Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியவர்களே உங்கள் ஆலோசனை தேவை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் என்னை ரொம்ப சிந்திக்க வைச்ச ஒரு விடயம் முஸ்லீம்களை எங்கை அடித்தால் அவர்களை உலகின் முன் தவறானவர்களாக,காட்டுமிராண்டிகளாக,கொலைகாறர்களாக காட்டலாம் என்பதை புரிந்துவைத்துக்கொண்டு அவர்களின் மதவெறி எனும் முட்டாள்தனத்தை குறிவைத்து அடித்து ஒட்டு மொத்த உலகின் வெறுப்பை சம்பாதிப்பவர்களாக அவர்களை அமெரிக்கா தனது தந்திரத்தால் ஆக்கியது....ஏன் நம்ம சீமானோ,இல்லை வைகோவோ,இல்லை எங்கடை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோ,இல்லை நாமோ இணைந்து பெளத்தத்தை உரசும்வகையில் ஒரு குறும்/நெடும் படம் தயாரித்து வெளியிடக்கூடாது..? வெளியிட்டால் கொழும்பு பற்றி எரியும்..சிங்களவனின் உண்மை முகம் உலகம் அறியும்...முக்கியமாக வெளியிடும் படத்தை இந்தியாவில் பெளத்தவர்கள் அநேகம் இருக்கும் மாநிலங்களை குறிவைத்து வெளியிடவேண்டும்...அப்பதான் தீ பக்கெண்டு இலங்கையையும் பற்றும்....அத்துடன் எமக்கு எதிராக சிங்களப் பத்திரிகைகளில் விசம் கக்கும் ஊடகவியலாளர்களையும் தொடர்புகொண்டு போட்டுக்கொடுக்கவேண்டும் இந்தப்படத்தைப் பற்றி பயங்கரமாக...முடிந்தால் கொஞ்சம் இலங்கைக் காசையும் தள்ளி அவர்களை சிங்களமக்களை தூண்டும் வகையில் எழுதவைக்கலாம்...யாரும் முன்வராட்டி இதை நாங்கள் சிலர் செய்வமோ எண்டு யோசிக்கிறம்..எல்லாரிடமும் நாம் கெட்டவர்கள் ஆனாலும் பறவாயில்லை இதன்மூலம் இந்தமுக்கியமான நேரத்தில் சிங்களவனின் இன்னொருமுகம் உலகம் அறிந்தால் சந்தோசமாக இருக்கும்..என்ன வரிசைகட்டி வாங்கோ எம்மை வைய்பவர்கள் :D ...செய்வதா,வேணாமா..? பெரியவர்களே உங்கள் ஆலோசனை தேவை...நாங்கள் வயசில் சிறியவர்கள்...உணர்ச்சிகரமான விடயங்களில் தவறாக முடிவெடுத்துவிடக்கூடாதென்பதால் உங்களிடம் கேட்கிறோம்...

  • Replies 116
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப கரெக்ட் மச்சி நானும் இதில என்ன இணைசிக்கிரன்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108793&st=0&p=804037&#entry804037

எனக்கு இதில் உடன்பாடில்லை சுபேஸ். அவர்களை கெட்டவர்களாகக் காட்டுவதற்கு நாமும் அவர்கள் அளவிற்குக் கீழிறங்கிப் போகக்கூடாது. அமெரிக்கா ஒரு வல்லரசு. அதனால் அவர்களால் சுலபமாகச் செய்ய முடிந்தது. நாம் இப்படிச் செய்வது எமது மக்களைத்தான் பாதிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கம் பிறந்தா தான் வழி பிறக்கும் மச்சி நீ இறங்குடா நான் இருக்கன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இறங்கினா

பக்க பலமா நிற்கிறன் தம்பிமார்

ஆனால் சீனாவை எதிர்க்கிற அளவுக்கு பலம் இருக்கா எம்மிடம்???

[size=4]மேற்குலகில் வாழும் தனி மனிதர்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு. அதில் அங்கு வாழும் தமிழர்களும் அடங்குவார்கள்.[/size]

[size=4]இருந்தாலும் இப்படியான ஒன்றை செய்யும்பொழுது அதனால் அங்குள்ள தமிழர்கள் மேலும் பாதிக்கப்படலாம். ஆனால், அப்படி சிங்கள அரசு செய்தால் அந்த படத்தை செய்தவர்களின் நோக்கம் நிறைவேறிவிடும். [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் எதிர்ப்பு இந்தியாவின் ஆதரவிற்கும்,இந்தியாவில் இந்தபடம் வெளியிடுவதை தடுப்பதில் இருந்து தப்பிக்கவைக்கவும் கூடலாம்...இந்தப்படத்தை மேற்குலகில் வெளியிடுவதை எந்த அரசும் தடை செய்யாது...இங்கு கருத்து சுதந்திரம் பூரணமாக கொடுக்கப்பட்டிருக்கு..ஆனால் இந்தியா சிலவேளை முட்டுக்கட்டைகள் போடலாம்...அதையும் தாண்டி வெளியிட்டால் வெற்றியே...முக்கியமாக் சீமான்,வைகோ போன்ற தமிழக அரசியல் வாதிகளின் ஆசியுடன் அல்லது அவர்களால் வெளியிடப்படுவது மிகுந்த கனதியை,பெறுமதியை,சிங்களவர்களின் கோபத்தை அதிகரிக்க வைக்கும்...

