கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நீ என் தேகத்தின் மேல் கொண்ட மோகத்தினால் என் மனதை காதல் வார்தையால் வசப்படுத்தி மானத்தைச் சிதைத்து தலை கோணச் செய்து விட்டாயே! பூவின் தேனைச் சுவைத்து மற்ரொரு பூவினைத் தேடும் கருவண்டினைப் போல் என் வாழ்வினை கேள்விக்குறியாக்கி என் குடும்பத்திற்கு இழுக்கினை உண்டாக்கி விட்டு.... உன் இச்சைக்கு மறு துணை தேடுகிறாயோ? இதோ வருகிறேன் விளையாட!! காதல் விளையாட்டா? மரண விளையாட்டு... புலியினை முறத்தினால் விரட்டிய வீரத்தமிழச்சியின் வம்சமடா நான்! தன் மானம் சிதைத்தவனை உயிரோடு சிதைக்காமல் சிதையில் விழமாட்டேன்! பெண் கொஞ்சி மகிழ்ந்தால் மலர்... கொதித்து எழுந்தால் புயல்... நீயும் உணர்வாய் என் காலடியில் உன் உயிரினை விடிகையில்... இதோ வருகிறேன் ! நான் http://panip…
-
- 1 reply
- 908 views
-
-
நீலவானம் சொரியும் மலர்களாய் வெண்முகில் கூட்டம் கூடி வேலவன் கோவில் தேடியோடி...! கோபுரத்தை உரசும் தென்றல் பணிந்து வேம்பைத் தழுவி எழுந்து பனையைத் தொட்டுச் செல்லும்...! வீடுகளில் முற்றத்தில் தோட்டத்தில் வள்ளல்களாய் மலர் மரங்கள் செடிகள் கொடிகள் பயிர்கள் பந்தல்கள்....! நல்லூர் வீதிதோறும் கூந்தல்களில் மணக்கும் வண்ண வண்ண மலர்கள் நகரும் நந்தவனங்கள் ஒயிலாய் இடை அசைவில் சிதறும் மணிகள்...! ஆறுமுகம் அருகில் இரு தேவியரும் அலங்காரமாய் அமர்ந்திருக்க அழகு இரதம் புறப்பாடு ஆரம்பம்...! வீதிகளில் தேர் ஓடுவது ஊர்களிலே மாந்தர் வியர்வையில் திளைத்து தேர் மிதப்பது நல்லூரினிலே...!!
-
- 1 reply
- 704 views
-
-
POETRY OF THE ANGELS தேவதைகளின் கவிதை . இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்? . ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது. . என் வாழ்வில் என் போராட்டங்களில் என் கலைகளில் என் கவிதைகளில் எங்காவது சற்று முழுமையிருந்தால் அது என் தாயிடமிருந்தும் என் பெண்பால் உறவுகளிடமிருந்தும் பின்னர் இன்றுவரை என் வாழ்வின் பாதையில் கண்டு கேட்டுப் பழகிய தோழியரிடமிருந்தும் கற்று…
-
- 1 reply
- 1.2k views
-
-
அப்படிப் பார்க்காதே மகளே! - கவிதை திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் - ஓவியங்கள்: ரமணன் நுரைத்தப் பழங்கஞ்சியாய்ப் புளிப்பேறிய வயோதிகத்தின் இரவு ஒரு பாராங்கல்லாய் மார்மீது படுத்துறங்குகிறது எப்படி இறங்கச் சொல்ல... எப்படி இறக்கிவிட? பாதரசம்போன கண்ணாடி எனது முகத்தைக் காட்டி இன்றோடு இருபது வருடங்கள் ஆகிவிட்டன மகளே. கறையான் அரித்த நமது குடும்பப் புகைப்படத்திலும் நீ பார்த்திருக்கக்கூடும் துருவேறிய எனது மிருகக் கண்களை மட்டும். `இடுப்புல ஆறு மாசம் வயித்துல மூணு மாசம் பப்பாளி, எள்ளு, அன்னாசிக்கு தப்பித் தளச்சவடி நீ' என்ற கதையைக் கேட்கும்போது என்னென்ன நினைத்திருப்பாய் மகளே? அப்படி என் வயிற்றைப் பார்க்காதே மயானத்துப் புழுக்க…
