கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
650 topics in this forum
-
யார் சொல்லுவார்? சமீபத்தில்(25.03.2018) யாழின் கருத்துக்களத்தில் நவீனன் தரவிட்டிருந்த இணைப்பின் தலையங்கம் ஒன்று, பழைய நினைவொன்றை என்னுள் மீட்டிப்பார்க்க வைத்தது. “பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்” என்பதே அந்தத் தலையங்கம். 83, 84 ஆண்டு காலங்களே அதிகமான தமிழர்கள் யேர்மனிக்கு புலம் பெயர்ந்த காலங்களாக இருந்ததன. ஈழத் தமிழர்களுக்கு வடக்குத்தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, பல ஈழத்தமிழர்கள் யேர்மனியின் வட திசை சார்ந்த மாநிலமான Nordrhein-Westfalen இலேயே அப்பொழுது தங்கிக் கொண்டார்கள். புலம் பெயர்ந்து வந்த போதும் தாங்கள் சார்ந்த போராட்டக்குழுக்களை யேர்மனியில் காலூன்ற வைப்பதற்கு அவற்றின் அபிமானிகள் அன்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இதில் தெற்கு யேர்மனியில்…
-
- 9 replies
- 2.9k views
-
-
எனது கனவிலும் நினைத்து பார்த்திராத ஒரு நகரத்திற்கு காலம் என்னை இழுத்துக்கொண்டுபோய் விட்டிருந்தது .நள்ளிரவு டெல்கி விமான நிலையத்தில் நண்பருடன் இறங்கி சக பயணிகளுடன் பச்சை நிற லைட் எரியும் வெளியே செல்லும் பாதையில் நிற்கும் போது ஒரு சீக்கிய அதிகாரி வந்து எமது சூட்கேசுகளை பரிசோதிக்க வேண்டும் என்று உள்ளே அழைத்துசெல்லுகின்றார் .என்னுடன் கையில் கொண்டுவந்த கைப்பையில் தான் எனது உடுப்புகள் அனைத்தும் இருந்தது . சூட்கேஸ் பாண்டேஜ்,பிளாஸ்டர்கள்,கையுறைகள் ,மருந்துவகைகள் என்று நிரம்பியிருக்கு .நீ ஒரு வைத்தியரா? என்று கேட்டார் அந்த அதிகாரி . இல்லை, இது தமிழ் நாட்டு அகதி முகாம்களில் இருக்கும் எமது மக்களுக்கு கொண்டு செல்லுகின்றேன் என்றேன் .இந்த பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவர முன்அனுமதி …
-
- 15 replies
- 2.9k views
-
-
1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட இறுக்கமான முற்றுகையைத் தகர்க்க முடியாமல் சிறிலங்காப்படை திணறிக்கொண்டிருந்தது. முற்றுகையை உடைக்கச் சிறிலங்கா தனது முப்படைகளின் முழுப்பலத்தையும் பிரயோகித்தது. நூற்றியேழு நாட்கள் கடுமையாகப் போரிட்ட சிறிலங்கா இராணுவம் இறுதியில் இரவோடிரவாக யாழ்; கோட்டையைக் கைவிட்டு ஒடிவிட்டது. யாழ்க்கோட்டையின் பின்னடைவை ஈடு செய்வதற்காக, ஒரு மாதத்திற்குள்ளாகவே பலாலி இராணுவத்தளத்தில் இருந்து பாரிய நகர்வைச் செய்தது சிங்கள இராணுவம். தாக்குதலணிகள் கடுமையான …
-
- 21 replies
- 2.9k views
-
-
