கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
வாழ்க்கை கனவுகள் நிறைந்தது. சிலசமயம் அது மெய்யாகிறது முன்னொரு காலத்தில் நடந்தது. கட்டிட திணைகளத்தில் வேலை கிடைத்த செய்தியோடு கடிதம் ஒன்று வீடு தேடி வந்தது. முதன்மை பொறியியளாரரை(chief engineer - ce) கண்டி அலுவலகத்தில் பார்த்தேன் . படிப்புக்கும் வேலைக்கும் பெரிய இடைவெளி இருப்பதை சொன்னார். வில்கமுவவில் புதிதாக முளைக்கிற கட்டிடத்துக்கு தள பொறியாளர்(site engineer)வேலை. பயணத்துக்கு அரசாங்க வாகனம் தரமுடியாது என்றார். தங்கியிருந்து வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் தரமுடியாது என்றார். முதல் வேலையில் எல்லாவற்றுக்கும் தலையாட்ட வேண்டும் என்கிற எழுதப்படாத விதி தெரியும். அப்படியே செய்தேன். நியமன கடிதம் …
-
- 11 replies
- 3.4k views
-
-
அப்பா வீட்டில் சட்ட திட்டம் போடுவது குறைவு. அதை செய் இதை செய்யாதே என்று நச்சரிப்பது அரிதிலும் அரிது. இருப்பினும் சின்ன வயதிலிருந்து சில பழக்கங்களை வீட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார். அதிலொன்று இருட்டியதுவும் புத்தகமும் கையுமாய் மேசையில் போய் குந்த வேண்டும். இலங்கை வானொலியில் பின்னேர செய்தி முடிகிறபோது பெரும்பாலும் பகலை இரவு முழுவதுமாக விழுங்யிருக்கும். அதற்கு பிறகு விளையாட முடியாது. முகம் கழுவி சாமி கும்பிட்ட பிறகு புத்தகத்தோடு மேசைக்கு போக வேண்டும். இரவு சாப்பாடுவரை புத்தகத்தோடு இருக்கவேண்டும். என் பள்ளி காலங்கள் முழுவதும் இது வழக்கத்தில் இருந்தது. படிக்கிற காலத்தில் இது நிறைய உதவியதாக என்னளவிலான எண்ணம். இங்கு கனடாவில் சமர் காலத்தில் இர…
-
- 5 replies
- 3.2k views
-
-
பால்யத்து நாட்களில் இருந்து இன்றுவரை காலம் எனக்கு பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களில் பலரின் நினைவுகள் என்னுக்குள் பசுமையாய் படிந்துபோயிருக்கிறது. அவற்றில் சில நினைவுகளுக்குள் சில இரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. 48 வருடங்கள் வாழ்ந்து கழித்தபின், எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு காட்சியில் அவர்கள் பற்றிய நினைவுகள், நீரின் அடியில் இருந்து மேல்நோக்கி எழும் நீர்க்குமிழிகள் போன்று எனது நினைவுகளின் மேற்பகுதிக்கு வருகின்றன. இன்றைய கதையும் அப்படித்தான். Trivandrum Lodge என்னும் மலையாளப் படத்தை இன்று பார்க்கக்கிடைத்தது. எனது தம்பியைப்போன்று, நான் மலையாளப்படங்களை தேடித் தேடி பார்ப்பவன் அல்லன். மோகன்லாலின் நண்பனும் அன்று. அவ்வப்போது காலம் என்க்கு மிகவும் சிறப்பான மலையாளப்ப…
-
- 3 replies
- 2.2k views
-
-