-
- 1 reply
- 934 views
-
-
தூவனம் தூவத் தூவ மழைத்துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிர் கரைவதை நானே கண்டேன் கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில் குயில் என மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புழுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில் யார் தீங்கு செய்தாலும் மன்னிக்கத் தோன்றும் நீ தந்த என் மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே . இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோர்க்க உதட்டினை முகம் பார்க்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரீங…
-
- 1 reply
- 1.3k views
-
-
[size=3] ஒரு அலாதியான அனுபவம்[/size] [size=3] பிம்பங்கள் அனைத்தும் மங்கலாக[/size][size=3] ஏதோ ஏதோ உருவ அசைபாடுகள்[/size][size=3] செவிப்பறைகளில் மட்டும்[/size][size=3] ஓயாத சப்தம்[/size] [size=3] கண்ணு கோளாறா[/size][size=3] காது கோளாறா[/size][size=3] ஆஸ்பத்ரிக்கு அழைத்து போக வேண்டும்[/size][size=3] அந்த வார்த்தைகள் மட்டும்[/size] [size=3] நீண்ட சப்தத்தின் இடையில்[/size][size=3] வெள்ளம் என பாய்ந்தது[/size][size=3] ஒரு பெரு மூச்சு[/size][size=3] தங்கு தடையில்லாமல் வருகிறது[/size] [size=3] கைகளையும் கால்களையும்[/size][size=3] ஒழுங்கு படுத்திக் கொண்டு[/size][size=3] இருப்போம் என்று இருக்கையில்[/size][size=3] படுக்கையின் விளிம்பில்[/siz…
-
- 1 reply
- 688 views
-
-
இளமையை தொலைத்த தலைமுறை இளமையை புதைத்துவிட்டு விடுதலைகையில் ஏந்திஉலகை உலுப்பியவர்கள்எம் இளையேர். தொலைக்காட்சி பெட்டியிலே கிரிகட்டைப் பார்துவிட்டு மைதான்ம் போய்நின்று பந்தடிக்க இவனுக்குஎங்கே நேரம். தாயைப் பார்பானோ தங்கயை நினைப்பானோ நம் ஊரின் அலறல்களை உடல் பிளந்த உறவுகளை தொலைக்காட்சி பெட்டியிலேதினம் பார்தவன் துடுப்பாடப் போவானோ துயர் துடைக்கப் போவானோ அடிவாங்கி இடிவாங்கி தமிழன் சாகும் நாளில் ஆடு களம் ஒன்றில் மட்டும் ஆட்டமிளக்காமல்ஆடவேண்டும் அது அரசியல்க் களம் - பொன் பாலராஜன் -
-
- 1 reply
- 777 views
-
-
ஓடுமீன் ஓடுமோ....... உறுமீன் வருமோ.......... வாடி நிற்குமாம் கொக்கு.......... வயிறு காய காய! கூரிய முள்ளு தொண்டை............... கிழித்தால் - கொக்கும் செத்துபோகும்! ஏர் கொண்டு உழுத நிலமல்ல......... எலும்புகூடுகளின்மேல் எழுகின்ற பூமி... அத்திவாரத்தின் கீழிருந்து..... அவசரமாய் நீர் அதிர்ந்தால்....... அழிந்து போவது........... யாருமல்ல- நாமேதான்!! (இது மட்டுறுத்தினர் - யாழ்பிரியாவுக்கு)
-
- 1 reply
- 960 views
-
-
மௌனம் பேசும் வார்த்தைகள் தொலைந்து நின்ற தருணங்கள் கண்ணாடியில் மறைந்த வெட்கங்கள் கனவில் கலந்த ரகசியங்கள் உள்ளம் கேட்கும் ஓசையில் அடங்கிப் போகும் - உனக்குள் எனைத் தொலைத்த நாட்கள்!
