Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது ஆய்வு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானத்தில் எனது முதலாவது முதுமாணிப் பட்டம் பெற ஒரு சுயாதீன ஆய்வுசாலை ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்தது.

அந்த வகையில் உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology) மற்றும் உயிரியல் மரபணு பொறியியல் (Genetic engineering) சார்ந்த ஆய்வறிக்கைக்கான ஆய்வு பற்றி இங்கு சுருக்கமாக எழுதலாம் என்றிருக்கிறேன்.

ஆய்வின் நோக்கம்: பங்கசு உயிரியில் இருந்து மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் மனித உடலுக்கு அவசியமான கொழுப்பமிலத்தை - எமது உடலுக்கு இதனை உற்பத்தி செய்யத் தெரியாது.. (Essential fattyacids;Omega-3 fatty acids (Alpha-linolenic acid), Omega-6 fatty acids (linoleic acid)) வியாபார நோக்கில் இலாபமடைய உற்பத்தி செய்தல்.

ஆய்வுக்குப் பயன்படுத்திய உயிரி: சாதிப் பெயர்:Aspergillus இனப்பெயர்: nidulans

nidulans1.gif

ஆய்வு முறை: தரை வாழ் பங்கசுவில் இருந்து மரபணு அகற்றல் மற்றும் சேர்த்தல் (Gene deletion and insertion) மற்றும் உருவாக்கப்பட்ட பங்கசுகளை சரியான வளர்ப்பூடகங்களில் வளர்த்தல்.

எனது முக்கிய பணி: NADPH (reduced-proton carrier) - malic enzyme என்ற நொதியம் சார்ந்த ஜீனை தரை வாழ் பங்கசு (wild strain) அங்கியில் அழித்து ஒரு பங்கசுவையும்.. புரோலின் என்ற அமினோஅமிலத்தை அதிகம் பாவிக்கக் கூடிய ஜீனை செருகி உருவாக்கப்படும் இரண்டாவது மரபணு மாற்று பங்கசுவையும் (transgenic strains) கொண்டு.. அவற்றிற்கு சரியான வளர்ப்பூடகங்களைக் கண்டறிந்து வளர்த்து இலாபமீட்டக் கூடிய வகையில் எது.. எந்த வளர்ப்பூடகத்தில் அவசிய கொழுப்பமிலங்களை உற்பத்தி செய்கிறது என்பதை கண்டறிதல்..!

பங்கசு வளர்க்கப் பாவிக்கப்பட்ட பிரதான உபகரணம்: Fed-Batch bioreactor

32220.png

பாவிக்கப்பட்ட பிரதான பகுப்பாய்வு உபகரணங்கள்: Gas-chromatography,spectrometer,French pressure cell press,centrifuge,electrophoresis equipment,PCR machine மேலும் பல இதர இரசாயன பகுப்பாய்வு பொறிகளும்.. உபகரணங்களும்.

gas-chromatography-system%5B1%5D.jpga

4224.jpg

frenchpress.jpg

220px-Tabletop_centrifuge.jpg

bt500.jpg

DSC03122.JPG

ஆய்வின் பின்புல உயிர் இரசாயன மூலக்கூற்றுப் பொறிமுறை:

8883n25_16.jpg

Fig-1.-Smith-FAS-reactions.gif

8883n20_24.jpg

பிரதான காபன் வழங்கிகள்: குளுக்கோசு (Glucose) மற்றும் புரோலின் (Proline) என்ற இனிப்புச் சுவை உடைய அமினோஅமிலம்.

பங்கசுவை வளர்க்கும் இதர முறை வளர்ப்பி: Incubator for shake-culture

3510000_1.jpg

கிருமி நீக்கி உபகரணங்கள்: autoclave

auto-LaboratoryAutoclavesSemiAutomaticSeries74499542.jpg

ஆய்வு முடிவு: மலிக் நொந்தியம் நிரோதிக்கச் செய்யும் ஜீனைக் கொண்ட பங்கசு குறைந்த கொழுப்பமிலத்தை உற்பத்தி செய்தமை அதுவும் குளுக்கோஸ் காபன் ஊட்டத்தின் போது குறைந்த நைதரசன் வழங்கல் இருந்த வேளையில்..!

