ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்: 18 பெப்ரவரி 2011 மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை.. இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்: இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த சில்வா தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொ…
-
- 8 replies
- 1.4k views
-
-
மண்டேலா தலைமையிலான ஜனநாயக அமைப்பு போர்க்குற்ற விசாரணைகளை வலிவுறுத்தும் நெல்சன் மண்டேலா தலைமையிலான உலகளாவிய ஜனநாயக அமைப்பு இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்துகின்றன. சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் பலர் ஒன்று சோ்ந்து தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தலைமையில் “த எல்டர்ஸ்” எனும் பெயரிலான அமைப்பொன்றை உருவாக்கிக் கொண்டுள்ளனர். அந்த அமைப்பின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை யொன்றையும் வெளியிட அவர்கள் தீர்மானித்துள்ளனர். ” த எல்டர்ஸ்” அமை…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஸ்ரீலங்காவின் நான்காவது கெமுனு கண்காணிப்பு பிரிவின் தளபதியும் முகமாலையின் முன்னரங்க காவல் அரண்களின் பொறுப்பாளருமான லெப்டினன்ட் கேனல் ஜெகத் ரட்நாயக்க தமிழீழ விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். இதனை லங்காதீப செய்திதாள் தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலை அடுத்து தளபதி முதலில் பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.ஏற்கனவே 55வது பிரிவின் பிரிகேடியர் குணரட்னவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/view.php?2aIWnBe0d...d436QV2b02ZLu2e
-
- 0 replies
- 1.4k views
-
-
எழுதுமட்டுவாள் கண்டல்காட்டுப்பகுதியில் மோதல்கள். எழுதுமட்டுவாள் கண்டல்காட்டுப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இரு தரப்பும் பரஸ்பரம் ஆட்லறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்றிரவு 7:00மணியில் இருந்து இன்று மதியம் வரை இந் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இதேவேளை காயமடைந்த படையினரை ஏற்றிச் செல்வதற்கு உலங்குவானு}ர்திகள் மிருசுவில் படைத்தளத்திற்கு வந்து செல்வதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/news/index.php?option=...id=381&Itemid=1
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழர் கேட்க வேண்டியது " அதிகாரப் பகிர்வு" அல்ல "அரசாங்கத்திலே பங்கு ". அரசாங்கத்திலே பங்கு இல்லை என்றால் நாங்கள் தனி அரசாகப் போக வேண்டியது தான் . இதே மாதிரித்தான் , சிங்களவன் முழுத் தீவையும் ஸ்ரீலங்கா என்று உரிமை கோரியபோது , நாங்கள் வடக்கையும் கிழக்கையும் மட்டும் கேட்டோம் . உண்மையில் நாங்களும் முழுத் தீவையும் தமிழீழம் என்று கேட்டிருந்தால் ( அவனது கோரிக்கைக்கு சமமான கோரிக்கை ) இன்றைக்கு இந்த பிரச்சினை தீர்ந்திருக்கும் . எனவே , இஸ்ரேலியர்கள் போல அதிகமாகக் கேளுங்கள் அப்போது தான் உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியது கிடைக்கும் . முழு இலங்கையையும் தமிழீழம் என்று உரிமை கோருங்கள், ஸ்ரீலங்கா சட்டவிரோதமான நாடு என்று கூறுங்கள் , உலகம் இந்த பிரச்சினையை திரும்பி பார்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு? வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை எதிர்வரும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்தகாலங்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து …
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
உண்மையின் தரிசனம் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை எமது இறப்பின் மூலம் பெற்றுத்தரும். இதனை வானத்திலிருந்து வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுடன் சேர்ந்து நானும் பார்த்து மகிழ்வேன். தியாகி லெப்.கேணல். திலீபன்
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று மாலை சுமார் 7.10 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த நிலையத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்று காலையில், நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வையடுத்து, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன், அங்கிருந்து திரும்பியதும், சிறிலங்கா அதிபரை சந்தித்துப் பேசினார். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. சிறிலங்கா அதிபரை தனியாக சந்தித்து, மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுக்கப் போவதாக, டேவிட் கெமரொன் முன்னர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், பிரித்தானி…
-
- 7 replies
- 1.4k views
-
-
சென்ற ஆண்டு இதே நாளில் மண்ணுலகில் இருந்து சென்றாலும், என்றும் தமி்ழர்களின் நினைவுலகில் வாழும் " தேசத்தின் குரல்" ஆண்டண் பாலசிங்கம் அவர்களுக்கு எம் வணக்கங்கள். அண்ணாரது ஆன்மா, தமி்ழ் தேசியத்தின் விடியலில் தான் சாந்தியடையும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. விரைவில் அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாரும் ஒன்றாய் வேண்டுவேம்.
