Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்த நிலைக்கு யார் காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலங்காலமாக பெண்கள் அரசியல், சமூகம், குடும்பம் என்று எந்தப் பின்னணியைத் தளமாக எடுத்துப்பார்த்தாலும் பகடைகளாகவும், பலியாடுகளாகவும், சுமைதாங்கிகளாகவும் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய நீண்ட பட்டியலுக்கு உரித்துடையவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ இரண்டாந்தர நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எங்குமே முதல்தரமான முடிவெடுக்கும் சக்திகளாக இல்லாமல் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட இயங்கு சக்திகளாகவே பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் இப்போதும் பயன்படுத்தப்படுகிறார்கள். சில ஆண்கள் கூறுவார்கள் பெண் என்பவள் ஆணினால் பாதுகாக்கப்படவேண்டியவள். இந்த வாதம் அண்மைக்காலங்களில் மிகுந்த கேலிக்குள்ளாகியிருக்கும் விடயம். கற்காலத்தில் பெண்களையும், குழந்தைகளையும் (அதாவது அவர்களுக்கேயுரிய இயற்கை உபாதைகளின் நிமித்தம் ஏற்படும் இரத்தவாடை, மற்றும் பால் வாடைகளால் பயங்கரமான வனவிலங்குகளிடமிருந்து) காப்பாற்றவேண்டிய தேவையின் நிமித்தம் உருவாகிய பெண்கள் தொடர்பான பாதுகாப்பு நிலையானது இன்று அதன் அடிப்படை நோக்கிலிருந்து வெறும் பாலியல் மற்றும் பகுத்தறிவின்மையால் சிதைந்திருக்கிறது. நேர்மையாக பெண்களின் பிரச்சினைகளை எடுத்துப் பேச சமூகம் முன்வருவதில்லை. அப்படியே வந்தாலும் முடிவில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆணாதிக்க சமூகத்தாலோ, அரசியலாலோ எந்த நன்மையும் விளைவதில்லை மாறாக அப்பெண்களுக்கு மீள முடியாத மன உடைவுகளையும் விரக்திநிலைகளையும் மட்டுமே அவர்களுக்கான தீர்வாக திணித்துவிடுகிறது. இந்த நிலைக்கு யார் காரணம்? இதனை மாற்றி அமைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • Replies 55
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து பெண்களே நீங்கள் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள திரியில் உண்மையான பெண்களின் பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் தைரியமாக எழுதுங்கள். பெண்களாகிய நாம் வாய்திறந்து பேசவேண்டும். எங்கோ கண்ணுக்குத் தெரியாமல் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் முகமறியாத சகோதரிகள் பற்றி பேசக்கூடிய நாம் பேசயேண்டும். தட்டிக்கழித்து நாம் செல்லும் ஒவ்வொரு பொழுதும் வேதனைக்குரியது. தயவுசெய்து பேசுங்கள். என் அம்மாவுக்காகவும், என் அக்காளுக்காகவும், என் தங்கைக்காவும், என் பிள்ளைகளுக்காவும் என் உறவுகளுக்காகவும் பேசவேண்டிய நிர்பந்தம் எனக்கு இருக்கிறது என்று உணருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு.. நல்ல கருத்துகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலங்காலமாக பெண்கள் அரசியல், சமூகம், குடும்பம் என்று எந்தப் பின்னணியைத் தளமாக எடுத்துப்பார்த்தாலும் பகடைகளாகவும், பலியாடுகளாகவும், சுமைதாங்கிகளாகவும் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய நீண்ட பட்டியலுக்கு உரித்துடையவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ இரண்டாந்தர நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எங்குமே முதல்தரமான முடிவெடுக்கும் சக்திகளாக இல்லாமல் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட இயங்கு சக்திகளாகவே பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் இப்போதும் பயன்படுத்தப்படுகிறார்கள். சில ஆண்கள் கூறுவார்கள் பெண் என்பவள் ஆணினால் பாதுகாக்கப்படவேண்டியவள். இந்த வாதம் அண்மைக்காலங்களில் மிகுந்த கேலிக்குள்ளாகியிருக்கும் விடயம். கற்காலத்தில் பெண்களையும், குழந்தைகளையும் (அதாவது அவர்களுக்கேயுரிய இயற்கை உபாதைகளின் நிமித்தம் ஏற்படும் இரத்தவாடை, மற்றும் பால் வாடைகளால் பயங்கரமான வனவிலங்குகளிடமிருந்து) காப்பாற்றவேண்டிய தேவையின் நிமித்தம் உருவாகிய பெண்கள் தொடர்பான பாதுகாப்பு நிலையானது இன்று அதன் அடிப்படை நோக்கிலிருந்து வெறும் பாலியல் மற்றும் பகுத்தறிவின்மையால் சிதைந்திருக்கிறது. நேர்மையாக பெண்களின் பிரச்சினைகளை எடுத்துப் பேச சமூகம் முன்வருவதில்லை. அப்படியே வந்தாலும் முடிவில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆணாதிக்க சமூகத்தாலோ, அரசியலாலோ எந்த நன்மையும் விளைவதில்லை மாறாக அப்பெண்களுக்கு மீள முடியாத மன உடைவுகளையும் விரக்திநிலைகளையும் மட்டுமே அவர்களுக்கான தீர்வாக திணித்துவிடுகிறது. இந்த நிலைக்கு யார் காரணம்? இதனை மாற்றி அமைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

தற்காலத்தில் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படும் விடயங்களை பட்டியலிட்டு கூறுங்கள்.

