ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142586 topics in this forum
-
''இன்று நடந்த விமானஎதிர்ப்பு தாக்குதல் வீடியோ''
-
- 46 replies
- 9.2k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு ரயில் மூலமாகப் பயணம் செய்த கலம் மக்ரே உள்ளிட்ட சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநுராதபுரத்தில் ரயிலை மறித்து நடத்தப்பட்ட ஓர் ஆர்ப்பாட்டம் காரணமாக அவர்கள் யாழ் பயணத்தைக் கைவிட்டு கொழும்பு திரும்பியிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். புதன்கிழமை காலை 6.50 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் புறப்பட்ட ரயிலில் சனல் 4 ஊடகவியலாளர்கள் குழுவினர் யாழ்ப்பாணம் செல்வதற்கான தமது பயணத்தை ஆரம்பித்திருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்காக ரயிலில் வருவதை அறிந்த குழு ஒன்று அநுராதபுரத்தில் வந்து நின்ற ரயிலை மறித்து, பாதையில் கூடிநின்று கலம் மக்ரேயை திரும்பிச் செல்லுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த …
-
- 46 replies
- 3.3k views
-
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் "கருணா"வுக்கு சீட் வழங்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மறுத்துவிட்டது. நியமன எம்.பி.யாகவும் கருணாவை அந்த கூட்டமைப்பு நியமிக்கவில்லை. இதனால் இலங்கை அரசியலில் இருந்து கருணா முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா. திடீரென விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி இலங்கை அரசாங்கம் பக்கம் போனார். அவருக்கு ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியின் துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதிப் போர…
-
- 46 replies
- 2.7k views
-
-
விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் அவர்கள் இன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு அடைந்து உள்ளதாக களத்தில் இருந்து வரும் தவல்கள் தெரிவிக்கின்றன. சண்முகநாதன் ரவிசங்கர் என்ற இயற்பெயர் உடைய இவர் தெற்கில் இராணுவ மையங்கள் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. -பாரிமகன் செய்தி மூலம் : http://www.sooriyan.com/ விரிவாக விபரம் தெரிந்தவர்கள் கூறவும்
-
- 46 replies
- 10.7k views
-
-
Published By: VISHNU 30 JUL, 2023 | 06:54 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் பெரும்பான்மையானவர்களு டையதாக மாறியது போல் வ…
-
- 45 replies
- 2.3k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் , வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் காணொளி பதிவிட்டு, வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்க…
-
-
- 45 replies
- 1.8k views
- 1 follower
-
-
யுத்த ஆய்வாளர் நிலவன் எழுதியது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான சிறிலங்கா விமானப்படையினரின் வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தமிழர்களை புதியதொரு அச்சமும், கவலையும் பிடித்துக்கொண்டுள்ளது. வெளியே பேசிக்கொள்ளவும் விரும்பாமல், அதேவேளை அதனை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாமல் புலம் பெயர் நாடுகளிலுள்ள பல தேசியப்பற்றாளர்கள் தடுமாறிக்கொண்டு இருக்கின்றார்கள். என்னுடன் உரையாடுகின்ற பல அன்பர்கள் தமது இந்தப் புதிய கவலையை பல வடிவங்களிலும் வெளியிட்டும் வருகின்றார்கள். அவர்களது அந்த அச்சத்தை மேலும் அதிகரிப்பது போன்று, மேலும் பல செய்திகளும் அறிக்கைகளும் பல்வேறு தளங்களில் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. …
-
- 45 replies
- 6.3k views
-
-
24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அறிவிக்கப்பட்டபடி பரீட்சார்த்தமாக இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயில் வெள்ளளோட்டம் இடம்பெற்றது. கடந்த 15ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு ரயில்சேவை இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஏற்கனவே அறிவித்திருந்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையாததால் அறிவிக்கப்பட்டபடி ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவுற்று பரீட்சார்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாத முற்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த…
-
- 45 replies
- 4.5k views
-
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார். இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடா…
-
-
- 45 replies
- 2.7k views
-
-
புலிகள் மீதான தடை விலக்க படும் -டில்லி முக்கியஸ்தர் தெரிவிப்பு ..! தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை தற்போது இலங்கை மீது சுமத்த பட்டிருக்கும் போர்குற்ற நிகழ்வினை அடுத்து இலங்கை தொடர்பான சர்வேதேச நாடுகளின் அரசியல் நிலை பாடுகள் மாற்றம் அடைந்துள்ளதை அடுத்தும் மேலும் இவர்களின் எதிர்கால அரசியல் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகும் நிலையில் இந்தியா தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிதிருக்கும் தடையினை விரும்பியோ விரும்பாமலோ பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய விலக்க வேண்டிய நிர்பந்த சூழல் ஏற்படும் எனவும் . அதனை இந்திய செய்தே தீரும் .தமிழர்களை அழித்த பழியினை இந்தியா காங்கிரஸ் மீது விழுந்துள்ள நிலையிலும் ஒட்டு மொத்த தமிழர்களும் இந்தியாவை வெறுத்த…
