Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையை காப்பாற்றும் பிரேரணை- இரா.துரைரத்தினம்!

Featured Replies

அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையை காப்பாற்றும் பிரேரணை- இரா.துரைரத்தினம்!

Published on February 29, 2012-

uno-150x150.jpgஅண்மைக்காலமாக ஊடகங்களில் முக்கியமாக தமிழ் ஊடகங்களில் பேசப்படும் பொருள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா பெரும் நெருக்கடியை சந்திக்க போகிறது என்பதுதான்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நேசநாடு ஒன்று முன்வைக்க இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானதா? சார்பானதா? என்பதை விளங்கிக்கொள்ளாத பரிதாப நிலையில் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனவா? அல்லது சிறிலங்காவின் பிரசாரத்திற்கு சாதகமாக செயற்படுகின்றவா என்பது தெரியவில்லை.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா மூக்குடைப்போகிறது என அற்பசொற்ப ஆசையில் இருக்கும் எங்கள் தமிழ் மக்களுக்கு நான் சொல்லும் விடயம் கசப்பானதாக இருக்கலாம்.

ஏனெனில் அமெரிக்கா விடுதலைப்புலிகளை காப்பாற்ற கப்பல் அனுப்புகிறது என நம்பியதைப்போல இந்த விடயத்திலும் தமிழ் மக்கள் ஏதோ ஒரு மாயைக்குள் அமெரிக்காவை மலைபோல் நம்பியிருப்பதை உணர முடிகிறது.

அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை

விடுதலைப்புலிகளை காப்பாற்ற தான் கப்பல் அனுப்ப போவதாக அமெரிக்கா சொன்னதாக நான் கேள்விப்படவில்லை. ஆனால் தமிழர்கள் சிலர்தான் அப்படி ஒரு கதையை எழுப்பிவிட்டு அதை மலைபோல நம்பி இறுதியில் மண்கவ்வினார்கள்.

அதேபோல ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா வெட்டி வீழ்த்தப்போகிறது, பண்ணிப்படைக்கப்போகிறது என வருகின்ற செய்திகளைப்பார்த்து நிட்சயம் தமிழ் மக்கள் மலையளவு நம்பிக்கையை வளர்த்து வைத்திருக்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

ஆனால் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானது என அமெரிக்காவோ அல்லது இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கலாம் என எதிர்பார்க்கும் நாடுகளோ சொல்லவில்லை.

அமெரிக்காவும் கனடாவும் ஒஸ்ரேலியாவும் தென் ஆபிரிக்காவும் சில விஷயங்களைத் சிறிலங்காவுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றன.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக வரப்போகிற தீர்மானம் எத்தகையது என்பதனை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தாம் கொண்டுவர இருக்கும் தீர்மானம் ஐநா நிபுணர் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதனை அவர்கள் தெளிவபடுத்தியிருக்கிறார்கள்.

தாம் இலங்கை தொடர்பாக கோரப்போவது சர்வதேச போர்க்குற்ற விசாரணையோ அல்லது மனித உரிமை விசாரணையோ அல்ல என்றும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரப்போகிறோம் என்பதனையும் அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சிறிலங்காவுக்கு எதிரானதா?

அமெரிக்காவோ அல்லது அமெரிக்கா நேசநாடு ஒன்றோ கொண்டுவர இருக்கும் பிரேரணையில் கோரியிருப்பது நல்லிணக்க ஆணைக்குழு கூறியிருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என்பதுதான். நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகள் எவையும் சிறிலங்கா அரசுக்கு எதிரானதோ அல்லது சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவுக்கு எதிரானதோ அல்லது சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரானதோ அல்ல. அப்படி இருக்கும் போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்துங்கள் என கூறுவது சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை என எப்படி கொள்ள முடியும்?

சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்ச படிப்பினைகள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தன் நோக்கமும், நல்லிணக்க ஆணைக்குழுவின் இலக்கும்.

அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை சிறிலங்காவுக்கு எதிரானதா அல்லது சிறிலங்காவை காப்பாற்றுவதற்காகவா என்பதை புரிந்து கொள்வதற்கு நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தை புரிந்து கொண்டால் போதும். இது மிக இலகுவானதாகும்.

சிறிலங்கா போர்க்குற்றத்தை புரிந்ததாக சர்வதேச ரீதியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைத்த நிபுணர்குழு அறிக்கை வெளியானதையடுத்து போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையில் தாம் சிக்கிவிடலாம் என்ற அச்சத்தில் அதிலிருந்து தப்புவதற்காகவும், சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள்வதற்காகவும் மகிந்த ராசபக்ச நியமித்த ஆணைக்குழுதான் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவாகும்.

தனக்கு மிகவும் நெருக்கமானவர்களையே இந்த ஆணைக்குழுவில் நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் முக்கிய நோக்கம் மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும், இராணுவத்தையும் காப்பாற்றுவதாகும்.

