Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

girl2.JPG

"பெட்டையள்" கூட கதைக்கப்படாது..

நேற்றைய ஒரு பெட்டையின்

அன்றைய வேண்டுகோள்..!!!

அது வேறு யாருமல்ல..

அம்மா தான்..!

"கதைச்சால் என்ன"..

பதில் கேள்வி

ஆழ் மனதோடு

தற்கொலை செய்துவிட

பெற்ற தாயை எதிர்த்து

ஒரு கேள்வியா..

மனம் தனக்குத் தானே

பரிசளித்துக் களித்துக் கொள்கிறது.!

"இவன.. போய்ஸ் ஸ்கூலில போடுங்கோ.."

ஏன்...

அப்பதான் ஒழுங்கா வளர்வான்..!

இப்ப என்றால்..

gay என்று சொல்லுவாங்க

என்ற பயம்..

அப்ப என்ற படியால்..

நானும் மகிழ்ச்சியாக அதை ஏற்க..

ஆண்டுகள் 6 அங்கேயே கழிகிறது..!

பள்ளிக்காலம்..

பருவ மங்கைகளின் நினைவின்றி..

பக்குவமாய் கழிகிறது..!

பாடங்களிலும்

தொய்வின்றிய சித்திகள்..

பல்கலைக்கழகம் வரை

காலடி விரைகிறது..

அங்கும்....

"பெட்டையள்" கூட கூட்டம் வேண்டாம்..

ஐவர் நாம் நமக்குள் சபதம்..!

காதல் கீதல் என்று

அலையிறவன்

கூட்டத்தை விட்டு போயிடனும்

இல்ல ஒதுக்கி வைக்கப்படுவான்..!

எழுதாத சட்டங்களும்

எழுதப்படும்

கிசுகிசு சுவரொட்டிகளும்

மனதில் மானப் பிரச்சனையாக..

அழகாய் கடந்து செல்லும்

பருவக் கிளத்திகளையும்

அவங்கள் இல்லா வேளையில்..

கடைக்கண்ணால் பார்ப்பதோடு சரி..!

கண்டுபிடிக்கப்பட்டால்..

கசக்கி

கண்ணீர் வடிய வைச்சு..

தூசி விழுந்ததென்று

சமாளித்த காலங்கள்

பசுமையான நினைவுகளாய்..!

அவள் ஒருத்தி

நீண்ட கூந்தல்..

அழகாய் நெற்றியில்

ஒரு ஸ்ரிக்கர் பொட்டு..

இதெப்படி

வியர்வைக்கும் விழாமல் ஒட்டி நிற்குது..

என்று தொடங்கிய ஆராய்ச்சியில்

நானிருக்க....

ஆய்வு சாலையில் அவள்

கூட வந்து

ஒட்டி உரசி..

என் "சாம்பிளை" ஆட்டையைப் போட

நானும்

ஏதேனும் உள்ளூர

இருக்குமோ என்ற

ஆசையில்...

விட்டுப் பிடிக்க...

கடைசியில்

அவள் பாஸாக..

நான் "பிராக்டிக்கல்"

ரிப்பீட்...!

இன்னொருத்தி..

எதேச்சையா

கன்ரீனில்..

நான் வைத்திருந்த உணவை

அள்ளித் தின்ன..

"அத்தை" சமைச்சது

நல்ல ருசி என்று

தன் பசி அடக்க...

கூட்டத்தில் இருத்தவனோ..

என்னை

முறையாய் முறாய்க்கிறான்..!

"அடேய் அது பகிடிக்கு.."

சமாளிச்சு முடிச்சு

பஸ்ஸில ஏறிறன்

அவன் இன்னொருத்தி கூட

பஸ்ஸில்.. கடலையோடு..!

நானோ..

ரெக்கி எடுத்த களிப்பில்..

அடுத்த நாள்

பத்த வைக்க ரெடியாகிறன்..

அவனோ..

ஆமிப் பயத்துக்கு

ஒரு "சப்போட்"

என்று சொல்லி...

சமாளிச்சு

ஐஸ்கிறீம் கப்புகளால்

நாக்களை இனிவிக்க..

என் ரெக்கி..

வலுவிழந்து போகிறது.

இப்படி எல்லாம்

காத்த புனிதம்..

எம் எஸ் என் னில்

பறிபோகும் என்று

கனவும் கண்டிலன்.

இவளொருத்தி..

இணையத் தளம் ஒன்றில்

அடையாளம் கண்டு

என் புளாக்கில்

புனை பெயரில்

பதில் போட..

நானும் அவளுக்கென்று

காத்திருந்து..

பதில் போட..

இறுதியில்

எம் எஸ் என் ஐடிக்கள் பரிமாறுப்பட..

அதுபோய்..

ஐ லவ் யு வில்

ரோசாப்பூ அனுப்பிறதில்

முடிஞ்சுது..!

அப்புறம் என்ன..

உள்ளூர இனம் புரியா உணர்வோட

இடம் சொல்லி ஊர் சொல்லி

இனம் சொல்லி மொழி சொல்லி

எல்லாம் சொல்லி

இருந்தும்

சிறு மனப் பயத்தில்

சிலது சொல்லாமல் விட்டு

ஏச்சு வாங்கி..

அப்புறம் ஒரு சந்திப்பில்

என்னை அவளுக்குப் பிடிக்க

எனக்கு அவளைப் பிடிக்க..

கை பிடிக்காமலே

நாங்கள்

"புனித" காதல் செய்தம்..!

