Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணங்கள் முடிவதில்லை :)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட என்னுடைய அனுபவப்பகிர்வுகளை சின்னச் சின்ன கற்பனையூட்டி உங்களுடன் பகிர்கின்றேன். சில சமயங்களில் வெளிப்படையாக எழுத விளையும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் உருவாக்கும் அல்லது பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களே சொந்தக்காசில் சூனியம் வைப்பதுபோல் அமைந்துவிடும். இணையவெளியில் இறங்கியிருக்கிறேன். எழுதும் ஆளுமையும்ää துணிவும் என்னோடு உடன் பயணிக்க உங்களுடன் நீண்ட நாட்களுக்குப்பின் இந்தப் பக்கத்தில் இணைகின்றேன்.
சில வாரங்களுக்குமுன் நிறையவே மன உளைச்சல்ää போராட்டம்ää குழப்பம். (தனிப்பட்ட வாழ்வில் என்று நினைக்கக்கூடாது) இனம் சார்ந்த சமூக நலன், பெண்கள், பாதிப்புகள் என்று பன்முகப்பட்ட விடயங்களை ஓரிடத்தில் சேர்த்து சில முயற்சிகளை பலரின் உதவிகளைப்பெற்று உருவாக்கும் பெரும் முயற்சியில் விழுந்த பாரிய முட்டுக்கட்டை அல்லது சில குழுமங்களுக்குள் வரையறுக்கப்பட்ட இறுக்கநிலை அல்லது தமக்குள் முழுமையாக கட்டுப்படுத்தும் குறுகிய போக்குக் கொண்டவற்றின்பால் முயற்சிகள் தகர்க்கப்பட்ட வேதனை சூழ்ந்த பொழுதொன்றில் எனது துணைவரால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பயணம் இது பொதுத்தேவை நோக்கி வேலையிலிருந்து எடுக்கப்பட்ட எனது விடுமுறை நாட்கள் முதன் முறையாக என் குடும்பவாழ்விற்கும், துணைவருடனான இறுக்க நிலைக்கும், பிள்ளைகளின் குதூகலத்திற்கும் பயன்பட்டது. சரி இனி இந்தப்பயணமும் எனது அனுபவங்களுமாக…..
முதலில் மொட்டையாக இந்தப்பயணம் இன்ன இடத்திற்கு என்று எனக்குத் தெரியாத ஒரு நேரம்
“அப்பா….நேய்!” இது நான்
“ம்” இது எனது துணைவர்.
“எனக்கு ஒண்டுமே சொல்ல மாட்டீங்களாம்”
“ம்”
“சொல்லுங்கோப்பா”
“ம்”
“அநேய் ஏனன எல்லாத்திற்கும் “ம்…ம்” எண்டுறியள்?
“ம்”
எனக்கு வந்த கோபத்திற்கு இந்தாளுக்கு உச்சந்தலையில் ஓங்கி “நச்”சென்று குட்டலாமா என்று தோன்றியது. அடக்கிக் கொண்டேன்.
“அப்பேய்;” (கவனிக்கவும் அப்பா…. அப்பேயாக மாறிட்டார்)
“ம்”
கடவுளே… கோயில் மாடு தலையைத் தலையை ஆட்டுற மாதிரி வீட்டு மனுசன் “ம்…ம்” எண்டுறாரே… “ஒழுங்கா கதையுங்கோப்பா”
“சரியடி என்ன?” (குரலில் அலுப்பு கறுமம் பிடிச்சவள் நிம்மதியா பியரைக் குடிக்க விடுறாள் இல்லை என்று நினைச்சிருப்பார்போல..)
அதானப்பா வக்கேசனுக்கு எங்க போகப்போறியள்?
“எங்கேயோ கூட்டிப்போவன்தானே”
“அது தெரியும் எங்க எண்டெல்லோ கேட்கிறன். (எனது குரல் பொறுமையிழப்பதை என்னால் உணரமுடிந்தது.)
“உனக்குச் சொன்னால் நீ முதலிலேயே குழப்பிப் போடுவே…”