அந்த இலக்கை மிகக்கச்சிதமாக நல்லிணக்க ஆணைக்குழு நிறைவேற்றியிருந்தது. இறுதிப் போரின் போது பொதுமக்களை பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டிதுடன் பொதுமக்கள் இழப்பிற்கு சிறிலங்கா இராணுவம் காரணமல்ல என்ற நற்சான்றிதழையும் வழங்கியிருந்தது. இழப்புக்கள் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கருதினால் உள்நாட்டில் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்திருந்திருந்தது. சர்வதேச விசாரணையை நல்லிணக்க ஆணைக்குழு முற்றாக நிராகரித்திருந்தது.

ஆகவே நல்லிணக்க ஆணைக்குழு என்பதும் அதன் பரிந்துரைகள் என்பதும் முழுக்க முழுக்க மகிந்த ராசபக்ச தலைமையிலான அரசை காப்பாற்றுவதற்காக செய்யப்பட்டதாகும்.

மகிந்த ராசபக்ச அரசை காப்பாற்றுவதற்காக மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு செய்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் பிரேரணை எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிரான பிரேரணை என்று சொல்ல முடியும்?

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என்று சொன்னால் அல்லது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என கோரும் பிரேரணையை அமெரிக்காவோ அல்லது அதன் நேசநாடுகளோ கொண்டுவந்தால் அதை இலங்கைக்கு எதிரான பிரேரணை என்று கூற முடியும். ஆனால் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் பிரேரணையோ மகிந்த ராசபக்சவின் அரசை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துங்கள் என்பதாகும்.

எனவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணையை கொண்டுவருகிறது என்ற பிரசாரங்களும், அதற்காக இலங்கை எடுத்து வரும் ஆரவார பிரசாரங்களும் அமெரிக்க, சிறிலங்கா என்ற நண்பர்களின் கூட்டு நாடாகமாகும்.

இந்த பிரேரணையை சிறிலங்கா ஏன் தனக்கு எதிரான பிரேரணை என பிரசாரம் செய்கிறது?

அமெரிக்கா இந்த பிரேரணையை கொண்டுவந்து நிறைவேற்றுவதால் மகிந்த இராசபக்ச தலைமையிலான அரசுக்கு ஒரு துளி கூட ஆபத்தோ, நட்டமோ, நெருக்கடியோ ஏற்படப்போவதில்லை. அந்த பிரேரணை வெறும் செயலற்ற பிரேரணையாகவே மாறும். மறுபுறத்தில் சிறிலங்காவை பாராட்டி ஊக்குவிக்கின்ற பிரேரணையாக கூட மாற்றப்பட்டு அது நிறைவேற்றப்படலாம்.

இரண்டு காரணங்களுக்காக சிறிலங்கா இந்த பிரேரணையை தனக்கு எதிரானது என காட்ட முற்பட்டிருக்கிறது.

ஓன்று உள்நாட்டில் விலைவாசி ஏற்றத்தால் நாட்டுமக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழக் கூடிய அபாயகரமான கட்டம் காணப்படுகிறது. அரசுக்கு எதிரான மக்களின் மனநிலைகளை மாற்ற வேண்டுமாயின் சிங்கள மக்களின் உணர்வுகளை தட்டிவிட்டு வெற்றிகாண வேண்டும். கடந்த காலங்களில் யுத்தவெற்றிகளை காட்டி சிறிலங்கா அரசாங்கம் விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து வந்தது. போர்வெற்றியை காட்டி அந்த மாயைக்குள் வைத்திருந்ததால் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை தடுக்க முடிந்தது. ஆனால் அந்த போர் வெற்றிமாயைகள் கலைந்து மக்கள் விலைவாசி ஏற்றம் வாழ்க்கை செலவு பிரச்சினைக்கு எதிராக போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இதை தடுக்க வேண்டுமாக இருந்தால் நாடு சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. அதிலிருந்து மீள வேண்டும், சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என மக்களை திசை திருப்ப வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது. இதற்காகவே அரசாங்கத்திற்கு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளினால் தமது நாட்டிற்கு நெருக்கடி வந்திருப்பதாக பிரசாரங்களை மேற்கொண்டிருக்கிறது.

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தி வரும் மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் தனது நாட்டிற்கு எதிராக மேற்குலக நாடுகள் பிரேரணையை கொண்டுவருவதாக பிரசாரம் செய்து வருகிறது.

அமெரிக்காவோ அல்லது மேற்குலக நாடுகளோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என எண்ணியிருந்தால் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என எண்ணியிருந்தால் ஆகக்குறைந்தது ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரேரணையை கொண்டு வந்திருக்க வேண்டும்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறுவதன் உண்மையான பக்கம் என்ன என்றால் சர்வதேச நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என மகிந்த அரசை காப்பாற்ற முற்பட்டிருக்கிறது.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்த போது தமிழ் மக்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் அதனை நிராகரித்திருந்தன. உள்ளுரில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற அமைப்புக்களும் சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரித்திருந்தன.