இது எதுவுமே

"பெட்டையளோட" கதைக்காத

என்ற அந்தப் "பெரிய பெட்டை"க்கு தெரியாது.

ஓர் நாள்

போன் கோல்..

வீட்ட வந்த

வெளிநாட்டுப் பொண்ணுக்கு

உன் போட்டோ பிடிச்சிருக்காம்..

செய்யப் போறியே..

திக்கென்று போனது எனக்கு.

போனில பேசின

அந்தப் "பெரிய பெட்டை"க்கு

தெரியாது..

தன் பெடிக்கு

ஒரு பெட்டை இருக்கென்று..!

எனியும் சொல்லாமல் விடுவது

குற்றம் என்று நான் துணிய

உண்மை வெளிப்பட

மறுமுனை அமைதியானது..!

புயலின்றி அமைதியானதே

பெரிய விடயம்

என்று பட்டது அந்தக் கணத்தில்..!

இப்படி எல்லாம்

சவால்கள் நிறைந்த பாதையில்

நான்..

முன் பின் பயணித்ததே இல்லை..!

இருந்தாலும்

யாரோ எவளுக்காகவோ

முன் பின் அறியாதவளுக்காய்

ரிஸ்க் எடுக்கிறேன்

எங்க போய் முடியுமோ

என்ற பயம்

உள்ளூர ஒரு ஓரத்தில்..!

நான் பயந்தது

நடந்தது..

அன்று அவள்

வழமை போல

வந்தாள்...

ஆனால் முகத்தில்

ஓர் அமைதி

என்னால..

உங்களோட வாழ முடியாது..

காதல் மட்டும் தான் செய்ய முடியும்.

காரணம் ஏதும் இன்றி

உதிர்த்தாள் வார்த்தைகளை..!

இதென்ன

நேற்று வரை இல்லா

புது விதியா இருக்குது..!

வாழ்ந்தே பார்க்க முதல்

வாழ முடியாது..???!

என்ற உரைத்தலின் வியப்பை விட

நான்

பார்த்துப் பார்த்துக் கட்டி வளர்த்த

அந்த அன்புக் கோட்டை

தகர்வது தான் தாங்க முடியாமல் இருந்தது.!

கண்களில் கண்ணீர்

சாரை சாரையாக..

இன்றும் அது வடிகிறது..!

நான்

பெப் 14 எல்லாம் கொண்டாடியதில்லை..

ஆனால்...

முதலும் இறுதியுமாய்

என்னுள் வந்து போனவளை

தினமும் ஒரு கணம் நினைப்பேன்..!

அதுவே என் வாழ்வாகிப் போனது..!

ஆனாலும்..

நான் இன்றும்..

வேறு..

"பெட்டையள்" கூட கதைக்கிறதில்ல..!

ஒருவேளை

அம்மா என்ற

அந்தப் "பெரிய பெட்டை"யின்

வார்த்தைகளோடு

கடைசி வரை

நின்றிருந்தால்..

இன்றைய கண்ணீர்

ஒரு ஆனந்த கண்ணீராகக் கூட

மாறி இருக்கலாம்..!

இது விதியல்ல..

மதியும்.. காலமும்..

செய்த சதி.

அனுபவக் குறைவின்..

விதிப்பு..!

காலத்துக்கும் எனிச் சொல்வேன்..

பெட்டையோ பெடியோ..

நல்லா கதையுங்கோ..

ஆக்களைப் படியுங்கோ

புரியுங்கோ..

காதல் செய்யுங்கோ..

வாழ்க்கையை என்ஜோய் பண்ணுங்கோ..!

ஆனால்..

அவசரப்பட்டு..

ஏமாறாமல்

ஏமாற்றாமல்..

உங்களை நீங்களே

காத்துக் கொள்ளுங்கோ..!

இன்றேல்..

தாய் சொல்லை

தட்டாதேங்கோ..!

(யாவும் கற்பனை என்று சொல்ல மனசில்ல.... இருந்தாலும் எல்லாம் உண்மையும் அல்ல.. கற்பனை நிறைந்தது.. காதலும் கூடவே..!) :):lol:

Edited by nedukkalapoovan

  • Replies 58
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம்

காத்த புனிதம்..

எம் எஸ் என் னில்

பறிபோகும் என்று

கனவும் கண்டிலன்.

அவள் ஒருத்தி..

இணையத் தளம் ஒன்றில்

அடையாளம் கண்டு

என் புளாக்கில்

புனை பெயரில்

பதில் போட..

நானும் அவளுக்கென்று

காத்திருந்து..

பதில் போட..

இறுதியில்

எம் எஸ் என் ஐடி பரிமாறுப்பட..

அதுபோய்..

ஐ லவ் யு வில்

ரோசாப்பூ அனுப்பிறதில்

முடிஞ்சுது..!

அப்புறம் என்ன..

உள்ளூர இனம் புரியா உணர்வோட

இடம் சொல்லி ஊர் சொல்லி

இனம் சொல்லி மொழி சொல்லி

எல்லாம் சொல்லி

இருந்தும்

சிறு மனப் பயத்தில்

சிலது சொல்லாமல் விட்டு

ஏச்சு வாங்கி..

அப்புறம் ஒரு சந்திப்பில்

என்னை அவளுக்குப் பிடிக்க

எனக்கு அவளைப் பிடிக்க..

கை பிடிக்காமலே

நாங்கள்

"புனித" காதல் செய்தம்..!

இது எதுவுமே

"பெட்டையளோட" கதைக்காத

என்ற அந்தப் "பெரிய பெட்டை"க்கு தெரியாது.

