Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது- சொல்லி விட்டார் பிரணாப்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது- சொல்லி விட்டார் பிரணாப்!

13-pranab-41-300.jpg

டெல்லி: ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதை இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே மறைமுகமாக உறுதிபடத் தெரிவித்து விட்டார்.

ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளும் இதன் மூலம் தூக்கி குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன.

இன்று மக்களவை கூடியதும் தமிழக எம்.பிக்கள் எழுந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். அப்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து,

ஐக்கிய நாடுகள் சபையில் பொதுவாக எந்த ஒருநாட்டுக்கும் எதிரான தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிப்பதில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் இதற்கு மேலும் வலியுறுத்தினால் இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரும் விளக்கம் அளிப்பார் என்றார்.

ஆனால் பிரணாப் முகர்ஜியின் இந்த விளக்கத்தை தமிழக எம்பிக்கள் நிராகரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இருப்பினும் அவை நடவடிக்கையை லோக்சபா சபாநாயகர் நிறுத்தவில்லை. தொடர்ந்து மேற்கொண்டார்.

பிரணாபின் இந்த விளக்கம், இந்தியாவின் நிலை என்ன, மன்மோகன் சிங் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. நிச்சயமாக இலங்கைக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்காது என்பது அம்பலமாகி விட்டது.

முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

இவ்வளவு அமளிக்கு மத்தியிலும் வழக்கம் போல வாயை மூடிக் கொண்டு அமைதி பொங்கும் முகத்துடன் பிரதமர் வீற்றிருப்பது வியப்பாகவே உள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/03/13/india-india-will-not-support-any-country-specific-resolution-aid0091.html

தமிழகத் தலைவர்கள் எல்லாம் டெல்லிக்கு சுண்டங்காய்.

சதத்துக்கும் அவங்கள் கணக்கெடுக்க மாட்டார்கள்.

சிங்களவனாப் பார்த்து ஆப்பு வைச்சாத்தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான... போர்க்குற்றத்தில் இந்தியாவும் சேர்ந்தே ஈடுபட்டதை அனைத்து உலகமும் அறியும்.

அமெரிக்கா கொண்டுவரும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், தனது குற்றத்தை தானே... ஒப்புக் கொண்டதாகிவிடும். அப்படியிருக்க இந்தியா ஆதரிக்கும் என்று, நாம் எந்தவகையில் எதிர் பார்க்கமுடியும்.

ஒருவகையில்.... இந்தியா ஆதரிகின்றது என்று வைத்துக் கொண்டால்...

அடுத்து... ஸ்ரீலங்கா, இந்தியாவை காட்டிக் கொடுப்பதுடன், சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் சேர்ந்து... பழிவாங்கலில் ஈடுபடும்.

அதனைச் சாமாளிக்க இந்தியாவால் முடியாது. இந்தியா இப்போது ஆப்பிழுத்த குரங்கின் நிலைமையிலே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையும் நாட்கள் எண்ணபடுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா உடையும் நாட்கள் எண்ணபடுகின்றன.

இந்திய தேசத்திற்கு எதிராக வேலை செய்பவன் அது உடையாமல் இருக்கத்தான் வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் அவனுக்கு வேண்டியது தானாகவே நடக்கும்!