ஒரு அறை நடுவில் ஒரு விளக்கு எதிர் எதிர் மூலைகளில் இரண்டு ஆண் பூனைகள், இரண்டு பெண் பூனைகள் விளக்கு அணைக்கப்படுகின்றது அடுத்து என்ன நடக்கும்? ------------------- இதனை கள உறவுகளே தொடருங்கள்
-
- 13 replies
- 1.3k views
-
-
நேற்றைய இரவுச் செய்தியில் சொன்னது போலவே இன்று அதிகாலையில் இருந்து பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வழமைக்கு மாறாக எனது கார் மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி போய்க்கொண்டிருந்தது. காரின் வெப்பமானியில் அப்போதைய வெப்பநிலை -37F எனக் காட்டியது. அமெரிக்காவுக்கு வந்த இந்தப் பத்து வருடத்தில் இருந்து இந்தப் பாதையால்தான் வழமையாக நான் வேலைக்குப் போய் வருவது வழக்கம். தினசரி போய்வரும் பாதை என்பதால் கண்ணை மூடிக்கொண்டு காரை ஓட்டினாலும் வலம் - இடம், சந்திச் சிக்னல், மேடு - பள்ளம் எல்லாம் தாண்டிப் பதினேழு நிமிடங்களில் வேலையில் இருப்பேன். இருந்தாலும் இன்றைய பனிப் பொழிவு இன்னும் கொஞ்சம் கூடிய எச்சரிக்கை தேவை என்பதை என் மண்டைக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது. அந்த…
-
- 15 replies
- 3.9k views
-
-
தேசத்திற்கு விலைதந்த மகளுக்கு தேவையானது 5 பவுண்கள் மட்டுமே. தேசத்தின் விடுதலைக்குக் கொடையளித்தவர்கள் பலருக்கு முகமில்லை முகவரியில்லை பெயரில்லை அவர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை. அநாமதேயமாய் அவர்களது வரலாற்றை அவர்கள் பெற்றுத் தந்து வெற்றியும் அவர்களைப் பெற்ற தேசமும் மட்டுமே அறியும் கதைகள். ஈகத்தின் உச்சமாக இந்த மனிதர்களின் கொடை எங்கள் தேசத்தில் எழுதப்பட்ட பலரது வரலாற்றோடு வரலாறாக....! இப்படித்தான் ஒரு வெற்றியைப் பெற்றுத்தர அந்தக் கரும்புலி தான் நேசித்து ஊரை உறவுகளை விட்டு விடுதலையமைப்பில் இணைந்து கொண்டது. அந்தப் போராளி ஒருநாள் கரும்புலியாகி தனது ஈகத்தின் உச்சத்தையடையும் நாளொன்றை காலம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. தேவைகளும் கடமைகளும் தமிழர் வாழ்நிலங்களுக்கும் அப…
-
- 0 replies
- 880 views
-
-
கொமிட்டி.....சங்க காலம் தொட்டு இன்றுவரை சங்கங்கள் அமைப்பது என்பது எங்களது இரத்தத்தில் ஊறிய ஒன்று.இன்று பலர் தமிழ் வளர்க்க,சமயம் வளர்க்க,விளையாட்டு,விடுதலை இன்னும் பல விடயங்களை வளர்ப்பதற்காக இந்த சங்கங்களை அமைத்து அதற்கு ஒரு நிர்வாக குழுவை உருவாக்கி அதில் தலைவர்,செயலாளர்,காசாளார் பதவிகளை அடிபட்டு பெற்று சமுதாயத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.ஆனால் சங்கங்களது நோக்கங்களை நிறை வேற்றுவதிலும் பார்க்க தனி நபர்களின் நோக்கங்களும் ஆசைகளும் இந்த சங்கங்கள் மூலம் நிறைவடைகிறது.இது தாயகத்தில் அரசியல் ,ஆயுதப்போராட்டம் போன்றவற்றில் தொடங்கி இன்று புலம் பெயர்ந்த தேசங்கள்வரை செல்கின்றது. சங்கங்களை உருவாக்குவதில் இருக்கும் ஒற்றுமை அதை உடைப்பதிலும் எம்மவருக்கு உண்டு.ஒரு சங்கம் தொட…