ஒரு நாள்

போன் கோல்..

வீட்ட வந்த

வெளிநாட்டுப் பொண்ணுக்கு

உன் போட்டோ பிடிச்சிருக்காம்..

செய்யப் போறியே..

திக்கென்று போனது எனக்கு.

போனில பேசின

அந்தப் "பெரிய பெட்டை"க்கு

தெரியாது..

தன் பெடிக்கு

ஒரு பெட்டை இருக்கென்று..!

எனியும் சொல்லாமல் விடுவது

குற்றம் என்று நான் துணிய

உண்மை வெளிப்பட

மறுமுனை அமைதியானது..!

புயலின்றி அமைதியானதே

பெரிய விடயம்

என்று பட்டது அந்தக் கணத்தில்..!

இப்படி எல்லாம்

சவால்கள் நிறைந்த பாதையில்

நான் முன் பின் பயணித்ததே இல்லை..

இருந்தாலும்

யாரோ எவளுக்காகவோ

முன் பின் அறியாதவளுக்காய்

ரிஸ்க் எடுக்கிறேன்

எங்க போய் முடியுமோ

என்ற பயம்

உள்ளூர ஒரு ஓரத்தில்..!

நான் பயந்தது

நடந்தது..

அன்று அவள்

வழமை போல

வந்தாள்...

ஆனால் முகத்தில்

ஓர் அமைதி

என்னால..

உங்களோட வாழ முடியாது..

காரணம் ஏதும் இன்றி

உதிர்த்தாள் வார்த்தைகளை..

காதல் மட்டும் தான் செய்ய முடியும்.

இதென்ன

நேற்று வரை இல்லா

புது விதியா இருக்குது..!

வாழ்ந்தே பார்க்க முதல்

வாழ முடியாதா..???!

என்ற உரைத்தலின் வியப்பை விட

நான்

பார்த்துப் பார்த்துக் கட்டி வளர்த்த

அந்தக் கோட்டை

தகர்வது தான்  தாங்க முடியாமல் இருந்தது.!

கண்களில் கண்ணீர்

சாரை சாரையாக..

இன்றும் அது வடிகிறது..!

நான்

பெப் 14 எல்லாம் கொண்டாடியதில்லை..

ஆனால்...

முதலும் இறுதியுமாய்

வந்து போனவளை

தினமும் ஒரு கணம் நினைப்பேன்..!

அதுவே என் வாழ்வாகிப் போனது..!

ஆனாலும்..

நான் இன்றும்..

வேறு..

"பெட்டையள்" கூட கதைக்கிறதில்ல..!

ஒருவேளை

அம்மா என்ற

அந்தப் "பெரிய பெட்டை"யின்

வார்த்தைகளோடு

கடைசி வரை

நின்றிருந்தால்..

இன்றைய கண்ணீர்

ஒரு ஆனந்த கண்ணீராகக் கூட

மாறி இருக்கலாம்..!

இது விதியல்ல..

மதியுமும்.. காலமும்..

செய்த சதி.

அனுபவக் குறைவின்..

விதிப்பு..!

காலத்துக்கும் எனிச் சொல்வேன்..

பெட்டையோ பெடியோ..

நல்லா கதையுங்கோ..

ஆக்களைப் படியுங்கோ

புரியுங்கோ..

காதல் செய்யுங்கோ..

வாழ்க்கையை என்ஜோய் பண்ணுங்கோ..!

ஆனால்..

அவசரப்பட்டு..

ஏமாறாமல்

ஏமாற்றாமல்..

உங்களை நீங்களே

காத்துக் கொள்ளுங்கோ

இன்றேல்..

தாய் சொல்லை

தட்டாதேங்கோ..!

(யாவும் கற்பனை என்று சொல்ல மனிசில்ல....  இருந்தாலும் எல்லாம் உண்மையும் அல்ல.. கற்பனை நிறைந்தது.. காதலும் கூடவே..!) :):lol:

:(

நெடுக்ஸ் கொஞ்சம் அலேட்டா இருந்திருக்கலாம்....இல்ல இணையத் தளத்துக்காவது வராமல் இருந்திருக்கலாம்....வந்து...விழுந்து...கவலைப்பட்டு...எங்களையும் கண்கலங்க வைச்சு... :( என்னத்தைச் சொல்ல...விதி யாரை விட்டது... :( சரி உங்கள் அனுபவம் எங்களுக்காவது எதிர்காலத்தில் உதவட்டும்... :D

:(

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை சூப்பர் நெடுக்கண்ணா, இதைத்தான் உங்கட இருந்து கன காலமா எதிர் பார்த்தனான். இப்பிடி அநியாயத்துக்கு நல்லவரா இருக்காம ஒண்டு போனா இன்னொண்டு எண்டு சொல்லி போய்கிட்டே இருங்க. எனக்கு ஒரு சின்ன டவுட்டு "அவுங்க" தான் "குருவிகள்" ஆ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் பேசுகின்றதா அல்லது உள்ளுணர்வு எச்சரிக்கின்றதா என்று புரியவில்லை!

ஆனாலும் நெடுக்கர் ' தங்கக்கம்பி ' என்று தெரியும்!

