Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணுகுண்டு விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு புரியாத தமிழரின் சோகம் ஆர்ஜென்ரீனாவில் புரியப்பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23.01.12genocidio+srilanka.JPEG

மே 2009 என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு இன அழிவுக்கான அடையாள மாதம் என்றால் மிகையாகாது. இந்திய இராணுவ.. மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் மேலும் 25 நாடுகளின் இராணுவ.. மற்றும் புலனாய்வு உதவிகளுடன் சிறீலங்காச் சிங்களப் பயங்கரவாத பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்தில் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த மாதம் அது.

இந்தப் படுகொலைகளை இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை கண்டித்ததில்லை. ஏன் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து போன இந்திய அழிவியல் விஞ்ஞானி.. அணுகுண்டு விஞ்ஞானி.. அப்துல் கலாம் கூட ஒரு வார்த்தை போரால் உறவுகளை இழந்து நிற்கும் மக்களுக்கு ஆறுதலாகக் கூறவில்லை. போர் இழப்புக்கள் பற்றிய பேச்சையே அவர் பேசவில்லை. மாறாக.. தமிழ் - சிங்கள - ஆங்கில.. மும்மொழி இணைப்பு.. ஐக்கிய சிறீலங்கா... என்று சாத்தான் வேதம் மட்டும் ஓதிச் சென்றுள்ளார்.

ஆனால் தென்னமரிக்க நாடான ஆர்ஜென்ரீனாவில் ஸ்பானிய மொழியில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை பற்றிய கட்டுரை ஒன்று சுமார் 22 மில்லியன் மக்களால் படிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையில் மன்னார் மறைமாவட்ட ஆண்டகை அருட் தந்தை இராஜப்பு ஜோசப் அவர்களால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில் சுமார் 150, 000 தமிழ் மக்கள் 2008 - 2009 காலப்பகுதில் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போகடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன்.. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது மட்டும் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமையும் வெளி உலகிற்கு ஆதாரங்களோடு கொணரப்பட்டுள்ளது.

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி சேவையினரை அடுத்து இந்த அர்ஜென்ரீன ஸ்பானிய மொழி ஊடகமே அதிக அக்கறையுடன் தமிழர்கள் மீதான சிங்கள பேரினவாத இனவெறி அரசின் இனப்படுகொலையை சர்வதேச மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில் உண்மையை திரித்து மக்களுக்கு பொய் முகம் காட்டி போலியாக ஒற்றுமை பற்றி பறைசாற்றிப் புகழ் வளர்க்கும் அப்துல் கலாம் போன்ற சிற்றறிவாளர்களை விட.. உண்மையை உள்ளபடி உலகிற்குச் சொன்ன இந்தப் பத்திரிகைக்கு மனமார்ந்த நன்றிகளை மானுடம் சார்ந்து தெரிவித்துக் கொள்கின்றோம்.

Sri Lanka genocide story draws 22m visitors, says Argentine paper.

[TamilNet, Friday, 27 January 2012, 03:33 GMT]

The Spanish Language Diario La Tarde, an evening journal published by independent journalists in West Argentina said the recent web publication of the story "Genocidio: (Primera entrega) - La masacre de los Tamils en Sri Lanka," [Genocide: (First Delivery) The Slaughter of Tamils in Sri Lanka] drew 22 million visits in two days. The story appearing in Spanish covers history to the conflict, the slaughter at Mu'l'livaaykkaal, and asserts the post-conflict miliary aggression in Tamil areas as a form of structural genocide.

இணைப்பு 1

Genocidio: (Primera entrega) - La masacre de los Tamils en Sri Lanka," [Genocide: (First Delivery) The Slaughter of Tamils in Sri Lanka]

இணைப்பு 2

http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுக்கும் உதவாத... சோத்துப்பார்சல் ஒட்டுக் குழுவை கலாம் நல்லவர்.

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானிகள் 'ஒற்றைபோக்கான' சிந்தனை கொண்டவர்கள்!

எந்த ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானியும், சிறந்த மக்கள் தலைவனாகியதாகச் சரித்திரம் இல்லை!

அப்துல் கலாமும், அதில் ஒருவரே!!!

தமிழர்களில் மூவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்(என எண்ணுகிறேன்). இருவர் இன்றும் உயிருடன் உள்ளார்கள். அவர்கள் உலக சமூகத்திற்கு பிரயோசனமான கண்டுபிடிப்புக்களை தந்தனர், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தனர், இருக்கின்றனர்.

கலாம் அவர்கள் அணு விஞ்ஞானி, பயன் கிந்தியாவுக்கே, உலக சமூகத்திற்கு அல்ல.

