Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. December 29, 2018 “ஏக்கிய இராட்சிய” என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுமந்திரன், ஏக்கிய இராட்சி என்றால் ஒற்றையாட்சி இல்லை என தனது வியாக்கியானத்தை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், …

  2. தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார். அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை…

  3. கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதை விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனினால் தடுக்க முடியாது எனவும் தமது அதிகார பிரதேசத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கிலேயே சார்க் மாநாட்டை முன்னிட்டு, போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர் எனவும் கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் மிகவும் தளர்வடைந்துள்ளனர் எனவும் முன்னர் கிளிநொச்சியை தற்கவைப்பதற்காக தான் கிழக்கில் இருந்து 2 ஆயிரம் பேரை வன்னிக்கு அழைத்துச் சென்றதாகவும் அதன் மூலம் பிரபாகரனை காப்பற்றியதாகவும் கருணா கூறியதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் தற்பொழுது அவர்களுக்கு உதவகூடிய படையை கொண்டு வரமுடியாத நிலையில் விடுதலைப்புலிகள் இருக்கின்றனர். பதுங்குகுழிக்குள் இருந்து கட்டளைகளை மாத்திரம…

    • 11 replies
    • 2.4k views
  4. அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… பகிரங்கமாக சவால் அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு …

  5. வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!! வவுனியாவில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடை்நதனர். வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஹையேஸ் வாகனமும், கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகின. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காந்தன் (வயது-56) என்பவர் சம்பவ இடத்தில் உயிரழந்தார். இவர் ஹையேஸ் வாகனத்தைச் செலுத்தி வந்தார் என்று கூறப்பட்டது. மேலும் மூவர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துத் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலி…

  6. சங்கனை – சுழிபுரத்தில், பதின்ம வயதுச் சிறுமிகள், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்.. சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சங்கனை மற்றும் சுழிபுரம் ஆகிய இடங்களில் பதின்ம வயதுச் சிறுமிகள் இருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறுமி ஒருவருக்கு கருக்கலைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.வன்புணர்வுக்குட்படுத்தினர் என 21 வயது இளைஞர்கள் இருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. “சுழிபுரம் மத்தி, பல்லசுட்டி என்ற இடத்தில் 15 வயதுச் சிறுமியை 21 வயதான இளைஞன் தனது வர்த்தக…

  7. பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு கட்டமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகினோம் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்கமுடியாது ரட்ணசிறி விக்கிரமநாயக்க பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமா கவே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு விலகி யுள்ளது. ஒரு தலைப்பட்சமாக அந்த ஒப்பந்தத்தைப் பேணுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கும் பிரேரனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பேசு கையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார் அவர் அப்போது மேலும் கூறியதாவது: சமாதானப் பேச்சுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம். ஆனால், அதற்காகப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக நாம் ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாகத் த…

    • 11 replies
    • 1.8k views
  8. சிங்கள மக்களின் அனுமதியின்றி கூட்டமைப்பு எதையும் பெறமுடியாது இந்தியாவை நாடினால் கிளர்ந்தெழுவோம் என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தங்கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால், அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர். சிங்கள மக்களின் அனுமதியின்றி நாட்டில் எதையும் கூட்டமைப்பால் பெறமுடியாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கொக்கரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அந்த இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பத…

  9. கருணாவுக்கு கிடைத்த சிங்களத்துக் குயில்! வெள்ளி, 03 ஜூன் 2011 00:25 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது கருணா குழுவினரின் உதவி பெறப்பட்டது என இலங்கையின் இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கிழக்கு பிராந்திய இராணுவ அதிரடிப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயல்பட்டவர் மேஜர் ஜெனரல் சாகி கலகே. அத்துடன் வன்னிப் போரில் சிறப்புப் படையணியை வழி நடத்திச் சென்றவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான போரில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சர்வதேச செயலமர்வின் இரண்டாம் நாள் இன்று. மேஜர் ஜெனரல் கலகே இதில் …

  10. 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் சுழிபுரம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வட்டுக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே குறித்த இருவரும் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.சம்பவதினம் குறித்த மாணவி பாடசாலையால் வீடு திரும்பி தனியாக இருந்த வேளையிலேயே மாணவன் அவரை வன்புணர் வுக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி சத்தமிட்ட போதும் மாணவன் வாயினுள் துணியைத் திணித்துவிட்டு வன்புணர்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருக…