-
- 2 replies
- 2.3k views
-
-
சீமைக் கிழுவை மரம் இலை தெரியாது நாவல் நிறப்பூக்கள் நிறைந்து குலுங்கியது, காட்டுப் பெண்ணைப் பிடித்து வந்து 'ஆஸ்கார் டி ல றென்ற்றா' ஆடை அணிவித்து நியூயோர்க்கின் தெருவில் விட்டதுபோல் அவ்வீட்டின் வேலி போகன் விலாவுடன் சேர்த்துச் சீமைக் கிழுவையினை நகர்ப்புறப்படுத்திவிட முயன்று தோற்றிருந்தது. காட்டுமரத்தின் பூவின் நறுமணத்தில் கள்ளிருந்தது. கண்கள் சொருகிச் சிருங்காரம் நிறைந்து கள்ளுண்ட மந்தியாய் காட்டுச் சிறுக்கியின் நறுமணத்தில் திழைத்து நின்றிருந்தேன். கோடன் சேட்டும், சாரமும் கட்டி, ஏசியா துவிச்சக்கர வண்டியில் ஒருவர் மிதிக்க மற்றவர் உரப்பையிற்குள் உலோகத்தை மறைத்து வைத்து அமர்ந்திருக்க அந்த இருவர் சென்றனர். இயக்கம் நிறுவனமயப்பட்டு வரிக்குள் சிக்குவதற்கு முந்தைய காலங்கள் சீம…
-
- 3 replies
- 2.7k views
-
-
இரத்தக்காட்டேரி! சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை வரைந்திருந்ததைப் பார்த்த அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன. மேடுகளாகவும் பள்ளங்களாகவும் காற்றினால் வரையப்பட்டிருந்த அந்த அழகான வேலைப்பாடுகள் நிறைத்த சித்திரங்களை அவள் எப்போதுமே ரசிப்பது வழக்கம். பனை மரங்களும் தென்னம்பிள்ளைகளும் நாவல் மரங்களும் மலை வேம்புகளுமாக பரவிக் கிடந்த அந்த காட்டு வழியில் அவள் கண்கள், பற்றைகளுக்குள் பதுங்கியிருந்து என்னைப் பறித்துக் கொள் என்று அழைப்பு விட்ட ஈச்சை பழங்களையும் பார்க்கத் தவறவில்லை. மண்ணில் அவள் கால்கள் புதைந்து எழும்போது ஏற்பட்ட இதமான உணர்வு அவளை ஆட்கொண்ட போது …
-
- 39 replies
- 4.2k views
-
-
"துரோகம்...!" துரோகம் என்றால் என்ன ? கூடவே இருந்து குழி பறித்தல் அல்லது நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுதல். அதே நேரம் வாழ்க்கை, காதல் இரண்டும் ரோசாக்களின் படுக்கை அல்ல! இது அவளுக்கு எனோ புரியவில்லை. அவள் தன் காதலனை அந்த ஆற்றங்கரை ஓரத்தில் இன்னும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக காணுவாள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். அவள் ஒன்றாக கூடி வாழ்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. என்றுமே அவள் ஐயப்படும் மாதிரி அவன் நடந்ததும் இல்லை! என்றாலும் அவன், அவளுடன் கணவன் மனைவி உறவுடனே, காதல், காமம் இரண்டிலும் நெருக்கமாக அனுபவித்தே வாழ்ந்தான். அவளும் அவன் மேல் உள்ள நம்பிக்கையில், அவனின் விருப்பங்களுக்கு விட்டுக் கொடுத்தே தினம் தினம் வாழ்ந்தாள். ஒர…
-
- 1 reply
- 323 views
-
-