இன்றைய கலாம் ஒரு அரசியல்வாதியே. அவரால் புதுடெல்லியில் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடிந்தால், உலகத்தமிழர் மனங்களில் இடப்பிடிப்பார். அது அவரின் கைகளில் மட்டுமே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அணு விஞ்ஞானியான அப்துல் கலாம் ஒரு மனிதனல்ல ஒரு ரோபோ.... அதற்குள் மனிதத்தை எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்த்தனம்....

தமிழர்களில் மூவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்(என எண்ணுகிறேன்). இருவர் இன்றும் உயிருடன் உள்ளார்கள். அவர்கள் உலக சமூகத்திற்கு பிரயோசனமான கண்டுபிடிப்புக்களை தந்தனர், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தனர், இருக்கின்றனர்.

கலாம் அவர்கள் அணு விஞ்ஞானி, பயன் கிந்தியாவுக்கே, உலக சமூகத்திற்கு அல்ல.

இன்றைய கலாம் ஒரு அரசியல்வாதியே. அவரால் புதுடெல்லியில் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடிந்தால், உலகத்தமிழர் மனங்களில் இடப்பிடிப்பார். அது அவரின் கைகளில் மட்டுமே உள்ளது.

நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானிகள் இருவர் ஒன்று சி.வீ.ராமன் மற்றையது வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இவர் மட்டுமே தற்போது உயிருடன் இருப்பவர். மூன்றாவது விஞ்சானி யாரென்று கூற முடியுமா? எனக்கு தெரிந்து நோபல் பரிசு பெறப்போகும் அடுத்த தமிழ் விஞ்ஜானி எமது யாழ் கள நண்பர் நெடுக்ஸ். தமிழ் ஈழத்தின் நோபல் பரிசு பெறப்போகும் ஒரேயொரு தமிழ் ஈழ விஞ்சனியும் நெடுக்ஸ் தான். எமக்கெல்லாம் பெருமை சேர்க்க போகும் நெடுக்ஸ் அண்ணருக்கு எமது யார்ல் களம் சார்பாக வாழ்த்துக்கள்.

கலாம் அணு விஞ்சானி அல்ல. இந்திய அணு பரிசோதனை வேலைத்திட்டத்தின் தலைவர். அவர் அடிப்படையில் ஒரு விமான பொறியியலாளர். ஒரு ரொக்கட் பொறியியலாளராக விஞ்சானியாக தன்னை வளர்த்து கொண்டவர். இந்தியாவின் செய்மதி துறை, ரொக்கட் பொறியியல், அக்னி ஏவுகணை போன்றவற்றின் காரணகர்த்தா, பிதாமகர். பலமுள்ளவன் வாழ்வான் என்ற கோட்பாட்டுக்கு அமைய தனது நாட்டை போரியல் தொழில் நுட்பத்தில் வல்லரசு பாதைக்கு அழைத்து சென்றவர். ஒரு சாதாரண மீனவ குடும்பத்தில் பிறந்து தனது நாட்டின் குடியரசு தலைவராக உயர்ந்தவர். நேர்மை ஒழுக்கம் பரிசுத்தம் உயரிய வாழ்க்கை பண்பு கொண்ட ஒரு நல்ல மனிதர். அவரை பற்றி புரிந்து கொள்ள அவர் எழுதிய அக்னி சிறகுகள் என்ற அவரது சுய சரிதை நூலை படித்து அவரை ஒரு முறையாவது நேரில் சந்தித்து பேசுவது அவர் பற்றிய சரியான புரிதலுக்கு வழி சமைக்கும். அமெரிக்காவின் நாசா விண்வெளிதுறை ஆய்வில் பணிபுரிய பல சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை தவிர்த்து தனது நாட்டிலேயே சுய தொழில்நுட்பத்தை உருவாக்கி அதில் வெற்றி கண்டவர். அவரை கிண்டல் பண்ணுகிற அருகதை புலத்தில் அசைலம் அடித்து வாழும் எமக்கு இல்லை. அவரிடம் கற்றுக்கொள்ள எமக்கு நிறைய விடயங்கள் இருக்கிறது. எமது தமிழ் ஈழ விடுதலைக்கு நாம் செய்ததை விட தனது நாட்டின் விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு மிக பெரியது.

எனது குண்டியை நான் தான் கழுவ வேண்டும். சரியோ தவறோ ஒரு நாட்டின் பிரதமரை போட்டு தள்ளி விட்டு அந்த நாட்டின் குடியரசு தலைவர் தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக அப்துல் கலாம் வந்து எமது குண்டியை கழுவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எமது தவறு. எனது குண்டியை எனக்கு கழுவ முடியாவிட்டால் இந்தியாவுடன் நல்லுறவை பேணியிருக்க வேண்டும். ராஜீவே காந்தியும் இந்தியாவும் எமது நலனுக்கு எதிரானவர்கள் தான். ஆனால் நாம் தான் சாதுரியமாக காய் நகர்த்தியிருக்க வேண்டும். சிங்களவனிடம் இருந்து பாடம் கற்றிருக்க வேண்டும். எமது கையாலாகதனத்துக்கு அப்துல் கலாம் போன்ற ஒரு பரிசுத்தமான மனிதரை கிண்டல் பண்ணுவது மிகவும் கேவலமானது.