-
- 1 reply
- 834 views
-
-
கம்முனிகேசன் வெற்றி..! தந்தி ட்ரங்கால் தந்தி ஆபிஸ் டெலிபோன் போஸ்ட் கார்டு கடிதம் ஏர் மெயில் போஸ்ட் ஆபீஸ் செல்போன் சிம் கார்ட் நெட் வொர்க் டாப் அப் மெமரி கார்ட் சரியில்லை என்றாலும் சிம் கார்ட் சரியாக இருக்கிறது சார்ஜ் மட்டும் தான் குறைவாக உள்ளது ஒருவேளை பேட்டரி சரியில்லையோ செல்போன் ரிப்பேர் கடைகளில் குவியும் செல்போன் விரும்பிகள்..! இவ்வாறு எவ்வளவோ இருக்கிறது தமிழக மக்களுக்கு..? ஆனால் இரண்டு சிம் கார்டு போட்டு எப்படி பேசுவது என்ற கேள்விகளை புறந்தள்ளி நிரம்ப பின் தங்கி இருக்கிறோமோ என்ற அச்சம் வந்தவுடன் எப்பொழுது நாம் வீட்டுக்கு போய் ஒரு ஓவியமான நமது செல்போனை நோண்டுவது என்ற ஆர்வம்…
-
- 1 reply
- 580 views
-
-
கல்வாரிப்பூக்கள் உடைந்த மனங்களினை ஒட்ட வைப்போம் உறுதியுடன் அன்பைப் பற்ற வைப்போம் நிறைந்த துயரினையே நிறுத்தி வைப்போம் நெஞ்சில் துணிவுதனை நிலைக்க வைப்போம் சோகச் சுமைகளினை இறக்கி வைப்போம் சொல்லில் இனிமைகனை சுவைக்க வைப்போம் மனதின் காயங்கள் மறக்க வைப்போம் மண்ணின் மனிதத்தை மதிக்க வைப்போம் சிந்திக்கும் ஆற்றலினை வளர வைர்போம் சிரிப்பில் துயரங்கள் துரத்தி வைப்போம் ஞாபகத் திறன்களை குவித்து வைப்போம் ஞானிலம் மகிழ்ந்துமே களிக்க வைப்போம் தீய சிந்தனைகளை அகற்றி வைப்போம் தீமைகள் அணுகிடா விலக்கி வைப்போம் அனுபவப் பாடங்கள் படித்து வைப்போம் ஆசைப் பேய்களினை அடக்கி வைப்போம் வாழ்வின் அர்த்தங்கள் புரிய வைப்போம் வளமாய் வாழ்வுதனை வாழ வைப்போம் ஆன்மீக தேவைகளில் …
-
- 1 reply
- 962 views
-
-
https://fb.watch/sMOjOYe7Et/?mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V கேட்டுப் பாருங்கள்
-
-
- 1 reply
- 627 views
- 1 follower
-
-
ஒளித்து வைக்கப்பட்ட நாடு என் கிராமத்தின் பெயரை திரித்தனர் மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை ஒளிக்க முடியுமென நினைத்தனர் என் நாட்டின் அடையாளமோ பாறைகளைப் போல உறுதியானது எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர் சூழச்சிகளால் மறைக்க முடியாத என் நெடு வரலாறோ நதிகளைப் போல நீண்டது எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர் தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும் எனது உறுதியான அடையாளங்களோ தீயைப் போலப் பிரகாசமானது கண்ணுக்குப் புலப்படாமலெனை மிக மிக எளிதாக அழிக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்று வா இரண்டாயிரத்து எட்டே வென்று விட்டதாய் நினைத்தால் வெற்றி உனக்கல்ல என்பேன் பற்றி எரிவது தமிழ் ஈழக் கனவே! பொறுமையை இழந்தோம் தனிமையாய் தொடர்ந்தோம் இனிமையான வாழ்வுக்காய் தனி நாட்டைக் கேட்டோம்! பொறுக்காத நாடுகள் வெறுக்கவே செய்தனர் விடை தர மறுத்து தடையினைப் போட்டனர்! குனிந்ததும் குட்டு வாங்கியதும் வலி பட்டவர்க்கே வலிக்கும் எலி வளையானாலும் எமக்கு தனி வளை வேண்டும் என்றோம்! சிங்களம் வெங்களம் விரும்பியது கங்கணம் கட்டி தமிழினம் அழிக்க விரைந்து படை திரட்டியது உலகிடம் இரைந்து ஆயுத பிச்சை கேட்டது! சர்வமும் மயங்கி சர்வதேசமும் சோரம்போனது ஐ.நா.…
-
- 1 reply
- 603 views
-
-
அழகிய வன்னிக்காடு அழிந்து விடவில்லை அதன் விதைகளை சுமந்து திசை எங்கும் பறக்கின்றன பறவைகள் முள்ளிவாய்க்கால் வற்றி விடவில்லை மேகமாய் வானத்தில் நிறைந்திருக்கின்றன முல்லை பூக்கும் உட்சி தளைக்கும் யாழின் இசை உலகம் கேட்கும் காந்தள் வாசம் காற்று மணக்கு புலிக்கொடி ஏந்தி திசைகள் நடக்கும் !!! (முகநூல்)