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதியின் உத்தியோகப்பற்றற்ற அமெரிக்க விஜயத்தின் புதிய திடுக் தகவல்! சனி, 22 ஜனவரி 2011 16:18 இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவிற்கு சென்றமை குறித்து பல்வேறு தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கம் அந்த விஜயத்தினை ஜனாதிபதியின் தனிப்பட்ட விஜயம் என கூற பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. எனினும் அனேகாரின் கருத்து, அது அமெரிக்காவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த திடீர் விஜயம் இடம்பெற்றது என்பது. இதுதொடர்பாக நேற்றைய தினம் வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அன்றாட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுகுறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்க…
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்களின் நிலங்களைத் தொடர்ந்து அபகரித்து வரும் சிறிலங்கா அரசாங்கம் தனியாருக்குச் சொந்தமான முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தையும் அரச சொத்தாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல காலமாகவே தமிழ் மக்களின் போக்குவரத்துத் தெய்வமாக விளங்கி வந்த முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய சூழலில் பல சிங்களக் கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகமும் தற்போது இந்துக் கலாச்சாரத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டு கோயிலில் காணிக்கையாகச் சேரும் பணமும் அரச கஜானாவிற்குச் செல்லத் தொடங்கியுள்ளது. இதனிடையே இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்துக் கலாச்சாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலயத்திற்கு உரிமை கோரி சிலர் வந்த போதிலும் அவர்களிடம் அதற்கான உரிய ஆவணங்கள் …
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக எங்களை ஒதுக்கிவிட்டு டக்ளஸ் தேவானந்தாவையும் கருணாவையும் கேட்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எமது மக்களுக்கு விமோசனம் வழங்குவீர்கள் என்று நாங்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வது என்று அரச தலைவர் மகிந்தவுடனான சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் காட்டமாக கேட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்ந்து பேசி வருகின்றார். ஜனாதிபதி உட்பட்ட அரசுத் தரப்புடன் நேற்று முன்தினம் இரவு அவர் நடத்திய…
-
- 4 replies
- 1.4k views
-
-
நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளது ‐ மாவோயிஸ்ட் தலைவர் ‐ பிரசண்டா: நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக மாவோயிஸ்ட் தலைவரும் பதவி விலகியுள்ள முன்னாள் பிரதமருமான பிரசண்டா கடுமையாகக் குற்றஞ் சாட்டியுள்ளார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு இந்தியாவை சாடியுள்ள பிரசண்டா, நேபாள எம்.பி.க்களை வாங்கியும் விற்றும் நேபாளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளும் தலைமைத்துவம் வகிப்பதற்கு ப…
-
- 5 replies
- 1.4k views
-
-
மூதூர் கிழக்கு பாதுகாப்பு வலயத்துக்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு. மூதூர் கிழக்குப் பகுதியை அரசு அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகனடனப்படுத்திமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வடக்கு -கிழக்கிப் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்தக் கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பனால் நேற்று வடக்கு. கிழக்கு முற்றாக முடங்கிப் போயிருந்தது. த.தே.கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த ஹர்த்தால் நடவடிக்கை வடக்குப் பிரதெசங்களான யாழ், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார் ஆகிய மாவட்டங்களில் முழு அளவில் அனுஸ்டிக்கப்பட்டது. அங்கு வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள் எவையும் இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவைகளும் இடம் பெற வில்லை.