தொடருங்கள், உங்கள் படைப்புக்களை!!!>>> :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு பகிர்வுக்கு, கவலைப்படாதே நண்பா, நம்ம பறவை முனியம்மா இருக்கா.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:(

நெடுக்ஸ் கொஞ்சம் அலேட்டா இருந்திருக்கலாம்....இல்ல இணையத் தளத்துக்காவது வராமல் இருந்திருக்கலாம்....வந்து...விழுந்து...கவலைப்பட்டு...எங்களையும் கண்கலங்க வைச்சு... :( என்னத்தைச் சொல்ல...விதி யாரை விட்டது... :( சரி உங்கள் அனுபவம் எங்களுக்காவது எதிர்காலத்தில் உதவட்டும்... :D

:(

இதை விட அலேட்டா எப்படி இருக்கிறது...??! :lol: அது இயல்பை இழந்திடச் செய்யும் அல்லவா...??! இதுக்கு நிறைய அனுபவம் மட்டுமே தீர்வாக முடியும். அல்லது எதையும் தாங்கும் இதயம் வேண்டும்..!

நல்ல பாடல். பகிர்விற்கு நன்றி..! :)

கவிதை சூப்பர் நெடுக்கண்ணா, இதைத்தான் உங்கட இருந்து கன காலமா எதிர் பார்த்தனான். இப்பிடி அநியாயத்துக்கு நல்லவரா இருக்காம ஒண்டு போனா இன்னொண்டு எண்டு சொல்லி போய்கிட்டே இருங்க. எனக்கு ஒரு சின்ன டவுட்டு "அவுங்க" தான் "குருவிகள்" ஆ? :rolleyes:

கவிதையை மட்டும்... சும்மான்னாலு சூப்பருன்னு... சொல்லுங்க.. சும்மா ஏற்கலாம். பாவம்.. குருவிகளை எல்லாம் குறை சொல்லப்படாது.. அப்புறம் அந்தப் பாவம் நம்மள பாதிக்கும்..! :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் பேசுகின்றதா அல்லது உள்ளுணர்வு எச்சரிக்கின்றதா என்று புரியவில்லை!

ஆனாலும் நெடுக்கர் ' தங்கக்கம்பி ' என்று தெரியும்!

தொடருங்கள், உங்கள் படைப்புக்களை!!!>>> :D

சும்மா சும்மா... ஒரு அப்பாவி அம்மா பிள்ளையின் கவிதாயணம்.. தான் இது.....! :lol:

இதில ஒன்னும் இரட்டை அர்த்தம் இல்லையே..! :):rolleyes:

நன்றி நெடுக்கு பகிர்வுக்கு, கவலைப்படாதே நண்பா, நம்ம பறவை முனியம்மா இருக்கா.. :D

நன்றி.. தேற்றம் சா.. தேற்றத் தெரிந்த நண்பர்..! :D

அதுக்காக பாவம்.. பாட்டி முனியம்மாவை.... அவங்க கிராமத்துச் சமையலோட பிசியா இருக்காங்க.. விடுங்க..! வயசான நேரத்தில.. நிம்மதியாவும் சாக விட மாட்டிங்களோ..! :lol:

நல்லதொரு அனுபவக் கவிதை.

புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆரம்பத்திலே விலகிச் சென்றது நல்லது. இணைத்திருந்தால் வாழ்க்கையே நரகமாகி இருக்கலாம். சில கேட்ட விசயங்கள் நடப்பது நமது எதிர்கால நன்மைக்கே. ஏமாற்றங்களையும் சோகங்களையும் சுமந்து கொண்டு திரியக் கூடாது. வாழ்வில் வசந்தம் மீண்டும் வரும்

.

நெடுக்ஸ்..

சின்னன்ல விளையாட்டுச் சாமான் ஏதும் உடைஞ்சா அல்லது பழுதாப் போனா கவலப் படுவதில்லையா ?

அது போல் தான் இதுவும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவக் கவிதை.

புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆரம்பத்திலே விலகிச் சென்றது நல்லது. இணைத்திருந்தால் வாழ்க்கையே நரகமாகி இருக்கலாம். சில கேட்ட விசயங்கள் நடப்பது நமது எதிர்கால நன்மைக்கே. ஏமாற்றங்களையும் சோகங்களையும் சுமந்து கொண்டு திரியக் கூடாது. வாழ்வில் வசந்தம் மீண்டும் வரும்.

இப்படித்தான் தேற்ற வேண்டிய நிலையில்.. ஆனால்.. இவளைக் காண முதல்.. களங்கப்படாதிருந்த அந்த மனசை திரும்பப் பெற முடியல்லையே என்ற கவலை அவனுக்கு நிரந்தரமானது தானே. :):icon_idea:

.

நெடுக்ஸ்..

சின்னன்ல விளையாட்டுச் சாமான் ஏதும் உடைஞ்சா அல்லது பழுதாப் போனா கவலப் படுவதில்லையா ?

அது போல் தான் இதுவும். :)

இப்ப விளையாட்டுச் சாமானை விட காதல் மலிஞ்சு போச்சு. :lol: அதனால சேதாரம் ஆகும் உள்ளங்களும் அதிகமாப் போச்சு. சேதாரம் ஆக்கிறவங்களும் பெருகிப் போனாங்க..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வாழ்வில் காதல்வரும். அது ஒரு உணர்வு .சில நல்ல நிலத்து விதைபோல் செழித்து வளரும்.சில முட்புதருக்குள் விதை போல் முள் பற்றைகளால் நசுங்கி விடும் சில தெருவோரம விதைத்த விதைகள் போல கால்களால் நசுக்க படும் ......."அவள் .".அழகான சோகம் சொல்லி செல்லும்பதிவு ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாஸ், :rolleyes:

இதுக்கு தான் சொல்லுறது அட் த சேம் டைம் நிறைய பிகர்ஸ பார்க்கணும்னு...

