Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கபடி கபடி......[/

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கபடி கபடி......

இனக்கலவரத்தால் சிங்களவனால் பந்தாடப்பட்டு, பந்து போல் எதுவுமில்லாது ஊருக்கு வந்து பாதை தெரியாது, பயணம் புரியாது கால்கள் போன வழியில் திரிந்த காலம். நண்பர் வட்டம் பாடசாலைகளுக்கு சென்றுவிடும். என்னைப்போல் அகதியல்லவே அவர்கள். தனிமை. வெறுமை. சரி கிடைப்பதை தெரிவு செய்யலாம் என்றால் நண்பனாக கிடைத்தார் ஒரு அண்ணன் முறையானவர். 3 வயது வித்தியாசம். அவர் சொந்தமாக யாழில் தொழில் வைத்திருந்ததுடன், ஊரிலிருந்து யாழுக்கு வாகனசேவையும் செய்து வந்தார். பொழுதுபட என்னைச்சந்திக்க வந்துவிடுவார். ஒரு நீரோடையைக்கடந்து தான் எனது வீட்டுக்கு அவர் வரவேண்டும். வழமையான சந்திப்பு என்பதால் பொழுதுபடமுன் எங்கிருந்தாலும் அந்த இருபகுதியையும் பிரிக்கும் பாலத்தின் மீது வந்து அமர்ந்து விடுவேன்.

அது ஒரு சுகம். மாரி காலம் என்பதால் பொழுதுபட லேசான குளிர் இருக்கும். லேசான காற்றிருக்கும். தண்ணீர் இரு பகுதிக்கும் பாலத்தின்கீழால் பாய்ந்தபடியிருக்கும். மீன்கள் துள்ளி விளையாடும். கொக்குகளும் குருவிகளும் அவற்றை பிடிக்க வலைபோடும்.

அந்த அழகில் மயங்கியபடி பேசிக்கொண்டிருப்போம். நாடு பற்றி, எமது கிராமம்பற்றி, தொழில் பற்றி, யாழில் நடந்த செய்திகள் பற்றி......................

செக்ஸ் பற்றி, காதல் பற்றி, பெண்கள் பற்றி அதிகம் பேசமாட்டோம். அதை நாங்கள் சகோதரர்கள் என்ற வட்டம் தடுத்துவிடும்.

அப்படியே இருந்து பேசியபடி அவர் மெல்ல இதோ வருகின்றேன் என்று சிலநிமிடங்கள் மறைந்துவிடுவார். அப்புறம் வந்து வழமையான பேச்சுக்களுடன் நாங்கள் அடுத்தநாள் சந்திப்பதாக சொல்லிக்கொண்டு பிரிந்துவிடுவோம். இது தொடர்ந்தது. எனது வயது நண்பர்கள் வந்து குண்டைப்போடும்வரை.....

என்ன அவர் வேலிமேய நீ காவல் இருக்கிறாயாம் என்றார்கள். இது நாங்கள் அடிக்கடி பாவிக்கும் சொல் என்றபடியால் உடனேயே புரிந்தது. விபரமாக கேட்டதில் அந்த பாலத்தை அண்டிய முதலாவது வீடு அவரது சொந்த மாமனார் உடையது. அவரது மகளைப்பார்க்கத்தான் அண்ணர் சில நிமிடங்கள் என்னைப்பிரிகிறார் என்பது தெரிந்தது. அந்தப்பெண் எனக்கும் மைத்துணிதான். அவள் என்னுடனும் அதிகம் பேச விரும்புவாள். நான் தவிர்த்துவிடுவேன். அவள் சரியான கறுப்பி. எனக்கு கறுப்பை பிடிக்காது. அத்துடன் அக்கம் பக்கவீடுகள். அதனால் மரியாதை. அவளும் என்னுடன் மிகவும் மரியாதையாகத்தான் பேசுவாள். ஆனாலும் நானும் மைச்சான் என்றபடியால் அவளுக்கு ஏதும் கெட்டபெயர் வந்துவிடக்கூடாது என்று நான் விலகியே இருந்தேன். பார்த்தால் அண்ணர் தூண்டிலில் மாட்டிவிட்டார் என்பது புரிந்தது.

