Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டோறன்ரோவில் ஒரே இரவில் 9 Tim Hortans உணவு நிலையங்களில் வங்கி மெஷின் கொள்ளை:விரைந்து செயற்பட்ட இரகசிய பொலீசாரால் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tim-Hortons-thiftsarrest150.jpg

ரொறன்டோ ஸ்காபுரோ நகரில் இரவிரவாக ஒன்றரை மணி நேரத்திற்குள் 9 Tim Hortans உணவு நிலையத்தில் இரண்டு தமிழ் இளஞர்கள் வங்கி மெஷின்களை கொள்ளையடித்துள்ளனர். இரவிரவாக கிடைத்த தகவலையடுத்து உசாரடைந்த இரகசிய பொலிசார் நகரின் பல Tim Hortons களில் பதுங்கியிருந்து இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறம்ரன் நகரைச் சேர்ந்த பிறைXXX - XXXXXXX - வயது 20, ரொறொன்ரோவைச் சேர்ந்த ஜேய்XXX - XXXXXXX - வயது 20. ஆகியோர் மீது 48 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மார்க்கம் வீதி ,கிங்க்ஸ்ரன் வீதியிலுள்ள Tim Hortans உணவு நிலையத்தில் இவர்கள் கோப்பிக்கு ஓடர் கொடுத்துவிட்டு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்துவது போன்று நடித்து வங்கி மெஷினை காருக்குள் இருந்தவாறே அதன் வயரை வெட்டி விட்டு தப்பியோட முற்பட்ட வேளை பதுங்கியிருந்த இரகசிய பொலிசார் இவர்களை மடக்கிப் பிடித்தனர் .

இதே பாணியிலேயே ஏனைய ஒன்பது வங்கி மெஷின்களையும் கொள்ளையடித்துள்ளனர். இந்த வங்கி மெஷின்களைக் கொள்ளையடித்து அதிலுள்ள இரகசிய தகவல்களைப் பெற்றுகொண்டு வங்கிகளில் பணம் திருடுவதே இவர்களின் நோக்கம். வங்கி அட்டை மோசடியில் இலங்கைத்தமிழர்களே முன்னணி வகிக்கிறார்கள் என்பதை பொலிசாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.co...&language=tamil

கெவின் ஓ லியரி என்பவர் ஒரு பில்லியன் பெறுமதியுள்ள நிறுவனத்தின் அதிபர். கடந்த திங்கள் பத்து முன்னைநாள் குற்றவாளிகளை வைத்து ஒரு வாராந்த தொலைக்காட்சி நிகழ்வை தொடங்கியுள்ளார்.

http://www.cbc.ca/redemptioninc/2012/01/interview-kevin-oleary.html

இதில் அவர்களுக்கு பல தொழில்திறமைகள் கற்பிக்கப்படும். இறுதியில் ஒருவருக்கு ஒரு இலட்சம் டாலர்கள் அவர்கள் விரும்பும் தொழிலை தொடங்க அன்பளிப்பாக தரப்படும். தொழில் சார் அறிவுரையும் கிடைக்கும்.

இதைப்போன்று 'இந்த திறமையானவர்களை' சட்டத்தின் சரியான பக்கத்தில் வைத்திருக்க எமது சமுதாய நலன்விரும்பிகள் திட்டங்களை இளையோருக்கு வழங்கவேண்டும்.

நேற்று இந்த செய்தியை கேட்கும் போதே நினைத்தேன் .எங்கடைகள்தான் என்று.

இங்க 60 இக்கு மேற்பட்ட தமிழர்களை கடந்த 6 மாதத்தில் பிடித்துள்ளார்கள்.

இந்த விசேட "ஒபெரேஷனிற்கு " இங்கிலாந்து, கனடா பொலிசாரின் உதவி அவுஸ்திரேலிய பொலிசாரிற்குக் கிடைத்தது.

ஜஸ்ட் ஒன்பதே ஒன்பது வங்கி மெஷின அறுத்துகிட்டு ஓடியிருக்காங்க,

இதபோய் பெரிய பிரச்சனயாய் எடுத்து ,,பம்மியிருந்து

அவங்கள கைது செய்த கனேடிய போலீஸ நான் வன்மையா,,கண்டிக்கிறேன்!