-
- 45 replies
- 5k views
-
-
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஊரணி துறைமுகம் மக்களிடம் ஒப்படைப்பு : சந்தோசத்தில் மீனவர்கள் (ஆர்.வி.கே) நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடணப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் பணிப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஊரணி மீன் பிடி துறைமுக பகுதிகள் இன்று மக்களிடம் மீள கையளிக்கப்பட்டன. தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் கடந்த 8ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 14நாட்களுக்கு நல்லிணக்க வாரமாக பிரகடணப்படுத்தி…
-
- 45 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி அபகரிப்பு பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு காலை ஏற்றப்பட்ட இலங்கை தேசியக் கொடி இனந்தெரியாதோரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. இது பற்றி பதில் துணை வேந்தர், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இலங்கையின் 59 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை காலை பதில் துணைவேந்தரால் தேசிய கொடி ஏற்றப்பட்டது
-
- 45 replies
- 6k views
-
-
மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் வீரரான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டில் கணேசபுரம், ஈசன் குடியிருப்பினை சேர்ந்தவரான நகுலேஸ்வரன் (வயது 34) என்பவரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடமைப்பிற்கென தனது மனைவியுடன் இணைந்து சீமெந்து கற்களை அரிந்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறமாக வந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் தற்போது இலங்கை படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற…
-
- 45 replies
- 3.8k views
-
-
21 AUG, 2023 | 10:37 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார். குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு …
-
- 45 replies
- 2k views
- 1 follower
-
-
மோடியுடனான சந்திப்பில்… இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது திரைமறைவில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இப்போது மெல்லமெல்ல கசியத் தொடங்கியிருக்கின்றன. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமது பிடிக்குள் வைத்திருந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அந்தப் ‘பிடி’யை இழந்துவிட்டார்கள் என்பதும், தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு விக்கினேஸ்வரன் முற்பட்டிருக்கின்றார் என்பது வெளியே தெரியத் தொடங்கியிருக்கின்றது. இறுதியாக விக்னேஸ்வரனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தியாவின் துணையை நாடும் நிலை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. முதலமைச்சரின் ‘இனப்படுகொலை’த் தீர்மானத்தையடுத்தே இந்த விரிசல் தீவிரமடைந்திருக்கின…
-
- 45 replies
- 2.9k views
-
-
மாவிலாறை நோக்கிய படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல் திருகோணமலை மாவிலாறு நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். கல்லாறிலிருந்து இருமுனைகளில் இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் பெருமெடுப்பில் படையினர் நகர்வை தொடங்கியுள்ளனர். மங்கிபிரிட்ஜ் தளத்திலிருந்து தரைப்படையினர் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்த, விமானப்படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக விமானங்கள் தாக்குதல்களை நடத்த தரைவழியாக படையினர் தமது வலிந்த தாக்குதல் நகர்வை தொடங்கினர். மாவிலாறு விடுதலைப் புலிகளின் முன்னரங்கப்பகுதி நோக்கிய நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப…
-
- 45 replies
- 6.1k views
-
-
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் – தெரிந்ததும் தெரியாததும் [ திங்கட்கிழமை, 07 ஒக்ரோபர் 2013, 01:04 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக, இன்று காலை 9 மணியளவில் பதவியேற்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன். கடந்தமாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட, சி.வி. விக்னேஸ்வரன் பற்றிய சில குறிப்புகள் - *கொழும்பு புதுக்கடையில் ஒக்டோபர் 23, 1939ம் நாள் பிறந்தார் விக்னேஸ்வரன். *இவரது தந்தை, கனகசபாபதி விசுவலிங்கம், தாய் ஆதிநாயகி, இருவரும் மானிப்பாயில் பிறந்தவர்கள். *இரு சகோதரிகளுடன் பிறந்த விக்னேஸ்வரனின் பேரன், சேர் பொன்.இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகி…
