்செயலா..

கண்ணாடி முன்னாடி நிதானமா நிற்க..

தலைமுடி ஓரமா

டை பூசாமல் விட்டதால

தெரிஞ்ச அந்த

நரைக்கும் வெள்ளை முடிகள்...

ஊரில..

வெத்திலைப் பெட்டியோட

கவனிப்பாரற்று..

திண்ணையில் கிடந்த

பாட்டியை நினைவு கூற..

ஆகா..

எனக்கும்..

சாவு நெருங்கிட்டுது..

இப்ப மாடிப்படி ஏறினாலும்

மூச்சு வாங்குது..

என்ற நிலையில..

சமூகக் கடமை

உணர்ச்சியாக் கிளம்புது.

என்னே அதிசயம்..

வன்னியில..

முள்ளிவாய்க்காலின் பின்னால..

என் சொந்தங்கள் தப்பி வந்து

துன்பப்படுவது கண்ணுக்கு

தெரியுது.

நேற்று வரை

கரும்புலி என்றும்

கடற்புலி என்றும்

வான் புலி என்றும்

தரைப் புலி என்றும்

குப்பி அடிச்சும்

குண்டு வெடிச்சும்..

அதுகள் செத்த போது...

வீரவணக்கம் என்று

கவிதை கூட எழுதினதல்ல..

அவ்வளவு பிசி நான்.

ஏன்..

நான் பெத்த செல்வங்களின்ர

ஆண்டு தவறாத..

பேர்த்டே பாட்டிகளில..

ஊராக்கள் ஊர் விடுப்புக் கேட்க..

ஐ டோண்ட் நோ..என்று

சிலிம்பிக் கொண்டு போயிருக்கிறன்.

இப்ப எல்லாம்..

நான் பெற்ற பிள்ளைகள்

ஆளுக்கொன்றைப் பிடிச்சுக் கொண்டு..

என்னை விட்டு போற நிலை

நெருங்கிட்டதால..

தனிமை வாட்ட..

ஊர்ப் பிள்ளைகளின் தனிமை

எனக்குப் புரியுது.

யோசிச்சுப் பார்த்தன்..

உங்கினை லண்டன்.. கனடான்னு..

அடிமாட்டுக்கு எவனாவது

இளிச்ச வாயன் கிடைச்சா

உந்த வன்னிப் பிள்ளைகளுக்கு

கட்டிக் கொடுப்பம்..

ஊர்ப் புகழோட

செய்ய மறந்ததிற்கு

புண்ணியமும் சேருமாமெல்லோ..!

ஆனால் என்ர பிள்ளைக்கு..

ஐயகோ..

அவன் காலில

"சூ" இல்லாட்டியே

என் மனசு..

தாங்காது.

கார் இல்லாமல்

நாலடி தூரம் நடந்தாலே

மனசு பதபதைக்குது.

அவனுக்கு அவளுக்கு

இங்கினை பிறந்ததுகள் தான் சரி.

அதை விட்டிட்டு..

"சூ| போடாமலே

ஓடி ஓடி..

சூனியப் பிரதேசங்கள் தாண்டி

எதிரி முகாம்கள் பிடிச்சதுகளை

கட்டி வைக்க முடியுமோ..???!

மேலும் சொன்னா..

ஊராருக்குத் தானே

எனக்கா..

நான் தானே இங்க

சிற்றிசன் ஆகிட்டனே..

இங்க

ஒரு இளிச்சவாயனும்

கையில சிக்கல்லைன்னா..

உந்த ஊரெல்லாம்

வாங்கிக் கொடுக்குது..

தையல் மிசின்

நானும் நாலு மிசின்

வாங்கிக் கொடுத்திட்டா

போற வழிக்குப்

புண்ணியமாப் போகும்.

நரை விழுந்த வயசில..

கலியாணம் அவளவைக்கு

கட்டி வைக்கிறது

என்ன சுலபமே..

அவளவைக்கு

தையல் மிசின் தான் சரி.

தையல் மிசின் நாயகிகள்..

ம்ம்.. இது தான் தமிழீழம் மீட்க

இரும்பு தூக்கின ஆக்களுக்கு

சரியான "ரைற்றில்"..

வெளில ஒரு வார்த்தை வராமல்..

மனசுக்க சொல்லிக் கொண்டன்.

ஆ.. மறக்கக் கூடாது..

தையல் மிசின் கொடுக்கிறதை

போட்டோ எடுத்துப் போடனும்..

அப்ப தான்

பின்னாடி கேட்டா

முன்னாடி ஆதாரமா வைக்க முடியும்.

பங்சனுகளில...