அப்பா போன்” மகனிடம் இருந்து போனை வாங்குகின்றேன். “அண்ணை நான் இங்கு பீட்டர்” “பீட்டர் “ “அண்ணை கொம்பனியில இருந்த காரைநகர் பீட்டர் “ “டேய் எப்படி இருக்கின்றாய்? எங்க இருக்கின்றாய்?” “ அண்ணை நான் கனடா வந்து ஒட்டாவில் படித்துமுடித்துவிட்டு இப்ப டெக்ஸ்சசில் வேலை எடுத்து போய்விட்டன், நீங்கள் எப்படி இருக்கின்றீங்கள் அண்ணை ? ஒட்டாவாவில் இருக்கும் போது நீங்கள் அயன்சின் அக்காவை கலியாணம் கட்டி டொராண்டோவில் இருப்பதாக கேள்விப்பட்டனான் .பிள்ளைகள் இருக்கா அண்ணை?” “ இரண்டு பெடியங்கள்,வளர்ந்துவிட்டார்கள் .இப்ப என்ன இருந்தா போல என்ரை நினைவு” “போன மாதம் டொராண்டோவிற்கு ஒரு செத்த வீட்டிற்கு வந்தனான் ,அங்கு நந்தனை கண்டனான் ,அப்ப பழைய கொம்பனி கதைகள் கதைக்கும் போது உங்க…
-
-
- 43 replies
- 5.7k views
-
-
அஞ்சலி தன் சந்தோசம் என்றாலும் துக்கம் என்றாலும்.... முதலில் இவனோடுதான் பகிர்ந்துகொள்வாள். அன்றும் அப்படித்தான்..... அவள் இந்தியாவிலிருந்து போன் பண்ணியிருந்தாள். வழமைக்கு மாறான அவளது கனமான குரல்... அவள் நன்கு அழுதிருக்கிறாள் என்பதனை உணர்த்தியது. "என்ன அஞ்சு... என்ன ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" என அவன் கனிவாக விசாரிக்க... மறுமுனையில், விம்மத் தொடங்கினாள் அஞ்சலி. "என்ன நடந்தது அஞ்சு....? என்ன ஆச்செண்டு சொன்னாத்தானே தெரியும்.... " என மீண்டும் வினவ, "நான் நாளைக்கே மலேசியா வாறன். எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை. நான் லண்டனுக்கு திருப்பிப் போகேலடா. உன்னோடயே வந்து இருக்கப்போறன்.... !" சொல்லிவிட்டு மீண்டும் விம்மியழத்தொடங்கினாள். "அஞ்சு.... என் செல…
-
- 4 replies
- 3.7k views
-
-
தேவகிக்குத் தன்னை நினைக்கவே ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் பச்சாதாபத்துடன் கூடிய அழுகையும் வந்தது. வாற மாதம் வந்தால் இவ்வுலகில் எண்பது ஆண்டுகளைக் கழித்துவிட்ட நிறைவு. இன்னும் எத்தனை நாட்களோ மாதங்களோ வருடங்களோ யாரறிவார் என்னும் எண்ணம் தோன்றினாலும் நான் இன்னும் கொஞ்சக் காலம் இருப்பன். அவ்வளவு லேசில போயிடமாட்டன் என்னும் ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டு ஏனோதெரியவில்லை அதனூடே சிரிப்பும் வந்தது. சிறிய வயதில் எல்லாம் தன் நாட்களை நினைத்துப் பார்த்தால் துன்பங்களும், நிறைவேறாத ஆசைகளும், போராட்டங்களுமாக வாழ்வின் இளமைக்காலம் கழிந்தது. பின்னர் வந்த காலங்களில் தன் முயற்சியில் மனம் சோராது போராடியிராவிடில் இன்று இப்படி ஒரு நிலையினை அடையக்கூடியதாக இருந்திருக்குமா என்று மனம் பெருமையும் கொண்ட…
-
- 32 replies
- 3.3k views
-
-