Conclusion:

This study is demonstrating that malic enzyme activity is playing important role in the accumulation of storage lipid in Aspergillus nidulans, which is one of the oleaginous fungus, and the hypothetical level correlation between malic enzyme and NADPH in storage lipid accumulation in Aspergillus nidulans is advanced that only malic enzyme can provide the NADPH, which is essential for fatty acids biosynthesis in storage lipid production, and is important to the process of lipid accumulation. If the activity of malic enzyme is prevented either by inhibition or mutation (in the case of malic enzyme structural gene deletion in strain (H17), then lipid accumulation is limited in Aspergillus nidulans (H17). It has been shown by only half amount of lipid accumulation in cell dry weight of H17 than that of BI1. (from my research report - edited from ecopy.)

எதிர்கொண்ட பிரச்சனைகள்: பிரதான மற்றும் உதவி மேற்பார்வையாளர்களின் echo பிரச்சனையில் என்னையும் இழுத்துவிட்டு அவர்களின் தனிப்பட்ட தேவைகளை எல்லாம் ஆய்வின் இடையில் புகுத்தி எனக்கு அதிக தலையிடியை தந்ததோடு.. Lab-Diary ஐ தினமும் சோதனை செய்யாமல் விட்டிட்டு இறுதியில் அதை ஆய்வு முடிய கையளித்த போதும் எழுந்த சில பிரச்சனைகளை சமாளிக்க மேற்போர்வையாளரோடு வீண் சிரமங்களை சந்திக்க வேண்டி வந்தது. இதில் பிரதான மேற்பார்வையாளராக ஒரு பேராசிரியர் ஆணும்.. உதவி மேற்பார்வையாளராக கலாநிதி பெண்ணும்.. மூன்றாம் வெளி மேற்பார்வையாளராக இன்னொரு பல்கலைக்கழக பேராசிரியரும் இருந்தனர்.

மேலும் ஆய்வுசாலை தொழில்நுட்பவியலாளர்கள் நல்ல உதவி செய்தார்கள். ஒரு சிலர் சின்னச் சின்ன தவறுகளையும் மேற்பார்வையாளரிடம் அண்டி வைக்க தவறவில்லை.

ஆய்வறிக்கை: 8000 - 10000 சொற்கள். வழங்கப்பட்ட காலம் 30 நாட்கள்.

எனது இடர்: சரியான நேர முகாமைத்துவம் இன்மை என்னை பேரிடரில் தள்ளியது. எனவே எப்போதும்.. ஆய்வு செய்யத் தொடங்கியதுமே ஆய்வறிக்கைக்கான முகவுரையை எழுதத் தொடங்குவது நல்லது. அது நேர விரயத்தை மீதப்படுத்தி நல்ல ஆய்வறிக்கையை எழுத வாய்ப்பாக அமையும்.

அதுமட்டுமன்றி.. ஆய்வறிக்கையை எழுத எழுத மேற்பார்வையாளரின் பார்வைக்கு கொண்டு சென்று அறிவுரைகளை பெற்றுக் கொள்வது நல்லது. அது மேற்பார்வையாளர்களின் தன்மையில் தங்கியுள்ளது. மேலும் ஆய்வறிக்கை முடிவு வரை மேற்பார்வையாளரோடு நல்ல தொடர்பினை பேண வேண்டும். ஆய்வு குறித்து அதன் முன்னேற்றம் குறித்து தினமும் கலந்துரையாடுவது நன்று.