அணு விஞ்ஞானியான அப்துல் கலாம் ஒரு மனிதனல்ல ஒரு ரோபோ.... அதற்குள் மனிதத்தை எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்த்தனம்....

அதே ரோபோ தான் நீங்கள் எழுதுவதை விட அற்புதமான கவிதைகளை எழுதியிருக்கிறார்.

எமது மனிதத்தை நாம் தொலைத்து விட்டு ஒரு பரிசுத்தமான மனிதரிடம் மனிதத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

இன்றைய கலாம் ஒரு அரசியல்வாதியே. அவரால் புதுடெல்லியில் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடிந்தால், உலகத்தமிழர் மனங்களில் இடப்பிடிப்பார். அது அவரின் கைகளில் மட்டுமே உள்ளது.

கலாம் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு ரொக்கட் விஞ்ஞானி. ஒரு துறவி போல வாழும் நல்ல மனிதர். அவரால் டெல்லியில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. அதற்கு காங்கிரசையும் சோனியாவையும் வீட்டுக்கு அனுப்பி நரேந்திர மோடி பிரதமாராக வேண்டும். இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போது தான் தலை மறைவான தலைவர் வெளிப்பட்டு எமது விடுதலை சாத்தியமாகும்.

நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானிகள் இருவர் ஒன்று சி.வீ.ராமன் மற்றையது வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இவர் மட்டுமே தற்போது உயிருடன் இருப்பவர். மூன்றாவது விஞ்சானி யாரென்று கூற முடியுமா?

சந்திரசேகர், இராமனின் உறவினர். http://en.wikipedia.org/wiki/Subrahmanyan_Chandrasekhar

இவர் இராஜீவ் காந்தியின் காலத்தில் பத்தாயிரம் டாலர்கள் கேட்டார் தனது ஆராய்ச்சியை தொடர். இராஜீவோ ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைபேசி இணைப்பு ஏற்பட்டுத்தவும் தனது கஜானாவை நிரப்பவும் பணத்தை ஒதுக்குவேன் என்றார்.

இவரோ சென்னையில் உள்ள அமெரிக்க உப தூதுவராலயத்தில் தனது ஆராய்ச்சியை சமர்பிக்க அவர்கள் பல்கலைக்கழக உதவியுடன் விசா கொடுக்க, அவருக்கு ஐந்து ஆண்டுகளில் நோபல் பரிசு கிடைத்தது வரலாறு.

கிந்தியா இன்றும் வளரும் நாடாக இருப்பதற்கு அதன் இராஜீவ் போன்ற தலைவர்களே காரணம்.

Edited by akootha

கலாம் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு ரொக்கட் விஞ்ஞானி. ஒரு துறவி போல வாழும் நல்ல மனிதர். அவரால் டெல்லியில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. அதற்கு காங்கிரசையும் சோனியாவையும் வீட்டுக்கு அனுப்பி நரேந்திர மோடி பிரதமாராக வேண்டும். இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போது தான் தலை மறைவான தலைவர் வெளிப்பட்டு எமது விடுதலை சாத்தியமாகும்.

இவர் சனாதிபதியாக இருந்தவர். அந்த வகையில் இவர் அரசியல்வாதிதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமானிப் பெயரை வைச்சுக் கொண்டு.. சொறித் தமிழன் நிலையில் கருத்தெழுதும் சீமான் அவர்களுக்கு..

இந்தியாவின் பிழைப்புக்கு அணு குண்டும்... அக்னியும் தேவை.. ஆனால் ஈழத்தமிழன் தன் பிழைப்புக்கு ஆயுதம் வைத்திருப்பதை ஏன் இந்திய வல்லாதிக்கம் பயங்கரவாதமாகப் பார்க்கிறது.. காந்திய வாதத்தை ஈழத்தமிழன் மீது திணிக்க நினைக்கிறது.

இந்தியாவின் இருப்புக்கே காந்தியவாதம் உதவாத போது.. கலாம் அதை ஏன் ஈழத்தமிழன் தலையில் கட்டி விட நினைக்கிறார்..???!

இதற்கெல்லாம் தங்களிடமோ.. கலாமிடமோ பதில் இருக்கா..????!