படத்தைவிட அதன்மூலம் சிங்கள ஊடகங்களில் வெளியிடப்படும் இனவாதக் கருத்துக்கள்தான் முக்கியம்...அதற்கு பல சிங்கள இனவாத ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்களின் துணை அவசியம்..தொடர்பெடுத்து அவர்களுக்கு பணம்தள்ளவேண்டும்..அது இலகு...

1. சிங்களவர்கள் முட்டாள்கள் இல்லை. தமிழர்களை விட, முஸ்லிம்களை விட பல மடங்கு அறிவுள்ளவர்கள்

2.. இலங்கையில் மட்டுமல்ல, சீனா, யப்பான், வியட்நாம், திபெத் என்று உலகம் பூராவும் பெளத்தம் பல உட் பிரிவுகளைக் கொண்டு இருக்கின்றது. ஒரு வேளை நீங்கள் சொல்வது போன்று சிங்களவர்கள் படத்தை எதிர்க்க முற்பட்டால், அதன் மூலம் உலகம் முழுதும் உள்ள பெளத்த நாடுகளின் ஆதரவைப் பெற்று இன்னும் எமக்கு எதிரான வலுவான அலையை உருவாக்கும். எமக்கு எதிரிகளை கூட்டிக் கொண்டு போகத்தான் செய்யும்

3. பல சிங்கள சினிமாக்கள், நாவலாசிரியர்கள் பெளத்தத்தை கடுமையாகவும். மோசமாகவும் சித்தரித்து படைப்புகளை வெளியிட்டு இருக்கின்றார்கள். இஸ்லாம் போன்று தமது மதத்தை விமர்சிர்ப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் வழக்கமோ அவர்களை எதிரிகளாக்கி அணி திரளும் பண்போ இல்லை.

4... முக்கியமாக, அப்படி படம் எடுத்து, அதை பார்த்து சிங்களவர்கள் வெகுண்டெழுந்து தமிழர்களை அடித்து, எரித்து, கொலைகள் செய்ய முனையும் போது மாட்டுப்படுபவர்கள் சகல வசதிகளும் கொண்டு பாதுகாப்பாக வாழும் புலம்பெயர் தமிழர்கள் அல்ல; எல்லாவற்றையும் இழந்து அநாதைகளாக இருக்கும் இலங்கையில் உள்ள தமிழர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது பூமராங்காகத்தான் வரும்!

அத்துடன் இலங்கையில் இனக்கலவரம் வருவதை மகிந்த அரசுகூட அனுமதியாது.

83 இற்கு பின் ஒரு இனக்கலவரம் வரக்கூடாது என்பதில் சிங்கள அரசுகள் மிக கவனமாக இருக்கின்றன .புலிகள் சிந்தித்த மாதிரிதான் எம்மவர் பலர் சிந்திக்கின்றார்கள் .அதனால் தான் சிங்களவன் தொடர்ந்தும் வெல்கின்றான் உலகில் எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சிறுபான்மை இனம் நாங்கள் என்பதை மறந்துபோய்விடுகின்றிர்கள்.

நாட்டில் இருக்கும் அரசியல் தலைமைகளும் புலம் பெயர்ந்த தமிழர்களும் சுய நலமில்லாத ஒரு நேர்கோட்டில் பயணித்தாலே நாங்கள் ஒரு தீர்வை எடுத்துவிடலாம் அதற்கு தயாரில்லாமல் குறுக்கு வழியில் சிந்திப்பது எதையும் தராது .

வைகோ சீமான் எல்லாம் எங்களுக்காக கதைத்தாலும் அவர்கள் வெறும் செல்லா காசுகள் .செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருக்கும் எமது உறவுளை இவர்களில் ஒருவர் முதலில் வெளியில் எடுத்துவிடட்டும் பின்னர் இவர்களை நம்புவோம் .எங்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பது உண்மை அதற்காக தமது அரசியலை அவர்கள் தொலைக்க தயாரில்லை .