ஒரு பஸ் போனால் அடுத்த பஸ் ல ஏறிக்கலாம் இப்படி பீல் பண்ணத்தேவையில்லை பாஸ்??? :lol: :lol:

எனிவே.. கவிதை சூப்பர்.. ஆள் தான் முன்னேற இடமுண்டு :D :D

நெடுக்ஸ்...!

உண்மையைச் சொல்லப்போனால்... நெருப்பென்று தெரிந்தும் எரிந்து விழும் விட்டில் பூச்சிகளைப்போல காதலோடு முட்டிமோதும் ஆண்களின் வாழ்க்கைகளும் மாறிப்போகின்றன.

ஆனால்... காதல் என்றுமே காதலாய்த்தான் இருக்கின்றது.

காதலர்கள்தான் மாறிவிடுகின்றார்கள்!

காதலை கடைசிவரை நேசிக்கும் ஆண்களும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்!

காதலைக் காதலித்தால்... அதுவும் உங்களைக் காதலிக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை என்று எல்லாம் எழுதி செல்ல மனம் இடம் தர இல்லை.ஒரு மனதின் சோகம் மட்டுமே இளையோடுவது போல் தான் இருக்கிறது.பெப்றவரி 14 நல்ல இதயங்களை கொன்றவர்கள் கொண்டாடும் திருநாள்.வேறை என்னத்தை சொல்வது.....

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தான் பார்த்தேன்

தம்பியின் கவிதைக்கு எழுதாவிட்டால் நல்லாயிருக்காது.

அழகான ஆனால் ஆழமான இடி

ஆனால் தம்பியின் கவிதை இப்படித்தான் இருக்கும் என்ற பட்டறிவு ஏற்கனவே இருப்பதாலோ என்னவோ பெரிதாக சுணைக்கவில்லை.

ஆறும் அது ஆழமில்லை

அது சேரும் கடலும் ஆழமில்லை

ஆழமெது ஐயா

இந்த பொம்பிளை மனசு தானய்யா ....என்று பாடுவது எமது காலம் என்று பார்த்தால்

இதுக்கு காலம் வயது ததலைமுறை இடவெளி இல்லைப்போலுள்ளது.

ஆனாலும்உன்னையும் தள்ளிட்டுப்போக ஒருத்தி பிறந்திருப்பா. வாழ்க்கை வாழ்வதற்கே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வாழ்வில் காதல் வரும். அது ஒரு உணர்வு. சில நல்ல நிலத்து விதை போல் செழித்து வளரும்.சில முட்புதருக்குள் விதை போல் முள் பற்றைகளால் நசுங்கி விடும் சில தெருவோரம் விதைத்த விதைகள் போல கால்களால் நசுக்க படும் ......."அவள் .".அழகான சோகம் சொல்லி செல்லும் பதிவு ..

சோகம்.. சுகமானது.. அதைச் சுகம் என்று எண்ணும் மனதில் மட்டுமே. சோகம் சுமையானது அதை சுமை என்று எண்ணும் மனதில் மட்டுமே. அதுவே கோபத்திற்கும் கொலைவெறிக்கும் காரணமாவதும் உண்டு..! இயற்கையின் விதிப்போ.. பிறப்பின் இயல்போ.. அவன் மன்னிக்கத் தெரிந்தவனாக இருந்துவிட்டால்.. "அவள்" உம் வாழ்கிறாள்... அவனும் ஜீவிக்கிறான்..! :):icon_idea:

பாஸ், :rolleyes:

இதுக்கு தான் சொல்லுறது அட் த சேம் டைம் நிறைய பிகர்ஸ பார்க்கணும்னு...

ஒரு பஸ் போனால் அடுத்த பஸ் ல ஏறிக்கலாம் இப்படி பீல் பண்ணத்தேவையில்லை பாஸ்??? :lol: :lol:

எனிவே.. கவிதை சூப்பர்.. ஆள் தான் முன்னேற இடமுண்டு :D :D

ஒரு பஸ்ஸ விட்டா அடுத்த பஸ் வரும்... அங்க நேர அட்டவணைப்படி பஸ்ஸ ஓட்டாட்டி.. சம்பளமும்.. போய்.. வேலையும் போயிடும்..! ஆனால்.. இங்க.. ஒன்றை விட்டு ஒன்று பிடிக்க எல்லா மனங்களாலும் முடியாது..! அது விட்டு விட்டு பிடிக்கும் மனங்களுக்கு மட்டுமே சகஜமான இயல்பு..! மற்றவர்களுக்கு.. அதுவே பீலிங்ஸ்..! பாவம் அவர் என்ன செய்வார்.. அவர் பிறப்பின் இயல்பு அதுவாகிப் போனது அவர் குற்றமா..??! :):icon_idea:

146306453_9f81b43dd1.jpg

சாறி.. நீங்க இந்தப் பதிவையே பார்த்திருக்கக் கூடாது. பார்த்திருந்தாலும்.. இதைப் போட்டிருக்கக் கூடாது. ஏன்னா.. நீங்க தான்.. கண்ண மூடிட்டீங்களே..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்...!

உண்மையைச் சொல்லப்போனால்... நெருப்பென்று தெரிந்தும் எரிந்து விழும் விட்டில் பூச்சிகளைப்போல காதலோடு முட்டிமோதும் ஆண்களின் வாழ்க்கைகளும் மாறிப்போகின்றன.

ஆனால்... காதல் என்றுமே காதலாய்த்தான் இருக்கின்றது.