கறுப்பி ஒரு பேப்பருக்காக கோமகன் அமாவாசையின் கரிய நிறம் அந்தக் கிராமத்தில் அட்டைக் கரியாக மண்டியிருந்தது . அவ்வப்பொழுது வவ்வால்களின் பட பட சிறகடிப்பும் , கூவைகளின் புறுபுறுப்பும் , சில்வண்டுகளின் சில்லெடுப்பும் , ஒரு சில கட்டாக்காலி நாய்களின் ஊளையும் அந்தக் கிராமத்தின் அமைதிக்கு உலை வைத்துக்கொண்டிருந்தன . கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கந்தப்புவின் மனதுக்கு இந்த முன்னெடுப்புகள் எதோ ஒன்று நிகழப் போவதை உணர்த்தியது . கந்தப்பு மெதுவாகக் கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்து சென்று தனது கொட்டிலின் மூலையில் இருந்த சாமி படத்தின் முன்னால் இருந்த திருநீற்றுக் குடுவையினுள் கையை விட்டு நெற்றி நிறைய திருநீற்றை அள்ளிப் பூசி வாயிலும் சிறிது போட்டுக்கொண்டு மீண்டும் கயிற்றுக…
-
- 8 replies
- 1.3k views
-
-
போராட்டத்துக்குக் கட்டியங்கூறி பண்டார வன்னியன் நினைவில் அரை நூற்றாண்டுகளின் முன்னம் 1968ல் எழுதபட்ட எனது முதல் கவிதை மொழி பெயர்புடன் . . நகர்கிறதுபாலி ஆறு - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ள…
-
- 0 replies
- 3.5k views
-
-
மூன்று வாரங்களுக்கு முன்பாக என் Mobile phone அதிகாலை 4 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்து விட்டது என்று அதிர்வை ஏற்படுத்தியது இந்த நேரத்தில் வரும் குறும்செய்திகள் எனக்கு எப்பவுமே சந்தோசத்தினை கொடுப்பதில்லை. மரணம் பற்றிய அறிக்கைகளையும், துயரம் அப்பிய செய்திகளையுமே தாங்கி வருவன அவை. கிலேசம் மிக்க தருணங்களை தருவன அவை. நித்திரையில் இருந்தாலும் பூனை நடந்தாலே அதன் சத்தத்தில் முழிச்சு எழுபவன் நான். பொதுவாக IT யில் தொழில் செய்பவர்களுக்கு ஆழமான நித்திரை என்பது ஒரு கனவு. எனக்கு அது அநேகமாக வாய்ப்பதில்லை. குறுஞ்செய்தியை வாசிக்கின்றேன். எனக்கு மிகவும் நெருக்கமான மாமா - அம்மாவின் தம்பி - யின் மரணச் செய்தியை தாங்கி அது வந்திருந்தது. அக்கா அனுப்பி இருந்தா. அவரை மா…
-
- 22 replies
- 5.1k views
-
-
எனது சிறுவயது முதல் என்னை அதிகமா நேசித்த மனிதர்களில் எனது அப்பாச்சி முன்னணியில் உள்ளார் அம்மாவை விட அவர் மேல பாசம் அன்பு கொள்ளை பிரியம் எனக்கு ஒரு நெடியெனும் என்னை காணமல் இருப்பது அப்பாச்சிக்கு எதோ தொலைத்து விட்ட சோகம் இருக்கும் எங்க போட்டான் இன்னும் காணவில்லை சுற்றிக்கொண்டு வருவான் ஆளை காணம் செக்கல் பட்டுடு விளக்கு வைக்கும் நேரம் ஆகுது இவனை காணம் என தனியா விட்டின் திண்ணையில் இருந்து கதைப்பார் . அம்மா பேசியபடி இருப்ப அவன் வருவான் நீங்க வந்து தேத்தண்ணிய குடியுங்க எங்க போகபோறான் எங்காவது பெடியலோடா நிப்பான் இப்ப வந்திடுவான் என்று சொன்னாலும் அப்பாச்சி கேளாது நாலுதரம் ரோட்டுக்கு வந்து எட்டி பார்க்கும் சிலவேளை அப்பொழுதுகளில் நான் வருவேன் ......'என்ன கிழவி ரோட்டில யாரை சயிட…
-
- 21 replies
- 2.9k views
-
-