நான் இதில் கவனம் செலுத்திய போதும்.. ஆய்வுக் கனதி அதற்கு அதிகம் இடமளிக்கவில்லை. சில வாரங்களில் தினமும் காலை 9 தொடங்கி மாலை 6 மணி வரை தொழிற்பட வேண்டி இருந்ததால்.. மேற்பார்வையாளரோடு தினமும் உரையாட முடியவில்லை.

ஆங்கிலத்தில் எழுத்துப் பிழை இருக்கக் கூடாது. வசன ஓட்டம் சரியாக அமைவது அவசியம். அதுவும் மேலைநாடுகளின் ஓட்ட முறைக்கு அமைய வேண்டும். இன்றேல் மேற்பார்வையாளரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அதிகம் அலட்ட இருக்கக் கூடாது.

இறுதி செயற்பாடு: அரங்கில் 20 நிமிட powerpoint presentation.

சாத்தியமான இடர்களில் இருந்து வெளிவரல்: இதன் போது.. எளிமையான ஒரு 10 சிலேட்டுக்கள் (slides) போதும். அதிக சிலேட்டுக்கள் நேரத்தை காவு கொள்வதோடு.. நீங்கள் கூற வரும் விடயத்தை முழுமைப்படுத்த முடியாது செய்துவிடும். முக்கிய படங்கள்.. முக்கிய தரவுகள்.. மட்டும் விவாதிக்கப்படுதல் நன்று. அதிக விடயங்களை சிலேட்டுக்களுக்குள் புகுத்தல் தவறு. மேலும்.. பிறசென்ரேசனுக்கு முதல்.. சில நாட்களுக்கு முன்னரே.. எல்லாவற்றையும் பூர்த்தி செய்துவிட்டு சிலேட்டுக்களை வீட்டில் ஓட விட்டு பயிற்சி எடுத்தும் கொள்ளுங்கள். இவை இடர்களை மனப் பயத்தை குறைக்க உதவும்.

புள்ளி வழங்கல் விபரம்: 90% ஆய்வுக்கு 10% பிரசென்ரேசனுக்கு.

முடிவு: எதிர்பார்த்ததை விட நல்லா வரல்ல. ஆனால் திருப்தி.

இடம்: இங்கிலாந்தில்... ஒரு பல்கலைக்கழகம்.

=======================================

இப்படி உங்கள் ஆய்வு அனுபவங்களையும் எங்களோடு பகிர்ந்து கொண்டால்.. தொழில்நுட்ப.. அறிவியல் சார்ந்த அனுபவங்களை பெறுவதோடு.. எதிர்கொள்ளும்.. கொள்ளக் கூடிய பிரச்சனைகளில் இருந்து முன்கூட்டியே விடபட முடியும். உங்கள் ஆய்வும் கூடிய மதிப்பெண்களைப் பெற அமைந்து நிற்கும்..!

நன்றி.

Edited by nedukkalapoovan

  • Replies 105
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ........மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் அண்ணா...இன்னும் நிறைய நீங்கள் சாதிக்க வேணும்..எனக்கும் இப்படி எல்லாம் நிறைய செய்ய வேணும் விருப்பம் தான்...குறிப்பாக மருத்துறையில் முன்னேறவேண்டும்.ஆனால் என் விருப்பம் ஒரு குறிப்பிட்ட மருத்துவம் சம்பந்தமான படிப்போடு முடிக்க வேண்டியதாக போய்ட்டு.:)

உங்கள் ஆய்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெடுக்காலபோவான். தொடர்ந்து உங்கள் பல்கலைக் கழக கல்வி வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துகிறேன்.

நேக்கு எதுமே புரியல உங்க ஆய்வு பற்றி but வாழ்த்துக்கள்...

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்கள் ஆய்வு, எதிர்பார்த்தபடி நன்றாக வரவில்லை என்றாலும்... உங்களுக்கு திருப்தியாக இருந்தது,

அடுத்த ஆய்வுக்கு, வலு சேர்க்கும்.