மேலும்.. ராஜீவ் இந்தியர்களுக்கு முன்னாள் பிரதமரே தவிர உலகிற்கோ.. ஈழத்தமிழர்களுக்கோ அல்ல. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு போர்க்குற்றவாளி..! 8,000 தமிழ் மக்களின் உயிரைக் காவு கொண்டு விட்டு டெல்லியில் நிம்மதியாக ஊழல் செய்து கொண்டிருந்தவர்.

எந்தப் பலசாலிக்கும் ஒரு பலவீனம் இருக்கும் என்பதை ராஜீவ் என்ற போர்க்குற்றவாளி உணரவில்லை. அவர் செய்த போர்க்குற்றத்திற்கான தண்டனையை அவர் அனுபவித்துக் கொண்டார். அதற்காக ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து கொலை செய்ய இந்தியாவிற்கு அருகதை கிடையாது. ஹிந்தியர்களுக்கு எல்லைகள் பூராவும் உள்ள பிரச்சனைகளை விட்டுவிட்டு.. ஈழத்தமிழர்களோடு தமிழகத் தமிழர்களோடு சொறிவதே வேலையாகிவிட்டுள்ள நிலையில்.. அவர்களிற்கு அழிவியல் விஞ்சானி.. அப்துல் கலாமின் அறிவுரையும் பாதுகாப்பும் அவசியம். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு நீதியும் விடுதலையும் தான் அவசியம்..!

தெற்காசிய பிராந்தியம் அணு குண்டினதும்.. ஏவுகணைகளினதும்.. பெரும் அச்சுறுத்தல் மத்தியில் இருக்கிறது. சீனாவிடம் அணு குண்டு.. இந்தியாவிடம் அணு குண்டு.. பாகிஸ்தானிடம் அணு குண்டு. எல்லோரிடமும் ஏவுகணைகள். பிரச்சனை அதனை யார் முதலில் வீசுவது என்பதே. ஆனால் சிலர் கனவு காண்கிறார்கள்.. அணு குண்டுகளால்.. யுத்தம் தவிர்க்கப்பட்டிருக்காம் என்று. இந்தியா முதல் அணு குண்டை இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் 1970 களில் பரிசோதித்தது. அதன் பிறகு பாகிஸ்தானோடு.. கார்கிலில் செய்தது என்ன கிளித்தட்டு மறித்தலோ..???!

இந்தியர்கள்.. அணு குண்டையும் அணு உலைகளையும் வைத்துக் கொண்டு பலம் பற்றிய கனவு காண உலகமோ.. அணு குண்டுகளையும்.. அணு உலைகளையும் கைவிட்டு அடுத்த நிலைக்கு நகர முடிவு செய்துள்ளன. இந்தியர்கள் எப்போதுமே பின்னோக்கித்தான் சிந்திப்பார்கள் போல...! அதனால் தான் ஈழத்தமிழர்களின் விடுதலையும் தாமதமாகி.. இன அழிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அப்துல் கலாம்.. ஈழத்தமிழர்களுக்கு வகுப்பெடுக்க முதல்.. இந்தியர்களுக்கு அணு குண்டின்.. அணு உலைகளின் ஆபத்தை விளக்க வேண்டும். அதை அறியாமல்.. அதுவே பலம் என்று கொண்டு கனவில் மிதக்கிறார்கள் இந்தியர்கள். ஏதோ.. இந்திய கிரிக்கெட் அணியை குருட்டுத்தனமாக ஆதரித்து தோல்வியில் தற்கொலை செய்து கொள்வது போல.. அணு குண்டை ஆதரித்து இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக அதற்கே பலியாகவும் போகின்றனர்..! சீனனும்.. பாகிஸ்தான்காரனும் சேர்ந்து அடிக்கும் போது தெரியும்.. அணு குண்டின் தாக்கம். அதன் பின் தான் இவர்கள் உணர்வார்கள்.. அணு குண்டின் தாக்கம் பற்றி.. அதுவரை கனவில் மிதக்க வாழ்த்துக்கள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கலாம் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு ரொக்கட் விஞ்ஞானி. ஒரு துறவி போல வாழும் நல்ல மனிதர். அவரால் டெல்லியில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. அதற்கு காங்கிரசையும் சோனியாவையும் வீட்டுக்கு அனுப்பி நரேந்திர மோடி பிரதமாராக வேண்டும். இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போது தான் தலை மறைவான தலைவர் வெளிப்பட்டு எமது விடுதலை சாத்தியமாகும்.

மோடி பிரதமராகும் வாய்ப்புக் கிடைத்தால் நல்ல திருப்பம் ஏற்படலாம்..!

என்ன சீம்ஸ்.. கண்டு கனகாலம்?? :D

நாணயம் முதல் உலகத்தின் அனைத்து பொருட்களுக்கும் செயல்களுக்கும் இரு பக்கங்கள் உண்டு . இரண்டு பக்கத்தையும் ஏற்றால் தான் ஏற்றம் . இல்லையேல் வராது மாற்றம் .

