நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
களத்தில் உள்ள பாகற்காய் ரசிகர்களுக்காக.. இதுக்கு என்ன தேவை? பாகற்காய் - 1 தக்காளி - 1 வெங்காயம் - 1 மிளகாய் - 1 மிளகு தூள் - 2 தேக்கரண்டி உப்பு (இது கூட சொல்லணுமா?) எப்படி செய்யலாம்? 1. பாகற்காயை சின்னனா வெட்டி, பொரியுங்க. 2. தக்காளி, வெங்காயம் & மிளகாயை சின்னன் சின்னனா அரியுங்க. 3. பொரித்த பாவர்காயுடன் , அரிந்தவற்றை சேர்த்து மிளகும், உப்பும் போட்டு கலவுங்க. 4. நல்லா இருந்தா சாப்பிடுங்க. இல்லாட்டி பரவாயில்லை கூட இருப்பவர்களுக்கு குடுங்க.
-
- 33 replies
- 7.3k views
-
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 01 'அறிமுகம்' / 'Introduction' இத் தொடர் திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி, முடிந்த அளவு மனிதனின் ஆரம்ப காலத்தில் இருந்து, சுமேரிய, ஹரப்பா - மொகெஞ்சதாரோ, சங்க கால, மத்திய கால அல்லது பக்தி காலத்தின் ஊடாக ஆய்வு செய்யவுள்ளது. பெரும்பாலான திராவிடர்கள் வாழும் தென் இந்தியா மிளகு, கிராம்பு, ஏலம், இலவங்கம் [கருவா] போன்ற பல வகையான வாசனைத் திரவியங்களின் உற்பத்தி இடமும் ஆகும். உண்மையில், மிளகு போன்றவை இங்கு தான் முதலில் வளர்ந்தன. திராவிடர்களின் முக்கிய உணவு, பல ஆயிரம் ஆண்டுகளாக, இன்று வரையும் - அரிசி, அவல், பொரி, மா, இப்படி பல வகையான வேறுபாடுகள் கொண்ட - நெல் அரிச…
-
-
- 33 replies
- 6.8k views
-
-
வணக்கம், தலைப்பை பார்த்து விட்டு, இதென்ன பெரிய சமையல் என நினைச்சிங்க என்றால் அது தப்பு, பெரிய தப்பு. தேவையான பொருட்களில் தான் இந்த கறியின் சுவை உள்ளது. முதலில் அதைப் பார்ப்போம். மிக முக்கியமான தேவையான பொருட்கள்: (1) அடம் பிடித்து, அப்பாவிடம் திட்டு வாங்கி வீட்டில் நீங்களே வைத்த தக்காளி செடியில் இருந்து வந்த தக்காளிக்காய்கள். (குறிப்பாக அந்த செடிக்கு நீங்கள் ஒரு தடவை கூட நீர் ஊற்றியிருக்க கூடாது. வைத்த சில நாட்களிலேயே வேலை என சொல்லி வேறு ஊரிற்கோ/ நாட்டிற்கோ சென்றுவிட வேண்டும்) (2) பக்கத்து வீட்டில் கொடுத்த கருவாட்டு துண்டு (கருவாடு தரும் பக்கத்து வீட்டுக்காரரா என பொறாமை வேண்டாம்..அந்த பக்கத்து வீடு என் அண்ணன் வீடு) கருவாடு நிச்சயமாக ஊரில் இருந்து வந்திர…
-
- 32 replies
- 5.9k views
-
-
தேங்காய், கத்தரி கார குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன கத்தரிக்காய் - 15 பெரிய வெங்காயம் - 1 தேங்காய் எண்ணெய் - 15 மேசைகரண்டி புளி - 1 தேசிக்காய் அளவு கறிவேப்பிலை - 3 கடுகு - 1/2 தேக்கரண்டி உழுந்து - 1/2 தேக்கரண்டி பெருவெங்காய தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு அரைக்க தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 2 தேக்கரண்டி மல்லி - 1 தேக்கரண்டி செத்தல் - 6 துருவிய தேங்காய் - 1/2 கப் ஏலக்காய் - 2 கறுவா - 1 1. கத்தரிக்காயை 4 துண்டுகளாக கீறி எண்ணெயில் அரைவாசி வதக்கி எடுக்கவும். 2. அரைக்கவேண்டியதை அரைத்து எடுங்கள். (அனைத்து பொருட்களையும் வறுத்த பின்னர்) 3. வெங்காயத்தை சிறிதாக வெட்டி, சிறிதளவு எண்ணெஇயில் போட்டு வதக்கவும். 4…
-
- 32 replies
- 9.7k views
-
-