ஓசிப் பேப்பர்களில...

பேஸ் புக்கில போட்டு..

நானும்

ஊருக்கு செய்தனென்று

தம்பட்டம் அடிக்க முடியும்..!

உந்த தையல் மிசின் கதையை

ஊர் உளவாரம்

சிதம்பரம் அண்ணையிண்ட

காதிலையும் போட்டு வைச்சிடனும்...

அப்பதான் அவரும்

நாலு கதை

தையல் மிசின் நாயகிகள் என்று

தலைப்புப் போட்டு எழுதித் தள்ள

நானும் என் சேவையும்

புகழின் உச்சி தொட்டிடும்.

அப்புறம் என்ன...

நான் இங்கினை கவுன்சிலர்

தேர்தலில

நிற்கலாம்..!

என்ர பிள்ளைகளுக்கும்

பெருமை வந்து

ஓசியில சேரும்..!

எல்லாம் அந்த

தையல் மிசின் நாயகிகளின்

அனுக்கிரகமே.

வாழ்க அவளவை.. வளர்க்க என் புகழ்..!

(இது தான் எமக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் தொடர்பில் நம்மவர்களில் பலரின் நிலை..! கவலைக்குரியது..!)

Edited by nedukkalapoovan

யோசிச்சுப் பார்த்தன்..

உங்கினை லண்டன்.. கனடான்னு..

அடிமாட்டுக்கு எவனாவது

இளிச்ச வாயன் கிடைச்சா

உந்த வன்னிப் பிள்ளைகளுக்கு

கட்டிக் கொடுப்பம்..

ஊர்ப் புகழோட

செய்ய மறந்ததிற்கு

புண்ணியமும் சேருமாமெல்லோ..!

பெண்கள் இயக்கத்திற்கு போராடவா போனவர்கள். இல்லைத்தானே .ஆள்பிடிக்கபோனவவர்கள். அது பிழைத்து போனதும் இப்ப தையல் மிசின் கேட்கினம். பாராட்டுக்கள் நெடுக்கு

குறுக்கால மன்னிக்கவும் நெடுக்கால போவானுக்கு why this kolaveri? வைக்கோல் பட்டடை நாய் போல?

Edited by summa iruppavan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கால போவானுக்கு why this kolaveri? வைக்கோல் பட்டடை நாய் போல?

இது குறுக்காலபோவனின் கொலை வெறியல்ல. வெளிநாட்டில உள்ள சில பல தமிழர்களின் கொலை வெறி. வைக்கோல் பட்டடை நாய் சில தமிழர்களைக் காட்டிலும் மிகவும் மேல்..! பழக்க வழக்கத்தில என்று சொன்னன்.

அதுசரி.. வெறும் 8 கருத்துக்களே பதிஞ்ச உங்களை 9 வது கருத்தை இங்க பதிய.. உள்ளுக்கவிட்டது யாரூ...??! யாழ் களத்திலும் உப்படியான பின் கதவு அரசியல் நடக்குதோ..???! ம்ம்ம்...! எல்லாம் ஊருக்குத் தான். :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் இயக்கத்திற்கு போராடவா போனவர்கள். இல்லைத்தானே .ஆள்பிடிக்க போனவர்கள். அது பிழைத்து போனதும் இப்ப தையல் மிசின் கேட்கினம். பாராட்டுக்கள் நெடுக்கு

உப்படி விழுந்தடிச்சு தையல் மிசின் கொடுக்கிறதை பார்த்தா அப்படித் தான் தெரிய வைக்கும். இதனை சம்பந்தப்பட்டவை புரிஞ்சு கொண்டு.. செயற்படனும். ஏதோ தையல் மிசின் இல்லாததால போராடப் போன கதையா இது முடியக் கூடாது...! அவர்களின் அளப்பரிய தியாகம்.. இப்படியான சில்லறைச் செயற்பாடுகளாலும் மலினப்பட்டுப் போவதை உணர்கிறார்கள் இல்லை.

சிங்களவன் தனது முன்னாள்.. இன்னாள் படைவீரர்களுக்கு வீடும்.. காசும்.. பிள்ளை பிறந்தா.. அதுவும் 3 வது பிறந்தா ஒரு இலட்சமும் கொடுக்கிறான். எல்லா சலுகைகளும் கொடுக்கிறான். ஆனால் நாங்களோ.. எமது போராளிகளுக்கு தையல் மிசின்.. ஜமுனா பாரீ ஆடு.. கோழிக்குஞ்சு.. நாலு அவரைக் கொட்டை தான் கொடுப்பம்..! அதுக்கே கெஞ்சி அல்லாட வேண்டி இருக்குது. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

'இரத்தத்தின் வாடை தெரியாமல்,

இழப்பின் வலியறியாமல்,,

ஆவென்று வாய் திறந்து,

ஐயோவேன்று குரலெழுப்பி,

அகிலமெங்கும்,

அகதியாகப் புகலடைந்தோர்,

ஆயிரமாயிரம்!