“இல்லையப்பா நின் குழப்பேல்ல சொல்லுங்கோவன்”
“உனக்குத் தெரியோணுமோ சண்னனிடம்(இளையமகன்) கேள்”
வாசலில் கிடந்த பழைய செருப்பால எனக்கு நானே அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
“அப்ப நீங்கள் இந்த பியரையும் சிகரெட்டையும் கட்டிக் கொண்டு கிடவுங்கோ” என்றபடி சின்ன மகனிடம் கேள்விகளைத் தொடுத்தேன். அவனிடம் கிடைத்த தகவலின்படி அப்பா விமானப்பற்றுச்சீட்டுக்கள் பதிவு செய்யும் ஒரு அலுவலகத்தில் கிரடிட் கார்ட்டைக் கொடுத்து காசோலையில் கையெழுத்திட்டது என்பது மாத்திரமே…
துணைவருக்கு ஒருவகையான கவலை இருந்தது முன்பு ஒருதடவை அவர் கியூபாவிற்கு அழைத்துச் செல்ல அவர் போட்ட திட்டத்தையெல்லாம் கடைசி நிமிடத்தில் உடைத்து தாயகத்திற்கு அழைத்துச் சென்றேன் அதன்பாதிப்பில் இருந்து அவர் விடுபடாததால் இங்கு செல்லப் போகிறோம் என்பதை என்னிடம் மறைத்தார். அத்தோடு நான் இந்தியா செல்வதற்காகவே இந்த விடுமுறையை வேலையிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டதும் அவருக்கு நன்கு தெரியும். எங்கே கடைசி நிமிடத்தில் தன்னுடைய திட்டத்தை தவிடு பொடியாக்கிவிடுவேனோ என்ற எண்ணம் அவரிடம் குடிகொண்டிருந்ததை என்னால் அறியக்கூடியதாக இருந்தது. என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது பொதுவிடயங்களில் ஏற்படும் வலிகளை மறந்தும் துணைவரிடம் பகிர்ந்து கொள்வதில்லை காரணம் அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது மட்டுமல்ல தொடர்ந்தும் நான் பொதுப்பணிகளில் ஈடுபடுவதை விரும்பமாட்டார் என்பதும்தான். ஆதலால் பிரச்சனைகள் வலிகளை என்னோடு மட்டுப்படுத்திவிடுவேன். அவற்றின் பாதிப்பை குடும்பத்திற்குள் நுழைய விடுவதில்லை அதன் காரணமாக என்னுடைய நிலைவரத்தை அவர் அறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இதனை அவர் அறியாததால் அவருக்குள் அச்சம் ஏற்பட்டிருந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. அது அனாவசியமானது என்பது எனக்குப் புரிந்தது.
என்னதான் இரகசியமாக வைத்திருந்தாலும் துணைவரின் கூகுள் தேடல் அவர் எங்கே செல்ல ஆயத்தப்படுகிறார் என்பதை எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது. இருந்தாலும் நானும் தெரியாததுபோல் நடிக்க ஆரம்பித்தேன். எதுவரைக்கும் இவர்கள் என்னிடத்தில் மறைப்பார்கள்? நான் ஆர்வப்படாமல் அசட்டையாக இருக்க ஆரம்பித்தேன். அவரால் எனது புறக்கணிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடகடவென்று ஒரே மூச்சில் “புன்ரக்கானா” என்ற கடல் சார்ந்த ஒரு பிரதேசத்திற்கு பயணப்படுவதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதாக ஒப்புவித்தார்….. (அடுத்த வாரம் தொடரும்)