அந்த தியாகிகளின் ,முழு பெயர்களை தணிக்கை செய்ஞ்சு வெளியிட்டு,

அவர்கள் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய தமிழரசை,,

அதவிட மோசமாய்..கண்டிக்கிறேன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம் கெட்ட வேலை. இதனால் முழுத் தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை, இந்தக் கொள்ளையர்கள் ஏன் சிந்திப்பதில்லை. :huh:

அந்த தியாகிகளின் ,முழு பெயர்களை தணிக்கை செய்ஞ்சு வெளியிட்டு,

அவர்கள் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய தமிழரசை,,

அதவிட மோசமாய்..கண்டிக்கிறேன்! :)

:rolleyes:

தமிழரின் புகழ்(!) எங்கும் பரவுகிறது! :(

  • கருத்துக்கள உறவுகள்

கெவின் ஓ லியரி என்பவர் ஒரு பில்லியன் பெறுமதியுள்ள நிறுவனத்தின் அதிபர். கடந்த திங்கள் பத்து முன்னைநாள் குற்றவாளிகளை வைத்து ஒரு வாராந்த தொலைக்காட்சி நிகழ்வை தொடங்கியுள்ளார்.

http://www.cbc.ca/re...vin-oleary.html

இதில் அவர்களுக்கு பல தொழில்திறமைகள் கற்பிக்கப்படும். இறுதியில் ஒருவருக்கு ஒரு இலட்சம் டாலர்கள் அவர்கள் விரும்பும் தொழிலை தொடங்க அன்பளிப்பாக தரப்படும். தொழில் சார் அறிவுரையும் கிடைக்கும்.

இதைப்போன்று 'இந்த திறமையானவர்களை' சட்டத்தின் சரியான பக்கத்தில் வைத்திருக்க எமது சமுதாய நலன்விரும்பிகள் திட்டங்களை இளையோருக்கு வழங்கவேண்டும்.

பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைத் தேடாமல்.. இளைஞர்களை திட்டித் தீர்ப்பதன் மூலம்.. சுய திருப்தி காணும் மன நோயாளிகளைக் கொண்டதாகவே எமது சமூகம் உள்ளது. சிங்களவன் எப்படி எங்களின் பிரச்சனையை இனங்கண்டு தீர்க்க மனசில்லாத மனநோயாளியாக இருக்கிறானோ.. அதன் மூலம் சிங்களப் பேரினத்தை தக்க வைக்க முனையுறானோ.. அதேபோல்.. நம்மவர்கள் சொந்த இளைஞர்களை திட்டித் தீர்த்து தங்களை மேன்மையானவர்கள் என்பது போல சித்தரிக்க விளைகின்றனர். எமது இளைஞர்கள் சீரழிய இந்த மன நிலையும் ஒரு காரணம். அதை தவிர்த்து.. நீங்கள் சொல்வது போல செயற்படுவதே குற்றச் செயல்களில் எமது தலைமுறையினர்.. எதிர்கால தலைமுறையினர் ஈடுபடுவதை குறைக்கும்..! இதற்கு எத்தனை பேர் எம் சமூகத்தில் தயாராக இருக்கினம்..??????! :)

Edited by nedukkalapoovan

இந்த இரு இளையவர்களுக்கும் வயது இருபது. எனவே இவர்கள் சிறுவர்கள் அல்ல, ஆனால் உலகத்தை முழுமையாக அறியாத பருவம். அந்த வகையில் இவர்களில் இந்த செயலில் பெற்றோருக்கும் சமூகத்திற்கும் பொறுப்பு உள்ளது.

நிச்சயம் பெற்றோர்கள் இவர்களுடன் அதிக நேரத்தை செலுத்த தவறியிருப்பார்கள். பிள்ளைகள் என்ன செய்கின்றனர்? எங்கே போய் வருகின்றனர்? என்பதை தம்மை அறியாமலேயே வேறு விடயங்களில் மூழ்கிப்போயிருப்பார்கள். அதன் விளைவே பிள்ளைகள் இப்படி போனமைக்கு முக்கிய காரணம்.