தமிழ் மக்களாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்த மகிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காதா என சிறிலங்கா அரசாங்கம் ஏங்கியிருந்த வேளையில் அதற்கு கைகொடுப்பதற்கு அமெரிக்கா முன்வந்திருக்கிறது.

தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவே அமெரிக்கா இந்த நாடகத்தை ஆடுகிறது. சிறிலங்கா நீதிவிசாரணைகளை மேற்கொள்ளும் மனித உரிமையை பேணும் ஜனநாயக நாடு என்ற அங்கீகாரத்தை சர்வதேச மன்றத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் மேற்கொள்ளும் நாடகம்தான் இது.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை அமெரிக்காவுக்கு இருந்திருக்குமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்திருக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கையைத்தான்.

இறுதிப்போரின் போது விடுதலைப்புலிகளை காப்பாற்ற கப்பல் வருகிறது. தங்கத்தாம்பாழத்தில் தமிழீழத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் பெற்றுத்தரப்போகின்றன என மாயைக்குள் தமிழ் மக்களை வைத்திருந்தார்களோ அதே போன்றுதான் இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்க பிரேரணை கொண்டுவருகிறது என பிரசாரத்தை ஊடகங்கள் மேற்கொண்டுள்ளன. முக்கியமாக தமிழ் ஊடகங்கள் மேற்கொண்டுள்ளன.

அமெரிக்கா கொண்டுவரப்போவது இலங்கைக்கு எதிரான பிரேரணை அல்ல என்பதே உண்மை.

இரா.துரைரத்தினம்

http://www.thinakkathir.com/?p=31467

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஐ.நா வில் வல்லரசுகளின் சதிக்கூட்டணி,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!

ஈழத்தமிழர் இனச்சிக்கல் குறித்து ஐ.நா.மன்றத்திலிருந்து கசிந்து வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. உலக வல்லரசுகளின் சதி வலைக்குள் தமிழீழச் சிக்கலை சிக்கவைப்பதற்கான சூழ்ச்சிகள் நடக்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகம் முழுவதும் பரவி வாழும் புலம்பெயர்த் தமிழர்களும் இனப்படுகொலை குற்றவாளி, போர்க்குற்றவாளி, மனிதக் குலப் பகைவன் இராசபட்சே குழுவினர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என ஒற்றைக்குரலில் ஐ.நா. மன்றத்தைக் கோருகின்றனர்.

ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர் குழு பரிந்துரைத்தவாறு சிங்கள இனவாத இலங்கை ஆட்சியாளர்களை மேற்கண்ட குற்றங்களுக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழீழ தாயகப்பகுதியிலிருந்து இலங்கைப் படைகள் திரும்பப் பெறப்பட்டு அங்கு இயல்பு நிலையைக் கொணரவேண்டும், தமிழீழத் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழக்கூடிய ஈழத்தமிழர்களிடம் அவர்களது அரசியல் விழைவை அறிய கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கைச் சிறைகளிலுள்ள விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழீழ அரசியல் சிறையாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமை மன்றத்திடம் முன்வைத்து உலகம் முழுவதும் பல லட்சம் தமிழர்கள் கையெழுத்திட்டு விண்ணப்பம் அனுப்பி வருகின்றனர்.

உறைபனிக்கிடையில் வேலுப்பிள்ளை மகேந்திரராசா, லோகநாதன் மருதையா, ஜாக்கோமுத்து கிரேசியன் ஆகிய மூன்று வீரத்தமிழர்கள் ஐரோப்பக் கண்டத்தின் ஊடாக நடைப்பயணம் மேற்கொண்டு இக்கோரிக் கைகளுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை மன்ற முன்றிலில் பல இலட்சம் தமிழர்கள் கூடி உலகநாட்டு பேராளர்கள் முன்பு இக்கோரிக்கைகளை முழங்கி விண்ணப்ப மனுக்களை அளிக்க இருக்கிறார்கள்.

உலகத் தமிழர்களின் இந்த அடிப்படை மனித உரிமை வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு சிங்கள இனவாத இலங்கை அரசே தனது ஆட்சியாளர்களும் படைத் தளபதிகளும், உலகச் சட்டங்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களை விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளட்டும் என்ற சொத்தைத் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா.வில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சதி செய்து வருவதாக கசிந்து வரும் செய்திகளிலிருந்து தெரிகிறது.

பெற்ற படிப்பினைகள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம் (LLRC) என்ற பெயரில் இலங்கை அரசு நியமித்த விசாரணைக்குழு அறிக்கையின் மீது குறிப்பிட்ட காலவரம்புக்குள் நடவடிக்கை எடுத்து தொடர்புடையவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக ”அத்தீர்மானம்” கூறுகிறது. குற்றவாளியே தன்னை விசாரித்து ஒரு கால வரம்புக்குள் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோருகிற கொடிய தீர்மானம் இது.