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

மற்றவர்களும் உயிரியல் சம்மந்தமான ஆய்வுகள் இருந்தால் பதிவு செய்யுங்கள் உபயோகமாக இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாக்கத்தை முன் வந்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி. இதனை எழுதவும் சரியான படங்களை தேடி எடுத்துப் போடவுமே நிறைய நேரங்கள் செலவாகிட்டுது. இருந்தாலும்.. யாழுக்காக.. அது அர்ப்பணிக்கப்படுகிறது. :):icon_idea:

நேக்கு எதுமே புரியல உங்க ஆய்வு பற்றி but வாழ்த்துக்கள்...

அதாலதான் அதிகம் technical லா எழுதல்ல. ஒரு ஆய்வு எப்படியா செய்யப்படும்.. எப்படி செய்தால் நல்லம்.. வரும் முக்கிய இடர்கள் என்ன.. என்பது போன்ற அடிப்படைகளை அறிய இவ்வாக்கம் உதவும் என்ற வகையிலும் அது பெற்றோரா.. மாணவர்களா உள்ளவைக்கு ஒரு ஆய்வுகூட ஆய்வு குறித்த அடிப்படை தகவலை வழங்கலாம் என்ற வகையிலுமே இதனை பதிவுசெய்துள்ளேன். :)

நெடுக்ஸ் உங்கள் ஆய்வு, எதிர்பார்த்தபடி நன்றாக வரவில்லை என்றாலும்... உங்களுக்கு திருப்தியாக இருந்தது,

அடுத்த ஆய்வுக்கு, வலு சேர்க்கும்.

நிச்சயமா. அதுக்கான இன்னொரு மீட்டலாகக் கூட இந்த ஆக்கம் எனக்கு அமைந்தது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

வாழ்த்துக்கள் நெடுக்ஸ். அடுத்தமுறை எதிர்பார்த்ததை விட நன்றாக செய்வீர்கள்.

இவ்வளவு வேலைக்குள்ளும் இங்கேயும் கருத்துக்களை, இந்த ஆக்கத்தை பகிரும் நீங்கள் உண்மையிலேயே ஒரு களப்பற்று நிறைந்தவரே.

வாழ்க்கையில் பலர் முன்னால் ஒரு விடயத்தை பகிரும்பொழுது என்னிடம் உள்ள ஒரு சில அனுபவங்கள்:

- கணனி ஊடாக திரையில் வரும் சொற்களை பார்த்து வாசிக்கக்கூடாது

- கேள்விகள் இறுதியில் என முதலே கூறிவிடல் வேண்டும்

- பேசும்பொழுது தன்னம்பிக்கையாக பேசவேண்டும்

பாராட்டுக்கள் அத்துடன் இன்னும் பல ஆய்வுகள் செய்து சாதனையாளராக வரவும் வாழ்த்துக்கள் நெடுக்கண்ணா...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ். அடுத்தமுறை எதிர்பார்த்ததை விட நன்றாக செய்வீர்கள்.

இவ்வளவு வேலைக்குள்ளும் இங்கேயும் கருத்துக்களை, இந்த ஆக்கத்தை பகிரும் நீங்கள் உண்மையிலேயே ஒரு களப்பற்று நிறைந்தவரே.

இது சில ஆண்டுகளுக்கு முன்னால் செய்த ஆய்வு. மீட்டல் செய்தேன். இதன் பின்னரும் பிறிதொரு படிப்பை.. ஆய்வை செய்திருக்கிறேன். அது மருத்துவம் சார்ந்தது... அதுவும் வெற்றிகரமா முடிஞ்சுது. இப்போது.. MBA க்கான ஆய்வையே செய்கிறேன். அது வீட்டில் இருந்து செய்யுற ஆய்வு தானே..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள்