527787_386246251448197_123489687_n.jpg

6Like · · Share

Edited by arjun

[size=4]படத்தின் கருத்து என்பதில் அதன் வெற்றியும் தோல்வியும் தங்கி உள்ளது.[/size]

[size=4]சிங்கள அரசானது ஒரு பௌத்த இனவாத அரசாக காட்டப்படல் வேண்டும். அதில் இலங்கையில் உள்ள எல்லா மதத்தினரும் அந்த கருத்தை ஆதாரத்துடன் முன்வைக்கவேண்டும்.[/size]

[size=4]உதாரணத்திற்கு கருத்து கூற வேண்டியவர்கள்:[/size]

[size=4]- புத்த குருமார்கள்[/size]

[size=4]- பாதிரி மார்கள், இஸ்லாமிய உலமாக்கள், இந்து குருக்கள் [/size]

[size=4]- மனித உரிமை ஆர்வலர்கள் [/size]

[size=4]- வெளிநாட்டு உள்நாட்டு இராஜதந்திரிகள் [/size]

[size=4]சொல்லப்பட வேண்டிய விடயங்கள் [/size]

[size=4]- தம்புள்ளை பள்ளிவாசல் போன்ற புனித ஆலய எரிப்புகள்/இடிப்புகள் [/size]

[size=4]- முளைக்கும் புத்த ஆலயங்கள் [/size]

[size=4]- முன்னைய மத கலவரங்கள் (1915)[/size]

[size=4]- புத்த பிக்குகள் செய்த கொலைகள் (பண்டாரநாயக்கா பிரதமரை சுட்டது...)[/size]

[size=4]- புத்த பிக்குகளும் அவர்களின் அரசியல் செல்வாக்கும் (எந்த வைபவமும் பிரித் ஓதப்பட்டு தொடங்குவது,...)[/size]

[size=4]- ஜாதிக ஹெல உறுமய என்ற மதம் சார்ந்த இனவாத கட்சி, அதன் செல்வாக்கு, அதன் கொள்கைகள்[/size]

[size=4]- புத்த மதத்தால் நடக்கும் பாலியல் கொடுமைகள்[/size]

....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப்படிச்சதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. :o

இப்படியான எண்ணமுள்ளவர்களின் கைகளில் தமிழரின் எதிர்காலம் போனால் எப்படி இருக்கும்?(மச்சி உன்னை சொல்லலை டா)

ஏற்கனவே பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்ட நாம் இப்படி ஒரு செயலைச்செய்தால் அது மீண்டும்,மீண்டும் எமக்குத்தான் பாதகமே தவிர அவர்களுக்கு அல்ல, முஸ்லிம்களைப்போல சித்தரிக்க வேண்டும் என்றால் யாரைச்சித்தரிக்க? பௌத்த மதத்தையா? பௌத்தமதம் எங்கே பயங்கரவாதத்தை நிலைநாட்டுகிறது? இல்லை சிங்களவரையா?

இலங்கை தவிர வேறு நாடு சிங்களவர்களுக்கு இருக்குதா? உள்நாட்டு போரை தவிர சிங்களவன் இல்லை இலங்கையன் வேறு யாருடனும் சண்டைக்கு போனானா? பயங்கரவாதம் செய்தானா? பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி உலகின் ஆதரவோடு தானே அழித்தான்? அப்ப ஒட்டு மொத்த உலகமும் தானே நம் அழிவுக்கு காரணம்?

இலங்கையரசின் போர்க்குற்ற,இன அழிப்புக்கு தேவையான ஆதரங்களைத் திரட்டி அதை படமாக எடுத்து எமக்கான நீதியைப்பெறுவது சாத்தியம்,செய்ய வேண்டிய ஒன்று. அதை விட்டு முட்டாள்தனமான முடிவுகள் மீண்டும் எமது இருப்பைத்தான் கேள்விக்குறியாக்கும். புலம்பெயர் புலிப்பயங்கரவாதிகளின் செயல் என்று அரசினால் பிரச்சாரப்படுத்தி போர்க்குற்றம் கூட சரி என்று நியாயப்படுத்துவதாய் முடியும் அத்தோடு ஒட்டு மொத்த உலகமும் நம்மைப்பயங்கரவாதிகள் என்பதை நிரூபிக்கும் முயற்சியாகவே முடியும்.

"சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.."

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன்

சுபேசின் கருத்தை நாம் வேறுவிதமாக எடுத்து விட்டோம் என்னு.

அவர் முதல் அடியைத்தான் வைத்திருந்தார். அதிலும் பெரியோர்களே ஆலோசனை தாருங்கள் எனவும் வேண்டியிருந்தார்.

எனவே அவரது முயற்சியை சரிவர புரிந்து கொண்டு நமக்கு ஏற்றதுபோல் அதே நேரம் சிங்களத்தையும் பௌத்தத்தையும் தோலுரிவது போல் வெளிக்கொண்டுவரும் ஒரு சினிமா காலத்தின் கட்டாயம். அதை இங்கு பரீசீலனை செய்யலாமே.....................?

83 இனக்கலவரத்தை HOTEL RUWANDA மாதிரி ஒரு சினிமா ஆக்கவேண்டும் என்று பலரிடம் நான் சொன்னதுண்டு .ஒருநாள் இரவு பத்து பதினைந்து பேருடன் இதனாலேயே கழிந்தது.