ஐ.நா. பொதுச்செயலாளரின் வல்லுநர் குழு அளித்த ஆய்வறிக்கை இலங்கையின் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் சிங்கள இனவாதத்தில் தோய்ந்திருப்பதையும் தமிழினத்திற்கெதிரான போர் வெறி ஊட்டப்பட்டிருப்பதையும் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியது. இலங்கைக்குள் நடக்கிற எந்த வகை விசாரணையிலும் தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்காது என்பதை எடுத்துக்காட்டியது. இதனால்தான் பன்னாட்டு நீதிமன்றத்தில் இராசபட்சேயும் படை அதிகாரிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா பொதுச்செயலாளர் இதற்கென்று சிறப்பு ஆணையம் அமைத்து நடந்துள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தது.

கசிந்து வரும் செய்திகள் உண்மையாய் இருக்குமானால் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் இப்போதைய 19 ஆவது அமர்வின் இத்தீர்மானம் ஐ.நா. வல்லுநர் குழுவின் பரிந்துரையையே துச்சமென தூக்கியெறியும் செயலாகும். இலங்கை அரசும் அதற்குத் துணையாக இந்திய அரசும் வலியுறுத்தும் அநீதிக்கு அமெரிக்காவும் பிற ஐரோப்பிய நாடுகளும் துணைபோவதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைப் போரில் சிங்கள அரசோடு இந்தியாவும் சீனவும் இணைந்து நடத்திய இன அழிப்பு குறித்து வல்லரசுகளுக்கு கவலை இல்லை.

தமிழின அழிப்புப் போரின் ஊடாக இலங்கைத் தீவில் சீனாவின் கைமேலோங்குவதை மட்டுபடுத்தும் அளவுக்கு இலங்கையை மிரட்டிவைத்தால் அமெரிக்க ஐரோப்பிய வல்லுரசுகளுக்கு போதுமானது. இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் அது ஏற்புடையதே. இலட்சக்கணக்கில் மாண்டு போன ஈழத்தமிழர்களின் பிணங்களின் மீது இந்த வல்லரசு காய் நகர்த்தல்கள் நடக்கின்றன. மற்றபடி இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்கவேண்டும், உலகச்சட்டங்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர்கள் மீது ஐ.நா. சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்பதெல்லாம் உலக வல்லரசுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஐ.நா. சட்டங்களின் வரையறுப்புப் படியே ஈழத்தமிழர்கள் சிங்களர்களிடமிருந்து வேறுபட்ட தனி தேசிய இனம் என்பதோ, ஈழத்தமிழர்கள் இலங்கை அரசால் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள். என்பதோ எனவே உலகச் சட்டங்களின் படி ஈழத்தமிழர்கள் தனித்தேசிய அரசு நிறுவிக்கொள்ள உரிமைப்படைத்தவர்கள் என்பதோ உலக வல்லரசுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல.தங்களது ஆதிக்க நலன்களுக்கு ஏற்ற காய்நகர்த்தல்களில் ஒன்றாகவே ஏதோ சில வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு ஆதரவாக வல்லரசுகள் குரல் கொடுக்கின்றன.

ஆயினும் 2009 ஆம் ஆண்டு இதே இலங்கை அரசை பயங்காரவாதத்தை முறியடித்த நாடு என பாராட்டிய மேற்குலக நாடுகள் நடந்துள்ள குற்றங்கள் குறித்து இலங்கை அரசே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று இலேசாக முணுமுணுக்கின்றன என்பது மட்டுமே வேறுபாடு. ஈழத்தமிழர்களின் இடைவிடாத போராட்டங்களினால்தான் இந்த சிறிய மாற்றமும் நடைபெற்றுள்ளது.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழினத்திற்கெதிராக வல்லரசுகள் மேற்கொள்ளும் சதிச் செயல்களைக் கண்டு தமிழர்கள் தங்கள் கோரிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர்குழு பரிந்துரைத்தபடி இராசபட்சேக் கும்பலை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இக்கோரிக்கைகளை தொடர்ந்து, விடாமல் வலியுறுத்துவோம். உலக மனசாட்சியின் கதவுகளை அது திறக்குவரை தமிழர்கள் நாங்கள் தட்டுவோம்.

உலக நாடுகள் எங்கும் இயங்கும் மனித உரிமை அமைப்புகளும் சனநாயக இயக்கங்களும் தமிழினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இக்கொடிய அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனக் கோருகிறோம். இத்திசையில் தெளிவோடும் உறுதியோடும் உலகத் தமிழர்கள் தங்கள் முயற்சியை தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்

கி.வெங்கட்ராமன்,

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச சட்டங்களின் படி ஒரு நாடு போற்குற்றதை தானாகவே விசாரிக்க தவறும் பட்சத்தில் மட்டுமே சர்வதேம் விசாரிக்க முடியும். எமது பெடிசனுக்கு அமேரிக்கா கொடுத்துள்ள பதிலை படிக்கவும்.

https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg

Official Department of State Response tosupport an international investigation into war crimes and other human rights abuses committed in Sri Lanka

Accountability for the Alleged Violations of International Humanitarian and Human Rights in Sri Lanka

By Michael H. Posner

The United States shares your concern about accountability for the alleged violations of international humanitarian and human rights law that occurred during Sri Lanka's recent conflict and is committed to working with the government of Sri Lanka, the United Nations, and the international community to implement a just and equitable reconciliation process for all Sri Lankans.