படிப்பிற்கு வாழ்த்துகள்

இன்னும் பல சா(சோ)தனைகளைத் தாண்டுங்கள் நெடுக்ஸ்

இது சில ஆண்டுகளுக்கு முன்னால் செய்த ஆய்வு. மீட்டல் செய்தேன். இதன் பின்னரும் பிறிதொரு படிப்பை.. ஆய்வை செய்திருக்கிறேன். அது மருத்துவம் சார்ந்தது... அதுவும் வெற்றிகரமா முடிஞ்சுது. இப்போது.. MBA க்கான ஆய்வையே செய்கிறேன். அது வீட்டில் இருந்து செய்யுற ஆய்வு தானே..! :):lol:

இங்கே கனடாவில் பொதுவாக மருத்துவம் முடித்து (பத்து ஆண்டுகளுக்கு மேலாக படித்து) பின்னர் முகாமைத்துவம் படிப்பவர்கள் பொதுவாக வைத்தியசாலைகளின்

நிறைவேற்று அதிகாரியாக (CEO)கடமையாற்றுவார்கள்.

நீங்களும் அவ்வாறே வர வாழ்த்துகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கனடாவில் பொதுவாக மருத்துவம் முடித்து (பத்து ஆண்டுகளுக்கு மேலாக படித்து) பின்னர் முகாமைத்துவம் படிப்பவர்கள் பொதுவாக வைத்தியசாலைகளின்

நிறைவேற்று அதிகாரியாக (CEO)கடமையாற்றுவார்கள்.

நீங்களும் அவ்வாறே வர வாழ்த்துகிறேன்.

ஆகா.. நம்ம இலக்கை கண்டுபிடிச்சிட்டீங்களே..! CEO.. நோக்கிய இலக்கே இப்போது பயணத்தில் தெரிகிறது. நான் எனது professional body (Institute of Biomedical science) காட்டித் தந்ததற்கு அமைய படிக்கிறேன் (ஒன்றைக் கவனிக்கனும் எம்மவர்கள் யாரும் எனக்கு அப்போ இந்த வழிகாட்டலைச் செய்யல்ல. மாறாக.. ஏப்பா உனக்கு எனியும் படிப்பு என்று கேட்டவர்கள் தான் உண்டு. நீங்கள் அதிலிருந்து விலகி இருக்கிறீர்கள்... நன்றி.). வெறும் எம் பி ஏ மட்டும் அதைச் சாத்தியப்படுத்த முடியாது. நல்ல ஆளுமைப் பண்பும் தலைமைத்துவப் பண்பும் அவசியம் என்பதை உணர முடிகிறது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில் ஒன்றும் புரியலையப்பா

ஆனா சிலிக்குது

ஏனென்றால் சான்றோன் எனக்கேட்ட தாயின் நிலை எனது.

தொடர்க

தமிழன் உயரணும்

உச்சத்துக்கு வரணும்

உலகை உலுக்கணும்

தாயகம் மலரணும்

நாமெல்லாம் ஆடிப்பாடி மகிழணும்.

நான் இந்தப் பாடத்தை தெரிவு செய்து படிக்கும் போது ஒருநாள் என்னோடு மிகப் பழகிய வெள்ளை இன ஆய்வுசாலை உதவியாளர் (பெண்மணி) (அவருக்கு நம்மவர்கள் பற்றி எல்லாம் தெரியாது.) கேட்டார்.. நீ.. தமிழ் புலியா என்று. திடீர் என்று அவர் கேட்டதும் எனக்குள் பல எண்ணங்களே ஓடியது. அவருக்கு நான் எந்த நாடு என்று தெரியும். ஆனால் இன்ன இனம் என்று தெரியாது.

இப்போது இந்தப் பாடத்துறையில் ஆராய்ச்சிக் கல்வி கற்க வெளிநாட்டவர்கள் விசேட கிளியரன்ஸ் பெற வேண்டும். காரணம்.. இதன் பின்னால் உள்ள உலகிற்கே ஆபத்தான அறிவும் தான்..!