கெட்ட வார்த்தைதான் எனினும் முதல் முறையாக இங்கே உபயோகிக்கிறேன் . நடந்தவை எதுவானாலும் கழிவுகளை போடறது .நடக்க வேண்டியது மட்டுமே அமிர்தம் போன்றது . அந்த அமிர்தம் கூட உள்ளே சென்றது கழிவுதான் .

கழிவுகளை கிளறி மீண்டும் மீண்டும் தோண்டி நாம் இருக்கும் சமூகத்தை நாற வைப்பதையே குறிக்கோளாக கொண்டு யாரை வேண்டுமானாலும் தூற்றி கொண்டு வாழும் இழி பிறவிகளாய் நம் தமிழினம் மாறுகிறது என்பதற்கு அப்துல் கலாமை இப்போது சிலர் தூற்றுவதே உதாரணம் .

இங்கு எழுதுவதை விட்டுவிட்டு சிங்களனிடமும் மலையாளிகளிடம் போயி அவர்களின் சிறுநீரை குடித்து விட்டு முடிந்தால் அவர்களின் காலை கழுவி அதையும் குடித்து விட்டு இன ஒற்றுமை என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டு பிறகு வந்து தமிழியம் அல்லது தமிழினம் பேசுங்கள் .

அவர்கள் நம் எதிரிகள் .ஆனாலும் அவர்களின் ஒற்றுமைக்கு நான் தலை வணங்குகிறேன் . எதுவாயினும் தன்னினத்தை விட்டு கொடுக்காதவர்கள் அவர்கள் .

நாம் ?????? நம்மினத்தையே தூற்றி தாக்கி ஒதுக்கி வெறுப்பேற்றி எதிரிகள் கூடாரத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி தெரு நாய்களை விட கேவலமாக நடந்து கொண்டு நாம் நம்மினத்தையே வஞ்சித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இனமாம் மானமாம் மண்ணாங்கட்டியாம் .

முதலில் நல்லவன் கெட்டவன் துரோகி அடிவருடி உதவாக்கரை அவன் எவனாயினும் தமிழனை அரவணைத்து உண்மையான் பலமான தமிழினமாய் மாறலாம் .பிறகு நம்மால் முடிந்தால் ஏதாவது புடுங்கலாம் . அதுவரை பிறரை தூற்றுவதை விட்டுவிட்டு ஆக வேண்டுயத்தை பாரும் ஓய்.

மோடி பிரதமராகும் வாய்ப்புக் கிடைத்தால் நல்ல திருப்பம் ஏற்படலாம்..!

என்ன சீம்ஸ்.. கண்டு கனகாலம்?? :D

மோடி பிரதமர் ஆனாலும் இந்தியாவை மதித்தால் தான் ஏதாவது எதிர்பார்க்கலாம் . இல்லையேல் இப்படி யாழ் களத்தில் காலம் பூராவும் என்னைபோல எழுத்தாலேயே அடித்து கொள்வதை எதிர்பார்க்கலாம்

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

மோடி பிரதமர் ஆனாலும் இந்தியாவை மதித்தால் தான் ஏதாவது எதிர்பார்க்கலாம் . இல்லையேல் இப்படி யாழ் களத்தில் காலம் பூராவும் என்னைபோல எழுத்தாலேயே அடித்து கொள்வதை எதிர்பார்க்கலாம்

Beautiful_feet.jpg

பாரத மாதாவை மதிக்கிறேன்..! :D

Beautiful_feet.jpg

பாரத மாதாவை மதிக்கிறேன்..! :D

ஒரு நாளுக்கு அஞ்சு புள்ளி குத்தலாம்னாஹ அதேன் உங்களுக்கும் குத்திட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்துல் கலாம் யாழ் இளைஞர்களின் மனநிலையை நாடி பிடித்துப்பார்க்க வந்தரே ஒழிய மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர் அல்ல. இவர் வந்து யாழில் பேசியது தற்கால மக்களின் மனநிலைக்குப் பொருந்தாதது. மக்களை உங்களுக்கு உன்ன வேண்டித்தந்தால் இப்பிரச்சனையைத்தீர்க்கலாம் என்று கேட்டாரா?

யாழ் மக்கள் வாய்திறந்து எதையும் கதைக்கமுடியாத சுதந்திரமில்லாத சூழ்நிலையில் இருக்கும்போது அவர்களிடம் இருந்து இவர் உணமையான நிலையை நாடிபிடித்துப்பார்க்க முடியாது. இவருடைய கணிப்பால் இந்தியாவிற்கும் இலங்கை;கும் தவறான ஆலோசனைகள் தகன் கிடைக்கும்.

