வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
கற்றிருத்தல் வேறு, கற்பித்தற்கலை வேறு : கவிதா (நோர்வே) கற்பித்தல் என்பது ஒரு கலை என்பதை நான் உணர்ந்தபோது நடனத்தில் கற்பித்தலைத் தொடங்கி எட்டு ஆண்டு காலங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த எட்டு ஆண்டுகளில் என் மாணவர்களை வருத்தியும் கண்டித்தும் திட்டியும் புரியவைத்தும் அவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் அவர்களது கலைத்திறனிலும் சரி வளர்ச்சியிலும் சரி நான் நினைத்த உயரத்தின் அருகிற்கூட நிற்க முடியாமல் போனது யாருடைய பிழை என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே எனது கற்பித்தற் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. எப்போதும் ஆசிரியர்கள் நாம் சரியாகக் கற்பிக்கின்றோம், மாணவர்கள்தான் புரிந்து கொள்கின்றனர் இல்லை, ஆர்வம் இல்லை, அவர்களுக்கு நேரமில்லை, அதற்குரிய சூழல் இங்கில்லை, பாடசாலைப் ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியாவில் புற்றீசல் போல பரவிய கால் சென்டர் வியாபாரம், இந்தியர்களின் நேர்மையீனம் காரணமாகவே அழிய தொடங்கியது. காலனி ஆதிக்கத்தினால் விளைந்த ஆங்கில மொழி புலமை, பல வங்கிகளையும், காப்புறுதி நிலையங்களையும் இந்தியா நோக்கி தனது கால் சென்டர் நிறுவங்களை நகர்த்த வைத்தது. இதன் மூலம் பெரும் பணம் சேமிக்கலாம் என்றே அவை அங்கே சென்றன. ஆனால், பிபிசி நிறுவனத்தின் அண்டர் கவர் ரிப்போர்டிங் மூலம், பிரிட்டனின் லோய்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர் விபரத்தினை, $1000 க்கு இந்தியாவில் வேலை செய்த கால் சென்டர் ஊழியரிடம் இருந்து வாங்கி, அதனை லண்டனில் உள்ள, வங்கி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, செக் பண்ணு மாறு சொல்ல, அவையும் சரியாக இருக்கவே, அரண்டு போன லோய்ட்ஸ் பேங்க், இந்தியாவில் இருந்து மூட்…
-
- 3 replies
- 1.3k views
-
-
கனடாவில் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவிருக்கும் யுவன் சங்கர்ராஜா மற்றும் அவரது குழுவின் இசைநிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு கனேடிய தமிழ் இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாயக மக்களுக்காக என்ற போர்வையில் தமது சுய லாபத்தை அடிப்படையாக கொண்டு செயற்ப்படும் தனிநபர்களின் தன்னிச்சையான போக்கு கனேடிய தமிழ் சமூகத்தின் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே கனேடிய தமிழ் இளைஞர்கள் இந்நிகழ்வைப்புறக்கணிக்குமா
-
- 1 reply
- 1.3k views
-
-
கருத்துக்கணிப்பு: வன்னியில் என்ன செய்யப்பட வேண்டும்? http://www.tamilsforobama.com/Polling/Tamil_letter.html
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் (TSSA) வருடாந்தம் பெரிய அளவில் விளையாட்டு விழாக்களை நடாத்தி வருகிறது. இந்தச்சங்கத்தில் தாயகத்து பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. இவ்வமைப்பின் இவ்வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர். தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவரான நா****ம் சிறிகெ****ன். இவர் வேறுயாருமல்ல வெளிப்படையாகவே மகிந்த ராஜபக்சவின் புகழ்பாடிமத் திரிபவர். அண்மையில் இவர் மகிந்த ராஜபக்சவை லண்டனிலுள்ள சிறிலங்கா தூதராலயத்தில் சந்தித்த படங்கள் ஊடகங்களில் வெளிவந்திருந்தன. டககிளஸ் தேவானந்தாவுக்கு நெருக்கமான இந்த நபரின் சகோதரர் ச**ன் கருணா குழுவுக்கு ஆதரவான இணையத்தளத்தில் எழுதி வருகிறார் என்பது வெளிச்சம…
-
- 3 replies
- 1.3k views
-
-
http://www.tamilkathir.com/news/552/58//d,view_video.aspx பிரான்சில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகர் பரிசிலுள்ள ரொக்கடரோ ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காதபோதும் இறுதியில் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