இந்தப்பிரணாப் அன்று முள்ளிவாய்க்கால் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்து தமிழின படுகொலையை வழிநடாத்தியவர். இன்றையை வெளிவிவகார அமைச்சர், கன்னட கிருஸ்ணா ஏன் வாய் இன்னும் திறக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது (நித்திரையோ தெரியவில்லை). மேலும், பாதுகாப்பு செயலாளர் மேனனும் முக்கிய பங்கு வகித்ததவர், வகிப்பவர் - அவரும் வாய் திறக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை உடைப்பதற்கு அமெரிக்காசின் விய+கத்திற்கு இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதே நலமானது. தமிழர்களின் மழு ஆதரவும் அமெரிக்கவிற்குத் தேவை. இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் வேண்டுதல்களை நிறைவேற்றப்படாதவிடத்து இங்கு விரிசல்கள் அதிகமாவதே இந்தியாவை உடைப்பதற்கு ஒரு வெடிப்பை உருவாக்கமுடியம். ஏற்கனவே இருக்கும் அமல்லிய கீறல்கள் இதனுடன் பிளந்து செல்லும்போது இந்தியா தானாக உடைந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டு மட்டும் வடிவாக தெரிகிறது. அமேரிக்கா இந்த தீர்மானத்தை இந்தியாவோடு ஆலோசிக்காமல் தான் கொண்டுவந்துள்ளது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை உடைப்பதற்கு அமெரிக்காசின் விய+கத்திற்கு இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதே நலமானது. தமிழர்களின் மழு ஆதரவும் அமெரிக்கவிற்குத் தேவை. இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் வேண்டுதல்களை நிறைவேற்றப்படாதவிடத்து இங்கு விரிசல்கள் அதிகமாவதே இந்தியாவை உடைப்பதற்கு ஒரு வெடிப்பை உருவாக்கமுடியம். ஏற்கனவே இருக்கும் அமல்லிய கீறல்கள் இதனுடன் பிளந்து செல்லும்போது இந்தியா தானாக உடைந்துவிடும்.

இந்த கண்குன்னா காட்ச்சியை எங்கட கண்ணால பார்க்கனும்......அந்த சந்தோசத்தில 100 ஆண்டு வாழுவோம்...........

எனக்கு இரண்டு பஞ்சாப் நண்பர்கள் இருக்கிறாங்கள்.........அவங்களுக்கு கூட இந்தியா என்ர ஒரு நாடுடன் வாழ பிடிக்க வில்லை என்று தான் சொல்லுவாங்கள்.......இத்தாலி எருமை கூட்டத்தை பற்றி கெட்ட வார்த்தயில சொல்லுவாங்கள்............சின்ன ஒரு தீ முண்டா அது பெரிதாக்க போக்கும் இந்தியாவில்.........

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபய ராஜபக்சே - இந்திய ராணுவ அதிகாரி சந்திப்பு.

இந்திய ராணுவத்தின் தென் மண்டலத் தளபதி அஜய் குமார் சிங், இன்று இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்த பய ராஜபக்ஷேவைச் சந்தித்துப் பேசினார்.

இலங்கைக்கு, ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ள சிங், இன்று (13ம் தேதி) தொடர்ந்து, இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யாவையும் சந்தித்தார்.

இந்தச் சந்திப்புகளின் போது, இருதரப்பு ராணுவ உறவுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

http://www.nakkheera...ws.aspx?N=72244

Edited by nedukkalapoovan

ஒண்டு மட்டும் வடிவாக தெரிகிறது. அமேரிக்கா இந்த தீர்மானத்தை இந்தியாவோடு ஆலோசிக்காமல் தான் கொண்டுவந்துள்ளது என்று.

அவர்கள் தமது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தார்கள். மரியா ஓட்டேரோ கூட கொழும்பு பிரயாணத்தை முடித்து அங்கே சென்று விளக்கினார். டெல்லி விரும்பியோ இல்லையோ தாம் முன்னெடுக்கப்போவதாக கூறியிருக்கின்றார்கள்.

கோசவா பிரச்சனையில் கூட அமேரிக்கா உருசியா, இந்தியா மாற்றும் சீன அரசுகளை எதிர்த்து தனியே சென்று அங்கீகரித்தது. ஆசியாவிலும் அமெரிக்கா நிரந்தர நண்பர்களை தேடும் தேவை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பாது ஏனைய நாடுகளின் வாக்குகளை எடுத்து பிரேரணையை வெல்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

சிறிலங்காவுடன் சேர்ந்து இந்தியாவும் தான் இனப்படுகொலையை செய்தது என்பதும் இப்போ தனக்கு சார்பாக இந்தியா வாக்களிக்காது என்பதும் அமெரிக்காவுக்கு தெரியாமல இருக்க முடியாது.ஆனபடியால் தான் அமெரிக்கா இந்தியாவை எதிர்பார்க்கவில்லை.