At the request of Congress, the Department of State prepared two reports in 2009 and 2010 on alleged violations of international humanitarian law and international human rights law during Sri Lanka's recent conflict. These reports can be found at State.gov. As we noted in both reports, the United States takes these allegations very seriously. We believe individual accountability for such violations is a critical component of reconciliation, and meaningful steps in this regard will advance Sri Lanka's own efforts to heal after decades of conflict.

In the September 2011 session of the United Nations Human Rights Council, we made clear our view that Sri Lanka must adopt measures necessary to achieve national and ethnic reconciliation.

We expressed the need for Sri Lanka to quickly and credibly address allegations of violations of international humanitarian law and international human rights law that occurred during the war, regardless of which side committed them. We have highlighted the need for Sri Lanka to take concrete steps, such as providing to family members an account of those missing and detained as well as promptly issuing death certificates for those killed in the conflict. We will continue to urge the government of Sri Lanka to work constructively on these issues with the United Nations and the international community.

Finally, we hope the Government of Sri Lanka will address these reconciliation and accountability issues in a manner commensurate with its international obligations, and we will continue to reiterate to the government of Sri Lanka that, while domestic authorities have primary responsibility to ensure that those responsible for violations of international humanitarian law and international human rights law are held accountable, international accountability mechanisms can become appropriate in circumstances in which a government is unable or unwilling to meet its obligations.

Thank you continued interest in Sri Lanka.

Michael H. Posner is Assistant Secretary for the Bureau of Democracy, Human Rights and Labor at the Department of State

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தோழர்கள் மணியரசன்,வெங்கட் ராமன் அருணபாரதி .. ஏனோ முன்னர் மாதிரி வேகமா செயல்படுவது இல்லை..களத்தில் உள்ள நிலமைக்கு போராடாமால் ஆப்பிரிக்கா அண்டர்க்டிக்காவில் பஞ்சம் உலக ஏகாதிபத்தியத்தின் சதி... அவன் நமக்கு போராடாத போது நாம் ஏன் அவனுக்கு போராட வேணும் ???அதனாலே நான் தலைவர் வைக்கோ அவர்கள் பக்கம் சேர்ந்துவிட்டன் நான்...

இரா து....இன் உந்த எழுத்துக்களை வாசிக்க manyawning.jpg

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்திருந்து பார்ப்பம். ஒரு மாதத்தில கூட்டம் முடியும் போது தெரியப் போகுது-இரத்தின துரை "ரூம்" போட்டு யோசிச்சு எழுதும் இது மாதிரியான ஆய்வுகள் உண்மையா அல்லது புருடாவா எண்டு. அவரசம் வேண்டாம்! :)

நாம் செய்ய வேண்டியது சிங்களப் பயங்கரவாதிகளின் சுய ரூபத்தை முடிந்தளவு வெளிப்படுத்துவது தான்!

சிங்களப் பயங்கரவாதிகள் டக்லஸ், கனகரத்தினம் உட்பட, பெருமளவு கும்பலை அனுப்பியது ஏன் என்றும் சிந்திக்க வேண்டும்!

மற்றவர்கள் நமக்கு எல்லாம் செய்வார்கள் என்று நம்ப முடியாது!!!

சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்தி கூடிய பலனைப் பெறுவது எமது கைகளில் தான் தங்கியுள்ளது.

கூட்டமைப்பு நிலைமைகளை அவதானிக்க, சில வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த, நிலைமைகளை விளக்க (விவாதத்தில் கலந்துகொள்ள அல்ல) ஒரு சிலரை இன்னமும் அனுப்பாதது பிற்போக்குத்தனம். அவர்களது முடிவுக்கு, தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட இந்திய - சிங்களப் பயங்கரவாதிகளின் அழுத்தமும், அரைவேக்காட்டு அரசியல் செய்யும் சம்பந்தன் - சுமந்திரனின் சுயநலமும் மட்டுமே காரணம். இருவருக்கும் தமிழரின் பிரச்சினைகள் என்னவென்று நேரடியாகத் தெரியாது - எக்காலத்திலும் நேரடியாக தெரிந்துகொள்ள விரும்பியது இல்லை. சொகுசாக இருந்து பத்திரிகைகளை வாசித்து, மூன்றாம் நிலைத் தகவல்களை மட்டுமே வைத்து அரைவேக்காட்டு அரசியல் செய்து வருகின்றனர்.

அமெரிக்கா இலங்கையை காப்பாற்ற ஏன் பிரேரணை கொண்டுவரவேண்டும்? சும்மா இருந்தால் இலங்கை 52 அரசியல் வாதிகளுக்கும், துணை நடிகைகளுக்கும் பணம் தர வேண்டாம். மகிந்தா கூட்டம் அவளவையை இலங்கையை விட்டு அனுப்பிவிட்டு குந்தியிருந்து கூரைமுகட்டைப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஈரானிடம் எண்ணையைச் சுதந்திரமாக வாங்க அனுமத்தித்தால் இன்னும் இலகுவாக இருக்கும்.