bbc யின் புகழ் மிக்க டிராகன் டென் (Dragon Den) நிகழ்ச்சி. இதில் பங்குகொண்ட ஒருவரின் வியாபாரத்தில், பீட்டர் ஜோன்ஸ், தியோ பாப்டிஸ் ஆகிய இரு டிராகன்கள் முதலீடு செய்திருந்தனர். Red Letter Days எனும் நிறுவனத்தில் கணக்குப்பிள்ளையாக நம்ம அகிலன் செல்வரத்தினம். சூதாட்ட பழக்கம் கொண்ட அகிலன், தனது பணத்தேவைகளுக்காக, காசோலைகளை, பொய்யான கையெழுத்துகளுடன், காசாக்கி உள்ளார். லண்டன் வூட்கிறீன் மேல் நீதிமன்றில் நிறுத்தப் பட்ட அகிலன், வியாபார நிறுவங்களுக்கான பண மீள் செலுத்துகைக்காக (refund) என்று சொல்லியே வங்கியிடம் இருந்து, சூதாட பணத்தினைப் எடுத்துள்ளார் என அரச வழக்குத் தொடுனர் லிண்டா சாமல் தெரிவித்தார். மிக நீண்ட நாட்களாக, நடந்துள்ள ஒரு கடுமையான நம்பிக்கை மோசட…
-
- 5 replies
- 1.3k views
-
-
நான் ஒரே வாரத்தில் இரண்டு மிக நெருங்கியவர்களின் திருமணத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒன்று எனது நண்பனுடைய திருமணம்... மற்றொன்று உறவினர் (பணக்கார உறவினர்) திருமணம். முதலில் என் நண்பனுடைய திருமணம்... மிக மிக சிறப்பாய் நடந்து முடிந்தது. நாங்கள் திருமண வீட்டிற்குள் சென்றதுமே வாங்க வாங்க என்று அழைத்து பூ, சந்தனம், கற்கண்டு எடுக்கச் சொல்லி மேலே திருமண பந்தலுக்கு வழிகாட்டினர்... அங்கு படிகட்டு ஏறி முடியும் முன்பே நண்பனின் அம்மா இவ்வளவு லேட்டாவா வர்றது என்ற செல்ல கோபத்துடன் எங்களை வரவேற்று அமர வைத்தார். அங்கு யாருக்கும் எங்களைத் தெரியாது என்றாலும் அப்படியில்லை என்பதுபோல் தான் அங்கிருந்தவர்கள் நடந்து கொண்டார்கள். சிறிது நேரம் அமர்ந்துவிட்டு அவனிடம் பரிசுப் …
-
- 0 replies
- 1.3k views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் நடாத்தப்படும் முத்தமிழ் விழாவுக்கான முன்னோடி நிகழ்வுகளான அறிவுத்திறன் போட்டிகளைத்தொடர்ந்து நேற்றைய தினம் குறும்படப்போட்டிக்கான தெரிவு நிகழ்வு இடம் பெற்றது. குறும்படப்போட்டிக்கு இம்முறை 27 குறும்படங்கள் பார்வைக்கு வந்தன. அதிலும் தாயகத்திலிருந்து 9 படங்கள் வந்திருந்தன. பிரித்தானியா நோர்வே டென்மார்க் கனடா சுவிசிலிருந்தும் மற்றும் பிரான்சிலிருந்தும் மொத்தமாக 27 படங்கள் வந்திருந்தபோதும் ஒருபடம் ஒலி அமைப்பு சரியாக எமக்கு கிடைக்காததால் நின்றுவிட 26 படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பொதுவாக 9 படங்களே தெரிவுக்குள் வருவதாக விதிகளில் இருந்தாலும் இம்முறை அதையும் மீறி கலைஞர்களுக்கும் அவர்களது திறமைகளுக்கும் இடம்தரணும் என்ற ஒரேயொரு…
-
- 9 replies
- 1.3k views
-
-
யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம் Published By: RAJEEBAN 04 JUN, 2025 | 04:33 PM A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy malay mail எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில். ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக…
-
-
- 15 replies
- 1.3k views
- 2 followers
-
-
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நாளை(May 5) மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.625.70.560.350.160.300.053.800.100.160.80 (9) இதில் Sadiq Khan(Labour), Zac Goldsmith (Conservative) , Sian Berry (Green Party), Caroline Pidgeon (Liberal Democrat) உட்பட மொத்தம் ஏழு பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் Supplementary Vote System என்னும் முறை பயன்படுத்தப்படவுள்ளது, இதனை பொறுத்தவரையில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளர்கள் குறைந்தது 50சதவிகித வாக்குகளை பெறவேண்டும். லண்டன் மேயருக்கான அதிகாரங்களில் முக்கிய இடம்பிடிப்பது வீட்டு வசதி வாரியம், போக்குவரத்து மற்றும் சுகாதாரம். இதனை மேம்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியும் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர். இதனை பற்றியும், தான் மே…
-
- 4 replies
- 1.3k views
-
-
இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!! இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர். இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கட…
-
- 8 replies
- 1.3k views
-
-
சங்கரி ஜயா சுவிஸ் வாறாராம். உங்கள் அபிசேகங்கள் ஆராதனைகள காட்டிக்கொள்ளலாம்.