அதன்பின்பும் நாம் சந்திப்போம்பேசுவோம். சில நிமிடங்கள் பிரிவோம். மீண்டும் வந்து பேசிப்பிரிவோம். இது தொடந்தது. நான் பலமுறை பேச விரும்பியும் காதலுக்கு தடைபோடும் வயதல்லவே அந்தவயது. அதைவிட அண்ணன் தம்பி உறவு அதை தடுத்துவிட்டது. காலம் ஓடியது. அதற்கான காலமும் நேரமும் வந்தது என்று சொல்லமுடியாது. வரவழைக்கப்பட்டது.

வழமைபோல் பொழுதுபட பாலத்தடிக்கு வந்து கொண்டிருந்தேன். அந்த மைத்துணி வீட்டில் ஒரே கூட்டமாக இருந்தது. நான் வீடுகளுக்கெல்லாம் போகமாட்டேன். பாலத்தில் உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் என்னை நோக்கி அவளது சகோதரன் வேறு இருவருடன் சேர்ந்துவந்தார். உன்னால் ஒரு உதவி எங்களுக்கு வேண்டும் என்று கேட்டார். என்ன என்று கேட்டதற்கு வீட்டுக்கு வந்து பார் என்றார். வீட்டுக்கு போனபோது எனது மைத்துணி ஒரு மூலையில் இருந்து அழுது கொண்டிருந்தார். அவரைச்சுற்றி வயதானவர்கள் ஆர்ப்பரித்தபடியும் ஆறுதல் சொல்லியபடியும் இருந்தனர். என்னைக்கண்டதும் இவன் மனது வைத்தால் இது நல்லபடியாக முடியும் என்றனர். என்ன பிரச்சினை என்றதும் உன் அண்ணன் இவளை 3 மாதம் ஆக்கிவிட்டான் என்றனர். தூக்கி வாரிப்போட்டது எனக்கு. விளையாட்டின் உச்சக்கட்டம் கப் எடுத்து இருக்கிறது. தப்ப முடியாது. பெண் விபகாரம். என்னை முடிவு சொல்லும் படியும் பொறுப்பெடுத்து சிக்கலை முடிக்கும்படியும் வற்புறுத்துகின்றனர். பல மணி நேர விவாதங்களின் பின் அவர் வருவார். இவாவை பொறுப்பெடுப்பார். சொல்லிவிட்டு வெளியேறிவிடுகின்றேன். ஆனாலும் எனது சொல்லைக்கேட்பாரா.? அண்ணனை ஒரு அளவுக்கு மேல் வற்புறுத்தமுடியுமா???

ஆயிரம் கேள்விகள் என்னுள். ஆனாலும் இது சாதாரண விடயமல்லவே. அவரை இதற்கு சம்மதிக்க வைக்கணும்.

அவரும் என்னைக்காண ஓடிவருகிறார். என்ன ஏதாவது கேள்விப்பட்டாயா..? என்றார். ஒரே பதில் கட்டிக்கொள்ளுங்கள். கட்டாயம் கட்டவேண்டுமா என்று திரும்பிக்கேட்டார். ஆம் எல்லாம் காலம் கடந்துவிட்டது. கட்டித்தான்ஆகவேண்டும். ரொம்ப கவனமாக இருந்தேன். ஆனாலும் பேய்ப்பேசு கட்டிக்கொள்கின்றேன் என்று சொல் என்றார். உடனேயே அவரைக்கூட்டிக்கொண்டுபோய் எல்லோர் முன்னிலையிலும் அந்த மைத்துணியின் கையில் கொடுத்துவிட்டு வந்து விட்டேன். அதன்பின் நாங்கள் பிரிந்துவிட்டோம்.

நாட்கள் மாதங்களாக வருடங்களாக உருண்டோடின. பல வருடங்களுக்கு பின் அவர் என்னை வந்து சந்தித்தார். வழமையான பேச்சுக்களுடன் பிள்ளைகள் பற்றியும் விசாரித்தேன். மூத்த பிள்ளையின் வயது மிகக்குறைவாக இருந்தது. ஆனால் அவரிடம் கேட்க அண்ணன் தம்பி உறவு இடம்கொடுக்கவில்லை. வேறு இடத்தில் விசாரித்தேன். அப்போதுதான் புரிந்தது இந்த கபடி கபடி விளையாட்டு.