சகலதுக்கும் தகுந்த பதிலளிக்கப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்காலத்தில் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படும் விடயங்களை பட்டியலிட்டு கூறுங்கள்.

சகலதுக்கும் தகுந்த பதிலளிக்கப்படும்.

நான் சற்றும் எதிர்பார்க்காத ஒருவர் களத்தில் பதிலடி கொடுக்கக் குதித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது, இருப்பினும் இன்று உடனடியாக என்னுடைய பதிவுகளை மேற்கொள்ளப் போவதில்லை இரு நாட்கள் இடைவெளியின் பின்னரே இங்கு நான் தொடர்ந்து எழுதக்கூடிய நிலை இருக்கிறது ஆதலால் உங்களைப் போன்று இன்னும் இக்கருத்திற்கு எதிரானதாகவோ அல்லது இணக்கமானதாகவோ கருத்துக்களை பதியக்கூடியவர்கள் இருப்பார்கள் அவர்களின் பதிவுகளும் இங்குபதியப்படும்போதே என்னுடைய பதிவில் உள்ள குறைபாடுகள் உட்பட மேலும் சேர்க்கவேண்டிய விடயங்களும் தெளிவாகும் வாய்ப்புகள் உருவாகும்.

தோழர் திருவாளர் குமாரசாமி அவர்களே! சாதாரணமாக நீங்கள் நகைச்சுவையாக மிகவும் காத்திரமாக ஓரிரு வரிகளிலேயே உங்கள் பதிவுகளை மேற்கொண்டு பச்சைப் புள்ளிகளை இலாவகமாக பெற்றுச் செல்லும் ஒருவர். இன்று இந்த இடத்தில் உங்கள் கவனம் குவிந்திருப்பது இத்திரியை மிகவும் சுவார்ஸ்யமாக நகர்த்திச் செல்ல வழிவகுக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. அதே வேளை என்னுடைய பதிவுகள் அதிகளவான சிவப்புப் புள்ளிகளை எதிர்வரும் தினங்களில் பெற்றுக் கொள்ளப் போவதை நினைத்தால் இப்போதே உதறல் எடுக்கிறது. இருப்பினும் இதுவரை காலமும் பேசப் பின் நின்ற விடயங்களை பேச வேண்டும் என்ற சின்னத்துணிவுடன் இந்தத் திரியில் இறங்கியிருக்கிறேன். எதிர்வரும் நாட்களில் சந்திப்போம்.

இன்றய காலகட்டத்தில் நிறைய புலம்பெயர் தமிழ்க் குடும்பங்களில் பெண்ணாதிக்கம் பெருகிவருகின்றது. 25 பவுணில் தாலி சங்கிலி மோதிரம் பட்டுச்சேலை வீடு வாகனம் என விருப்பப் படும் பொண்டாட்டிக்காக வாழ்நாள் முழுக்க இரண்டு வேலை சில நேரம் மூண்டு வேலை செய்யும் ஆண்களுக்கும் விடுதலை தேவை.

ஒரு பிரபல தமிழ் ஊடகவியளாலரிடம் சொண்னேன் அவுஸ்ரேலியா முதல் பெண்பிரதமர் யூலி என்று ,உடனே அவர் கோபமடைந்து விசர்கதை கதைக்கவேண்டாம் சிறிலன்காரங்கள்தான் பெண்களுக்கு முதல்மரியாதை கொடுத்தவங்கள் உலத்தின் முதல் பெண்பிரதமர் சிறிமா ...வெள்ளைகள் சும்மா கதைக்ககதான் சரி நடைமுறையில ஒன்றும் செய்யமாட்டங்கள் என்றார்...

யார் காரணம் என்று குத்துமதிப்பாய் பார்த்தால்..

தனிநபர் 30%

குடும்பம் 20%

சுற்றம், உறவுகள் 20%

மிச்சம் 30%

நிலமையை மாற்றி அமைக்கிறதுக்கு

தனிநபர் 30%

குடும்பம் 20%

சுற்றம், உறவுகள் 20%

மிச்சம் 30%

முயற்சியை போட்டு ஒட்டுமொத்த நிலமையை சாதகமாக மாற்றி அமைக்க பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்லைவை அக்கா ஆணாதிக்கம் என்ற பதத்தை அடிக்கடி விரும்பி பாவித்து வருகிறார். ஆனால் அவர் எப்போதும் பெண்ணாதிக்கம் என்ற பதத்தை கையாண்டதே இல்லை. பெண்ணாதிக்கம் என்ற ஒன்று இல்லை என்று நினைக்கிறாரா.. அல்லது மறைக்க விரும்புகிறாரா..??!