-
- 1 reply
- 1.3k views
-
-
புலம்பெயர் தமிழரின் அடுத்த தலைமுறையினர் தொலைந்த சந்ததியாகி விடுவார்களா? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தொலைந்த சந்ததியினராக மாறிவிடுவார்களா என்ற கேள்வியினை எழுப்பும் பலர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ளனர். இங்கு தொலைந்த சந்ததியினர் என்பது தாயகத்துடன் தொடர்பு அற்றவர்களாக, தமிழ்மொழி பேசமுடியாதவர்களாக, தமிழ்ப் பண்பாடு மறந்தவர்களாக, தமிழர் என்ற ஒரு சமூகமாக ஒழுங்கமைப்படாதவர்களாய், உதிரிகளாக தாம் வாழும் சமூகத்துடன் கரைந்து போபவர்களாக மாறிவிடும் ஒரு நிலையைக் குறிக்கும். புலம்பெயர் தமிழ் மக்களின் தலைமுறையினர் தொலைந்த சந்ததியினராக மாறிவிடக்கூடாது என்ற அக்கறையினை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
[size=5]கனடாவும் கள்ளப்பணமும்[/size] [size=4]மேற்குலக நாடுகளில் கூட ஊழலும் கருப்புப்பணமும் அதில் கலந்த அரசியலும் உள்ளது. ஆனால் கீழைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது மிக மிக சிறியளவில் உள்ளது. இருந்தாலும் உள்ளது.[/size] [size=4]அதைவிட கீழைத்தேய நாடுகளின் கருப்பு பண முதலைகள் தமது பணத்தை மேற்குலக நாடுகளில் பதுக்குவதும் உண்டு. இது பல மேற்குலக நாடுகள் தெரிந்தே கண்ணை மூடி இருக்கின்றன.[/size] [size=4]கடந்த சில நாட்களாக கனேடிய அரசியலை கலக்குவது க்யூபெக் மாநில கள்ளப்பணம். அதிலும் கட்டிட நிர்மாணதுறை மாநகர அரசியலை கலக்குகின்றது. இது மொன்றியல் மாநகர பிதாவையும் இன்னும் பலரையும் அவர்களின் பதவியில் இருந்து மட்டுமல்ல சிறைக்குள்ளும் தள்ளலாம்.[/size] [size=4]http://www.c…
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=3][size=5]அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ‘உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்’ நிகழ்வு ![/size] [size=1]By naathamOn 16 Sep, 2012 At 08:38 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments[/size] [size=4][/size][/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4] நியூ யோர்க், நியூ ஜெர்சி, பென்சிலவானியா ( New York / New Jersey / Pennsylvania ) மாநில நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ( friends of TGTE ) ஆதரவுடன் அமெரிக்காவில் ‘உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்’ எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வானது கடந்த சனிக்கிழமை (6-9-12) நியூயோர்க் மாநிலத்தில் குயின் பல்கலைக்கழக கலையரங்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவிஸ் மாநகர சபை கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்பெண் சுவிஸின் தூண் மாநகர சபை உறுப்பினரான திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன், பிராத்ஹவுசில் இடம்பெற்ற கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்ப்பெண்ணாக கலந்து கொண்டார். குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட தர்ஷிகா கருத்துத் தெரிவிக்கையில், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வாக்களித்த தூண் வாழ் மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை இன்றிலிருந்து செய்ய கடமைப்பட்டுள்ளேன். சுதந்திரமான வாழ்வுக்கும், சுகாதாரமான வாழ்வுக்கும், கல்வி, பிள்ளைகள் மற்றும் குடும்பம் போன்ற விடயங்களில் கூடுதலாக அழுத்தத்தை கொடுத்து சேவையாற்ற பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ் இந்து பழைய மாணவர்கள் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரனுடன் ஒரு சந்திப்பை இராஜகுலசிங்கம் (பாபு ) வீட்டில் ஏற்பாடுசெய்திருந்தார்கள் .அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படும் எமது பழைய மாணவர் சங்கம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு என்ன தேவை என்று யோசிக்கலாம் . நாம் படித்த பாடசாலைக்கு உதவுவதுடன் மட்டுமல்லாது நாட்டிலிலும் சில வேலைத்திட்டங்களை எமது பழையமாணவர் சங்கம் ஏற்கனவே செய்துவருகின்றது .அதைவிட கனடாவிலும் நடை பவனி போன்ற நிதி சேர்ப்பு நிகழ்வுகள் மூலம் கனேடிய வைத்தியசாலைகளுக்கும் கடந்த காலங்களில் உதவி செய்துவந்தது . தமிழர் மரபுரிமை விழாவிற்ககாக கனடா வருகை தந்திருந்த வியாளேந்திரனின் கனேடிய நிகழ்வுகளில் பங்குபற்றிய சில பழ…
-
- 13 replies
- 1.3k views
-
-