250px-Dominican_Republic_%28orthographic

Edited by வல்வை சகாறா

  • Replies 187
  • Views 21.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் சகாறா அக்கா இது என்ன மொழி?

[size=6]சகாரா ஆங்கில எழுத்துக்கள் ரைப்பண்ணிப் பழகிறதிற்கு ஒரு திரியா??[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எனோய் :lol: எப்பனை அடுத்த பகுதி வரும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன மொழி :(:wub: நான் எனக்குதான் பிரச்னை எண்டு யோசித்தன் ,எனக்கு முதலே இரண்டுபேர் சிக்கிட்டினம் :lol:

Edited by நந்தன்26

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நான் வேர்ட் ல எழுதி இங்கு கொண்டு வந்து ஒட்டிப்போட்டு பிழை திருத்தமுன்னம் எல்லாரும் வாசிச்சாச்சா..... :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கலர் கலரா முந்திரிக்கா

..................

......................?????????? :lol::D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் சகாறா அக்கா இது என்ன மொழி?

ஏன் ரதி ஏதாவது கோணல்மாணலாக இருக்கா... அல்லது எழுத்துப்பிழைகளைச் சொல்கிறீர்களா?

[size=6]சகாரா ஆங்கில எழுத்துக்கள் ரைப்பண்ணிப் பழகிறதிற்கு ஒரு திரியா??[/size]

ஆங்கிலமா நான் எங்கே அதை எழுதினேன்? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட என்னுடைய அனுபவப்பகிர்வுகளை சின்னச் சின்ன கற்பனையூட்டி உங்களுடன் பகிர்கின்றேன். சில சமயங்களில் வெளிப்படையாக எழுத விளையும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் உருவாக்கும் அல்லது பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களே சொந்தக்காசில் சூனியம் வைப்பதுபோல் அமைந்துவிடும். இணையவெளியில் இறங்கியிருக்கிறேன். எழுதும் ஆளுமையும்ää துணிவும் என்னோடு உடன் பயணிக்க உங்களுடன் நீண்ட நாட்களுக்குப்பின் இந்தப் பக்கத்தில் இணைகின்றேன்.

சில வாரங்களுக்குமுன் நிறையவே மன உளைச்சல்ää போராட்டம்ää குழப்பம். (தனிப்பட்ட வாழ்வில் என்று நினைக்கக்கூடாது) இனம் சார்ந்த சமூக நலன்ääபெண்கள்ää பாதிப்புகள் என்று பன்முகப்பட்ட விடயங்களை ஓரிடத்தில் சேர்த்து சில முயற்சிகளை பலரின் உதவிகளைப்பெற்று உருவாக்கும் பெரும் முயற்சியில் விழுந்த பாரிய முட்டுக்கட்டை அல்லது சில குழுமங்களுக்குள் வரையறுக்கப்பட்ட இறுக்கநிலை அல்லது தமக்குள் முழுமையாக கட்டுப்படுத்தும் குறுகிய போக்குக் கொண்டவற்றின்பால் முயற்சிகள் தகர்க்கப்பட்ட வேதனை சூழ்ந்த பொழுதொன்றில் எனது துணைவரால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பயணம் இது பொதுத்தேவை நோக்கி வேலையிலிருந்து எடுக்கப்பட்ட எனது விடுமுறை நாட்கள் முதன் முறையாக என் குடும்பவாழ்விற்கும்ää துணைவருடனான இறுக்க நிலைக்கும்ää பிள்ளைகளின் குதூகலத்திற்கும் பயன்பட்டது. சரி இனி இந்தப்பயணமும் எனது அனுபவங்களுமாக…..

முதலில் மொட்டையாக இந்தப்பயணம் இன்ன இடத்திற்கு என்று எனக்குத் தெரியாத ஒரு நேரம்

“அப்பா….நேய்!” இது நான்

“ம்” இது எனது துணைவர்.

“எனக்கு ஒண்டுமே சொல்ல மாட்டீங்களாம்”

“ம்”

“சொல்லுங்கோப்பா”

“ம்”

“அநேய் ஏனன எல்லாத்திற்கும் “ம்…ம்” எண்டுறியள்?

“ம்”

எனக்கு வந்த கோபத்திற்கு இந்தாளுக்கு உச்சந்தலையில் ஓங்கி “நச்”சென்று குட்டலாமா என்று தோன்றியது. அடக்கிக் கொண்டேன்.

“அப்பேய்;” (கவனிக்கவும் அப்பா…. அப்பேயாக மாறிட்டார்)

“ம்”

கடவுளே… கோயில் மாடு தலையைத் தலையை ஆட்டுற மாதிரி வீட்டு மனுசன் “ம்…ம்” எண்டுறாரே… “ஒழுங்கா கதையுங்கோப்பா”

“சரியடி என்ன?” (குரலில் அலுப்பு கறுமம் பிடிச்சவள் நிம்மதியா பியரைக் குடிக்க விடுறாள் இல்லை என்று நினைச்சிருப்பார்போல..)