-
- 1 reply
- 593 views
-
-
படித்ததில் எனது மனது தொட்ட அம்மா கவிதை.... அம்மா!! உன் கருவறையில் நானிருந்து உதைத்தது--உன்னை நோகடிக்க அல்ல,,, எட்டு மாதமாய் சுமக்கும்--உன் முகம் பார்க்கவே. பிஞ்சு வயதில் நான் அழுதது,, பசியினால் அல்ல,, பால் குடிக்கும் சாட்டில்--உன் இதயத்தை முத்தமிட.. பள்ளியில் என்னை சேர்க்கும்போது--நான் அழுதது பயத்தினால் அல்ல,, உன் பாசத்தை பிரிகிறேனோ,, என்ற பயத்தினால். இளமையில் நான் அழுதது காதலில் கலங்கி அல்ல,, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து--என்னை பிரிக்குமோ என்ற பயத்தினால்.. நான் விமானம் ஏறும்போது அழுதது--பிரிகிறேன் என்றல்ல,, நான் உழைத்து உன்னை பார்க்கப்போகிறேன்--என்ற ஆனந்தத்தில்.. இங்கு தனிமையில் அழுகிறேன்,, உறவுகள் இல்லாமல் அல்ல உன் தாய்…
-
- 1 reply
- 38k views
-
-
1965 இந்தி எதிர்ப்புப் பெருனடைகளைக் கண்டு வியந்து பாடியது. காவிரி போல், வையையைப் போல், கான்யாற்று வெள்ளம் போல், எழுந்தனரே எந்தமிழர் செழுந்தமிழைக் காத்திடவே!
-
- 1 reply
- 626 views
-
-
இந்த உலகம் உனக்கு சிறையல்ல நீதான் கைதியாய் வாழ்கிறாய் * நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய் ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது * வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது * தடை தாண்டி ஓடிக் கொண்டிருப்பவனுக்கு தடைகள் கண்ணுக்குத் தெரியாது நீ நினைப்பது போல வாழ்க்கை ஒன்றும் மரதன் ஓட்டமல்ல அது தடைதாண்டும் ஒட்டாமே * பெருமை என்பது உன்னைவிட திறமைசாலிக்கு நீ கைதட்டுவதில் அல்ல அவனையும் உனக்காக கைதட்ட வைப்பதுதான் * இந்த உலகம் பூந்தோட்டமல்ல நீ வளர தண்ணிர் ஊற்ற இந்த உலகம் பெருங்காடு நீயாத்தான் வளரவேண்டும் * உனக்கு நண்பன் இருக்கிறானோ இல்லையோ உ…
-
- 1 reply
- 820 views
-
-
மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (விரல்கள் )------வலது கை விரல்கள் மெருமை காட்டியது " மோதிரவிரல் "-----கும்பிடுகிறேன் பெருமை படுகிறது "சின்ன விரல்கள் "----கோபத்தின் தொடக்கி சண்டையில் தொடக்கி "சுட்டுவிரல் "----குட்டை கவலையில்லை அம்பு எய்வேன் "கட்டை விரல் "---நான் தான் வீமன் உயரமானவனும் "நடுவிரல் "
-
- 1 reply
- 658 views
-
-
நிலவே .... உன்னை உவமையாக கூறி .... காதல் செய்தும் காதலரை .... வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..? உன்னையே உவமையாக கூறி .... காதலியை ஏமாற்றிய .... காதலனை சுட்டெரிக்க .... ஒருமுறை வருவாயோ ..? நிலவே உன்னிடம் .. நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..? தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....! பூலோகத்திலோ உன்னால் ... நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!! நிலவே ஒருமுறை வருவாயோ .. சூழலை மாசுபடுத்தும் இவர்களை .... எச்சரிக்க மாட்டாயோ ...? நிலாவில் பாட்டி இருக்கிறார் .... இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!! பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ... வான் வெளி தூசிகளே அவை .... நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...? மூடநம்பிக்கையை உடைத்தெறிய ... ஒருமுறை இறங்கி வருவாயோ ...?