Facebook > Thesiyam Scarboroughவில் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் மோதியதில் இரண்டு வயது குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. இன்று (சனி) மாலை 5:15 மணியளவில் இந்தச் சம்பவம் Markham Road and McNicoll Avenue சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்தது. Majestic City கடைத் தொகுதியில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புகைப்படம்: நன்றி CP24 A two-year-old child has been killed in a vehicle crash at the Majestic City store block in Scarborough. The incident took place today (Saturday) around 5:15 pm near Markham Road and McNicoll Avenue meeting. It is rema…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
புலம் பெயர் தமிழர், தாங்கள் வாழும் நாடுகளில், தங்களைத் தமிழர்கள் என்று வெட்கப்படாமல் பிரகடனப் படுத்துவதன் மூலம் பலவற்றைச் சாதிக்க முடியும்! அவற்றுள் ஒன்று ' லண்டன் நிலங் கீழ்' புகையிரத பயணச்சீட்டு இயந்திரத்தில் தமிழ் மொழியின் அறிமுகம் என்றும் நான் கருதுகின்றேன்! நான் கூறுவது, பிழையாக இருந்தால், லண்டன் வாழ் உறவுகள் தெரியப்படுத்தவும்! எது எப்படியோ, சிங்களவன் எழுதிற தமிழிலும் பார்க்க, இதில் தமிழ் மணக்கிறது!
-
- 10 replies
- 1.3k views
-
-
பிரான்ஸ் அரசாங்கம் பிரான்ஸ் தமிழர் ஒரங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளை கைது செய்ததைக் கண்டித்து கடந்த 25.04.2007 புதன்கிழமை பாரிஸ் நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பாரிஸ் நகரத்தின் மையப் பகுதியான குடியரசுச் சதுக்கத்திலிருந்து பஸ்ரிய் சதுக்கம் வரை நடைபெற்ற இந்தக் கண்டனப் பேரணியை பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு எற்பாடு செய்திருந்தது. 3 வாரங்களுக்கு முன்பே இந்தப் பேரணியை நடத்தவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்திருந்த போதிலும் பேரணி நடப்பதற்கு 20 மணி நேரம் இருக்கும் போதே இதற்கான அனுமதியை பாரிஸ் நகரக்காவல் துறையினர் வழங்கியிருந்தனர். ஆயினும் மிகக் குறுகிய நேர தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் வரையிலான தமிழ் மக்கள் இந்தப் பேரணி…
-
- 3 replies
- 1.3k views
-
-
கலிபோர்னியா பயண அனுபவம் =============================== வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக கிட்டத்தட்ட 10,000க்கு மேற்பட்ட ஏரிகள் சூழ்ந்த அமெரிக்காவின் அழகிய மாகாணம் மின்னெசோட்டாவில் இருந்து கடற்கரை நகரான கலிபோர்னியாவின் சான்ஃபிரான்சிகோ சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கி, பின்னர் சாக்ரமெண்டோ சென்று அடுத்த மூன்று நாட்கள் தமிழ் விழாவில் பங்கெடுத்திருந்தோம். …
-
- 13 replies
- 1.3k views
-
-
Toronto Tamil Protest Timeline Wednesday May 13, 2009 CityNews.ca Staff It's a 25-year-long war that has roots that stretch much longer. And it's taken countless innocent lives. That terrible toll is what set Toronto's Tamil community off on its quest to draw attention to the carnage in their homeland. The city is home to the largest population of Tamils outside of Sri Lanka and while they find strength in numbers, they've also found controversy, with a series of demonstrations that have veered from remarkably well organized to law breaking. Here's a look back at how this latest trend has evolved this year. Click the dates and the links to see each stor…
-
- 1 reply
- 1.3k views
-
-
எங்கள் thedipaar.com இணையதளத்தில் கடந்த 10.04.2018 அன்று அடமானக்கடன் மோசடி குறித்து complaintsboard.com தளத்தில் பதிவிடப்பட்டிருந்த தகவலை மூல ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த தகவல் பலதரப்பட்ட மக்களாலும் பகிரப்பட்டு, மிகுதியான அளவு மக்களின் கவனத்திற்கு வந்தது.இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் சார்பிலும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேடிப்பார் இணையதளத்தில் வெளியிட்டு வந்தோம்.இதன் தொடர்ச்சியாக இன்னும் பலர் தேடிப்பாரை தொடர்பு கொண்டு தாங்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்பது குறித்து கூறி வருகின்றனர்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூவர் தேடிப்பார் அலுவலகத்திற்கு நேரடியாகவே வந்து, கஷ்டமான சூழ்நிலையில் எவ்வறெல்லாம் …
-
- 1 reply
- 1.3k views
-