நியூ யோர்க் வந்த மகிந்தாவை சும்மா சுத்தி அடிக்க விட்டிருக்கலாம்.

சுசான் றைஸ், சவேந்திராவின் ஐ.நா.ஆலோசகர் நியமனம் பிழை என்று ஐ.நா விற்கு அலுப்பு கொடுத்திருக்கத் தேவை இல்லை. எதிர்பாராத வகையாக பிளேக்கே அந்த நியமனம் பிழை என்று எதிப்புக்காட்டியிருக்கிறார்.

கப்பல் காத்திருந்ததாக துரைரத்தினத்திற்கு யாரோ பொய் சொல்லிவிட்டரகள். ஆனால் இலங்கை மந்திரிகள் பேசியது, "அமெரிக்கர் பிரபாகரனை ஏற்றிப்போக கட்டுநாயக்காவில் விமானத்துடன் காத்திருந்தார்கள். நாங்கள் அவ்வளவு ஏமாளிகள் அல்ல அது நடப்பதை அனுமதிக்க" என்று.

இலங்கை காப்பாற்றப்பட போகுதோ இல்லையோ. ஆனால் பிரேரணை என்று ஒன்று வந்தால், கனடா, தென்னாபிரிக்கா, பிருத்தானியா போன்ற நாடுகள் இலங்கையை துண்டு துண்டாக கிளிக்கப் போகின்றன. அதிலிருந்து அமெரிக்கா இலங்கையை காப்பாற்றுவது எப்படி என்று துரைரத்தினம் விளக்குவாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசு ஆட்டம் காணுமளவிற்கு இப்போது அமெரிக்கா ஒன்;றும் கொண்டுவரப்போவதில்லை. குற்றவாளிகளையே நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்துங்கள் என்றால் இதைவிட நீதிக்கு அநீதி வேறென்ன இருக்கு.

தமிழர்களைக் கொன்று குவித்ததில் சர்வதேசத்திற்கும் பெரும் பங்கு உண்டு. இதில் தனியே ராஜபக்ஷவைக்கூண்டில் ஏற்றப்போனால் அவர்களே வாய்திறந்து நீங்கள்தானப்பா சற்றலைட்டெல்லாம் போட்டு குண்டுகளும் தந்த பணமும் தந்து போரை இறுதிவரை நடத்தச்சொன்னீர்கள். இப்ப என்னப்பா என்னைக்கூண்டில் நிற்கச்சொல்கின்றுPர்கள் என்றால் யார் இந்தக்கேள்விக்குப்பதில் அளிப்பது,

கொலைகள் ஒன்றும் திரைச்சீலை போட்டு நடத்தப்படவில்லை. எல்லோரும் உதவிகளும் கொடுத்து சற்றலைட் போட்டு புலிகளின் நடமாட்டம் நேரடியாகக் கவனிக்கப்பட்டு போர்முனைக்கு சற்றலைட்டின் நெறிப்படுத்தலுடன் இவர்களே வழிசமைத்துக்கொடுத்து இவர்கள் சற்றலைட்டில் ஏசீ அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே படுகொலை நடந்தது.

இன்று போர்குற்றம் விசாரணை என்பதெல்லாம் தங்களுடைய அபிலாசைகளை இலங்கை அரசின் மீது திணிக்கவே ஒரு ஆயுதமாகப்பயன்படுத்தப்படுகின்றது.

இதையெல்லாம் தூக்கி ஒருபுறம் ஒதுக்கிவிட்டு தமிழர்களுக்கான உரிமை என்ன கொடுக்கபபோகிறீர்கள் அதை எழுதி மேசையில் வைத்து உடனடியாக அமூல்படுத்துங்கள் என்று யாரும் சொல்லுகின்றார்களா அல்லது கேட்கின்றார்களா? நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் மேற்கொண்டு நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று ஏதேனும் செய்கின்றார்களா? அல்லது பழையதை விசாரித்துக்கொண்டு நடக்கின்ற விடயங்களில் அரசாங்கம் தவறுதல் செய்யாமல் பார்க்கின்றார்கள? இதுவும் இல்லை. அரசாங்கம் மீண்டும் மீண்டும் தமிழர்கள் மீது கொலைவெறியாட்டம் அடக்குமுறை நடத்திக்கொண்டே இருக்கின்றது. அதையாவது தடுத்து நிறுத்தினால் தமிழர்கள் நிம்மதியாக உறங்குவார்கள். பழையதைக் கதைத்து கதைத்துக் காலத்தை வீணடிக்கும் செயல்தான் இந்தபோர்க்குற்றங்களும் சுயாதீன விசாரணைகளும்.