எனது வீட்டு வரவேற்பறை பத்து வருடப் பழசு. ஆட்களைத்தான் மாற்ற முடியாது. சரி அறைகளின் வண்ணங்களையாவது மாற்றினால் மனதுக்கு இதமாக இருக்கும் எண்டு கணவரைக் கேட்டால், கணவர் அதுக்கென்ன மாத்துவம். எல்லாரும் சேர்ந்து பழைய பேப்பரை உரியுங்கோ. நான் பெயின்ற் அடிக்கிறன் என்றார். எனக்குத் தெரியும் உது நடக்காத வேலை எண்டு. ஏனென்டா போன வருசமும் இப்பிடித்தான் கொரிடோருக்குச் சொல்லி கடைசியா நான் தான் பெயின்ட் அடிச்சு முடிச்சது. அதனால நீங்களோ நாங்களோ ஒண்டும் செய்ய வேண்டாம். ஆட்களைப் பிடிச்சுச் செய்வம் எண்டு சொல்ல, வீணா ஏன் அவங்களுக்குக் காசு எண்டு இரண்டு மூண்டு நாள் இழுபறியில் பக்கத்து வீட்டில இருக்கிற போலந்துக் காரனைக் கேட்பதென முடிவெடுத்தேன். போன மாதம் அவன் முன் வீட்டு மதில் கட்டினதைப்…
-
- 28 replies
- 2.8k views
-
-
ஒருத்தரும் குழம்பாதேங்கோ எல்லாரும் நல்லாக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தொடர்கள் எழுதிக் கலக்குகிறார்கள் சரி நானும் எழுதிப் பார்ப்போம் என்று வந்திருக்கிறேன். கடியுங்கோ கல்லெறியாதேங்கோ அன்புள்ள மன்னவனே. குறுந்தொடர்தொடர் 1 நரேனினதும் அம்மாவினதும் உரையாடலை கூர்ந்து கேட்டபடி சுமி தன் குழந்தையை அவதானித்துக் கொண்டிருந்தாள். அவள் அவதானிப்பதை கவனியாதவன்போல நரேனும் சுமியின் அம்மா பத்மாவுடன் பேசிக் கொண்டிருந்தான். இயக்க அலுவல்கள் நிமித்தம் கிழக்கு மாகாணத்தில் நின்றிருந்தவன் நீண்ட நாட்களுக்குப்பின்னர் இங்கு வந்திருந்தான் “அந்தக் கரனைக் கட்ட குடுத்தெல்லோ வச்சிருக்கோணும். நரேன் உங்கட இயக்கத்தில நாலு வருசம் இருந்த ஆட்கள் கல்யாணம் கட்டலாம் என்று சட்டம் இரு…
-
- 29 replies
- 2.8k views
-
-
தொலைபேசி தொல்லை கொடுக்க எடுத்து "கலோ இங்க சுரேஸ் அங்க யார் ?" "இங்க லாதா உங்க திருமதி சுதா சுரேஸ் இருக்கிறாவோ"என்றாள் நக்கலா. சுரேஸும் பதில் நக்கலாக "திருமதி சுதா இருக்கவில்லை படுத்திருக்கின்றா" "சும்மா பகிடியை விட்டிட்டு டெலிபோனை அவளிட்ட கொடுங்கோ "எதோ அவசரமாக பேசபோகினமாக்கும் என்று நினைத்து டெல்போனை சுதாவிடம் கொடுத்தான்.சுதாவும் ,லதாவும் பாடசாலை காலத்திலிருந்தே நண்பிகள்.புலம்பெயர்ந்த பின்பும் அவர்களின் நட்பு ஒகோ என கொடி கட்டி பறக்கின்றது. புலம்பெயர்ந்த காலத்தில் இவர்களின் உரையாடல் ஆறுமாதத்திற்கு ஒருக்கா அல்லது ஒரு வருடத்திற்கு ஒருக்கா என்றுதான் இருந்தது. காரணம் தொலைபேசி கட்டணம் அந்த காலகட்டத்தில் அதிகமாக இருந்தமையாகும். இன்று இவர்களின் தொடர்பு கு…
-
- 17 replies
- 2.8k views
-
-
அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு “கவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார். “கத்தரிக்காயை நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு ‘கலகல’ எண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டு, ஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் …
-
- 8 replies
- 2.8k views
-
-