பெண்ணாதிக்கமும் பெண்களின் இந்த நிலைக்கு ஒரு காரணம். தான் ஆணை ஆள வேண்டும்.. தனக்கு கீழ்படிய ஆண் நடந்து கொண்டால் மட்டுமே அவன் நல்ல கணவன்.. இப்படியான சிந்தனைகள் எமது பெண்களிடம் சிறுவயது முதலே மலைபோல் வளர்க்கப்பட்டு வருகிறது.

ஒரு ஆணுக்கு என்று தனியான சிந்தனைகள் ஆசைகள் விடயங்கள் இருக்கும். அவற்றை ஒரு பெண் புரிந்து கொள்ளாத போது அவன் அவளின் விருப்புக்கு எதிராக செயற்படும் போது.. அதனை ஆணின் ஆதிக்கமாக கூட சிலர் வரையறுக்கின்றனர். அவற்ர ஆம்பிளைத் திமிரில.. நான் சொல்லச் சொல்ல செய்கிறார்.. இப்படித்தான் பெண்கள் சிந்திக்கத் தூண்டப்படுகின்றனரே தவிர.. நான் சொல்லவும் அவர் செய்கிறாரே.. அதற்கு ஏதேனும் காரணம் இருக்குமோ.. அதை நான் கண்டறிய வேண்டும்.. அல்லது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவது பெண்கள் மத்தியில் இல்லை என்றே சொல்லலாம். வெகு சிலரே அப்படி புரிந்து கொண்டு செயற்படுகின்றனர்.

உண்மையில் ஆணாதிக்கம்.. பெண்ணாதிக்கம் என்பதெல்லாம் வெறும் பதங்களே அன்றி வேறல்ல. யாரையும் யாரும் ஆதிக்கம் செய்ய முடியாது. ஆனால் ஒருவருடைய எதிர்பார்ப்பை விஞ்சி மற்றவர் செயற்படும் போது அதற்கு ஆதிக்கம் என்று பெயரிடுகின்றனர்.

இன்னொன்று பெளதீக.. மற்றும் சொல் வன்முறைகள்.. ஆதிக்கத்தின் வெளிப்பாடுகள் அல்ல. பெண்கள் அதிகம் சொல்ரீதியான வன்முறைகளை ஆண்களுக்கு எதிராக செய்கின்ற அதேவேளை ஆண்கள் பெளதீக ரீதியான வன்முறைகளை பெண்களுக்கு எதிராகக் காட்டுகின்றனர். அடிப்படையில் சொல்வன்முறைகளே அதிகம் பெளதீக வன்முறைகளுக்கான தூண்டல்களாக இருக்கின்றன. இதனையும் சிலர் ஆணின் உடல்பலம் சார்ந்து ஆதிக்கம் என்று வரையறுக்கின்றனர். அது தவறு. ஆணின் உடற்பலம் என்பது பெண்ணின் மீதான வன்முறைக்கென்று ஆனதல்ல. அது சமூக வாழ்வில் ஆண் தனது சமூகத்தை எதிரி விலங்குகளிடம் இருந்து காக்க அமைந்தது.

ஆண் சிங்கம் பலமானது என்பதற்காக அது பெண் சிங்கத்தின் மீது வன்முறை செய்வதில்லை. அப்படி இயற்கையில் அமையவில்லை. ஆணின் உடல் வலிமை என்பதும் இத்தகையதே. ஆணின் உடல் வலுவை கட்டிப்போடும் தகமை பெண்கள் காட்டும் அன்புக்கும் நெருக்கத்துக்கும் புரிந்துணர்வுக்கும் உண்டு. அதேபோல் பெண்களின் சொல்வன்முறையை கட்டிப்போட வேண்டின் ஆண்களும் பெண்களைப் புரிந்து கொண்டு அவர்களின் செயல்கள் செய்கைகளுக்கு காரணம் கற்றுக் கொண்டு செயற்பட வேண்டும். இன்றேல்.. இந்தப் பிரச்சனைகளுக்கு முடிவில்லை. காலத்துக்கும்.. இவை ஆதிக்கங்களாக வரையப்பட்டு பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். அவ்வளவும் தான். :)