மாணவி ஒருத்தி தான் கேட்ட கேள்வியும்தான் சொன்னதையும் பதிலு செய்துகொண்டாள் என்ற புகழ் பாராட்டும் கலாம். அடக்குமுறையிலும் தங்கள் உறவுகள் கொல்லப்பட்ட ஆறாத்துயரிலும் இருக்கும் மக்களுக்குக் கூறவேண்டிய ஆறுதல் வார்த்தை என்ன என்பதையே இவர் பேசவி;ல்லை. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட்ட பேச்சே இவர் யாழ் மக்கள் மத்தியில் பேசிய பேச்சு. இவர் கடப்பொருள்களை ஆராயத்தான் சரியானவர். மனிதர்களை அல்ல என்பது இந்தியாவிற்குத் தெரியாது,

  • கருத்துக்கள உறவுகள்

கலாம் அவர்கள்

பெரும் அறிவாளி என்பதிலோ

விஞ்ஞானி என்பதிலோ

முன்னாள் ஐனாதிபதி என்பதிலோ

எமக்கு எதுவித குழப்பமோ சந்தேகமோ இல்லை

அவர் இந்தியராக யாழ் வந்து போவதிலும் எதுவித ஆட்சேபனையுமில்லை.

அவர் தமிழர் என்பதாலும் பொறுப்பான பதவிகளில் இருந்தவர் என்பதாலும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமக்கு ஆறுதல் வார்த்தை ஏதும் சொல்லியிருக்கலாம் என்றுதான் அங்கலாய்க்கின்றோம். இப்படிச்செய்யாது வராமல் விட்டிருந்தால் கூட எமக்காக ஏதாவது செய்து கொண்டிருப்பார் என்ற நம்பிக்கையாவது எமக்கு மிஞ்சியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே ரோபோ தான் நீங்கள் எழுதுவதை விட அற்புதமான கவிதைகளை எழுதியிருக்கிறார்.

எமது மனிதத்தை நாம் தொலைத்து விட்டு ஒரு பரிசுத்தமான மனிதரிடம் மனிதத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

சீமான்,

அப்துல்கலாம் என்ற தமிழ்விஞ்ஞானியை இட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டவர்களில் நானும் ஒருத்தி ஆனால் அந்த பெருமையெல்லாம் மானுட நேசிப்பற்ற மனிதராக அவரை உணர்ந்தபோது கரைந்து காணாமல் போய்விட்டது. நீண்டகாலமாக இந்திய ஏகாதிபத்தியத்தின் கனவுகளுக்கு எமது இனத்தின் வாழ்வு இரையாகி வந்திருக்கிறது. விஞ்ஞானி அப்துல்கலாம் யாழில் பலமாணவர்களைச் சந்தித்ததாகவும் அவர்களோடு அளவளாவியதாகவும் ஏதோ அந்தப்பயணத்தின் மூலம் பெரிதாகச் சாதித்ததாகவும் நினைத்தால் அவரைப்போல அரைவேக்காட்டு மனிதர் இருக்க முடியாது. அவர் எந்த மாணவர்களைச் சந்தித்தாரோ அந்த மாணவர்களின் உறவுகள் இந்திய நாட்டின் சுயநலத்தால் மிகக் கோரமாக அழிக்கப்பட்டவர்களாக அல்லது பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஒரு தமிழரைத் தன்னும் இழப்பின்றி பார்க்க முடியாத இடத்திற்குப் போய்விட்டு வந்திருக்கும் விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு அவர்களின் வலியை ஒரு வீதந்தன்னும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. சுற்றிவர இராணுவக் கெடுபிடிக்குள் பேச்சியழந்து மூச்சுக்காற்று ஒன்றிற்காக வாழப்பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாணவ சமூகத்திடம் போய் தன்னம்பிக்கை மிகுந்த கவிதையை ஒப்புவித்து அதனைத் திரும்பச் சொல்லும்படி பாடம் எடுத்தால் மட்டும் அவர்களுக்கு அந்நம்பிக்கை வரும் என்று எங்கள் இனத்தின் மீதான அழிவுகளைத் திணிக்க முன்னணியில் நின்ற ஒரு நாட்டின் முன்னாள் சனாதிபதி, உலகப்பிரபல்யம் மிக்க விஞ்ஞானி முயன்றது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இந்த மனிதனால் தன்னுடைய மானுட நேசிப்பைக் காட்டுவதற்கு நம்மையெல்லாம் விட அதிகமாகச் சாதிக்கும் வலு இருக்கிறது. ஆனால் குருட்டுத்தனமான இந்தியக் கொள்கைகளின்பால் தன்னுடைய தனித்துவம் மிக்க மிகப் பெறுமதியான நிலைப்பாட்டையும் சிறந்த மானுட நேசிப்பையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஊமையாகவும், செயற்பாடின்றியும் கிடக்கிறது அவருடைய ஆளுமைகள்.