அவுஸ்ரேலியாவுக்கு வந்த பின்புதான் சொந்தமாக தொலைபேசி வைத்திருக்க கூடிய நிலை வந்தது.அந்த கால கட்டத்தில் பட்டன் அழுத்தி இலக்கங்களை தெறிவு செய்யும் தொழில் நுட்பம் கொண்ட தொலை பேசிதான் பிரபலம் .வீட்டின் வரவேற்பறையில் ஒரு தொலைபேசியை தொலைபேசி நிறுவன ஊழியர்கள் இணைத்து விட்டு சென்றார்கள்.அத்துடன் இரண்டு மகாபாரத புத்தகத்தையும் இலவசமாக தந்துவிட்டு சென்றார்கள்.ஆர்வக் கோளாறு காரணமாக புத்தகத்தை உடனடியாக திறந்து பார்த்தேன் ,ஒரு புத்தகம் தொலைபேசி பாவனையாளர்களின் பெயர்களும் இலக்கங்களும் ,மற்றது வியாபார ஸ்தாபனங்களின் இலக்கங்களும் பெயர்களுமாக இருந்தது.தொலைபேசி வைக்கும் மேசையாக அந்த புத்தகத்தை பாவிக்கலாம் என்ற யோசனை இந்த புத்திஜீவிக்கு வரவே அதை அமுல் படுத்திவிட்டு மனைவியின் பாராட்டுக்காக கா…
-
- 15 replies
- 2.8k views
-
-
நடந்து முடிந்த ஆறாம் வகுப்புக் கணிதப்பரிட்சையில் வெறும் எண்பது புள்ளிகள் மட்டும் எடுத்திருந்தமை சிறுவனின் வீட்டில் கலம்பகமாகியிருந்தது. ஆர்ப்பாட்டங்கள், திட்டல்களின் பின்னர், கணக்கில் நூறு எடுக்கவேண்டியதன் அவசியம் எடுத்தியம்பப்பட்டு அன்றைய இரவு ஓய்ந்திருந்தது. விக்கிக்கொண்டு சிறுவன் தூங்க முயன்றுகொண்டிருந்தான். உலகை நோக்கி ஒரு ஆவேசம் அவனுள் உணரப்பட்டது. "நெற்றிக்கண் பெறுவதற்கு வழியிருப்பின்…" பெருமூச்சு விட்டபடி, நெற்றியினைச் சுருக்கி, அறையின் ஜன்னல் மீது தனது கற்பனைக் கண்ணைப் பிரயோகித்தான். வீடே அதிர்ந்தது. குறிப்பாக ஜன்னல் கண்ணாடி நொருங்கி விழுவது திண்ணம் என்பது போல் அந்த அதிர்வு இருந்தது. வீட்டை உடைத்துவிட்டோமோ என்ற பதைபதைபதைப்பில், மேலும் அடிவாங்காது தப்பிக்கொள்வதற்கா…
-
- 19 replies
- 2.8k views
-
-
ஒரு காலத்தில் ஊரெல்லாம் சண்டியர்கள் இருந்தார்கள். அவர்கள் அநியாயமாகவும் சிலசமயம் தப்பித்தவறி நியாயமாகவும் நடந்தார்கள். பருத்தித்துறையில் சம்மந்தன் பெயர்போன சண்டியன். சம்மந்தனை கண்டதோ பேசியதோ கிடையாது. அவரின் அடிதடிகள் பற்றிய கதைகளை எனக்கு முன்னம் பிறந்தவர் சொல்ல கேட்டிருக்கிறேன். சண்டியன் சம்மந்தனுக்கு வம்புக்கு ஆள் கிடைக்காத நேரத்தில் பொலிஸ்காரரை கண்டால் அவர்கள் தொப்பி பறிபோகும். இந்த கரைச்சலால் சம்மந்தன் உலாவுகிற தெருக்களில் பொலிஸ்காரர் தனியே நடமாடுவது கிடையாது. வயதான சம்மந்தன் இப்போது மொன்றியலில் இருப்பதாக கேள்வி. ஊருக்குள் இயக்கங்கள் தலை தூக்க சண்டியர்கள் காணாமல் போனார்கள். இரண்டு தாக்குதல்களுக்கு இடையில் வருகிற இடைவெளியில் சண்டியர…
-
- 6 replies
- 2.8k views
-
-