Edited by nedukkalapoovan

மிகவும் சரியான பதில் நெடுக்காலபோவான். இதற்கு வல்வை சஹாராவின் பதில் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் இந்த நிலைக்கு ஆண்கள் கோழைகளாக இருப்பது தான் காரணம்...ஆண்களுக்கு தைரியமாய் தனித்து முடிவெடிக்கத் தெரியாதது தான் காரணம்...ஒரு சில ஆண்களைத் தவிர மற்ற அனைத்து ஆண்களும் யாருக்காவது அடங்கியே வாழ்கிறார்கள்...வாலிப பருவத்தில் யாரையாவது காதலித்து இருப்பார்கள் ஆனால் பெற்றோருக்குப் பயந்து அந்தப் பெண்ணை விட்டு விடுவார்கள்...பிறகு கல்யாணம் பேசும் போது[வியாபாரம் செய்யும் போது]தனது மகன் இவ்வளவு படித்திருக்கிறான் எனச் சொல்லி அவரது பெற்றோர் சீதனம் கேட்பார்கள் அந்த ஆணுக்கு அப் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் இருந்தாலும் பெற்றோருக்காய் அடங்கிப் போய் விடுவான்...பிறகு கல்யாணம் முடித்தாலும் மாமியார் மருமகளை அடக்கி ஆண்டால் அதையும் கண்டும் காணத மாதிரி இருந்து விடுவார்கள்...புலம் பெயர் நாட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளோடு இல்லா விட்டாலும் அநேகர் வீட்டில் மாமியார் தான் ஆட்சி செய்கிறார்...இது எல்லாவற்றிக்கும் பெண் பின்னால் நிண்டாலும் ஆண்கள் கோழையாய் இருப்பதே முக்கிய காரணம் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி.. ஒரு ஆண் தனது வாழ்க்கைக் காலத்தில் அநேக காலம் தனித்து முடிவெடுத்து வாழும் போது.. திருமணமான.. அல்லது காதலிக்கும் ஆண்கள் மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாமல் தவிப்பதாக பெண்கள் சொல்கின்றனர்.

இந்தப் பூமிப் பந்தில் அநேக நாடுகளில் பெரும் புரட்சிகளுக்கு மாற்றங்களுக்கு வித்திட்டவர்களே ஆண்கள் தான். ஏன் பெண் விடுதலை என்பதை உச்சரித்ததே ஆண்கள் தான். அப்படி இருக்கும் போது ஆண்கள் சுயமுடிவெடுக்க முடியாத கோழைகள் என்பது ஏற்புடைய ஒன்றல்ல.

பெற்றோருக்குப் பயந்தோ அல்லது வேறு காரணங்களுக்குப் பயந்தோ.. அல்லது வேண்டுமென்றே.. ஏமாற்றும் ஆண்களைப் போல ஏமாற்றும் பெண்களும் உள்ளனர். அவர்களும் சுயமுடிவெடுக்க முடியாத கோழைகள் தானே. அப்படி இருக்க.. அதேன் கோழைத்தனம் என்பது கூட ஆண்கள் மீதே திணிக்கப்படுகிறது.

மாமியார் மருமகள் பிரச்சனை என்பது இரண்டு பெண்களுக்குள் உள்ள பிரச்சனை. அதையே அவர்களால் சரிவர தீர்க்க முடியவில்லை எனும் போது எப்படி பெண்கள் ஆண்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முயல்வர்..??! உண்மையில் ஆண்கள் சூழ்நிலைக் கைதிகளாக்கப்பட்டு பெண்களால் முடிவெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனரே தவிர.. பிரச்சனைகள் உக்கிரமாவதை தடுக்க ஆண்கள் மெளனிக்கிறார்களே தவிர ஆண்கள் கோழைகள் கிடையாது. அவர்கள் பெண்கள் மத்தியில் பிரச்சனைகளைக் குறைத்து வாழ எண்ணுவதால் மெளனிப்பதை.. அல்லது ஏன் வேண்டாத பிரச்சனை அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று விடுவதை பெண்கள் தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.

அண்மையில் ஒரு குடும்பம் கவுன்சிலிங்குக்காக வந்த போது பிரச்சனைகளைக் கேட்டார்கள். அந்தப் பெண்ணோ கணவன் மீது எண்ணிலடங்காத குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டே இருந்தார். அந்தக் கணவரோ மாறாக தான் சொல்வதை அந்தப் பெண் செவிமடுப்பதில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார். இறுதியில் அந்தப் பெண்ணை தனியாக கவுன்சிலிங்குக்கு வர அறிவுறுத்தி அனுப்பி விட்டார்கள். அதற்கு அவர்கள் அந்தக் கணவருக்கு அளித்த விளக்கம்.. அவர் தான் சொல்வதையே எல்லோரும் செவி மடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார். அந்த நிலையில் இருந்து மாற்றாமல் அவருக்கு உங்கள் நிலையை விளக்க முடியாது என்று சொல்லி கணவரை பிறிதொரு தினத்திற்கு வர சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

இதுதான் இன்றுள்ள பெண்களின் பிரச்சனையே. தான் ஆணுக்கு சமன் .. அவனுக்கு என்னை விட என்ன பெரிசா தெரியும்.. நான் ஆணை விஞ்சியவள்.. ஆண் கோழை.. அவனுக்கு யோசிக்கத் தெரியாது.. முட்டாள்.. முடிவெடுக்கத் தெரியாது.. சொன்னத்தை சரியா செய்யத் தெரியாது.. அவன் இவன் மாதிரி இல்ல.. இப்படியான எண்ணங்கள் பெண்களிடத்தில் இன்று பெருகிக் கிடக்கிறது.