எல்லாமே நாடகம். இவர் அவளைத்திருமணம் செய்யும் விருப்பத்தோடு பழகவில்லை என்பதை அறிந்த அந்த பெண்ணும் அவரது ஒன்று விட்ட மூத்த சகோதரியும் போட்ட கபடி கபடி விளையாட்டு என்று புரிந்தது.

அதன்பின் பலமுறை நாங்கள் சந்தித்துவிட்டோம். தற்போது நண்பர்கள் என்ற வட்டத்தை விட்டு சகோதரர்கள் என்ற வலைக்குள் நாங்கள் விழுந்துவிட்டோம். அதனால் இது பற்றி நாம் எதுவும் பேசிக்கொள்வதில்லை.

ஆனாலும் மனதுக்குள் ஒரு நெருடல். இதில் நான் நல்லது செய்தேனா.

அல்லது கபடி ஆட்டத்தில் எதிரிக்கு ஆதரவாக ஆடினேனா......?

யாவும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி தோழர்

விசுகு அண்ணா ... நீங்கள் இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை அண்ணா ..

உண்மையில் உங்கள் அண்ணன் முறையானவர் தப்பான முறையில் உங்கள் மைத்துனியிடம் உறவு வைத்திருக்கவில்லை என்றால் அவர் அந்த நேரத்தில் தனது பிள்ளையாக இருக்குமோ என்று பயபட்டிருக்க தேவை இல்லை.

உங்கள் மைத்துனியும் அவரின் அக்காவும் நடத்திய நாடகத்திற்கு பயப்பிடாமல், எங்களுக்குள் எதுவுமே நடக்காமல் பிள்ளை உருவாக வாய்ப்பில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி பதில் அளித்திருக்கலாம்.

உங்கள் அண்ணன் முறையானவர் அப்படி அப்போ செய்யவில்லை என்றால், அவர் பக்கமும் பிழை இருந்திருக்கு.

எனவே அவர் உங்கள் மைத்துனியை கட்டுவது தான் நியாயம்..

உங்கள் மனவருத்தத்தில் அர்த்தம் இல்லை ..கவலையை விட்டு சந்தோசமாக உங்கள் வாழ்கையை தொடருங்கள் ..நட்பையும் தொடருங்கள் ..

உங்கள் கதைப்பகிர்வுக்கு நன்றி விசுகு அண்ணா. உங்கள் மேல் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை. திருமணம் செய்யும் விருப்போடு பழகாமல் இருந்ததற்காக உங்கள் அண்ணாவும் - தான் கர்ப்பம் என்று பொய் கூறியமைக்காக உங்கள் மைத்தினியும் தான் இதில் குற்ற உணர்வு கொள்ளவேண்டியவர்கள். நீங்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கதைப் பகிர்வுக்கு நன்றி விசுகு! அவர் தனது தம்பி முறையானவரையே காவலுக்கு விட்டுட்டு தனக்கு விருப்பமான மைத்துனியையே சந்தித்து வந்திருக்கின்றார். அப்ப அவர் திருமணம் செய்தது சரி என்றுதான் நினைக்கின்றேன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் சொன்ன அதே கருத்து தான் விசுகு அண்ணா. அவர் எதுகும் செய்யவில்லை என்றால், அந்த நாடகத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்து இருப்பார். உங்களுக்கு தெரிந்த தகவலின் படி நீங்கள் செய்தது சரியோ. அவர் எதிர்ப்பு கூறி, நீங்கள் கட்டாயப்படுத்தி கட்டி வைத்திருந்தால், நெடுக்ஸ் சொன்னது போல, ஆண்பாவம் சும்மா விட்டிராது. :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் அண்ணரும் சேர்ந்துதான் கபடி விளையாடி இருக்கிறார் போல ....அதாவது நாடகத்தில் அவருக்கும் பங்கு இருக்கு போல...... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்து உங்களை காமடியன் ஆக்கிட்டாங்களே விசுகு அண்ணா..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான் கதை :D ..நீங்கள் செய்தது சரியே.