-
- 45 replies
- 2.9k views
-
-
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும். http://www.virakesari.lk/article/local.php?vid=2777 வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் வீரக்கெட்டிய ராஜபக்ஷ மத்திய வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளனர். அதன்பிரகாரம் ஹம்பாந்தோட்டை, வீரக்கெட்டிய ராஜபக்ஷ மத்திய வித்தியாலய மாணவர்களான ஆர்.எஸ்.பி.கசுன் லக்மால் விஞ்ஞான பிரிவிலும் ருசிரு கம்பீரா ஆராச்சி கணிதப் பிரிவிலும் முதலிடத்தை பிடித்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58…
-
- 45 replies
- 4.9k views
-
-
சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் October 26, 2021 யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.இழுவை மடித்தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில் முறமைகளுக்கு எதிரான சட்டத்தினை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என எம்.ஏ. சுமந்திரன் தலமையிலான போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அந்நிலையில் சுமந்திரனின் கோரிக்கையால், உள்ளூரில் இழுவை மடி தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மீனவர்கள் அடிமடி தொழில் செய்வதில்லை எனவும், இந்திய மீனவர்களே அடிமடி தொழில் செய்கின்றனர். அதனாலையே கடல் வளங்கள…
-
- 45 replies
- 4.4k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும் என்பது தனக்கு தெரியும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பொத்துவில், கோமாரி, ஊரணி பகுதியில் உள்ள பெண்கள் சமாசம், விளையாட்டு கழகங்கள், இளைஞர்கள் அமைப்பு, உள்ளிட்ட தரப்பினருடன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான வெள்ளிக்கிழமை(13) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தனது கருத்தில், தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும். கடந்த சனாதிபதித் தேர்தலில் நாங்கள் தமிழ் மக்களுக்கு விடிவு வேண்டும் என்பதற்காக முயற்சிகளைச் செய்தோம். மூழ்கப் போகும் கப்பலில் பயணிக்க வேண்டாம், ஓடும் கப…
-
- 45 replies
- 4.3k views
-
-
November 9, 2018 “நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு என ரஜனி பாணியில் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளே வேலைத் திட்டங்களை விரைவு படுத்துங்கள் எனவும், ஒருநாள் பதவியில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன் எனவும் கூறியுள்ளார். அமைச்சரவை தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் இன்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட செயலகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும…
-
- 45 replies
- 4.9k views
- 1 follower
-
-
-
- 45 replies
- 6.6k views
-
-
ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறி வவுனியா புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது : வவுனியா மாவட்டத்திலுள்ள மிகப் பெரிய முகாமான ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக் கிடங்கு சற்று முன்னர் வெடித்துச் சிதறி வவுனியாவையும் அதனை அண்மதித்த பகுதிகளிலும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதுடன் வவுனியா நகரப் பகுதி எங்கும் புகைமண்டமாகமாகக் காட்சி தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.globaltamilnews.net/tamil_news....10476&cat=1
-
- 45 replies
- 9.4k views
-
-
இலங்கையின், ஹெர்மஸ் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன் நியமனமாகி உள்ளார். Hemas Holding plc என்னும் இலங்கையின் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக 2020, அக்டோபர் 1ம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். விலகிச் செல்லும் Steven Enderby என்பவரின் இடத்துக்கு இவர் நியமனமாகியுள்ளார். ஜூலை 1ம் திகதி முதல், அவரின் கீழ், நிழல் நிறைவேற்று அதிகாரியாக கடமை தொடங்கவுள்ளார் கஸ்தூரி. 2002 ம் ஆண்டு முதல் நிறுவனத்துடன் செயல்படும் கஸ்தூரி, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 2016ல் நிறுவனத்தின், மருந்துகள் பிரிவுக்கு பொறுப்பாக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார். இலங்கையின் வரலாறில் ஒரு தமிழ் ப…
-
- 45 replies
- 4k views
-
-
கடந்த 23ம் திகதி (23.10.2010) எமது மாதிரிப்பண்ணை முழங்காவிலில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் அவுஸ்திரேலியா பிரதிநிதி திரு. S. சுந்தரமூர்த்தி, கனடா பிரதிநிதி திரு. இன்பநாயகம் – பேரின்பநாயகம் ஆகியோர் மரம் நாட்டி ஆரம்பித்து வைத்தனர்.இந்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பு, நவீன தொழிநுட்ப அறிவை வழங்கும் நோக்குடன் இந்த மாதிரிப்பண்ணை ஆரம்பித்து வைக்கப்பட்டது. எமது மாதிரிப்பண்ணை பற்றிய ஆங்கில இணையத்தளம் http://modelfarm.nerdolanka.org/. நேர்டோவின் மாதிரிப்பண்ணை பற்றிய மேலதிக படங்களுக்கு இங்கே சொடுக்கவும்!
-
- 45 replies
- 3.5k views
-