இருந்தாலும் பெற்ற கல்வியை ஆக்கத்திற்கே பாவிப்பது என்பது தான் எம் இலட்சியம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

எனது நண்பர் ஒருவர் Flax Seed என்ற தானியவகையை உணவில் சேர்ப்பார்.

flax_seed.JPG

அவர் தனது வீட்டிலே பாணை செய்வார், அதாவது இரவு இயந்திரத்திற்குள் சகல கலவையையும் போட்டு விட்டு நேரத்தையும் அதற்கேற்ப இயங்க செய்துவிட்டு துயிலச்சென்று விடுவார்.

flax-bread-1.jpg

காலையில் எழும்பும்பொழுது மணம் கம கம என இருக்கும்.

கேள்வி உங்களிடம் என்னவென்றால் இந்த தானியம் (Omega 3 fatty acid) ஆரோக்கியமானதா? எந்த வகையில்?

Edited by akootha

எங்கள் நாடு மற்றும் அங்கு நிலவும் பிரச்சனைகள் பற்றி அனேகமாக துவேசம் காட்டும் வெள்ளையர்களுக்கு தெரிந்து கொண்டால் இப்படித் தான் எந்தப் பெரிய பதவியில் இருந்தாலும் தள்ளி விழுத்துவார்கள்..நானும் இப்படித் தான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துமனை ஒன்றில் ஒரு தொகுதிக்கு பொறுப்பான பதவி ஏற்கும் தருணத்தில் ஒரு வெள்ளை இன பெண்மணியால் அனாவசிய குற்றங்கள் கண்டு பிடிக்கபட்டு அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டடேன்..

ஆம் flax seeds தூவி பாண் செய்வது மேற்கு நாடுகளில் பரவலாக உள்ள ஒரு வழக்கமே. அதில் alpha- 3 polyunsaturated Omega-3 18:3n-3 என்ற உடலுக்கு அவசியமான Omega 3 fatty acid என்ற பொதுவாக அறியப்பட்ட கொழுப்பமிலம் உண்டு. அது நீண்ட கால நோய்களான இதய நோய் மற்றும்.. மூட்டுளைவு (arthritis) மற்றும் மூளையின் வளர்ச்சி..தொழிற்பாடு.. ஞாபக சக்திக்கு என்று மிக அவசியம்..! storke வருவதை குறைக்கும். அதுமட்டுமன்றி கொலஸ்ரோலின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்..!

மீன் எண்ணெய் வகைகளிலும் இந்த நன்மை உண்டு..! :):icon_idea:

யாவற்றையும் தாண்டி நாம் முன்னுக்கு வரவேண்டும். எமக்கு நாமே உதவவேண்டும்.

எனது மனைவியும் இங்குள்ள வைத்தியசாலையில் கல்வி கற்கின்றா, இப்பொழுது பெலொசிப் (Fellowship) செய்யத்தொடங்கியுள்ளா. பல நூறு சவால்கள். நான் விடுங்கோ என்றாலும் அவ விடுவதாக இல்லை :D

மேற்கு நாடுகளில் துவேசம் எல்லா மட்டத்திலும் உண்டு. எனது மேற்பார்வையாளர் கூட துவேசமானவர் தான். அவர்களோடு நெருங்கிப் பழகினால் தான் அது தெரியும். ஆனால் சிலர் நல்லவர்கள்..! :)

ஆம் flax seeds தூவி பாண் செய்வது மேற்கு நாடுகளில் பரவலாக உள்ள ஒரு வழக்கமே. அதில் alpha- 3 polyunsaturated Omega-3 18:3n-3 என்ற உடலுக்கு அவசியமான Omega 3 fatty acid என்ற பொதுவாக அறியப்பட்ட கொழுப்பமிலம் உண்டு. அது நீண்ட கால நோய்களான இதய நோய் மற்றும்.. மூட்டுளைவு (arthritis) மற்றும் மூளையின் வளர்ச்சி..தொழிற்பாடு.. ஞாபக சக்திக்கு என்று மிக அவசியம்..! storke வருவதை குறைக்கும். அதுமட்டுமன்றி கொலஸ்ரோலின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்..!