முட்டைப் பொரியல் - யாழ்ப்பாண முறை முட்டை - 2 அல்லது 3 சிறிய வெங்காயம் - 50 கிராம் நைசாக நறுக்கியது காய்ந்த மிளகாய் - 1 நைசாக நறுக்கியது மிளகாய்த் தூள் - 1 டீஷ்பூன் உப்பு - தேவையான அளவு வெங்காயத்தினையும், மிளகாயையும் தாச்சியில் (வானலியில்) இட்டு எண்ணெய் (நல் எண்ணெய், சிறப்பானது) சேர்த்து பொன்னிறம் வரும் வரை பொரிக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊத்தி, மிளகாய்த்தூள், உப்பு இட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். பொரிந்து வந்த வெங்காயத்தினையும், மிளகாயையும் முட்டையியினுள் சேர்த்து கலக்கவும். பின்னர் தாச்சியில் (வானலியில்) கலவையினை தோசை மா போடுவது போல் பரத்திப் போடவும். பொரிந்து வரும் போது, தோசைக்கரண்டி கொண்டு, பக்கங்களில், சிறிது கிளப்பி, நடுவ…
-
- 32 replies
- 3.1k views
-
-
விறகிலும் ,எரிவாயுவிலும், மின்சாரத்திலும் தான் சமைக்க வேண்டும் என்று இல்லை. இப்படி குப்பையை கொழுத்தியும் சமைக்கலாம். 😂😂
-
- 32 replies
- 2.9k views
-
-
-
- 32 replies
- 6.3k views
-
-
தலைப்பைக்கண்டுட்டு ஏதோ சொல்லப்போறன் எண்டு நினைக்காதேங்கோ உங்களுக்கு தொிஞ்சா சொல்லுங்கோ :P :P :P :P :P
-
- 32 replies
- 5.8k views
-
-
பொதுவாக புதுமண தம்பதியர்களுக்கு திருநெல்வேலி ஜில்லாவில் செய்து கொடுக்கப்படும் பிரபலமான ஒரு ரெசிபி தான் சொதி. இது மிகவும் வித்தியாசமான சுவையுடன் தேங்காய் பால் மற்றும் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யப்படும். சொல்லப்போனால் இது ஒரு ஆரோக்கியமான சமையல் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் காய்கறிகளை அதிகம் சேர்த்து செய்வதால், இதில் சத்துக்கள் அதிகம் இருக்கும். சரி, இப்போது திருநெல்வேலி சொதி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கேரட் - 1 உருளைக்கிழங்கு - 1 பீன்ஸ் - 10 பச்சை பட்டாணி - 1/4 கப் கத்திரிக்காய் - 2 முருங்கைக்காய் - 1 வெங்காயம் - 2 இஞ்சி - 2 இன்ச் பூண்டு - 5 பற்கள் பச்சை மிளகாய் - 5 தேங்காய் - 1/2 மூடி (துரு…
-
- 32 replies
- 4.6k views
-
-
சிக்கன் 65 (Chicken 65) தேவையான சாமான்கள்: கோழி-400கிராம், இஞ்சி-1 துண்டு, மிளகாய்த்தூள்-2தேக்கரண்டி, வினிகர்-1 மேசைக்கரண்டி, உள்ளி-10 பல், எண்ணை-1 கோப்பை, உப்பு-தேவையான அளவு செய்யும் முறை: 1. கோழியைத் தோலை உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி கழுவிக்கொள்ளவும். 2. இஞ்சி, உள்ளி அரைத்து உப்பு சேர்த்து வினிகருடன் கலக்கி, மிளகாய்த்தூளைச் சேர்த்து கோழித்துண்டுகளில் தடவி முன்று மணி நேரம் உற வைக்கவும். 3. பிறகு கோழித் துண்டுகளை அரை அவியலாக வேகவைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும். 4. பாத்திரத்தில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கோழித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இப்போது சிக்கன் 65 ரெடியாக உள்ளது. (இப்போது தான் பறவைக் காய்ச்சல் ந…
-
- 31 replies
- 9.8k views
-
-
. மல்லிகைப் பூப் போல இட்டலி செய்யும் முறை. தேவையான பொருட்கள். இரண்டு சுண்டு உழுந்து, ஒரு சுண்டு வெள்ளை அரிசி (சம்பா அரிசி என்றால் நல்லது), சுவைக்கேற்ப சிறிதளவு உப்பு, மா புளிக்க சிறிதளவு அப்பச்சோடா அல்லது ஈஸ்ட், இட்டலி அவிக்க.... இட்டலி சட்டி முக்கியம். இனி.... எப்படி ஆயத்தப் படுத்துவது என்று பார்ப்போம். உழுந்தை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எட்டு மணித்தியாலம் ஊற விடவும். அதே போல் வேறொரு பாத்திரத்தில் அரிசியையும் ஊற விடவும். ஊறிய உழுந்தையும், அரிசியையும் பசை போல் கிறைண்டரில் அரைக்கவும். அரைத்த உழுந்தையும், அரிசியையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு.... உப்பு, புளிப்பதற்கு தேவையான அளவு ஈஸ்டையும் சேர்த்…