இவையே ஆண்கள் மீதான பெண்களின் பார்வை.. மதிப்பீடு தரங்குறையவும்.. ஆண்கள் புறக்கணிக்கப்படும் சூழலையையும் உருவாகிறது. பின்னர் ஆண்களால் ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுவிட்டால்.. அவன் அடக்குகிறான் ஆழ்கிறான் என்று குற்றச்சாட்டுக்களை சுமத்தி சமூகத்திடம் பாதுகாப்பும் தேடி ஓடிக் கொள்கின்றனர் பெண்கள். ஆனால் இன்று வரை பெண்களால் பாதிக்கப்படும் ஆணுக்கு தீர்வும் இல்லை.. தீர்வு தேட என்று ஒரு இடமும் இல்லை. இந்த நிலையில் ஆண் மெளனியாகிறான்.. அல்லது சூழ்நிலையை தவிர்க்க விரும்புகிறான். அது ஆண்களை சூழ்நிலையை தீர்மானிக்க விடாமல் தடுக்கிறது. இதற்கு யார் காரணம்.. ஆணா.. பெண்ணா. பெண்கள் தான் இதில் முக்கிய பங்களிப்பை செய்கின்றனர்.

ஆண் தான் சார்ந்து ஒரு முடிவை விரைந்து எடுக்கும் அதேவேளை பெண் சார்ந்த தன் முடிவை எடுக்க பல தடவை யோசிக்கிறான்.. தயங்குகிறான். ஏன்... இதற்கு பெண்கள் தான் காரணமே அன்றி ஆண் அல்ல என்பது தெளிவு. இருந்தும் குற்றச்சாட்டுக்கள் எப்போதும் ஆண்கள் மீதே பெண்களால் சுமத்தப்படுகின்றன. இவை தவிர்க்கப்பட்டு பெண்கள் தங்கள் நிலைகளை தாங்களே சரிவர விளங்கிக் கொண்டு ஆண்களுக்கு இலகுவாக முடிவெடுக்கும் சூழநிலை ஏற்படுத்திக் கொடுப்பின் ஆண்கள் நிச்சயம் வளமான முடிவுகளை பெண்களை பாதிக்காத வகைக்கு எடுக்க முயல்வர். அதுவே ஆண் - பெண்ணிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு பிரச்சனைகள் விரிவாவதை தடுக்க உதவும். ஆண் ஆதிக்கம்.. பெண்ணாதிக்கம்.. ஆண் கோழை.. முட்டாள் என்ற பதங்களை உச்சரிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. :)

Edited by nedukkalapoovan

.

வெறுமனே சிந்தனைப் போக்குத்தான் ஆண் ஆதிக்கத்துக்கும் பெண் அடக்குமுறைக்கும் காரணமென்றால் பல விலங்கினங்களில் ஆண் ஆதிக்கமாகவும் பெண் அடங்குவதாகவும் இருக்கிறதே !

ஆகவே இது எண்ணங்களுக்கு அப்பாற் பட்டது என்று நினைக்கிறேன்.

பெண்கள் சம உரிமைக்கு முதற்படி அவர்கள் தமது கல்வி அறிவையும் கல்வித் தகமையையும் பெருக்கிக் கொள்வதுதான். மற்றவை தானாகவே வந்துசேரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான கொடுமைகளுக்கு பெண்கள் உட்படுவதை தடுக்க விழிப்புணர்வுடனான செயற்பாடு அவசியம். அதுமட்டுமன்றி பாதிக்கப்படுபவர்களுக்கு நீண்ட கால உதவிகள் ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு.. அவர்களை சாதாரண மக்களாக ஏற்கும் மனநிலைக்கு சமூகத்தை கொண்டு வர வேண்டும்.

http://www.youtube.com/watch?v=zWifPwxbSKA

ஆனால் பெண்கள் குழந்தைகள் மட்டுமன்றி ஆண்களும் இவ்வாறான மற்றும் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவை குறித்தும் பேச எல்லோரும் முன் வர வேண்டும். ஆண்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் தாமே தமக்கு தீங்கிழைத்த சமூகத்தை தண்டிக்க முற்படுவர். அது பாதிப்புக்களை இன்னும் இன்னும் அதிகரிக்குமே அன்றி குறைக்காது.

http://www.youtube.com/watch?v=ZlWQrxVFJ7M

http://www.youtube.com/watch?v=_MvOW9HclJk

(UK)

http://www.youtube.com/watch?v=feEDsiuaY5o

(USA)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் ஒரு பெண் கட்டியிருக்கிறாள்

22 வருட வாழ்க்கை

பிரச்சினைகள் வரவில்லை என்ற சொல்லவரவில்லை.

அவளும் சொல்வாள் ஆனால் முடிவு என்னிடம்...

எதுவாக இருப்பினும் என்முடிவு சரியாக இருக்கும் என்று அவளது கணிப்பு.

அந்த அவளது கணிப்பை நானும் தொடர்ந்து காப்பாத்துவதால் என் குடும்பத்தில் தலைவனாக தொடர்ந்து இருக்கின்றேன் என்பதுதான் உண்மை.