அடைபட்ட அறைகளுக்குள்,

ஆயிரம் பொய்கள,

அண்டப் புழுகுகள்,

அவரவர் கற்பனை வளத்தின்,

அளவைப் பொறுத்து,

அவிழ்ந்து வீழ்ந்தன!

அவர்களைத் தாங்கியது,

அந்நியர்களின் மனிதம்!

அவர்களின் மனிதம் மட்டும்,

அகதியாகிப் போனது!!!

முன்னே வந்தவர்களைத் தாங்கிப் பிடித்தது, அந்நியர்களின் மனிதாபிமானம்!

பின்னே வருபவர்களைத் தாங்கப் பின் நிற்கின்றார்கள், முன்னே வந்த கறையேதும் படாத அகதிகள்!

உண்மையகதிகளைப் போலியகதிகள், சாதி குறைந்தவர்களைப் பார்ப்பது போலப் பார்க்கின்றனர், நெடுக்கு!

உங்கள் கவிதை, இந்த மனநிலையை, மெதுவாகத் தொட்டுச் செல்கிறது,நெடுக்கர்!

கவிதைக்கு நன்றிகள்!!!>>>

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையகதிகளைப் போலியகதிகள், சாதி குறைந்தவர்களைப் பார்ப்பது போலப் பார்க்கின்றனர், நெடுக்கு!

இவர்கள் பணத்திமிரால் கொழுத்தவர்கள்...அவர்கள் நலிந்தவர்கள்...அதுதான் அப்படிப் பார்க்கிறார்கள் புங்கை அண்ணா..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

உழைக்கின்ற சீவியத்துக்கே மட்டுமட்டாக இருக்கின்ற நெடுக்ஸிடம் அவரது எதிர்காலத்திட்டங்களை நக்கல் பண்ணும் விதத்தில் பதிவுகளை இட்டால் இப்படித்தான் கோபமாகக் கவிதை எழுதுவார்!

தென்மேற்கு இலண்டனில் போராட்டத்திற்குக் காசு சேர்த்த ஒருவர் பல மில்லியன் பவுண்ஸ் செலவழித்து ஒரு கிளப் ஒன்றை வாங்கியுள்ளதாகக் கதை காத்துவாக்கில் வந்தது. இப்படியானவர்களிடம் பதுங்கி இருக்கும் பணத்தை வைத்து தாயகத்தில் அல்லலுறும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற பெரிய திட்டங்களை செயற்படுத்தலாம்.

அதை விட்டுவிட்டு அல்லாடிக் கொண்டிருக்கின்ற நெடுக்ஸ் போன்றவர்களிடம் இருப்பதையும் உரிக்க வெளிக்கிட்டால்???

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கோபம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை நாம் சுயவிமர்சனம் செய்ய தயாரானவர்களுக்கு இது நியாயமான கோபம்

ஆனால் அதில் எமக்கு பங்கில்லை என்போர்க்கு...?

கிருபன் தங்கள் குற்றச்சாட்டு உண்மையென்றால் அவரை நேரடியாக கேட்க என்ன தயக்கம்???

ஹாய் யாப்பு கவிதை கிவிதை எல்லாம் ஓகேதான். எல்லாருக்கும் நியாயமான கோபமாக புரிஞ்சதுபோல் இந்தப் புலியின் ஐந்தாம் அறிவு மண்டைக்குளையும் அப்பிடித்தான் விளங்கிச்சு. ஒரு உர்ர்ர்ர்ர்ர்ர் . பயப்புடாதப்பு . அதுதான் உர்ர்ர் பச்சை :lol:

ஏன் யாப்பு உமக்கிந்தக் கொலவெறி? எப்பவுமே பூதக்கண்ணாடி போட்டு முட்டையில மயிர் புடுங்கி மத்தவனக் கடுப்பேத்துற வேலையை மட்டும் புல்டைம்மா பாக்குறீங்கள். அதுக்குள்ள மாஸ்ரர் பிஸி கதையைஅ வேற அடிக்கடி விடுறீங்கள்.