தட்டி வான் 1.தட்டி வான் தெரியாத ஆரும் யாழ்ப்பாணத்தில இருக்க முடியாது.உந்த மினிவான் வரக்குமுன்னம் தட்டிவான் தான் கொடிகாமம்,பருத்துறை,யாழ்ப்பாணம் றூட் ஓடினது. காத்தோட்டமா இருந்து அங்கின இங்கின பராக்கு பாத்துக்கொண்டு போறதுக்கு நல்ல வசதி. 2.தட்டி வான் செய்த கொம்பனிக்காரன் இப்ப யாழ்ப்பாணம் வந்தா அதை லச்சகணக்கில காசு குடுத்து வாங்கிக்கொண்டு போவாங்கள்.ஏனெண்டா 100 வருச பழசு தட்டி வான்.இருந்தாலும் எங்கட ஆக்கள் இப்பவும் ஓடுகினம். 3.பிரச்சினை காலத்தில டீசலோ பெற்றோலோ இல்லாத நேரம் எங்கட ஆக்கள் தட்டிவானை மண்ணெண்ணையில ஒடிக்காட்டினவை.புகை பறக்க காது அடைக்கிற சத்தம் வரும். 4.கொடிகாமத்தில இருந்து யாழ்ப்பாண சந்தைக்கும், பருத்துறை சந்தைக்கும் மரக்கறியள்,தேங்காய் மூடையள்,பிலாப்பழம…
-
- 11 replies
- 2.8k views
-
-
சாவை வென்ற தளபதி லெப்.கேணல்.விமலன்/அன்பழகன் லெப்.கேணல் அன்பழகன் (பலாலி – கைலாயபிள்ளை ஜெயகாந்தன்) விவசாயமும் கடல் வளமும் மிக்க அழகான நிலம் பலாலி. இராணுவ கேந்திர மையமாக அறியப்பட்ட பலாலியென்ற கிராமத்தை உலகில் அறியாதவர்களே இருக்க முடியாது. இந்தப் பலாலி இராணுவ முகாமானது இலங்கையின் பிரதான முகாம்களில் ஒன்றாகவும் இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்டத்துக்கான வழங்கலுக்கான பிரதான தளமாகவும் அமைந்தது. யாழ் கோட்டை முகாம் புலிகளால் முடக்கப்பட்ட நேரத்தில் கோட்டை இராணுவத்திற்கான உணவு முதல் அனைத்து வழங்கலுக்கும் பலாலியே தளமாகியிருந்தது. எத்தனை வசதிகளை வளத்தை பலாலியில் இருந்த படைகள் கொண்டிருந்தாலும் புலிகளின் உறுதியின் முன்னால் எல்லாமே தூசாகிப்போனது தான் விடுதலைப்புலிகளின் வெற்றியின் …
-
- 10 replies
- 2.8k views
-
-
உலர்த்திய மஞ்சள் சுடிதாரை காற்றிலே உதறிவிட்டு கயிற்றிலே தொங்கவிட்டு அது காற்றிலே அலையாமல் இருக்க இறுக்கியை அழுத்திவிட்டு, அடுத்த உடைக்காக கொஞ்சம் ஒதுக்கியபோது தான் அவள் முகம் எனக்கு தெரிந்தது. பெண்மைக்கு ஏற்ற உடல், குளித்த பின்னர் வடிவாக துவட்டாமல் அணிந்திருந்த ஆடைகள் சில இடங்களில் ஈரம் மிச்சம் இருந்ததை காட்டின எங்கள் மனசை போல. நீண்ட கரிய முடி, கொடியிலே கதிரை வைக்காமல் எட்டி துணிகளை காயவைக்க கூடிய அளவான உயரம். பிரம்மன் மற்றவர்களிடம் கொடுத்து படைக்காமல், தானே சிரத்தை எடுத்து படைத்த ஒரு அழகுப்பதுமை. கோயில் கோபுரத்திலே இருந்த சிலை உடைந்து கீழே விழுந்து விட்டதோ என்று அண்ணாந்து பார்க்க வைக்கும் ஒரு அழகு தேவதை. நான் வந்த நோக்கம், இலக்கு, கடமை, ஒழுக்கம் எல்லாவற்றைய…
-
- 17 replies
- 2.8k views
-
-
கைரி ———— பிரான்சின் மெல்லிய குளிர்..இன்று லீவு நாள் . போர்வைக்குள் இருந்து எழுந்து வெளியே வர விருப்பமில்லாமல் படுத்திருந்தவனிற்கு எழும்பி வாங்கோ தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கு என்கிற மனைவியின் சத்தத்தையடுத்து பாதித் தூக்கத்தோடு வந்து அமர்ந்தவன் தேனீர் கிண்ணத்தில் இருந்து எழுந்த ஆவியில் இருந்த வந்த தேயிலை மணத்தை கண்ணை மூடி இழுத்து அனுபவித்தபடி குடிப்பதற்காய் வாயருகே கொண்டு போகும் போது தேனீர் ஆவியில் தனது காவிப் பற்கள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தாள் கைரி.அப்படியே அந்த ஆவியை சாம் உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தான். 00000000000000000000000000 1985 ம் ஆண்டின் இறுதிப் பகுதி பலாலி இராணுவ முக…