காதலர்கள்தான் மாறிவிடுகின்றார்கள்!

காதலை கடைசிவரை நேசிக்கும் ஆண்களும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்!

காதலைக் காதலித்தால்... அதுவும் உங்களைக் காதலிக்கும்!

காதல் யாரையும் ஏமாற்றியதாகவோ.. கைவிட்டதாகவோ.. கொலை செய்ததாகவோ வரலாறில்லை. மனிதர்கள் தான் காதலையும் உச்சரிக்கிறார்கள்.. அது சார்ந்த அக்கிரமங்களையும் செய்கிறார்கள்..! ஏனெனில் காதல் என்பதற்கு உருவமும் இல்லை.. அடையாளமும் இல்லை. அப்படியான ஒன்றை வைத்து மனிதர்கள் போடும் கண்ணாமூஞ்சி ஆட்டத்தில்.. வெல்வோரும் உண்டு.. வீழ்வோரும் உண்டு..! :):icon_idea:

உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்!

வாழ்க்கை என்பது சிரிப்பையும், கண்ணீரையும், நினைவுகளையும் கொண்டது. சிரிப்பு சில நாட்களில் மங்கிப் போகும், கண்ணீரும் சில நாட்களில் காய்ந்து போகும், ஆனால் கடைசி வரை எம்முடன் தொடர்வது நினைவுகள் மட்டுமே... ஒவ்வொரு அனுபவங்களும், நினைவுகளும் வாழ்கையின் பாடத்தைக் கற்றுத்தந்து செல்கின்றன. அந்தப் பெண் உங்களோடு சேர்ந்து வாழ முடியாமல் இருப்பதற்குரிய காரணம் நியாயமானதாக இருந்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வது பெரும்தன்மையே! வீண் ஆசையைக் காட்டி மனதைச் சஞ்சலப் படுத்தும் நோக்கத்தோடு மட்டும் பழகிய பின்பு விட்டுப் பிரிந்திருந்தால் அதற்குரிய பலாபலன்களையும் காலம் சம்பந்தப்பட்டவருக்குப் புகட்டும்...

களங்கப் படாத மனதைத்திரும்பப் பெற முடியவில்லையே என்று கவலைப்படுவதை தள்ளி வையுங்கள்.. இந்தப் பிரபஞ்சத்தில், காதல் உணர்வே வராமல், அல்லது வந்த முதல் காதலே இன்று வரை வாழ்க்கைத் துணையாக உள்ளது, அதனால் வேறு ஒருத்தரையும் ஏறெடுத்துப் பார்ப்பதே இல்லை, அல்லது மனத்தால் கூட நினைத்ததே இல்லை என்று யாரும் சொல்லமாட்டார்கள். அப்படிச் சொல்பவர்கள் தங்களைத் தாமே ஏமாற்றுபவர்களாகத் தான் இருப்பார்கள்.

காதலை உண்மையில் உணர்ந்து கொண்டவர்களுக்கு காதலின் பிரிவும் ஒரு சுகமான சுமைதான் வாழ்க்கை முழுதும்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை என்று எல்லாம் எழுதி செல்ல மனம் இடம் தர இல்லை.ஒரு மனதின் சோகம் மட்டுமே இளையோடுவது போல் தான் இருக்கிறது.பெப்றவரி 14 நல்ல இதயங்களை கொன்றவர்கள் கொண்டாடும் திருநாள்.வேறை என்னத்தை சொல்வது.....

காதலிக்கிறதுக்கு நாள் வைக்கிற வியாபாரப் புத்தி நிறைந்த மனித சமூகம்.. காதலின் பெயரால் மனிதர்களால் வதைக்கப்பட்டு.. வேதனைப்படும் உள்ளங்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் வைப்பதில்லை..! அதுவும் பெப் 14 இல் அமைவதே சிறப்பு..! அந்த வகையில்.. இந்தக் கவி.. அதைச் செய்யட்டும்..! நன்றி தங்கையே.. தங்கள் வரவிற்கும்.. பதிலிற்கும்..! :)

தற்போது தான் பார்த்தேன்

தம்பியின் கவிதைக்கு எழுதாவிட்டால் நல்லாயிருக்காது.

அழகான ஆனால் ஆழமான இடி

ஆனால் தம்பியின் கவிதை இப்படித்தான் இருக்கும் என்ற பட்டறிவு ஏற்கனவே இருப்பதாலோ என்னவோ பெரிதாக சுணைக்கவில்லை.

ஆறும் அது ஆழமில்லை

அது சேரும் கடலும் ஆழமில்லை

ஆழமெது ஐயா

இந்த பொம்பிளை மனசு தானய்யா ....என்று பாடுவது எமது காலம் என்று பார்த்தால்

இதுக்கு காலம் வயது ததலைமுறை இடவெளி இல்லைப்போலுள்ளது.

ஆனாலும்உன்னையும் தள்ளிட்டுப்போக ஒருத்தி பிறந்திருப்பா. வாழ்க்கை வாழ்வதற்கே.

500,000 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த மனிதனுக்கும் கிள்ளினால் வலிக்கும்.. நேற்றுப் பிறந்த குழந்தைக்கும் கிள்ளினால் வலிக்கும்..!ஆக.. இயற்கையின் உணர்வுகளுக்கு தலைமுறை இடைவெளி கிடையா..! மனித இயற்றுகைகளுக்குள் தான் பல இடைவெளிகள் உண்டு..!