அதேநேரம் ஒருவேளை என்முடிவு தோற்றுவிட்டால்

சொன்னேன்தானே என்ற நச்சரிப்பு இல்லை.

ஏனெனில் அது எனது பிழை இல்லை என்று அவளுக்கும் தெரிந்திருக்கும்

ஏனெனில் ஒளிவுமறைவு எமக்குள் இல்லை.

கலந்து பேசாமல் முடிவு எடுத்ததில்லை.

நகை நட்டு வாகனம் காணிநிலம்

இதுவரை என் மனைவி கேட்டதில்லை

கேட்காமலேயே செய்யும் குணம் என்னிடமும் உண்டு.

அதுவும் விரலுக்கேற்றது தான் என்பதனை என்னைவிட அவள் அறிவாள்.

இதில் ஆணாதிக்கம் அல்லது பெண் ஆதிக்கம் அல்லது அடக்குமுறை எங்குள்ளது என்று சுட்டிக்காட்டினாலும் நாங்கள் திருந்தமாட்டோம்

ஏனெனில் எமக்குள் மற்றவர் புகுவதை நாங்கள் அனுதித்ததில்லை.

இதனாலேயே இல்வாழ்வு இன்பமாக இருக்கிறது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

.வாலிப பருவத்தில் யாரையாவது காதலித்து இருப்பார்கள் ஆனால் பெற்றோருக்குப் பயந்து அந்தப் பெண்ணை விட்டு விடுவார்கள் ...பிறகு கல்யாணம் பேசும் போது[வியாபாரம் செய்யும் போது]தனது மகன் இவ்வளவு படித்திருக்கிறான் எனச் சொல்லி அவரது பெற்றோர் சீதனம் கேட்பார்கள் அந்த ஆணுக்கு அப் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் இருந்தாலும் பெற்றோருக்காய் அடங்கிப் போய் விடுவான்... பிறகு கல்யாணம் முடித்தாலும் மாமியார் மருமகளை அடக்கி ஆண்டால் அதையும் கண்டும் காணத மாதிரி இருந்து விடுவார்கள்...

என்ன ரதி

எங்கேயோ அடிபட்ட அனுபவம்போல் இருக்கிறது...........

  • கருத்துக்கள உறவுகள்

கந்தனப் புகையிடயே சிந்தனை செய்து மனம் வெந்து தினம் நொந்து களம் வந்து திரி தந்த என் அன்புத் தோழி சகாராவுக்கு

இன்று இப்படியோர் திரியை தூண்டி விட்டிருக்கிறீர்களென்றால் இதற்கு ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ காரணமாக இருக்கமுடியாதென்ற எண்ணம் என் இதயத்தில் எழுகிறது.

காரணம்

பூப்போல பெண்கள் இன்று புயலாக மாறி அகிலத்தையே அசர வைத்த அதிசயங்கiளாய் மாறிய பின்பும் இன்றும் பெண்களை ஆண்கள் அடிமைப் படுத்துகிறார்கள் அடக்கி ஆளுகிறார்கள்

என்று சொல்வது முழுவதுமாக ஏற்றுக்கொள்ளத் கூடியதாக இல்லை. விதி விலக்குகள் எதிலும் உண்டு. என்னைச் சுற்றிப் பார்க்கும் பொழுது இப் புலம் பெயர் நாட்டில் பெண்கள் எல்லா விதத்திலும் முன்னேறி தன்னாதிக்கமுள்ள சுயமுயற்சியுள்ள கல்வித்தகமையுள்ள திறமையுள்ள புதுமைப் பெண்களாகவே வாழ்வதாக உணருகின்றேன். இன்னும் பெண்கள் அடிமைகளாக இருக்கிறார்களென்றால்

அது அவர்களது கையாலாகாத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.ஆண்கள் தடைக்கற்கள் என்றசாட்டுப்போக்கை முற்று முழுதாக ஏற்றக்கொள்ள முடியாது. அது தவிர பெண்களுக்கு பெண்களே எதிரிகளாக இருப்பதையும் மறுக்க முடியாது.

இது தவிர எம் தாயகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அரசியல் கைதிகளாக்கப்பட்டு பெண்கள் ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி சொல்லொணாத் துன்பற்களைச் சந்திக்கும் நிலையையும் கொஞ்சம் சிந்திக்கத்தான் வேண்டும். பெண்களை இப்படியாக துன்புறுத்தும் ஆயுதங்களாக ஆண்களே பாவிக்கப் படுகிறார்கள்.அங்கு துன்புறும் ஒவ்வொரு சகோதரியையும் நினைக்கும் போது ஆண்களை அடக்குமுறையாளர் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பது தவிர்க்கமுடியாததாய் உள்ளது.

மொத்தத்தில் புலம் பெயர் நாடுகளில் ஆண்கள் பாவம். தாயகத்தில் தாயின் இடையில் சுமக்கப்பட்ட பிள்ளைச்சுமை இப்போ தந்தையின் கைகளில் கார் இருக்கையுடன் ?