ஒருநாள் யாராவது படமாக்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

83 இனக்கலவரத்தை HOTEL RUWANDA மாதிரி ஒரு சினிமா ஆக்கவேண்டும் என்று பலரிடம் நான் சொன்னதுண்டு .ஒருநாள் இரவு பத்து பதினைந்து பேருடன் இதனாலேயே கழிந்தது.

ஒருநாள் யாராவது படமாக்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கு .

அருமையான ஒரு கருத்து..நிச்சயம் செய்யவேண்டும்....இப்படியான உலக மட்டங்களுக்கு எடுத்துச்செல்லும் முயற்சிகள் எமக்கிடையே மிகக் குறைவு...அதிகமாக நமக்குள்ளே தமிழில் வெளிவரும் பத்திரிகைகளில் எழுதித்தீர்ப்பதிலேயே எங்கள்வேகம் முடிந்துவிடுவது துரதிஸ்டமானது...

[size=4]படத்தின் கருத்து என்பதில் அதன் வெற்றியும் தோல்வியும் தங்கி உள்ளது.[/size]

[size=4]சிங்கள அரசானது ஒரு பௌத்த இனவாத அரசாக காட்டப்படல் வேண்டும். அதில் இலங்கையில் உள்ள எல்லா மதத்தினரும் அந்த கருத்தை ஆதாரத்துடன் முன்வைக்கவேண்டும்.[/size]

[size=4]உதாரணத்திற்கு கருத்து கூற வேண்டியவர்கள்:[/size]

[size=4]- புத்த குருமார்கள்[/size]

[size=4]- பாதிரி மார்கள், இஸ்லாமிய உலமாக்கள், இந்து குருக்கள் [/size]

[size=4]- மனித உரிமை ஆர்வலர்கள் [/size]

[size=4]- வெளிநாட்டு உள்நாட்டு இராஜதந்திரிகள் [/size]

[size=4]சொல்லப்பட வேண்டிய விடயங்கள் [/size]

[size=4]- தம்புள்ளை பள்ளிவாசல் போன்ற புனித ஆலய எரிப்புகள்/இடிப்புகள் [/size]

[size=4]- முளைக்கும் புத்த ஆலயங்கள் [/size]

[size=4]- முன்னைய மத கலவரங்கள் (1915)[/size]

[size=4]- புத்த பிக்குகள் செய்த கொலைகள் (பண்டாரநாயக்கா பிரதமரை சுட்டது...)[/size]

[size=4]- புத்த பிக்குகளும் அவர்களின் அரசியல் செல்வாக்கும் (எந்த வைபவமும் பிரித் ஓதப்பட்டு தொடங்குவது,...)[/size]

[size=4]- ஜாதிக ஹெல உறுமய என்ற மதம் சார்ந்த இனவாத கட்சி, அதன் செல்வாக்கு, அதன் கொள்கைகள்[/size]

[size=4]- புத்த மதத்தால் நடக்கும் பாலியல் கொடுமைகள்[/size]

....................

சிறப்பான ஆலோசனை..அத்துடன் இன்னும் சில சம்பவங்கள் இருக்கின்றன மனதில்..அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்...நிச்சயமாக ஒருவிதமான தாக்கத்தை அவை பார்ப்போர் மட்டத்தில் ஏற்படுத்தும்...படத்தின் வெளியீடு சாதாரணமக்கள் மட்டத்தில் போவதில் அதிக சிரத்தை கொள்ளத்தேவை இல்லை...வெளிநாட்டு ஊடகங்கள்,ஊடகவியலாளர்கள்,எழுத்தாளளர்கள்,பொது அமைப்புக்களை குறிவைத்தே இருப்பதாக பார்த்துக்கொள்ளவேண்டும்....

எதிர்மறையான கருத்துக்களில் பல ஆலோசனைக்கு எடுக்கவேண்டிய விடயங்களும்,கவலைப்படத்தேவை இல்லாத விடயங்களும் இருக்கின்றன..அவை பற்றி எழுதுகிறேன்..

சிறப்பாக இந்ததிரியை தங்கள் கருத்துக்களை எழுதி மெருகுபடுத்தும் எல்லா உறவுகளுக்கும் நன்றி...தொடர்ந்து கருத்தாடுங்கள்...தெளிவு படுவோம்...