இவை அதையும் தாண்டியவை..! சிலர் இயல்பாக எடுப்பதை சிலர்.. சிரமமாக கொள்வர். அது அவரவர் பிறப்பின்.. வளர்ப்பின்.. வாழும் இயல்பிலும் உண்டல்லவா. அதை தலைமுறை இடைவெளி என்ற மாயப்பதத்தால் மூடி மறைப்பது அழகல்ல. மனித உணர்வுகளும் வேதனைகளும் சரியாக கணிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டால் அன்றி.. மன அழுத்தங்களும்.. ஏமாற்றுக்காரர்களும்.. ஏமாறுபவர்களும்.. இந்த உலகில் அதிகரிக்கவே செய்வர்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்!

வாழ்க்கை என்பது சிரிப்பையும், கண்ணீரையும், நினைவுகளையும் கொண்டது. சிரிப்பு சில நாட்களில் மங்கிப் போகும், கண்ணீரும் சில நாட்களில் காய்ந்து போகும், ஆனால் கடைசி வரை எம்முடன் தொடர்வது நினைவுகள் மட்டுமே... ஒவ்வொரு அனுபவங்களும், நினைவுகளும் வாழ்கையின் பாடத்தைக் கற்றுத்தந்து செல்கின்றன. அந்தப் பெண் உங்களோடு சேர்ந்து வாழ முடியாமல் இருப்பதற்குரிய காரணம் நியாயமானதாக இருந்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வது பெரும்தன்மையே! வீண் ஆசையைக் காட்டி மனதைச் சஞ்சலப் படுத்தும் நோக்கத்தோடு மட்டும் பழகிய பின்பு விட்டுப் பிரிந்திருந்தால் அதற்குரிய பலாபலன்களையும் காலம் சம்பந்தப்பட்டவருக்குப் புகட்டும்...

களங்கப் படாத மனதைத்திரும்பப் பெற முடியவில்லையே என்று கவலைப்படுவதை தள்ளி வையுங்கள்.. இந்தப் பிரபஞ்சத்தில், காதல் உணர்வே வராமல், அல்லது வந்த முதல் காதலே இன்று வரை வாழ்க்கைத் துணையாக உள்ளது, அதனால் வேறு ஒருத்தரையும் ஏறெடுத்துப் பார்ப்பதே இல்லை, அல்லது மனத்தால் கூட நினைத்ததே இல்லை என்று யாரும் சொல்லமாட்டார்கள். அப்படிச் சொல்பவர்கள் தங்களைத் தாமே ஏமாற்றுபவர்களாகத் தான் இருப்பார்கள்.

காதலை உண்மையில் உணர்ந்து கொண்டவர்களுக்கு காதலின் பிரிவும் ஒரு சுகமான சுமைதான் வாழ்க்கை முழுதும்!!

நன்றி குட்டி. உங்கள் கருத்து அத்தனையும் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது. இருப்பினும்...

எமக்குள் அடுத்தவர் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கள் போல.. அடுத்தவருக்கும் எம்மீது நாம் அறியாத குற்றச்சாட்டுக்கள் இருக்கக் கூடும். அதையும் நாம் அறியப் பிரியப்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில்.. அதை வெளிப்படையாகக் கூறிச் செல்வதே.. அழகும்.. அறிவும் ஆகும். அதைவிடுத்து.. மாயை உலகில் சஞ்சரிக்கவிட்டு.. மனங்களை வருத்திச் செல்வது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல தானே..!

நிச்சயமாக.. கடலில் பயணம் போக படகேறியவனுக்கு தெரிய வேண்டும்.. படகு நடுக்கடலில் கவிழவும்.. கவிழ்க்கப்படவும் கூடும்.. கரை சேரவும் கூடும் என்று..!

நிச்சயமாக.. என்னைப் பொறுத்தவரை.. ஒன்றே காதல்.. ஒருத்தியே/தனே கதி.. என்று கிடப்பதில் அர்த்தம் இருப்பதாக யாருக்கும் சொல்லமாட்டேன். அதை காலமும் நேரமும்.. மற்றவர்கள் எம்மீது காட்டும் நிஜமான அன்பிலும்.. அரவணைப்பிலும்.. அக்கறையிலும் தான் தீர்மானிக்க முடியும்..!

அவை இல்லை எனும் போது.. காதலாவது.. கீதலாவது. எல்லாம் வெறும் வேசம்..! அவர்கள் வேடதாரிகள் மட்டுமே..! ஆனால்.. அவர்களையும் நாம் நினைவு கூற வேண்டும்.. இனங்காட்ட வேண்டும். காரணம்.. நாளை வேடதாரிகள் முன்.. களங்கப்பட்டு நிற்கும் அப்பாவி மனித உள்ளங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டின்..! அதன் பால் பிறந்ததே.. இந்த ஆக்கம்..! :):icon_idea:

நிச்சயமாக இல்லை! 'சம்பந்தப்பட்டவருக்கு' என்று நான் குறிப்பிட்டது அந்தப் பெண்ணையே அன்றி உங்களை இல்லை!! மனதில், உணர்வில் ஏற்படும் வலி ஒன்று தான், இதில் ஆண் பெண் என்ற பாகுபாடே இல்லை!

நிச்சயமாக.. கடலில் பயணம் போக படகேறியவனுக்கு தெரிய வேண்டும்.. படகு நடுக்கடலில் கவிழவும்.. கவிழ்க்கப்படவும் கூடும்.. கரை சேரவும் கூடும் என்று..!