-
- 1 reply
- 597 views
-
-
மனதெங்கும் எத்தனையோ மாயங்கள் அலைகளாய் எண்ணத்தில் தோன்றுவது எழுத்தில் வடித்திட முடியாததாய் காணும் காட்சிகள் கண்விட்டுப் போவதுபோல் நினைவுகளின் நீட்சிகள் தொடராதிருந்தால் எத்தனை இன்பம் மனம் எப்போதும் கொண்டிடும் காலத்தின் பதிவுகள் கனவின் கோலங்களாய் மனதில் மகிழ்வு தொலைத்து கண்கட்டிவித்தையில் கபடியாடுகின்றன கண் மூடும் வேளைகளில் கூட பகுக்க முடியாத எண்களாய் பகிரப்படும் நாட்கள் பம்பரமாய் சுழன்று மீண்டும் பரிதவித்து நிற்பதுவாய் நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய் நெடுந்தூரம் செல்கின்றன தவிர்க்கவும் மறுக்கவும் மறக்கவும் முடியாததான பிணைப்பின் வலிமையில் மறுதலிக்கும் மனதின் செயல் எத்தனை கடிவாளமிடினும் எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில் எப்போதும் போல் என்னிலை ஏக்கங்…
-
- 1 reply
- 633 views
-
-
உனக்காக ஏதாவது எழுதும் போதுதான் எழுத்துக்களின் நெருக்கடியில் சிக்கி மூச்சு விட இடம் தேடுகிறது என் காதல் * என்னைப் போல் யாரும் கண்ணைத்தானம் செய்வதை பார்த்துவிட்டு இறந்து போயிருக்க மாட்டார்கள் ஆனால் கண்ணுக்கும் தெரியாது நான் இறந்து போனது அவள் திருமணவீட்டில் என்று * உனக்காகவே உழைத்ததில் உன்னை வாங்க மறந்துவிட்டேன் என் மனதையும் உன்னிடம் கொடுத்ததால் * நதியாக ஓடி வா என்றாய் வந்த பின்தான் தெரிந்தது என்னை உன்னோடு கலக்க அல்ல கரைக்கத்தான் வரச் சொன்னாய் என்று * உன் ஆடையின் அழகில் உன்னழகு யாருக்கும் தெரியக் கூடாது என்பதிலும் நான் அக்கறையாக இருந்ததில் தோற்த்தான் போனேனடி உன் ஆசைக் கணவரிடம் …
-
- 1 reply
- 785 views
-
-
என் குரல் ஓய்ந்து போனதா?ஓய வைக்கப்பட்டதா?முடக்கப் பட்டு மண்ணுக்குள்மூடப்பட்டதா?புயல் புகுந்து சுழன்ற மண்ணின்பூ என்றுதானே சொன்னார்கள்இன்று புயலடித்து தின்றவாடிய மலரிதழாய்கூடு விட்டு வெளியில் வரமுடியாது செத்து கிடக்கிறதுகாரணம் தெரியவில்லைஅருகில் நின்றவரை கேட்கிறேன்திரும்பி கூட பார்க்காது போகிறான்நான் பார்ப்போரை கேட்டு கேட்டுகளைத்து என் தங்ககம் செல்கிறேன்.தேடி தேடி செத்துப் போன மனம்தோற்றுப் போய் கிடக்கிறது. தொடர்ந்து வாசிக்க ....http://www.kavikkural.com/2016/03/21/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/
-
- 1 reply
- 959 views
-
-
இதன் கேள்வி வடிவிலான உள்ளடக்கம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் ஏனையவர்களும் படித்து ரசிக்க இங்கு இணைக்கிறேன். அனுராதபுரத்தில் உயிர்க்கொடை தந்து உலகதிரத் தமிழர் தலைநிமிரச் செய்த தற்கொடை வீரர்களின் தாக்கத்தில் உதித்ததாய் இருக்கலாம் இக்கவிதை... என்றே நான் நினைக்கிறேன். முட்கள் அ.பாலமனோகரன் முட்கள் எப்போது தோன்றின? முதலில் தோன்றியவை முட்கள்தானா? இல்லையென்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. ஏதோ ஒன்றைப் பாதுகாக்க வேண்டியே முட்கள் முதலில் தோன்றியிருக்க வேண்டும். தன்னைப் பாதுகாக்க இயலாத உயிர்க் கலம் ஒன்று தான் தாக்கப்படுகையில் ஏதோவோர் வகையில் எதிர்க்கவே செய்யும். இறக்குமட்டிலும் இந்த எதிர்ப்பு இருக்கவே செய்யும். இந்த எதிர் முனைப்பு …
-
- 1 reply
- 920 views
-
-
மலரே என்பான் அவன் வண்டே என்பாள் அவள் மலர் மீது வண்டு உறவாட மலரும் உறவுக்குள் விளையும் குண்டுமணிகள் விடப்படுவது குப்பையில்...! கடைசியில்.. தகாத உறவென்று பெயர் வைக்கும் சமூகம்... மனிதம் குப்பையில் சேர்வது அறிவதில்லை.!!!
-
- 1 reply
- 1.7k views
-