Edited by சுபேஸ்

அண்மையில் என்னை ரொம்ப சிந்திக்க வைச்ச ஒரு விடயம் முஸ்லீம்களை எங்கை அடித்தால் அவர்களை உலகின் முன் தவறானவர்களாக,காட்டுமிராண்டிகளாக,கொலைகாறர்களாக காட்டலாம் என்பதை புரிந்துவைத்துக்கொண்டு அவர்களின் மதவெறி எனும் முட்டாள்தனத்தை குறிவைத்து அடித்து ஒட்டு மொத்த உலகின் வெறுப்பை சம்பாதிப்பவர்களாக அவர்களை அமெரிக்கா தனது தந்திரத்தால் ஆக்கியது....ஏன் நம்ம சீமானோ,இல்லை வைகோவோ,இல்லை எங்கடை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோ,இல்லை நாமோ இணைந்து பெளத்தத்தை உரசும்வகையில் ஒரு குறும்/நெடும் படம் தயாரித்து வெளியிடக்கூடாது..? வெளியிட்டால் கொழும்பு பற்றி எரியும்..சிங்களவனின் உண்மை முகம் உலகம் அறியும்...முக்கியமாக வெளியிடும் படத்தை இந்தியாவில் பெளத்தவர்கள் அநேகம் இருக்கும் மாநிலங்களை குறிவைத்து வெளியிடவேண்டும்...அப்பதான் தீ பக்கெண்டு இலங்கையையும் பற்றும்....அத்துடன் எமக்கு எதிராக சிங்களப் பத்திரிகைகளில் விசம் கக்கும் ஊடகவியலாளர்களையும் தொடர்புகொண்டு போட்டுக்கொடுக்கவேண்டும் இந்தப்படத்தைப் பற்றி பயங்கரமாக...முடிந்தால் கொஞ்சம் இலங்கைக் காசையும் தள்ளி அவர்களை சிங்களமக்களை தூண்டும் வகையில் எழுதவைக்கலாம்...யாரும் முன்வராட்டி இதை நாங்கள் சிலர் செய்வமோ எண்டு யோசிக்கிறம்..எல்லாரிடமும் நாம் கெட்டவர்கள் ஆனாலும் பறவாயில்லை இதன்மூலம் இந்தமுக்கியமான நேரத்தில் சிங்களவனின் இன்னொருமுகம் உலகம் அறிந்தால் சந்தோசமாக இருக்கும்..என்ன வரிசைகட்டி வாங்கோ எம்மை வைய்பவர்கள் :D ...செய்வதா,வேணாமா..? பெரியவர்களே உங்கள் ஆலோசனை தேவை...நாங்கள் வயசில் சிறியவர்கள்...உணர்ச்சிகரமான விடயங்களில் தவறாக முடிவெடுத்துவிடக்கூடாதென்பதால் உங்களிடம் கேட்கிறோம்...

பௌத்தம் மனிதர்களுக்கு வன்முறையை போதிக்கவில்லை மாறாக அன்பையும் பரிநிர்வாணநிலையையும் அது போதித்தது. பௌத்த சிந்தனைகளால் அதற்கு மதம் மாறியவர்கள் ஏராளம். சிங்களம் தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பௌத்தத்தை எடுத்ததிற்கு அது என்ன செய்யும் ?????? சினிமா ஒரு சிறந்த பரப்புரை களம் தான் , குறிவைக்கவேண்டியது பௌத்தத்தை அல்ல சிங்களத்தின் இனப்படுகொலையும் அதன் கோர வடுக்களுமே. ஏன் புலத்தில் எமது இளையவர்கள் இல்லையா இதை தயாரித்து வெளியிட ?? இதுக்கும் தமிழ்நாடு தான் வேண்டுமா ?? தமிழ்நாடு இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதி என்பதை அடிக்கடி மறக்கின்றீர்கள் . ஐரோப்பிய கலைஞர்கள் தொழில் நுட்பவியலாளர்களையே நாங்கள் பயன்படுத்தலாம். நாங்கள் செய்யவேண்டியது முதலில் சந்திரிக்காவின் கொலைகொற்றங்களை ஆவணமாக்கி வெளியிட்டு சர்வதேநீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டும். அது நிரூபணமானால் மகிந்தா சுலபம். ஏனேனில் மக்களால் தெரிவு செய்பட்டு பதவியில் உள்ள ஒரு நாட்டு அதிபரை இலகுவாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுக்க முடியாது. முதலில் சந்திரிக்காவை கொண்டுவர ஒரு படம் எடுங்கள் பௌத்தத்தையல்ல. மதத்தை நாம் எடுத்தால் மூக்குடைபடுவது நாங்களே ஒழிய சிங்களம் அல்ல....

போதுமடா தம்பி நம்ம சனங்கள் செத்தது.

முந்தி பயங்கரவாதம் எண்டு எல்லோரும் சேர்ந்து சாக்காட்டினாங்க....

இப்ப மதத் தீவிரவாதம் எண்டு எல்லோரும் சேர்ந்து (சீனா, யப்பான், தாய்வான் இந்தியா )

திரும்பவும் நம் மக்களைச் சாக்காட்டவா?

முதலில் தமிழினப் படுகொலைக்கு எல்லா நாடுகளையும் நியாயம் கேட்கச் செய்யுங்கள்.