ஒருவேளை இப்பிரேரணை வென்றால் அடுத்த நகர்வு மிக மந்தமாகவே நிகழும்.தோற்றால் போர்குற்ற விசாரணையை அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் அசுர கதியில் முன்னெடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபய ராஜபக்சே - இந்திய ராணுவ அதிகாரி சந்திப்பு.

இந்திய ராணுவத்தின் தென் மண்டலத் தளபதி அஜய் குமார் சிங், இன்று இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்த பய ராஜபக்ஷேவைச் சந்தித்துப் பேசினார்.

இலங்கைக்கு, ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ள சிங், இன்று (13ம் தேதி) தொடர்ந்து, இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யாவையும் சந்தித்தார்.

இந்தச் சந்திப்புகளின் போது, இருதரப்பு ராணுவ உறவுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

http://www.nakkheera...ws.aspx?N=72244

இந்தியன் செய்த போர்க்குற்ற ஆதாரங்களை சிங்குக்கு காட்டியிருப்பான்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பங்காளியை காப்பாற்ற வேண்டுமே... அதனால் இந்தியாவில் மாற்றம் ஏற்படாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவுக்கு ஆதரவா உள்ள கூத்தமைப்பு உறுப்பினர் உடனே ராஜினாம செய்யவேண்டும். :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்லிமெண்டில் -தூங்கும் பிரதம, எழுப்பாதீர்கள் என்று எச்சரிக்கும் பிரனாப் முகர்ஜி… !

sleeping-pm.jpg

http://vimarisanam.wordpress.com/2012/03/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எங்களுக்காக அமெரிக்காவோ, இந்தியாவோ நடக்க முயலவில்லை. மகிந்த கொண்டிருக்கின்ற சீனாவுடனான நட்பில் தாக்கத்தை ஏற்படுத்தவே இருநாடுகளும் முயல்கின்றன. அது ஒருவகையில் எமக்குச் சார்பானதாகத் தோன்றுகின்றது அவ்வளவு தான்.

இந்தியா இத்தனை நாளும் மௌனமாக இருந்தமைக்குக் காரணம், சிறிலங்கா அரசு எவ்வகையான நடவடிக்கையை இந்தியாவுடன் மேற்கொள்ள விரும்புகின்றதை அறியவே. சிறிலங்கா அரசு தான் சீனாவுடன் செல்லப் போவதாக குறிப்புணர்த்தியதும், இந்தியா மீண்டும் சிறிலங்காவை குறைந்தபட்ச நட்பாக வைத்திருக்க மீண்டும் அது சார்பானதாக ஒரு போக்கை ஏற்படுத்துகின்றது.

இதிலே ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் போல நாங்கள், பீரிஸ்சுக்கு வயிற்றுப்போக்கு, விபச்சாரவிடுதியில் பிரமுகர்கள் என எழுதி சிற்றின்பம் கண்டு கொண்டிருக்கின்றோம். உண்மையில் இப்படி எழுதி அனுபவிக்கத் தான் தனிநாடு கேட்டோமா?

எம்மால் என்ன செய்ய முடியுமெனில் குறைந்தபட்சம் ஏதாவது பலத்தோடு சேர்ந்து நின்று இயங்குவது தான். அது அமெரிக்காவோ, சீனாவோ, ரசியாவோ... எவராகட்டும். அவர்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்தாவது நம் தேவையை நிறைவு செய்வது தான் சரியாகத் தோன்றுகின்றது.