நிச்சயமாக.. என்னைப் பொறுத்தவரை.. ஒன்றே காதல்.. ஒருத்தியே/தனே கதி.. என்று கிடப்பதில் அர்த்தம் இருப்பதாக யாருக்கும் சொல்லமாட்டேன். அதை காலமும் நேரமும்.. மற்றவர்கள் எம்மீது காட்டும் நிஜமான அன்பிலும்.. அரவணைப்பிலும்.. அக்கறையிலும் தான் தீர்மானிக்க முடியும்..!

கண்டிப்பாக ஒரு காலம் வரும்!

அவை இல்லை எனும் போது.. காதலாவது.. கீதலாவது. எல்லாம் வெறும் வேசம்..! அவர்கள் வேடதாரிகள் மட்டுமே..! ஆனால்.. அவர்களையும் நாம் நினைவு கூற வேண்டும்.. இனங்காட்ட வேண்டும். காரணம்.. நாளை வேடதாரிகள் முன்.. களங்கப்பட்டு நிற்கும் அப்பாவி மனித உள்ளங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டின்..! அதன் பால் பிறந்ததே.. இந்த ஆக்கம்..! :):icon_idea:

அடையாளம் காட்டுவது இளையோருக்கு நல்லது தான் இருப்பினும், நெருப்பு சுடும் என்று பெரியவர்கள் (தொட்டுப் பார்த்து சூடு வாங்கியவர்கள்) சொல்லும் பொது அது எமக்குப் புரிந்தாலும், நாம் தொட்டுப் பார்ப்பதில்லையா? அதே தான் அனுபவங்களும்... அவரவர் அனுபவங்களை அவரவர் அனுபவத்தின் மூலம் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். அநேகரின் வாழ்வில் ஒரு வேடதாரி/ வேடாதாரன் குறுக்கிடாமல் இல்லை!!

Edited by குட்டி

அட எங்கட நெடுக்காலபோவானுக்கும் காதல் வந்திருக்கு.... அட அதையெல்லாம் துக்கிப்போட்டுட்டு சீக்கிரம் கலியாணத்தைக்கட்டுங்கோ... உங்களுக்கெண்டு எங்கையோ ஒருத்தி பிறந்து தானே இருப்பாள்.....

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் திண்ணை இல்லாத காலங்கள் அது ஸ்கைப்பும் வரவில்லை யாழ் உறவுகள் எம்.எஸ்.என்னில் தனியாகவும் கூட்டாகவும் கடைலை போட்ட கனாக்காலம் அது. அன்றை யாழ் உறவுகளில் நட்பாகி காதலாகி திருமணம் வரை சில காதல் சென்றது பலகாதல் கைகாட்டிவிட்டு போனது. அதில் ஒன்று உங்களுடையது நெடுக்கு. அனால் அவை அனுபவங்கள். சுகமாக சுமையாககூட இருக்கலாம். அனால் சுமை அழுத்தாமல் இருக்கும்வரை சுகமானதே

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட எங்கட நெடுக்காலபோவானுக்கும் காதல் வந்திருக்கு.... அட அதையெல்லாம் துக்கிப்போட்டுட்டு சீக்கிரம் கலியாணத்தைக்கட்டுங்கோ... உங்களுக்கெண்டு எங்கையோ ஒருத்தி பிறந்து தானே இருப்பாள்.....

நானே பயந்து பயந்து தான் எழுதிறன். இது நெடுக்காலபோவனின் காதல் கதை என்று ஆகக் கூடாது என்று. நீங்க என்னடான்னா..!

எங்கட ஆக்கள் வென்றாலும் திட்டுவினம்.. தோற்றாலும் திட்டுவினம்..! இருந்தாலும்...

நாங்க மற்றவர்கள் மீது வைக்கும் அன்பு.. காதலாகின்ற போது.. அதை அவ்வளவு இலகுவில் தூக்கி எறிய முடியாது..! சில சமயங்களில்.. எதிர்பார்த்த அன்பு கிடைக்கல்லையே.. பிரிவு இருக்கே என்ற கவலைகள்.. கோபமாக உருவெடுத்தாலும்.. வெறுப்பை உமிழத் தூண்டினாலும்.. கடந்த கால அன்பின் நினைவலைகள்.. அவ்வளவு சீக்கிரம் நாம் உணர அன்பைக் காட்டியவரை அவ்வளவு எளிதாக தூக்கி எறியச் செய்யாது..! மற்றவர்களுக்கு அப்படிச் சொல்ல எளிதாக இருந்தாலும்.. அன்பை உணர்ந்தவற்கு அது முடியாது. எறியவும் தோன்றாது.. மாறாக பாதுகாக்கவே தூண்டும்.

இதயத்தின் ஒரு ஓரமாக அவருக்கு என்றான அந்த அனுதாபமும்.. அன்பும் பொதிந்தே இருக்கும்..! அவர் என்ன தான்.. கடும் போக்கோடு நம்மோடு நடந்து கொண்டாலும்.. அது இருக்கும்..!

நமக்கு இந்தச் சூழலில்.. சரியென்று படுவது நாளை.. முழு தவறாகக் கூட அடுத்தவரின் சூழ்நிலை எமக்குத் தெரிய வரும் போது.. உணரப்படின்.... அது நாம் உமிழ்ந்த ஒவ்வொரு வெறுப்பையும் குற்ற உணர்வாகி.. நம்மையே தீயாக்கி தாக்கும் என்பதையும் உணர்ந்தே எழுத வேண்டிய பொறுப்பு நமக்குண்டு..! அந்தளவிற்கு அன்பிற்கு வலிமை உண்டு..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.