சிங்களவன் எங்களை பற்றி படம் எடுக்காமலே பரிஸ் லாச்சபலில் இருந்து லண்டன் கள்ள கார்டும் கனடாவில் ஏ.கே இறக்கி சுடுபட்டதும் எம்மை வன்முறையாளாராக காட்டிவிட்டது.........ஏன் இன்றுவரை 1000 இருந்து 10.000 வரை வரும் கோவில்களில் கூட குறூப் சண்டையில் அந்த அந்த நாட்டு பொலிஸ் தலையிடு செய்யுற அளவில் நிக்குது கெளவரம்...................ஊரில நிக்கும் போது கொழுமில கலவரம் வராதோ எண்டு காவல் இருந்தவர்களில் நானும் ஒருவன் ஆனால் அப்போது நான் வன்னியில் இருந்தேன் :) கொழும்பில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா உணர்ச்சி வயப்படக்கூடாது :)பொளத்தத்திற்கும் சிங்களத்திற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். அதே நேரம் அல்லாவிற்கும் காத்தான் குடிக்கும் என்ன வித்தியாசம் எண்டு என்னை கேக்க கூடாது :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி யூரியூபில் காணொளி இருக்காதுங்கிறீங்க?? :D

ஆங்கிலத்தில் வரும் காணொளிகளுக்கு வீச்சு அதிகம்.. பிறமொழிக்காரர்களும் நண்பர்களாக வந்து இணைவார்கள்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதத்தையும், கொச்சைப் படுத்துதல், ஏற்புடைத்தது அல்ல, என்பது எனது கருத்து!

ஏனெனில் மதங்கள் எனப்படுபவை, என்ன குப்பைகளாக இருந்தாலும், மனித உணர்வுகளோடு பின்னிப் பிணைந்தவை!

பதிலாக, எமது மதமான, கண்ணாடி வீட்டுக்குள் இருந்து, கல்லெறிவது புத்திசாலித் தனமாகத் தெரியவில்லை!

அத்துடன் புத்த மதம், இந்து மதத்தின் பரிணாம வடிவம், மட்டுமே!

அதைப் பின்பற்றுபவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், அவரது போதனைகளைக் கொச்சைப் படுத்தினால், அதற்குப் புத்தமதம், பொறுப்பாளியாக முடியாது என்பது, எனது கருத்து!!!

[size=4]எமது நாட்டில் பௌத்த இனவாதம் உள்ளதா? [/size]

[size=1]

[size=4]அது இன்றும் தமிழன அழிப்பில் ஒரு கருவியாக சிங்கள ஆட்சியாளர்களால் பாவிக்கப்படுகின்றதா? [/size][/size][size=1]

[size=4]அது முஸ்லீம் மக்களையும் அழிக்க ஒரு கருவியாக சிங்கள ஆட்சியாளர்களால் பாவிக்கப்படுகின்றதா? [/size][/size][size=1]

[size=4]சிங்கள மக்களின் ஒரு பகுதியினரையும் அது அடிமையாக வைத்திருக்கும் ஒரு கருவியா? [/size][/size]

[size=1]

[size=4]இந்த அடக்குமுறைகளை ஒரு தமிழன் எடுத்தால் அங்குள்ள மக்களை அது பாதிக்கும் என்றால் அதை ஒரு தமிழரல்லாதவரை வைத்து எடுப்பது சாத்தியமா? [/size][/size]

அமெரிக்கா தடை செய்த அமைப்புக்களில் தொண்ணூறு வீதமானவை மதத்தை வைத்து தமக்கு எதிராக அரசியல் செய்யும் அமைப்புக்களை.

[size=1][size=4]சிங்களமும் புத்த மதத்தை வைத்து செய்யும் அரசியலில் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோனோர் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாம் மத சிறுபான்மையினர். [/size][/size]

[size=4]எனவே இந்த உண்மைகளில் அமெரிக்கர்களோ இல்லை இந்தியர்களோ எமக்காக கூறமாட்டார்கள். நாம் தான் கூறவேண்டும். [/size]

[size=1][size=4]அப்படி கூறும்பொழுது அதனால் அங்கு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் கூறாமல் இருப்பது அந்த மத அடக்குமுறைகளுக்கு நாம் தரும் ஆதரவாகவே அமையும். [/size][/size]

Edited by akootha

இதில் கவனிக்கவேண்டியது என்னவெனில், முஸ்லிம்கள் அவர்களின் மதவெறி உட்டபட்ட இன்னோரன்ன குணாம்சங்களின் பிரகாரம் கொலை, ரகழை என்று கிழம்புவதால்த் தான் உலகே அவர்களை வெறுக்கிறது என்று கூறிவிடமுடியாது. அதே போல முஸ்லிம்கள் நடந்துகொள்வதைப் போல எவர் நடந்து கொண்டாலும் உலகின் எதிர்வினை ஒரேவாறு தான் இருக்கும் என்றும் கூறமுடியாது.