சமாதானம் என்று சொல்லிக்கொண்டு புலிகளை ஏமாற்றியவிதம் யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். அதுபோல ஐ.நாவின் கூட்டத்தொடரிலும் தமிழர்கள் அணிலேறவிட்ட நாயைப்போல் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையை மாற்றவேண்டும். மிஞ்சுவது மீண்டும் ஏமாற்றம் தான் போலிருக்கின்றது.

உரிமை கேட்டவர்களை அழித்ததே மாபெரும் தவறான மனிதஉரிமை மீறல். அவர்களுக்கு உதவிசெய்தவர்கள். இரண்டாம் தர கொலைச்சட்டப்பிரிவில் அடங்குவர். அவர்கள் தயாரித்த சட்டத்தை அவர்களுக்கு விண்ணப்பக்க முடியாதல்லே. மறந்திட்டன்.

குறித்து வைத்துக் கொள்வோம். இரா. துரையின் எதிர்வுகூறலை.

  • கருத்துக்கள உறவுகள்

அமரிக்கா :icon_mrgreen: இலங்கையைக் காப்பாற்றத் தீர்மானம் கொண்டு வருகிறது என்றால், இலங்கை ஏன், அந்தத் தீர்மானத்தை முறியடிப்பதற்குத் தலைகீழாக நிற்கின்றது?

அமரிக்கா :icon_mrgreen: இலங்கையைக் காப்பாற்றத் தீர்மானம் கொண்டு வருகிறது என்றால், இலங்கை ஏன், அந்தத் தீர்மானத்தை முறியடிப்பதற்குத் தலைகீழாக நிற்கின்றது?

இரா. துரையின் பின்மண்டையில் சிலவேளைகளில் பிரச்சனைகளுண்டு. :icon_mrgreen:

இலங்கை காப்பாற்றப்பட போகுதோ இல்லையோ. ஆனால் பிரேரணை என்று ஒன்று வந்தால், கனடா, தென்னாபிரிக்கா, பிருத்தானியா போன்ற நாடுகள் இலங்கையை துண்டு துண்டாக கிளிக்கப் போகின்றன. அதிலிருந்து அமெரிக்கா இலங்கையை காப்பாற்றுவது எப்படி என்று துரைரத்தினம் விளக்குவாரா?

நான் நினைத்தேன் இந்த பிரேரணைக்கு பின் 2 ஆக தான் நாடு கிளியும் என்று ஆனால் இப்ப பார்க்க போனால் 4 ,5 ஆக நாடுகிளியும் போல :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தன் பிழையானவன் எண்டா அவன் சொல்லுற கருத்து எல்லாம் பிழை எண்டு அர்த்தமில்லை. இவர் சொலுறத்தில ஒரு விசயம் நியாயமாய் தான் படுகிறது. அதாவது இன்று அமெரிக்காவும் சரி ஐரோப்பிய யூனியனும் சரி LLRC இன் பரிந்துரைகளை தான் முன்னிலைப் படுத்துகின்றன. இலங்கையும் தன்னால் தயாரிக்கப் பட்ட LLRC இன் பரிந்துரைகளையே மேற்கு நாடுகளின் பெரிய அழுத்தம் போல் படம் காட்டுகிறது. சரி இன்னும் கொஞ்ச நாள் தானே பொறுத்திருந்து பார்ப்போம். கொண்டு வரப்படும் தீர்மானம் LLRC ஐ முன்னிலைப் படுத்தியும், நடந்த இனவழிப்புக்கு பொறுப்பு கூறல் தொடர்பில் செல்லத் தட்டு தட்டுவது போலும் இருந்தால் .... அது எங்களுக்கு மேற்குலகால் காதில் வைக்கப்படும் பூ.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் தான் அழிக்கப்படுகின்றது என எல்லோரும் கண் மூடியது உண்மைதான். ஆனால் அங்கு நடந்த படுகொலைகளையும் ஈன இரக்கமற்ற இன அழிப்பையும் அதை தடுக்க திராணியற்று சில நாடுகள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டாலும் அவர்களால் ஆக்கப்பட்ட சடடவரைபுகளும் அவர்களுக்குள் இருக்கும் மனித உரிமைப்பேரவைகளும் ஆதரவாளர்களும் இவற்றை நீதி வழங்கும்வரை விடுவதாக இல்லை. இதனாலேயே இவர்களும் இன்று அவர்களுக்காகவாவது தமிழருக்கு நீதி என்றொன்றை காட்டவேண்டியுள்ளது. காட்டியே ஆகணும். இல்லாதுவிடில் நீதி என்று இனி இவர் வாய்திறக்கவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

குறித்து வைத்துக் கொள்வோம். இரா. துரையின் எதிர்வுகூறலை.

இவரின் எதிர்வு கூறல்களை பலமுறை பார்த்திருக்கின்றோம்.