    • 11 replies
    • 2.4k views
  11. வடபகுதியில் உள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாகிஸ்தானிய படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்கான படைப் பயிற்சி நிலையங்களை அமைக்கப்போவதாக சிறிலங்கா தரைப் படைத் தளபதி ஜகத் ஜயசூரிய அறிவித்திருப்பதையடுத்து இந்தியத் தரப்பு குழப்படைந்திருப்பதாக புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தீவில் மையம் கொண்டுள்ள ஆசிய நாடுகளுக்கு இடையிலான இந்த ஆதிக்கப் போட்டியை எவ்வாறு திறமையாகவும் தந்திரோபயமாகவும் பயன்படுத்தி அதனைத் தமக்கு சாதகமாகக்கிக்கொள்வது என மகிந்த ராஜபக்ச அரசு திட்டமிட்டு காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'டெயிலி மிரர்' ஆங்கில நாளேடு விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அதில் முக்கியமான பகுத…

    • 11 replies
    • 1.5k views
  12. மேலும் எட்டு வருடங்கள் ஆட்சியிலிருக்க கனவு கண்ட மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது போன்று, எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை வழங்கி நமது கட்சியை பேரம் பேசும் சக்தியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கைதடி, நவபுரம் சனசமூக நிலையத்தின் 50ஆவது நிறைவு தின விழாவும் நினைவு மலர் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவா தெரிவித்தார். நவபுரம் சனசமூக நிலையத்தின் 50 ஆவது நினைவு மலரை மாவைசேனாதிராஜா வெளியீட்டு வைக்க பண்டாரவளை கல்வி வலயத்தின் தமிழ்ப்பாட உதவிப்பணிப்பாளர் எஸ்.மதியழகன் பெற்றுக்கொ…

  13. ஈழத் தமிழர்களின் பிரச்னைக்காக தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ் இனம் என்ற ஒரே மையத்தில் அனைவரும் இணையாமல், அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள் புறக்கணித்ததால் பிரபாகரன் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் சீமான். அவரைச் சந்தித்தோம். ``ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய, தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. `இது கண்துடைப்பு நாடகம்' என்று பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க., தே.மு.தி.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் புறக்கணித்தன. அ.தி.மு.க. எப்போதுமே ஈழத் தமிழர் பிரச்னையில் எதிர்ப்பு நிலையில்தான் இருந்துள்ளது. அவர்களோடு இணைந்…

    • 11 replies
    • 3.1k views
  14. ” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஏற்றுக் கொள்ளுங்கள்.” இப்படி இலங்கைத் தமிழர்களுக்கு ஆலோசனை கூறி உள்ளார் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவரும், இந்நாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம். இலங்கை- அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மத்தியஸ்தராக 1997 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே செயற்பட்டது. பின் மத்தியஸ்தர் பணியில் இருந்து விலகிக் கொண்டது. இவற்றின் பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் உறவை மீண்டும் புதுப்பிக்க நோர்வே பேரார்வம் வெளிப்படுத்தி உள்ளது. இந்நிலையில் நோர்வே பிரதமர் Jens Stoltenberg இற்கும் …

  15. புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/politics/01/109663

    • 11 replies
    • 968 views
  16. யாழ் கொக்குவில் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில், சிறீலங்கா படைகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. IBC

    • 11 replies
    • 4k views
  17. 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன. அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி 20ஆவது அரசியலமைப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்…

    • 11 replies
    • 1.3k views
  18. மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ பாராளுமன்றில் இன்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு மிளகாய்தூள் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூன்று முறை நிiவேற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாமலேயே இவ்வாறு அராஜகம் நடந்துகொண்ட இவர்கள், வாக்கெடுப்பை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டார்கள். இந்நிலையில் எவ்வாறு சாதாரண தேர்தலை நாட்டில் ந…