மீன் எண்ணெய் வகைகளிலும் இந்த நன்மை உண்டு..! :):icon_idea:

நன்றி உங்கள் பகிர்வுக்கு. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறான பாணை

உண்பது நன்று.

இப்படியான பாணை ஏனோ எமது வெதுப்பகங்களில் காண்பதில்லை, நாமும் கேட்பதில்லை, 'ரோஸ்' பாணைத்தவிர :lol:

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாவற்றையும் தாண்டி நாம் முன்னுக்கு வரவேண்டும். எமக்கு நாமே உதவவேண்டும்.

எனது மனைவியும் இங்குள்ள வைத்தியசாலையில் கல்வி கற்கின்றா, இப்பொழுது பெலொசிப் (Fellowship) செய்யத்தொடங்கியுள்ளா. பல நூறு சவால்கள். நான் விடுங்கோ என்றாலும் அவ விடுவதாக இல்லை :D

உங்கள் மனைவி சவால்களை வென்று இலட்சியத்தில் வெற்றியடைய வாழ்த்துக்கள்..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் பகிர்வுக்கு. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறான பாணை

உண்பது நன்று.

இப்படியான பாணை ஏனோ எமது வெதுப்பகங்களில் காண்பதில்லை, நாமும் கேட்பதில்லை, 'ரோஸ்' பாணைத்தவிர :lol:

நாற்பது வயது என்று காத்திருக்கத் தேவையில்லை. எம்மவர்கள் பலர் விடும் தவறே இதுதான். நாற்பது.. ஐம்பது என்று சொல்லி தங்களை தாங்களே சாந்தப்படுத்திக் கொள்கின்றனர்.

இன்று இளையவர்களில்.. 16.. 17 வயதில் மூட்டுளைவால் பாதிக்கப்பட்டு வருபவர்களைப் பார்க்கிறோம். இதயத்தாக்குள்ள 20 வயதுள்ளவர்களும் உள்ளனர். பொதுவாக அந்த வயதில் தாக்கம் குறைவு என்பதற்காக அவர்கள் எப்படியான உணவு வழக்கத்தையும் கொண்டிருக்கலாம் என்பது பொருள் அல்ல. உண்மையில் சிறுவயது உணவுப் பழக்கம் சரியாக அமையின் 40 வயதிலும் அதைத் தொடர்ந்தால் 100 வயதிலும் வாழ்வை ரசிக்கலாம்..!

எம்மவர்களின் உணவு நிறை உணவல்ல. ஒன்றில் காபோவைதிரேற்று நிறைய இருக்கும் அல்லது எண்ணொய் இருக்கும். ஆனால்.. வெளிநாட்டவரின் உணவுச்சட்ட வழக்கப்பட்டி நிறை உணவுகளையே அவர்கள் அதிகம் விற்பனை செய்கின்றனர்.

subway-eat-fresh.jpg

நான் subway இல் இப்படியான உணவுகளை வாங்கி உண்பேன். மற்றும் வெள்ளைகளின் பேக்கரிகளில் இந்த வகை பாண்கள் (வெதுப்பிகள்) தாராளம். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர் நெடுக்ஸ் என் மச்சான் கூட தங்களை போல ஒரு ஆராய்ச்சியாளான்(சி.எல் .ஆர் .ஐ.)ஸ்டை பண்டுதான்... இதே பீல்டு போஸ்ட் டாக்ரேட் பண்ணி கொண்டுஇருக்கான்..

எனிவே நீங்கள்தான் இனி தமிழீழ அறிவியல் துறை அமைச்சர் அல்லது சுகாதாரதுறை அமைச்சர்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.