-
- 31 replies
- 24.4k views
-
-
சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல் தேவையான பொருட்கள் ஒன்று/ இரண்டு பேருக்கு 4 - மேசைக்கரண்டி தயிர் 1 - பெரிய கத்தரிக்காய் * சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும். * வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன். நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய வெள்ளை/ ஊதா கத்தரிக்காயும் பாவிக்கலாம். நான் சிறிய கத்தரிக்காயை தான் பாவித்து செய்தேன். 5-6 - சிறிய வெங்காயம் 2 - பச்சை மிளகாய் 1/2- தே. கரண்டி மிளகு சுவைக்கு- உப்பு அலுமினியத் தாள் செய்முறை 1. போறணை/ Oven ஐ 230 பாகை செல்சியல்ல…
-
- 31 replies
- 8.6k views
-
-
வெந்தய கீரை: நீங்களை வீட்டில் முளைக்க வைக்கலாம் சின்ன பொட் இல், ஒர் மாதத்தில் அறுவடைக்கு ரெடி, வெந்தயத்தை ஊற போட்டு விதைத்தால் விரைவில் வளரும். வெந்தய கீரையில் பல கறிகள் செய்யலாம் & நல்ல சத்தான உணவு இது வெந்தயம் மாதிரி கயர்ப்பா இருக்காது, நல்ல ருசி, சிறுவர்கள் & கர்ப்பினி பெண்களுக்கு நல்லது தேவையான பொருட்கள் : கீரை- ஒரு கட்டு மைதா மாவு - ஒரு கோப்பை கோதுமைமாவு- முக்கால் கோப்பை கடலைமாவு- கால் கோப்பை மிளகாய்த்தூள்- அரைத்தேக்கரண்டி சீரகம்- அரைத்தேக்கரண்டி மஞ்சத்துள்- கால்த்தேக்கரண்டி உப்பு- காலத் தேக்கரண்டி எண்ணெய்- கால்க்கோப்பை செய்முறை : கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து வைக்கவும். மாவு வகைகளை ஒன்றாக கலந்து அதில் மிளகா…
-
- 31 replies
- 7.1k views
- 1 follower
-
-
சுவையருவியின் முதல் வணக்கம் யாழில் இன்னுமொரு புதிய அங்கம் இன்றுடன் ஆரம்பமாகின்றது. ஈழத்தமிழர்களின் சமையல் பாரம்பரியம் என்பது ஒரு விசேடமான, அதே சமயத்தில் நம் கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓர் விடயம். எமது பாட்டன் பூட்டன் காலத்து உணவுவகைகளை புலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு எடுத்து செல்லும் பணிக்காகவே "சுவையருவி" உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் ஆலோசனைகளையும், யோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இது ஓர் கன்னி முயற்சி. குறை நிறைகளை சுட்டிக்காட்டி சுவையருவியின் முன்னேற்றத்தில் பங்கெடுங்கள். தற்சமயம் சில செய்முறைகளையே கொண்டிருக்கும் சுவையருவியில் உங்கள் செய்முறைகளையும் இணையுங்கள். தளத்தை உருவாக்கியது யார் என சொல்லி தெரிய வேண்டியதில்லை தானே…
-
- 31 replies
- 6k views
-
-
தேவையான பொருட்கள்: வெற்றிலை பாக்குத்தூள் கற்கண்டு தூள் பீடா கலவை அல்லது சர்பத் கலவை கராம்பு செய்முறை: பீடா கலவையை (கடையில் வாங்கலாம்) முதலில் அடுப்பில் வைத்து சிறிதளவு கொதிக்க வைக்க வேண்டும். (அம்மாவிடம் எவ்வளவு நேரம் என்று கேட்டபோது சட்டி கொதிக்க மூன்று நிமிசம் பிடிக்கும் என்றபடியால் ஒரு ஐந்து நிமிடம் என்று எழுதச்சொன்னா) பின் இந்த கலவையுடன் பாக்குத்தூள், கற்கண்டு தூள் ஐ கலந்து குழைக்க வேண்டும். இந்த கலவையை வெற்றிலையினுள் வைத்து படத்தில் காட்டியுள்ளபடி மடித்து, கராம்பு குச்சியினால் மடிப்பு கழறாதபடி குற்றிவிட வேண்டும். பீடா கலவை கிடாக்காவிட்டால் சர்பத் கலவையையும், பக்கற்றில் வரும் தேங்காய்ப்பூ தூளையும் பயன்படுத்த முடியும். மேலே உள்ள பீடா எனது வ…