இதே கதியெண்டு கிடவாதையும் யாப்பு.அப்புறம் எல்லாமே ஆப்பாயிடும். :icon_idea::lol:

புலிப்பாஷை புரியுமா யாப்புக் வரைஞர்.நெடுக்காரே? :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே கதியெண்டு கிடவாதையும் யாப்பு.அப்புறம் எல்லாமே ஆப்பாயிடும். :icon_idea::lol:

புலிப்பாஷை புரியுமா யாப்புக் வரைஞர்.நெடுக்காரே? :lol: :lol: :lol:

ஆப்பு யாப்பு யூப்பு.. இதெல்லாம் பழைய கதை. நாங்க புதிசு..! :):lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பு யாப்பு யூப்பு.. இதெல்லாம் பழைய கதை. நாங்க புதிசு..! :):lol::D

:o:lol: நாங்க யூத்தப்பா யூத்து... :lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் தங்கள் குற்றச்சாட்டு உண்மையென்றால் அவரை நேரடியாக கேட்க என்ன தயக்கம்???

எவரை விசுகு அண்ணா? :unsure:

ஓ.. கிளப் வாங்குகின்றவரையா! <_<

எனக்க்கு ஒழுங்காகக் கை கால்கள் இருக்கக்கூடாது என்று நீங்கள் விரும்பினால் லாசப்பலுக்கு வந்து உங்களிடமே அடி, வெட்டுக்குத்து எல்லாம் வாங்குகின்றேன்.. :icon_mrgreen:

நியாயமான கோபம் :rolleyes:

உண்மைதான் இவர்கள் எங்களை கேட்டா போராடப் போனார்கள். அல்லது போராட போங்கோ எண்டு நாங்கள் சொல்லி அனுப்பி வைத்தோமா? இப்பொழுது வந்து கால் இல்லை கை இல்லை மிசின் தாருங்கள் எண்டால். புலம்பெயர் தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா? யாழ் களம் என்பது ஒரு பொழுது போக்கு களம் இங்கையும் உதவி உதவி என்று அழுதால் என்ன நியாயம். :(

Edited by angali

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் புரிகிற மாதிரி பேசலாமே...

ஒரு பச்சை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணா யாரோ ஒரு தனிநபரைச்சாட உங்கள் தரத்தை தாழ்த்தியுள்ளீர்கள். உங்கள் கவிதையை படிக்க இதுதான் தோன்றுது. :icon_idea:

நான் உங்களை என்னவோ என்று நினைத்தேன் நீங்கள் ஒரு காமடி பீஸ் என்று நிரூபித்துவிட்டிங்கள். :wub:

எங்களுக்கும் புரிகிற மாதிரி பேசலாமே...

நிழலி அண்ணாவும் பச்சை குத்தினதுக்கு பிறகு எனக்கும் அப்படி தான் இருக்குது விசுகு அண்ணா. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

எவரை விசுகு அண்ணா? :unsure:

ஓ.. கிளப் வாங்குகின்றவரையா! <_<

எனக்க்கு ஒழுங்காகக் கை கால்கள் இருக்கக்கூடாது என்று நீங்கள் விரும்பினால் லாசப்பலுக்கு வந்து உங்களிடமே அடி, வெட்டுக்குத்து எல்லாம் வாங்குகின்றேன்.. :icon_mrgreen:

அப்போ

யாழில் எங்களது கொடி பறக்கவில்லை என்கிறீர்களா??? :icon_mrgreen:

முந்த நாள் ஒருபதிவில என்னோடை கொஞ்சப்பேர் கொழுத்தாடு பிடிக்க , நான் கடைசீல விசர்பத்தி அந்தப்பதிவில இருந்து விலத்த , ஒரு நாட்டாமை ஐயா ஓடியந்து பஞ்சாயத்து பண்ணினவர் . எப்பிடியெண்டால் , வேறை திரிலை வாற பிரச்சனையளை ஏன் இங்கை காட்டுறியள் . ஒண்டில் திரியை விட்டு ஓடிப்போறது , அல்லது களத்தை விட்டு ஓடிப்போறது , எண்டு பில்டப்பு காட்டுறது எண்டு எனக்கு நல்ல பாடம் எடுத்தவர் . அப்ப நான் ரெண்டு பக்கத்தையும் பொத்திக்கொண்டு இருந்தன் . இப்ப என்னடா எண்டால் , நேற்று நடந்த தையல்மெசின் பிரச்சனைக்கு , சாமம் சாமமாய் முழிச்சு கவிதை எண்ட பேரில ஒரு திரியை விடியக்காத்தால ஆறு அரைக்கு திறந்து இங்கை கும்மியடிக்கினம் . என்ரை கேள்வி என்னண்டால் , எனக்கு பாடம் எடுத்த நாட்டமை இதுக்கு என்ன தீர்ப்பு சொல்லப்போகுது ??????????????? எனக்கும் சனிப்பிடிச்ச கை சும்மா கிடக்குதில்லை . எண்டாலும் நாங்கள் களத்துக்கு பால்குடியள் , எங்கடை சொல்லை ஆர் கேப்பினம்?????????? சில நேரம் ஐயர் *************விட்டால் குற்றமில்லையோ தெரியாது . எங்களுக்கு படினம் சொல்லமுதல் கொஞ்சம் யோசிங்கோ அப்புச்சியள் .