  19. தலைவர் பிரபாகரனின் யானை எங்கே? - கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல். [sunday, 2014-03-09 09:49:33] விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பராமரித்து வந்த யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாகக் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர். அவர் புலி, கரடி, யானை என்பனவற்றை வளர்த்து வந்தார். அவர் உயிரிழக்கும் வரை புலியைத் தன்னுடன் வைத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அவர் வளர்த்து வந்த கரடிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வளர்த்த யானை மிகவும் அழகானது. அது தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2009 இல் போர் தீவிரம் பெற…

  20. பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கருத்து கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூனுக்கு உதவுவதற்காக இலங்கையில் இருந்து நான்கு அமைச்சர்கள் பிரித்தானியா சென்றுள்ளனர். சுசில் பிரேமஜயந்த, ஹரின் பெர்ணான்டோ, ஹர்ச டி சில்வா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே பிரித்தானியா சென்றுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை தவிர முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவும் பிரித்தானிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றில் இருந்து விலக வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக இந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத…

    • 11 replies
    • 632 views
  21. இறுதி 2 வாரங்கள் போர் நகர்வுகளை சீனாவில் இருந்தே முன்னெடுத்தேன்! - சரத் பொன்சேகா! இலங்கையில் போர் முடிவுக்குவர இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் சீனா சென்றது உண்மையே என்றும், அங்கிருந்தபடியே போர் நகர்வுகளை முன்னெடுத்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று சர்வதேச உடன்படிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, போர் முடிவுக்கு வரும் வேளையில் சரத் பொன்சேகா சீனாவிலேயே இருந்தார் என்று தெரிவித்திருந்தார். இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சரத் பொன்சேகா, போர் முடிவுக்கு வர இரண்டு வாரங்களே இருந்தபோத…

    • 11 replies
    • 1.3k views
  22. பொதுத் தலைவராகிறார் ரணில் ? ; சம்பந்தன், ஹக்கீம், மனோ, அநுரவுடன் முக்கிய கலந்துரையாடல் (லியோ நிரோஷ தர்ஷன்) பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளுக்கு பொதுத் தலைமைத்துவம் வழங்கும் வகையிலான கலந்துரையாடல்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்க உள்ளார். இதன் முதற்கட்ட கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனான கலந்துரையாடல் அடுத்த வாரம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதனடிப்படையில் பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் ஜனாநாயக விழுமியங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் பொது நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. இதனை மையப்படுத்தி பாராளுமன்றத்தை பிரதிநிதித…

    • 11 replies
    • 799 views
  23. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (30) மதியம் வட மாகாண முதலமைச்சர் இருதய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் நலமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விக்னேஸ்வரன் மருத்துவ பரிசோதனையின் பின் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் 24 மணிநேரம் சிகிச்சை பெற வேண்டி இருப்பதாகவும் நாளைய தினமே வீடு திரும்புவார் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார். http://akkinikkunchu.com/new/index.php

    • 11 replies
    • 1.2k views
  24. கோட்டாவிற்கு எதிரான... எந்த பிரேரணைக்கும், ஆதரவில்லை – வாசுதேவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் வாசுதேவ நாணயக்காரவின் கருத்தைப் போன்றே கருத்து வெளியிட்டிருந்தார். முன்னதாக தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்…

    • 11 replies
    • 606 views
  25. தொப்பிகலவின் "தோரா போராவை' படைகள் நேற்றுக் கைப்பற்றியதாகத் தகவல் இலங்கை கொமாண்டோக்கள், தொப் பிகல வனாந்தரப் பகுதியில், பரந்த கற்பாறைப் பீடமொன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் என நேற்றுத் திங்கட்கிழமை இரணுவம் கூறியதாக, ஏ.பி.செய்திச் சேவை தெரிவித் தது. கொமாண்டோக்கள் பாரிய கற்பாறைப் பீடத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு அவர்களால் "தோரா போரா'' என புனை பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து புதிய கொமாண்டோக்கள் அப் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவி ரப்ப டுத்தினார்கள் என இராணுவம் தெரி வித்தது. புல்வெளிகளிலும் புதர்களுக்குள் ளும் 200 புலித் தீவிரவாதிகள் வரை பதுங்கியி ருக்கலாம் என்ற நோக்கில், இத்திடீர் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இம் மாத இறுதிக்குள், கிழக்கிலங்கை அரச கட்…

    • 11 replies
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.