-
- 31 replies
- 13.6k views
-
-
. ஆட்டுக்கால் சூப். தேவையான பொருட்கள்; ஆட்டின் பின் கால்கள் இரண்டு. மூன்று பெரிய வெங்காயம். 6 செத்தல் மிளகாய். பதினைந்து உள்ளி. 50 கிராம் மல்லி. இஞ்சி . மிளகு. பெருஞ்சீரகம். தக்காளிப் பழம் ஒன்று. எலும்பிச்சம் பழம் ஒன்று. சிறிது மஞ்சள் தூள். உப்பு. செய் முறை; ஆட்டின் கால்களில் உள்ள இறைச்சியை நீக்கி விட்டு, அதன் கால்களை சிறு துண்டுகளாக பெரிய கத்தியால் வெட்டவும். அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு ஒன்றரை லீற்றர் தண்ணீரும் , உப்பும் போட்டு நன்கு அவிய விடவும். வெங்காயத்தை நீளமாக சிறு துண்டுகளாக வெட்டவும். செத்தல் மிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும். மல்லி, பெருஞ்சீரகம், மிளகு போன்றவற்றை கிறைண்டரி…
-
- 31 replies
- 8.8k views
-
-
நமக்கு மிகவும் பிடிச்ச ஐட்டம். இருந்திட்டு சாப்பிடலாம். நல்லாயிருக்கும். தேவையானப் பொருட்கள்: அரிசி - 2 கப் கறிவேப்பிலை - 1 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 மிளகு - 1 டீஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிறு துண்டு நெய் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 10 உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை: அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் (pan) எண்ணை விட்டு, பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகாய் அகியவற்றை சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகு சேர்த்து, சிறிது வறுத்து, அதில் கறிவே…
-
- 30 replies
- 4.1k views
-
-
சுவையான பச்சைமிளகாய் சட்னி செய்வது எப்படி....... சமையல் குறிப்பு தேவையான பொருட்கள் 4 - 7 பச்சை மிளகாய் சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி இஞ்சி துண்டு சிறிதளவு புதினா இலை 3- 5 தேங்காய் பாதி உப்பு சிறிதளவு பாதி எலும்பிச்சம் பழம் இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி குறிப்பு: உங்கள் மிக்சி தேங்காயை சொட்டாக வெட்டி போட்டால் அடிக்கும் அளவிற்கு பவரானதாக இருந்தால் தேங்காயை சொட்டாக வெட்டி போடலாம் அல்லது தேங்காயை திருவி போடவும். செய்முறை: மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் மிக்சியில் போடவும். தேங்காயை மாத்திரம் சிறு துண்டாகவோ அல்லது திருவியோ போடவும். எலும்பிச்சம் பாதியையும் பிழிந்து மிக்சிக்குள் புளியையும் விடவும் அத்து…
-
- 30 replies
- 14.5k views
-
-
வெங்காய பகோடா நேற்று நான் வீட்டில் செய்தது.. அனைவரும் பார்த்து நீங்கள் பிறந்ததின் பயனை பெற்று கொள்ளுங்கள். நீங்களும் செய்து சாப்பிட விருப்பமா? செய்முறை வேணுமா?? வேணும் என்றால் தான் எழுதுவன்..இல்லாட்டி :twisted: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_22.html#more
-
- 30 replies
- 7.2k views
-
-