அதானப்பா வக்கேசனுக்கு எங்க போகப்போறியள்?

“எங்கேயோ கூட்டிப்போவன்தானே”

“அது தெரியும் எங்க எண்டெல்லோ கேட்கிறன். (எனது குரல் பொறுமையிழப்பதை என்னால் உணரமுடிந்தது.)

“உனக்குச் சொன்னால் நீ முதலிலேயே குழப்பிப் போடுவே…”

“இல்லையப்பா நின் குழப்பேல்ல சொல்லுங்கோவன்”

“உனக்குத் தெரியோணுமோ சண்னனிடம்(இளையமகன்) கேள்”

வாசலில் கிடந்த பழைய செருப்பால எனக்கு நானே அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

“அப்ப நீங்கள் இந்த பியரையும் சிகரெட்டையும் கட்டிக் கொண்டு கிடவுங்கோ” என்றபடி சின்ன மகனிடம் கேள்விகளைத் தொடுத்தேன். அவனிடம் கிடைத்த தகவலின்படி அப்பா விமானப்பற்றுச்சீட்டுக்கள் பதிவு செய்யும் ஒரு அலுவலகத்தில் கிரடிட் கார்ட்டைக் கொடுத்து காசோலையில் கையெழுத்திட்டது என்பது மாத்திரமே…

துணைவருக்கு ஒருவகையான கவலை இருந்தது முன்பு ஒருதடவை அவர் கியூபாவிற்கு அழைத்துச் செல்ல அவர் போட்ட திட்டத்தையெல்லாம் கடைசி நிமிடத்தில் உடைத்து தாயகத்திற்கு அழைத்துச் சென்றேன் அதன்பாதிப்பில் இருந்து அவர் விடுபடாததால் இங்கு செல்லப் போகிறோம் என்பதை என்னிடம் மறைத்தார். அத்தோடு நான் இந்தியா செல்வதற்காகவே இந்த விடுமுறையை வேலையிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டதும் அவருக்கு நன்கு தெரியும். எங்கே கடைசி நிமிடத்தில் தன்னுடைய திட்டத்தை தவிடு பொடியாக்கிவிடுவேனோ என்ற எண்ணம் அவரிடம் குடிகொண்டிருந்ததை என்னால் அறியக்கூடியதாக இருந்தது. என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது பொதுவிடயங்களில் ஏற்படும் வலிகளை மறந்தும் துணைவரிடம் பகிர்ந்து கொள்வதில்லை காரணம் அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது மட்டுமல்ல தொடர்ந்தும் நான் பொதுப்பணிகளில் ஈடுபடுவதை விரும்பமாட்டார் என்பதும்தான். ஆதலால் பிரச்சனைகள் வலிகளை என்னோடு மட்டுப்படுத்திவிடுவேன். அவற்றின் பாதிப்பை குடும்பத்திற்குள் நுழைய விடுவதில்லை அதன் காரணமாக என்னுடைய நிலைவரத்தை அவர் அறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இதனை அவர் அறியாததால் அவருக்குள் அச்சம் ஏற்பட்டிருந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. அது அனாவசியமானது என்பது எனக்குப் புரிந்தது.

என்னதான் இரகசியமாக வைத்திருந்தாலும் துணைவரின் கூகுள் தேடல் அவர் எங்கே செல்ல ஆயத்தப்படுகிறார் என்பதை எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது. இருந்தாலும் நானும் தெரியாததுபோல் நடிக்க ஆரம்பித்தேன். எதுவரைக்கும் இவர்கள் என்னிடத்தில் மறைப்பார்கள்? நான் ஆர்வப்படாமல் அசட்டையாக இருக்க ஆரம்பித்தேன். அவரால் எனது புறக்கணிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடகடவென்று ஒரே மூச்சில் “புன்ரக்கானா” என்ற கடல் சார்ந்த ஒரு பிரதேசத்திற்கு பயணப்படுவதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதாக ஒப்புவித்தார்….. (அடுத்த வாரம் தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனோய் :lol: எப்பனை அடுத்த பகுதி வரும். :lol:

ஏனப்பு சாத்திரி அடுத்த வாரம் என்று போட்டிருக்குப் பார்க்கவில்லையா?