அது சமர்ப்பித்த ஆணைக்குழு அறிக்கைச் செயற்படுத்தச் சொல்லுவதினூடகத் அமெரிக்கா பின்வருவனவற்றை எதிர்பார்க்கின்றது. அதன் அறிக்கையைத் தானே செய்யச் சொல்கின்றோம், என்பதினுடாக மற்றவர்களின் ஆதரவைப் பெறுதல்.

அந்த ஆணைக்குழுவின் அறிக்கையைச் நடமுறைப்படுத்துவது சிறிலங்கா அரசால் முடியாது என்பதன் அடிப்படையில் அது மீது மனிதஉரிமை சம்பந்தப்பட்ட அழுத்தங்களைக் கொடுத்து, சீனாவைத் துரத்த வைத்தல்.

சீனாவைச் சிறிலங்கா அரசு துரத்தும்வரை சிறில்ஙகா அரசு நடைமுறைப்படுத்துதோ இல்லையோ மனித உரிமைகளை அமெரிக்கா தூக்கிப் பிடிக்கலாம். ஒருவகையில் பிறப்பாடு, அமெரிக்காவின் வேறுவழியினறி அமெரிக்காவின் கைப்பிள்ளையாகச் சிங்கள அரசு மாறவும் கூடும். யார் கண்டது....

இந்தியாவின் தர்மசங்கடம் இது தான், சீனாவின் கையில் இருந்து சிறிலங்காவை விடுவித்தால், அது மறுபடியும் அமெரிக்காவின், மேற்குலகின் கையில் சிக்கிவிடும். எனவே இரண்டுக்கும் சாராமல் சிங்கள அரசுக்குச் சார்பாக 3வது பாதையை அது திறக்க முயலக்கூடும்.

உண்மையில் புலம்பெயர்ந்த நாங்கள், சீனாவையோ, இந்தியாவையோ, அமெரிக்காவையோ தெரிவு செய்தாலும், அவர்கள் தங்களன் தேவைக்காக எங்களைப் பாவிப்பார்கள் என்பாது மட்டுமே உண்மை. எங்களின் தேவைக்காக யாரைப் பாவிக்கலாம் எனத் தீர்க்கமான முடிவினை எடுப்பதில் தான் எம் குத்துவெட்டுக்கள மீணடும் ஆரம்பிக்கலாம்.

QUESTION: On Sri Lanka?

MR. TONER: Yeah.

QUESTION: Do you have anything on the resolution against Sri Lanka’s human rights violation in Geneva?

MR. TONER: Well, you saw – and I would refer you to the opening remarks by Ambassador Donahoe in – during the Human Rights Council. She gave a very extensive description of what our efforts are all about in tabling a draft resolution on Sri Lanka for consideration by the council. And essentially, our goal here is to get the countries of the world to join in encouraging the Government of Sri Lanka to take steps needed to ensure meaningful and lasting national reconciliation after this – their long conflict. This is something we’ve been asking the Government of Sri Lanka and its – through its Lessons Learned and Reconciliation Commission to address for some time. So it remains a serious concern.

QUESTION: The government of the southern Indian state of Tamil Nadu has asked the Indian Government to support that draft resolution and support the U.S. position. Have you heard anything from the Indian Government on this?

MR. TONER: I’m not aware that we’ve had – that we’ve gotten any communications from the Indian Government. I can check on that.

<a href="http://www.state.gov/r/pa/prs/dpb/2012/03/185626.htm#SRILANKA">http://www.state.gov/r/pa/prs/dpb/2012/03/185626.htm#SRILANKA

தமிழினப் படுகொலைகளை எந்தக் காரணம் கொண்டும் ஆதரிக்கும் அனைவரும் சிதறி, அழிந்து, நாசமாகப் போகவேண்டும் என்பது தான் சூடு, சொரணை, மானம், ரோஷம், மனச்சாட்சி கொண்ட ஒவ்வொரு தமிழனதும், நீதி, நியாயங்களில் நம்பிக்கையுள்ள, மனிதாபிமானம் உடைய ஒவ்வொரு மனிதனதும் விருப்பம், பிரார்த்தனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.