பொதுவாக கவிஞர்கள் மிக மென்மையானவர்கள், ஆழ்ந்த மானுட நேசிப்பைக் கொண்டவர்கள், துல்லியமாகப் புறச்சூழலை உணரக்கூடியவர்கள் என்றெல்லாம் எத்தனையோ விடயங்களைத் தன்னகத்தில் கொண்டவர்களாக பெருமையாக நினைத்திருந்தேன். இந்த விஞ்ஞானி விடயத்தில் அத்தனை மானுட நேசிப்பும் அடிபட்டுப் போய்விட்டது. இந்தப் பெரியோனைக் காயவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை ஆனால் எங்கள் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகவும், மிக அவலம் தோய்ந்ததாகவும், கேட்க நாதியற்ற அனாதரவான நிலையாகவும், அன்றாட வாழ்விற்கே இராணுவ அடக்குமுறைகளுக்குள் அவலப்படுவதாகவும் மாற்ற முழுமையான உதவிகள் செய்த இந்திய நாட்டின் பிரதிநிதியாக அந்த குரூரம் நிறைந்த கொடியவர்களின் கைப்பொம்மையாக வலம் வரும் இவ்விஞ்ஞானியை மிகமிக வெறுக்கின்றேன். என் பிரியத்திற்குரிய விஞ்ஞானியை வெறுக்கின்றேன் என்று எழுதும்படி இந்திய நாட்டின் நடைமுறை என்னை மாற்றியிருக்கிறது.

இறங்கமுடியாத மூடுபல்லக்கில் இருக்கிறார் விஞ்ஞானி அப்துல்கலாம் அவரால் இறங்க முடியாது என்பது தெரியும் ஆனால் பேச முடியும் பெரும் மானுட நேசிப்பையும் மானுட எழுச்சியையும் உருவாக்கி மாற்றங்களை உருவாக்க முடியும். தன்னம்பிக்கை பற்றி பாடம் எடுத்த மாணவரிடையே கற்றுத் தேறி ஐக்கிய இலங்கையை முன்னேற்றுவோம் என்று கூறக் கேட்டபோது ஏற்பட்ட மயான அமைதி அந்த மாணவர்கள் பேசாத பலவற்றை விஞ்ஞானி அப்துல் கலாமுக்குச் சொல்லியிருக்கும். அரசியல் கட்டுக்களை அவிழ்த்து விஞ்ஞானியாக, கவிஞனாக, சிறந்த மானுடனாக அப்துல் கலாமை பார்க்க ஆசைப்படுகிறோம் நடக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ பிரதர்ஸ் அதான் முதலில் சொல்லியாகிவிட்டதே சாப்பாட்டுக்கு கஸ்டபடுறார் என்று.. இந்த மாதிரி டிரிப் போனால்தான் ஏதாவது கிடைக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகாறாக்கா

மௌனம் கலைத்ததற்கு...

ஹலோ பிரதர்ஸ் அதான் முதலில் சொல்லியாகிவிட்டதே சாப்பாட்டுக்கு கஸ்டபடுறார் என்று.. இந்த மாதிரி டிரிப் போனால்தான் ஏதாவது கிடைக்கும்...

சனாதிபதியாக இருந்தபடியால் ஓய்வூதியம் கிடைக்கும், வீடும் கிடைக்கும், பாதுகாப்பும் கிடைக்கும், இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

சனாதிபதியா வாழ்ந்த காலத்தில் இதற்கும் அதிகபடியா சுகங்களை அனுபவித்து போட்டார்... விட முடியல அதான் இப்படி பட்ட டிரிப்பு எல்லாம் கேட்குது ..! அவன் குடுக்கிற 15.000 வச்சி இப்ப இருக்கிற நிலமையில் சுகமாக வாழ்ந்தவர் நாக்கை கூட வழிக்க இயலாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா, சரியாய் சொன்னீங்கள்.  இந்தியாவை வல்லரசு என்று காமடி பண்ணுவோரை நினைத்தால்  பாவமா இருக்கிறது.

நேபால், அருணாச்சல் பிரதேஷ், நாகலாந்து  பகுதியில் சீனனின் கை எவ்வளவு ஓங்கி இருக்கிறது என்று தெரியாது.

சொத்தை படை பத்து போரில் ஒம்பதை கோட்டை விட்டது.

புலிகளிடமே வேண்டி கட்டி கொண்டு ஓடினவை.  

குடும்ப ஊழல் அரசியல்வாதி ராஜீவிற்கு நீலி கண்ணீர் வடிப்போர்,  ஏன் இந்திய நேரா படையை இறக்கி பிரதமரை கொன்றவரை எதிர்கவில்லை?