-
- 17 replies
- 2.8k views
-
-
சிறு வயதுக்காதல் -- இப்ப வேண்டாமே.. இளம் வயசில் ஆயிரம் பூக்கள் பூக்கும் அப்படித்தான் காதலுமா? யாருக்குத்தெரியும் அதை காதல் என்பதா? உணர்வா? காமமா?.... இன்றும் தெரியவில்லை... இப்படித்தான் அவளுக்கும் எனக்கும் ஒரு இது இருந்தது... பகிடி விடுவது நக்கலடிப்பது நுள்ளப்போவது (தொட்டது கிடையாது) இப்படித்தான் நேரம் போச்சு.. ஒரு நாள் கேட்டாள் என்னை பிடிச்சிருக்கா.....? பதில் சொல்லவரவில்லை அதற்கு நான் தயாரில்லை........ அதை நான் எதிர்பார்க்கவுமில்லை..... ஒன்றும் சொல்லாது விலகிச்சென்று விட்டேன் வீட்டுக்கு போன எனக்கு இதே யோசனை... அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு நான் படித்து முடித்து வர......?? ஆனால் அவளைப்பிடித்திருந்தது அதேநேரம் எனக்காக இன்னும் குறை…
-
- 18 replies
- 2.8k views
-
-
http://www.meeraspage.com/novels-and-kids-stories/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4/
-
- 18 replies
- 2.8k views
- 1 follower
-
-
காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று. அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்; “கற்கும்போதே இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்… ஒன்று கலவி மற்றொன்று காளிதாசனின் கவிதை….” “காளிதாசனின் கவிதை இளமையான வயது கெட்டியான எருமைத் தயிர் சர்க்கரை சேர்த்த பால் மானின் மாமிசம் அழகிய பெண் துணை என் ஒவ…
-
- 0 replies
- 2.7k views
-
-
சீமைக் கிழுவை மரம் இலை தெரியாது நாவல் நிறப்பூக்கள் நிறைந்து குலுங்கியது, காட்டுப் பெண்ணைப் பிடித்து வந்து 'ஆஸ்கார் டி ல றென்ற்றா' ஆடை அணிவித்து நியூயோர்க்கின் தெருவில் விட்டதுபோல் அவ்வீட்டின் வேலி போகன் விலாவுடன் சேர்த்துச் சீமைக் கிழுவையினை நகர்ப்புறப்படுத்திவிட முயன்று தோற்றிருந்தது. காட்டுமரத்தின் பூவின் நறுமணத்தில் கள்ளிருந்தது. கண்கள் சொருகிச் சிருங்காரம் நிறைந்து கள்ளுண்ட மந்தியாய் காட்டுச் சிறுக்கியின் நறுமணத்தில் திழைத்து நின்றிருந்தேன். கோடன் சேட்டும், சாரமும் கட்டி, ஏசியா துவிச்சக்கர வண்டியில் ஒருவர் மிதிக்க மற்றவர் உரப்பையிற்குள் உலோகத்தை மறைத்து வைத்து அமர்ந்திருக்க அந்த இருவர் சென்றனர். இயக்கம் நிறுவனமயப்பட்டு வரிக்குள் சிக்குவதற்கு முந்தைய காலங்கள் சீம…
-
- 3 replies
- 2.7k views
-
-