விசுகு, நீங்கள் செய்ததில் தவறில்லை. அவர் அந்த பெண்ணோடு பழகியவிதம் தான் அவரை மாட்டிவிட்டது. கல்யாணம் செய்யும் நோக்கம் இல்லையென்றால் வரம்பை மீறியிருக்ககூடாது. உப்பைத்தின்றால் தண்ணியை குடிக்க வேண்டியது தான். :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி தோழர்

நன்றி புரட்சி

விசுகு அண்ணா ... நீங்கள் இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை அண்ணா ..

எனவே அவர் உங்கள் மைத்துனியை கட்டுவது தான் நியாயம்..

உங்கள் மனவருத்தத்தில் அர்த்தம் இல்லை ..கவலையை விட்டு சந்தோசமாக உங்கள் வாழ்கையை தொடருங்கள் ..நட்பையும் தொடருங்கள் ..

நன்றி பகலவன்

எங்களது நட்பு மேல் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு. தம்பி என்று என் மீது அவர் வைத்துள்ள அன்பைப்பலமுறை நான் கண்டிருக்கின்றேன். அந்த அன்புக்குத்தான் அவர் மரியாதை கொடுத்து எனது பேச்சுக்கு மரியாதை கொடுத்தார் என்பதால்தான் சிறிய மனச்சங்கடம். வாழ்க்கை முழுவதையும் சோகத்தில் அவர் கழிப்பதுபோன்று இருக்கிறது.

உங்கள் கதைப்பகிர்வுக்கு நன்றி விசுகு அண்ணா. உங்கள் மேல் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை. திருமணம் செய்யும் விருப்போடு பழகாமல் இருந்ததற்காக உங்கள் அண்ணாவும் - தான் கர்ப்பம் என்று பொய் கூறியமைக்காக உங்கள் மைத்தினியும் தான் இதில் குற்ற உணர்வு கொள்ளவேண்டியவர்கள். நீங்கள் அல்ல.

நன்றி தமிழ் இனி

நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் இருவரும்தான் இதற்கான பொறுப்பாளிகள். அதற்கு அப்பால் அங்கே என்ன நடக்கிறது என்பதோ அல்லது உண்மைக்காதலா இல்லையா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரிய வாய்ப்பில்லை.

கதைப் பகிர்வுக்கு நன்றி விசுகு! அவர் தனது தம்பி முறையானவரையே காவலுக்கு விட்டுட்டு தனக்கு விருப்பமான மைத்துனியையே சந்தித்து வந்திருக்கின்றார். அப்ப அவர் திருமணம் செய்தது சரி என்றுதான் நினைக்கின்றேன்! :)

நன்றி 'suvy'

காவலுக்கு விட்டார் என்று சொல்லமுடியாது. ஏனெனில் அது பற்றி என்னிடம் அவர் பேசியதில்லை. கவனம் என்றும் சொன்னதில்லை. மொத்தத்தில் இந்த விடயம் எனக்கு தெரியக்கூடாது என்பதிலேயே அவர் கண்ணாக இருந்தார். எனவே என்னை ஏமாற்றினார் என்பது சரியா என்று தெரியவில்லை.....?

பகலவன் சொன்ன அதே கருத்து தான் விசுகு அண்ணா. அவர் எதுகும் செய்யவில்லை என்றால், அந்த நாடகத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்து இருப்பார். உங்களுக்கு தெரிந்த தகவலின் படி நீங்கள் செய்தது சரியோ. அவர் எதிர்ப்பு கூறி, நீங்கள் கட்டாயப்படுத்தி கட்டி வைத்திருந்தால், நெடுக்ஸ் சொன்னது போல, ஆண்பாவம் சும்மா விட்டிராது. :wub::lol:

இது தான் எனக்கும் உதைக்குது. என்னுடன் பகைக்கக்கூடாது என்றுதான் கட்டிக்கொண்டார் என்று நினைக்கின்றேன். கட்டிக்கொள்ளுங்கள் என்று நான் சொன்னதும் அவரது முகம் மிகவும் இறுகியது இன்றும் எனது மனக்கண்ணில் நிற்கிறது. ஆண்பாவம்....?