பலவான்கள் குறித்த தருணத்தில் என்ன நிகழ்ச்சிநிரலைத் தத்தெடுத்துள்ளார்கள் என்பதைச் சார்ந்தே என்ன எதிர்வினை எழும் என்பது முற்றுமுழுதாக தீர்மானிக்கப்படும். முஸ்லிம்களை விட முட்டாள்த்தனமாக நடந்துகொளும் இன்னுமாரு கூட்டத்தைப்பொறுத்தவரை, அக்கூட்டம் நிகழ்ச்சிநிரலின் முன் எவ்வாறு தெரிகிறது என்பதைக் கொண்டே எதிர்வினை அனுமதிக்கப்படும்.

எதிர்வினை அனுமதிக்கப்படும் என்றதும், அது என்ன அனுமதிக்கிறது, நாங்கள் சுதந்திரமான மக்கள் எங்கட எதிர்வினையினை நாங்கள் எல்லோ தீர்மானிப்பம் என்று தான் சொல்லத்தோன்றும். ஆனால் உலகில் எவ்வாறு எவரிற்கும் சொந்தமில்லாத ஒரு மனிதன் எப்படியும் வாழக்கூடிய நிலம் என்று ஒரு இஞ்சி நிலம் கூட இல்லையோ, அதைப்போல சுதந்திரமான எதிர்வினை என்பது மலடாக மட்டுமே இருக்கமுடியும். என்ன கருத்துள்ள பாட்டுக்கள் ரொப்-40 வரிசைகளில் வருகின்றன என்பது முதல் அனைத்து விடயங்களிலும் மக்களை சாவிகொடுத்த பொம்மைகளாக வைத்திருத்தல் என்பது இன்று நேற்றுத் தொடங்கியதல்ல.

ஒருபேச்சிற்கு சிங்களவரை நாம் வெற்றிகரமாகச் சீண்டி அவர்கள் முஸ்லிம்களைக் காட்டிலும் இருநாறு மடங்கு உக்கிரத்தோடும் முட்டாள்த்தனத்தோடும் எங்களவரைக் கொன்று வீசுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உடனே எங்கெல்லாம் ஊடகம் இருக்கிறதோ அங்கெல்லாம் சிங்களக் காட்டேறிகளைப் பற்றி மட்டுமே 24 மணிநேரமும் பேசிக்கொண்டிருப்பார்கள் என்றோ, அதை வைத்து தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை நடத்துவார்கள் என்பதோ இல்லை. இ;ன்னமும் சொல்வதானால் 83ல் நடந்தது மட்டுமல்ல, முள்ளிவாய்க்காலில் நடந்தது மட்டுமல்ல இன்றைய நிலைவரை உலகிற்குத் தெரியாது என்று நாம் நினைக்கத்தேவையில்லை. ஈழ அரசியலைக் கரைத்துக்குடித்தவர்களாக எங்களை நாங்களே நினைப்பவர்கள் கூட முழித்தபடி வெளிவருவரச் செய்யும் அளவிற்கு அவர்களிடம் தரவுகள் தாராளம். இலட்சக்கணக்கில் மேற்கில் ஒரு குரலில் கூடக்கூடிய மக்களாக நாம் இருக்கையில், எங்கள் நதிமூலம் ரிசிமூலம் தெரியாது பலசாலி நாடுகள் இருக்கமுடியாது. ஐக்கிய நாடுகள் சபையினைத் தோற்றுவித்ததன் பின்னர் நேட்டோவையும் தோற்றுவித்தார்கள் என்ற றியால்பொலிற்றிக்கினை நாம் மறந்துவிடக்கூடாது.

சிறுவயது முதல் வாய்மையே வெல்லும் என்றும் நியாயம் தர்மம் என்றும் விடயங்களை நம்பப்பண்ணியே நாங்கள் வழர்க்கப்பட்டோம். ஆனால் இவை அதிகாரம் பற்றி அலட்டாத ஒரு சாதாரண மனிதனின் வாழ்வின் சில பகுதிகளிற்கு மட்டுமே பொருந்தும். அதிகாரம் என்று வந்து விட்டால், அதன் பின்னர் 3 பரிமாணப் படம்பார்ப்பதற்குக் கண்ணாடி போடுவதைப் போல பார்வையினை மாற்றியே ஆகவேண்டும்.

பொருளாதாரா ரீதியாக ஒருவீதம் ஒருவீதம் என்று கூறுகிறார்களே, அந்த ஒரு வீதத்தின் பெறுமதிகளிற்குச் சிங்களவர் கெடுதல் என்று காட்டினே அன்றி தர்மநியாயத்தின் அடிப்படையில் சிங்களவரை வில்லர்களாகச் சித்தரிப்பது சாத்தியமில்லை.