Edited by akootha

நேற்று இந்த செய்தியை கேட்கும் போதே நினைத்தேன் .எங்கடைகள்தான் என்று.

ஒரு சமூகம் என்ற ரீதியில் அந்த இளையவர்கள், 'நாங்கள் தப்பான வழியில் போகாமல் இருக்க, நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்டால் ? (அவர்களுக்கு அந்த உரிமை உள்ளது என எண்ணுகிறேன்), நாம் என்ன பதில் சொல்ல முடியும்??

பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைத் தேடாமல்.. இளைஞர்களை திட்டித் தீர்ப்பதன் மூலம்.. சுய திருப்தி காணும் மன நோயாளிகளைக் கொண்டதாகவே எமது சமூகம் உள்ளது... நம்மவர்கள் சொந்த இளைஞர்களை திட்டித் தீர்த்து தங்களை மேன்மையானவர்கள் என்பது போல சித்தரிக்க விளைகின்றனர்.

அந்தா...அங்கதான் நிக்கிறான் சந்திரன்...

எனவே அமெரிக்கன் மாதிரி சந்திரனுக்கு செல்ல இல்லை விண்கலத்தை அனுப்ப முயலலாம். இல்லை தொடர்ந்தும் கண்ணாடியில் நிலவை பார்க்கலாம் :D

அந்தா...அங்கதான் நிக்கிறான் சந்திரன்...

புலம்பெயர் நாடுகளிலேயே அதிகூடிய வர்த்தக நிறுவனங்களை கொண்ட நகரம் டொராண்டோ. அவர்களுக்கு வர்த்த சம்மேளனமும் உண்டு. எனவே ஒவ்வொரு வருடமும் கோடைவிடுமுறையின் பொழுது இளையோரை வேலைக்கு அமர்த்தலாம்.

அரசியல் சார் அமைப்புக்கள், அரசியல் வாதிகளின் அலுவலகத்தில் வேலை எடுத்து கொடுக்கலாம்.

கோயில் போன்ற அமைப்புக்கள் முதியோர் இல்லங்களில் வேலை எடுத்து கொடுக்கலாம்.

............

...........

இங்கு பிடிபட்ட இளைஞ்ர்கள் வேறு யாருக்காகவோ தான் வேலை செய்திருப்பார்கள் என்பதுதான் என் எண்ணம்.கிரடிட் காட் மட்டுமல்ல, வேறுபல சமூகவிரோத செயல்கள் திட்டமிட்டு வயதுவந்தவர்களால் நடாத்தப்படுகின்றது ,அதில் பல சிறுவர்கள்,இளைஞ்ர்கள் வரை(ஆண்,பெண்) இரு தரப்பும் பலியாகி போவது தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கின்றது .

இதற்குள்ளும் அரசியலா என கேட்பீர்கள், நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை எங்களுக்கு காசு தந்தால் காணும் என்ற நிலைப்பாட்டில் தான் இங்கிருக்கும் பெரும்பாலான அமைப்புக்கள் ,ஊடகங்கள் இருக்கின்றன.

90 களில் யாழ் இந்து ஆண்டுமலரில் இது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் .நாட்டில் நடக்கும் போராட்டத்தை முன் நிறுத்தி கனடாவில் பிழையான ஒரு அமைப்பை நாம் கட்டியெழுப்புவோமாயின் இங்கிருக்கும் எம் இளைஞ் ர்களின் எதிகாலமும் பாழாய்போய் விடும் என்று .அதுதான் நடந்தது நடக்கின்றது .

மற்றது நெடுக்ஸ் வேறொரு பதிவிலும் மறைமுகமாக தனக்கு தெரிந்ததை செய்திருந்தார் .உங்கள் பிரச்சனையே வேறு .எங்கு வாய்ப்பு வரும் காலைவாரிவிடலாம் என்பதுதான் உங்களுக்கு தெரிந்தது .

இப்போது ஓரளவு மாற்றங்கள் எமது சமூகத்தில் தெரிகின்றது இதுவே நல்லதொருஎதிர்காலதிதிற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன் .