நான் நினைக்கிறன் அண்ணரும் சேர்ந்துதான் கபடி விளையாடி இருக்கிறார் போல ....அதாவது நாடகத்தில் அவருக்கும் பங்கு இருக்கு போல...... :D

புத்தர் உண்மையை அறிந்ததும் நான் அதிர்ந்ததை தங்களுக்கு எப்படி விளக்குவேன். உண்மையில் அவர்கள் இருவரையும்விட நான்தான் மனதால் அதிர்ந்துபோனேன்.

ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்து உங்களை காமடியன் ஆக்கிட்டாங்களே விசுகு அண்ணா..! :lol:

இதை நான் ஏற்கவில்லை இசை

எமது நட்பு நட்பாகவே உள்ளது. அண்ணன் தம்பி பாசமும் அப்படியேதான் உள்ளது. அதில் துளிகூட சரிவு இல்லை. அவர் என்னை மிகவும் மதித்தார். தற்போதும் மதிக்கின்றார். இதுவரை இப்படி நடந்தது பற்றி ஒரு சொல்லுக்கூட அவர் என்னிடம் சொல்லவில்லை. இருவரும் ;சேர்ந்து ஆடிய ஆட்டம் என்றும் சொல்முடியவில்லை. ஏனெனில் அப்படி பெண் எடுக்கவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.

சுவாரசியமான் கதை :D ..நீங்கள் செய்தது சரியே.

நன்றி ரீச்சர்

விசுகு, நீங்கள் செய்ததில் தவறில்லை. அவர் அந்த பெண்ணோடு பழகியவிதம் தான் அவரை மாட்டிவிட்டது. கல்யாணம் செய்யும் நோக்கம் இல்லையென்றால் வரம்பை மீறியிருக்ககூடாது. உப்பைத்தின்றால் தண்ணியை குடிக்க வேண்டியது தான். :D :D

நன்றி Eas

உப்பைத்தின்றவன் தண்ணி குடிக்கிறார்.

உண்மைதான்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா பகிர்வுக்கு நன்றி.உங்கள் கடமையை தம்பியாக செய்துள்ளீர்கள்.ஆனால் உங்கள் அண்ணாவும் அண்ணியும் செய்த தவறுக்கு (திருமணத்துக்கு முன் கர்ப்பமாகியதும்/கர்ப்பமாக்கியதும்) இருவருக்கும் 50/50 பங்குண்டு.

கபடி கபடி......

...

இவர் அவளைத்திருமணம் செய்யும் விருப்பத்தோடு பழகவில்லை என்பதை அறிந்த அந்த பெண்ணும் அவரது ஒன்று விட்ட மூத்த சகோதரியும் போட்ட கபடி கபடி விளையாட்டு என்று புரிந்தது.

...

யாவும் உண்மை.

திருமணம் செய்யும் விருப்பத்தோடு பழக்கவில்லை என்றால் பேச்சோட நிப்பாட்டி இருக்கலாம்... பேச்சுக்கு மீறி எதுவும் போகாமலிருந்திருந்தால் பெரியவர்கள் சொல்லும் போது தைரியமாக மறுத்திருக்கலாம்... முடியாமல் போனது ஏன்? அந்தக் காரணத்திற்காக என்றாலும் அவர்கள் ஒன்று சேரவேண்டியவர்களே...

  • கருத்துக்கள உறவுகள்

ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்து உங்களை காமடியன் ஆக்கிட்டாங்களே விசுகு அண்ணா..!

2 பேரும் சேர்ந்து உங்களை ஏமாற்றி விட்டார்கள்.உங்கள் அண்ணா வரம்பு மீறியதால் தண்டனை பெற வேண்டி வந்துள்ளது.ஆனால் கவனமாக இருந்ததாக வேறு சொல்லியிருக்கிறார்.கொஞ்சக் காலம் (பொய்க்கர்ப்பம் என்பது தெரியும்வரை)சந்தேகத்திலேயே முள்ளின் மேல் படுத்திருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.