பீனாகொலடா ( சிறுகதை ) / சாத்திரி ( பிரான்ஸ் ) Oct. 17 2014, அக்டோபர், இதழ் 60, இலக்கியம், சிறுகதை, முதன்மை 5 no comments இன்று லீவு நாள் வழக்கம் போல ஆறுதலாக நித்திரையால் எழும்பி சோம்பல் முறித்து எழும்பி போய் ஒரு பிளேன் டீ யை போட்டு எடுத்த படி ஹாலுக்குள் வந்து டிவியை போட்டு விட்டு சோபாவில் அமர்ந்து டீ யை ஆசையாய் ஒரு உறுஞ்சு உறுஞ்சும் போதே "என்னாங்கோ ஒருக்கா வாங்கோ "எண்டு அறையில் இருந்து மனைவியின் சத்தம்.."லீவு நாளிலை கூட நிம்மதியாய் ஒரு டீ குடிக்க முடியேல்லை" என்று சின்ன சினத்தோட அறைக்குள் போய் எட்டிப்பார்க்க கட்டிலில் குவிந்து கிடந்த துணிகளில் சிலதை எடுத்து என்னிடம் நீட்டியபடி இதுகளை கொண்டு போய் ரெட் குறொஸ் பெட்டிக்குள்ளை போடிட்டு வாங்கோ முக்கியமா இந்த பச்சை…
-
- 19 replies
- 3.1k views
-
-
அது ஒரு தனியார் கல்வி நிறுவனம். நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். முதல் வாங்கில் இருக்கும் கூட்டத்தில் நானும் அடக்கம். வாத்தியார்மார் முன்னுக்கு இருகிற படிக்கிற பிள்ளையள் என்று ஒரு நல்லெண்ணத்தில இருக்க, நாங்கள் நசுக்கிடாமல் நல்லாச்சுத்து மாத்து விடுவம். தமிழ் படிப்பித்த ஆசிரியை திடீர் என்று நின்று விட்டார். அன்று புதுசாக யாரோ தமிழுக்கு வரபோகினம் என்று எல்லாருக்கும் டென்சன். அதிபருடன் மெல்லிதாக கருப்பாக கிட்டத்தட்ட நடிகர் நாகேஷ் கருப்பாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவர். இவர்தான் இனி உங்கள் தமிழ் ஆசிரியர் என்று அறிமுகம் செய்து விட்டு அதிபர் போய்விட்டார். வந்த உடனே "வேற்றுமை " என்று கரும்பலகையில் எழுதி விட்டு முதலாம் வேற்றுமையில் தொடங்கி முழங்கத…
-
-
- 14 replies
- 2.9k views
-
-
( இப்பதிவு வாலிபவயதுக் குறும்பு பாகம் 6 ன் தொடர்ச்சியாகும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=138217 ) அவன் அம்மாவும், மஞ்சுவின் அம்மாவும் அடைப்பில்லாத அந்த வேலிநடுவில் இருந்த வேப்பமரத்தடி வேரில் அமர்ந்து ஊர்க்கதை, உறவுக்கதை பேசிக்கொண்டிருக்கும் போது, அவனும் மஞ்சுவும் மணலில் வரம்புகட்டிக் கீச்சு மாச்சுத் தம்பளம் விளையாடிய காலத்திலிருந்து, இனிப்புக்கும், பலகாரத்திற்கும் அடிபடுவதும், கோள்சொல்லி அவள் அவனை அடிவாங்க வைத்து ரசிப்பதும், பாசத்தோடு காக்காக் கடி கடித்து அவள் அவனுக்கு மிட்டாய் ஊட்டிவிடுவதும், பூப்பறித்து அவன் அவள் தலையில்சூட்டி அழகுபார்ப்பதும்,, அந்த இரு தாய்மார்களையும், பூரிப்படைய வைக்கத்தான் செய்தது. அவர்கள் உள்ளங்களில் இனிமையான கற்பனைகள் வளர்ந்…
-
- 10 replies
- 1.8k views
-
-
செய்தது நீ தானா …-சிறுகதை விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில் இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்க…
-
- 0 replies
- 2k views
-
-