கைப்புள்ள இந்தியாவிற்கு சைக்கில் மிதிப்போருக்கு. அப்துல் காலம் ஒரு கே. ஜி. பி.  முகவர் என்ற இன்னும் தெரியாது.

கலாம் ஒன்றும் கண்டு பிடித்து கிழிக்கவில்லை.  ரசிய தொழில் நுட்பத்தை வைத்து மா அரைப்பவர்.

அசைலம் அடிக்க வைச்சவனுக்கு ஜால்ரா போட அலைகிறார்கள் ஸ்ரீ லங்கன் கூஜாக்கள்.

  

அழிவியல் (அணுகுண்டு) விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு புரியாத தமிழரின் சோகம் ஆர்ஜென்ரீனாவில் புரிந்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழினத்தின் மீது மேற் கொள்ளப்பட்ட இன அழிப்பினை Diario latarde ஊடகமூடாக 2கோடியே 22இலட்சம் தென் அமெரிக்கக் கண்ட மக்களிடம் கொண்டு சென்ற பிரித்தானிய தமிழர் பேரவை

1948ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற் கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பான செய்தியினை Diario latarde ஊடகமானது வெளியிட்டிருந்தது.

இதில் 2008ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு மே 18 வரையான காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் மீதான உச்சக்கட்ட இன அழிப்புக்கள் (Genocide) மேற்கொள்ளப்பட்டிருப்பதையும், அங்கு மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், இப்படுகொலையில் 40,000 பொது மக்கள் (Civilians) கொல்லப்பட்டும் 146,679 மக்கள் காணாமற் போயும் உள்ளனர் என ஆர்ச் பிஷப் ராயப்பு ஜோசப் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழினத்திற்கான நீதி வேண்டி குரல் கொடுத்துவரும் பிரித்தானிய தமிழர் பேரவையானது இச் செய்திக்கான ஆதாரங்களை Diario latarde ஊடகமூடாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பாகம் ஒன்று 24.01.2012 செவ்வாய்க்கிழமை அன்று வெளிவந்தது. இதனை 48 மணித்தியாலங்களில் 2கோடியே 22இலட்சம் மக்கள் பார்வையிட்டிருப்பதாக அவ் ஊடகம் குறிப்பிட்டிருக்கின்றது. இதில் பாகம் இரண்டு வெளியீடு 27.01.2012 அன்று வெள்ளிக்கிழமை வெளிவந்துள்ளது.

இச் செய்தியின் முழுமையான வடிவத்தினைப் பார்வையிட இங்கே அழுத்தவும் :

- Spanish (Original)

La masacre de los Tamils en Sri Lanka

http://www.facebook.com/

-English (Translation)-The slaughter of the Tamils ​​in Sri Lanka Argentine newspaper

பிரித்தானிய தமிழர் பேரவை.

இந்த மின்னஞ்சல் ஊடக உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள்

E-mail: diario_latarde@yahoo.com.ar

http://www.eelamview...1/30/%E0%AE%85/

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்,

உலகப்பிரபல்யம் மிக்க விஞ்ஞானி முயன்றது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

உங்கள் கருத்து முழுவதும் சரி, மேற் காட்டப் பட்டிருப்பதைத் தவிர! கலாம் பெரிதாக உலகப் பிரபல்யம் பெற்றவர் அல்ல. இந்தியாவுக்கு அவர் ஒரு சொத்து-அணுகுண்டு மற்றும் உந்து கணைத் தொழில் நுட்பத்தை மேன் படுத்தியதால்-அவ்வளவே! வெளிநாட்டில் போய்ப் படிக்காமல் உள்நாட்டிலேயே இருந்து கலாம் இதையெல்லாம் செய்தார் என்பதைத் தவிர பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி காதிர் கானும் கலாமும் ஒன்று தான். இந்தியாவுக்கு இவர் பொன் முட்டையிடும் வாத்தாக இருக்க இன்னொரு காரணம் இவர் ஒரு முஸ்லிம். "பார் முஸ்லிம்களுக்கு நாங்கள் சம உரிமை கொடுக்கிறோம்" என்று பறையடிக்க இவரை ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக்கினார்கள். மறுபக்கத்தால் காஷ்மீரிலும் குஜராத்திலும் முஸ்லிம்களைப் போட்டுத் தள்ளினார்கள் இந்தியர்கள். இப்போது "பெண்களை மதிக்கிறோம்" என்று பறையடிக்க அரசியலில் பிரபலமாகாத பிரதீபா பட்டேல் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக இருக்கிறார். ஆனால் பெண் சிசுக் கொலையும் காஷ்மீரிலும் அசாமிலும் இந்திய ஆயுதக் குழுக்களால் விபச்சாரத்திற்காகக் கடத்தப் படும் பெண்களின் தொகையும் குறையவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.