அவுஸ்ரேலியாவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்கிழமை எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் வந்தேறு குடிகளை(ஐம்பது வருடத்திற்கு முன்பு வந்தவர்கள்) தவிர,முக்கியமா விக்டோரியா மாநிலத்தில் அரச விடுமுறையும் விடுவார்கள்.வேலைத்தலங்களில் எந்த குதிரை வெற்றி பெறும் என்று பந்தயம் போடுவார்கள்.ஒவ்வோரு வருடமும் நானும் பந்தயம் கட்டுவேன் இதுவரை வெற்றி பெற்றதில்லை. சாப்பாடு, தண்ணி என்று அமர்க்களப்படும் சில வேலைத்தளங்கள். எல்லோரும் குதிரை பைத்தியமா இருப்பார்கள் .எனக்கு கிருஸ்ன்ரின்ட தேரில் பூட்டிய ஐந்து குதிரையையும் ,கிருஸ்னரைப்பற்றியும் தான் கொஞ்சம் தெரியும் ....ஆனால் சக தொழிலாளிகள் ஒவ்வோரு குதிரையைப்பற்றியும் அதில் சவாரி செய்பவரைப்பற்றியும் பேசிகொண்டிருப்பார்கள்.நான் எனக்கு கிடைத்த பந்…
-
- 7 replies
- 2.7k views
-
-
கோயிலில் தோரணம் கட்டுதல் ,அன்னதானம் வழங்குதல்,சாமி காவுதல் போன்றவற்றிக்கு நானும் என்னுடைய நண்பர்களும் முன்னுக்கு நிற்போம்.இவற்றை செய்யும் பொழுது சில சுயநலங்களை எதிர்பார்த்துதான் செய்வோம் ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பொது நலம் போல இருக்கும்,இது தான் அன்றைய காலகட்டத்தில் பொதுசேவை என்று கூட சொல்லலாம்..அம்மாவின் அல்லது சகோதரிமாரின் தங்க செயினை வாங்கி போட்டு கொண்டு மேலாடையின்றி சாமி காவுவோம் அதிலும் முன்னுக்கு நின்று காவ வேணும் என்ற போட்டியும் எங்களுக்கிடையே நடக்கும்.சாமியை இருப்பிடத்தில் வைத்த பின்பு பிரசாதத்தை பெற்று கோவில் வெளிமண்டபத்திலிருந்து அன்றைய தரிசனங்களை இரைமீட்பது எங்களது வழமை. சின்ன பெடியள் அடிபட்டால் அவங்களை விளத்தி சமாதானப்படுத்தி அனுப்புதல்,பக…
-
- 7 replies
- 2.7k views
-
-
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் திருமலையை ஆட்டிப்படைத்த ராணுவ புலனாய்வாளர்களின் பெயரை ஐந்து வயது குழந்தை கூட சொல்லும். அந்த அளவுக்கு பிரபல்யம் வாய்ந்தவர்கள் பெர்னாண்டோ, பைத்துல்லா, ராஜப்த்தீன். அவர்கள் செய்த கொடுமைகள் சொல்ல இந்த கதை போதாது. நிறைய குறுக்கு தெருக்களை கொண்ட திருமலை நகரின் மத்தியை நிறைந்த படையினரை கொண்டு அடைத்து விட்டு, நீல வானை கொண்டுவந்து, திருமலை மாவட்ட அடையாள அட்டை (முதலில் மஞ்சள் பின்னர் வெள்ளை) பரிசோதிக்கும் படையினரை இப்போ நினைத்தால் கூட வடிவேலு பாணியில் பில்டிங்கை ஸ்ட்ரோங் ஆக வைத்து கொண்டு பேஸ்மெண்டை நடுங்கும் பலரை இப்போதும் காணலாம். இவர்களது ஆட்டங்கள் கோலாச்சிய அந்த கால பகுதியில், திருமலை நகரின் மத்தியில் கல்லூரி வீதியையும் மூர் வீதியையும் இண…
-
- 13 replies
- 2.7k views
-
-
நானும்அவனும் …................................. ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி …. இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற…
-
- 8 replies