நிழலி அண்ணாவும் பச்சை குத்தினதுக்கு பிறகு எனக்கும் அப்படி தான் இருக்குது விசுகு அண்ணா. :blink:

அஞ்சலி எழுதினது ஒரு விதமான satire மற்றும் sarcasm !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்த நாள் ஒருபதிவில என்னோடை கொஞ்சப்பேர் கொழுத்தாடு பிடிக்க , நான் கடைசீல விசர்பத்தி அந்தப்பதிவில இருந்து விலத்த , ஒரு நாட்டாமை ஐயா ஓடியந்து பஞ்சாயத்து பண்ணினவர் . எப்பிடியெண்டால் , வேறை திரிலை வாற பிரச்சனையளை ஏன் இங்கை காட்டுறியள் . ஒண்டில் திரியை விட்டு ஓடிப்போறது , அல்லது களத்தை விட்டு ஓடிப்போறது , எண்டு பில்டப்பு காட்டுறது எண்டு எனக்கு நல்ல பாடம் எடுத்தவர் . அப்ப நான் ரெண்டு பக்கத்தையும் பொத்திக்கொண்டு இருந்தன் . இப்ப என்னடா எண்டால் , நேற்று நடந்த தையல்மெசின் பிரச்சனைக்கு , சாமம் சாமமாய் முழிச்சு கவிதை எண்ட பேரில ஒரு திரியை விடியக்காத்தால ஆறு அரைக்கு திறந்து இங்கை கும்மியடிக்கினம் . என்ரை கேள்வி என்னண்டால் , எனக்கு பாடம் எடுத்த நாட்டமை இதுக்கு என்ன தீர்ப்பு சொல்லப்போகுது ??????????????? எனக்கும் சனிப்பிடிச்ச கை சும்மா கிடக்குதில்லை . எண்டாலும் நாங்கள் களத்துக்கு பால்குடியள் , எங்கடை சொல்லை ஆர் கேப்பினம்?????????? சில நேரம் ஐயர் *************விட்டால் குற்றமில்லையோ தெரியாது . எங்களுக்கு படினம் சொல்லமுதல் கொஞ்சம் யோசிங்கோ அப்புச்சியள் .

இதை தான் சொல்லுறது செக் வைக்கிறது என்று. :lol:

கோம்ஸ் அண்ணாக்கு ஒரு பச்சை. :)

இது இதுக்குத்தான்.(http://www.yarl.com/forum3/index.php?showtopic=95930)விசுகு கூறியபடி செய்ய முடியாது.காரணம் கிருபன் சொன்னதுபோக,கனடாவில் ரகசிய பொலீசுக்கு ரகசியமாய் தகவல் கொடுக்க,அவன் எங்களை பின் தொடர அதை கண்டுபிடித்து நான் அப்புகாத்து வைத்து வாதாட பொலீசுக்கு சந்தேகம் வலுக்க கடைசியாய் எம் கஜானாதான் காலி.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இவர்கள் எங்களை கேட்டா போராடப் போனார்கள். அல்லது போராட போங்கோ எண்டு நாங்கள் சொல்லி அனுப்பி வைத்தோமா? இப்பொழுது வந்து கால் இல்லை கை இல்லை மிசின் தாருங்கள் எண்டால். புலம்பெயர் தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா? யாழ் களம் என்பது ஒரு பொழுது போக்கு களம் இங்கையும் உதவி உதவி என்று அழுதால் என்ன நியாயம். :(

அஞ்சலிஅக்கா நீங்கள் புதியவர் இல்லை என்பது தெரியும் முன்பும் சில இடங்களில் என்னை நோக்கிய உங்கள் தாக்குதல்களை உணர்ந்திருக்கின்றேன். நேரே உங்கள் சொந்த முகத்தைக் காட்டிக் கொண்டு வந்து என்னோடு பேசுங்கள். நாங்கள் பேசுவோம்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழி நினைவில் வந்து போகுது... அறிவிலியை தம்பிச்சி என்று சொல்லும்போதும் இதே பழமொழி மனதில் வந்து போனது :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.