இவர் கூறுவதுபோல் ஒன்றும் நடக்காது,

பேசாமல் நேரத்தையாவது மீதப்படுத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இந்த ஐ. நா மகாநாடு எவ்வளவு நாள் நடைபெறும். எப்பொழுது முடிவடையும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தன் பிழையானவன் எண்டா அவன் சொல்லுற கருத்து எல்லாம் பிழை எண்டு அர்த்தமில்லை. இவர் சொலுறத்தில ஒரு விசயம் நியாயமாய் தான் படுகிறது. அதாவது இன்று அமெரிக்காவும் சரி ஐரோப்பிய யூனியனும் சரி LLRC இன் பரிந்துரைகளை தான் முன்னிலைப் படுத்துகின்றன. இலங்கையும் தன்னால் தயாரிக்கப் பட்ட LLRC இன் பரிந்துரைகளையே மேற்கு நாடுகளின் பெரிய அழுத்தம் போல் படம் காட்டுகிறது. சரி இன்னும் கொஞ்ச நாள் தானே பொறுத்திருந்து பார்ப்போம். கொண்டு வரப்படும் தீர்மானம் LLRC ஐ முன்னிலைப் படுத்தியும், நடந்த இனவழிப்புக்கு பொறுப்பு கூறல் தொடர்பில் செல்லத் தட்டு தட்டுவது போலும் இருந்தால் .... அது எங்களுக்கு மேற்குலகால் காதில் வைக்கப்படும் பூ.

LLRC யில் அப்பிடி என்னதான் பரிந்துரை இருக்கு? :unsure:

அதுசரி இந்த ஐ. நா மகாநாடு எவ்வளவு நாள் நடைபெறும். எப்பொழுது முடிவடையும்?

19th regular session of the Human Rights Council (27 February - 23 March 2012)

http://www.ohchr.org/EN/HRBodies/HRC/RegularSessions/Session19/Pages/19RegularSession.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ஆகூதா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

LLRC யில் அப்பிடி என்னதான் பரிந்துரை இருக்கு? :unsure:

உப்புடி குண்டக்க மண்டக்க எல்லாம் கேள்வி கேக்கக் கூடாது சொல்லிப் போட்டன். :lol:

சந்திரிக்கா ஒண்டுமே இல்லாத ஒரு பொதியை எப்பூடி தீர்வு பொதி எண்டு பூச்சாண்டி காட்டினாவோ ... இது அதை விட கொஞ்சம் ஸ்பெஸலான பூச்சாண்டி. :icon_mrgreen:

அமெரிக்க விருப்பம் ராஜபக்ச குடும்பம் அரசில் இருந்து துரத்துவது தான் தமிழருக்காக ஒன்றும் இல்லை .இதை சாக்காக வைத்து காய் நகர்த்துகிறார்கள். சரி நாங்களும் இதை வைத்து ஒரு தீர்வை முயற்சிப்போம்.

மற்றும்படி தண்டனை எல்லாம் கிடையாது. துரத்தப்படுவார்கள் அவ்வளவுதான். இன்றைய நிலையில் சிறிலங்கா சிங்கள மக்களால் அவர்களை துரத்தமுடியாது. அப்போ அமெரிக்கா ஏதாவது ஒரு கிடுக்கு பிடி போட்டு அவரை மிரட்டி கொண்டே இருக்கும்.

தமிழருக்காக அமெரிக்கா ஒன்றும் செய்ய போவதில்லை.

இலங்கையின் சீன ஆதிக்கத்தை இந்தியாவால் எதிர்க்க முடியாது,அமெரிக்கா தான் சரியான ஆள் என இந்தியா வாய் மூடி இருக்கலாம்

Sri Lanka's LLRC report does not address accountability adequately - US

Mar 05, Geneva: The United States says the report of the Lessons Learnt and reconciliation Commission (LLRC) Sri Lanka's domestic body that probed the country's armed conflict does not adequately address the issue of accountability.

Addressing the 15th meeting of the 19th Session of the United Nations Human Rights Council (UNHRC) in Geneva today, the US delegate John C. Mariz said the LLRC report does not include any plan to implement its recommendations, nor does it adequately address the crucial issue of accountability.

The US says accountability can play an important role in the reconciliation process as evidenced by the recent history from countries that have undergone similar experiences.

A resolution against Sri Lanka backed by the US, is expected to be brought before the UNHRC to press Sri Lankan government to promptly implement the recommendations made by the LLRC and address the accountability for the war crimes allegedly occurred during the final phase of the battle with the Tamil Tiger terrorists.

A draft resolution has been circulated among the UNHRC's 47 members.

Several member states, especially China, Russia and Pakistan, have shown support to Sri Lanka to fend off the resolution arguing that the UN should not address country-specific situations.

However, the US disagreed with the notion saying that the credibility of UN's human rights machinery depends on its capacity to address urgent and persistent human rights situations to protect people who suffer under oppressive governments.

The delegate said as US Secretary of State Ms. Hilary Clinton has noted, the US is prepared to work with Sri Lanka in order to bring lasting peace to the island.

Sri Lanka says the government is taking measures to implement the LLRC recommendations methodically and it needs time and space to work towards reconciliation without interference from the international community.

http://www.colombopa...330961917CH.php

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.