- 2.7k views
-
-
அமுதா.. எணேய் பிள்ளை எழும்பணை ராசாத்தி பள்ளிக்குடத்துக்குப் போகவேணுமெல்லே இன்னும் என்ன படுக்கை வேண்டிக்கிடக்கு, கெதியா எழும்பணை. ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்.. காலங்காத்தாலையே புலம்ப ஆரம்பிச்சிட்டியேம்மா, போங்கோ போய் அப்பாவை வரச் சொல்லுங்கோ எப்ப உங்கண்டை முகத்திலை முழிச்சனான் இண்டைக்கு புதுசா எழும்ப .. அப்பாவை வரச்சொல்லணை. எத்தனை நாளைக்குத்தான் இப்படி அப்பா முகத்திலை முழிக்கப் போறியோ, குமரா விட்டாய் கலியாணம் கட்டி போற இடத்திலை என்ன பாடுபடப்போறியோ... என்னங்க, உங்கண்டை ஆசை மகள் கூப்பிடுறாள் போங்கோ நான் ஏதும் சாப்பாடு தேடவேணும், பாவம் அவள் பசி இருக்க மாட்டாள், அப்படியே உவன் மதனையும் எழுப்பி விடுங்கோ பள்ளிக்குடம் போற பஞ்சியிலை படுத்திருக்கிறான். கணபதிப்பிள்ளை,சரஸ்வதியின் மூத்த மகள் அ…
-
- 17 replies
- 2.7k views
-
-
3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை. சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, April 20, 2013 comments (0) ஐயாவின் வாழ்க்கை இன்று ஒற்றைக் கட்டிலுக்குள் அடங்கிவிட்டது. 3ஆண்பிள்ளைகளும் 3பெண் பிள்ளைகளுமாக ஆறுபிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த வாழ்க்கையின் கடந்த காலத்தை எண்ணினால் அது பெரும் துயர் சூழ்ந்த காலம் தான். இப்போது தானொரு சுமையாகிப் போனேன் என்ற இயலாமைதான் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது. ஐயா ஒரு கடற்தொழிலாளி. ஊரில் ஐயாவும் கடற்தொழிலால் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு காலம் அள்ளிக் கொடுக்கும் கையாகத்தான் இருந்தார். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்வு ஐயாவின் குடும்பம் அனுபவித்ததும் ஒரு காலம். ஐயாவின் மூத்த ஆண்மகனை கடலில் வைத்து இலங்கை இராணுவ கடற்படை என்…
-
- 10 replies
- 2.7k views
-
-
அப்பா தின குட்டிக் கதை முன்னைய காலங்களில் சில கிராமதுக்கு கிராமம் வழக்கங்கள் நடை முறைகள் வேறுபட்டிருக்கும். இருக்கும் இப்படியான ஒரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள ஆண் பிள்ளைகள் பதினாறு வயதை அடைந்ததும் ஒரு இரவு காட்டில் தங்க வேண்டும். அங்கு பல வகை கொடிய மிருகங்கள் இருக்கும் . அவர்களது பதினைந்தாவது வயதில் வில் பயிற்சி ஈட்டி எறிதல் விலங்குகளை தாக்கி தப்பித்தல் முதலிய தற்காப்பு கலைகள் யாவும் சொல்லி கொடுக்கப்படும் . இப்படியாக ஒரு குடியானவன் மகனுக்கு பதினாறாவது பிறந்த நாள் வந்தது மறு நாள் அவன் காட்டுக்கு செல்ல வேண்டும். முதல் நாள் குடியானவன் சகல புத்திமதி கள் யுக்திகளை மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தினான் மறு நாள் மாலையானதும் தந…
-
- 9 replies
- 2.7k views
-