…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் புலிகளின் இரு பிரதான தாக்குதல்களை அடுத்து இராணுவ மோதல்கள் உக்கிரமடைகின்றன 0000 இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த மூன்று நாட்களுக்குள் தொடுத்த இரு பிரதான தாக்குதல்கள், கடந்த ஜூலையில் இருந்து துரிதமடைந்துவரும் பகிரங்க உள்நாட்டு யுத்தம் மேலும் உக்கிரமடையும் ஆபத்தை தோற்றுவித்துள்ளது. கடந்த திங்களன்று, தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கு கிழக்காக 170 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹபரனை பிரதேசத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 102 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கடற்பனையினராகும். இந்த இடம், கிழக்குத் துறைமுகமான திருகோணமலையில் உள்ள க…
-
- 1 reply
- 1.4k views
-
-
கண்ணிரண்டையும் 1995 இல் இழந்த ஒரு முன்னாள் போராளி இவன். 3பிள்ளைகளின் தந்தை. முள்ளிவாய்க்கால் முனைவரையும் சென்று முகாமில் ஒதுங்கியவர்கள். அகதி வாழ்வு அலைக்கழிக்கும் துயரம் அனைத்துக்கு நடுவிலும் மீள எழத்துடிக்கும் துணிவோடு சொந்த ஊருக்குப் போயிருக்கிறான். வறுமை இவனையும் இவனது குடும்பத்தையும் விரட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில் உதவிகள் வேண்டி ஏறாத இடமில்லை உதவி கேட்காத நிறுவனங்களுமில்லை. நம்பிக்கை கொடுத்து உதவிகள் தருவதாய் புகைப்படம் குடும்ப விபரங்கள் பெற்றவர்களும் அமைதியாகிப்போனார்கள். விபரங்கள் பெற்றவர்களைத் தேடி தொடர்பு கொண்டு உதவி கிடைக்குமா கிடைக்குமா என வேண்டியதன் பின்னால் விபரம் பெற்ற தொடர்பிலக்கங்கள் தொடர்பறுந்து போயிற்று. கண்கள் இல்லாத தன்னை தனது பிள்ளை…
-
- 12 replies
- 1.4k views
-
-
யாழ் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவில் படுகொலை தொடர்பில் இன்றைய யாழ் நிலவரம் தொடர்பிலும் சுவிஸ் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Mord an Schülerin (18) – Schweizer Tamile in Haft tamilwin கூகிள் மொழிபெயர்ப்பு ஆங்கிலம் The crimes committed against the young Vithiya shaken Sri Lanka. The 18-year-old was attacked on Pungudutivu, an island near Jaffna, by a group of men. They tied with the tie of her school uniform, raped and killed them. Her body was found on May 14 in an abandoned house. The crime has sparked mass protests in Jaffna. The popular…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக சென்னையில் சுவரொட்டிப்பிரச்சாரம் நடத்தப்படுவதாக அறியப்படுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், தமிழகத்திலுள்ள சிலரும், மாலை நாளிதழ்களும் விடுதலைப்புலிகள் கொடுக்கும் செய்தியை அச்சிட்டு வருவதாகவும், அவர்களின் மேல் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கையை எடுக்கப்படும் என தமிழக தமிழக முதல்வரின் வீடு அமைந்திருக்கும் கோபாலபுரம் பகுதிகளிலும், மற்றும் சென்னை முழுக்க சுரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் வண்ணக் காகிதத்தில், சிகப்பு நிற எழுத்துக்களில், "இலங்கையில் போர் நிறுத்தம் என்றாலும்.... இங்குள்ளோர் சிலர் அதை விடுதலைப் புலிகளிடம் செய்திகளைக் கேட்டு திசை திருப்பி இல்லை - இல்ல…
-
- 7 replies
- 1.4k views
-
-
மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை:வைகோ இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உரையாற்றினேன். ஆனால் என் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் செய்தி வெளியாகி உள்ளது. முதல்- அமைச்சர் கருணாநிதி நேற்று தமிழக மக்களை ஏமாற்றுகிற நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். தாயே, அம்மா, இந்திரா காந்தியாக மாற சோனியாவுக்கு கோரிக்கை விடுத்தார். இலங்கை தமிழர்கள் மீது இப்படிப்பட்ட குண்டுகள் வீசப்பட்டதில்லை. முதல்-அமைச்சர் கர…