"என்னுயிர் தோழியே!" பழமை வாய்ந்த, அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும் அதனுடன் அமைந்த வாசிக சாலையும், நான் பிறந்து வளர்ந்த, எனக்கு மிகவும் பிடித்த ஊரான, அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு, முக்கிய அடையாளமாக அன்று இருந்தன. அங்கு தான் எங்கள் வீடு அத்தியடி புது வீதியில் அமைந்து இருந்தது. எங்கள் வீட்டில் பனை, தென்னை, கமுகு, மா, பலா என சில மரங்களும், செவ்வரத்தை, ரோசா, மல்லிகை என பூ மரங்களும் நிறைந்து இருந்தன. நான் சிறுவனாக இருந்த அந்தக் காலத்தில், எம் பக்கத்து வீட்டில் இருந்தவள் தான் அவள். அவள் பெயர் செவ்வரத்தை, அந்த பெயருக்கு ஏற்ற அழகுடன், எந்த நேரமும் புன்னகை சிந்தும் முகத்துடனும் என்னுடன் வந்து, ஓய்வு நேரங்களில் …
-
- 0 replies
- 259 views
-
-
எனக்கு லண்டன் நிலக்கீழ்த்தொடருந்தில் பயணம் செய்வதுதான் பிடிக்கவே பிடிக்காத விடயம். ஆனாலும் சிலவேளைகளில் பயணம் செய்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம். ஏறிக் கொஞ்ச நேரத்திலேயே பார்த்தவற்றை மீண்டும் மீண்டும் பார்ப்பதனால் தூக்கமும் விரைவில் வந்துவிடும். இதற்கு முன்னொருமுறை பயணம் செய்தபோது தூக்கம் எப்படித்தான் என்னைத் தழுவியதோ கண்விழித்துப் பார்த்தபோது நான் இறங்கவேண்டிய இடம் கடந்து பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. பிறகென்ன அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி மற்றத் தொடருந்து பிடித்து வீடுவந்து சேர ஒரு மணிநேரம் தாமதம். இன்று தூங்காது எப்பிடியாவது சரியான நேரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மனதுள் தீர்மானித்தபடி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பலர் செய்தித்தாள்களில் மூழ்கிப்போய் உள்ளனர். ஒர…
-
- 42 replies
- 3.9k views
-
-
வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை. விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும். இத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஒருவர் றட்ணம் என்ற இயக்கப் பெயரைக் கொண்ட தெய்வேந்திரம் ஜெயதீபன் என்ற இயற்பெயரோடு நெருப்பின் சக்தியாக இருந்ததை காலம் ஒரு போதும் அடையாளப்படுத்தியதில்லை. 1974ம் ஆண்டு உரும்பிராய் மண்ணில் தெய்வேந்திரம் தம்பதிகளின் 2வது குழந்தையாகப் பிறந்த ஜெயதீபன் ஒரு சாதா…
-
- 10 replies
- 7k views
-
-
Sunday, June 17, 2018 நூறாய் பெருகும் நினைவு நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., ஓமோம்... சொல்லியும் ! நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை. அப்ப ஊரில எந்த இடம்? சிலருக்கு பூராயம் ஆராயாமல் பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன். அதையும் மீறி வரும் கேள்வி இது :...., …
-
- 11 replies
- 4k views
-