நொந்து நூலாகிப்போன ஆண்களை பெண்களே இன்னும் வார்த்தையால் வாங்காதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்லைவை அக்கா ஆணாதிக்கம் என்ற பதத்தை அடிக்கடி விரும்பி பாவித்து வருகிறார்.

ஆணாதிக்கம் என்ற பதத்தை நான் அதிகம் பாவித்து வருவதாக நெடுக்கு கூறுவது அவரின் மிகைப்படுத்தப்படப்போகும் வாதத்திற்கு ஆண்கள் சார்பான விசிலடிப்புகளையும், அதீத ஆதரவினையும் பெறுவதற்கான ஒரு முஸ்தீபு ஆகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

ஆதிக்கம் என்பது என்ன?

ஒரு ஒடுக்குமுறையை உறுதிப்படுத்தும் ஒரு சொற்பதம். இது இடம், பொருள், ஏவலுக்குத் தகுந்தாற்போல் இனஆதிக்கம், மதஆதிக்கம், மொழஆதிக்கம் எனநீண்ட பட்டியலை தயாரிக்கக்கூடியது. அந்த வகையிலேயே ஆண் ஆதிக்கம் என்ற சொல்லும் உருப்பெறுகிறது. உதாரணத்திற்கு..... சிங்களப்பௌத்த பேரினவாத ஆதிக்கம் தமிழினத்தின் உரிமைகளை மறுத்து ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. அதனைச் சிங்களப்பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் என்று சொல்லாமல் வேறு என்ன பெயரில் அழைப்பதாம்?அதுபோலத்தான் இந்த வார்த்தைப் பிரயோகமும்.

பெண்ணாதிக்கம் என்ற சொல்லை உபயோகிக்கவே சமூகரீதியாக எங்குமே இடமளிக்கப்படவில்லை அல்லது தவிர்க்கப்பட்டே வருகிறது ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டால் அன்றி சும்மா வெறுமனே பெண்ணாதிக்கம் கூடிவிட்டது என்று சும்மா நகைச்சுவைக்காகக் கூறலாம். உண்மையில் யதார்த்தம் அதுவல்ல

"பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது " என்றும்

"பொம்பிளை சிரிச்சாப் போச்சு போயிலை விரிச்சாப் போச்சு" என்றும்

"நண்டு கொழுத்தால் பொந்தில தங்காதாம் பெண்டு கொழுத்தா வீட்டில தங்காதாம்" என்றும்

பாழாய் போன பிலாக்கனங்களை இன்றும் சமூகம் பேசுவதைக் காதுபடக் கேட்க கூடியதாகவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வரியில் பதில் சொல்வதானால் இந்த நிலைக்கு காரனம் பெண்கள்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு வெளிப்படையாகவே கேட்கிறேன்

ஒரு பெண்ணின் முழுமையான அநுமதியின்றி அவளை கணவன் என்ற பெயரால் புணர்ச்சிக்கு அழைப்பது அல்லது கட்டாயப்படுத்துவது எந்த ஆதிக்கத்தின் வடிவம்?

இன்றய காலகட்டத்தில் நிறைய புலம்பெயர் தமிழ்க் குடும்பங்களில் பெண்ணாதிக்கம் பெருகிவருகின்றது. 25 பவுணில் தாலி சங்கிலி மோதிரம் பட்டுச்சேலை வீடு வாகனம் என விருப்பப் படும் பொண்டாட்டிக்காக வாழ்நாள் முழுக்க இரண்டு வேலை சில நேரம் மூண்டு வேலை செய்யும் ஆண்களுக்கும் விடுதலை தேவை.

சுகன் சமீபகாலமாக பெண்கள் திருமணநாளுக்குப்பின் தாலிக்கொடியையே கழற்றி வைத்துவிடுகிறார்கள் என்று இந்த யாழ் கரத்துக்களத்தில்தான் பேசிக் கொண்டார்கள் அப்படியிருக்க இது எப்படி? :(

யார் காரணம் என்று குத்துமதிப்பாய் பார்த்தால்..

தனிநபர் 30%

குடும்பம் 20%

சுற்றம், உறவுகள் 20%

மிச்சம் 30%

நிலமையை மாற்றி அமைக்கிறதுக்கு

தனிநபர் 30%

குடும்பம் 20%

சுற்றம், உறவுகள் 20%

மிச்சம் 30%

முயற்சியை போட்டு ஒட்டுமொத்த நிலமையை சாதகமாக மாற்றி அமைக்க பார்க்கலாம்.

முரளி உங்கள் குத்து மதிப்புக்கு மேலதிக விளக்கம் கிடைக்குமா? :(

நன்றி சுகன் உங்களுடைய இப்பதிவுக்கு நான் இவற்றைப் போன்ற விடயங்களைத்தான் மேலதிகமாக எதிர்பார்க்கிறேன் வாய்ப்பிருப்பின் இத்திரியில் இணைத்துவிடுங்கள். மீண்டும் உங்களுக்கு நன்றி

மிகவும் சரியான பதில் நெடுக்காலபோவான். இதற்கு வல்வை சஹாராவின் பதில் என்ன?