இது அதிகமாக உசுப்பேத்தப்பட்ட கருத்து.

90 களில் யாழ் இந்து ஆண்டுமலரில் இது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் .நாட்டில் நடக்கும் போராட்டத்தை முன் நிறுத்தி கனடாவில் பிழையான ஒரு அமைப்பை நாம் கட்டியெழுப்புவோமாயின் இங்கிருக்கும் எம் இளைஞ் ர்களின் எதிகாலமும் பாழாய்போய் விடும் என்று .அதுதான் நடந்தது நடக்கின்றது .

எம்மவர்கள் 250,000 பேரளவில் வாழும் டொராண்டோ பெரும்பாகத்தில் இருபது வீதம் இளையவர்கள் எனப்பார்த்தாலும் அது அண்ணளவாக 50,000.

அப்படி இருக்கையில் இப்படியான செய்திகள் எத்தனை கேள்விப்படுகின்றோம்? எத்தனை வீத இளையோர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்?

எமக்கு முழுமையான தரவுகள் தெரியாவிட்டாலும், " இங்கிருக்கும் எம் இளைஞ் ர்களின் எதிகாலமும் பாழாய்போய் விடும் என்று" கூறுவது மிகைப்படுத்தும் செயல்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சிலதுகளுக்கு ஒரு பழக்கமுண்டு

நாய் காலைத்தூக்கிற மாதிரி

அது எங்கடையள்தான் என்பது .

அதுவும் புலிகள் தான் என்பதிலிருந்து வந்ததாக இருக்கலாம்?

அதிலும் ஒரு சந்தோசம் எனக்கு

அப்படிப்பார்த்தால் தமிழர் எல்லோரும் புலிகள் என்றாகிறதல்லவா.

வாழ்க தமிழினம், வாழ்க தமிழர்கள்.

எல்லாவற்றயும் முழு உறுதியாக சொல்லமுடியாவிட்டாலும் சில விடயங்கள் குறிப்பில் உணரலாம் .abuse என்று வரும்போது வெள்ளைகளையும் சூட்டு சம்பவம் எனும்போது கறுப்பினதவரையும் கிரடிட்காட்,இன்சூரன்ஸ் சுத்துமாத்து எனும்போது தமிழ் ,சீனர்களும் தான் என புள்ளிவிபரங்கள் கூடுதலாக இருக்கு .

எதையும் வாசித்தால் தானே ,எங்கடைகள் என்றால் ஒழித்து கதைக்க வேண்டும் என்ற படு பிற்போக்கான சிந்தனையில் நாங்கள் இல்லை.

அகூதா ,முழு இளைஞ்ர்களுமென்று நான் சொல்லவில்லை .பல தமிழ் இளை யவர்கள் தாம் தமிழர்களேன்று அடையாளம் சொல்லாமல் போன காலங்களும் உண்டு ,இன்று கூட சீ.ரீ.ஆர் இல் மார்க்கம் கவுன்சில் அங்கத்துவர் லோகன் கணபதி சொல்லியிருந்தார் "எமது இளையவர்களை வன்முறைக்கு பெயர் போனவர்கள் என்று முத்திரை குற்றி அதை இன்றும் எடுக்கமுடியாத நிலையில் இருக்கின்றோம்" என்று.பல வருடங்களாக எமக்கென ஒரு ஒழுங்கான அமைப்பு இருக்கவில்லை என்பதுதான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதை வெளியில் சொல்

கூடாததை அவனிடம் சொல்

கெடுகுடி சொற்கேளாது.