முஸ்லிம்கள் மன்ஹாட்டனில், ஒரு வீதத்தினரின் கோட்டையில் தற்கொலைத்தாக்குதல் நடாத்தினார்கள் என்பது மட்டுல்ல முஸ்லிம்கள் வில்லர்கள் ஆனதற்கான காரணம். முஸ்லிம்கள் வில்லர்கள் ஆகியதற்கான பல காரணங்களுட் சில:

1) அவர்களின் ஏற்கனவே உள்ள அபரிமித மக்கள் தொகை என்பது மட்டுமன்றி, குறித்த ஒருபிரதேசத்தை இனப்பெருக்கத்தின் வாயிலாகவே கைப்பற்றிவிடுவார்கள் என்ற கருத்து. இஸ்ரேல் தொடர்பில் இருநாட்டுத் தீர்விற்கு ஆதரவான கருத்துக்களில் ஒன்றாக முன்வைக்கப்படுவது, முஸ்லிம்களை இஸ்ரேலிற்குள் அனுமதித்தால் இனப்பெருக்கத்தின் வாயிலாக யூதர்களை வரலாறாக்கிவிடுவார்கள் என்பது.

2) சந்தைப் பொருளாதாரத்தின் நுகர்வோர் கலாச்சாரத்தை இலகுவில் உள்நுழைக்கமுடியாத மதவெறிக் கலாச்சாரம். அத்தோடு மதத்தின் பெயரால் ஒற்றுமையாக மதத்திற்கு எதிரானவர்களை நோக்கித் திரும்பும் குணாம்சம்.

3) அடிப்படையில் மேற்கின் ஒருவீதத்திற்கு கிறீஸ்த்தவ யூதப் பெறுமதிகள் மண்டையின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும். இஸ்லாம் மேற்படி பெறுமதிகளின் எதிரி.

4) யூதரிடம் நிகழ்ச்சிநிரல்களைத் தீர்மானிக்கும் பலமும் முஸ்லிம்கள் மீதான தீராத வெறும் உள்ளது

இப்பிடிப் பல.

எனவே முஸ்லிம்களைப் போன்று சிங்களவரை ஆக்கவேண்டும் என்று சிந்திப்பதில் உள்ள பிரச்சினைகள் என்னவெனில்:

1) சிங்களவர் இலங்கையில் மட்டும் 20 மில்லியனிற்குக் குறைவானவர்களாக வாழ்கிறார்கள்.

2) பௌத்தம் எங்கு பின்பற்றப்பட்டாலும் அது புத்தரின் போதனைகட்படி உன்னதமாகவே பின்பற்றப்படும் என்ற மயக்கம் பெருவாரியாக உலகில் உள்ளது. டாலி லாமா பலவான்களின் நிகழ்ச்சிநிரலிற்குத் தேவைப்படுவதும் இன்னுமொரு காரணம். அப்பபப்போ உலகில் எங்கெங்கோ எல்லாம் பௌத்த பிக்குகள் அட்டகாசம் பண்ணுவது ஊடகங்களில் வந்துதான் உள்ளன என்றபோதும், புத்தர் பற்றிய அபிப்பிராயம் மிகப்பெரியது.

3) ஆதிகார நிலைகளில் உள்ள பல வெள்ளையர்கள் இலங்கையின் முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள்.

4) ஹிக்கடுவ முதற்கொண்டு, சிங்களவர் தங்களை ஐலன்ட் வைப் உள்ள பாட்டி மனிதர்களாக உருவாக்கி விட்டார்கள். உண்மையில் எங்களைக் காட்டிலும் நிஜத்தில் அவர்கள் நன்றாகப் பாட்டி பண்ணக் கூடியவர்களும் தான். பல வெள்ளைகள் சிங்களப் பிரதேசங்களிற்கு சுற்றுலா சென்றுவிட்டு நாக்கைத் தொங்கப்போட்டபடி மீண்டுள்ளார்கள்.

5) இலங்கையில் கிறீஸ்;த்தவ மதப் பிரச்சாரர்கள் புத்த பிக்குகளால் தாக்கப்படல் போன்ற செய்திகள் இங்குள்ள பலரிற்குத் தெரியினும், கூட்டிக்கழித்துப் பார்க்கையில் அவர்களிற்கு அது பிரச்சினையாக இல்லை.

6) திறந்த சந்தையின் நுகர்வோர் கலாச்சாரத்தை நுழைப்பதற்கு இலங்கை எப்போதும் திறந்தே கிடக்கும். சுதந்திpர வர்த்தக வலயம் என்று றேகன் காலத்திலேயே ஜே.ஆர் காட்டிச் சென்றான்.

இந்நிலையில் சிங்களவனை பௌத்தம் சார்ந்து சீண்டி அதன் வாயிலாக உலகின் ஒரு வீதத்திற்கு ஆபத்தனாவர்கள், தொடர்ந்து பௌத்ததத்தின் பெயரில் தற்கொலைத்தாக்குதல்களை நடத்தக்கூடியவர்கள், சந்தையைக் கெடுக்கக் கூடியவர்கள் என்று நிறுவவது கொஞ்சம் கஸ்ற்ரமான விடயம் என்பது எனது தாழ்மையான கருத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.