விடுமுறை நாட்களில் காலை வேளையில் கடற்கரைக்கு சென்று விரும்பிய மீன்களை வாங்கி வந்து உண்பது வழ்மை நான் வேற அசைவ ஆசாமி ஆகையால் இன்று இந்த மீன் கண்ணில் பட்டது மொத்தமாக வாங்க இயலாது இருந்தாலும் கிலோவில் வாங்கி சமைத்தாலும் நமது முறையில் இதை விட இந்த மீனை வேறு எப்படி சமைக்கலாம் ஒருக்கா சொல்லுங்கோவன் சமையல் கலை தெரிந்தவர்கள் மட்டும்
-
- 30 replies
- 11.1k views
- 1 follower
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா தேவையானவை: கடலை மாவு - 1 கப் ஆப்ப சோடா - 1 சிட்டிகை ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) - 1 சிட்டிகை உப்பு - ருசிக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு - கால் கிலோ பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி - 1 துண்டு கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: * உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். * வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். * எண்ணெயைக் காயவைத்து …
-
- 30 replies
- 6.2k views
-
-
கரட் சட்ணி இந்த சட்ணிசெய்முறை எனது திருமதி செய்யும்பொழுது உதவி செய்கின்றேன்பேர்வழி என்று சுட்டது தேவையான சாமான்கள் : கரட் கால் கிலோ . செத்தல் மிளகாய் 6 . பழப் புளி (தேவையான அளவு ). கறிவேப்பமிலை 1 நெட்டு . வெள்ளை உளுத்தம் பருப்பு 3 கரண்டி . கொத்த மல்லி 2 கரண்டி . தண்ணி , உப்பு ( தேவையான அளவு ) . கடுகு , உளுந்து அரைக் கரண்டி . எண்ணை கால் ரம்ளர் . ** கரண்டி = தேக்கரண்டி . செய்மறை: ஒரு தாச்சியில் 2 கறண்டி எண்ணை விட்டு உளுத்தம் பருப்பைச் சிவக்க வாசம் வரும்வரை வறுத்து , கொத்தமல்லி கறிவேப்பமிலை , செத்தல் மிளகாய் எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வரை வதக்கி ஒரு தட்டில் போடுங்கள் . கரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டித் தாச்சியில் 3 கரண்டி எண்ணை …
-
- 30 replies
- 4.2k views
-
-
. யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள். கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்: ஒடியல் மா - 100 கிராம் கழுவின இறால் - 100 கிராம் கழுவின பாதி நண்டு - 8 மீன்தலை - 1 புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி பயிற்றங்காய் - 10 புளி - ஒரு சின்ன உருண்டை பாலாக்கொட்டை - 100 கிராம் சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவ…
-
- 29 replies
- 13k views
-
-
இலங்கைக் கொத்தின் மவுசு தெரியுமா….? June 19, 20151:29 pm இலங்கையர்களின் தனித்துவமான உணவுகளில் ஒன்று கொத்து ரொட்டி. இலங்கையர்களில் அநேகருக்கு மிகவும் விருப்பமான உணவும்கூட. இதை வாங்குகின்றமைக்கு ஹோட்டல்களுக்கு அலைய வேண்டிய தேவை கிடையாது. மாறாக மாலை நேரங்களில் எந்தவொரு சாதாரண சாப்பாட்டுக் கடைகளிலும் சாதாரணமாக வாங்க முடியும். ரொட்டி, மரக் கறிகள், முட்டை, சீஸ், வாசனைத் திரவியங்கள், இறைச்சி போன்றன கலந்து செய்யப்படுகின்ற ஒரு வகை கலவையாக கொத்து ரொட்டி உள்ளது. சோறு கலக்காமல் செய்யப்படுகின்ற இலங்கை உணவுகள் சிலவற்றில் கொத்து ரொட்டிக்கு தனி இடம் உண்டு. ஆயினும் தற்போது மரக்கறி கொத்து, இடியப்ப கொத்து, பிட்டு கொத்து, முட்டைக் கொத்து, இறால் கொத்து, கணவாய் கொத்து, மீன் கொத்து என்…
-
- 29 replies
- 4.2k views
-