இந்த உலகம் சொன்னதையே கேட்காத ஆட்கள் நாங்கள் சொல்லியா கேட்டபோகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

காலைத்தூக்கி தூக்கி தூக்கியாச்சுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசு

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முன்தினம் அதிகாலையில் வெளியில் அலுவலாக ஒரு வாகனத்தில் செல்லும் போது இந்த நபர்களின் செயல் பற்றி எங்கள் நாட்டை சார்ந்தவரே வெள்ளை இனத்தவரோடு சேர்ந்து கதைச்சு சிரித்ததை கண்டேன்..மிகவும் வெக்கமாக இருந்தது..காரணம் இவர்கள் இப்படி மற்ற இனத்தவர்களோடு சேர்ந்து கதைத்து சிரிச்சு மகிழ்வதற்கு இது ஒன்றும் சந்தோசமான செய்தி இல்லை.இது பத்து பேருக்கு சொல்லும் செய்தியும் இல்லை.அதையும் விட அந்த வெள்ளை இனத்தவர் இவரிடம் இன்று என்ன நடத்து சொல்லும் என்று கேட்கவும் இல்லை..எனக்கு அந்த தமிழ் நபர் வெள்ளை இனத்தவரோடு கதை கொடுத்து இதை எல்லாம் சொல்லி கொண்டு இருக்கும் போது ஒன்று மட்டும் தான் புரிந்தது..முறித்து,முறித்து பேசும் ஆங்கிலத்தை வெள்ளை இனத்தவர்களோடு பேசி சற்று சரி செய்ய நினைக்கிறார்..எல்லா இனத்தவர்களிடத்திலும் இப்படியான குளறுபடிகள் நடக்கிறது தான் ஆனால் எங்கே என்ன நடத்தாலும் உடன் எங்கள் நாட்டை மற்றும் தமிழ்பிள்ளைகளைத் தான் இழுத்து கதைக்க முயற்சிக்கிறார்கள்..நான் இந்தப் பிள்ளைகள் செய்வது சரி என்று சொல்ல வர இல்லை.

எங்கள் வாயாலயே நம்மவர்களின் செயல் பற்றி பறை அடிக்க வேணுமா..ஒரே அடியாக வேலை இன்மையால் தான் இந்த நபர்கள் இப்படி செய்யிறார்கள் என்றும் சொல்லி விட முடியாது..காரணம் பலரும் அறிந்து கொள்ளலாம் கல்லூலிகள்,பல்கலைக்கழகங்கள் விடுமுறை காலம் தொடங்குகிறது என்றாலே விடுமுறையில் வேலை தேடிப்போகும் மாணவர்களுக்கு தான் முன் உரிமை கொடுப்பார்கள்..இதற்குள் ரிம்கொற்றின்ஸ் என்ற நிறுவனமும் மற்றும் மக்டோனல்ட் நிறுவனம்,ரொறன்றோ போக்குவரத்து சபை என்று நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம்..இப்படி எல்லாம் இருக்கையில் கள்ளத் தொழில் வேணுமா..???தயவு செய்து இளைய வயது பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்..உங்கள் பிள்ளைகளில் கைளில் உங்களுக்கு தெரியாமல் பணம் புரள்கிறது என்று அறிந்து கொண்டால் அவர்களை அடிச்சு,குத்தி கேட்காமல்..அன்பான முறையில் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்கள் குழந்தைகளை வளி நடத்தி செல்லுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
:o:mellow:
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சினை இங்கும் இருக்கிறது. கடனட்டை மோசடியில் பல தமிழர்கள் ஈடுபட்டு சிக்குப்பட்டிருக்கிறார்கள். அதிலும் வெட்கக்கேடான விடயம், இவர்களில் ஒருவர் 2009 வன்னிக் கொலைக்களம் அரங்கேறியபோது யுத்த நிறுத்தம் கோரி உண்ணாவிரதமும் இருந்தவர் என்று கேள்விப்பட்டேன். தேசியத்தைச் சாட்டியே இங்கு பலர் தமது சொந்த வயிறு வளர்க்கிறார்கள். சொன்னால் துரோகியென்று முத்திரை வேறு, என்ன செய்வது .....

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எங்கே என்ன நடத்தாலும் உடன் எங்கள் தமிழ்பிள்ளைகளைத் தான் இழுத்து கதைக்க முயற்சிக்கிறார்கள்...

இதுக்கு பெயர்தான் மல்லாந்து கிடந்து துப்புகிறது.

இதுக்கு பெயர்தான் மல்லாந்து கிடந்து துப்புகிறது.

அப்படி செய்யும்பொழுது அவர்கள் மேலேயே அது விழவும் சாத்தியங்கள் உள்ளன :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.