-
- 2 replies
- 1.4k views
-
-
பட மூலாதாரம்,MOD SRI LANKA கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2023, 14:27 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு கோரி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன தாக்கல் செய்த கோரிக்கைக்கு பதிலளித்தபோதே பாதுகாப்பு அமைச்சு இதைக் குறிப்பிட்டுள்ளது. பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வ…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
"தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் பாரிய குற்றங்களை புரிந்தார்கள் என்பது உண்மை. ஆனால் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு இதனை மறுக்க முடியாது" தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் பாரிய குற்றங்களை புரிந்தார்கள் என்பது உண்மை. ஆனால் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு இதனை மறுக்க முடியாது என கனடாவில் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனை சர்வதேச சட்டங்கள் கூறியிருக்கின்றன. இதேவேளை தமிழ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகள் இனப் படுகொலை என்பதனை சர்வதேசம் இதுவரை ஏற்க மறுக்கிறது. முழுமையாக காணொளியை பாருங்கள் கேளுங்கள்.
-
- 21 replies
- 1.4k views
-
-
வெள்ளி 04-08௨006 19:22 மணி தமிழீழம் [நிலவன்] மனிதபிமான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு புலிகள் இன்று மோதல் தவிர்ப்பு. இடம் பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக விடுதலைப் புலிகள் இன்று மோதல் தவிர்பை மேற்கொண்டனர். புலிகள் தாக்குதல்களை நிறுத்தி வைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி படையினர் புலிகளால் கைப்பற்றப்பட்ட மூதூர் பகுதிகளை நோக்கி தாக்குதலைத் தொடுத்தனர் இத்தாக்குதல் புலிகளால் முறியடிக்கப்பட்டது இதனை அடுத்து கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர் இதனை அடுத்து விடுதலைப்புலிகள் படையினரை நோக்கி மட்டுப் படுத்தப்பட்ட அளவில் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். நன்றி-பதிவு
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா வான்படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட தூரப் பீரங்கிகளை அழிக்க முடியவில்லை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றியிருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால், தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது - தற்போதைய நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்று பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பில் தெரிவித்த கருத்துக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக கூறுவது பிரித்தானியரின் கட்டுக்கதை. பல்வேறு சந்தர்ப்பங்களில் புதுடெல்…
-
- 15 replies
- 1.4k views
-
-
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கின் வசந்தம் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்‐முஸ்லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது, உரிய முறையில் தகவல்களை ஆராய்ந்து, நியாயத்தை கருதி யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் தாமும் குடியேற சந்தர்ப்பத்தை வழங்குமாறு யாழ்ப்பாணத்தில் பல காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் இது குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். வடக்கில் வசித்த சிங்கள மக்கள் அக்கரைப்பற்றில் தம்மைச் சந்தித்த போது, இதனை குறிப்பிட்டதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளிடம் இருந்து முழுநாட்டை மீட்க இன்னும் சிறிது காலமும் சிறிய நிலப்பரப்புமே எஞ்சியுள்ளது. இதன் பின்னர் வட…
-
- 6 replies
- 1.4k views
-