இது என்ன மொழி :(:wub: நான் எனக்குதான் பிரச்னை எண்டு யோசித்தன் ,எனக்கு முதலே இரண்டுபேர் சிக்கிட்டினம் :lol:

நிர்வாகம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும் ...இதிலிருந்து என்ன தெரியுதென்றால் நான் கனநாளாக ஒரு பதிவையும் எழுதிப் போடேல்லை என்று தெரியுது

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப் பிழை இல்லை அக்கா ஒன்றுமே வாசிக்க முடியாமல் இருந்தது...நுனாவிலான் மூலம் தான் வாசிக்க கூடியதாக இருக்கிறது...நன்றி நுணா

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு சாத்திரி அடுத்த வாரம் என்று போட்டிருக்குப் பார்க்கவில்லையா?

என்னனை அதுவா அர்த்தம்? இது வார இறுதிநாள் நாளை ஞாயிறு அதுக்கு பிறகு அடுத்த வாரம் தொடரும் ...அம்மாவானை அதைத்தான் எழுதியிருக்கிறீங்களாக்கும் எண்டு நினைச்சிட்டன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சரியான வம்புகளா இருக்கீங்கப்பா.....சரி சரி இப்ப நுணாவின் புண்ணியத்தில எல்லாரும் வாசிச்சீட்டீங்கள்தானே... அடுத்த வாரம் நேரடியாக யுனிக்கோட்டில் எழுதுகிறேன் சரியா... :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனைக்கும்

அடி சறுக்கும் ஆத்தா

சும்மாவே மெல்லுவம்

அவ(ள்)ல் கிடைத்தால்.....?? :lol::D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனைக்கும்

அடி சறுக்கும் ஆத்தா

சும்மாவே மெல்லுவம்

அவ(ள்)ல் கிடைத்தால்.....?? :lol::D :D

இப்பத்தான் விளங்குது அடி சறுக்கின யானையில ஏறி நின்று சறுக்கி விளையாட கனபேர் வரிசையில நிற்கிறீர்கள் என்று..... :lol: :lol: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. சரி.. ஒருவழியா தொடங்கீட்டீங்கள்..! :D நீங்களாவது பயணத்தொடரை முடிப்பீர்கள் எனும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்..! :icon_mrgreen:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா ஆர்வத்துடன் அடுத்தபாகத்திற்காக உங்கள் வாசகர்களில் ஒருவன்... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி.. சரி.. ஒருவழிதா தொடங்கீட்டீங்கள்..! :D நீங்களாவது பயணத்தொடரை முடிப்பீர்கள் எனும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்..! :icon_mrgreen:

இசை என்னுடைய திரியின் ஆரம்பத் தலைப்பே "பயணங்கள் முடிவதில்லை" என்று போட்டிருக்கு கவனியுங்கள் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுவரை இந்தப்பாடலைக் கேட்டுக்கொள்ளுங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுப்பு,

பாடலுக்கும் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பிற்கும்.....

கூடுமானவரை ஒரு வார இடைவெளி விடாமல் முன்னராக நேரங்கிடைக்கும்போது தொடரை இணைத்து முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகிறேன்... இல்லையென்றால் எனக்கும் "பிளேடு" அல்லது 'சுயிங்கம்" என்று பட்டம் தந்துவிடுவீங்கப்பா..... :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பயணங்கள் தொடரவேண்டும்...........மிக்க மகிழ்ச்சி [/size]

தொடருங்கள் சஹாரா,  வாசிக்க ஆவலாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்கா மக்கா தொடங்கி கொஞ்ச நேரத்திலையோ இத்தனை பார்வை இத்தனை பதில் சகாராவிற்கு இன்னும் யாழில் மார் கட்டு (marcket )குலையவில்லையெண்டு தெரியிது வழைமையான படிகிடிதான் கோவிக்க கூடாது என்னனை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை தொடருங்கள்!

மனுசனைக் கொஞ்ச நேரம் ஆறுதலா, இருக்க விடுங்கோவன்!

எங்கள் வீட்டில், முடிவுகள் எடுக்கப் பட்ட பின்பு, மரியாதைக்காக எனது அபிப்பிராயம் கேட்கப் படும்!

அவ்வளவு தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.