விடிவெள்ளி நீண்ட காலமாக நாங்கள் வெள்ளி பார்த்துக் கொண்டிருக்கிறோம். விடிவெள்ளியை பார்ப்பதற்காகத்தான் இம்முயற்சி :D

பெண்களின் இந்த நிலைக்கு ஆண்கள் கோழைகளாக இருப்பது தான் காரணம்...ஆண்களுக்கு தைரியமாய் தனித்து முடிவெடிக்கத் தெரியாதது தான் காரணம்...ஒரு சில ஆண்களைத் தவிர மற்ற அனைத்து ஆண்களும் யாருக்காவது அடங்கியே வாழ்கிறார்கள்...வாலிப பருவத்தில் யாரையாவது காதலித்து இருப்பார்கள் ஆனால் பெற்றோருக்குப் பயந்து அந்தப் பெண்ணை விட்டு விடுவார்கள்...பிறகு கல்யாணம் பேசும் போது[வியாபாரம் செய்யும் போது]தனது மகன் இவ்வளவு படித்திருக்கிறான் எனச் சொல்லி அவரது பெற்றோர் சீதனம் கேட்பார்கள் அந்த ஆணுக்கு அப் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் இருந்தாலும் பெற்றோருக்காய் அடங்கிப் போய் விடுவான்...பிறகு கல்யாணம் முடித்தாலும் மாமியார் மருமகளை அடக்கி ஆண்டால் அதையும் கண்டும் காணத மாதிரி இருந்து விடுவார்கள்...புலம் பெயர் நாட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளோடு இல்லா விட்டாலும் அநேகர் வீட்டில் மாமியார் தான் ஆட்சி செய்கிறார்...இது எல்லாவற்றிக்கும் பெண் பின்னால் நிண்டாலும் ஆண்கள் கோழையாய் இருப்பதே முக்கிய காரணம் என்பது என் கருத்து.

இத்திரிக்குத் தேவையான ஆணித்தரமான கருத்து ரதி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு வெளிப்படையாகவே கேட்கிறேன்

ஒரு பெண்ணின் முழுமையான அநுமதியின்றி அவளை கணவன் என்ற பெயரால் புணர்ச்சிக்கு அழைப்பது அல்லது கட்டாயப்படுத்துவது எந்த ஆதிக்கத்தின் வடிவம்?

ஒரு ஆடவனை புணர்ச்சிக்குத் தூண்டி அதற்கு அழைக்கும் பெண்களையும் நீங்கள் ஆதிக்க வடிவமாகக் காணத் தயாராக இருக்கிறீர்களா..???! அப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் தானே.

அதுமட்டுமன்றி இன்று அமெரிக்காவில் இருந்து வளர்ந்த நாடுகள் எங்கனும் ஆண்கள் மீது பெண்கள் வன்முறைகளைக் கைட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஆண்கள் பெண்கள் மீது செய்யும் வன்முறைகளை இனங்காட்டி ஆணாதிக்கம் என்று வரையறுக்கும் உங்கள் போன்றவர்கள்.. பெண்கள் ஆண்கள் மீது செய்யும் இந்த வன்முறைகள் தொடர்பில் மூச்சுக் கூட விட மறுப்பதேன். அது பெண்ணாதிக்கத்தை நிறுவிவிடும் என்ற பயத்திலா..???!

இன்று உலகம் விழிப்படைந்து விட்டது. பெண்கள் இவ்வளவு காலமும் செய்து வந்த ஆண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்தும் ஆண்கள் குரல்கொடுக்கவும் பாதுகாப்புத் தேடவும் தொடங்கி விட்டனர். ஆண்கள் மீது வன்முறைக் கட்டுப்பாடுகளைப் போடும் உலகம் பெண்களை நலிந்தோர்.. மெல்லியோர் என்று கற்பனை செய்து கொண்டிந்த நிலை போய் இன்று கணவனை துன்புறுத்திய குற்றத்துக்காக பெண்களையும் 18 - 20 வருடங்கள் என்று சிறைக்குள் தூக்கிப் போடுகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் 50 ஆண்டுகளாலத்துக்கு முன்னான ஆணாதிக்கப் பல்லவி பாடித் திரிவதில் பயனில்லை சகாரா அக்கா...! :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு எனக்குச் சில கடமைகள் அழைக்கின்றன. முடிந்தால் இன்று மீண்டும் இங்கு பதிவிடுகிறேன். அதுவரை நீங்கள் ஆண்பாவங்களை வரிசைப்படுத்துங்கள். :(

உங்களுக்கு சுமையாக இருக்கிற விசயம் பலருக்கு சுகமாக இருக்கலாம். உங்களுக்கு சுகமாக இருக்கிற ஒரு விசயம் பலருக்கு சுமையாக இருக்கலாம். பெண் என்கின்ற வட்டத்துக்குள் நின்று பார்க்காமல், சிந்திக்காமல் இன்னமும் ஒரு பெரிய வட்டத்துக்கை வந்து யோசித்தால் தெளிவான விடைகள் கிடைக்கக்கூடும் என்று நினைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.